Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் Vs ரஷ்யா: ராணுவ அழைப்பை மீறி எல்லை நோக்கி வெளியேறும் ரஷ்யர்கள்

30 நிமிடங்களுக்கு முன்னர்
காணொளிக் குறிப்பு,

காணொளி: ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் தாயகத்தை விட்டு வெளியேற வாகனத்தில் காத்திருக்கும் ரஷ்யர்கள்

யுக்ரேனுடனான போரில் இணைய கூடுதலாக படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ராணுவ அழைப்பை மீறி அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனுடான போரைத் தொடரும் வகையில் ராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்தார். இந்த போரில் பணியாற்ற மூன்று லட்சம் பேரை அழைக்க ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜார்ஜியாவின் எல்லையில், போரில் பங்கேற்காமல் தப்பிக்க முயற்சிக்கும் ரஷ்யர்கள் இடம்பெற்ற வாகனங்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது.

தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர், அதிபர் புதினின் அறிவிப்புக்குப் பிறகு, தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு, வேறு உடைமையை கூட எடுக்காமல் நேராக எல்லை நோக்கி புறப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ரேஹான் டெமிட்ரியிடம் கூறினார். காரணம், போருக்கு அனுப்பப்படும் தகுதி வாய்ந்தவர்களின் குழுவில் தமது பெயரும் இடம்பெற்றதை அறிந்ததாகக் கூறுகிறார் அவர்.

அப்பர் லார்ஸ் சோதனைச் சாவடியில் கார்களின் வரிசை சுமார் 5 கிமீ (3 மைல்கள்) தூரத்துக்கு இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். மற்றொரு குழு எல்லை தாண்டிச் செல்ல ஏழு மணி நேரம் எடுத்ததாகக் கூறியது. சில ஓட்டுநர்கள் தங்கள் கார்கள் அல்லது டிரக்குகளை போக்குவரத்து நெரிசலில் தற்காலிகமாக விட்டுச் செல்லும் காட்சி காணொளியில் தெரிந்தது.

விசாவிற்கு விண்ணப்பிக்காமல் ரஷ்யர்கள் நுழையக்கூடிய சில அண்டை நாடுகளில் ஜார்ஜியாவும் ஒன்றாகும். ரஷ்யாவுடன் 1,300 கிமீ (800 மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஃபின்லாந்து செல்வதானால் ரஷ்யர்களுக்கு விசா தேவை. இந்த நிலையில், ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக ஃபின்லாந்து கூறுகிறது. ஆனால், அது சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்தது.

ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு விமானம் மூலம் எளிதாக செல்லக் கூடிய இடங்களாக இஸ்தான்புல், பெல்கிரேட் அல்லது துபாய் கருதப்படுகின்றன. ராணுவ அணி திரட்டல் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டு விலை உயர்ந்துள்ளது. சில இடங்களுக்கு பயணச்சீட்டுகள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.

துருக்கிய ஊடகங்கள் ஒரு வழி பயணச்சீட்டு விற்பனை மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் விசா இல்லாமல் செல்லக் கூடிய இடங்களுக்கு வெகு சில ஆயிரக்கணக்கான யூரோக்களே செலாவகிறது.

line

'அழைப்பை புறக்கணிக்க வசதியாக எனது கை, கால்களை கூட உடைத்துக் கொள்வேன்'

ஒலேஸ்யா ஜெராசிமென்கோ & லிசா ஃபோக்ட், பிபிசி நியூஸ்

செர்கே - இது அவரது உண்மையான பெயர் அல்ல - ராணுவ பணிக்கு இவர் ஏற்கெனவே அழைக்கப்பட்டுள்ளார்.

பிஎச்டி மாணவரும் விரிவுரையாளருமான இந்த 26 வயது நபர், புதின் உரையாற்றுவதற்கு முந்தைய நாள் இரவு மளிகைப் பொருட்களை எதிர்பார்த்துக் கிடந்தார். அப்போது இரண்டு ஆண்கள் சிவில் உடையில் தோன்றி, ராணுவ ஆவணங்களில் கையெழுத்திட கொடுத்தனர்.

ராணுவ சேவையில் ஈடுபட்டவர்கள், சிறப்புத் திறன்கள் மற்றும் போர் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்று கிரெம்ளின் கூறியுள்ளது. ஆனால், செர்கேவுக்கு ராணுவ முன்னனுபவம் இல்லை. இதனால் அவரிடம் கட்டாயமாக ஆவணங்களை திணிப்பது தொடர்பாக அவரது மாற்றுத்தந்தை கவலைப்படுகிறார். ஏனெனில் இத்தகைய வரைவை திணிப்பது ரஷ்யாவில் ஒரு கிரிமினல் குற்றமாகும்.

line

அதிபர் புதினின் ராணுவ அணி திரட்டல் அழைப்பு செவ்வாய்க்கிழமை மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய ரஷ்ய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. இதன் விளைவாக 1,300 பேர் கைது செய்யப்பட்டனர்.

எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காவல் நிலையங்களில் காவலில் இருந்தபோது அவர்களிடம் ராணுவ பணியில் சேரும் வரைவு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து செய்திகள் வருகின்றன.

இது குறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃபிடம் கேட்டபோது, அத்தகைய செயல்பாடு ஒன்றும் சட்டவிரோதம் இல்லை என்று கூறினார்.

காணொளிக் குறிப்பு,

காணொளி: மாஸ்கோ போர் எதிர்ப்பு பேரணியில் கைது செய்யப்பட்ட காட்சிகள்

ரஷ்யாவுக்கு ராணுவ அணிதிரட்டலுக்கான எதிர்வினை வழக்கத்திற்கு மாறாக வலுவாக உள்ளது.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், புதன்கிழமை காலையில் நடந்த மாநாட்டில் இந்த அழைப்பு குறித்து கருத்து தெரிவித்தது. "அதிபரின் ராணுவ அணி திரட்டல் அழைப்பு "ரஷ்ய மக்களில் பலரிடமும் செல்வாக்கற்றதாக இருக்கும்" என்று அது குறிப்பிட்டது.

"மிகவும் தேவையான போர் சக்தியை உருவாக்கும் நம்பிக்கையில் புதின் கணிசமான அரசியல் ஆபத்தை ஏற்றுக்கொள்கிறார். இந்த நடவடிக்கையானது யுக்ரேனில் போராட தயாராக இருக்கும் தமது தன்னார்வலர்களின் எண்ணிக்கை நீர்த்துப் போய் வருவதை ரஷ்யாவே ஒப்புக் கொள்வதன் வெளிப்பாடாகும்" என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை, இதில் வெற்றியடைந்தாலும், அதன் பிறகு பல சவால்கள் உள்ளன.மேலும் புதிய பிரிவுகள் போருக்கு தயாராக பல மாதங்களாகும் என்றும் பாதுகாப்பு உளவுத்துறை தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, ரஷ்ய அதிகாரிகள் ராணுவ சேவையை முடித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று மீண்டும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ரஷ்யாவுக்கு, ராணுவ அணி திரட்டல் முறையாக அறிவிக்கப்பட்டதை விட மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற ஊகம் உள்ளது.

போருக்குப் பிந்தைய ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மத்தியில் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு வெளியேறிய சுதந்திர நாளேடான நோவாயா கெஸட்டா வெளியிட்டுள்ள செய்தியில் ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட அறிவிப்புடன் சேர்த்து கூடுதல் பிரகடன அழைப்பு உள்ளது என்றும், அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த நாளிதழ் செய்தியில், போருக்காக அணி திரட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் பேர் என்ற இலக்கு உண்மையல்ல என்றும் அந்த எண்ணிக்கை பத்து லட்சம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-62999814

  • Replies 82
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனுடனான போரில் இணைய கூடுதலாக படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ராணுவ அழைப்பை மீறி அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

😂

புட்டின் தன் தலைமீதே .....???

1 hour ago, nedukkalapoovan said:

Ukraine: What have been Russia's military mistakes? - BBC News

இது மார்ச் மாதத் தரவு. 
https://www.bbc.com/news/world-60798352

ஆர்ம்பத்தில் ரஷ்யா Kiev நோக்கிப் பெரும் எடுப்புடன் அனுப்பிய படை போன வேகத்திலேயே திரும்பி வந்தபோதே ரஷ்யாவின் பலம் உலகத்துக்கே புரிந்துவிட்டது. இப்போது ஆட்பற்றாக்குறையுடன் பழுதடைந்த வாகனங்கள் தளவாடங்களைத் திருந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்காலப் போர் முன்பு மாதிரி இல்லை. படை நகர்வுகள் அனைத்தையும் செய்மதிகள் மூலம் ரஷ்யா மட்டுமல்லாது மேற்கு நாட்டு இராணுவங்கள் கவனித்துக் கொண்டே உள்ளன. ரஷ்யா ஆக்கிரமித்திருந்த ஆயிரக்கணக்கான சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியை ரஷ்யா துல்லியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இழந்தது.

இப்போதுள்ள பிரச்சனை, இயலாமையால் அணு ஆயுதத்தைப் பாவிப்பாரா இல்லையா என்பதே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த கேள்வி புட்டினை அவமானப்படுத்துகிறது   உலகில் இரண்டாவது படை பலத்தை உடைய ரஷ்யா நாட்டை அவமானப்படுத்துகிறது  ரஷ்யா உலகில் முதலாவது பெரிய நாடு   மக்கள் தொகையும் பல கோடி   25 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட புலிகளுடன்  ஒப்பிடுகிறீர்களே? ரஷ்யாவின்  படை பலத்துக்கு.  புலிகள் பலமற்றவார்கள  என்றே சொல்லி விடலாம் புலிகள் கட்டாயம் கட்டாய ஆள் சேர்ப்பு செய்யலாம்   ஆனால்  உலகின் இரண்டாவது பெரிய படை கட்டாய ஆள் சேர்ப்பு செய்வது… பல பெரிய சந்தேகங்கள் இருக்க வாய்ப்பு உண்டு   ரஷ்யா கட்டாய ஆள் சேர்ப்பு செய்யவே கூடாது’ காரணம் அது உலகில் வல்லரசு இரண்டாவது மிகப்பெரிய இராணுவம்  😂

எல்லாவற்றையும் வாசித்தபின்னர் கருத்தெழுதுங்கள். உங்கள் கருத்துக்கான பதில் ஏலவே வழங்கப்பட்டிவிட்டது. 

40 minutes ago, விசுகு said:

யுக்ரேனுடனான போரில் இணைய கூடுதலாக படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ராணுவ அழைப்பை மீறி அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

😂

புட்டின் தன் தலைமீதே .....???

இது உக்ரேனிலும் நடைபெற்றது, நடைபெறுகிறது. இதற்கு தங்கள் பதில் என்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, இணையவன் said:

இது மார்ச் மாதத் தரவு. 
https://www.bbc.com/news/world-60798352

ஆர்ம்பத்தில் ரஷ்யா Kiev நோக்கிப் பெரும் எடுப்புடன் அனுப்பிய படை போன வேகத்திலேயே திரும்பி வந்தபோதே ரஷ்யாவின் பலம் உலகத்துக்கே புரிந்துவிட்டது. இப்போது ஆட்பற்றாக்குறையுடன் பழுதடைந்த வாகனங்கள் தளவாடங்களைத் திருந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்காலப் போர் முன்பு மாதிரி இல்லை. படை நகர்வுகள் அனைத்தையும் செய்மதிகள் மூலம் ரஷ்யா மட்டுமல்லாது மேற்கு நாட்டு இராணுவங்கள் கவனித்துக் கொண்டே உள்ளன. ரஷ்யா ஆக்கிரமித்திருந்த ஆயிரக்கணக்கான சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியை ரஷ்யா துல்லியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இழந்தது.

இப்போதுள்ள பிரச்சனை, இயலாமையால் அணு ஆயுதத்தைப் பாவிப்பாரா இல்லையா என்பதே. 

நான் இங்கே அடுக்கடி குறிப்பிடும் விடயம் போரை உக்ரைனில் புட்டின் ஆரம்பித்தது நல்லது என்பது. காரணம் அணு ஆயுதத்தை பாவிக்க முன் ஒன்றுக்கு ஒரு லட்சம் தடவைகள் யோசிக்கணும் ஏனெனில் அவரது பகுதியும் மக்களும் இதன் வீச்சில் இருந்து தப்ப முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, இணையவன் said:

கிவ்வை நோக்கிப் படைகள் வந்ததும் வெளியேறியது இராணுவத் தந்திரோபாய  நகர்வாகவே கருதப்படுகிறது. 

உக்ரேனில் நடபெறும் சம்பவங்களின் அடிப்படைப் புரிதலை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எங்கள் அனுமானங்கள் தவறாக்ப் போவதற்கான சாத்தியங்கள் அதிகம. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

இது உக்ரேனிலும் நடைபெற்றது, நடைபெறுகிறது. இதற்கு தங்கள் பதில் என்ன ? 

ஆக்கிரமிப்புக்கு எதிராக ஓடுபவர்களுக்கும் நாட்டைக்காக்கமுடியாமல் ஓடுபவர்களுக்குமான விகிதாச்சாரத்தை அறிவேன் நான். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

13 minutes ago, விசுகு said:

நான் இங்கே அடுக்கடி குறிப்பிடும் விடயம் போரை உக்ரைனில் புட்டின் ஆரம்பித்தது நல்லது என்பது. காரணம் அணு ஆயுதத்தை பாவிக்க முன் ஒன்றுக்கு ஒரு லட்சம் தடவைகள் யோசிக்கணும் ஏனெனில் அவரது பகுதியும் மக்களும் இதன் வீச்சில் இருந்து தப்ப முடியாது. 

எங்கேயோ முன்பு வாசித்தது...

புதினிடம், அணுவாயுதம் பாவித்தால் மொத்த மனித இனமே பாதிக்கப்படுமல்லவா கேட்கப்பட்டது.  அதற்கு அவரது பதில், ரஷ்யர்கள் இல்லாத உலகில் மனித இனம் வாழத் தகுதியற்றது என்பதுபோல் பதிலளித்திருந்தார்.

இப்படியான ஒரு பயங்கரவாதி உலக அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்.
(மேற்கு பயங்கரவாதிகள் இல்லையா என்று கேள்வி கேட்க வருவார்கள் என்பது தெரியும்)

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

யுக்ரேனுடனான போரில் இணைய கூடுதலாக படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ராணுவ அழைப்பை மீறி அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

😂

புட்டின் தன் தலைமீதே .....???

யூக்ரேன் ஆண்கள் யாரையும்  வெளியேறாமல் போர் செய்ய வேண்டும் என்பது எவ்வகையில் அடங்கும்?
 
2 minutes ago, விசுகு said:

ஆக்கிரமிப்புக்கு எதிராக ஓடுபவர்களுக்கும் நாட்டைக்காக்கமுடியாமல் ஓடுபவர்களுக்குமான விகிதாச்சாரத்தை அறிவேன் நான். 

விகிதாசாரம்????????

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

கிவ்வை நோக்கிப் படைகள் வந்ததும் வெளியேறியது இராணுவத் தந்திரோபாய  நகர்வாகவே கருதப்படுகிறது. 

உக்ரேனில் நடபெறும் சம்பவங்களின் அடிப்படைப் புரிதலை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எங்கள் அனுமானங்கள் தவறாக்ப் போவதற்கான சாத்தியங்கள் அதிகம. 

உக்ரேன் ராணுவத்துக்காக பெட்டி பெட்டியாக ஆயுதங்களை ரஷ்யா விட்டுச்சென்றதும் ஒரு ராணுவ நகர்வே

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

உக்ரேன் ராணுவத்துக்காக பெட்டி பெட்டியாக ஆயுதங்களை ரஷ்யா விட்டுச்சென்றதும் ஒரு ராணுவ நகர்வே

சீ புட்டினின் கருணை உள்ளம் அது 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

யூக்ரேன் ஆண்கள் யாரையும்  வெளியேறாமல் போர் செய்ய வேண்டும் என்பது எவ்வகையில் அடங்கும்?
 
விகிதாசாரம்????????

மண் மீட்பு என்று வந்தால்??

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, இணையவன் said:

எங்கேயோ முன்பு வாசித்தது...

புதினிடம், அணுவாயுதம் பாவித்தால் மொத்த மனித இனமே பாதிக்கப்படுமல்லவா கேட்கப்பட்டது.  அதற்கு அவரது பதில், ரஷ்யர்கள் இல்லாத உலகில் மனித இனம் வாழத் தகுதியற்றது என்பதுபோல் பதிலளித்திருந்தார்.

இப்படியான ஒரு பயங்கரவாதி உலக அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்.
(மேற்கு பயங்கரவாதிகள் இல்லையா என்று கேள்வி கேட்க வருவார்கள் என்பது தெரியும்)

புட்டின் ஒரு போதும் அணு ஆயுத‌த்தை கையில் எடுக்க‌ மாட்டார் , புட்டினுக்கு த‌ன‌து நாட்டின் பாதுகாப்பு முக்கிய‌ம் ,

புட்டினை க‌ழுவி ஊத்த‌ என்றே அமெரிக்கா நாட்டால்   ப‌ல‌ முன்ன‌னி ஊட‌க‌ங்க‌ள் க‌ள‌ம் இற‌க்க‌ப் ப‌ட்டு இருக்கு , அவைக்கு குடுத்த‌ வேலைய‌ அவை ச‌ரியா செய்யின‌ம் , இனி வ‌ரும் நாட்க‌ளில் யாரின் கை மேல‌ ஓங்குது என்று பொறுத்து இருந்து பாருங்கோ  ?

அமெரிக்காவின் சித்து விளையாட்டால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து உக்கிரேன் நாடும் உக்கிரேன் ம‌க்க‌ளும் 

புட்டின் த‌னி ஒரு வேங்கை அந்த‌ வேங்கைக்கு எதிராகா பின்னுக்கு இருந்து குத்துவ‌து அமெரிக்காவும் இங்லாந்தும் இவை வாய் மூடி இருந்தா பிர‌ச்ச‌னை எப்ப‌வோ முடிவுக்கு வ‌ந்து இருக்கும்  ,

காமெடிய‌னால் ஒரு நாடு அழிந்து போக‌னும் என்று எழுதி இருந்தா அதை யாரால் மாற்ற‌ முடியும்

வாழ்க‌ புட்டின் 🤣😁😂

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இது மார்ச் மாதத் தரவு. 
https://www.bbc.com/news/world-60798352

ஆர்ம்பத்தில் ரஷ்யா Kiev நோக்கிப் பெரும் எடுப்புடன் அனுப்பிய படை போன வேகத்திலேயே திரும்பி வந்தபோதே ரஷ்யாவின் பலம் உலகத்துக்கே புரிந்துவிட்டது. இப்போது ஆட்பற்றாக்குறையுடன் பழுதடைந்த வாகனங்கள் தளவாடங்களைத் திருந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்காலப் போர் முன்பு மாதிரி இல்லை. படை நகர்வுகள் அனைத்தையும் செய்மதிகள் மூலம் ரஷ்யா மட்டுமல்லாது மேற்கு நாட்டு இராணுவங்கள் கவனித்துக் கொண்டே உள்ளன. ரஷ்யா ஆக்கிரமித்திருந்த ஆயிரக்கணக்கான சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியை ரஷ்யா துல்லியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இழந்தது.

இப்போதுள்ள பிரச்சனை, இயலாமையால் அணு ஆயுதத்தைப் பாவிப்பாரா இல்லையா என்பதே. 

நீங்களும் மேற்குல மூளைச் சலவை செய்திப் பிரச்சாரங்களுக்கூடாக இந்த போரைப் பார்க்கிறீர்கள்.

உண்மையில் இந்தப் போருக்கான காரணமே உக்ரைனின் ரஷ்சிய மொழி பேசும் மக்கள் மீதான அடக்குமுறையும் இன அழிப்பும் தான். 

இதனை அடிப்படையாக வைச்சுத்தான் கிரிமியாவை மீட்டது ரஷ்சியா. அதில் ரஷ்சியாவின் இழப்பு என்று எதுவும் பெரிதாக இல்லை.

அதன் பின் டான்பாஸ் பிராந்தியத்தில் மேற்குலக ஆதரவோடு உக்ரைன் முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்.. அப்பாவி ரஷ்சிய மொழி பேசிய மக்கள் கொல்லப்பட்டனர். அகதிகளாக ரஷ்சியாவுக்குள் துரத்திவிடப்பட்டனர். அதன் விளைவு அந்த மக்கள் உக்ரைனுக்கு எதிராக போராட வெளிக்கிட்டது. அதற்கு ரஷ்சியா ஆதரவளித்து. இன்று அந்த மக்களின் சுதந்திரத்திற்கான தேர்தலை நடந்தவும் போகிறது.

இதற்கிடையில்.. இந்த நிகழ்வுகளை மையப்படுத்தி மேற்குலகும் அமெரிக்காவும் ரஷ்சியாவை பலவீனப்படுத்த் உக்ரைனுக்கு இராணுவ தளபாட உதவிகள்.. உளவுச் செய்மதி உதவிகள்.. பெருமளவு நிதி உதவிகள் என்று செய்த போதும்.. முன்னைய உக்ரைன் தலைவர்கள்.. ரஷ்சியாவுடன் மோதும் போக்கின் ஆபத்தை உணர்ந்து அதனை தவிர்த்துக் கொண்டனர்.

ஆனால்.. தற்போதைய யூத நவீன நாசிய காமடிப் பீஸ் தனது புகழுக்கும் செல்வாக்கிற்குமாக அமெரிக்க மேற்குல எடுபிடியாகி ரஷ்சியாவோடு முண்டியதன் பேரில் தான் இன்றைய யுத்தம் எழுந்தது.

இதில் ஆரம்பம் தொட்டு இன்று வரை புட்டின் சொல்வது உக்ரைனை ஆக்கிரமிப்பது அல்ல நோக்கம். ரஷ்சியாவினதும் ரஷ்சிய மொழி பேசும் மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்.. உக்ரைனை இராணுவ நீக்கம் செய்வது தான்.

அதில் ரஷ்சியா கனிசமான வெற்றி பெற்றதன் விளைவு.. பில்லியன் கணக்கில் மேற்குலகும் அமெரிக்காவும் கொட்டிக் கொடுக்க வேண்டி இருப்பதோடு.. பிரித்தானியா உட்பட மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருண்மியப் பின்னடைவை சந்திப்பது.

பெலருஸ் ஊடான தனது ஆரம்ப தாக்குதல் வியூகத்தை முடித்துக் கொண்ட போது கீவை விட்டு வெளியேறியது ரஷ்சியா. தற்போது.. டான்பாஸ் பெரிதும் விடுதலையானதும்.. கார்கீவை விட்டு வெளியேறி தேவையான பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்குது. தேவையற்ற இராணுவ ஆட்பல இழப்பை தவிர்த்ததன் மூலம் புட்டின் மேற்குலகின் எதிர்பார்ப்புக்கு ஆப்படிச்சிருக்கிறார்.

அந்த இயலாமையில்.. மேற்குலகம் எடுக்கும் பொய் பிரச்சாரங்கள் தாம் இப்போ அரங்கேறி வருகிறது. ரஷ்சியா இன்னும் சரியான பலத்தோடு தனது திட்டத்தில் திடமாகவே இருக்குது.

உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் தனியாகப் பிரிந்து ரஷ்சியாவோடு இணையும் தேர்தல்கள் நாளை முதல் 27 செப் க்குள் நடந்து முடியும். அதன் பின் அவற்றின் பாதுகாப்பை ரஷ்சியா சட்டபூர்வமாக்கிக் கொள்ளும். அப்போது ஆக்கிரமிப்பு என்ற பதத்திற்கு பதில் பதம் தேட வேண்டி வரும் மேற்கிற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

உல‌கம் அமைதியாய் இருப்பது அமெரிக்காவுக்கு அற‌வே பிடிக்காது , ஏதும் நாட்டுக்கு கோல் மூட்டி விடும் வேலைய‌ தான் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ர‌ அமெரிக்கா செய்யுது ?

நீ இப்ப‌டி இருக்க‌னும் நீ இதை தான் செய்ய‌னும் இப்ப‌டித் தான் வாழ‌னும் என்று சொல்லும் அதிகார‌த்தை அமெரிக்காவுக்கு யார் கொடுத்த‌து 

அமெரிக்காவுக்கு ச‌ரியான‌ ம‌ருந்து புட்டின் தான்.......................

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நந்தன் said:

உக்ரேன் ராணுவத்துக்காக பெட்டி பெட்டியாக ஆயுதங்களை ரஷ்யா விட்டுச்சென்றதும் ஒரு ராணுவ நகர்வே

நாலு பேப்பராவது வாசியுங்கோ, கொஞ்சமாவது புரியும். 😀

52 minutes ago, விசுகு said:

சீ புட்டினின் கருணை உள்ளம் அது 😂

எரிவாயுவின் விலை றொக்கற் வேக்த்தில் போக, குசாவின் பிறசறும் எகிறுது போலக்கிரக்கு...😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எங்கேயோ முன்பு வாசித்தது...

புதினிடம், அணுவாயுதம் பாவித்தால் மொத்த மனித இனமே பாதிக்கப்படுமல்லவா கேட்கப்பட்டது.  அதற்கு அவரது பதில், ரஷ்யர்கள் இல்லாத உலகில் மனித இனம் வாழத் தகுதியற்றது என்பதுபோல் பதிலளித்திருந்தார்.

இப்படியான ஒரு பயங்கரவாதி உலக அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்.
(மேற்கு பயங்கரவாதிகள் இல்லையா என்று கேள்வி கேட்க வருவார்கள் என்பது தெரியும்)

அணு ஆயுதப் பாவனையில் ஒருவரும் வெல்ல முடியாது என்பதுதான் சொல்லப்பட்ட விடயம்.   

☹️

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

நாலு பேப்பராவது வாசியுங்கோ, கொஞ்சமாவது புரியும். 😀

எந்த பேப்பர் எண்டு சொன்னால்  போற வழியில புண்ணியமாப்போகும் 

ஆண்டவருக்கு தோத்திரம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அணு ஆயுதப் பாவனையில் ஒருவரும் வெல்ல முடியாது என்பதுதான் சொல்லப்பட்ட விடயம்.   

☹️

நித‌ர்ச‌ன‌ உண்மை 🙏🙏🙏

25 minutes ago, Kapithan said:

நாலு பேப்பராவது வாசியுங்கோ, கொஞ்சமாவது புரியும். 😀

எரிவாயுவின் விலை றொக்கற் வேக்த்தில் போக, குசாவின் பிறசறும் எகிறுது போலக்கிரக்கு...😀

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து செல்கிறது. இன்றும் 8 வீதமளவில் குறைந்துள்ளது. 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

எந்த பேப்பர் எண்டு சொன்னால்  போற வழியில புண்ணியமாப்போகும் 

ஆண்டவருக்கு தோத்திரம் 

நேட்டோ நாடுக‌ளின் ஊட‌க‌த்தில் வ‌ரும் செய்தியை ம‌ட்டும் பார்க்காம‌ , நீங்க‌ள் பார்க்க‌ உண்மைய‌ தெரிந்து கொள்ள‌ எத்த‌னையோ ஊட‌க‌ங்க‌ள் இருக்கு அண்ணா ..................

  • கருத்துக்கள உறவுகள்

நான் டென்மார்க் ஊட‌க‌த்தில் வ‌ரும் செய்தியை பார்ப்ப‌து இல்லை

கார‌ண‌ம் செல‌ஸ்கியின் ம‌ல‌த்தில் நாத்த‌ம் இல்லை புட்டினின் ம‌ல‌த்தில் தான் நாத்த‌ம் என்று சொல்லுவாங்ள்  

நேட்டோ அமைப்பில் டென்மார்க்கும் இருக்கு ஆன‌ ப‌டியால் செய்தியை இப்ப‌டி சொல்லித் தான் ஆக‌னும் 😏

58 minutes ago, nedukkalapoovan said:

நீங்களும் மேற்குல மூளைச் சலவை செய்திப் பிரச்சாரங்களுக்கூடாக இந்த போரைப் பார்க்கிறீர்கள்.

பிபிசி தரவினை இணைத்தது நீங்கள்தான். அதன் திகதியை மட்டுமே நான் சுட்டிக் காட்டியிருந்தேன். 😁

அது தவிர எனது கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு அதனை மறுத்து நீங்கள் பதில் தரவில்லை. ரஷ்யாவின் தற்போதைய இராணுவ பலத்தை ரஷ்ய ஊடகங்களிலிருந்தாலும் பரவாயில்லை தாருங்கள். தெரிந்து கொள்ளத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

நாலு பேப்பராவது வாசியுங்கோ, கொஞ்சமாவது புரியும். 😀

எரிவாயுவின் விலை றொக்கற் வேக்த்தில் போக, குசாவின் பிறசறும் எகிறுது போலக்கிரக்கு...😀

முதலில் நீங்க யாருக்கு பதில் எழுதுகிறீர்கள் என்பதையாவது ஒழுங்காக படித்து குசா காய்ச்சலில் இருந்து வெளியே வாருங்கள் புண்ணியமா போகும் 😂

25 minutes ago, Kapithan said:

அணு ஆயுதப் பாவனையில் ஒருவரும் வெல்ல முடியாது என்பதுதான் சொல்லப்பட்ட விடயம்.   

☹️

உலக நாடுகளால் விளங்கிக் கொள்ளப்பட்ட விடயம் புதினின் கையறு நிலை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.