Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியப் பயிற்சி 

508.ht1_.jpg

1983 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமளவில் சென்னையி முழுதும் ஈழத் தமிழ் இளைஞர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவர்களைத் தொகுதி தொகுதியாக பஸ்வண்டிகளில் ஏற்றி தில்லிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் ரோ அதிகாரிகள்.

"அது ஒரு களைப்பு மிகுந்த நீண்ட தூரப் பயணம்" என்று அரியாலையைச் சேர்ந்த நிருபன் எனும் இளைஞர் என்னுடன் சில வருடங்களுக்கு முன்னர் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். டெலோ அமைப்பின் முதலாவது தொகுதிப் பயிற்சிப் பாசறையின் உறுப்பினரான அவர் தற்போது ஐரோப்பாவில் வசித்து வருகிறார். டெலோ அமைப்பே இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட முதலாவது அமைப்பென்பதும் குறிப்பிடத் தக்கது.

சுமார் 2,000 கிலோமீட்டர்கள் தூரத்தினைக் கடக்க தமது பஸ்வண்டிக்கு மூன்று நாட்கள் எடுத்ததாக அவர் கூறினார். தில்லியைச் சுற்றிப்பார்த்தபடியே தமது பயணத்தைத் தொடர அவர்கள் கேட்டுக்கொண்டபோது அதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாம்.

"இடங்களைச் சுற்றிக் காட்ட எம்மை அழைத்துச் சென்றார்கள். ஆனால் எம்மை எவருடனும் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று நிருபன் கூறினார். தில்லியிலிருந்து பயிற்சி முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பயிற்சித் திட்டம் என்பது ஒரு இரகசியாமான நடவடிக்கை என்று அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தது.

"எமது மூன்றரை மாத கால பயிற்சியை முடித்துக்கொண்டு நாம் மீன்டும் சென்னைக் கொண்டுவரப்பட்டபோதுதான் நாம் பயிற்றப்பட்ட இடம் டெஹெரா டன் எனும் பகுதி என்பது எமக்குத் தெரியவந்தது. பயிற்சி முழுதுவதும் எம்மை முகாமிற்கு வெளியே செல்ல அவர்கள் அனுமதியளிக்கவில்லை".

அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றின் மலைப்பாங்கான நிலப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த அந்தப் பயிற்சி முகாம் வெளியுலகிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.

"அது ஒரு அழகான இடம். நாம் அங்கு தங்கியிருந்த நாட்களை மகிழ்வுடன் களித்தோம். ஆனால் அங்கு நிலவிய காலநிலை மட்டுமே எமக்குப் பிரச்சினையாக இருந்தது" என்று அவர் கூறினார்.

முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்ட முதலாவது நாள் கடுங்குளிராகக் காணப்பட்டதாகக் கூறும் நிருபன் தனக்கு வழங்கப்பட்ட தடிப்பான கம்பளத்தினால்க் கூட அக்குளிரைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறுகிறார். பயிற்சிமுகாமிற்கு அழைத்துவரப்பட்டு, பதியப்பட்ட பின்னர் ஒவ்வொரு போராளிக்கும் இரு போர்வைகளும், படுக்கை விருப்பித் துணியும், மடித்துவைக்கக்கூடிய கட்டிலும் வழங்கப்பட்டது. "மிகக்கடுமையான குளிரைக் கொண்ட பிரதேசம்" என்று நிருபன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், ஒருவார காலத்தின் பின்னர் குளிருக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டார்கள். 

"பின்னர் குளிருக்கு எம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்" என்று அவர் கூறினார். ஆனால், வட இந்திய உணவை உட்கொள்வது கடிணமாகவே தென்பட்டது. சப்பத்தி, நாண், பூரி என்பவற்றுடன் உருளைக்கிழங்கு, முட்டை அல்லது ஆட்டுக்கறி அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. இடையிடையே கோழிக்கறியும் வழங்கப்பட்டிருந்ததது. எப்போதாவது ஒருமுறைதான் சோறும் மீன்கறியும் முகாமில் கிடைத்தது.

"அவர்களின் உணவில் சுவையே இருக்கவில்லை. அவர்கள் மிளகாய்த்தூள் பாவிப்பதேயில்லை" என்று நிருபன் தொடர்ந்தார். "சூடான, சுவையான உணவையே நாம் எதிர்ப்பார்த்தோம்" என்று அவர் மேலும் கூறினார்.

508.ht2_.jpg

ஈழப் போராளி அமைப்புக்களில் டெலோவே அதிகளவு போராளிகளை அன்று கொண்டிருந்ததது. சுமார் 350 போராளிகளை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அது அனுப்பியது. அடுத்துவந்த சிலவாரங்களில் ஏனைய அமைப்புக்கள் அனுப்பிய போராளிகளின் எண்ணிக்கைகள் டெலோ அமைப்பினரோடு ஒப்பிடும்போது குறைவானவையாகவே காணப்பட்டன. ஈரோஸ் அமைப்பு 200 போராளிகளையும், .பி.ஆர்.எல்.எப் அமைப்பு 100 போராளிகளையும், புளொட் அமைப்பு 70 போராளிகளையும், புலிகள் 50 போராளிகளையும் பயிற்சிக்காக அனுப்பிவைத்திருந்தனர். பின்னர் வந்த மாதங்களில் மேலும் சில தொகுதிப் போராளிகளை அமைப்புக்கள் அனுப்பி வைத்திருந்தன. இந்தியாவின் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச‌ பயனைப் பெற்றுக்கொள்ள இயக்கங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது.

டெலோவினால் அனுப்பப்பட்ட தொகுதிப் போராளிகளுக்கு சிறீ சபாரட்ணமும், ஈரோஸ் போராளிகளுக்கு பாலக்குமாரும், .பி.ஆர்.எல்.எப் தொகுதிக்கு டக்ளஸ் தேவானந்தாவும், புளொட் போராளிகளுக்கு உமா மகேஸ்வரனும், புலிகளின் போராளிகளுக்கு பொன்னமான் என்று அழைக்கப்பட்ட குகனும் தலைமை தாங்கியிருந்தார்கள். உமா மகேஸ்வரனுக்கும் டக்ளஸ் தேவாநந்தாவிற்கும் லெபனானில் அவர்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புதுப்பிக்கும் நிகழ்வாக இந்தியப் பயிற்சி அமைந்திருந்தது.

  • Like 1
  • Thanks 2
  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

ஈழப் போராளி அமைப்புக்களில் டெலோவே அதிகளவு போராளிகளை அன்று கொண்டிருந்ததது. சுமார் 350 போராளிகளை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அது அனுப்பியது. அடுத்துவந்த சிலவாரங்களில் ஏனைய அமைப்புக்கள் அனுப்பிய போராளிகளின் எண்ணிக்கைகள் டெலோ அமைப்பினரோடு ஒப்பிடும்போது குறைவானவையாகவே காணப்பட்டன. ஈரோஸ் அமைப்பு 200 போராளிகளையும், .பி.ஆர்.எல்.எப் அமைப்பு 100 போராளிகளையும், புளொட் அமைப்பு 70 போராளிகளையும், புலிகள் 50 போராளிகளையும் பயிற்சிக்காக அனுப்பிவைத்திருந்தனர்.

புளட் தான் அதிகளவு எண்ணிக்கையான போராளிகளை கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சிலவேளை இதற்கப்பால்ப் பட்ட காலமாக இருக்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயிற்சியின் நிறைவில் கண்கலங்கிய கிட்டுவும், யதார்த்தை உணர்த்திய பிரபாகரனும்

மூன்று இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. தில்லியின் இதயப்பகுதியில் அமைந்திருந்த ராமகிருஷ்ணபுரம், தில்லி விமான நிலையத்திற்கு அருகில் இருந்த டெஹெரா டன் மற்றும் சக்கிரட்ட ஆகிய பகுதிகளிலேயே பல பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் சாதாரண பயிற்சிக்கு கொண்டுவரப்பட்ட போராளிகள் தனித்தனியாகத் தங்கவைக்கப்பட்டனர்.  விசேட பயிற்சிகளுக்கென்று அழைத்துவரப்பட்ட போராளிகளை, அவர்கள் வேறு வேறான இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் ஒரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டனர். ஆனால், புலிகளின் போராளிகளை ஏனைய அமைப்புக்களின் விசேட பயிற்சிப் போராளிகளுடன் தங்கவைப்பதை அதிகாரிகள் தவிர்த்துக்கொண்டனர். புலிகளின் போராளிகளை தொடர்ந்தும் தனியாக வைத்தே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. 

புலிகளை இரகசிய ராணுவப் பயிற்சி நிலையமான சக்கிரட்ட பகுதியில் தங்கவைத்து பயிற்சியளித்தனர். இப்பகுதி இந்திய ராணுவப் புலநாய்வு அதிகாரிகளினால் "கட்டமைப்பு ‍ 22 " என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த முகாமிலேயே சீன ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்த திபெத்தில் சீன அரசின் நிர்வாகத்திற்கெதிராகப் போராடிவந்த திபெத்தியப் போராளிகளுக்கு ரோவும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தன.  புலிகளின் போராளிகளுக்கு இந்த முகாமினை ஒதுக்குமாறு ரோ வினால் புலிகளைப் பயிற்றுவிக்கென அமர்த்தப்பட்ட அதிகாரியான‌ காவோ தனது உதவியாளர்களுக்குப்  பணித்திருந்தார்.

இந்தியப் பயிற்சிக்காக தனது போராளிகளை அனுப்புவது தொடர்பில் தலைவர் தனது சந்தேகங்களைக் கொண்டிருந்தார். சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக தான் முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கும், இந்தியா போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்திற்கும் இடையிலான பாரிய வேற்றுமையினை அவர் தெளிவாக உணர்ந்தே இருந்தார். ஆனாலும், இந்திய பயிற்சியினைப் பாவித்து மாற்றியக்கங்களைக்கொண்டு இந்தியா புலிகளை பிற்காலத்தில் அழித்துவிடும் நிலைமை உருவாகலாம் என்று தலைவரிடம் கூறிய அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம், புலிகளும் இந்தியப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசி தலைவரைச் சம்மதிக்க வைத்தார். பாலசிங்கம் கூறியதன்படி நிகழுமானால் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் இந்தியப் பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.

 balakumar.jpg

ஈரோஸின் பாலக்குமார்

 "இந்தியாவும் ஈழத்தமிழர்களும்" எனும் தலையங்கத்துடன் 1988 ‍- 1989 ஆம் ஆண்டுகளில் புலிகளால் வெளியிடப்பட்ட பதிவில் இதுகுறித்த விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. இப்பதிவில் தமிழ்ப்போராளிகளுக்கு பயிற்சியளிப்பதில் இந்தியா கொண்டிருந்த உறுதியை பிரபாகரன் உணர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தியப் பயிற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுக்குமிடத்து இந்தியாவினால் பயிற்சியளிக்கப்படும் ஏனைய இயக்கங்கள்  தாம் புதிதாகப் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புலிகளை அழிக்கப் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளின் அழிப்பென்பது தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடும் என்று அவர் அஞ்சினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

"மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியே எமக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், எமது சக்தியைப் பாவித்து நாம் பல பயிற்சி முகாம்களை அமைத்துக்கொண்டு எமது இராணுவ பலத்தினை வளர்த்துக்கொண்டோம். இந்தியாவிடம் தங்கியிருக்காமல் எமது வளங்களைப் பாவித்து எமக்குத் தேவையான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம்" என்று புலிகளின் அப்பதிவு மேலும் கூறுகிறது.

 பிரபாகரன் பற்றிய இந்தப் பதிவு மேலும் தொடரும்போது அவர் கொண்டிருந்த சிந்தனையும், மதிநுட்பமான முடிவுகளும் போராட்டத்தினை முன்கொண்டு சென்றது குறித்து நாம் மேலும் மேலும் அறிந்துகொள்ள முடியும். 

தனது போராளிகளைத் தனியான முகாம் ஒன்றில் வைத்து பயிற்சியளிக்குமாறு பிரபாகரன் ரோ அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். ரோவும் அதற்குச் சம்மதித்திருந்தது. பயிற்சிகளின் ஆரம்பத்திலிருந்தே போராளி அமைப்புக்களில் புலிகளே திறமையானவர்கள் என்பதை ரோ அதிகாரிகள் அறிந்திருந்தனர். ரோ வின் கைக்கூலிகளாக தனது போராளிகள் மாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பிரபாகரன் எடுத்திருந்தார்.

அக்காலத்தில் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட இளைஞர்களுக்கு இயக்கப் பெயர் வழங்கப்படுவது வழமையாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது போராளியின் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது பொலீஸாரிடமிருந்தோ துன்புருத்தல்களை எதிர்கொள்வதைத் தடுப்பது. இரண்டாவது போராளிகளுக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுப்பது. புதிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒருபோராளி அவ்வியக்கத்திற்கும், இலட்சியத்திற்கும் எப்போதும் விசுவாசமாக செயற்படுவார் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. மேலும், தமது முன்னைய வாழ்விலிருந்து முற்றான விலகலையும் இயக்கப் பெயர்கள் போராளிகளுக்கு வழங்கின. புலிகள் இயக்கத்தில் இந்த நடைமுறை ஒரு மதத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். போராளிகள் தமது இயக்கப் பெயர்களையே பாவிக்கவேண்டும் என்றும் ஏனைய போராளிகளின் இயற்பெயரை எக்காரணத்தைக் கொண்டும் அறிந்துகொள்ள முயலக் கூடாது என்கிற கடுமையான கட்டளையும் இருந்தது. போராளிகளின் குடும்பங்களின் விபரங்கள் எதிரிகளுக்குக் கிடைக்கப்பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. 

இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தனது போராளிகளிடம் பேசிய பிரபாகரன் எக்காரணத்தைக் கொண்டும் தமது இயற்பெயர்களை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று பணித்திருந்தார். இயக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களையே போராளிகள் இந்திய அதிகாரிளிடம்  கூறி வந்தமையினால் அவர்களது குடும்ப விபரங்கள் குறித்து ரோ அதிகாரிகளால் அறியமுடியாது போய்விட்டது.பொன்னமானின் உண்மையான பெயர் அவரது வீரமரணத்தின் பின்னரே வெளியே தெரியவந்தது. 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தொன்றில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார்.

இந்தியப் பயிற்சி அட்டவணை மிகவும் கடுமையாகக் காணப்பட்டது. காலை 8 மணிக்கு உடற்பயிற்சிகளுடன் நாள் ஆரம்பிக்கும். காலையுணவு ஒன்பது மணிக்கு பரிமாறப்பட்டது. பயிற்சிகளுக்கான தேற்றம் மற்றும் தேற்றத்தினை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் செயற்பாடுகள் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை நடத்தப்பட்டன. மரபுவழிப் போர்முறை மற்றும் கரந்தடிப்படைப் போர்முறை ஆகியனவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வகுப்புக்களில் நடத்தப்பட்ட பயிற்சிகள் ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தே வழங்கப்பட்டு வந்தன.

மதிய உணவு பிற்பகல் 1 மணியிலிருந்து 2 மணிவரை பரிமாறப்பட்டது. பிற்பகல் முழுவதும் துப்பாக்கிச் சூடு நடக்கும் மைதானத்திலேயே கழிக்கப்பட்டது. அனைத்துப் போராளிகளுக்கும் எஸ்.எல்.ஆர், ஏ.கே. 47, எம் ‍ 16, ஜி 3, எஸ்.எம்.ஜி, .303, ரிவோல்வர்கள், பிஸ்ட்டல்கள், ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் கிரணேட்டுக்கள் ஆகியவற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிகளின்போது திறமையாகச் செயற்பட்டதன் அடிப்படையில்  தெரிவுசெய்யப்பட்ட சில போராளிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

விசேட பயிற்சிகளின்போது வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, கண்ணிவெடிகளைப் புதைப்பது, தாங்கியெதிர்ப்பு ஆயுதங்களைக் கையாள்வது, தொலைத்தொடபு மற்றும் புலநாய்வு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. டெலோ அமைப்பிலிருந்து ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட குழு ஒன்றிற்கு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்துசெல்லும் கப்பல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக பிரத்தியேகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

டெலோ அமைப்பின் இந்தப் பிரிவில் பயிற்றப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஒருவர் என்னுடன் பேசுகையில் ரோ அதிகாரிகளால் தாம் தெரிவுசெய்யப்பட்டதாகவும், கப்பல்களை அடையாளம் காண்பது, அது எந்த நாட்டிற்குரியது என்பதைக் கண்டறிவது, அக்கப்பல் எவ்வகையைச் சார்ந்தது போன்ற விடயங்களை அறிந்துகொள்வதற்கான பயிற்சிகள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கூறினார். மும்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்தியக் கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்தக் குழுவினர் கப்பல்களைப் புகைப்படம் எடுப்பது, கப்பலுக்கான தொலைபேசி அழைப்புக்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பது போன்ற புலநாய்வுச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்றனர்.  இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான கருவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டதோடு நீருக்கடியில் சென்று உளவுத்தகவல்களை சேகரிப்பது போன்ற விடயங்களிலும் இக்குழுவினர் இந்திய கடற்படையினரால் பயிற்றப்பட்டனர்.

டெலோ அமைப்பைச் சேர்ந்த அந்த முன்னாள்ப் போராளி என்னிடம் பேசும்போது திருகோணமலை துறைமுகத்தினைக் கண்காணிப்பதே இந்தியாவின் முக்கிய குறிக்கோளாகத் தெரிந்ததாக கூறினார். திருகோணமலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள்ச் செல்வதைத் தடுப்பதே இந்திய அதிகாரிகளின் ஒரே நோக்கமாக‌ இருந்ததாகவும், இதற்கான பயிற்சியில் தாம் காட்டிய ஈடுபாட்டினையடுத்து ரோ அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்திருந்ததாகவும் கூறினார். 

ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட டெலோ அமைப்பின் ஒரு குழுவினர் ஐந்து முக்கியமான புலநாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பயிற்றப்பட்டனர். அவையாவன,

1. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் இராணுவ உதவிகளை அவதானிப்பது

2. இலங்கையின் உள்நாட்டுப் போரில் பிரித்தானியாவின் முன்னாள் போர்வீரர்களைக் கொண்டியங்கும் கூலிப்படையான கீனி மீனி சேர்விஸஸின் செயற்பாடுகளை அவதானிப்பது

3. பாக்கிஸ்த்தான் மற்றும் சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளை அவதானிப்பது

4. வொயிஸ் ஒப் அமெரிக்கா எனப்படும் அமெரிக்காவின் வானொலி நிலையத்தின் செயற்பாடுகளை அவதானிப்பது

5. திருகோண‌மலை துறைமுகத்தினை அவதானிப்பது.

KMS%20trains%20STF%20-%20JDS.jpg

 இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் பயிற்றுவிப்பாளன் ஒருவனுடன் சிங்கள விசேட அதிரடிப்படையினர்

பயிற்சிகளை ஒருங்கிணைத்திருந்தவர்கள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் ரோவுக்காக வங்கதேசம், சிக்கிம், பாக்கிஸ்த்தான் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்தவர்கள். ஏனையவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள்.  விசேட பயிற்சிகளுக்கென்றும் தனியான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததுடன், போராளிகள் தில்லியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் இந்த விசேட பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தன.

சங்கர் ராஜியும் டக்கிளஸ் தேவானந்தாவும் என்னுடன் பேசும்போது சில அதிகாரிகள் இலங்கை குறித்த தகவல்களைத் திரட்டுவதிலேயே அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறினர். இலங்கையில் இருக்கும் வீதிகள், புகையிரத பாதைகள், பாலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்திருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்குமாறு அதிகாரிகள் தம்மிடம் பணித்ததாகக் கூறினர். பயிற்சியில் ஈடுபடும் போராளிகள் இந்த விபரங்களை இந்திய அதிகாரிகளிடம் கையளிப்பது அவர்களின் கடமை என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.

 r/Eelam - Sea Tiger Captain Gunaseelan: Segan Cruz Michael Jeeva, Major Malaravan (Velan): Suntharalingam Suntharavel,

கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார்

 தம்மிடம் பயிற்சி பெறுபவர்களை அவ்வப்போது ரோ அதிகாரிகள் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. உண்மையாகவிருத்தல், நன்னடத்தை மற்றும் குறிபார்த்துச் சுடுதல் போன்றவற்றிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. 

புலிகளின் போராளிகளே பயிற்சியாளர்களின்போது இந்திய அதிகாரிகளின்  நன்மதிப்பைப் பெற்றனர். பயிற்சி முடிந்தபொழுது நடத்தப்பட்ட விடைபெறுதல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. புலிகளைப் பயிற்றுவித்த இராணுவ அதிகாரிகளில் ஒருவர் இறுதி விடைபெறும் உரையினை ஆற்றிக்கொண்டிருக்கும்போதே அழத்தொடங்கினார். புலிகளின் தரப்பில் பேசிய கிட்டுவும் மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். சொற்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ள கண்கள் கண்ணீரால் நிரம்பியதாக கூடவிருந்த போராளிகள் கூறியிருந்தனர். 

te4-4-300x171.jpg

சென்னைக்குத் திரும்பியபோது இந்த நிகழ்வினை பிரபாகரனிடம் பொன்னம்மான் தெரிவித்தார். சிறிது நேரம் மெளனமாகச் சிந்தித்துவிட்டு பிரபாகரன் பேசத் தொடங்கினார்,

"ஒரு குறிக்கோளுக்காகவே நாம் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அவர்களோ (இந்தியர்கள்) வேறொரு நோக்கத்திற்காக எமக்குப் பயிற்சியளித்தார்கள். எமது குறிக்கோளுக்கு எதிராக அவர்கள் தமது இராணுவத்தை இறக்கினால் அவர்களுடன் சண்டையிடுமாறு நான் கிட்டுவைக் கோருவோன். கிட்டுவும் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டே ஆகவேண்டும்" என்று கூறினார்.

 சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர் இந்திய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது இந்த நிகழ்வினை கிட்டு நினைவுகூர்ந்தார்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆயுதங்களுக்காக இந்தியாவில் தங்கியிருப்பதைத் தவிர்த்த பிரபாகரன்

IMG_3284.JPG

பாண்டிச்சேரியில் ரோ அதிகாரிகளுடனான இரகசிய கூட்டம் நடந்ததன் பின்னர் பிரபாகரன் மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அடிக்கடி பயணித்து வந்தார். சென்னையில் அவர் பாலசிங்கம் தம்பதியினர் தங்கிருந்த சாந்தோம் சாலை விடுதியில் தங்கியிருந்தார். அதுவே அக்காலத்தில் புலிகளின் அலுவலகமாகவும் தொழிற்பட்டு வந்தது. அந்த அலுவலகம் எப்போதும் ஆட்களால் நிரம்பியிருந்தது. இது பாலசிங்கத்தின் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக அமைந்ததுடன் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறியிருந்தது. ஆகவே, 1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பாலசிங்கம் தம்பதியினர் தமது வாழிடத்தை சென்னைக்கு வெளியே அமைந்திருந்த திருவாண்மியூருக்கு மாற்றியிருந்தனர். சென்னைக்கு வரும்போதெல்லாம் பிரபாகரன் இங்கேயே தங்கினார்.

அடையார் பகுதியில் ஓரளவிற்கு விசாலமான வீடொன்றினை வாடகைக்கு எடுத்துக்கொண்ட புலிகள் அங்கேயே தமது அரசியல் அலுவலகத்தினைத் திறந்தனர். இந்த அரசியல் அலுவலகத்திலிருந்துதான் பாலசிங்கமும் அடேலும் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த அலுவலகத்தில்த்தான் சக்கரட்ட பயிற்சிமுகாமுக்கு கொண்டுசெல்லப்படுமுன் புலிகளின் போராளிகளுடன் பிரபாகரன் சந்தித்துப் பேசிவந்தார். பொன்னம்மான், அப்பையா, கிட்டு ஆகியோரும் பிரபாகரனை இந்த அலுவலகத்தில் சந்தித்தே சென்றிருக்கிறார்கள். இவர்களுள் அப்பையாவே வயதில் மூத்தவராக இருந்தார். நாற்பதுகளின் இறுதியில் இருந்த அவர் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் பிரிவில் கைதேர்ந்தவராக விளங்கினார்.

1983 ஆம் ஆண்டின் இறுதி நான்குமாத காலத்தில் பிரபாகரன் நான்கு விடயங்களில் அக்கறை செலுத்தினார். இவை அனைத்துமே அவரது வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தவை. அத்துடன் புலிகளின் வரலாறு, தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம், இலங்கையின் வரலாறு ஆகியவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியவை. அவையாவன,

1. இந்தியப் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்வது.

2. மட்டக்களப்புச் சிறையுடைப்பு.

3. விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்களின் பங்களிப்பு.

4. அவரது தனிப்பட்ட காதல் விவகாரம்

kittu20ltte204.jpg

தமிழ்நாட்டு அரசியல்வாதியான நெடுமாறனுடன் கிட்டு

இந்திய ஆயுதப் பயிற்சித் திட்டத்தினை ஒரு வரப்பிரசாதமாக இறுதியில் உணர்ந்துகொண்ட பிரபாகரன் அதிலிருந்து உச்சபயனை தனதியக்கம் அடைந்துகொள்ளவேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டார். இந்திய இராணுவ அதிகாரிகளிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட மரபுவழிப் போராட்ட வழிமுறையின் மூலம் புலிகளை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றியமைக்கும் சிந்தனையில் அவர் ஈடுபட்டார். எனது ஊரான அரியாலையைச் சேர்ந்த புலிகளின் போராளியான சந்தோசமும் அக்காலத்தில் சென்னையில் பிரபாகரனுடன் தங்கியிருந்தார். பிராபகரனின் சிந்தனையில் அன்று ஓடிக்கொண்டிருந்த விடயங்கள் குறித்து நான் அவரிடம் வினவினேன்,

பிரபாகரன் இரு விடயங்கள் குறித்து தீர்மானமாக இருந்ததாக சந்தோசம் கூறினார். அதாவது, இந்தியாவினால் வழங்கப்பட்டுவரும் பயிற்சி என்பது நெடுநாள் நீடிக்கப்போவதில்லையென்பதும், போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் அவற்றினை எப்போதுமே தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க இந்தியா முயலும் என்பதுமே அவையிரண்டும் ஆகும். 

இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கையினை தூக்கி நிறுத்தியதன் பின்னர் தமிழ்ப்போராளிகளுக்கு தான் வழங்கிவரும் பயிற்சியினை நிறுத்திவிடும் என்று பிரபாகரன் தனது போராளிகளிடம் கூறிவந்தார். "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போது நிலைபெறுகிறதோ, அன்றே அவர்களுக்கு எமது தேவை இல்லாது போய்விடும். நாளையே ஜெயவர்த்தன இறந்துபோக சிறிமா ஆட்சிக்கு வந்தால், இந்தியா எம்மை முற்றாகக் கைவிட்டு விடும். ஏனென்றால், அதன்பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவான ஆட்சி இலங்கையில் ஏற்படுத்தப்படும்" என்று பிரபாகரன் கூறியதாக சந்தோசம் நினைவுகூர்ந்தார்.

தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து தன்னை விலத்திக்கொள்ள இந்தியாவுக்கு இன்னொரு காரணமும் ஏற்படலாம் என்பதை பிரபாகரன் உணரத் தலைப்பட்டிருந்தார். தமிழ்ப் போராளிகளுக்கான பயிற்சிகளை இந்தியா வழங்குவது சர்வதேசத்தில் தெரியவந்து, அதற்கெதிரான பலமான எதிர்ப்பும் விமர்சனங்களும் வெளிவருமிடத்து இந்தியா பின்வாங்கிவிடும் என்று அவர் கருதினார். மேலும் ஜெயவர்த்தன இந்தியாவுடன் அனுசரித்துச் செல்வதென்பது ஒருபோதும் நடக்கப்போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

இவ்வாறான காரணங்களால் பின்வரும் இருவிடயங்களைச் செய்திடவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். முதலாவது இந்தியப் பயிற்சி நடக்கும் காலம்வரை அதிலிருந்து முழுமையான பயனைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது, இந்தியாவிடம் மட்டுமே தங்கியிருக்காது தமக்கான சொந்த பயிற்சியினையும், ஆயுத வளங்களையும் தேடிக்கொள்வது.

இந்த இரண்டு காரணிகளுமே பின்னர்வந்த 4 வருடங்களில் பிரபாகரனின் கொள்கைக்கும் திட்டமிடல்களுக்கும் அடிப்படையாக‌ அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. புலிகளுக்கான பயிற்சித் தளங்களை தமிழ்நாட்டிற்கும் வன்னிக்கும் விஸ்த்தரிக்க அவர் தீர்மானித்தார். அக்காலத்திலேயே புலிகள் மதுரையிலும் வன்னியின் சில பகுதிகளிலும் பயிற்சி முகாம்களை நடத்திக்கொண்டிருந்தனர். அந்த முகாம்களை மேலும் பலப்படுத்துவதுடன் புதிய, பரந்த வலைப்பின்னல் முகாம்களை கட்டியெழுப்பவும் அவர் உறுதிபூண்டார். 

அதேகாலத்தில் தனது இயக்கத்தின் ஆயுதக் கையிருப்பைப் பெருக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டார். "இந்தியாவை நாம் ஆயுதங்களுக்காக நம்பியிருக்கும்வரை நாம் அவர்களது அடிமைகளாகவே இருப்போம்" என்று பிரபாகரன் கூறியதாக சந்தோசம் என்னிடம் சிறித்துக்கொண்டே கூறினார். ஆகவே, சுதந்திரமான ஆயுதச் சேகரிப்பில் அவர் இறங்கினார்.

"இவையே பிரபாகரனின் புத்திசாதுரியமான முடிவுகளாக இருந்தன" என்று ரமேஷ் நடராஜா என்னிடம் தெரிவித்திருந்தார். இதனை மிகத் தெளிவாக தினமுரசு பத்திரிக்கையில் 1996 முதல் 1999 வரையான காலப்பகுதியில் "அல்பிரெட் துரையப்பா முதல் காமிணி வரை" எனும் தலைப்பில் அவர் எழுதிய அரசியல்த் தொடரில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரனின் திறமைகளை, பலங்கள் அவரது வெற்றிகள் தொடர்பாக தினமுரசில் தான் தொடர்ச்சியாக எழுதிவந்ததனால் தனது அமைப்பான ஈ.பி.டி.பி இற்குள் கடுமையான எதிர்ப்பினைத் தான் சம்பாதித்துக்கொண்டதாக அவர் கூறினார். "மற்றைய இயக்கங்களும் பிரபாகரனின் திட்டமிடல், சிந்தனையாற்றல், பலங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் கொண்டு தம்மையும் வளர்த்துக்கொள்ளலாம் என்கிற காரணத்திற்காகவே அவர் பற்றி எழுதினேன்" என்று அவர் தனது எழுத்துக்களுக்கு நியாயம் கற்பித்தார்.

 Atputharajah Nadarajah, Alias Ramesh

ரமேஷ் எனப்படும் அற்புதராஜா நடராஜா ‍- ஈ.பி.டி.பி

தனது மூத்த போராளிகளை வட இந்தியாவிற்கு பயிற்சிக்காக பிரபாகரன் அனுப்பிவந்தபோதிலும், தமிழ்நாட்டில் தாம் அமைத்திருந்த பயிற்சி முகாம்களையும் அவர் விஸ்த்தரிக்கத் தொடங்கினார். தில்லியின் சக்ரட்டா பயிற்சி முகாமிற்கு 200 போராளிகளை பிரபாகரன் அனுப்பியிருந்தார். பின்னர் இப்பயிற்சி முகாம் பங்களூருக்கு மாற்றப்பட்டபோது ,மேலும் பல போராளிகள் பிரபாகரனால் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

1983 ஆம் ஆண்டி இறுதிக் காலப்பகுதியில் தனது இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவு வலையமைப்பினை பிரபாகரன் ஆரம்பித்தார். விடுதலை வேட்கை எனும் தலைப்பில் அடேல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தில் சர்வதேச ஆயுதச் சந்தையில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டது என்று எழுதுகிறார். "உண்மையாகவே நாம் தங்கியிருந்த அறையில் ஒருமுறை பெருமளவு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் ரொக்கெட் லோஞ்சர்களும் நிரம்பிக் காணப்பட்டது. அவ்வாறே மில்லியன் கணக்கான ரூபாய்களும் எமது அறை அலுமாரியில் வைக்கப்பட்டிருந்தன‌" என்று அவர் மேலும் கூறுகிறார். 

 இந்தியாவுக்கு வெளியே சுதந்திரமான ஆயுதக் கொள்வனவில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த இன்னொரு போராளித் தலைவர் புளொட்டின் உமா மகேஸ்வரன் ஆகும். ஆனால், அவருக்கு வெளிநாடொன்றில் இருந்து கப்பலொன்றில் கொண்டுவரப்பட்ட‌  40 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான துப்பாக்கிகளும் ஏனைய ஆயுதங்களும் சென்னையில் இந்திய சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அதனை விடுவிப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இந்தச் சம்பவத்தின் மூலம் அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் இந்தியாவினால் செய்தியொன்று வழங்கப்பட்டது. அதுதான், அவர்கள் தமது ஆயுதத் தேவைக்காக இந்தியாவையே நம்பியிருக்க வேண்டும் என்பதும், அதனை மீறி வெளியுலகில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டால் இந்தியா அதனை அழித்தே தீரும் என்பதுவுமே அது. ஆனால், பிரபாகரனால் இந்தியாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவ்வப்போது தனக்குத் தேவையான ஆயுதங்களைக் கொண்டுவர முடிந்திருந்தது. தமிழ்நாட்டு சுங்கத்துறையினர் இதற்கு பிரபாகரனுக்கு உதவியாக இருந்தார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை.

Kolathur Mani comments on Prabhakaran is Alive

80 களின் ஆரம்ப காலத்திலேயே பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த குளத்தூர் மணி

தமிழ்நாட்டில் பயிற்சிமுகாம்களை நிறுவுவது எனும் பிரபாகரனின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து அபரிதமான அதரவு கிடைத்தது. 1983 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியில் தமிழ்நாட்டில் இரு பாரிய பயிற்சி முகாம்களை பிரபாகரனினால் அமைத்துக்கொள்ள முடிந்தது. முதாலவது முகாம் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு அருகிலிருந்து காட்டுப்புறக் கிராமமான குளத்தூரில் அமைக்கப்பட்டது. இரண்டாவது மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் பகுதியில் இருந்த காட்டுப்புறக் கிராமமான சிறுமலையில் அமைக்கப்பட்டது. குளத்தூர் முகாமினை உருவாக்குவதற்கு திராவிடர் கழகத்தின் செயற்பாட்டாளராக அன்று இயங்கிவந்த குளத்தூர் மணி பிரபாகரனுக்கு உதவியிருந்தார். முகாமிற்கு அருகிலிருந்த கிராமங்களிலிருந்து போராளிகளின் உணவுத்தேவைக்காக தானியங்களை அவர் எடுத்துவந்து கொடுப்பார். இவ்வாறே சிறுமலை முகாமிற்குத் தேவையான உதவிகளை நெடுமாறன் கவனித்து வந்தார்.

Edited by ரஞ்சித்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளுக்கு முகாம்களை அமைக்க உதவிய குளத்தூர்மணி

508.ht3_.gif

குளத்தூர் மணியும் நெடுமாறனும் பிரபாகரனுக்குத் தொடர்ச்சியாக உதவிவந்தார்கள். இதனால் இவர்கள் இருவரின் மீதும் பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். பிராபகரனுக்கு தாம் வழங்கிய உதவிகள் குறித்து இவர்கள் செய்தியாளர்களிடம் பல விடயங்களைக் கூறியிருந்தனர். குளத்தூர் மணி 56 வயது நிரம்பியவர் (2005), வீரப்பன் சர்ச்சையில் பேசப்பட்ட முன்னாள் வன இலாகா அதிகாரியின் மகனே இவர். பத்திரிகையாளரிடம் பேசிய மணி, "ஆம், குளத்தூரில் அமைந்திருக்கும் எனது வீட்டுத் தோட்டத்தில்த்தான் முதலாவது பயிற்சி முகாமை நான் நடத்தினேன். பின்னர் அவர்களுக்கு வசதியான ஒரு இடத்திற்கு முகாமை மாற்றிக்கொண்டோம்" என்று கூறினார்.

முகாம் அமைக்கப்படும் பகுதியை தான் அடிக்கடி சென்று பார்வையிட்டதாகக் கூறிய மணி, "சில சமயங்களில் நான் அவருடன் பயணம் செய்திருக்கிறேன்" என்றும் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.

குளத்தூர் முகாமை நிர்மாணிப்பதில் ஈடுபட்டிருந்த போராளிகளில் ஒருவர் அக்காலத்தில் அங்கு நிகழ்ந்தவை குறித்த சில தகவல்களை புலிகளுக்குச் சார்பான ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்தார்.

"1983 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மதுரையில் இருந்த எமது பாதுகாப்பு வீட்டிலிருந்து பஸ்ஸில் பயணமானோம். மலைப்பாங்கான காட்டுப்பகுதியொன்றில் நாம் இறங்கிக்கொண்டோம். எமக்கு வழிகாட்டியாக வந்தவர் சேறும் சகதியும் நிறைந்த வீதியொன்றினூடாக முதலில் அழைத்துச் சென்றார், பின்னர் அந்தவீதி சிற்றொழுங்கையாக மாறியது. நாங்கள் சுமார் ஆறு மணித்தியாலங்கள் நடந்து கற்கள் நிறைந்த பகுதியொன்றினை அடைந்தோம். இதுவே உங்களின் பயிற்சி முகாமுக்கான சிறந்த பகுதி என்று எமக்கு வழிக்காட்டியாக வந்தவர் எங்களைப் பார்த்துக் கூறினார்" என்று நினைவுகூர்ந்தார். 

அந்த பாறைகளுடன் காணப்பட்ட பகுதியே பின்னர் பாரிய பயிற்சி முகாமாக மாறியது என்று அவர் கூறுகிறார். போராளிகளே அந்தப் பாறைகள் நிறைந்த நிலத்தை முழுமையான பயிற்சி முகாமாக மாற்றினார்கள். காட்டை வெட்டிச் சுத்தம் செய்த அவர்கள், தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துக்கொண்டார்கள். ஒற்றையடிப்பாதையாக இருந்த நடைபாதையினை மோட்டார் வாகனங்கள் வந்துசெல்லும் பாதையாக மாற்றினார்கள். பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமிற்கு வந்துசென்றார். முகாமின் கட்டமைப்பை தானே திட்டமிட்ட பிரபாகரன், அது தான் திட்டமிட்டதன்படியே கட்டப்படுவதை உறுதிப்படுத்திக்கொண்டார். மாலை வேலைகளில் இந்த முகாமில் இருந்தே கைத்துப்பாக்கிப் பயிற்சிகளை அவர் நடத்தினார்.

சிறுமலையில் அமைக்கப்பட்ட முகாம் உட்பட இன்னும் சில சிறிய முகாம்கள்  திருப்பரங்குன்றம் மற்றும் அழகர்மலை ஆகிய மதுரை மாவட்ட பிரதேசங்களில் பின்னாட்களில் புலிகளால் அமைக்கப்பட்டன. 

புளொட் அமைப்பின் பிரதான பயிற்சிமுகாம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரத்தநாடு பகுதியில் அமைக்கப்பட்டது. மேலும் ஒரு முகாம் மதுரை மாவட்டத்தின் தேனிப் பகுதியில், தமிழ்நாடு ‍ கேரளா எல்லையில் இருந்த இயற்கை அழகு நிரம்பிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு புளொட் போராளிகள் தமது முகாமிலிருந்து மலைப்பாங்கான‌ பகுதி நோக்கி அணிவகுத்துச் செல்வது வழமையாகக் காணப்பட்டது. அந்தக் கட்டத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் பெரியதாகக் காணப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் புளொட் அமைப்பின் பயிற்சி முகாம்கள் போராளிகளால் நிரம்பி வழிந்ததது. இதனால் சென்னையின் இதயப்பகுதியான நந்தனத்தில் திருமண மண்டபம் ஒன்றினை புளொட் வாடகைக்கு அமர்த்தி தமது போராளிகள் பலரை தங்கவைத்தது. திருமண மண்டபத்தில் மொட்டை மாடியில் புளொட் போராளிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

டெலோ அமைப்பின் பிரதான முகாம்கள் சேலம் மாவட்டத்தில் கொள்ளி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. இதனைவிடவும் காஞ்சிபுரம் பிரதேசத்தில் இருந்த மகரல் எனும் கிராமத்திலும் சென்னைக்கு அருகில் இருந்த போரூர் பகுதியிலும் சில முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

ஈ.பி.ஆர்.எல் எப் இன் பிரதான முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் பகுதியிலும் சிறியளவான முகாம்கள் ஸ்கந்தபுரம், திருச்சி மற்றும் பழனி ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. 

ஈரோஸ் அமைப்பின் முகாம்கள் சென்னையின் மீனாம்பாக்கம், வேதாரணியம் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டன.

1984 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியில் சுமார் 30 பயிற்சி முகாம்களில் தமிழ் ஈழப் போராளிகள் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

தில்லி அதிகாரிகளின் தகவல்களின்படி ஆரம்பத்தில் சில முகாம்கள் மட்டுமே அமைக்கப்பட்டன. பின்னர் சிறியதும், பெரிதுமாக 30 முகாம்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அமைப்பிற்கும் சென்னையில் ஒரு முகாம் இருந்ததோடு மேலும் பத்து மாவட்டங்களில் வேறு முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. 

தமது பிரதேசங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி முகாம்கள் குறித்து அப்பிரதேச மக்கள் அறிந்தே இருந்தனர். "பையன்கள்" என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட அவர்களுக்கு தம்மாலான உதவிகளை அவர்கள் செய்துவந்தனர். பல சந்தர்ப்பங்களில் வீட்டில் இருந்த உணவுப் பொருட்களும் போராளிகளுக்கு மக்களால் வழங்கப்பட்டன. இந்த முகாம்களுக்கு அருகில் வாழ்ந்த மக்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் தமது பங்களிப்பினைச் செய்திருந்தனர். பலவிடங்களில் உள்ளூர் இளைஞர்களும் போராட்டத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட விரும்பினர். ஆனால் எந்த போராளி அமைப்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தம்முடன் இணைந்துகொள்வதை விரும்பவில்லை. உமா மகேஸ்வரன் என்னுடன் பேசும்போது பல தமிழ்நாட்டு இளைஞர்கள் பிடிவாதமாக போராளிகளுடன் இணைய முயன்றுவந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். "நாங்கள் போரிட்டு சிங்களை வீழ்த்துவதே சரியான வெற்றியாக இருக்கும் என்று அவர்களிடம் சமாதானமாகக் கூறி அனுப்பி வைத்தேன்" என்று அவர் கூறினார். "வீரத் தமிழர்கள் நாங்கள், தனித்துப் போரிட்டே வெல்வோம்" என்று நான் கூறியபோது அவர்கள் உணர்வெழுச்சியால் ஆர்ப்பரித்தனர் என்று உமா மேலும் கூறினார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்புச் சிறையுடைப்பு 

IE

தமிழ்ப் போராளிகள் இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்குச் செல்கிறார்கள் என்கிற செய்தி இலங்கை இராணுவத்தின் காதுகளுக்கும் எட்டியது. கார்த்திகை மாதம் வரை தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவரும் விடயம் இலங்கைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அது தெரியவருமுன்பே ஜெயவர்த்தனவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்புச் சிறைச்சாலையுடைப்பு.

ஆடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின்போது தப்பிய 19 தமிழ் அரசியல்க் கைதிகளை அரசு ஆடி 28 ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றியிருந்தது. விமானப்படை விமானமொன்றில் மட்டக்களப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்க் கைதிகளை வான் ஒன்றில் ஏற்றி மட்டக்களப்பு விமானப்பட முகாமிலிருந்து மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த ஆனைப்பந்தி எனும் இடத்திற்கு பொலீஸார் இழுத்துச் சென்றார்கள். மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட சிறைச்சாலை இப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது.

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் மேலும் 22 அரசியற்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களான வரதராஜப் பெருமாள் மற்றும் மகேந்திரராஜா ஆகியோரும் அடக்கம். மட்டக்களப்பு .பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் சத்துருக்கொண்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு நினைவுதினத்தில் உரையாற்றுவதற்காக இந்த விரிவுரையாளர்கள் இருவரையும் .பி.ஆர்.எல்.எப் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தது. இந்த விடயம் பொலீஸாருக்குத் தெரியவந்ததையடுத்து நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்திருந்த இரு விரிவுரையாளர்களையும் அது கைதுசெய்து வைத்திருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிவா, மணி, குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகிய .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களும் அடக்கம். அவ்வமைப்பின் தலைவர் பத்மநாபாவும் இந்த நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் வந்திருப்பது பொலீஸாருக்கு தெரிந்திருக்காமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை.

மட்டக்களப்புச் சிறைச்சாலை உடைக்கப்பட்டபோது அங்கு 41 தமிழ் அரசியற்கைதிகளும் இன்னும் குற்றச்செயல்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் இருந்தனர். மூவினத்தைச் சேர்ந்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்த இச்சிறைச்சாலையில் மிகக் கொடூரமான குற்றவாளிகள் சிலரும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவா என்பவரும் அப்போது சிறைச்சாலயில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தவர் அவர். அவரது தண்டனைக் காலம் விரைவில் முடிவுறும் தறுவாயில் இருந்தபோதும்கூட சிறையுடைப்புக் குழுவினருடன் அவரும் இணைந்துகொண்டார்.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் இருந்து உயிர்தப்பி மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த 19 தமிழ் அரசியற்கைதிகளிடமிருந்தும் வெலிக்கடையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய பொலீஸ் குழுவொன்று ஆவணி மாதத்தில் அங்கு விஜயம் செய்திருந்தது. ஆனால், இந்த விசாரணைகளை முற்றாகப் புறக்கணிப்பதென்று 19 கைதிகளும் முடிவெடுத்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்த அதிகாரிகள் வெலிக்கடையில் நடந்த விடயங்கள் குறித்து அறிய முயன்றனர். ஆனால், பொலீஸ் அதிகாரிகள் மீது தமக்கு நம்பிக்கை சிறிதும் இல்லையென்று கூறிய அவர்கள் விபரங்கள எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பொலீஸ் அதிகாரிகள் தமது கோபத்தை கைதிகள் மீது காட்ட முயன்றனர்.

பொலீஸ் அதிகாரிகள் சென்றபின்னர் கைதிகளுடன் பேசிய சிறையதிகாரிகள் சிங்களப் பகுதியொன்றில் அதியுயர் பாதுகாப்புக்கொண்ட சிறையொன்று கட்டப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் தமிழ்க் கைதிகளை புதிய சிறைச்சாலைக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

"எங்களை மீண்டும் சிங்களப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொல்லவே அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நாம் நினைக்கத் தொடங்கினோம்" என்று சிறையுடைப்பின்போது தப்பிய கைதியொருவர் என்னிடம் கூறினார். சிறையுடைப்பு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் அங்கிருந்த அனைவராலும் ஒருமித்தே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

manikkadasan-guards.jpg

புளொட் அமைப்பின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவரும் பின்னர் இலங்கை ராணுவத்தின் கூலிப்படையாகச் செயற்பட்டவருமான மாணிக்கதாசனுடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்

போராளித் தலைவர்களாகக் காணப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பரமதேவா ஆகியோர் சிறையுடைப்பு முயற்சிக்குத் தலைமை தாங்கினர்.

சிறையினை உடைத்து அனைவரும் வெளியேறும்வரை ஒன்றிணைந்து செயற்படுவதென்றும் அதன்பின்னர் ஒவ்வொரு குழுவினரும் தத்தமது இடங்களுக்குத் தப்பிச் செல்லமுடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

"சிறையுடைப்பினை மிகக் கவனமாகத் திட்டமிட்டோம்" என்று அவர் கூறினார். திட்டத்தின் சாராம்சம் என்னவெனில் சிறையதிகாரியையும் ஏழு காவலர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களை கதிரைகளுடன் கட்டி, வாய்களுக்குள் துணிபொதிந்து விட்ட பின்னர்  சிறையின் முன்வாயிலாலேயே வெளியேறுவது என்பதுதான். சிறைவாயிலின் சாவிகளின் பிரதிகள் சவர்க்காரக் கட்டிகளில் பிரதிசெய்யப்பட்டு தயாரித்துவைக்கப்பட்டிருந்தன. திடமான தேகக் கட்டமைப்பைக் கொண்டிருந்த டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், மகேஸ்வரன் மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் சிறைக் காவலாளிகளை மடக்கிப் பிடிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது எந்த இயக்கத்தையும் சேர்ந்திராத வரதராஜப் பெருமாள் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அழகிரி ஆகியோருக்கு முன்வாயில் திறக்கப்பட முடியாது போகுமிடத்து பின்பகுதியில் உள்ளை சிறைச்சாலைச் சுவரை உடைத்து தயாராக நிற்கும் பணி கொடுக்கப்பட்டது. சிறையதிகாரியினதும், சிறைக் காவலாளிகளினதும் வாய்களைக் கட்டிப்போடும் பணி வைத்தியர் ஜயதிலகராஜாவுக்கும் காந்தியத்தின் டேவிட் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

தப்பிச் செல்வதற்கான நேரத்தை மிகக் கவனமாக அவர்கள் குறித்துக்கொண்டார்கள். சிறைச்சாலையின் முன்வாயிலில் எப்போதுமே ஒரு காவலாளி கடமையில் இருப்பார். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இராணுவ ரோந்து வாகனம் ஒன்று சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றி வலம்வந்துகொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக பொலீஸ் ரோந்து வாகனம் ஒன்றும் இப்பகுதிக்கு வந்துசென்றுகொண்டிருக்கும். ஆகவே வெறும் 7 நிமிட இடைவெளிக்குள் சிறையுடைப்பை நிகழ்த்தித் தப்பிச் செல்லவேண்டும்.

தப்பிச்செல்வதற்கு இரவு வேளையைத் தேர்ந்தெடுத்தார்கள். வீதிகளில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஆனால் முற்றாக வெறிச்சோடிக் கிடவாமலும் இருப்பதே தப்பிச் செல்வதற்கு ஏதுவானது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி இரவு 7:25 இலிருந்து 7:32 இற்கிடையில் தப்பிச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது இராணுவ ரோந்தணி கிளம்பிச் சென்று பொலீஸ் ரோந்தணி வருவதற்கிடையில் அவர்கள் தப்பிச் செல்ல வேண்டும்.

ஆயுதங்களைக் கடத்தும் பணி இராணுவப் பயிற்சி பெற்ற போராளிகளிடமே விடப்பட்டது. டக்ளசும் அவரது ஏனைய தோழர்களும் வெளியிலிருந்து தமது சகாக்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்திருந்தனர். அதன்படி மத்திய குழு உறிப்பினரான குணசேகரம் என்பவர் சிறைச்சாலையின் வாயிலுக்கு வெளியே டக்ளஸ் குழுவினரை பொறுப்பெடுக்கும் பொருட்டு நிற்கவைக்கப்பட்டார். மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், வாமதேவன், பரூக் மற்றும் டேவிட் ஆகியோருக்கு புளொட் அமைப்பு ஆயுதங்களை வழங்கியதுடன் அவர்கள் தப்பிச் செல்லும் ஒழுங்குகளையும் செய்திருந்தது. தமிழ் ஈழ ராணுவம் எனும் அமைப்பின் தலைவரான பனாகொடை மகேஸ்வரன் தானும் தனது இரு தோழர்களான காளி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரும் மட்டக்களப்பு வாவியூடாக படகில் தப்பிச் செல்வதாகக் கூறினார்கள்.

நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா, குருக்களான சின்னராசா, ஜயதிலகராஜா, சிங்கராயர் மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் புலிகளின் அனுதாபிகளாக இருந்தனர். மற்றையவர்களுடன் பேசிய குரு சிங்கராயர் அவர்கள், தான் தப்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். அவரது வயதும், உடல்நிலையும் தப்பிச்செல்வதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தப்பிச் சென்றால் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும், ஆகவே தப்பிச்செல்வதில்லை என்கிற முடிவிற்கு அவர் வந்திருந்தார். நித்தியானந்தன் பேசும்போது தானும் தனது மனைவியும் தம்பாட்டில் தப்பிச் செல்வதாகக் கூறினார்.

கோவை மகேசன் அப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததோடு வைத்தியர் தர்மலிங்கத்தின் வயது அவரைத் தப்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏனையவர்களைப் போல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக அவசரகால நிலைமைச் சட்டத்தினூடாகவே கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் நிலையிலும் இருந்தார்கள். ஆகவே அவர்களும் தப்பிச் செல்வதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். குரு சிங்கராயர், கோவை மகேசன், வைத்தியர் தர்மலிங்கம் ஆகியோர் 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாத முற்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மிகச் சிறியளவிலான ஆயுதங்களையே சிறைச்சாலைக்குள் அவர்களால் கடத்திவர முடிந்திருந்தது. ஆகவே ரப்பரால் உருவாக்கப்பட்ட காலணிகளில் கைத்துப்பாக்கிகள் போல வெட்டி அவற்றினைக்கொண்டே சிறைக் காவலர்களையும் ஏனைய கைதிகளையும் அச்சுருத்துவது என்று முடிவாகியது. பனாகொடை மகேஸ்வரன் இந்தப் பணியைப் பொறுப்பெடுத்தார்.

"தப்பிச் செல்ல நாம் குறித்துக்கொண்ட நிமிடம் வரையும் நாம் கடவுளை வேண்டிக்கொண்டோம். தப்பிச் செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முதல் எங்கள் அனைவரையும் சந்தித்த குரு சிங்கராயர் எம்மை ஆசீர்வதித்ததுடன் எமது முயற்சி வெற்றியளிக்கவும் வாழ்த்தினார் " என்று என்னுடன் பேசியவர் கூறினார். 

இரவு 7 மணியளவில் சிறைக்காவலாளி அந்தோணிப்பிள்ளை கைதிகளுக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வந்தார். வழமையாக மாலை வேளைகளில் மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர் அப்போதுதான் சிறிது மதுவை அருந்திவிட்டு உற்சாகமான மனநிலையில் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப் பாடிக்கொண்டு வந்தார்.

"எப்பிடி இருக்கிறியள் தம்பிகள்?" என்று கேட்டுக்கொண்டே அவர் வந்தார்.

அவரைத் திடீரென்று பிடித்துக்கொண்ட பரந்தன் ராஜன் உடனேயே அவரைக் கட்டினார். டேவிட் அவரது வாயைத் துணிகளால் கட்டிப்போட்டார். ஆறடி உயரமும், சிறந்த உடல்வாகுவும் கொண்ட பனாகொடை மகேஸ்வரன் சிறையதிகாரியையும் காவலர்களையும் தாக்கி அவர்களைப் பிடித்துக்கொண்டார். இதனையடுத்து சிறைக்கதிகள் வரிசையாக சிறைவாயிலுக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்.

பின்புற சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதராஜப் பெருமாளும் அழகிரியும் திடீரென்று சிறை நிசப்தமானதையடுத்து சிறையின் முன்வாயிலிக்குச் சென்று பார்த்தபோது அது திறந்துகிடந்தது. வாயிலூடாக வெளியே ஓடிய அவர்கள் சிறையின் பின்புறம் நோக்கி வெளிவீதியால் ஓடினார்கள். வாவியின் கரைக்கு அவர்கள் சென்றபோது மகேஸ்வரனையும் அவரது தோழர்களையும் ஏற்றிக்கொண்டு படகொன்று வாவியூடாக வெளியேறுவதை கண்ணுற்றார்கள். இவர்கள் கூக்குரலிட ஆரம்பிக்க, சென்றுகொண்டிருந்த படகு திரும்பிவந்து இவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றது.

தந்தை செல்வாவின் முன்னாள் வாகனச் சாரதியும் பின்னர் ஆயுத அமைப்பொன்றில் இணைந்துகொண்டவருமான வாமதேவவாவைக் கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலீஸார் 100,000 ரூபாய்களை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தனர். கைதுசெய்யப்பட்டபின் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு  நிர்மலா நித்தியானந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையினை உடைக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர் அதனை மறந்துவிட்டார்.

.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போராளிகள் காட்டுப்பகுதியொன்றின் ஒற்றையடிப் பாதைக்கு வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் அப்பாதை வழியே ஒன்றாகச் சென்ற அவர்கள் பின்னர் த‌த்தமது அமைப்புக்கள் ஒழுங்குசெய்திருந்த படகுகள் தரித்துநின்ற கரைகளை நோக்கிச் சென்று அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். 

புலிகளின் அனுதாபிகளான நித்தியானந்தன், குருவானவர்களான சின்னராசா, ஜயதிலகராஜா மற்றும் ஜயகுலராஜா ஆகியோர் சிறைச்சாலையின் பிற்பகுதிக்குச் சென்றனர். பரமதேவாவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். சுமார் 600 மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருந்த மாந்தீவை படகொன்றில் ஏறிச் சென்றடைந்தனர். அவர்கள் சென்ற திசைநோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அவர்களுக்குத் தெரிந்தது. அந்த இருட்டில் அவர்கள் முதலைக்குடா நோக்கி வேகமாக ஓடினர். அங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்ட அவர்கள் திருக்கோவில் நோக்கி அதனை ஓட்டிச் சென்றனர். மறைவிடம் ஒன்றில் அங்கு தங்கிய பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர்.

பனாகொடை மகேஸ்வரனுக்கு வேறு திட்டம் இருந்தது. அவர் மட்டக்களப்பிலேயே இருக்க விரும்பினார். போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய அவர் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்று எண்ணினார். மட்டக்களப்புப் பகுதி அவருக்குப் பரீட்சயமில்லாதபோதும் மறைவிடம் ஒன்றைத் தேடி ஒளிந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். சில மாதங்களின் பின்னர் அவர் அதிரடி நடவடிக்கை ஒன்றைச் செய்திருந்தார். காத்தான்குடியில் இருந்த வங்கியொன்றைக் கொள்ளையிட்டு அங்கிருந்த 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தினை எடுத்துச் சென்றார். அக்காலத்தில் அதுவே அதிகளவு பணம் களவாடப்பட்ட நிகழ்வாக இருந்தது.

"தமிழர்களின் வரலாற்றில் திகிலான அத்தியாயம்" என்று டேவிட் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்தச் சிறையுடைப்பு அங்கிருந்த ஏனைய கைதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. தமிழ் அரசியற்கைதிகள் தப்பிச் சென்றதையும், வாயிலின் இரும்புக் கதவுகள் அகலத் திறந்து கிடந்ததையும் கண்ணுற்ற அவர்களும் தப்பிச் சென்றார்கள்.

பொலீஸாரின் ரோந்தணி வழமைபோல 7:32 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபோது அது வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. உடனடியாக பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தரை, நீர், ஆகாய வழியாக பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரிலிருந்து தப்பிச் செல்ல முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த சில கைதிகளை, குறிப்பாக சிங்களக் கைதிகளை பொலீஸார் பின்னர் மீளப் பிடித்து கொண்டனர்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமும் தடுத்து நிறுத்திய புலிகளும் 

1983 ஆம் ஆண்டின் இறுதிப்ப‌குதியில் பிரபாகரனின் செயற்பாடுகளில் முக்கியமானவையாகக் காணப்பட்ட ஐந்து விடயங்களில் இறுதி இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது என்றே கூறலாம். அவை பெண்கள் போராட்டத்தில் இணைந்துகொள்வதில் இருந்த தத்துவார்த்த ரீதியிலான சிக்கல்களும் பிரபாகரனின் சொந்த வாழ்க்கையும் ஆகும்.

515.ht1_.jpg 

திருமதி அடேல் பாலசிங்கம்

 பெண்விடுதலை குறித்த பொதுவான சிக்கல்களும் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் அடேல் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்டது. அடேல் அவர்கள் 1983 ஆம் ஆண்டு பெண்களும் விடுதலைப் போராட்டமும் எனும் தலைப்பில் புத்தகமொன்றினை சென்னையில் வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.

முதலாவதாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருக்கும் எந்தப் பெண்ணும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடி தனது சமூகத்தைப் பாதுகாக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறாள் என்பது. இதன்மூலம் தமது தேசத்தின் மீதான பற்றினை பெண்களால் உணரமுடியும் என்று அவர் கூறினார்.

இரண்டாவது தாயக விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்கெடுப்பதன் மூலம் போராட்டத்தினைப் பலப்படுத்தலாம் என்பது. பழமைவாதிகளின் கருத்தான பெண்களின் பங்களிப்பு போராட்டத்தினைப் பலவீனப்படுத்தும் என்பதை அவர் முற்றாக நிராகரித்தார்.

மூன்றாவது தாயக‌ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் பெண்கள் சமூகத்தில் தமது விடுதலையினை அடைந்துகொள்ள முடியும் என்பது.  விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக விடுதலையினையும் அடைந்துகொள்ளலாம் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

 அடேல் எழுதிய புத்தகத்தினை அடையாறிலும், திருவாண்மியூரிலும் அக்காலத்தில் தங்கியிருந்தவர்கள் படித்தார்களா என்பதை நான் அறிய முயன்றேன். ஆனால், அப்புத்தகம் பற்றியோ அல்லது அதுகுறித்த கலந்துரையாடல்கள் பற்றியோ எவருக்கும் ஞாபகம் இருக்கவில்லை. அவர்களின் ஒரே சிந்தனை அப்போது நடந்துகொண்டிருந்த இந்திய பயிற்சிபற்றியதாகவே இருந்தது. ஆனால், அடேல் எழுதிய சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் பிரபாகரன் தன்னுடன் பேசும்போது பல இளம் தமிழ்ப் பெண்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்கள் என்று கூறியதாக எழுதுகிறார். போராட்டத்தில் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் பெண்கள் தம்மை ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்று அவர் அடேலிடம் கூறியிருக்கிறார்.

சிங்கள அரசுகளால் தமிழர்கள் மீது கொடூரமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிராக தம்மையும் போராட அனுமதிக்குமாறு பல பெண்கள் அடேல் ஊடாக பிரபாகரனுக்கு எழுதிய கடிதங்களை அவர் படித்திருந்தார் என்று அடேல் எழுதுகிறார். அக்கடிதங்களில் தமது சமூகத்தின் மீதான கடூரமான ஒடுக்குமுறைகளுக்கெதிராகத் தாம் போராடி சமூகத்தைக் காக்கப்போவதாக பெண்கள் பலர் கேட்டிருந்தனர். பின்னாட்களில் அடேலுடன் பேசிய பிரபாகரன் பெண்களையும் ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

 பெண்களை இயக்கத்தில் இணைத்துக்கொள்ளும் நடைமுறை எவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்றின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டின் தமிழினக் கொலையும், அதற்கு சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கொழும்பு, பேராதனை , மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை தமது தாயகமான வடக்குக் கிழக்கிற்கு துரத்தியிருந்தது. தென்பகுதி பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கப் போவதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்த போது தமிழ் மாணவர்கள் திரும்பிச் செல்ல மறுப்புத் தெரிவித்தனர். தமது உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், தம்மை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். 

மாணவர்களின் கோரிக்கையினை நிராகரித்த ஆணைக்குழு, உடனடியாக விரிவுரைகளில் கலந்துகொள்ளுமாறும் இல்லையேல் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. ஆகவே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவதென்று முடிவெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. இப்போராட்டத்தை அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களும் வரவேற்றிருந்தன. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை ஈரோஸின் மாணவர் அமைப்பான கெஸ் (GUES) முன்னெடுத்திருந்தது. யாழ்க்குடாநாட்டில் வாழ்ந்துவந்த மாணவர்களின் உணர்வுகளை இப்பிரச்சாரம் வெகுவாகத் தூண்டியிருந்தது.

ஆனால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவோ மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தது. மாணவர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்திற்கு முன்னர் தத்தமது பல்கலைக்கழக பதிவாளர்களைச் சந்தித்து மீள இணைந்துகொள்ளவேண்டும் என்று அது அறிவித்தது. சில மாணவர்கள் போராட்டத்தில் இருந்து வெளியேறி தமது பட்டப்படிப்பினைக் காத்துக்கொள்ள முயன்றனர். இதனையடுத்து புலிகள் இயக்கம் "கொலைக்களத்திற்குச் செல்ல வேண்டாம்" என்கிற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை கார்த்திகை 7 ஆம் திகதி வெளியிட்டது. தெற்கில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழ் மாணவர்களின் உயிருக்கு அச்சுருத்தல் ஏற்படும் என்று அத்துண்டுப்பிரசுரம் குறிப்பிட்டிருந்தது. சிங்களப் பேரினவாதம் பலக்லைக்கழகங்களைக் கூட வெலிக்கடைச் சிறைகளாக மாற்றி படுகொலைகளில் ஈடுபடும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது. 

தமிழ் மாணவர்களின் அழுத்தத்திற்கு தாம் வளையப்போவதில்லை என்று அரசு அறிவித்தது. அடுத்து பல்கலைக்கழக விரிவுரைகளை தை மாதத்திலிருந்து ஆரம்பிக்குமாறு மாணியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது. இது தமிழ்மக்களை ஆத்திரப்பட வைத்தது. மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மக்களின் அனுதாபத்தினைப் பெறத்தொடங்கியது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவிக்க பெருமளவான மக்கள் நாள் தோறும் பல்கலைக்கழகத்திற்கு வரத் தொடங்கினார்கள். பாடசாலை மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்ததோடு ஊர்வலங்களில்  ஈடுபட்டார்கள். யாழ்க்குடாநாடெங்கிலும் கறுப்புக் கொடிகள் தொங்க‌விடப்பட்டன. எங்கும் பதற்றமான நிலை நிலவத் தொடங்கியதோடு ஆங்காங்கே அரச வாகனங்களுக்குப் போராளி அமைப்புக்கள் தீமூட்ட ஆரம்பித்தன.

1984 ஆம் ஆண்டு, தை மாதம் 9 ஆம் திகதி ஐந்து ஆண்களும் நான்கு பெண்களுமாக 9 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்து யாழ் பல்கலைக்கழகத்தினை மூடுமாறு அரசு அறிவித்தது. ஆனால், உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அகற்ற அரசால் முடியவில்லை.   உண்ணாவிரதத்தின் ஆறாம் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மாணவி ஒருவர் மயக்கமுற்றார். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் உடல்நிலை மோசமாகிவருவதாக அறிவித்தனர். ஏனைய மாணவர்களின் நிலைமையும் மோசமாகிக்கொண்டே வந்தது.

 515.ht2_.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 2002

ஆனால் அரசாங்கம் மசியவில்லை. அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் லலித் அதுலத் முதலி உண்ணாவிரதப் போராட்டங்களினால் அரசை பயமுறுத்த முடியாது என்று அறிவித்தார். 7 ஆம் நாளான தை 16 ஆம் திகதி இரவு 11 மணிக்கு பல்கலைக்கழகத்திற்கு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய இளைஞர் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஏற்றிக்கொண்டு சென்றது. வாகனத்தில் வந்தவர்கள் விக்டர் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் அச்சுவேலிப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அனைவருக்கும் உணவளிக்கப்பட்டபின்னர் தமிழ்நாட்டிற்கு படகுமூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தினை புலிகள் பலவந்தமாக முடித்துவைத்து மாணவர்களைக் கடத்திச் சென்றமையானது ஏனைய போராளிக் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக புளொட் மற்றும் ஈரோஸின் மாணவர் அமைப்பினர் இதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இது மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமையினை எந்த அனுமதியும் இல்லாமல், அவசியமற்ற முறையில் தடுத்த சம்பவம் என்று புளொட் சாடியிருந்தது.

ஆனால் தமது நடவடிக்கையினை விளக்கி புலிகள் பின்னர் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தனர்.

மாணவர்களின் உயிரைக் காக்கவே அவர்களை நாம் அழைத்துச் சென்றோம். அவர்களின் பூரண அனுமதியுடனேயே அவர்களை அழைத்துச் சென்றோம். அவர்கள் தற்போது உணவருந்த ஆரம்பித்திருப்பதோடு நல்ல உடல்நிலையிலும் உள்ளனர்.

மாணவர்கள் இறப்பதை நாம் அனுமதிக்க முடியாது. உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் மரணித்தாலும் அரசு அதனைச் சட்டை செய்யப்போவதில்லை. அகிம்சை முறையிலான எந்தப் போராட்டத்தையும் அரசு கவனத்தில் எடுக்கப்போவதில்லை என்பதனாலேயே நாம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்றினோம்.

அதுவரை காலமும் வன்முறையற்ற வழிகளில் போராடுவதன் மூலம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமிழ் மக்கள் எண்ணிவந்ததை மாற்றுவதற்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு நடந்துகொண்ட விதத்தினை முன்வைத்து புலிகளுக்கு ஆதரவானவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான அரசை அமைப்போம் என்று பதவிக்கு வந்த ஜெயவர்த்தன அரசு தற்போது மிகவும் கொடூரமான அரசென்று தன்னை வெளிக்காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.தொழிற்சங்கப் போராட்டங்களையும் மாணவர்களின் வன்முறையற்ற போராட்டங்களையும் தனது அரச ராணுவம் மற்றும் பொலீசாரைக் கொண்டு மிருகத்தனமாக அரசு அடக்கிவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்திற்குத் தெரிந்த ஒரே பாஷை துவக்கின் பாஷையே என்று அவர்கள் வாதிட்டனர்.

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரன் மதிவதனி காதல்

See the source image

முதலில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் பராமரிக்கப்பட்டனர். பெண் மாணவர்களை தம்முடன் வைத்திருக்கவோ அல்லது பயிற்சிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கவோ பிரபாகரன் விரும்பவில்லை. ஆகவே, சென்னையில் வசித்துவந்த அடேல் பாலசிங்கத்தைத் தொடர்புகொண்ட பிரபாகரன் அவருடன் தங்குவதற்கு நான்கு யாழ்ப்பாண மாணவிகளை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார்.

விடுதலை வேட்கை என்று தான் எழுதியபுத்தகத்தில் திருவாண்மியூரில் தாம் தங்கியிருந்த நாட்கள் பற்றி அடேல் விபரிக்கிறார்.

பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்ட நான்கு பெண்களும் மதி (மதிவதனி), வினோஜா, ஜெயா மற்றும் லலிதா அக்கியோராகும். அவர்கள் நால்வருக்குள்ளும் சற்று உயர்ந்தவரும், மாநிறத்தைக் கொண்டவரும், அழகிய முகச் சாயலும், குறும்புத்தனமும் மிகுந்த மதியே அழகானவராக இருந்தார். 1985 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் நேர்காணலில் அவரைக் கண்ட தி டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் "அசத்தும் அழகானவர்" என்று குறிப்பிட்டிருந்தார். மதி புங்குடுதீவின் மடத்துவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தாயாரின் பெயர் சின்னம்மை என்பதுடன் அவரது தகப்பனாரின் பெயர் ஏரம்பு. ஊரில் அவரை ஏரம்பு வாத்தியார் என்றே அனைவரும் அழைத்து வந்தனர். இந்துசமயத்தை கடுமையாகப் பின்பற்றிவந்த குடும்பம் அவர்களது. மதிகூட அதிக கடவுள் பக்தி கொண்டிருந்ததோடு மற்றோரிடத்தில் அன்பும் இரக்கமும் கொண்டவராக விளங்கினார்.

பல்கலைக்கழகத்தில் மதி படிப்பில் சிறந்து விளங்கினார். கால்நடை மருத்துவத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்டபோதும் மதி விவசாயத்துறையில் கல்விகற்கவே  விரும்பினார். கிராமத்தில் அவர்களது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தமையே அவரது கல்வியில் தாக்கம் செலுத்தியதென்றால் அது மிகையில்லை.  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டபோது மதிவதனி இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். இதனையடுத்து வீடுதிரும்பியிருந்த மதி உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்வரை அங்கேயே தங்கியிருந்தார்.

பெரும்பாலும் ஆண்களால் மட்டுமே நிரம்பி வழியும் திருவாண்மியூரில் அமைந்திருந்த புலிகளின் அலுவலகத்திற்கு திடீரென்று நான்கு பெண்கள் வந்துசேர்ந்தபோது ஆரம்பத்தில் சற்று அசெளகரியமாக இருந்தபோதும் அவர்களின் இயல்பான பண்பினால் அங்கு உற்சாகமும் மகிழ்வும் நிரம்பத் தொடங்கியது. அங்கிருந்தவர்களுக்கான சமையல்க் கடமைகளை இந்த நான்கு பெண்களும் பொறுப்பெடுத்துக்கொண்டனர். அவர்களின் யாழ்ப்பாணத்துச் சமையலை அன்டல் பாலசிங்கம் விரும்பிச் சாப்பிட்டார் என்று அடேல் கூறுகிறார். பிரபாகரன் அங்கு விஜயம் செய்யும் நாட்களில் அவருக்குப் பிடித்தமான உணவுவகைகளும் திண்பண்டங்களும் சமைத்துப் பரிமாறப்பட்டன.

எப்போதும் துடினமாக இருக்கும் மதி அவ்வபோது குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவார். அவரது துடினமான இயல்பும், குறுபுத்தனமுமே பிரபாகரனுடன் அவரை நெருக்கமாக்கியது. தி டைம்ஸ் பத்திரிக்கை அதனை பின்வருமாறு கூறுகிறது,

இந்திய ஹோலிப் பண்டிகையின்போது புலிகளின் தலைவரான பிரபாகரன் மீது சாயம் கலக்கப்பட்ட நீரை அவர் ஊற்றினார். அதிலிருந்தே அவர்களது காதல் உருவானது. மதி தன் மீது சாயம் கலந்த நீரை ஊற்றியபோது அவரைக் கடுமையாகக் கடிந்துகொள்வது போன்று பாசாங்கு செய்து அவரை அழவைத்த பிரபாகரன் உடனேயே தனது காதலை அவரிடம் வெளியிட்டார்.

தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று வழங்கப்பட்ட விடுதியில் அந்நாட்களில் தங்கியிருந்த பிரபாகரன் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக மட்டுமே திருவாண்மியூரில் அமைந்திருந்த தனது அலுவலகத்திற்குச் சென்றுவந்தார். ஆனால், ஹோலிப் பண்டிகையின் தண்ணீர் ஊற்றுக்குப் பின்னர் அங்கு அடிக்கடி வரத்தொடங்கினார் அவர். பெரும்பாலான நேரங்களில் மதிவதனியைப் பார்க்கவே அங்கு சென்றுவரத்தொடங்கினார் பிரபாகரன். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழ‌மாக விரும்பியிருந்தார்கள் என்று அடேல் எழுதுகிறார். இரவு பகல் பாராது மதிவதனியைச் சென்று சந்தித்த பிரபாகரன், அவருடன் பல மணிநேரங்களைச் செலவழித்தார். அநேகமான நேரங்களில் அவர்கள் தமக்குள் சிரித்து மகிழ்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இரவு வேளைகளில் பிரபாகரன் அங்கு வரும்போது அவரது மெய்க்காவலர்களும் ஆயுதங்களுடன் வந்திருப்பார்கள்.

515.ht3_.jpg

சென்னையின் கிழ்க்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் வால்மீகி ஆலயம் 2003

இரவுவேளைகளில் பிரபாகரன் மேற்கொண்ட விஜயங்கள் அயலில் உள்ளவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் அவரை பகல் வேளைகளில் மட்டுமே அங்குவருமாறும் கூறுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்திடம் அடேல் கேட்டுக்கொண்டார். சில தினங்க‌ளுக்கு முன்னர் தான் ஒரு சம்பவம் அங்கு நடந்திருந்தது.

திருவாண்மியூர் ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் நிரம்பிய பகுதிதாவணி அணிவதை வழக்கமாகக் கொண்ட அப்பகுதிப் பெண்கள் ஆண்களுடன் பழகுவதைத் தவிர்த்தே வந்தனர். வெள்ளைக்காரப் பெண்மணியான அடேல் தமிழ் ஆணான பாலசிங்கத்துடன் அங்கு வாழ்ந்துவந்தார். அதுவே அப்பகுதியில் விசித்திரமாக நோக்கப்பட, அது போதாதென்று பெருமளவு ஆண்கள் இரவு பகலென்று பாராது அங்கு வந்துசென்றுகொண்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக நான்கு இளம் பெண்கள் வேறு அங்கு வந்து தங்கியிருந்தனர். வயதிற்கு வந்திருந்த இந்த நான்கு  அழகிய பெண்களும் பாவாடை சட்டையே அணிந்திருந்தனர். அந்த வீட்டைக் கடந்து சென்ற அனைவரும் அதனை சந்தேகத்துடனே பார்த்துச் சென்றனர். சில நாட்களின் பின்னர் அவ்வீட்டில் வெள்ளைக்காரப் பெண்மணியொருவர் விலைமாதர்களின் விடுதியொன்றினை நடத்திவருவதாக அயலில் உள்ளவர்களால் வதந்தி பரப்பப்பட்டது.

ஒருநாள் அவ்வீட்டின் முன்னால் கூடிய அப்பகுதி ஆண்கள் சிலர், அப்பகுதி அமைதியான மதிப்பிற்குரிய பகுதியென்றும் அப்பகுதியை விட்டு அவ்வீட்டில் உள்ளவர்கள் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில ஆண்கள் அவ்வீட்டின் மீது கற்களை வீசவும் செய்தார்கள். பாலசிங்கமோ அல்லது வேறு ஆண்களோ அப்போது வீட்டில் இருக்கவில்லை. வெளியில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தால்  பெண்கள் நால்வரும் அச்சத்தில் உரைந்துபோய் வீட்டின் ஒரு மூலைக்குள் பதுங்கிக்கொண்டார்கள் என்று அடேல் எழுதுகிறார்.

515.ht4_.jpg

சிறீ மருந்தீஸ்வரர் கோயில் திருவாண்மியூர்

அதிஸ்ட்டவசமாக பொன்னமான் சில போராளிகளோடு அங்கு வந்து சேர்ந்தார். தமது வீட்டின்முன்னால் நின்ற கூட்டத்தைப் பார்த்தபோது அவர் சற்று அசந்துபோனார். அவர்கள் அங்கு கூடியிருந்ததன் நோக்கம் பற்றி அவர் அறிந்துகொண்டபோது அவரது அதிர்ச்சி அதிகமானது. கூட்டத்தைப் பார்த்து கோபத்துடன் கத்திய பொன்னமான் "நாம் இலங்கையிலிருந்து வந்திருக்கும் விடுதைப் போராளிகள்" என்று கூறினார். இந்திய அரசாங்கம் தமக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதற்காக இங்குவந்து தங்கவைத்திருப்பதாக அவர் கூட்டத்தைப் பார்த்துக் கூறினார். இதனை உறுதிப்படுத்துவதற்கு தனது இடையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்த அவர் கூட்டத்தை நோக்கி உயர்த்திக் காண்பித்தார். இதைக் கேட்டதும் அங்கு நின்ற கூட்டம் ஸ்த்தம்பித்துப் போனது. கோபம் கரைந்துபோக அவர்கள் மீது அபிமானமும் மரியாதையும் ஏற்படலாயிற்று. தமது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அக்கூட்டம் பின்னர் அவர்களை மரியாதையுடன் நடத்தத் தொடங்கியது.

அயலில் உள்ளவர்களின் பழக்க வழக்கங்களை நாம் மதிக்கவேண்டும் என்று பிரபாகரனிடம் கூறிய அன்டன் பாலசிங்கம், மதிவதனியை இரவுவேளைகளில் அவர் வந்து சந்திப்பது தம்மீது அயலவர்கள் வைத்திருக்கும் மதிப்பினைக் குலைத்துவிடும் என்று கூறினார்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/9/2023 at 07:12, ரஞ்சித் said:

7 ஆம் நாளான தை 16 ஆம் திகதி இரவு 11 மணிக்கு பல்கலைக்கழகத்திற்கு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய இளைஞர் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஏற்றிக்கொண்டு சென்றது

உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்களை எனது நண்பனின்(இப்போது அவர் இல்லை இந்தியன் ஆமியின் செல் விழுந்து தொண்டையை கிழித்துவிட்டது)அண்ணன் தான் இவர்களது வீட்டுக் காரில் ஏற்றிச் சென்றதாக சொன்னார்கள்.

ஆனாலும் யாரிடமும் கேட்டு உறுதிப்படுத்தவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரன் மதிவதனி திருமணம்

1984-VP_MARRIAGE-300x257.jpg

பிரபாகரனின் காதல் விவகாரம் அவரது இயக்கத்தினுள்ளேயும் அவருக்கு விரோதமான இயக்கங்களுக்குள்ளேயும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. அவரது எதிராளிகள், குறிப்பாக புளொட் அமைப்பின் தலைவரான உமா மகேஸ்வரன் பிரபாகரனைத் தாக்குவதற்கான தனது சந்தர்ப்பமாக இதனைப் பாவிக்க நினைத்தார். பிரபாகரனின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள்ளும் இந்த விவகாரம் விமர்சனங்களை உருவாக்கி விட்டிருந்தது. தனது கொள்கைகளையே பிரபாகரன் மீறுகிறார் என்று அவரது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர்.

PHOTO-2020-10-21-19-16-17.jpg

"பிரபாகரனுக்கு அது மிகுந்த சோதனைக் காலமாக இருந்தது" என்று சந்தோசம் என்னிடம் தெரிவித்திருந்தார்.

ஆகவே, அடேல் பாலசிங்கத்திடம் தனக்கான உதவியினை பிரபாகரன் தேட விழைந்தார். அன்டன் பாலசிங்கத்தைக் காட்டிலும் இவ்விடயத்தில் அடேல் பாலசிங்கமே பிரபாகரனுக்குத் துணையாக நின்றார். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஊர்மிளாவைக் காரணம் காட்டி ஏற்பட்ட பிணக்கில் திருமணம் தொடர்பாக பிரபாகரன் காண்பித்த கடுமையான கொள்கைகளை அடேல் அன்று ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. பிரபாகரன் இயக்கத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனும் கொள்கையினைத் தளர்த்தவேண்டும் என்றே அடேல் அப்போதிருந்து கோரிவந்தார். மனிதர்களின் உணர்வுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் அவசியம் என்பதே அவரது வாதமாக இருந்துவந்தது.

அடேல் கொண்டிருந்த நெகிழ்ச்சியான போக்கே உமா மகேஸ்வரன் விடயத்தில் அவர் ஊர்மிளாவைத் திருமணம் செய்தால் பிரச்சினை எல்லாம் முடிவிற்கு வந்துவிடும் என்கிற நிலைப்பாட்டினை எடுக்க அன்டன் பாலசிங்கத்திற்கு உதவியிருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், உமாவும் ஊர்மிளாவும் தமக்குள் உறவெதுவும் இல்லையென்று பிடிவாதமாக மறுத்ததோடு திருமணம் செய்யத் தாம் தயாரில்லை என்றும் கூறியிருந்தனர். இதேவகையான நிலைப்பாட்டையே பிரபாகரன் மதிவதனி விடயத்திலும் பாலசிங்கம் எடுத்துக்கொண்டார். அதாவது திருமணம் முடித்தால் சரியென்பதே அவரது நிலைப்பாடு.

பிரபாகரன் மதிவதனி காதல் விடயத்தை பாலசிங்கம் மிகவும் அவதானமாகவே கையாண்டார். இந்த விடயம் இன்னொரு பிளவினை ஏற்படுத்துவதை அவர் விரும்பவில்லை. ஆகவே, புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களையும், பிரபாகரனுக்கு நெருக்கமானவர்களையும் அவர் சென்னைக்கு வரவழைத்தார். அவர்களுள் சிலர் பிரபாகரனின் காதலுக்கான தமது எதிர்ப்பினை ஏலவே வெளிப்படுத்தியிருந்தனர். இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டினை அது மீறுவதாக அவர்கள் வாதிட்டனர். உமா மகேஸ்வரனுக்கெதிராக பிரபாகரன் பாவித்த அதே காரணங்களை அவர்களும் பாவித்தனர். இயக்கத்தின் விதிகளை வகுத்த தலைவரே அதனை மீறுவது தவறு என்றும் கூறினர்.

உமா மகேஸ்வரன் ஊர்மிளா விவகாரத்தில் தான் முன்மொழிந்த தீர்வினையே பாலசிங்கம் இந்த விடயத்திலும் முன்வைத்தார். நெகிழ்ச்சித்தன்மையினை இயக்கத்தினுள் அனுமதிப்பதை தான் ஆதரிப்பதாக அவர் கூறினார். உமா - ஊர்மிளா விடயத்தில் தாம் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடித்து அவர்களை திருமணம் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் அதனை மறுத்துவிட்டதாக அவர் ஞாபகப்படுத்தினார். மேலும் தான் அதே நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடித்து பிரபாகரனையும் மதிவதனியையும் திருமணம் முடிக்கக் கோரப்போவதாக புலிகளின் ஏனைய மூத்த உறுப்பினர்களிடம் கூறினார்.

இயக்கத்தினுள் நெகிழ்வுத்தன்மையினை ஏற்றுக்கொள்ளச் செய்ய பாலசிங்கம் அதிகம் வாதாடவேண்டியிருந்தது. இது குறித்து அடேல் இவ்வாறு கூறுகிறார்,

"இயக்கத்தின் பழைய கோட்பாடுகளும், விதிகளும் காலத்திற்கு ஒவ்வாதவை என்பதால் அவை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பாலா வாதாடினார். காதலும் வீரமும் தமிழரின் கலாசாரத்தில் போற்றப்பட்ட இருவிடயங்கள் என்று அவர் கூறினார். பிரபாகரனின் காதல் திருமணத்தின் மூலம் அவரின் போராளிகளும் தமக்குள் காதல் திருமணங்களில் ஈடுபட்டு எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கைக்குள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வழி இதனால் உருவாக்கப்படும் என்று அவர் எடுத்தியம்பினார். இயக்கத்தின் வளர்சிக்கும், அபிவிருத்திக்குமான நற்காரணிகளாக இவை பார்க்கப்படுதல் அவசியம் என்றும் அவர் கூறினார்".

 மூத்த உறுப்பினர்கள் பாலசிங்கத்தின் முன்மொழிவை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டதாக அடேல் எழுதுகிறார். இந்த விவாதங்களில் பங்கெடுத்திருந்த இரு மூத்த உறுப்பினர்களுடன் எனக்குப் பேச சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை பிரபாகரன், மதிவதனி மீது தீராக் காதல் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள். ஆகவே, அதனை உடைக்கும் எந்த நடவடிக்கையும் பிரபாகரனை மனதளவில் பாதிக்கும் என்பதோடு உணர்வுரீதியாகவும் அவரைக் கீழே இழுத்துவிடும் என்று அவர்கள் கருதினார்கள். பிரபாகரனுக்கு எப்படியாவது இவ்விவகாரத்தில் உதவ வேண்டும் என்று இயங்கிய அடேல், மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு, "தயவுசெய்து ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பிரபாகரனின் திருமணம் என்பது அவருக்குப் பலமாக அமையும் என்பதோடு, இயக்கத்திற்கும் பலமாக அமையும். ஆகவே, அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்" என்று கேட்டுக்கொண்டு வந்தார்.

prabakaran family 11 | EelamView

பிரபாகரன் மதிவதனி திருமணம் ஐப்பசி முதல்ம் திகதி, 1984

பிரபாகரன் மதிவதனியை திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக இயக்கத்தின் விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மூத்த உறுப்பினர்கள் பாலசிங்கத்திடம் கேட்டுக்கொண்டனர். இவ்விதி இயக்கத்திற்குள் எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பதோடு எவரும் விதிவிலக்கில்லை என்றும் அவர்கள் கூறினர். அதனை வரவேற்ற பாலசிங்கமும் இயக்கத்தினுள் ஐந்துவருட சேவையினை நிறைவுசெய்த போராளிகள் திருமணம் செய்ய முடியும் என்கிற விதியைக் கொண்டுவந்தார்.

பிரபாகரனின் திருமணம் இயக்கத்தினுள் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. ஒருவர் பின் ஒருவராக இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திருமண பந்தங்களில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார்கள். இயக்கத்தில் திருமணம் செய்துகொள்வதென்பது வழமையான நடைமுறையாகிப் போனது. 

பிரபாகரனிடம் பேசிய பாலசிங்கம், அவர் உடனடியாக மதிவதனியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இதற்காக மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரினார். இதற்காக மதிவதனியின் பெற்றோர்களான ஏரம்பு வாத்தியார் மற்றும் சின்னம்மை ஆகியோரை சென்னைக்கு வரவழைக்கும் ஒழுங்குகளில் அவர் ஈடுபட்டார். அவர்களுடன் பேசிய பாலசிங்கம், அவர்களது மகள் பிரபாகரனைக் காதலிக்கிறார் என்றும், ஆகவே தாம் செய்யவேண்டிய கடமை யாதெனில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதே என்றும் கூறினார். பின்னர் அவர்களை மதிவதனியுடன் பேசி அவரது எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்கும்படியும் கோரினார். 

515.ht7_.jpg

கந்தசுவாமி கோயில் திருப்பூர்

தமது மகளான மதிவதனியுடன் பேசிய பின்னர் அவரது திருமணத்திற்குத் தமது பூரண சம்மதத்தினை அவரது பெற்றோர் வழங்கினர். இலங்கை அரசால் தேடப்பட்டுவரும் கெரில்லாத் தலைவர் ஒருவரை மணப்பதால் அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் இன்னல்கள் குறித்து தமது மகளிடம் அவர்கள் விளங்கப்படுத்தியதாக ஏரம்பு தம்பதிகளின் நண்பர் ஒருவர் பின்னாட்களில் என்னிடம் கூறியிருந்தார். "உனது வாழ்க்கை கடுமையான ஆபத்தில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் என்று அவளிடம் எச்சரித்தேன். ஆனால், அவளோ பிரபாகரனுக்காக தனது உயிரையும் கொடுக்க முன்வருவேன் என்று என்னிடம் கூறினாள். அதன்பிறகு எனக்குச் சொல்வதற்கு எதுவுமே இருக்கவில்லை. அவர்களது திருமணத்திற்கு எனது சம்மதத்தினைத் தெரிவித்தேன்" என்று ஏரம்பு வாத்தியார் தனது உறவினரிடம் கூறியிருக்கிறார்.

Prabhakaran-and-Mathivathani-marriage-at-a-temple.jpg

பிரபாகரன் மதிவதனி திருமணம் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி தமிழ்நாடு திருப்பூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. சைவர்களின் கடவுளான முருகன் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் பிரபாகரன். அவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தேறியது. திருமணத்தின் பின்னர் பாலசிங்கம் தம்பதிகள் வாழ்ந்துவந்த வீட்டிலிருந்து வெளியேறிய மதி, பிரபாகரனுடம் வாழத் தொடங்கினார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரஞ்சித் said:

பிரபாகரனின் காதல் விவகாரம் அவரது இயக்கத்தினுள்ளேயும் அவருக்கு விரோதமான இயக்கங்களுக்குள்ளேயும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. அவரது எதிராளிகள், குறிப்பாக புளொட் அமைப்பின் தலைவரான உமா மகேஸ்வரன் பிரபாகரனைத் தாக்குவதற்கான தனது சந்தர்ப்பமாக இதனைப் பாவிக்க நினைத்தார். பிரபாகரனின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள்ளும் இந்த விவகாரம் விமர்சனங்களை உருவாக்கி விட்டிருந்தது. தனது கொள்கைகளையே பிரபாகரன் மீறுகிறார் என்று அவரது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதைப்பற்றி ஊரிலும் மக்களிடையே பல விவாதங்கள் நடந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரஞ்சித் said:

சைவர்களின் கடவுளான முருகன் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் பிரபாகரன்.

இது எந்தளவு உண்மை. தன் இறை நம்பிக்கை பற்றி தலைவர் கூறியது வீடியோவில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

இது எந்தளவு உண்மை. தன் இறை நம்பிக்கை பற்றி தலைவர் கூறியது வீடியோவில் உள்ளது.

தலைவர் மதநம்பிக்கைக்கு எதிரானவரா என்று தெரியவில்லை. அவரது திருமணம் கூட சைவ ஆலயத்தில்த்தான் நடைபெற்றிருக்கிறது. அவரது தகப்பனார் வல்வெட்டித்துறையில் பிரசித்திபெற்ற ஆலயம் ஒன்றின் பரிபாலகராக இருந்திருக்கிறார், பிரபாகரன் சிறுவயதிலிருந்தே அங்கு சென்று வந்திருக்கிறார். 

ஒரு காலத்தில் புலிகள் தம்மை சோசலிசவாதிகளாக அடையாளப்படுத்த முனைந்தபோதும் உண்மையாகவே இடதுசாரிச் சித்தார்ந்தத்தைக் கைக்கொள்ளவில்லை. இதனை மிகத் தெளிவாக சபாரட்ணம் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சோசலிச சித்தார்த்தங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்பதில் தலைவர் அப்போதே உறுதியாக இருந்தார். புலிகளை சோசலிசவாதிகளாகக் காட்டியே மேற்குலகின் உதவியை ஜெயவர்த்தனா பெற்றுக்கொண்டார் என்றும் கூறுவார்கள். 

தலைவர் கூறிய மத நம்பிக்கைபற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். 

"The marriage took place on 1 October 1984 at Thiruporur Murugan Temple in Tamil Nadu. Pirapaharan is a devotee of the Hindu deity Murugan, a God of Action and Destroyer of Evil.  The wedding was a simple ceremony.  After the wedding Mathi left Balasingham’s house and lived with Pirapaharan".

இது தலைவரது மதநம்பிக்கை குறித்தும், திருமணம் குறித்தும் சபாரட்ணம் எழுதிய கூற்று

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, ரஞ்சித் said:

ரஞ்சித்,

1. தலைவரோ, புலிகளோ ஒரு போதும் சோசலிசவாதிகள் இல்லை. பொருளாதார சார்ப்பை புலிகள் வெளிக்காட்டா விடினும், அவர்கள் முதலாளிதுவ கட்டமைப்பிலேயே நம்பிக்கை கொண்டார்கள் என்பதை அவர்களின் நடைமுறை அரசு கால நடவடிக்கைகள் எடுத்து சொல்கிறன.

2. இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாத எல்லாரும் சோசலிஸ்டுக்கள் இல்லை.

3.  தலைவர் ஒரு சைவர், திருமதி மதிவதனியும் சைவர், இருந்தது தமிழ்நாடு. அவர்கள் மிக இலகுவாக திருமணம் செய்ய கூடிய வழி ஒரு இந்து கோவிலில் மாலை மாற்றுவதுதான் - இதனை வைத்து மட்டும் - தலைவர் முருக பக்தர் என சொல்ல முடியாது.

5. தகப்பன் பக்தர் என்பதால் தனயனும் பக்தர் ஆக இருக்க தேவையில்லை.

4.  மேலே சபாரட்ணம் ஆங்கிலத்தில் தந்த Pirapaharan is a devotee of the Hindu deity Murugan, a God of Action and Destroyer of Evil  என்ற கூற்றுக்கு அவரின் வாழ்வில் எங்கும் ஒரு குண்டு மணியளவு கூட ஆதாரம் இல்லை என்பதே நான் அறிந்தது. அவரின் அருகில் எங்கும், உடலில், பேச்சில் எதிலுமே முருக சின்னங்கள் இருந்ததும் இல்லை.

5. சபாரட்ணம் கூறியதை நீங்கள் கொஞ்சம் ஓவராகவே மொழி பெயர்த்து விட்டீர்கள்.  சபாரட்ணம் சொன்னதை “பிரபாகரன் ஒரு முருக பக்தர்” என்று அல்லாவா மொழி பெயர்திருக்க வேண்டும்? முருகன் மீது “அளவு கடந்த பக்தி” உடையவர் என கூறுவது, சபாரட்ணம் கூட கூறாத ஒன்றல்லவா?

6. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெகத் காஸ்பர்  ர்ஒவ்வொரு முறை நீங்கள் சாவின் விளிம்பில் இருந்தும் மீண்டது, கடவுள் அருளாலா? என கேட்க, ஒரு அர்தபுஸ்டியான சிரிப்போடு “இயற்கை அருளால் என வைத்துகொள்ளுங்கள்” என பதில் கொடுத்துள்ளார்.

ஒரு முருக பக்தர் என்ன சொல்லி இருப்பார்? ஆமாம் கந்தன் அருளாலேதான் நான் இப்படி தப்பிதேன் என்று அல்லவா.

ஜகத் கஸ்பருக்கு கொடுத்த பதிலை விட ஒரு மனிதன் தெளிவாக கடவுள் பற்றிய தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க முடியாது.

நான் அவரை அருகில் இருந்து பார்த்தவன் அல்ல.

ஆனால் அவர் மிக தெளிவாக பொது வெளியில் புலிகள் இயக்கமும், நடைமுறை அரசும் மதச்சார்பற்றன என்பதை செயலிலும் சொல்லிலும் காட்டி உள்ளார்.

தன் தனிப்பட்ட நம்பிக்கை, நம்பிக்கையீனங்கள் பற்றி அதிகம் கதைக்கவில்லை.  ஆனால் அரிதாக மேலே சொன்ன பேட்டி போன்றவற்றில் தன் தனிப்பட்ட நிலைப்பாட்டை கோடிகாட்டியே சென்றுள்ளார்.

அத்துடன் இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி என்றுதான் சொன்னாரே ஒழிய,  முருகன் என் வழிகாட்டி என எங்கும் சொன்னதில்லை.

🙏.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

உண்மை!

  • Thanks 1
Posted
On 26/9/2023 at 04:34, ரஞ்சித் said:

மட்டக்களப்புச் சிறையுடைப்பு 

IE

தமிழ்ப் போராளிகள் இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்குச் செல்கிறார்கள் என்கிற செய்தி இலங்கை இராணுவத்தின் காதுகளுக்கும் எட்டியது. கார்த்திகை மாதம் வரை தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவரும் விடயம் இலங்கைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அது தெரியவருமுன்பே ஜெயவர்த்தனவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்புச் சிறைச்சாலையுடைப்பு.

ஆடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின்போது தப்பிய 19 தமிழ் அரசியல்க் கைதிகளை அரசு ஆடி 28 ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றியிருந்தது. விமானப்படை விமானமொன்றில் மட்டக்களப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்க் கைதிகளை வான் ஒன்றில் ஏற்றி மட்டக்களப்பு விமானப்பட முகாமிலிருந்து மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த ஆனைப்பந்தி எனும் இடத்திற்கு பொலீஸார் இழுத்துச் சென்றார்கள். மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட சிறைச்சாலை இப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது.

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் மேலும் 22 அரசியற்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களான வரதராஜப் பெருமாள் மற்றும் மகேந்திரராஜா ஆகியோரும் அடக்கம். மட்டக்களப்பு .பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் சத்துருக்கொண்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு நினைவுதினத்தில் உரையாற்றுவதற்காக இந்த விரிவுரையாளர்கள் இருவரையும் .பி.ஆர்.எல்.எப் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தது. இந்த விடயம் பொலீஸாருக்குத் தெரியவந்ததையடுத்து நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்திருந்த இரு விரிவுரையாளர்களையும் அது கைதுசெய்து வைத்திருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிவா, மணி, குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகிய .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களும் அடக்கம். அவ்வமைப்பின் தலைவர் பத்மநாபாவும் இந்த நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் வந்திருப்பது பொலீஸாருக்கு தெரிந்திருக்காமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை.

மட்டக்களப்புச் சிறைச்சாலை உடைக்கப்பட்டபோது அங்கு 41 தமிழ் அரசியற்கைதிகளும் இன்னும் குற்றச்செயல்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் இருந்தனர். மூவினத்தைச் சேர்ந்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்த இச்சிறைச்சாலையில் மிகக் கொடூரமான குற்றவாளிகள் சிலரும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவா என்பவரும் அப்போது சிறைச்சாலயில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தவர் அவர். அவரது தண்டனைக் காலம் விரைவில் முடிவுறும் தறுவாயில் இருந்தபோதும்கூட சிறையுடைப்புக் குழுவினருடன் அவரும் இணைந்துகொண்டார்.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் இருந்து உயிர்தப்பி மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த 19 தமிழ் அரசியற்கைதிகளிடமிருந்தும் வெலிக்கடையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய பொலீஸ் குழுவொன்று ஆவணி மாதத்தில் அங்கு விஜயம் செய்திருந்தது. ஆனால், இந்த விசாரணைகளை முற்றாகப் புறக்கணிப்பதென்று 19 கைதிகளும் முடிவெடுத்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்த அதிகாரிகள் வெலிக்கடையில் நடந்த விடயங்கள் குறித்து அறிய முயன்றனர். ஆனால், பொலீஸ் அதிகாரிகள் மீது தமக்கு நம்பிக்கை சிறிதும் இல்லையென்று கூறிய அவர்கள் விபரங்கள எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பொலீஸ் அதிகாரிகள் தமது கோபத்தை கைதிகள் மீது காட்ட முயன்றனர்.

பொலீஸ் அதிகாரிகள் சென்றபின்னர் கைதிகளுடன் பேசிய சிறையதிகாரிகள் சிங்களப் பகுதியொன்றில் அதியுயர் பாதுகாப்புக்கொண்ட சிறையொன்று கட்டப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் தமிழ்க் கைதிகளை புதிய சிறைச்சாலைக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

"எங்களை மீண்டும் சிங்களப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொல்லவே அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நாம் நினைக்கத் தொடங்கினோம்" என்று சிறையுடைப்பின்போது தப்பிய கைதியொருவர் என்னிடம் கூறினார். சிறையுடைப்பு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் அங்கிருந்த அனைவராலும் ஒருமித்தே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

manikkadasan-guards.jpg

புளொட் அமைப்பின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவரும் பின்னர் இலங்கை ராணுவத்தின் கூலிப்படையாகச் செயற்பட்டவருமான மாணிக்கதாசனுடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்

போராளித் தலைவர்களாகக் காணப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பரமதேவா ஆகியோர் சிறையுடைப்பு முயற்சிக்குத் தலைமை தாங்கினர்.

சிறையினை உடைத்து அனைவரும் வெளியேறும்வரை ஒன்றிணைந்து செயற்படுவதென்றும் அதன்பின்னர் ஒவ்வொரு குழுவினரும் தத்தமது இடங்களுக்குத் தப்பிச் செல்லமுடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

"சிறையுடைப்பினை மிகக் கவனமாகத் திட்டமிட்டோம்" என்று அவர் கூறினார். திட்டத்தின் சாராம்சம் என்னவெனில் சிறையதிகாரியையும் ஏழு காவலர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களை கதிரைகளுடன் கட்டி, வாய்களுக்குள் துணிபொதிந்து விட்ட பின்னர்  சிறையின் முன்வாயிலாலேயே வெளியேறுவது என்பதுதான். சிறைவாயிலின் சாவிகளின் பிரதிகள் சவர்க்காரக் கட்டிகளில் பிரதிசெய்யப்பட்டு தயாரித்துவைக்கப்பட்டிருந்தன. திடமான தேகக் கட்டமைப்பைக் கொண்டிருந்த டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், மகேஸ்வரன் மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் சிறைக் காவலாளிகளை மடக்கிப் பிடிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது எந்த இயக்கத்தையும் சேர்ந்திராத வரதராஜப் பெருமாள் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அழகிரி ஆகியோருக்கு முன்வாயில் திறக்கப்பட முடியாது போகுமிடத்து பின்பகுதியில் உள்ளை சிறைச்சாலைச் சுவரை உடைத்து தயாராக நிற்கும் பணி கொடுக்கப்பட்டது. சிறையதிகாரியினதும், சிறைக் காவலாளிகளினதும் வாய்களைக் கட்டிப்போடும் பணி வைத்தியர் ஜயதிலகராஜாவுக்கும் காந்தியத்தின் டேவிட் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

தப்பிச் செல்வதற்கான நேரத்தை மிகக் கவனமாக அவர்கள் குறித்துக்கொண்டார்கள். சிறைச்சாலையின் முன்வாயிலில் எப்போதுமே ஒரு காவலாளி கடமையில் இருப்பார். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இராணுவ ரோந்து வாகனம் ஒன்று சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றி வலம்வந்துகொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக பொலீஸ் ரோந்து வாகனம் ஒன்றும் இப்பகுதிக்கு வந்துசென்றுகொண்டிருக்கும். ஆகவே வெறும் 7 நிமிட இடைவெளிக்குள் சிறையுடைப்பை நிகழ்த்தித் தப்பிச் செல்லவேண்டும்.

தப்பிச்செல்வதற்கு இரவு வேளையைத் தேர்ந்தெடுத்தார்கள். வீதிகளில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஆனால் முற்றாக வெறிச்சோடிக் கிடவாமலும் இருப்பதே தப்பிச் செல்வதற்கு ஏதுவானது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி இரவு 7:25 இலிருந்து 7:32 இற்கிடையில் தப்பிச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது இராணுவ ரோந்தணி கிளம்பிச் சென்று பொலீஸ் ரோந்தணி வருவதற்கிடையில் அவர்கள் தப்பிச் செல்ல வேண்டும்.

ஆயுதங்களைக் கடத்தும் பணி இராணுவப் பயிற்சி பெற்ற போராளிகளிடமே விடப்பட்டது. டக்ளசும் அவரது ஏனைய தோழர்களும் வெளியிலிருந்து தமது சகாக்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்திருந்தனர். அதன்படி மத்திய குழு உறிப்பினரான குணசேகரம் என்பவர் சிறைச்சாலையின் வாயிலுக்கு வெளியே டக்ளஸ் குழுவினரை பொறுப்பெடுக்கும் பொருட்டு நிற்கவைக்கப்பட்டார். மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், வாமதேவன், பரூக் மற்றும் டேவிட் ஆகியோருக்கு புளொட் அமைப்பு ஆயுதங்களை வழங்கியதுடன் அவர்கள் தப்பிச் செல்லும் ஒழுங்குகளையும் செய்திருந்தது. தமிழ் ஈழ ராணுவம் எனும் அமைப்பின் தலைவரான பனாகொடை மகேஸ்வரன் தானும் தனது இரு தோழர்களான காளி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரும் மட்டக்களப்பு வாவியூடாக படகில் தப்பிச் செல்வதாகக் கூறினார்கள்.

நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா, குருக்களான சின்னராசா, ஜயதிலகராஜா, சிங்கராயர் மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் புலிகளின் அனுதாபிகளாக இருந்தனர். மற்றையவர்களுடன் பேசிய குரு சிங்கராயர் அவர்கள், தான் தப்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். அவரது வயதும், உடல்நிலையும் தப்பிச்செல்வதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தப்பிச் சென்றால் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும், ஆகவே தப்பிச்செல்வதில்லை என்கிற முடிவிற்கு அவர் வந்திருந்தார். நித்தியானந்தன் பேசும்போது தானும் தனது மனைவியும் தம்பாட்டில் தப்பிச் செல்வதாகக் கூறினார்.

கோவை மகேசன் அப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததோடு வைத்தியர் தர்மலிங்கத்தின் வயது அவரைத் தப்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏனையவர்களைப் போல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக அவசரகால நிலைமைச் சட்டத்தினூடாகவே கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் நிலையிலும் இருந்தார்கள். ஆகவே அவர்களும் தப்பிச் செல்வதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். குரு சிங்கராயர், கோவை மகேசன், வைத்தியர் தர்மலிங்கம் ஆகியோர் 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாத முற்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மிகச் சிறியளவிலான ஆயுதங்களையே சிறைச்சாலைக்குள் அவர்களால் கடத்திவர முடிந்திருந்தது. ஆகவே ரப்பரால் உருவாக்கப்பட்ட காலணிகளில் கைத்துப்பாக்கிகள் போல வெட்டி அவற்றினைக்கொண்டே சிறைக் காவலர்களையும் ஏனைய கைதிகளையும் அச்சுருத்துவது என்று முடிவாகியது. பனாகொடை மகேஸ்வரன் இந்தப் பணியைப் பொறுப்பெடுத்தார்.

"தப்பிச் செல்ல நாம் குறித்துக்கொண்ட நிமிடம் வரையும் நாம் கடவுளை வேண்டிக்கொண்டோம். தப்பிச் செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முதல் எங்கள் அனைவரையும் சந்தித்த குரு சிங்கராயர் எம்மை ஆசீர்வதித்ததுடன் எமது முயற்சி வெற்றியளிக்கவும் வாழ்த்தினார் " என்று என்னுடன் பேசியவர் கூறினார். 

இரவு 7 மணியளவில் சிறைக்காவலாளி அந்தோணிப்பிள்ளை கைதிகளுக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வந்தார். வழமையாக மாலை வேளைகளில் மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர் அப்போதுதான் சிறிது மதுவை அருந்திவிட்டு உற்சாகமான மனநிலையில் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப் பாடிக்கொண்டு வந்தார்.

"எப்பிடி இருக்கிறியள் தம்பிகள்?" என்று கேட்டுக்கொண்டே அவர் வந்தார்.

அவரைத் திடீரென்று பிடித்துக்கொண்ட பரந்தன் ராஜன் உடனேயே அவரைக் கட்டினார். டேவிட் அவரது வாயைத் துணிகளால் கட்டிப்போட்டார். ஆறடி உயரமும், சிறந்த உடல்வாகுவும் கொண்ட பனாகொடை மகேஸ்வரன் சிறையதிகாரியையும் காவலர்களையும் தாக்கி அவர்களைப் பிடித்துக்கொண்டார். இதனையடுத்து சிறைக்கதிகள் வரிசையாக சிறைவாயிலுக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்.

பின்புற சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதராஜப் பெருமாளும் அழகிரியும் திடீரென்று சிறை நிசப்தமானதையடுத்து சிறையின் முன்வாயிலிக்குச் சென்று பார்த்தபோது அது திறந்துகிடந்தது. வாயிலூடாக வெளியே ஓடிய அவர்கள் சிறையின் பின்புறம் நோக்கி வெளிவீதியால் ஓடினார்கள். வாவியின் கரைக்கு அவர்கள் சென்றபோது மகேஸ்வரனையும் அவரது தோழர்களையும் ஏற்றிக்கொண்டு படகொன்று வாவியூடாக வெளியேறுவதை கண்ணுற்றார்கள். இவர்கள் கூக்குரலிட ஆரம்பிக்க, சென்றுகொண்டிருந்த படகு திரும்பிவந்து இவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றது.

தந்தை செல்வாவின் முன்னாள் வாகனச் சாரதியும் பின்னர் ஆயுத அமைப்பொன்றில் இணைந்துகொண்டவருமான வாமதேவவாவைக் கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலீஸார் 100,000 ரூபாய்களை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தனர். கைதுசெய்யப்பட்டபின் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு  நிர்மலா நித்தியானந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையினை உடைக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர் அதனை மறந்துவிட்டார்.

.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போராளிகள் காட்டுப்பகுதியொன்றின் ஒற்றையடிப் பாதைக்கு வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் அப்பாதை வழியே ஒன்றாகச் சென்ற அவர்கள் பின்னர் த‌த்தமது அமைப்புக்கள் ஒழுங்குசெய்திருந்த படகுகள் தரித்துநின்ற கரைகளை நோக்கிச் சென்று அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். 

புலிகளின் அனுதாபிகளான நித்தியானந்தன், குருவானவர்களான சின்னராசா, ஜயதிலகராஜா மற்றும் ஜயகுலராஜா ஆகியோர் சிறைச்சாலையின் பிற்பகுதிக்குச் சென்றனர். பரமதேவாவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். சுமார் 600 மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருந்த மாந்தீவை படகொன்றில் ஏறிச் சென்றடைந்தனர். அவர்கள் சென்ற திசைநோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அவர்களுக்குத் தெரிந்தது. அந்த இருட்டில் அவர்கள் முதலைக்குடா நோக்கி வேகமாக ஓடினர். அங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்ட அவர்கள் திருக்கோவில் நோக்கி அதனை ஓட்டிச் சென்றனர். மறைவிடம் ஒன்றில் அங்கு தங்கிய பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர்.

பனாகொடை மகேஸ்வரனுக்கு வேறு திட்டம் இருந்தது. அவர் மட்டக்களப்பிலேயே இருக்க விரும்பினார். போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய அவர் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்று எண்ணினார். மட்டக்களப்புப் பகுதி அவருக்குப் பரீட்சயமில்லாதபோதும் மறைவிடம் ஒன்றைத் தேடி ஒளிந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். சில மாதங்களின் பின்னர் அவர் அதிரடி நடவடிக்கை ஒன்றைச் செய்திருந்தார். காத்தான்குடியில் இருந்த வங்கியொன்றைக் கொள்ளையிட்டு அங்கிருந்த 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தினை எடுத்துச் சென்றார். அக்காலத்தில் அதுவே அதிகளவு பணம் களவாடப்பட்ட நிகழ்வாக இருந்தது.

"தமிழர்களின் வரலாற்றில் திகிலான அத்தியாயம்" என்று டேவிட் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்தச் சிறையுடைப்பு அங்கிருந்த ஏனைய கைதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. தமிழ் அரசியற்கைதிகள் தப்பிச் சென்றதையும், வாயிலின் இரும்புக் கதவுகள் அகலத் திறந்து கிடந்ததையும் கண்ணுற்ற அவர்களும் தப்பிச் சென்றார்கள்.

பொலீஸாரின் ரோந்தணி வழமைபோல 7:32 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபோது அது வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. உடனடியாக பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தரை, நீர், ஆகாய வழியாக பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரிலிருந்து தப்பிச் செல்ல முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த சில கைதிகளை, குறிப்பாக சிங்களக் கைதிகளை பொலீஸார் பின்னர் மீளப் பிடித்து கொண்டனர்.

மேற்படி சிறையுடைப்புக்கு புளட்டும், ஈபியும்  தாம் தான் தனியே சிறை உடைப்பில் ஈடுபட்டதாக உரிமை கோரியதாக அறிகிறேன். இங்கு இரு குழுக்களுக்கும் இடையில் மக்கள் மத்தியில் (ஆதரவாளர்களும்) வாய்த் தர்க்கங்கள் ஆங்காங்கே நடை பெற்றதாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உமா - ஊர்மிளா குற்றம் சுமத்தப்பட்ட பிரச்னையில், (பாலசிங்கம் முயன்று இருக்கலாம்),  அனால் காதல் / கல்யாணம் என்பதை பிரபா ஏற்றுக்கொள்ளவில்லை ; இயக்கத்தினுள் அப்படி ஒன்றும் நடக்க கூடாது என்பது பிரபாவின் பிடிவாதம். இதுவே பிரிவின் அடிப்படை.

உமா -ஊர்மிலா ஒத்து கொண்டு இருந்தாலும், பிளவு நடந்தே இருக்கும்.  அனால், இதில் தவறு என்னவென்றால், ஒரு ஆதாரமும் இல்லாத குற்றசாட்டு உமா  - ஊர்மிளா மீது சுமத்தப்பட்டது. 

அதே பிரபா தனக்காக விதியை மாற்றியதே வரலாறு. பூசி  மெழுக வேண்டிய அவசியம்  இல்லை. 

பாலசிங்கத்துக்கும், உமாவுக்கும் போட்டி, சவால்  தன்மையானா எதிர்ப்பு இருந்தது.  

உமா விலத்துவது பாலசிங்கத்துக்கு கேள்வியற்ற, சவால் அற்ற இடத்தை உருவாக்கும் நிலையும் தோன்றி இருந்தது.  

பாலசிங்கம் இதில் எந்த அளவு தூரம்  நடந்த எல்லாவற்றையும் வெளியில் சொன்னாரென்பதும் கேள்வி. 

பாலசிங்கம் உளப்பூர்வமாக உமா பிரச்சனையை ட்றது வைக்க முயன்றாரா என்பதும் கேள்வி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெலோ அமைப்பில் இணையவென்று வந்து பின்னர் புலிகளுடன் இணைந்துவிட்ட‌ பெண்போராளிகள்

பிரபாகரன் மதிவதனி திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் திருவாண்மியூர் பகுதியில் சற்றுப் பெரிய வீடொன்றிற்கு பாலசிங்கம் தம்பதிகள் மாறியிருந்தனர். அவர்களுடன் மேலும் பல பெண்கள் வந்து தங்கிக்கொண்டதால் பெரிய வீடொன்றிற்கு மாறவேண்டியது அவசியமாகியிருந்தது. அதுகூட எதிர்பாராத விதமாக நடந்ததுதான். சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போராட போராளி இயக்கங்களில் இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களோடு சில பெண்களும் பயிற்சிகளுக்காக இணைந்துகொண்டனர்.  ஆனால், புலிகள் இயக்கமும், புளொட் மற்றும் ஈரோஸ் அமைப்புக்களும் பெண்களை அதுவரை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தமது அமைப்புக்களில் பெண்கள் பிரிவுகள் இதுவரை அமைக்கப்படாமையினால் பெண்களை இணைத்துக்கொள்வதில்லை என்று அவை முடிவெடுத்திருந்தன.

ஆனால், தன்னர்வத்தோடு இணைய விரும்பிய பெண்களை டெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரட்ணம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவர், அவர்களை தமிழ்நாட்டில் இயங்கிவந்த தமது முகாமிற்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு பெண்கள் தங்குவதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். டெலோ இயக்கத்தில் பெண்கள் பிரிவென்று ஒன்றே இல்லையென்பதும் அவர்களுக்குப் புரிந்தது. மேலும், பெண் போராளிகளைப் பராமரித்து அவர்களை வழிநடத்தவென எவரும் இருக்கவில்லையென்பதும் அவர்களுக்குப் புரிந்தது. ஆகவே, டெலோவில் இணைய வந்த பெண்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகினர். எனவே, அவர்கள் அப்பகுதியில் இருந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை இதுதொடர்பாக அணுகினர். அப்பாதிரியானவரோ பிரபாகரனிடம் சென்று அப்பெண்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். பாதிரியானவரிடம் பேசிய பிரபாகரன் தமது இயக்கத்தில் பெண்கள் பிரிவென்று இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லையென்றும், ஆனால் அதிகளவு பெண்கள் இணையும் பட்சத்தில் பெண்கள் பிரிவொன்றை ஆரம்பிக்க உத்தேசித்திருப்பதாகவும் கூறினார். அப்படியிருந்தபோதும், டெலோ இயக்கத்தில் இணைந்துகொள்ள வந்து நிர்க்கதிக்குள்ளான பெண்களை, பெண்கள் பிரிவு அமைக்கப்படும்வரை வைத்துப் பராமரிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்களை அடேல் பாலசிங்கத்திடம் அனுப்பி வைத்தார்.

major%20sothiya%2012.png

டெலோ அமைப்பில் இணைய வந்திருந்த பெண்களின் பெயர்கள் சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி, ஜெயா, லலிதா மற்றும் சாந்தி என்பனவாகும். இவர்கள் அனைவரும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். புலிகளின் முதலாவது பெண்கள் இராணுவப் பிரிவின் தளபதியாக இருந்தவர் சோதியா. சுகி, இராணுவக் காவலரண் ஒன்றின்மீது முதன்முதலாக வெற்றிகரமாக ஆர்.பி.ஜி தாக்குதலை நடத்திய பெண் புலிப் போராளியாவார். புலிகளின் பெண் போராளிகளுக்கென்று யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பயிற்சி முகாமின் பயிற்றுவிப்பாளராக இருந்தவர் தீபா. அநாதைப் பெண்பிள்ளைகளுக்கான பராமரிப்பு அமைப்பான செஞ்சோலையின் இயக்குநராகத் திகழ்ந்தவர் லலிதா. பெண்கள் இராணுவப் பிரிவின் புலநாய்வுத்துறைக்குப் பொறுப்பாக இருந்தவர் சாந்தி.

டெலோ அமைப்பில் இணைந்துகொள்ள வந்து பின்னர் புலிகளிடம் அடைக்கலமாகிய பெண்களும் சேர்ந்துவிட பெரிய வீடொன்றினை திருவாண்மியூர் பகுதியில் பாலசிங்கம் தம்பதிகள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கு மாறிச் சென்றார்கள். பலகணியைக் கொண்ட மாடியறைகளை பாலசிங்கம் தம்பதிகள் தமது தேவைக்காகப் பாவித்துக்கொண்டனர். பெண்கள் கீழ்ப்பகுதியில் தங்கிக்கொண்டனர். திருமணத்தின் பின்னர் மதி பிரபாகரனுடன் சென்றுவிடவே மீதமாயிருந்த பெண்கள் பயிற்சிக்கென்று ஐப்பசி மாதம் 1984 ஆம் ஆண்டு மதுரைக்குக் கிளம்பிச் சென்றனர். அங்குதான் புலிகளின் பெண்போராளிக்கென்று முதலாவது பயிற்சி முகாம் அமைக்கப்பட்டது. தம்முடன் தங்கியிருந்த பெண்கள் பயிற்சிக்குச் சென்றதையடுத்து பாலசிங்கம் தம்பதிகள் பெசண்ட் நகரில் கடற்கரையோரம் அமைந்திருந்த இரு அறைகளைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு மாறிக்கொண்டனர்.

பிரபாகரனின் மனைவியாக மதிவதனி சந்தித்த சவால்கள்

1991-about-praba_family.jpg

சார்ள்ஸ் அன்ரனி, மதிவதனி, பிரபாகரன், துவாரகா

 மதிவதனியின் முதல் மூன்று வருடங்களும் மிகவும் மகிழ்வாகக் கழிந்தது. அக்காலப்பகுதியில் அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இலங்கையின் சரித்திரத்தை மாற்றிப்போட்ட திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தோழனாகத் திகழ்ந்த சார்ள்ஸ் அன்ரனி நினைவாக 1985 ஆம் ஆண்டு பிறந்த தனது மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்றே பிரபாகரன் பெயர் வைத்தார். மேலும் 1986 ஆம் ஆண்டு பிறந்த தமது மகளுக்கு புலிகளின் மாவீரர் ஒருவரின் பெயரான துவாரகா என்ற பெயரினை அவர்கள் இட்டார்கள். முதலிரு குழந்தைகள் பிறந்து 10 வருடங்களுக்குப் பின்னர் பிறந்த பிரபாகரனின் இளைய மகனுக்கு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மதிவதனியின் சகோதரனான பாலச்சந்திரனின் பெயரினை இட்டார்கள். 

மதிவதனி பெரும்பாலும் திரைமறைவு வாழ்க்கையினையே வாழ்ந்துவந்தார். வெகு அரிதாகவே பிரபாகரனுடன் வெளிப்படையாக அவர் வெளியே வந்திருப்பார். முதன்முதலாக பிரபாகரன் மதிவதனியை வெளியுலகிற்குக் கொண்டுவந்தது 1985 ஆம் ஆண்டு இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப்புடனான நேரகாணலிற்காகத்தான். தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் இந்த சம்பவத்தினை அனித்தா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், 

 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஒருமுறை பிரபாகரன் தனது மனைவியையும் மூன்று மாதங்களே ஆகியிருந்த தனது மகனையும் நேர்காணல் ஒன்றிற்காக கூட்டிவந்திருந்தார். பிரபாகரனுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த அவரது மனைவி ஒருமுறை தன்னும் தேவையற்ற விதமாக எதையும் பேசவில்லை. அவர் சித்திரம் பதிக்கப்பட்ட சேலையினையும் மிகவும் எளிமையான மேற்சட்டையினையும் அணிந்திருந்தார். மிகவும் பண்பானவராகவும், எளிமையானவராகவும், குடும்பப்பாங்கு கொண்டவராகவும் தெரிந்தார். அவர் கேட்டுக்கொண்டபோது தனது கைகளில் அதுவரை அமர்ந்திருந்த தனது மகனை அவரிடம் தந்தார். தனது பாலகனைப் பார்த்தபடியே "இவனது பெயர் சார்ள்ஸ் அன்ரனி" என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார்.

 பிரபாகரன் தனது மகனுக்கு பெயரிட்ட விடயம் குறித்தும் அனித்தா கூறுகிறார்,

நீங்கள் ஒருவர் மீது வைக்கும் விசுவாசமே அவர்கள் உங்கள் மீது வைக்கும் விசுவாசத்திற்கு காரணியாகிவிடுகிறது என்பதை பிரபாகரனையும் அவரது போராளிகளையும் பார்க்கும்போது நான் உணர்ந்துகொண்டேன். அவர் தனது போராளிகள் மீது வைத்திருக்கும் தன்னிகரற்ற விசுவாசமே அவர்களை தமது தலைவன் மீதான தீவிர விசுவாசிகளாக மாற்றியிருக்கின்றது.

சீலன் பிரபாகரன் மீது வைத்திருந்த விசுவாசம் அளவிடமுடியாதது. சிங்கள இராணுவ அதிகாரியான சரத் முனசிங்க தனது "ஒரு ராணுவ வீரனின் பார்வையில்" எனும் புத்தகத்தில் இப்படி எழுதுகிறார், 

"நிர்மலா நித்தியானந்தத்துடன் பேசும்போது பிரபாகரன் ஒரு தலைசிறந்த தலைவன் என்று சீலன் கூறியிருக்கிறார். ஒருமுறை நோயுற்ற போராளியொருவர் தான் படுத்திருந்த படுக்கையிலேயே வாந்தியெடுக்கும் தறுவாயில் அருகிலிருந்து அப்போராளியின் வாந்தியைக் கைகளில் ஏந்திக்கொண்டார் பிரபாகரன். நான் நகைச்சுவையாக நிர்மலாவிடம், "நான் ஒருநாள் உங்களின் சீலனைப் பிடிப்பேன்" என்று கூறினேன். அதற்கு சற்று நிதானமாகப் பதிலளித்த நிர்மலா, அதனை மட்டும் செய்யாதீர்கள், ஏனென்றால் அவரை உங்களால் ஒருபோதுமே உயிருடன் பிடிக்க முடியாது என்று கூறினார்".

  நான் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டதுபோல, சீலனின் உயிரற்ற உடலைத்தான் சரத் முனசிங்கவினால் கைப்பற்ற முடிந்திருந்தது. சீலனின் தியாகத்திற்கும் விசுவாசத்திற்கும் பிரதியுபகாரமாக தனது மகனுக்கு சீலனின் பெயரான சார்ள்ஸ் அன்ரனியை இட்டார் பிரபாகரன்.

சைவ மத நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதும் மதிவதனி தனது மூத்த மகனுக்கு கிறீஸ்த்தவப் பெயரினை இடுவதை தடுக்கவில்லை. பிரபாகரனின் உணர்வுகளை வெகுவாக மதித்த மதி, அவருக்கு மிகவும் ஆதரவுடைய மனைவியாக வாழ்ந்தார். அவரது உறுதிப்பாடும், தன்னலமற்ற தியாகமும் அவரைத் தெரிந்தவர்களிடையே அவர்பற்றிய நன்மதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. 

அடேல் பாலசிங்கம் தான் எழுதிய சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், 

மதிவதனியை மனைவியாகத் தெரிவுசெய்ததன் ஊடாக பிரபாகரன் ஆசீர்பெற்றிருந்தார் என்றே சொல்லவேண்டும். அவருக்கு அசையாத அன்பினையும், குடும்ப வாழ்வின் பாதுகாப்பினையும், நெருக்கத்தையும், பிரபாகரன் சந்தித்த எண்ணற்ற இடர்மிகுந்த சந்தர்ப்பங்களின்போதும் மதிவதனி வழங்கினார். மதிவதனியைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை போன்றதல்ல. மிகவும் எளிமையானவராகவும், மென்மையான இதயம் கொண்டவராகவும் இருந்தபோதிலும் மதிவதனி பல சந்தர்ப்பங்களில் இழப்புக்களையும், துயர் மிகு சந்தர்ப்பங்களையும் எதிர்கொண்ட வேளைகளில் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டார்.

திருமணமாகி முதல் மூன்று வருடங்களை மதிவதனி சென்னையிலேயே கழித்தார். இக்காலத்தில் பிரபாகரன் தனது போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களை நடத்துவதிலும், மேற்பார்வை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டதனால் மதிவதனி தனது இரு குழந்தைகளுடன் பொழுதினைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழித்து வந்தார். ஆனால், அந்த அமைதியான வாழ்வும் அவருக்குப் பிடித்திருந்தது. 

1986 ஆம் ஆண்டு சிங்கள அரசை தமிழர் தாயகத்திலிருந்தே எதிர்த்துப் போராடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது மதிவதனியும் அவருடன் இலங்கையின் வட மாகாணத்திற்குச் சென்றார். நல்லூருக்கருகில் மறைவிடமொன்றில் அவரது வாழ்க்கை ஆரம்பமாகியது. பின்னாட்களில் அவரது பெற்றோரும் அவருடன் இணைந்துகொண்டனர். தனது கணவரை சிங்கள விமானப்படையின் உலங்குவானூர்திகளும், விமானங்களும்  குறிவைத்துத் தாக்குதல் நடத்தியவேளைகளில் அவர் மிகுந்த வேதனையடைந்தார்.

1987 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் இந்திய ராணுவம் யாழ்நகரைக் கைப்பற்றிய நாட்களில் மதிவதனி நல்லூரில் அமைந்திருந்த மறைவு வீட்டிலேயே தங்கியிருந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இராணுவத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள நல்லூர் முருகன் ஆலயத்தில் தஞ்சமடைந்தவேளை மதிவதனியும் தனது குழந்தைகளுடன் அங்கு தஞ்சமடைந்தார். அவரது வாழ்க்கையில் மனவேதனை மிகுந்த காலங்கள் அவை. அவரது கணவரைக் கைதுசெய்ய இந்திய ராணுவம் தாயகம் முழுவது தேடிவருகையில் மதிவதனியோ இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மக்களோடு மக்களாக தஞ்சமடைந்திருந்தார். 

சூழ்நிலை சற்று தணிந்திருந்த வேளையில் தனது குழந்தைகள் இருவரையும் தனது பெற்றோரின் பராமரிப்பில் விட்டு விட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் அமைந்திருந்த அடர்ந்த காட்டுப்பகுதியான அலம்பிலுக்குச் சென்று தனது கணவருடன் இணைந்துகொண்டார். அலம்பில் காட்டில் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகுந்த மனவேதனையினை அவருக்குக் கொடுத்தது. அவர்கள் இருந்த அடர்ந்த காட்டுப்பகுதி நோக்கி இடையறாது செல்மழை பொழிந்தது இந்திய இராணுவம். இந்திய இராணுவத்தின் ரெஜிமெண்ட்டுகள் அங்குலம் அங்குலமாக புலிகளின் காட்டுப்பகுதி முகாம்கள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்தன. இக்காலப்பகுதியிலேயே இந்திய இராணுவத்துடனான மோதல் ஒன்றில் தனது இளைய சகோதரனான பாலச்சந்திரன் கொல்லப்பட்டார் என்கிற செய்தியும் மதிவதனிக்கு வந்து சேர்ந்திருந்தது. இவை எல்லாவற்றைக் காட்டிலும் தனது இரு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து வந்தது அவரை மிகவும் வேதனைப்பட வைத்திருந்த‌து.

மதிவதனி அடைந்த வேதனைகளைப் பிரபாகரனினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்ப பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனால், மதிக்கு அது பிடிக்கவில்லை. பிரபாகரனோ தனது முடிவில் பிடிவாதமாக நின்றார். ஆனால், இறுதியில் மதிவதனி மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்று தனது குழந்தைகளுடன் இணைந்துகொண்டார். அங்கிருந்தே அவர்கள் சுவீடன் நாட்டுக்குத் தப்பிச் செல்லும் ஏற்பட்டுகள் செய்யப்பட்டன. இந்தப் பயணம் குறித்து பெரிதாக எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பலர் மதிவதனியும் குழந்தைகளும் ஒஸ்ட்ரேலியாவுக்கே தப்பிச் சென்றதாக அக்காலத்தில் நினைத்திருந்தார்கள். 

சுவீடனில் இரண்டு வருடங்கள் தனது பிள்ளைகளுடன் மிகவும் இரகசியமான வாழ்க்கையினை மதிவதனி வாழ்ந்து வந்தார். 1989 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தனது கணவருடன் அவர் மீளவும் இணைந்துகொண்டார். 1989 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த பிரேமதாசா, மதிவதனி மீண்டும் நாட்டிற்குவரும் ஒழுங்குகளைச் செய்துகொடுத்தார். சுவீடனில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த மதிவதனியையும் பிள்ளைகளையும் அங்கிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமா நிலையத்திற்கு அன்டன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் அழைத்துவந்தார்கள். அங்கிருந்து பிரேமதாசவினால் ஒழுங்குசெய்யப்பட்ட விசேட உலங்குவானூர்தி ஒன்றின்மூலம் அலம்பில் காட்டிப்பகுதியில் இருந்த பெயர் குறிப்பிடப்படாத புலிகளின் முகாம் ஒன்றிற்கு மதிவதனி, குழந்தைகள், அன்டன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர். 

அடேல் தனது புத்தகத்தில் மேலும் எழுதுகையில், "அவரது திருமண வாழ்க்கை நெடுகிலும் மதிவதனிக்கு பாதுகாப்பான, நிரந்தரமான இல்லம் என்று ஒன்று இருக்கவில்லை. ஆனாலும், ஒரு கெரில்லா தலைவனின் மனைவியாக மிகவும் துணிச்சலான, கண்ணியமான வாழ்வினை அவர் மேற்கொண்டார். இதனாலேயே தனது குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நிலையான, பாதுகாப்பான வாழ்க்கையினை அமைத்துக்கொடுக்க அவரால்  முடியாமல் இருந்தது" என்று எழுதுகிறார்

  • Like 1
  • Thanks 1
Posted
3 hours ago, Kadancha said:

உமா - ஊர்மிளா குற்றம் சுமத்தப்பட்ட பிரச்னையில், (பாலசிங்கம் முயன்று இருக்கலாம்),  அனால் காதல் / கல்யாணம் என்பதை பிரபா ஏற்றுக்கொள்ளவில்லை ; இயக்கத்தினுள் அப்படி ஒன்றும் நடக்க கூடாது என்பது பிரபாவின் பிடிவாதம். இதுவே பிரிவின் அடிப்படை.

உமா -ஊர்மிலா ஒத்து கொண்டு இருந்தாலும், பிளவு நடந்தே இருக்கும்.  அனால், இதில் தவறு என்னவென்றால், ஒரு ஆதாரமும் இல்லாத குற்றசாட்டு உமா  - ஊர்மிளா மீது சுமத்தப்பட்டது. 

அதே பிரபா தனக்காக விதியை மாற்றியதே வரலாறு. பூசி  மெழுக வேண்டிய அவசியம்  இல்லை. 

பாலசிங்கத்துக்கும், உமாவுக்கும் போட்டி, சவால்  தன்மையானா எதிர்ப்பு இருந்தது.  

உமா விலத்துவது பாலசிங்கத்துக்கு கேள்வியற்ற, சவால் அற்ற இடத்தை உருவாக்கும் நிலையும் தோன்றி இருந்தது.  

பாலசிங்கம் இதில் எந்த அளவு தூரம்  நடந்த எல்லாவற்றையும் வெளியில் சொன்னாரென்பதும் கேள்வி. 

பாலசிங்கம் உளப்பூர்வமாக உமா பிரச்சனையை ட்றது வைக்க முயன்றாரா என்பதும் கேள்வி. 

பாலசிங்கம் அவர்களுக்கு உமா சவாலாக இருந்தது என்பது நகைச்சுவையானது.
உமா பிரிவில் பாலசிங்கம் அவர்கள் ஒற்றுமையாக்க இன்னும் கொஞ்சம் பாடு பட்டிருக்கலாம்.ஆனால் மத்திய குழுவின் முடிவு என நினைக்கிறேன்.
பிரபாகரன் அவர்கள் தனக்காக களவிதிகளை மாற்றினார் என மக்கள் பேசுவதுண்டு. இயக்கம் தொடங்கி வளரும் வரை அவ்விதி செல்லுபடியாகும். அதுவே வாழ் நாள் விதியாக இருக்க வேண்டும் என்பது விதியல்லவே??

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

பாலசிங்கம் அவர்களுக்கு உமா சவாலாக இருந்தது என்பது நகைச்சுவையானது.

உங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்.

ஊடகவியலார் சபாரெத்தினமே, அவர் எழுதிய , ரஞ்சித் மொழிபெயர்க்கும் இதே (வரலாற்று) குறிப்பில்  பாலசிங்கத்தின் வருகை, உமா  எதிர்கொண்ட விதம் பற்றி தொட்டு சென்று இருக்கிறார்.

அனைய நிலையில் ஒவொருவரின் நிலையும் முக்கியமானது. 

1984 இல் வளர்ந்தது விட்டகது என்று எடுகோள் வைத்து . பூசி மெழுகுவது ... 

பாலசிங்க . சொல்லிய காரணம்  இதை விட மேல் (காலத்துகு பிந்திய  கொள்கைகள்  என்று), அத்துடன் அடேல் உம் ஒரே சீரான நிலைப்பாடு.

ஆனல், அந்த நிலைப்பாட்டை பிரபா ஏற்கவில்லை உமா -ஊர்மிளா மீதான  ஆதாரம் இல்லாத  குற்றச்சாட்டில்; தனது ஊரறிந்த பரகசிய காதலில் ஏற்றுக்கொண்டு மாற்றினார்.  இதுவே நடந்தது. 

Posted
16 minutes ago, Kadancha said:

உங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்.

உமா தனது சவக்குழியை தனது சகாக்களால் தோண்டிக்கொண்டார் என்பதில் அவரது திறமை தெரிந்தது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

1. தலைவரோ, புலிகளோ ஒரு போதும் சோசலிசவாதிகள் இல்லை. பொருளாதார சார்ப்பை புலிகள் வெளிக்காட்டா விடினும், அவர்கள் முதலாளிதுவ கட்டமைப்பிலேயே நம்பிக்கை கொண்டார்கள் என்பதை அவர்களின் நடைமுறை அரசு கால நடவடிக்கைகள் எடுத்து சொல்கிறன.

ஒரு பத்திரிக்கையாளர்  மகாநாட்டில் பாலசிங்கம் எங்கள் கொள்கை திறந்த பொருளாதார கொள்கை தான் என்று வெளிப்படையாக அறிவித்ததாகவே அறிந்தேன். புலிகள் சோசலிசவாதிகள் என்று யாழ் களத்தில் Vasee சொல்லியிருந்தார் என்று  நினைக்கிறேன்.

20 hours ago, goshan_che said:

2. இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாத எல்லாரும் சோசலிஸ்டுக்கள் இல்லை

5. தகப்பன் பக்தர் என்பதால் தனயனும் பக்தர் ஆக இருக்க தேவையில்லை.

மிகச் சரியாக  சொன்னீர்கள். மற்றது சிறுவயதில்  அப்பா அம்மாவுடன் கோவிலுக்கு போனதை வைத்து வளர்ந்த பின்பும் ஒருவர் கடவுள் நம்பிக்கையாளர் என்று சொல்லிவிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு பத்திரிக்கையாளர்  மகாநாட்டில் பாலசிங்கம் எங்கள் கொள்கை திறந்த பொருளாதார கொள்கை தான் என்று வெளிப்படையாக அறிவித்ததாகவே அறிந்தேன். புலிகள் சோசலிசவாதிகள் என்று யாழ் களத்தில் Vasee சொல்லியிருந்தார் என்று  நினைக்கிறேன்.

தலைவரே கூட ஒரு ஆரம்பகால பேட்டியில் ஜனநாயக சோசலிச நாடே தன் கொள்கை என சொல்லி இருந்தார். 

ஆனால் நடைமுறையில் அவர்கள் சிங்கப்பூர் போல ஒரு கட்டுபடுத்தபட்ட முதலாளிதுவ கட்டமைப்பையே முன்னெடுத்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

தலைவரே கூட ஒரு ஆரம்பகால பேட்டியில் ஜனநாயக சோசலிச நாடே தன் கொள்கை என சொல்லி இருந்தார். 

ஆனால் நடைமுறையில் அவர்கள் சிங்கப்பூர் போல ஒரு கட்டுபடுத்தபட்ட முதலாளிதுவ கட்டமைப்பையே முன்னெடுத்தனர்.

தகவலுக்கு நன்றி
ஒரே confuse விடுங்கோ

11 hours ago, Kadancha said:

அதே பிரபா தனக்காக விதியை மாற்றியதே வரலாறு. பூசி  மெழுக வேண்டிய அவசியம்  இல்லை. 

 தான் வைத்த சட்டத்தை தனக்காக மாற்றினார் என்று நீங்கள் சொன்னதை நானும் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திராவின் அழுத்தத்திற்குப் பதிலடியாக ஜெயார் மேற்கொண்ட மூன்றுவழிக் கொள்கை

Cartoon on JR Jayawardene Tamils April 1, 1984

அரசியல் சதுரங்கத்தில் ஜெயவர்த்தன ஒரு மேதை என்று அவரது அபிமானிகளும் எதிரிகளும் ஒருங்கே கூறுவார்கள். தனது எதிரிகள் இரு விடயங்களில் தனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள் என்றால்,  அவர் அவர்களுக்கு எதிராக மூன்று விடயங்களில் திட்டமிட்டுக்கொண்டிருப்பார் என்று பரவலாகக் கருதப்பட்டவர். இதே பாணியிலான சதுரங்க ஆட்டத்தைத்தான் இந்திரா காந்தி விடயத்திலும் ஜெயவர்த்தன கைக்கொண்டார். இந்திராவின் இரு வழிச் செயற்பாடுகளுக்கு நிகராக மூன்றுவழிச் செயற்பாட்டினை ஜெயார் முன்னெடுத்தார்.

அவரது மூன்று வழித் திட்டங்களுமாவன,

1. தனது இராணுவ இயந்திரத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்வது.

2. தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்துவது.

3.தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் போராட்டத்தினைப் பயங்கரவாதப் போராட்டமாக சர்வதேசத்தின் முன்னால் காட்டி அழித்துவிடுவது, தமிழ் ஈழம் எனும் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினை, நிலத்தை அபகரிப்பதன் மூலம் சிதைப்பது.

1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த காலம் முதல் ஜெயாருக்கு இருந்த முதலாவது கரிசணை என்னவென்றால் தனக்கெதிராக இயங்குபவர்களை, அவர்கள் சிங்களவராகவோ தமிழர்களாகவோ இருந்தாலென்ன, அழிப்பது. தனது பிரதான எதிரியான சுதந்திரக் கட்சியை முற்றாகச் செயலிழக்கச் செய்து, தொழிற்சங்கங்களை காடையர்களைக் கொண்டு அடக்கி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அச்சுருத்தி அடிபணிய வைத்திருந்தார் அவர். ஆனால், இவர்கள் எல்லாரைக் காட்டிலும் தமிழர்கள் மேல் அவர் மேற்கொண்ட அடக்குமுறைகள் மிகக் கொடூரமானவையாக இருந்தன.

தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்டுவோம் என்கிற சிங்கள இனவாதிகளின் எண்ணக்கரு 1961 ஆம் ஆண்டு சிறிமாவோவின் காலத்திலேயே முதன்முதலாக கருக்கொண்டது. அக்காலத்தில் அரச செயலக‌ங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் செயற்பட்டை வடக்குக் கிழக்கில் முற்றாக முடக்கிப் போட்ட தமிழரின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தை அடக்க அவர் இராணுவ அணியொன்றினை அனுப்பி வைத்திருந்தார். ஆனால், சத்தியாக்கிரகப் போராட்டம் முழுமையாக அகிம்சை முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்தமையினால், அவர்களை அங்கிருது விரட்ட பலாத்காரத்தைப் பாவிக்க இராணுவ அணியின் அதிகாரி விரும்பவில்லை. ஆகவே, கொழும்பில் நடைபெற்ற முக்கிய மந்திரிசபைக் கூட்டத்திற்குச் சமூகமளிக்குமாறு அந்த இராணுவ அதிகாரியை சிறிமா பணித்தார். அக்கூட்டத்தில் அமைச்சரவையின் பலமான அமைச்சர் ஒருவரும் அவரது சகாக்களும் "தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்டும் நேரம் வந்திருக்கிறது" என்று முழக்கமிட்டார்கள். ஆகவே வேறு வழியின்றி, அரசாங்கம் பணித்தவாறே சமாதானமான முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டிருந்த தமிழர்கள் மீது இராணுவ அடக்குமுறை ஏவிவிடப்பட்டு, சத்தியாக்கிரகப் போராட்டம் பலவந்தமாகக் கலைக்கப்பட்டது.  அன்றிலிருந்து தமிழர்கள் சாத்வீக வழிகளில் உரிமைகேட்டுப் போராடிய போதெல்லாம் இராணுவ அடக்குமுறையினை ஏவிவிடுவதே வழமையாகக் கைக்கொள்ளப்படலாயிற்று.

Image52.gif

1961 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரக நிகழ்வில் பங்குகொள்ளும் செல்வநாயகம், தம்பையா ஏகாம்பரம் மற்றும் ராஜவரோதயம்

தமிழ்ப் போராளி அமைப்புக்களை இராணுவ ரீதியில் நசுக்கிவிட ஜெயவர்த்தன திடசங்கற்பம் பூண்டிருந்தார். தமிழரின் ஆயுதவழி விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்கு பலமான இராணுவ இயந்திரம் ஒன்றினைக் கட்டியமைக்கவேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. தனது இராணுவ உதவிகளுக்காக அவர் முதன்முறையாக வெளிநாடொன்றினைத் தொடர்பு கொண்டது ஜூலை இனக்கலவரம் ஆரம்பிப்பதற்கு ஏறக்குறைய மூன்று மாதங்கள் இருக்கும் தறுவாயில், அதாவது 1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதி. அன்று அவர் மேற்கொண்ட அறிவிப்பில் பிரித்தானியாவுடன் இலங்கை கொண்டிருக்கும் இணைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாடு ஒன்றிலிருந்தோ அல்லது உள்நாட்டிலிருந்தோ ஆபத்தொன்று உருவாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார்.

1947 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையினை அடிப்படையாக வைத்தே ஜெயவர்த்தன இந்த அறிவித்தலை மேற்கொண்டிருந்தார். இவ்வுடன்படிக்கையின்படி பிரித்தானியாவும் இலங்கையும் தமது நாடுகளுக்கெதிராக வெளிநாடொன்றில் இருந்தோ அல்லது உள்நாட்டிலோ உருவாகும் ஆபத்துக்களை எதிர்கொள்ள இராணுவ ரீதியில் ஒன்றுக்கொன்று உதவும் என்றும், பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தான் விடுத்த அறிவிப்பிற்கான பிரித்தானியாவின் பதில் எவ்வாறானதாக இருக்கும் என்பதை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் கண்டறிய லண்டனில் இருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரைப் பணித்திருந்தார் ஜெயார். தனக்குப் பரீட்சயமான செய்திநிருபர்கள் ஊடாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பதிலை அறிய உயர்ஸ்த்தானிகர் முற்பட்டார். ஆனால், 1947 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி "இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் சூழ்நிலைகளில் மட்டுமே உதவிட முடியும்"  என்று ஒப்பந்தத்தினை மேற்கோள் காட்டிய வெளிவிவகார அலுவலகம் ஜெயவர்த்தனவின் இராணுவ உதவி எனும் பேச்சினை உதாசீனம் செய்திருந்தது.

ஆனாலும்கூட, தனது இராணுவ உதவி கோரலினை ஜெயார் கைவிடவில்லை. ஜூலை இனக்கொலை நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்னர் இந்திரா காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு ஜெயாருக்கு வந்திருந்தது. அது தன்னை அச்சுருத்தும் ஒரு செயலாக ஜெயாரினால் பார்க்கப்பட்டது. ஆகவே மீண்டும் ஆடி 28 ஆம் திகதி இராணுவ உதவிக்கான அழைப்புக்களை அவர் மேற்கொண்டார். இந்திராவின் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் அவர் பிரித்தானியா, அமெரிக்கா, பாக்கிஸ்த்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகோரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டார். இந்த நாடுகளை மிகுந்த அவதானத்துடன் அவர் தெரிவுசெய்தார். ஆடி 28 ஆம் திகதி இரவு அவசர அவசரமாக உள்ளக அமைச்சரவையினைக் கூட்டிய ஜெயார் அமெரிக்காவும் பிரித்தானியாவும் நிச்சயமாக தமக்கு உதவும் என்று அவர்களிடத்தில் கூறினார். மேற்குலகிற்குச் சார்பான தனது வெளிநாட்டுக் கொள்கை இவ்விடயத்தில் நிச்சயம் கைகொடுக்கும் என்றும் அவர் கூறினார். நாம் அவர்களின் நண்பர்கள், ஆகவே அவர்கள் எமக்கு உதவவேண்டிய கடமை அவர்களுக்கிருக்கிறது என்று கூறினார். அப்போது நடந்துகொண்டிருந்த பனிப்போர் நிச்சயம் தமக்குச் சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தினால் மேற்குலகு இந்தியா மீது அதிருப்தி கொண்டிருக்கிறது என்று கூறிய ஜெயார், இந்தியாவின் எதிரிகளான சீனாவும் பாக்கிஸ்த்தனும் கூட தமக்கு உதவ முன்வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனாலும், ஜெயார் நினைத்த எளிமையான திட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. அதற்கான முழுக் காரணம் நாடுகள் நட்பின் அடிப்படையில் அல்லாமல் தமது சொந்த நலன்களிலேயே அதிகம் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பதுதான். ஜெயவர்த்தன இராணுவ உதவி கோரிய நாடுகளைத் தொடர்புகொண்ட இந்திரா, "நீங்கள் இதில் தலையிட வேண்டாம், விலத்தியே நில்லுங்கள்" என்று கூறியபோது அவையும் அவ்வாறே செய்தன. அவர்களிடம் பேசிய இந்திரா, "இலங்கை இராணுவ ரீதியில் உதிவி கோரினால், இப்பிராந்தியத்தின் வல்லரசு என்கிற ரீதியில் இந்தியாவிடமே முதலில் உதவி கோரமுடியும்" என்று  கூறினார். இதனை எந்த நிபந்தனையும் இல்லாமல் அந்த நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

President Reagan and Nancy Reagan with President Jayewardene and Elina Jayewardene.

இலங்கைக்கு வெளிப்படையான இராணுவ உதவிகளைச் செய்வது இந்தியாவை ஆத்திரமூட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அரசாங்கம் கருதியதால், அதனைச் செய்ய மறுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வட்டகைக்குள் இருந்த இந்தியாவை எப்படியாவது வெளியில்க் கொண்டுவரும் முயற்சிகளில் அமெரிக்க இறங்கியிருந்த வேளை, இந்தியாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதை அது தவிர்த்தே வந்தது. அதேபோல் பிரித்தானியாவும் ஜெயவர்த்தனவுக்கு உதவுவதை விரும்பவில்லை. ஆனால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை விற்க முன்வந்தன. பாக்கிஸ்த்தான் உடனடியாகவே கெரில்லாக்களை எதிர்கொள்ளும் இராணுவப் பயிற்சிகளை இலங்கை ராணுவத்திற்கு வழங்கத் தொடங்கியது. இந்தியாவின் சினத்தினை இந்த நிகழ்வு சம்பாதித்துக் கொண்டது.

Sri Lankan army seeks officers' training in Pakistan

அமெரிக்காவும் பிரித்தானியாவும் தனக்கு இராணுவ உதவிகளை வழங்க மறுத்தமையினால் ஜெயார் துவண்டுபோய்விடவில்லை. தனது வெளிவிவகார அமைச்சரான ஹமீதினை அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் அனுப்பிய ஜெயவர்த்தன அந்நாடுகள் தனக்குத் தேவையான உதவியினை வழங்க மறுத்தமைக்காக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸுடன் ஹமீது பேசும்போது இலங்கையை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்தார். மேலும், நேரடியாக இல்லாமல் பாக்கிஸ்த்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஊடாக அமெரிக்கா இலங்கைக்கு உதவும் என்று கூறினார். மேலும், இஸ்ரேலிடமிருந்து இலங்கைக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தருவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

United-States-Secretary-State-George-Schultz-1982.jpg

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸு

ஹமீதிற்கு மேலதிகமாக தனது சகோதரரையும் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, சீனா, யப்பான் மற்றும் அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிய ஜெயவர்த்தன, தனது அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இந்த நாடுகள் அனைத்துமே போராளிகளின் தாக்குதல்களை உடனடியாகவே பயங்கரவாதம் என்று சித்தரித்து விமர்சித்ததோடு தமிழ் ஈழக் கோரிக்கையினையும் முற்றாக நிராகரித்திருந்தன. ஆனால்  தமிழ்ப் போராளிகளுக்கு உதவிவரும் இந்தியாவை விமர்சிப்பதை அவை தவிர்த்திருந்தன.  சீனா மட்டும், "ஒரு பெரிய நாடு தனக்கருகில் இருக்கும் சிறிய நாட்டை அச்சுருத்த முடியாது" என்று விமர்சனம் செய்திருந்தது.

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழின் சிறப்பு எது . .......!  😁
    • ஆர்.ஜே. பாலாஜி நடித்த  சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும்  இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ  என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
    • சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின. சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார். “இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது.     https://oruvan.com/russia-to-withdraw-its-troops-from-syria/
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎂🎊
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.