Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் இலங்கையர்களை... சந்தித்தார், ரணில். 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் இலங்கையர்களை... சந்தித்தார், ரணில். 

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1300128

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

By DIGITAL DESK 5

20 SEP, 2022 | 04:59 PM
image

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கில்  காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று (19) பிற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரித்தானிய வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

306693025_521635496455598_16789881980816

புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரித்தானியாவின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி,

306627620_1315916645817160_8349930353695

எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன்  கலந்துரையாடவுள்ளோம்.  பொதுநலவாய அமைப்பு வலுவடைந்து  முன்னேறிச் செல்ல வேண்டும் . அதேபோன்று இங்கிலாந்திற்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் வெற்றிகரமாக தீர்த்துக் கொள்வார்கள். 

இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு  ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளை பேணி வருகிறோம்.  எங்கள் உறவு நீண்ட காலமாக தொடர்கிறது. இங்கிலாந்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களைப் போன்றே, உடன்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

 ஆட்சியில் இருப்பது தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி அல்லது கூட்டணியென எதுவாக  இருந்தாலும் , நாங்கள்  இங்கிலாந்துடனான எமது உறவை தொடர்ந்து பேணவே விரும்புகிறோம்.  எமது நாடு  பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். 

306734071_816185653032129_19240654046769

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. IMF உடனான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில்  ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம். நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும்  பேச்சு நடத்த வேண்டும். நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். 

கடனை அடைப்பதற்கு  இன்றிலிருந்து 25 ஆண்டுகள்  வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக  உருவாக முடியும்.

அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம். அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது  என்பதில் கவனம் செலுத்த  வேண்டும். உங்களுக்கு  ஜனநாயகம் வேண்டும் என்றால் நிலையான ஆட்சி, ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி  என்பன  இருக்க வேண்டும். 

வீடுகளை எரிப்பதா அல்லது அலுவலகங்களைக் கைப்பற்றுவதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுவதாகும்.

கடந்த  மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தரப்பினர்  வன்முறையில் ஈடுபட்டனர். நாம் அவர்களின் கருத்துக்களை      கண்காணிப்புக் குழுக்களில் சேர்த்துள்ளோம். பாராளுமன்றத்தில் 19 கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. அவற்றில்  ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இருக்கிறோம்.  வேறு எந்த நாடும் அவ்வாறு செய்தது கிடையாது. 

கண்காணிப்புக் குழுவால் அனுப்பப்படும் எந்த அறிக்கைக்களுடனும் மேலதிக ஆவணமாக இளைஞர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம்.   எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர்களின் தேவைகளின் பிரகாரம்  நாட்டை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.  அவர்களை இணைத்துக் கொள்ளக் கூடிய பல்வேறு  வழிகளைக் கண்டறிய வேண்டும்.   கரு ஜயசூரிய மற்றும்  விக்டர் ஐவன் ஆகியோர் கிராம சேவகர் மட்டத்தில் மக்கள் சபைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில்  காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வு வழங்க  வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். 

2018ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும்  யோசனைகளை முன்வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனை தொடர முடியும்.  அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து  வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள். இங்கு வாழும் சுமார் 500,000 இலங்கையர்கள்,  தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக      அடையாளப்படுத்துகின்றனர். 

307824026_2246839575474464_5479778991760

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர்  மக்களாக  அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு அதைச் செயல்படுத்தி வருகிறது.  அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். 

சில காலங்களின்  பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். ஆனால் இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும்  இதில் கைகோர்க்க வேண்டும். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள்  இருக்கலாம். அவர்களுக்கு  உதவியளிக்க  விரும்பலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள்’’ என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன, முதற் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு | Virakesari.lk

ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன, முதற் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

லைக்கா முதலாளி ரணிலை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசியுள்ளாராம். நல்லது. பாராட்டுகள்.
ஆனால் கொடுமை என்னவெனில் அரசியல் கைதிகள் விபரம் தருமாறு ரணில் கேட்டிருக்கிறாராம். அப்படியென்றால்
(1) தமது கட்டுப்பாட்டில் இருக்கும் கைதிகள் விபரம் உண்மையில் ரணிலுக்கு தெரியாதா?
(2) இதுவரை ரணிலை சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்கள் யாரும் விபரம் கொடுக்கவில்லையா?
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மஹிந்தவும் ஒருதடவை சொன்னதாக நினைவு. ஒவ்வொருவரை சந்திக்கும் ஒவ்வொரு தடவையும்   இப்படி கூறி அப்பாவி போல்  தப்பித்துக்கொள்வார்கள். விபரம் தெரியாமலா இத்தனையாண்டுகள் தடுத்து வைத்திருக்கிறார்கள் அவர்களை? அவர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்ட போதெல்லாம் கண்டுங்காணாதது போல் இருந்துள்ளார்கள்.  விபரம் தெரியாமலா தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகளுக்கான  குற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு கட்டம் கட்டமாக  விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தவர்கள்?  விபரம் தெரியாதவர்களோடு கதைத்து எதை சாதிக்கப்போகிறார்கள்? அவர்களிடமே திருப்பி கேட்க வேண்டும், எத்தனை பேரை எதற்காக தடுத்து வைத்திருக்கிறீர்கள்? இது கூட தெரியாத ஜனாதிபதி பிரச்சனையை தீர்க்கப்போகிறாராம். அப்போ சுமந்திரன், சம்பந்தன் இவ்வளவு காலமாய் ஓடியோடி, மறைந்து என்னத்தை கதைச்சவை?     

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and people standing

லைக்கா முதலாளி ரணிலை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசியுள்ளாராம். நல்லது. பாராட்டுகள்.
ஆனால் கொடுமை என்னவெனில் அரசியல் கைதிகள் விபரம் தருமாறு ரணில் கேட்டிருக்கிறாராம். அப்படியென்றால்
(1) தமது கட்டுப்பாட்டில் இருக்கும் கைதிகள் விபரம் உண்மையில் ரணிலுக்கு தெரியாதா?
(2) இதுவரை ரணிலை சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்கள் யாரும் விபரம் கொடுக்கவில்லையா?

லைக்கா  முதலாளி ஈழத்தமிழரின் பிரதிநிதி??

அல்லது பிரதம  பேச்சாளர்??

அல்லது தலைவர்???

பேசாமல்  தமிழினம்  தற்கொலை  செய்யலாம்😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

லைக்கா  முதலாளி ஈழத்தமிழரின் பிரதிநிதி??

அல்லது பிரதம  பேச்சாளர்??

அல்லது தலைவர்???

பேசாமல்  தமிழினம்  தற்கொலை  செய்யலாம்😡

எவர்களோ போராட... 
புலம் பெயர் அமைப்புகள்... என்று, சில புல்லுருவிகள்
தங்களது வியாபார  சுயலாபத்துக்காக... இடையில் வந்து படம் காட்டுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

எவர்களோ போராட... 
புலம் பெயர் அமைப்புகள்... என்று, சில புல்லுருவிகள்
தங்களது வியாபார  சுயலாபத்துக்காக... இடையில் வந்து படம் காட்டுதுகள்.

மிகத்தவறான போக்கு  சிறி

ரணிலுக்கு  காசு  வேண்டும்

லைக்காக்கு  காசு உழைக்க  ஒரு  இடம் வேண்டும்

அதுக்கு....?????😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

மிகத்தவறான போக்கு  சிறி

ரணிலுக்கு  காசு  வேண்டும்

லைக்காக்கு  காசு உழைக்க  ஒரு  இடம் வேண்டும்

அதுக்கு....?????😡

விசுகர்... மகிந்த காலத்திலேயே, 
முன்பு போர் முடிந்து, தமிழ்ப் பகுதிகளில்  இரத்தம் காய முதல்...
பலர்... புலம் பெயர் தமிழ் அமைப்புகள் என்ற பெயரில்,
ஜனாதிபதி  மாளிகையில் சந்திப்பு நடத்த தொடங்கியவர்கள்..
இன்று வரை... பல்வேறு சிங்கள கடும் போக்காளர்களுடன் 
சந்திப்புகளை இரகசியமாக தொடர்கிறார்கள் என்பது தான்.. வேதனை.

எம்மவர்களின் மனநிலை... மிகவும் குரோதமானதும், சுயநலம் சார்ந்தும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

உண்மை தான்

தமிழர்களின்  எதிர்ப்பால்

பதுங்கிய முதலைகள்  காலம் நேரம்  பார்த்து

ரணிலின்  நரித்தனத்துடன்  கூட்டுச்சேர்கின்றன...

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

லைக்கா  முதலாளி ஈழத்தமிழரின் பிரதிநிதி??

அல்லது பிரதம  பேச்சாளர்??

அல்லது தலைவர்???

பேசாமல்  தமிழினம்  தற்கொலை  செய்யலாம்😡

தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் கண்டவனெல்லாம் நுழைவது வழைமைதானே? தமிழருக்காக கதைக்க ஆளில்லை, எல்லாம் வேறு சோலியில திரியினை. அதனால அவர்கள் தங்கள் சோலியை முடுக்கி பையை நிரப்ப முயலுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விசுகு said:

லைக்கா  முதலாளி ஈழத்தமிழரின் பிரதிநிதி??

அல்லது பிரதம  பேச்சாளர்??

அல்லது தலைவர்???

பேசாமல்  தமிழினம்  தற்கொலை  செய்யலாம்😡

இந்த உலகு பணத்தை மையமாக வைத்து தானே இயங்குகின்றது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

 புலம் பெயர்ந்த தமிழர்கள் பல விதம்   இந்த ஒற்றுமையற்ற  சுயநலமிக்க இனத்துக்கு எப்படி விமோசனம் கிடைக்கும். ? இனத்துக்காக உயிரைவிடட  ஆன்மாக்கள் மன்னிக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இந்த உலகு பணத்தை மையமாக வைத்து தானே இயங்குகின்றது. :cool:

கனத்தை கனம் பாக்குமாம், கருவாட்டுதலையை ஏதோ ஒன்று பாக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இந்த உலகு பணத்தை மையமாக வைத்து தானே இயங்குகின்றது. :cool:

பணத்தை மையப்படுத்தி   வைத்து உலகு  இயங்கலாம்

ஆனால் மக்களது சுதந்திரத்தை  அவர்களால் பெற்றுத்தரமுடியாது

இரண்டும் எதிர்மறையானவை

சேராது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.