Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் நடைபெற்றபோது இதே உன்னிக்கிரிஷ்ணன் இந்திய தரப்பால் முன்னெடுக்கப்பட்ட இரகசிய காய்நகர்த்தல்கள் குறித்த விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்ததாகவும், இதனாலேயே ஒப்பந்தத்தில் தான் எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் இலங்கைக்கு அதிக விட்டுக்கொடுப்பினை இந்தியா செய்யவேண்டியதாயிற்று என்றும் ரோ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்திய உபகண்டத்தின் சரித்திரத்தையே மாற்றிப்போட்ட இந்த உளவுச் சதி வெறும் பெண்ணாசையினால் ஏற்பட்டதென்று அவர்கள் கூறுகிறார்கள். பான் அம் விமானச் சேவையின் விமானப் பணிப்பெண் ஒருவரை வைத்தே உன்னிகிருஷ்ணனை சி.ஐ.ஏ மடக்கியிருக்கிறது. அப்பெண்ணும், உன்னியும் சல்லாபிக்கும் புகைப்படங்களை வைத்தே அவர் மிரட்டப்பட்டு அவரிடமிருந்த தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள், போராளிகளின் எண்ணிக்கை, முகாம்களின் வரைபடங்கள், பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வகைகள் ஆகிய விடயங்களும், இலங்கை தொடர்பான இந்தியாவின் இரகசிய காய்நகர்த்தல்கள் தொடர்பான விடயங்களையும் அமெரிக்கா கண்டறிந்து இலங்கைக்குச் சொல்லியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டின் தமிழ்ப் போராளிகளின் அனைத்துப் பயிற்சிகளுக்கும் இந்த உன்னிகிருஷ்ணனே பொறுப்பாக இருந்திருக்கிறார் என்பது.  

ஆக, ஒரு இனத்தின் வாழ்தலுக்கான போராட்டத்தை ஒரு தனிமனிதனின் பாலியல் உணர்வு எவ்வளவு தூரத்திற்கு பாதித்திருக்கிறது என்பதற்கு உன்னியும் ஈழத்தமிழர்களும் சாட்சி. 
 
இதுகுறித்து இன்னொரு திரியே திறக்கலாம். நேரம் போதாமையினால் விட்டுவிடுகிறேன். 

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள், அந்த பதிவும் இன்னுமொரு யாழ்கள முக்கிய பதிவாக வருவதற்கு வாய்ப்புள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 569
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள், அந்த பதிவும் இன்னுமொரு யாழ்கள முக்கிய பதிவாக வருவதற்கு வாய்ப்புள்ளது.

நிசசயமாக  இந்த பதிவு ஒரு முக்கியமான பதிவாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகவழிப் போராட்டத்திலிருந்து விலகி ஆயுத வழி விடுதலைக்கு ஆதரவளிக்கத் தயாரான தமிழ் மக்கள் 

தமிழீழ விடுதலைப் போரின் சரித்திரத்தில் 1984 ஆம் ஆண்டு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த வருடத்திலேயே ஜனநாயக வழி பேச்சுவார்த்தைகள் மீதான தமது நம்பிக்கையினை தமிழ் மக்கள் முற்றாகக் கைவிட்டிருந்தனர். அந்த வருடத்திலேயே ஜனநாயகவழி மிதவாத அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு ஆக்ரோஷமான, ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்திருந்தனர்.

தமிழர்களின் இந்த மாற்றம் சிங்களத் தலைமைக்கும் ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தது. குறிப்பாக ஜெயவர்த்தனவுக்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் இது பங்களிப்பினை வழங்கியிருந்தது. தமிழ் மக்கள் மீது தாம் தொடர்ச்சியாக நடத்திவந்த அடக்குமுறைகளுக்கூடாகவும், வன்முறைகள் மூலமாகவும் தமிழ் மக்களை வன்முறை நோக்கித் தள்ளுவதில் சிங்களத் தலைமை வெற்றி கண்டிருந்தது. அத்துடன், ஜனநாயக வழியில் அதுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியலையும் அது குழிதோண்டிப் புதைத்தது. தமிழ் மக்களின் இந்த மனமாற்றத்திற்கு அரச, த‌னியார் ஊடகங்களும் பெரும்பங்காற்றியிருந்தன. சிங்கள அரசுத் தலைமையின் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும், கொம்பு சீவிவிடும் கைங்கரியத்தை அவை கச்சிதமாகச் செய்துவந்தன. அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு, நடந்துவரும் இந்த அக்கிரமத்தைக் கவலையுடனும், மெளனமாகவும் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தேன். 

செயற்றினற்ற , ஜனநாயக வழி மிதவாதத் தலைவர்களின் கைகளிலிருந்து தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை, செயற்றிறன் மிக்க, ஆக்ரோஷமான ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த மாற்றத்தை நான் என்னால் உணரவும், கண்டுகொள்ளவும் முடிந்தது. "விலகி நில்லுங்கள், உங்களால் நாம் பட்ட அடிகள் போதும், எங்களைத் திருப்பியடிக்க விடுங்கள்" என்று இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை நோக்கி ஆத்திரத்துடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன்.

சித்திரையில் புலிகளால் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலும், அதற்குப் பழிதீர்க்க இராணுவம் நடத்திய பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்களின் இந்தக் கூக்குரலுக்கு மேலும் வலுச் சேர்த்தன. வீதிகளில் அராஜகத்தில் ஈடுபட்ட இராணுவத்தையும், பொலீஸாரையும் மீண்டும் அவர்களது முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கும் திருப்பியனுப்பி அடக்கிவிடும் பலம் தமக்கு இருப்பதை பொதுமக்களும், இளைஞர்களும் முதன்முதலாக உணர்ந்துகொண்டதும் அப்போதுதான். இக்கணத்திலிருந்து சுமார் ஒருவருட காலத்திற்கு அவர்களால் இதனை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள  முடிந்திருந்தது.

தெற்கின் ஊடகங்களும் தமிழ் மக்களும்

கொழும்பு ஊடகங்கள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் இக்காலகட்டத்திலேயே அதீதமாக வளர்ந்துவந்தது. அப்பாவிகளின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், கொல்லப்பட்டவர்களைப் "பயங்கரவாதிகள்" என்கிற பெயரில் அழைத்து, தமது இராணுவத்தினரின் வீரச்செயல்கள் என்று அவை தலைப்பிட்டு எழுதியபோது தமிழ்மக்கள் கொதித்துப் போயினர். தமிழ் மக்களின் மீதான அரச இராணுவத்தின் படுகொலைகளைத் தாம் நியாயப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அதேபொதுமக்களை உறுதியும், தீவிர நிலைப்பாடும் கொண்ட ஆயுதம் ஏந்திய, இலட்சிய வெறிகொண்ட இளைஞர்களை நோக்கித் தள்ளிவிடுகிறோம் என்பதை இந்த ஊடகங்கள் உணரத் தவறிவிட்டிருந்தன.

என்னுடன் கூடவே பணிபுரிந்தவர்களும், ஏனைய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் சித்திரையில் இராணுவம் நடத்திய அட்டூழியங்களை நியாயப்படுத்தியும், பாராட்டியும் எழுதி, அழிவுப்பாதை நோக்கி நாட்டை மேலும் மேலும் தள்ளியபோது நான் அடைந்த வேதனைக்கும் விரக்திக்கும் அளவே இருக்கவில்லை.

1984 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் திகதி இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய அக்கிரமங்களையும், பதிலடியாக தாக்கப்பட்ட நாகவிகாரை பற்றியும் அவர்கள் எழுதிய செய்திவிபரிப்புக்களை மீண்டும் அவர்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலும், யாழ் அடைக்கலமாதா ஆலயம் மீது அவர்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதலும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்திருந்தது, குறிப்பாக யாழ்ப்பாண கரையோரம் எங்கிலும் வாழ்ந்துவந்த கத்தோலிக்கத் தமிழர்கள் இச்சம்பவங்களால் பெரிதும் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆத்திரமேலீட்டால் உந்தப்பட்ட பொதுமக்கள் திரண்டுசென்று யாழ் நாகவிகாரையை அடித்து நொறுக்கினார்கள். புலிகள் இந்தச் சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பாவித்தார்கள், ஆனால் இச்சூழ்நிலை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தநாட்களில் கிட்டு அங்கே இருந்தார். கொதிப்படைந்திருந்த மக்களுக்கு கைய்யெறிகுண்டுகளையும், பெற்றொல்க் குண்டுகளையும் அவரே வழங்கினார்.

சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன்பின்னராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் அட்டூழியங்கள், பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். சரியான விசாரணைகளின்பின்னரே நான் அவற்றினை இங்கே பதிந்திருந்தேன். இரு சுயகெளரவம் மிக்க இனங்கள் இனமுரண்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன என்கிற உண்மையினை சிங்களத் தலைவர்களும், அவர்களை ஆதரித்த ஊடகங்களும் பார்க்கத் தவறிவிட்டன. நீங்கள் ஒரு இனத்தை மகிழ்விக்க மற்றைய இனத்தை துன்புறுத்த முடியாது. நீங்கள் அப்படிச் செயற்படும்போது, பாதிக்கப்படும் இனம் நிச்சயம் ஆத்திரம் கொள்ளும். ஆத்திரம் கொள்ளும் அந்த இனம் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும். இலங்கையின் நலன்கள் இந்த இரு இனங்களினதும் நலன்களிலும் தங்கியிருக்கிறது. இவ்வினங்களின் மதங்கள், மொழிகள், தனித்தன்மை வாய்ந்த அவர்களின் அடையாளங்கள் என்று அனைத்தும் காக்கப்படும்போது மட்டுமே மொத்த நாட்டினதும் நலன்கள் காக்கப்படும். 

தமக்கான தனிநாடு ஒன்று தேவையென்று உணர்ந்த தமிழர்களும், உதவிய ஜெயவர்த்தனவும்

தமிழ்மக்கள் தமக்கென்று தனியான நாடொன்று வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு 1983 ஆம் ஆண்டில் வர ஜெயவர்த்தனவே காரணமாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். 1983 ஆடியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியிலான வன்முறைகள் அவர்கள் தம்மைத் தனியான தேசம் என்று உணர வழிசமைத்தது. 1984 இல் நடைபெற்ற அவர்கள் மீதான தொடர்ச்சியான இராணுவ வன்முறைகள் இந்த உணர்வை அவர்கள் மனதில் உறுதிப்படுத்தியது. சித்திரைப் படுகொலைகளின் பின்னரான நாட்களில் நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். என்னுடன் யாழ்ப்பாணத்தில் பேசிய இளைய போராளியொருவர்  இப்படிக் கேட்டார், "தாக்குதல்களில் இருந்து தமதுயிரைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் வேண்டுமென்றே  தாக்கியது. அப்படி ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் சிங்களவர்கள் என்றால் ராணுவம் அப்படி நடந்துகொண்டிருக்குமா? அப்படியானால் தமிழர்களைத் தமது எதிரிகள் என்றல்லவா இந்த இராணுவம் பார்க்கிறது? அப்படியானால் தமிழர்கள் தனியான ஒரு தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றல்லவா அர்த்தம்?" என்னிடம் பதில் இருக்கவில்லை. 

1984 ஆம் ஆண்டு, சித்திரை மாத நடுப்பகுதியளவில் தமிழர்கள் தீர்க்கமான நிலைக்கு வந்திருந்தனர். எனது ஊரான அரியாலையில் வருடப் பிறப்பிற்கான விடுமுறையில் நின்ற நாட்களில் என்னிடம் பேசிய சில இளைஞர்கள், "ஜெயவர்த்தன தனது இராணுவத்தைக் கட்டியெழுப்புகிறார்.அவர் ஒருநாளுமே தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப்போவதில்லை. நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்கள். அவர்களின் தொனியில் இருந்த உறுதிப்பாட்டை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

இந்த அத்தியாயமும், இனிவருபவையும் இளைஞர்களின் உறுதிப்பாட்டின் விளைவுகள் குறித்து தொடர்ந்து விபரிக்கும்.

ஆயுத அமைப்புக்களும் அவர்களின் செயற்பாடுகளும்

1984 ஆம் ஆண்டுப்பகுதியில் ஐந்து பிரதான ஆயுத அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈரோஸ் ஆகியனவே அந்த ஐந்தும் ஆகும். பிரபாகரன், சிறிசபாரட்ணம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் மற்றும் பாலகுமார் ஆகியோர் இந்த அமைப்புக்களின் தலைவர்களாக இருந்தனர். இவற்றுள் புலிகளே வீரியம் கொண்டு இயங்கினார்கள். அவர்களையடுத்து டெலொவும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் செயற்பட்டு வந்தன. புளொட் அமைப்பும் ஈரோஸும் ஏறக்குறைய செயலற்றுக் காணப்பட்டன.

அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கென்று தனித்தனியான கொள்கைகள், அணுகுமுறை, திட்டமிடல் ஆகியவனவற்றைக் கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் ஒரு அதிதீவிர தேசியவாதியாகத் திகழ்ந்தார். திறம்படப் பயிற்றப்பட்ட, இலட்சிய உறுதியும், கட்டுப்பாடும் கொண்ட படையணியொன்றினை அவர் கட்டிவந்தார். போரிடும் திறன், தனிமனிதவொழுக்கம், ஆயுதக் கைப்பற்றல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து  தனது போராளிகளை அவர் வளர்த்தெடுத்தார். ஆயுதக் கைப்பற்றலில் அவருக்கென்று கொள்கையொன்று இருந்தது. "எந்தளவிற்கு இராணுவத்திடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடியுமோ, அந்த அளவிற்குக் கைப்பற்றுங்கள். இந்திய இராணுவாத்திடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள். உங்கள் எதிரியிடமிருக்கும் ஆயுதங்களை விடவும் சிறப்பான ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ளுங்கள்" என்பதே அது. இராணுவத்தினருடனும், ஏனைய போராளி அமைப்புக்களுடனும் ஒப்பிடும்போது நவீன ஆயுதப் பாவனையில் புலிகள் ஒரு படி முன்னால் நின்றிருந்தனர். 

போராட்டத்தை இயங்குநிலைக்குள் வைத்திருப்பதிலும் பிரபாகரன் தனக்கென்று ஒரு கொள்கையினை வைத்திருந்தார். நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதன்படி அவரது கொள்கைகள் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டவனையாகக் காணப்பட்டன.  "உங்களை இயங்குநிலைக்குள் வைத்திருக்க இராணுவம் ஏற்படுத்தித்தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள். இராணுவத்தைத் தொடர்ச்சியாகச் சீண்டிக்கொண்டிருங்கள். அவர்கள் பொதுமக்களைத் தாக்கும்போது அவர்கள் தமது பாதுகாப்பிற்காக  எம்பின்னால் அணிதிரள்வார்கள்" என்று அடிக்கடி அவர் தனது போராளிகளுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். இந்தக் கொள்கையினையே வெற்றிகரமான தளபதிகள் கைக்கொண்டுவந்ததாக தனது சகாக்களுடனான கலந்துரையாடல்களின்போது பிரபாகரன் கூறிவந்திருக்கிறார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இதேவகையான வழிமுறையினைக் கைக்கொண்டதாகவும், அவ்வியக்கத்தின் இயங்குநிலைக்கான சந்தர்ப்பங்களை இஸ்ரேலிய இராணுவத்தினரே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

வெலிக்கடைச் சிறைப்படுகொலைகளின்போது தமது தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரை இழந்திருந்த டெலோ அமைப்பினர் தமக்கென்று கொள்கையொன்றினை வைத்திருக்கவில்லை. இந்தியாவிடமிருந்தும், ரோ அமைப்பினரிடமிருந்துமே சிறீசபாரட்ணம் கட்டளைகளைப் பெற்றுவந்தார்.

பத்மநாபா மாக்சியவாதியாக தன்னை காட்டிக்கொண்டார். அதனால் சமூகத்தின் அடிப்படை மட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக மக்கள் எழுச்சிப் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தினை மாற்றவேண்டும் என்று அவர் பேசிவந்தார். இராணுவ ரீதியில் போராட்டத்தை இயக்குவதை அவர் எதிர்த்தார்.  மக்களை இராணுவ ரீதியிலான போராட்ட வழிமுறை பாதிக்கும் என்று அவர் வாதாடினார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அறியப்பட்டவை அனைத்துமே அவ்வமைப்பிற்குள் இயங்கிவந்த சிறிய இராணுவ அமைப்பினால் நடத்தப்பட்டவை மட்டுமே. ஆனால், தமது அமைப்பிற்கென்று பலமான ஆயுத வளத்தை அவர்கள் அப்போது கொண்டிருந்தனர். 

உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பு அதிகளவான உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும்கூட அவரது அமைப்பு ஏறக்குறைய செயலற்ற நிலையிலேயே இருந்துவந்தது.தேசிய புரட்சிபற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். அவரைப் பொறுத்தவரை, தமிழ் ஈழ விடுதலை என்பது அந்த தேசிய போராட்டத்தின் ஒரு அங்கம் என்று கருதப்பட்டது. 

ஈரோஸ் அமைப்போ எப்போதும்போல் தமக்குள் ஒருவிடயம் தொடர்பாக முடிவெடுக்கும் திராணியற்று, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் என்று தமது காலத்தைக் கடத்தி வந்தது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பித் தாக்குதலின் ஆரம்பம்

தம்மீதான தாக்குதல்களுக்குத் தமிழர்கள் பதிலளிக்க ஆரம்பித்தது 1984 ஆம் ஆண்டின் வைகாசியில் நடந்தது. பொலீஸ் புலநாய்வாளர்கள் சிலரைக் கொல்வதுடன் இது ஆரம்பமாகியது. வைகாசி 2 ஆம் திகதி பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கருகில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் புலநாய்வாளர் சார்ஜண்ட் நவரட்ணம் இரு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி அவர் புலநாய்வு செய்துவந்தார். இரு நாட்களுக்குப் பின்னர் பொலீஸ் கொன்ஸ்டபிள் சுப்பிரமணியம் சுட்டுக் கொல்லப்பட்டார். சீலனின் மறைவிடம் குறித்த தகவல்களை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இவரே. பிரபாகரனின் துணைத் தளபதியாக சீலன் செயற்பட்டுவந்தார். இராணுவத்தினரிடம் அகப்படப் போகும் நிலையில் தன்னைச் சுடும்படி தனது தோழர்களிடம் வற்புறுத்தி மரணமுற்றிருந்தார். சீலனின் துணிவை பிரபாகரன் மெச்சினார், அவரது நினைவாக தனது மூத்த மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிட்டார். 

"திருப்பித் தாக்கும்" நடவடிக்கைகள் ஆனியில் இன்னும் வேகம் பெற்றன. இராணுவம் மற்றும் பொலீஸார் மீதான தாக்குதல்கள், சமூக விரோதிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள், உளவாளிகளை களையெடுத்தல், ஆயுதங்களையும் பணத்தையும் கைப்பற்றுதல் ஆகிய வடிவங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இந்த மாதத்திலேயே இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு, லலித் அதுலத் முதலி மீது காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டடத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் முயற்சி என்பன இடம்பெற்றிருந்தன. இந்த சம்பவங்களை முக்கியமானவையாகக் கருதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சின் செயலாளரான டக்கிளஸ் லியனகேயயை உடனடியாக விசேட பத்திரிக்கை மாநாடொன்றினைக் கூட்டுமாறு கோரியது.

இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையில் இயங்கிவந்த இலங்கை வங்கிக் கிளையின் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. வைகாசி 31 ஆம் திகதி டொயோடா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய ஆயுதம் தரித்த நான்கு இளைஞர்கள் சீமேந்துப் பைகளைக் கொள்வனவு செய்யப்போவதாக பாசாங்குசெய்துகொண்டே காசாளரின் அறைக்குள் நுழைந்தனர். காசோலையொன்றினைக் காசாக்குவது போல அவர் அருகில் சென்று அவரது நெஞ்சுப் பகுதியில், ஆயுதத்தை வைத்து மிரட்டி 2 லட்சம் ரூபாய்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனம் அவ்விடத்திற்கருகில் அநாதரவாகக் கைவிடப்பட்டுக் கிடந்தது.

அதே நாள் இரவு, உடுவிலைச் சேர்ந்த ராமலிங்கம் பாலசிங்கம் என்பவர் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது உடலின் அருகில் கிடந்த காகிதத் துண்டொன்றில் "இவர் ஒரு சமூக விரோதி" என்று எழுதப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்த‌  செய்தியொன்றினை வெளியிட்ட டெயிலி நியூஸ் பத்திரிக்கை 4 இலிருந்து 5 வாரங்களில் நிகழ்த்தப்பட்ட 30 ஆவது மின்கம்பத் தண்டனை என்று குறிப்பிட்டிருந்தது.

மறுநாளான ஆனி 1 ஆம் திகதி கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சென்ற இரு ஆயுதம் தரித்த இளைஞர்கள் அங்கிருந்த 75,000 ரூபாய்கள் பணம் மற்றும் பருவகாலச் சீட்டுக்களை எடுத்துச் சென்றனர்.

ஆனி 2 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குச் சென்ற ஆயுததாரிகள் அங்கிருந்த 25,000 ரூபாய்கள் பணத்தினை எடுத்துச் சென்றனர்.

இரண்டாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பு 

மற்றையவர்கள் இவ்வாறான சிறிய கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதனூடாக ஜெயவர்த்தனவுக்கும் அவரது இராணுவத்திற்கும் தலையிடியினை ஏற்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை தனது நன்றிக்கடன் ஒன்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடலில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் அவர் வாழ்ந்துவந்த தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புச் சிறைச்சாலையினை இரண்டாவது முறை உடைத்து, அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார். குறிப்பாக நிர்மலா நித்தியானந்தனை மீட்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. 

1983 ஆம் ஆண்டு, புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சிறையுடைப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பெண்கைதிகளின் கட்டடத்தில் தடுத்து வைக்கப்படிருந்தார்.  தந்தை செல்வாவின் சாரதியான வாமதேவனிடம் நிர்மலாவை பத்திரமாக வெளியே அழைத்துவரும் பணி அன்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வாமதேவனோ அவசரத்தில் அதனை மறந்துவிட்டு, தனியாகத் தப்பி வந்திருந்தார். நிர்மலாவின் கணவரான நித்தியானந்தன் முதலாவது சிறையுடைப்பில் தப்பி வெளியேறி, சென்னைக்கு வந்து புலிகளுடன் இணைந்திருந்தார். விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையான "விடுதலைப் புலிகள்" இற்கு ஆசிரியராக நித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாண பல்க்லைக்கழகத்தில் பொருளியற்றுரை விரிவுரையாளராக இணைந்துகொள்வதற்கு முன்னர் அவர் தினகரன் தமிழ்ப் பத்திரிக்கையின் நிருபராகச் செயற்பட்டு வந்தார்.

நித்தியானந்தன் தம்பதிகளை மீள ஒன்றுசேர்த்துவிட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். நிர்மலாவுக்கு அவர் மிகவும் கடமைப்பட்டிருந்தார். பயங்கரவாதிகளுக்கு உதவியது, அடைக்கலம் கொடுத்தது, ஊக்கம் அளித்தது, தகவல்களை மறைத்தது உட்பட பல குற்றங்களுக்காக நிர்மலா நித்தியானந்தன் 1982 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக இராணுவ அதிகாரி சரத் முனசிங்கவினால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டுப் படுகாயமடைந்தவரும், பிரபாகரனின் நெருங்கிய தோழருமான சீலனுக்கு தனது இல்லத்தில் வைத்து சிகிச்சையளித்தமையே அவர் செய்த குற்றமாகும். ஆகவே, இதற்கான பிரதியுபகாரமாக எப்படுபட்டவாது நிர்மலாவை சிறையிலிருந்து மீட்பதென்று பிரபாகரன் முடிவெடுத்தார்.

ஆனியின் மூன்றாவது வாரத்திற்குள் நிர்மலாவை மீட்கவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருந்தது. நிர்மலாவுக்கெதிரான வழக்கு ஆனி மாத்தத்தின் மூன்றாம் வாரத்தில் கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை கொழும்பிற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஆகவே, முதலாவது சிறையுடைப்பில் செயற்பட்ட பரமதேவை இம்முறையும் தன்னுடன் செயற்படுமாறு பிரபாகரன் பணித்தார். முதலாவது சிறையுடப்பு நிகழ்ந்தபோது பரமதேவா புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்திருக்கவில்லை. ஆனாலும், முதலாவது சிறையுடைப்பில் தப்பிச் சென்ற புலிகளுக்கு ஆதரவானவர்களான நித்தியானந்தன், மதகுரு சிங்கராயர், மதகுரு சின்னராசா, ஜயகுலராஜா மற்றும் ஜயதிலகராஜா ஆகிய அணியினருடன் இவரும் ஒன்றாகவே தப்பிச் சென்றிருந்தார். சென்னைக்குச் சென்றவுடன் அவரும் புலிகளுடன் இணைந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயுதவழிப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ராமலிங்கம் பரமதேவாவும் ஒருவர். 1975 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் நடைபெறவிருந்த குடியரசு தினத்திற்கான கொடியேற்றலினைப் பகிஷ்கரித்து, அந்நாளினை  கரிநாளாகவும், இரங்கல் நாளாகவும் கடைப்பிடிக்குமாறு தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி கோரியபோது பரமதேவா ஒரு மாணவனாக இருந்தார். ஆகவே, தான் கல்விகற்ற பாடசாலையில் கொடியேற்றல் நிகழ்வைப் பகிஷ்கரிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். இதற்காக பாடசாலையிலிருந்து அவர் நிர்வாகத்தினரால் விலக்கப்பட்டார். 

வன்முறையற்ற, ஜனநாயகவழிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட எத்தனித்த பரமதேவாவை அதிகாரம் வெளியே தள்ளியபோது, அவர் வன்முறையுடன் கூடிய பகிஷ்கரிப்பினைச் செய்யத் திட்டமிட்டார். இருவருடங்களுக்குப் பின்னர், 1977 ஆம் ஆண்டு அவர் குண்டுத் தாக்குதல் ஒன்றினை முன்னின்று நடத்தினார். இதனையடுத்து அவரை பொலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். இதனால் தலைமறைவான பரமதேவா மட்டக்களப்பின் முதலாவது ஆயுத அமைப்பான தமிழீழ விடுதலை நாகங்கள் என்றும் பின்னாட்களில் நாகங்கள் என்றும் அழைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்துகொண்டார்கள். இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டுமே இயங்கியது.

நாகங்கள், குண்டெறிதல், கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டு பரமதேவாவும் அவரது தோழர்களும் செங்கலடியில் அமைந்திருந்த மக்கள் வங்கிக் கிளையினைக் கொள்ளையிட்டார்கள். ஆனால், அவர்களைத் துரத்திச் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பரமதேவாவைப் பிடித்துக் கொண்டார். இருவரும் பொதுவீதியில் கட்டிப் புரண்டனர். இரண்டாவது பொலீஸ்காரர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். குண்டுகள் அவரது வலதுகரத்தைத் துளைத்துச் சென்றன. கைதுசெய்யப்பட்ட பரமதேவா 1981 ஆம் ஆண்டு, எட்டு ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறைப்படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய பரமதேவா மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தே அவர் தப்பிச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நிர்மலாவை சிறையிலிருந்து மீட்டுவரும் பிரபாகரனின் திட்டத்திற்கு பரமதேவா பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி பரமதேவாவும் அவரது சகாக்களும் இரு வாகனங்களில் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்றனர். அவர்களுள் இருவர் சிறைக்காவலர்கள் அணியும் சீருடையில் இருந்தனர். இன்னுமொருவர் கைதிகள் அணியும் ஆடையினை அணிந்திருந்தார். மீதிப்பேர் இராணுவச் சீருடையில் இருந்தனர். 

மாலை 7:15 மணியளவில் அவர்கள் சிறைச்சாலையினை அடைந்தார்கள். சிறைச்சாலையின் வெளிப்புற வாயிலில் காவலாளிகளின் சீருடையில் இருந்தவர்கள் தட்டினர். கொழும்பிலிருந்து கைதியொருவரைத் தாம் கொண்டுவந்திருப்பதாகவும், அவரை உள்வாங்கிக்கொள்வதற்காக கதவினைத் திறக்குமாறும் கோரினர். இதனையடுத்து உள்ளிருந்த காவலாளிகள் கதவினைத் திறக்க, சீருடையில் இருந்த புலிகளும், கைதிபோன்று காட்சியளித்த உறுப்பினரும் உள்ளே நுழைந்தனர்.

 நடப்பதுபற்றிச் சந்தேகம் கொண்ட சிறைக் காவலாளி ஒருவர் உடனேயே வாயிற்கதவினைப் பூட்டினார். ஆனால், புலிகள் உள்ளேயிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டனர். சிறையறைகளின் திறப்புக்களை வைத்திருக்கும் காவலாளியைப் புலிகள் தேடியபோது, அவர் ஓடி ஒளித்துக்கொண்டார். ஆகவே உள்ளிருந்த இரண்டாவது கதவினை உடைத்துக்கொண்டு பெண்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பகுதிநோக்கி புலிகள் ஓடிச் சென்றனர். இவர்களுக்காகக் காத்திருந்த நிர்மலாவும், இவர்கள் ஓடிவருவதைக் கண்டதும், "நான் இங்கிருக்கிறேன்" என்று கூச்சலிட்டார். அவரது சிறைக்கதவினை உடைத்த புலிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அரசாங்கம் அதிர்ந்துபோனது. ஆறு மாதங்களில் ஒரே சிறைச்சாலை இருமுறை போராளிகளால் உடைக்கப்பட்டிருந்தது.

மறுநாள் மாலை, 1984 ஆம் ஆண்டு ஆனி 11 ஆம் திகதி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டக்கிளஸ் லியனகே பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டினார். தப்பிச் சென்றவர்களை மீளக் கைதுசெய்வதற்காக முப்படைகளும் இணைந்த பாரிய தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் தரை மற்றும் கடல்வழி மூலம் இராணுவத்தினரும் கடற்படையினரும் சல்லடை போட்டுத் தேடிவருவதாகவும் கூறினார். ஆனால் அவர்களின் தேடுதல்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இரு வெளியக இயந்திரங்கள் பூட்டப்பட்ட படகொன்று அதிவிரைவாக நிர்மலாவை தமிழ்நாட்டிற்குக் காவிச் சென்றது. தமது முதலாவது பத்திரிக்கையளர் நிகழ்வில் புலிகள் தாம் பாதுகாப்பாக விடுவித்துக் கொண்டுவந்த நிர்மலாவை பத்திரிக்கையாளர்களுக்குச் சென்னையில் காண்பித்தனர். தான் தப்பிவந்த விபரங்களை பத்திரிக்கையாளர்களிடம் விபரித்த நிர்மலா, திகில் நிறைந்த கடல்வழிப் பயணம் குறித்தும் பேசத் தவறவில்லை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


புத்திஜீவிகளும் புலிகள் இயக்கமும்

நிர்மலா தன்னுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்று பிரபாகரன் கூறியபோது அடேல் பாலசிங்கம் மகிழ்ச்சியடைந்தார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதிய அடேல், ஆங்கிலம் பேசத் தெரிந்த, பெண்ணியம் சார்ந்த அறிவுஜீவி ஒருவர் தன்னுடன் பணிபுரியப்போவதாக அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என்று எழுதுகிறார். நிர்மலாவை புலிகளின் பெண்போராளிகளின் அணிக்குத் தலைவராக நியமிக்கலாமே என்று அடேல் பிரபாகரனிடம் வினவியிருக்கிறார். ஆனால், அடேலின் ஆலோசனையினை பிரபாகரன் ஏற்கவில்லை. நிர்மலாவைப் பொறுத்தவரை பெண்விடுதலை என்பது மேற்கத்தைய சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழீழப் பெண்களின் விடுதலை தொடர்பான தனித்தன்மையினை நிர்மலாவின் கொள்கைகள் எடுத்தியம்பவில்லை என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். தமிழீழப் பெண்களின் விடுதலை எனும் கருதுகோள் மேற்கத்தைய பாணியிலும் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். தமிழீழப் பெண்கள் தம்மை சமூகத்தின் முக்கிய பாத்திரமாக அடையாளப்படுத்தி, அதனை தம்முள் உணர்ந்துகொள்ளும் விதமாக தமிழீழப் பெண்களின் விடுதலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தனது புத்தகத்தில் தொடர்ந்து எழுதும் அடேல் பிரபாகரன் கூறியது சரியானது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக எழுதுகிறார். "நிர்மலாவின் அதிதீவிர பெண்விடுதலைக் கொள்கைகளை எம்முடன் இருந்த பெண்போராளிகள் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வந்திருந்த பெண்களுக்கும் நிர்மலா அமைத்துக்கொள்ள முயன்ற பெண்விடுதலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதை அறிந்துகொண்டேன். அப்பெண்களைப் பொறுத்தவரை நிர்மலாவின் பெண்விடுதலை தொடர்பான புரிதலோ அல்லது அதற்கான அவசியமோ இருந்ததாக நான் கருதவில்லை" என்று அடேல் எழுதுகிறார்.

 அடேலின் வேண்டுகோலினை பிரபாகரன் நிராகரித்தமைக்கு இன்னொரு காரணமும்   இருக்கிறது. பிரபாகரனைப் பொறுத்தவரை அறிவுஜீவிகள் ஆயுதப் போராட்டத்தின் அங்கமாக தம்மை இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என்று நம்பினார். ஏனென்றால், அவர்கள் தம்மைப் பற்றியே மட்டும் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தமக்குத் தெரியும் என்கிற மனோநிலையில் வாழ்பவர்கள். தனித்துச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர்களால் முடியாத காரியம். விவாதிப்பதிலும், தலைமைக்கெதிராகப் புரட்சி செய்வதிலும் காலத்தைச் செலவிடுபவர்கள்.  தமது கருத்துக்களால் தம்மைச் சுற்றியிருப்போர் தமது பணிகளைப் புரிய இடைஞ்சலாக இருப்பவர்கள். இப்படியானவர்கள் அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கலாமேயன்றி, ஒருபோது ஆயுதப் போராட்ட அமைப்பிற்குள் நேரடியாக பங்களிப்புச் செய்ய முடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார்.

புத்திஜீவிகளும், இடைநடுவில் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் போரிடும் அணிகளுக்குள் இணைத்துக்கொள்ளப்படமுடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். இராணுவ அணிகளுக்கு வெளியிலேயே அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவேதான் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அவர் எழுதும் ஆக்கங்களை பேபி சுப்பிரமணியத்திடம் காண்பித்து அவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார்.  இதனை ஏற்றுக்கொள்ளாத நித்தியானந்தன் தனது மனைவியான நிர்மலாவையும் கூட்டிக்கொண்டு 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். கிராமப்புறங்களில் இருந்து போராட வந்திருந்த பெண்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்று நிர்மலா சொல்லியிருந்தார். இப்பெண்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார்.

தனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்த பிரபாகரன் ஈரோஸ் அமைப்பினைக் கலைத்துவிட்டு அதன் தலைவர் பாலகுமாரும்,உதவித்தலைவர் பரா எனப்படும் பரராஜசிங்கமும் புலிகள் இயக்கத்திடம் வந்தபோது அவர்களை இராணுவ அணிகளுக்குள் உள்வாங்கவில்லை. அவர்களுக்கு பொது நிர்வாகச் சேவைகளிலேயே பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. திட்டமிடல்த் துறைக்குப்பொறுப்பாக பாலகுமாரும் நீதித்துறைக்குப் பொறுப்பாக பராவும் நியமிக்கப்பட்டனர்.

புலிகள் தமது நடவடிக்கைகளில் புதிய கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதனை மட்டக்களப்புச் சிறைச்சாலையின் இரண்டாவது உடைப்புக் காட்டியது. இது நடைபெற்று ஐந்துநாட்களுக்குப் பின்னர், காரைநகர் கடற்படை முகாமுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பு திரும்புவதற்காக கடற்படைத் தளபதி பாவித்த சீபிளேன் ரக விமானத்தை அவர்கள் எரியூட்டினார்கள். காரைநகரிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் பருத்தியடைப்புப் பகுதியில் திடீரென்று விமானம் தரையிறக்கப்பட்டது. காரைநகர் முகாமிலிருந்து 8 கிலோமீட்டர்கள் தூரத்தில் விமானம் தரையிறங்கியிருக்க, கடற்படைத் தளபதி முகாமிற்கு நடந்துசெல்ல, நான்கு கடற்படை வீரர்கள் விமானத்திற்குக் காவல்காத்து நின்றனர். அப்பகுதிக்கு வந்த புலிகள் காவலுக்கு நின்ற‌ கடற்படை வீரர்களைத் துரத்திவிட்டு விமானத்திற்குத் தீமூட்டிச் சென்றனர்.

அதேநாள் இரு .பி.ஆர்.எல்.எப் போராளிகள் துணிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். வீதியால் சென்ற பாரவூர்தியொன்றினை ஆயுதமுனையில் கடத்திச் சென்று, நேரே வந்துகொண்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்றுடன் மோதி அதில் பயணம் செய்த உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரையும் மூன்று கொன்ஸ்டபிள்களையும் காயப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த வீதி வரைபடங்களை நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள் எடுத்துச் சென்றனர்.

தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலியைக் கொல்லும் முயற்சியுடன் ஆனி மாதம் முடிவிற்கு வந்தது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் அதிகாரியொருவர் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாரிய குண்டைக் கண்டுபிடித்தார். ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு பந்தோபஸ்த்து அமைச்சர் வரவிருந்த வேளையில் இறுதிநேர பாதுகாப்புச் சோதனைகளில் ஈடுபட்ட ஊழியரே இக்குண்டைக் கண்டுபிடித்தார். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் இருந்த சேமிப்பு அறையிலேயே இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தது. குண்டைக் கண்டுபிடித்தபின்னர், அதனை வெடிக்கவைக்கும் அழுத்தியை அகற்றியெடுத்து, தனது மேலதிகாரியிடம் கொண்டுசென்று காண்பித்தார் அவர்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராஜாங்க அமைச்சின் செயலாளர், "அதிஷ்ட்டவசமாக அது சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய குண்டு இதுதான். இதற்குள் 45 ஜெலிக்னைட் குச்சிகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்குண்டு வெடித்திருந்தால் 14 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்திருக்கும்" என்று கூறினார்.

மேலும், "இக்குண்டு லலித்தின் அலுவலகத்திற்கு நேர் கீழே பொறுத்தப்பட்டிருக்கிறது. லலித் ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளையே அதிகம் பயன்படுத்துவார்" என்றும் அவர் கூறினார். 

ஆடி மாதம் முழுவதிலும் சிறு சிறு தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் சுற்றிவளைப்புக்களும், சமூக விரோதிகளுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே கொல்லப்பட்டிருந்தார். பூநகரிப் பகுதியில் காட்டிற்குள் விறகெடுக்கச் சென்றவேளை கட்டுத் துப்பாக்கி ஒன்றில் அகப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

 

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பும் வீணடிக்கப்பட்ட ஒரு திறமையும்

போராளிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான மோதல்கள் ஆவணியில் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், ஆவணி 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் நடத்த முயற்சிக்கப்பட்ட குண்டுவெடிப்பு தோல்வியில் முடிவடைந்தது. பனாகொடை மகேஸ்வரன் இதனைத் திட்டமிட்டிருந்தார். புங்குடுதீவைச் சேர்ந்த பிரபல வர்த்தகக் குடும்பம் ஒன்றில் 1955 ஆம் ஆண்டு மகேஸ்வரன் பிறந்தார். அவரது தந்தையாரான தம்பிள்ளைக்கு பல வர்த்தக நிலையங்கள் சொந்தமாக இருந்தன. அவற்றுள் ஒன்று மருதானையில் இயங்கிவந்த சைவ உணவகமான தவளகிரி ஹோட்டல். மகேஸ்வரனை கட்டிடப் பொறியியல்ப் படிப்பிற்காக இங்கிலாந்தின் குயீன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அவரது தந்தையார் அனுப்பிவைத்தார்.

1980 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய மகேஸ்வரன் அக்காலத்தில் கெஸ் என்றழைக்கப்பட்ட பின்னை நாள் ஈரோஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். திருகோணமலையில் ஈரோஸ் அமைப்பினருடன் இயங்கியவேளை தோல்வியில் முடிவடைந்த கிண்ணியா வங்கிக்கொள்ளையிலும் அவர் பங்குபற்றியிருந்தார். இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அவர் பனாகொடை இராணுவத்  தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டார். தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையின் யன்னல்க் கம்பிகளை அறுத்து அங்கிருந்து தப்பித்தார். இந்தத் துணிகரச் செயலே அவருக்குப் "பனாகொடை" எனும் அடைமொழியினை பெற்றுக்கொடுத்ததுடன் இளைஞர்கள் மத்தியிலும் மரியாதையினை ஏற்படுத்தியிருந்தது. பிற்காலத்தில் முஸ்லீம் குடும்பம் ஒன்றினால் பேலியகொடைப் பகுதியில் காட்டிக்கொடுக்கப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டார்.

5 அடி 11 அங்குலம் உயரமும், திடகாத்திரமானவராகவும் இருந்த மகேஸ்வரன் ஆடி 25 வெலிக்கடைப் படுகொலைகளை நேரில்க் கண்டவர். ஆகவே, தன்னுடன் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஏனைய தமிழ்க் கைதிகளை, காவலாளிகள் தம்மைத் தாக்க வரும்போது திருப்பித் தாக்க  ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உலோகத்திலான  பொருட்களை ஆயுதங்கள் போன்று உருமாற்றி, மிளகாய்த்தூள் போன்ற இலகுவாகக்,இடைக்கக்கூடிய பொருட்களைத் தற்காப்பிற்காக அவர்கள் எடுத்து வைத்திருந்தனர். ஆடி 27 ஆம் திகதி நடந்த இரண்டாவது படுகொலையின்போது உயிர்தப்பிய அவரது நண்பர்கள், அன்று அவர் மேற்கொண்ட தற்காப்புத் தாக்குதல் குறித்து கிலாகித்துப் பேசுகின்றனர். முதலாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பினைத் திட்டமிட்டவர்களில் மகேஸ்வரனும் ஒருவர். கைத்துப்பாக்கிகள் போன்று அவரால் உருவாக்கப்பட்டவற்றைப் பயன்படுத்தியே சிறைக்காவலர்களை மிரட்டி அவர் சிறையுடைப்பினை நடத்தினார். அவரால் பாவிக்கப்பட்ட பொம்மைத்துப்பாக்கிகளை உண்மையானவை என்றும், சிறைக்குள் அவரால் கடத்திவரப்பட்டவை என்றும் அதிகாரிகள் ஆரம்பத்தில் நினைத்திருந்தனர்.

சிறையுடைப்பின் பின்னர் மட்டக்களப்பிலேயே தங்கியிருந்த மகேஸ்வரன் தமிழ் ஈழ இராணுவம் எனும் அமைப்பை உருவாக்கினார். 1984 ஆம் ஆண்டு, அதுவரையில் இலங்கையில் நடத்தப்பட்ட வங்கிக்கொள்ளைகளில் மிகப்பெரிய‌ சம்பவமான காத்தான்குடி மக்கள் வங்கிக்கொள்ளையை அவர் திட்டமிட்டு நடத்தினார். காலை 9 மணிக்கு வங்கி அலுவல்கள் ஆரம்பித்தவேளை வங்கிக்குள் நுழைந்த ஆறு ஆயுதம் தரித்த இளைஞர்கள் வங்கி முகாமையாள்ரைத் துப்பாக்கிமுனையில் பணயக் கைதியாக வைத்திருந்து வங்கியில் இருந்த மொத்தப் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றார்கள். இரத்தம் சிந்தாத இந்தச் சம்பவத்தில் 36 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகளும், 240,000 பணமும் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பொலீஸார் நடத்திய தேடுதலின்போது மகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் பொலித்தீன் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி நகைகளும் பணமும் மீட்கப்பட்டிருந்தது. 

தான் கொள்ளையிட்ட பணத்தின் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற மகேஸ்வரன் பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். தமிழ்நாடு ‍- கேரளா எல்லையில் அமைந்திருந்த காட்டுப்பகுதியில் தனது அமைப்பிற்கான முகாம் ஒன்றினை உருவாக்கிய அவர், தனது அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து வந்து கரையேறும் வசதிக்காக வேதாரணியம்  இடைத்தங்கல் முகாமையும் அமைத்தார். அவரது புகழினால் ஈர்க்கப்பட்ட சுமார் 400 இளைஞர்கள் அவருடன் இணைந்துகொண்டார்கள். பின்னாட்களில் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியிலும் தமக்கான முகாம் ஒன்றிபை மகேஸ்வரன் அமைத்தார். பனாகொடைப் பையன்கள் என்று பரவலாக அறியப்பட்ட மோட்டார் சைக்கிள் படையணி ஒன்றினை அவர் உருவாக்கினார். சபாரி உடைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது அவர்களது வழக்கமாக இருந்தது.

விசாலமானதும், அதிர்ச்சி தரக்கூடியதுமான செயல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்பதே பனாகொடை மகேஸ்வரனின் எண்ணமாக இருந்தது. அதற்காக சென்னையில் நீலாங்கரை எனும் இடத்தில் வாடகைக்குத் தங்கியிருந்து, சென்னை விமானப் பயிற்சி நிலையத்தில் உறுப்பினராக இணைந்து விமனமோட்டக் கற்றுக்கொண்டார். அவரது நோக்கமெல்லாம் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து, அதனை வெடிபொருட்களால் நிரப்பி கொழும்பின் முக்கிய இலக்குகள் மீது அவற்றினை வீசி வெடிக்கச் செய்வதுதான்.

ஆனால், விமானமோட்டும் பயிற்சியின்போது தனது நோக்கத்தையும், திட்டத்தையும் அவர் மாற்றிக்கொண்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தகர்ப்பதே அவரது புதிய நோக்கமாக மாறியது. இந்த மனமாற்றத்தை ஏற்படுத்தியவர் மகேஸ்வரனின் விமானப் பயிற்சி நிலைய நண்பரான சரவணபவன் என்பவர். இலண்டன் மற்றும் பரீஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் எயர்லங்கா விமானங்களில் பயணப்பொதிகளில் குண்டுகளை மறைத்துவைத்து, அவை விமானத்தில் ஏற்றப்பட்டதன் பின்னர்  வெடிக்கவைப்பதே அவர்களின் புதிய திட்டம். தனக்கு உதவக் கூடிய சிலரை மகேஸ்வரன் தெரிந்தெடுத்தார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான விக்னேஸ்வர ராஜா, மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிராஜா, சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் பொலீஸ் காவலராக பணியாற்றிய சந்திரக்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அலுவலக ஊழியராகப்பணியாற்றிய விஜயக்குமார் மற்றும் விமான நிலையத்தில் பயணப்பொதிகளை ஏற்றி இறக்கும் சிப்பந்தி லோகநாதன் ஆகியோர் பனாகொடை மகேஸ்வரனுக்கு உதவ முன்வந்தனர்.

நீலாங்கரையில் தான் தங்கியிருந்த வீட்டில் குண்டுகளை மகேஸ்வரன் தயாரித்தார். பின்னர் அவற்றினை இரு சூட்கேஸுகளில் அடைத்தார். ஆவணி 2 ஆம் திகதி சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பயணமாகும் விமானத்தில் தனக்கு ஒரு இருக்கையினை கட்டணம் செலுத்தி அமர்த்திக்கொண்டார். யு எல் 122 எனும் அந்த போயிங் 737 விமானத்தை அவர் தெரிவுசெய்தமைக்கான காரணம் சென்னையிலிருந்து இரவு 9:50 மணிக்குக் கிளம்பும் அவ்விமானம் கொழும்பை இரவு 10:50 மணிக்கு வந்தடையும். பின்னர் 11:50 மணிக்கு மாலைதீவின் தலைநகரான மாலேக்கு அது பயணிக்கும். இந்த விமானம் கொழும்பில் தரித்து நிற்கும் அதே வேளையில் இன்னும் இரு எயர் லங்கா விமானங்கள், ஒன்று இலண்டன் கட்விக் விமான நிலையம் நோக்கியும் மற்றையது பரீஸ் நோகியும் புறப்பட ஆயத்தமாக பொதிகளை ஏற்றியபடி நிற்கும். 

பரீஸ் நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:30 மணிக்கும், இங்கிலாந்து நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:50 கிளம்புவதும் வழமை.

விமான நிலையத்துடன் விமானங்களை இணைக்கும் தொடர்புப் பகுதியில் மூன்று விமானங்களும் அருகருகே நிற்கும் நேரமான இரவு 11:00 மணிக்குக் குண்டுகளை வெடிக்கவைப்பதே மகேஸ்வரனின் திட்டம். மேலதிகமாக சிங்கப்பூர் எயர்லைன் விமானம் ஒன்றும் அதேவேளையில் விமானநிலையத்தில் தரித்து நிற்கும். மகேஸ்வரனின் திட்டத்தின்படி குண்டு வெடித்திருந்தால் மூன்று எயர்லங்கா விமானங்களும், சிங்கப்பூர் விமானமும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முற்றாகச் சேதமடைந்திருக்கும்.

 ஆனால், துரதிஸ்ட்டவ்சமாக இரவு 10:52 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திலேயே குண்டு வெடித்துவிட்டது. கதிரேசன் எனும் பெயரிலேயே மகேஸ்வரன் விமானச் சீட்டினைக் கொள்வனவு செய்திருந்தார். இரவு 8:10 மணிக்கு எயர்லங்கா காரியாலயத்தில் விமானத்தில் தான் பயணிப்பதை உறுதிப்படுத்தியிருந்தார். விமானநிலையச் சிப்பந்தி லோகநாதன் சூட்கேஸுகள் இரண்டையும் சுங்க அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளே எடுத்துச் சென்றார். விக்னேஸ்வரராஜா  இதற்கான ஒழுங்குகளை ஏற்கனவே செய்துவைத்திருந்தார். சுமார் 35 கிலோகிராம் கூடிய நிறையினை அவை கொண்டிருந்தமையினால் மகேஸ்வரன் 300 இந்திய ரூபாய்களை கட்டணமாகச் செலுத்தியிருந்தார். விமானத்தில் ஏற்றுவதற்காகப் பொதிகள் வைக்கப்படும் பகுதிக்கு தனது சூட்கேஸுகள் சென்றடைந்ததும் பனாகொடை மகேஸ்வரன் அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்றுவிட்டார்.

விமான நிலைய பாதுகாப்பு ஊழியர் விஜயகுமார் தனது பங்கைச் செய்யத் தொடங்கினார். கொழும்பிற்குக் கொண்டுசெல்வதற்காகவென்று அட்டைகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த இரு சூட்கெசுகளையும் ஒன்று இங்கிலாந்திற்கும், மற்றையதை பரீசிற்கும் என்று மாற்றி புதியஅட்டைகளை அவற்றில் மாட்டிவிட்டார். கட்டுநாயக்கவில் இருந்து இவ்விரு நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இவ்விரு சூட்கேஸுகளும் ஏற்றப்படுவதை உறுதிப்படுத்தவே அவர் இதனைச் செய்தார்.

பொதிகள் விமானத்தில் ஏற்றப்பட ஆயத்தமாக இருந்தபோதிலும், மகேஸ்வரன் விமான நிலையத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறவில்லை. மக்களோடு மக்களாக நின்றுகொண்ட அவர், நடப்பவற்றை அவதானிக்கத் தொடங்கினார். ஆனால், அந்த சூட்கேஸுகள் விமானங்கள் ஏற்றப்படவில்லை. பொதிகள் வைக்கப்படும் பகுதியிலேயே அவை கிடந்தன. பின்னர் விமான நிலைய ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பு அவரை தூக்கிவாரிப்போட்டது. "பயணிகளின் கவனத்திற்கு, கொழும்பிற்குப் பயணமாகும் கதிரேஸன் அவர்கள் தனது பொதிகளை அடையாளம் காட்டுமாறு வேண்டப்படுகிறார்" என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பினை விமான நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், மகேஸ்வரன் தன்னை அடையாளப்படுத்த மறுத்ததையடுத்து, இவ்விரு பொதிகளையும் ஏற்றாமலே விமானம் கொழும்பு நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.

பின்னர், இவ்விரு சூட்கேஸுகளும் சென்னை விமான நிலையத்தில் இயங்கி வந்த எயர்லங்கா அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. இவர் கடத்தல்க்காரர்களின் பொருட்களாக இருக்கலாம் என்று சந்தேகித்த சுங்க இலாகாவினர் அவற்றினை  இடதுபக்கத்தில் அமைந்திருந்த சுங்க அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இப்பகுதிக்கு மிக அருகிலேயே வெளிநாட்டுப் பயணிகள் இடைத்தங்கல் பகுதி இருந்தது. இலங்கையிலிருந்து மும்பாயிக்குச் செல்வதற்காக வந்திருந்த இலங்கைப் பெண்கள் பலர் இப்பகுதியில் தமது அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தனர். மும்பாயிலிருந்து அபுதாபி நோக்கிச் செல்வதே அவர்களது நோக்கம்.

நடக்கப்போகும் விபரீதம் மகேஸ்வரனுக்கு நன்கு புரிந்தது. பதற்றமடைந்த அவர், கிண்டியில் வசித்துவரும் தன் நண்பரிடம் சென்றார். அங்கிருந்து விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அங்கிருக்கும் இரு பொதிகளையும் உடனேயே அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவற்றிற்குள் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை எச்சரித்தார். ஆனால், அவர் தம்முடன் விளையாட்டாகப் பேசுவதாக அதிகாரிகள் நினைத்து, தொலைபேசியைத் துண்டித்துக்கொண்டனர். ஆனால் மகேஸ்வரன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இம்முறையும் நிலைமையின் தீவிரத்தை உணரத் தவறிய அதிகாரிகள், கடத்தல்க்காரர்கள் இதனை ஒரு உத்தியாகப் பாவிப்பதாக நினைத்து தமக்குள் விவாதப்பட ஆரம்பித்தனர். ஆனால், மகேஸ்வரன், அவர்களை மூன்றாவது தடவையும் அழைத்தபோது அவர்களுக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. இரு அதிகாரிகள் அப்பொதிகளை விமான நிலையத்திற்கு வெளியே இழுத்துச் செல்ல எத்தனித்தனர்.

அப்போது குண்டு வெடித்தது. நேரம் சரியாக இரவு 10:52 மணி.

அக்குண்டு வெடிப்பு கடுமையான சேதத்தினை ஏற்படுத்தியது. 33 மக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 27 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பெண் ஒருவரின் தலை தனியே துண்டிக்கப்பட்டு விமான நிலையத்தின் கூரையின் இடுக்கில் சென்று மாட்டிக்கொண்டது. பயணிகள் வந்திறங்கும் பகுதியின் மொத்தக் கூரையுமே இடிந்து வீழ்ந்தது. அப்பகுதியில் காத்துநின்றவர்களை நசுக்கியவாறே அப்பாரிய கூரை நிலம்நோக்கி இடிந்து வீழ்ந்திருந்தது.

கொல்லப்பட்டவர்களில் 24 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாதவாறு கடுமையாகச் சேதமடைந்திருந்தன. 18 பெண்களும், 6 ஆன்களுமாக மொத்தம் 24 பேர். கொல்லப்பட்டவர்களுள்  இருவர் சுங்க இலாகா அதிகாரிகள்.

குண்டுவெடித்த செய்தி அன்றிரவே கொழும்பை வந்தடைந்தது. ஜெயார்ர், அதுலத் முதலி மற்றும் அவர்களின் பிரச்சார இயந்திரம் என்று அனைவருமே துரித கதியில் இயங்கத் தொடங்கினார்கள். நடந்த அநர்த்தத்தினை தமது பிரச்சாரத்திற்கான துரும்பாக பாவிக்க அவர்கள் எண்ணினார்கள். இந்தியாவை தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க முயன்றார்கள். இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு முகாம்கள் அமைத்து பயிற்சியும் ஆயுதமும் வழங்கிவருவது தொடர்பாக இலங்கையின் புலநாய்வுத்துறை அதுவரை காலமும் சேகரித்து வந்த விபரங்களைத் இதற்காக அவர்கள் பாவித்தார்கள். பல கொழும்புப் பத்திரிக்கைகள் நடைபெற்ற அநர்த்தத்தினை இந்தியாவின் தலையிலேயே சுமத்தின. "பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தீர்கள், இன்று அதனாலேயே தாக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று பல பத்திரிக்கைகள் இந்தியாவிற்குச் சுட்டிக் காட்டுவதுபோல ஆசிரியர்த் தலையங்களை வெளியிட்டு மகிழ்ந்தன.

நடத்தப்பட்ட அநர்த்தத்தினை சுட்டிக்காட்டி இந்திராவுக்கு இரங்கல்க் கடிதம் ஒன்றினை ஜெயார் அனுப்பினார். அக்கடிதத்தில் இந்தியாவைச் சீண்டும் விதமாக பின்வருமாறு எழுதினார்.

"இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட மக்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் இரங்கும் அதேவேளை, ஜனநாயக விழுமியங்களைக் கடைக்கொண்டும், ஜனநாயகவழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைகளையும் கொண்ட அனைவரும் உலகின் ஜனநாயக விழுமியங்களையும் மனிதநாகரீகத்தின் அடிப்படைகளையும் முற்றாக அழித்துவிடக் கங்கணம் கட்டிநிற்கும் பயங்கரவாதிகளை அழிக்க ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதை இக்குண்டுவெடிப்பு காட்டி நிற்கிறது" .

இதற்குப் பதிலளித்த இந்திரா, "இக்குண்டுவெடிப்பினை உங்களைப் போல் நானும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்திசுயாதீனமற்ற இவ்வகையான வன்முறைகளைத் தடுப்பதற்கு இரு அரசாங்கங்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" என்று கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இதனால் மிகவும் கோபமடைந்தார். "குரூர மனம் படைத்தவர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவம்" என்று அவர் இதனைக் கண்டித்தார்.

எந்தவொரு அமைப்புமே இதற்கு உரிமைகோர முன்வரவில்லை. இக்குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அவமானத்தையடுத்து இதனை அடக்கிவாசிக்க இந்தியாவும் போராளி அமைப்புக்களும் முயன்றன. ஆகவே, இக்குண்டுவெடிப்பு இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் கைவண்ணம் என்று அவர் குற்றஞ்சாட்டின.

ஆனால் தமிழ்நாடு பொலீஸ் தன் கடமையைச் செய்தது. மகேஸ்வரன் தங்கியிருந்த நீலாங்கரை வீட்டைச் சோதனையிட்ட பொலீஸார் அங்கிருந்து வெடித்த குண்டினை ஒத்த இன்னொரு குண்டிணை மீட்டனர். மகேஸ்வரனைக் கைதுசெய்ததோடு பின்னர் விக்னேஸ்வர ராஜா, தம்பிராஜா ஆகியோரையும் இன்னும் ஏழு தமிழ்நாட்டுத் தமிழர்களையும் கைதுசெய்தனர். 1985 ஆம் ஆண்டு அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று இலங்கையர்களான மகேஸ்வரன், தம்பிராஜா மற்றும் விக்னேஸ்வர ராஜா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட ஏனைய அனைவருக்கும் ஆயுள்த்தண்டனை வழங்கப்பட்டது. பிணையில் வந்த மூன்று இலங்கைத் தமிழர்களும் பின்னாட்களில் பிணையினை முறித்துத் தப்பிச் சென்றனர். 

பெங்களூருக்குத் தப்பிச்சென்று மறைந்துவாழ்ந்த மகேஸ்வரன் 1998 ஆம் ஆண்டு மீண்டும் கைதானார். அவரதும், அவரது இயக்கமான தமிழ் ஈழ இராணுவத்தினதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பங்களிப்பென்பது மிகவும் சொற்பமானது. அவரது திறமையும், முயற்சியும் வீணாக்கப்பட்டுப்போனது.

மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பிலிருந்து அதியுச்ச பிரச்சார பெறுபேற்றினை பெற்றுவிட ஜெயாரும் லலித் அதுலத் முதலியும் முயன்றனர். ஆனால் இந்த பிரச்சார உத்திகள் அதிக காலம் நிலைக்கவில்லை. அடுத்துவந்த சில நாட்கள் நிலைமையினை மாற்றிப்போட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டின் ஆவணிமாதம் தமிழர் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

அந்த மாதத்திலேயே பிரபாகரன் தனது அமைப்பின் நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஒன்றினைச் செய்வதாக அறிவித்தார். இனிமேல் தனது அமைப்பு தாக்கிவிட்டு ஒழியும் உத்தியினைக் கடைப்பிடிக்காது என்றும், நிலையான கெரில்லா தாக்குதல் உத்தியினைக் கைக்கொள்ளும் என்றும் கூறினார்.

"நாங்கள் தாக்கிவிட்டு மறையும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து நிலையான கெரில்லா தாக்குதல் பாணிக்கு மாறவிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் ஈழ யுத்தம்

1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. சென்னையில் பேசிய பிரபாகரன் இதுவரை காலமும் தாக்கிவிட்டு ஒளிந்துகொள்ளும் முறையில் இருந்து நிலையான போர்புரியும் கெரில்லாக்களாக தாம் மாற முடிவெடுத்திருப்பதாகக் கூறியதுடன், ஏனைய அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பொது எதிரிக்கெதிராகப் போராடி தாயகத்தையும் மக்களையும் காத்துக்கொள்ள உதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரகடனத்தோடு தனது அமைப்பின் ஆயுதப் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்திவிட்டிருந்த பிரபாகரன் அதற்கான தலைமையினையும் வழங்கினார். அக்காலத்தில் இருந்த போராளித் தலைவர்களில் பிரபாகரனே இவ்வகை படிநிலை மாற்றத்தினை முதன்முதலாக கைக்கொண்டவர் என்பது முக்கியமானது. மேலும், இந்த அறிவிப்போடு முதலாவது ஈழப்போர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.

முதலாவது ஈழப்போர் 1984 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதி பொலிகண்டியை அண்டிய கடலில் , வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் இடம்பெற்ற கடற்சமருடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு தனது ரேடரில் தெரிந்த புலிகளின் படகு நோக்கித் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தது. புலிகளும் திருப்பித் தாக்கினார்கள். சிறிதுநேரம் மட்டுமே நடைபெற்ற தீவிரச் சண்டையில் ஆறு கடற்படையினர் புலிகளால் கொல்லப்பட்டதுடன் இன்னும் சிலர் காயமடைந்தனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட இன்னொரு பீரங்கிப்படகில் இருந்த 9 கடற்படையினர், சேதமடைந்த படகில் கிடந்த கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். புலிகளின் படகில் பயணம் செய்த நான்கு போராளிகளும் காயமேதும் இன்றித் தப்பித்ததோடு, படகும் பாதுகாக்கப்பட்டது.

புலிகளுடனான தனது முதலாவது கடற்சமரிலேயே கடுமையான இழப்புக்களைக் கடற்படை சந்தித்தது. இது அவர்களைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையாக மாறியது. அதுலத் முதலி கொதித்துப்போனார். மறுநாள் காலை பொலீஸாரும் இராணுவமும் இணைந்து வல்வெட்டித்துறைப் பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதேவேளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறை மீது கடற்படையும் இராணுவமும் இணைந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். வல்வெட்டித்துறைக் கடற்கரைப்பகுதி தமது கண்காணிப்பிற்குட்பட்ட பகுதி என்று கடற்படையால் அறிவிக்கப்பட்டது. கரையில் கட்டப்பட்டிருந்த மீனவர்களின் குடிசைகள் பீரங்கிப் பாடகிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பிடித்து எரிய, வீதியால் வந்த கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குத் தீமூட்டினர். சுமார் 5000 பொதுமக்கள் ஊரைவிட்டு வெளியேறி அருகிலிருந்த பாடசாலையினுள் தஞ்சமடைந்திருந்தனர். நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் குழந்தைகளும் முதியவர்களும் அடங்கும்.

வல்வெட்டித்துறைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலீஸாரும் இராணுவத்தினரும், அவ்வூரில் இருந்த உடல்வலுக் கொண்ட ஆண்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் கூடுமாறு கட்டளையிட்டனர். குறைந்தது 300 ஆண்கள் அவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். குழுக்களாகச் சென்ற இராணுவத்தினர் அருகில் இருந்த கிராமங்களுக்குள் சென்று கண்களில் பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன் வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

இராஜாங்க அமைச்சகத்தின் பேச்சாளர் டக்ளஸ் லியனகே பத்திரிக்கையாளர்களின் மாநாட்டில் பேசும்போது சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இன்னும் 300 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகவும் கூறினார். இதுதொடர்பாக டெயிலி நியூஸ் வெளியிட்ட செய்தியின் முதலாவது பந்தி பின்வருமாறு கூறியது,

"வல்வெட்டித்துறைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 300 பயங்கரவாதச் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர் என்று கொழும்பிற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது....."

அன்றைய நாள் நகர்ந்தபொழுது வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற படுகொலைகள், கைதுகள், சொத்தழிப்புக்கள் குறித்த தகவல்கள் யாழ்க்குடாநாடெங்கும் பரவியது. யாழ்ப்பாணத்தில் கடுமையான பதற்றம் நிலவியதோடு, கடற்சமரில் கொல்லப்பட்ட கடற்படையினரின் உடல்கள் இராணுவத்தால் மீட்கப்பட்டு பலாலியூடாக கொழும்பிற்கு எடுத்துசெல்லப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவச வாகனங்களில் வலம்வந்த இராணுவத்தினர் யாழ் வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டடங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திக்கொண்டு சென்றனர். பின்னர் அவ்வாகனம் யாழ்ச் சந்தைப்பகுதி நோக்கி நகர்ந்தபடி தாக்குதல் நடத்தியவேளை புலிகள் அதனை நோக்கி கிர்னேட்டுக்களாலும், பெற்றொல்க் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். புலிகளோடு இணைந்த பொதுமக்கள் கற்களாலும் ஏனைய பொருட்களாலும் கவசவாகனம் மீது எறியத் தொடங்கினர். உள்ளிருந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தச் சண்டை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் கவச வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டதுடன் ஒரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து யாழ்நகர் முழுவதும் குண்டுத் தாக்குதல்களால் அதிர்ந்தது. பல பொதுமக்கள் இராணுவத்தால் சகட்டுமேனிக்குக் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். மிகப்பழமையானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான யாழ்நகரம் முதலாவது ஈழப்போரின் சண்டையினை அன்று தரிசித்தது.

லியனகேயின் அலுவலகம் விடுத்த பத்திரிக்கையாளருக்கான குறிப்பில் யாழ்ப்பாணத்தில் பலர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. கொல்லப்பட்ட அனைவருமே பயங்கரவாதிகள் என்று அவ்வறிக்கை கூறியதுடன், இராணுவத்தினருடனும், பொலீஸாருடனுமான மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் கூறியது.

அன்று இரவாகிய‌தும், யாழ்ப்பாண நகரில் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தது. இராணுவத்தினரும் பொலீஸாரும் குழுக்களாக யாழ்நகரப்பகுதிகளிலும், கிராமங்களிலும் வலம் வந்தனர். அன்றிரவு முழுவதும் பொதுமக்களைக் கொன்றதுடன், சொத்துக்களுக்கும் தீமூட்டியபடி அவர்கள் வலம்வந்தனர். யாழ்ப்பாணம் பலாலி வீதியின் இருமரங்கிலும் இருந்த பெரும்பாலான கடைகளும், சிலவீடுகளும் இராணுவத்தால் எரிக்கப்பட்டன. பலாலிக்கு அருகில் அமைந்திருந்த அச்சுவேலிக் கிராமம் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டது. அங்கிருந்த பல கடைகளும் வீடுகளும் இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்டன. எரிக்கப்பட்ட வீடுகளில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் வீடும் அடங்கும். அவ்வீட்டின் முன்னால் காவலுக்கு நின்ற‌ பொலீஸாரை கலைத்துவிட்டே இராணுவத்தினர் அதற்குத் தீமூட்டினர்.

புலிகள் பதில்த் தாக்குதலில் இறங்கினர். அன்றிரவு, ஆவணி 5 ஆம் திகதி, வல்வெட்டித்துறைக்கு அண்மையாக இருக்கும் நெடியகாடு எனும் பகுதியூடாக ரோந்துவந்த பொலீஸ் இராணுவ கூட்டு அணிமீது தாக்குதல் நடத்தினர். அன்று பின்னேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர். அன்றிரவு முழுவதும் முதலாவது ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு ஆடியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை இப்போர் தொடர்ந்து நடைபெற்றது. 

நெடியக்காடு எனும்பகுதியில் வீதியின் ஓரத்தில் பாரிய கண்ணிவெடி ஒன்றினைப் புதைத்த புலிகள், வீதியின் இருமருங்கிலும் பதுங்கியிருந்தவாறு இரவுநேர பொலீஸ் - இராணுவ கூட்டு ரோந்து அணியின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். இந்த ரோந்து அணியில் மூன்று கவச வாகனங்கள், ஒரு ஜீப் வண்டி ஒரு ட்ரக் வண்டி என்று ஐந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் மீது கண்ணிவெடித் தாக்குதலை நடத்திவிட்டு ஏனையவற்றின்மீது துப்பாக்கித் தாக்குதலை புலிகள் நடத்த ஆரம்பித்தனர். எட்டு பொலீஸ் அதிரடிப்படையினரும் அவர்களின் தளபதியான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சிறீ ஜயசுந்தரவும் அவ்விடத்தில் பலியானார்கள்.

ஒட்டுசுட்டானில், இருள் சூழ்ந்த மாலை வேளையில் மாத்தையா தலைமையில் 60 புலிகள் இரு குழுக்களாகப் பிரிந்து நிலையெடுத்துக் காத்திருந்தனர். சுமார் 50 பொலீஸார் தங்கியிருந்த இருமாடிக் கட்டத்தின் பிற்பகுதிக்கு புலிகளின் குழுவொன்று சென்றது. இக்கட்டத்தில் இருந்த பொலீஸாரில் 30 பேர் இஸ்ரேலியக் கமாண்டோக்களினால் பயிற்றப்பட்ட கெரில்லா எதிர்ப்பு அதிரடிப்படை வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றைய குழு முகாமின் முற்பகுதியில் இருந்து தாக்குதலை ஆரம்பித்தது. கட்டடத்திற்குள் இருந்த பொலீஸார் முகாமினைக் காத்துக்கொள்ள முகாமின் முன்புறம் நோக்கி ஓடினர்.

அப்போது முகாமின் பிற்பகுதியில் நிலையெடுத்திருந்த இரண்டாவது குழு முகாமிற்குள் நுழைந்துகொண்டது. உள்ளே நுழைந்தவுடன் கிர்னேட்டுக்களை வீசியும், குண்டுகளை வெடிக்கவைத்தும் தாக்குதல் நடத்தி பொலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுமாறு கோரியது. பொலீஸார் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தப்பியோடினர். புலிகள் ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டதுடன், கட்டடத்தையும் குண்டுவைத்து தகர்த்துவிட்டுச் சென்றனர்.  புலிகளால் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதங்களில் நான்கு இயந்திரத் துப்பாக்கிகள், மூன்று 0.303 ரைபிள்கள், நான்கு ரிப்பீட்டர் ரைபிள்கள்,இரண்டு 0.38 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன அடங்கும். கொல்லப்பட்ட எட்டு பொலீஸ் கமாண்டோக்களில் பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லையும் ஒருவர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட பொதுமக்கள் 

ஒட்டுசுட்டான் பொலீஸ் முகாம் மீதான தாக்குதலில் பரமதேவா முக்கியமான பாத்திரத்தினை வகித்திருந்தார். ஆகவே, அவரை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை முடுக்கிவிட பிரபாகரன் அனுப்பிவைத்தார். அடுத்துவந்த இரு மாதங்களுக்கு கிழக்கில் இராணுவத்தினருக்குத் தலையிடியைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் பரமதேவா ஈடுபட்டார். களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சியொன்றில் அவர் மரணமடைந்தார். அவரது இழப்பு புலிகளை பெரிய அளவில் பாதித்திருந்தது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஐந்தாவது இரவாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. கடைகளை உடைத்துத் திறந்த இராணுவத்தினர் அவற்றைக் கொள்ளையிட்டதுடன், தீவைத்து எரித்தனர். வீதிகளிலும், வீடுகளிலும் இருந்த பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் மீதும், பொலீஸார் மீதும் யாழ்ப்பாணத்து வீதிகளில் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இவ்வாறான தாக்குதல்களில் இராணுவத்தினரிடமிருந்து ஆயுதங்களும் வெடிபொருடகளும் அவர்களால் கைப்பற்றப்பட்டன. இடைக்கிடையே வாகனங்களும், பணமும் அவர்களால் கொள்ளையிடப்பட்டன. இதே காலப்பகுதியில் சமூகவிரோதிகளுக்கும், இராணுவத்தினருக்காக உளவுபார்த்தவர்களுக்கும் ஆங்காங்கே மின்கம்ப மரணதண்டனைகளும் வழங்கப்பட்டு வந்தன.

காங்கேசந்துறைச் சீமேந்துத் தொலிற்சாலையிலிருந்து நான்கு துப்பாக்கிகள், குண்டுவெடிக்கவைக்கும் கருவிகள், ஜீப் வண்டி ஆகியவை போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சுண்ணாம்புக் கற்களை அகழ்ந்து எடுக்கும் சுரங்கப்பகுதியில் பாறைகளை வெடிக்கவைத்து விட்டு , நான்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் பாதுகாப்பு வழங்க,  பொறியியலாளர் . ஜேசுதாசன் மீதி வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஜீப் வண்டியில் வந்துகொண்டிருந்தார். திடீரென்று வாகனத்திற்கு முன்னால் வீதியில் குதித்த ஐந்து ஆயுதம் தரித்த இளைஞர்கள் ஜீப் வண்டியை மறித்தனர். பின்னர், ஜீப் வண்டியையும், காவலர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், ரவைகள், வெடிபொருட்கள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்றனர்.

அவ்வாறே, வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றிலிருந்தும் போராளிகளால் ஆயுதங்களும், ரவைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்திற்கு வந்த நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள், கட்டடத்தின் கதவுகளை உடைத்துத் திறந்து அங்கிருந்த பணத்தையும், துப்பாக்கி ஒன்றையும் எடுத்துச் சென்றனர். இன்னொரு குழு பண்டைத்தரிப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அரச திணைக்களம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழு ஒன்று காவலாளியை மிரட்டி அங்கிருந்த தட்டச்சுச் செய்யும் இயந்திரத்தையும், ரோனியோ இயந்திரத்தையும், காவலாளியின் துப்பாக்கியையும் எடுத்துச் சென்றது.

ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் குடாநாடுமே கலவர பூமியாகக் காட்சியளித்தது. பொதுமக்களும் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். தம்மால் எடுத்துவரக்கூடிய மரக்குற்றிகள், சீமேந்துத் தூண்கள், கற்கள் ஆகியவற்றை வீதிகளுக்குக் குறுக்கே இட்டு தடைகளை ஏற்படுத்தினர். சிலவிடங்களில் டயர்களும் வீதிக்குக் குறுக்கே போடப்பட்டு எரிக்கப்பட்டன. இராணுவ முகாம்களையும் , பொலீஸ் நிலையங்களையும் சூழவுள்ள வீதிகளில் இத்தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை முடக்குவதே பொதுமக்களின் நோக்கமாக இருந்தது. பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளுக்கு அருகே போராளிகள் கண்ணிவெடிகளைப் புதைக்கத் தொடங்கினர்.

 இவ்வாறான பதட்டமான சூழ்நிலையில் அரசுக்குச் சொந்தமான வங்கியொன்று இரு போராளிக் குழுக்களால் கொள்ளையிடப்பட்டது. ஸ்டான்லி வீதியில் அமைந்திருந்த இலங்கை வங்கியினைக் கொள்ளையிடும் நோக்கத்தில் பலநாட்களாக .பி.ஆர்.எல்.எப் அமைப்பு அதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டும் தகவல்களைச் சேகரித்தும் வந்திருந்தது. இன்னொரு சிறிய போராளி அமைப்பான தமிழீழ தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பும் இதே வங்கியைக் கொள்ளையிட நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பொதுமக்களின் எழுச்சியைப் பாவித்து அன்றிரவு ஸ்டான்லி வீதி வங்கியைக் கொள்ளையிடுவதே அந்த அமைப்பின் நோக்கம்.

அதற்காக இரு பாரவூர்திகளையும் ஒரு வான் ரக வாகனத்தையும் தமிழ் ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடத்திச் சென்றது. அந்த வாகனங்களில் அவ்வமைப்பின் போராளிகள் ஏறிக்கொண்டார்கள். வங்கிக்கொள்ளை விசாரணைகளின்போது சாட்சியங்கள் கூறுகையில் குறைந்தது 50 போராளிகளாவது அந்த வாகனங்களில் இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் (எஸ் எம் ஜி) சில கிர்னேட்டுக்களும், சில சுழழ்த் துப்பாக்கிகளும் இருந்தன. வங்கியின் முன்னால் அமைந்திருந்த கதவினை உடைத்துத் திறந்த அவர்கள், உள்ளே நுழைந்து குண்டுகளை வெடிக்க வைத்தனர். வங்கியின் உட்பகுதியில் இருந்த பலமான கதவு குண்டுவெடிப்பினால் உடைந்து வீழ்ந்தது. பணமும், நகைகளும் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அத்துடன் உள்ளேயிருந்த ரைபிள்களையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால், ஏனைய நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான அறையினை அவர்களால் உடைக்கமுடியவில்லை. ஆகவே, நேரத்தை விரயமாக்காது தாம் வந்த வாகனங்களிலேயே தப்பிச் சென்றார்கள்.

இந்த வங்கிக்கொள்ளை பற்றி .பி.ஆர்.எல்.எப் அமைப்பு அறிந்துகொண்டது. உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்டு வங்கியை நோக்கிச் சென்றது அவ்வமைப்பின் குழு ஒன்று. வங்கிக்கொள்ளையினை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களின் உதவியுடன், மீதமாகவிருந்த நகைகளும் பணமும் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். 

"எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்"

ஆவணி 6 ஆம் திகதி, அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டத்தினப் பாவித்து இராணுவம் தொடர்ச்சியாக அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்குவதற்காக பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை அது நடத்தி வந்தது. ஆனால், போராளிகளும் தொடர்ச்சியாக இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தியே வந்தனர். அரசின் ஒடுக்குமுறையினால் ஏலவே பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களைப் பொறுத்தவரை  தம்மைக் காக்கவேண்டிய இராணுவமும், பொலீஸும், கடற்படையும் தம்மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றும், சொத்துக்களைச் சூறையாடியும் வந்தமை  கடுமையான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இயல்பாகவே அவர்கள் போராளிகளின் பக்கம் சாயவேண்டிய நிலை ஏற்பட்டது.  போராளிகளுக்கு, தாமாகவே முன்வந்து, விருப்புடன் தமிழர்கள் உதவும் சூழ்நிலை அங்கு உருவானது. போராளிகளுக்கான மக்களின் ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது. "எங்கள் பிள்ளைகளே எங்கள் காவலர்கள்" எனும் மனோநிலை அனைவர் மனதிலும் ஆழமாக வேரூன்றிக்கொண்டது. அரச படைகளை, "சிங்கள இராணுவம், சிங்களப் பொலீஸ், அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்" என்று தமிழர்கள் அழைக்கும் நிலை உருவானது.

ஆவணி 6 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளை தனது நாளாந்த அலுவல்களை ஆரம்பித்த வேளை மக்களோடு மக்களாக பத்து இளைஞர்கள் சுழழ்த் துப்பாக்கிகளுடன் உள்நுழைந்தனர். சிறிது நேரத்தின் பின்னர், 'நாங்கள் இங்கே குண்டுகளை வைத்திருக்கிறோம், அனைவரும் ஓடித் தப்புங்கள்" என்று அவர்கள் கூச்சலிட்டார்கள். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்கள், முகாமையாளர் என்று அனைவருமே வங்கியை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். இந்தக் கலவரத்தில் அங்கிருந்த மூன்று காவலாளிகளிடமிருந்த துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அந்த இளைஞர்கள் பறித்துச் சென்றார்கள்.

வவுனியாவில் இடம்பெற்ற பழிவாங்கல்ப் படுகொலைகளும், கூட்டுப் பாலியல் வன்புணர்வும்

 வவுனியா நகரிலும் அன்று போராளிகளால் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பொலீஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத் வழமைபோல தனது காரியாலயத்திற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவரது மேசைக்குக் கீழே பொறுத்தப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டு செயற்பட வைக்கப்பட, பொலீஸ் அத்தியட்சகர் உடல்சிதறி மரணமானார். புளொட் அமைப்பே இந்தக் குண்டினை வைத்திருந்தது. காந்தியம் அமைப்பில் அக்காலத்தில் செயற்பாடு வந்த சந்ததியாரே இக்குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்பட்டது. காந்தியம் தலைவர்கள் மீது பொலீஸார் நடத்திய அடாவடித்தனம், இந்திய வம்சாவளித் தமிழர்களை காந்தியத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றியமை ஆகிய காரணங்களுக்காக பொலீஸார் மீது இத்தாக்குதலை புளொட் நடத்தியிருந்தது. ஹேரத் மரணிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் மாங்குளம் வாடி வீட்டில் அவரைச் சந்தித்தேன். லலித் அதுலத் முதலியின் விஜயத்தை செய்தியாக்குவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன்.

ஹேரத்தின் மரணத்திற்குப் பழிதீர்க்க இராணுவமும்  பொலீஸாரும் செயலில் இறங்கினார்கள். வவுனியா நகரப்பகுதிக்கு வாகனங்களில் வந்திறங்கிய 25 பொலீஸார், அங்கிருந்த தமிழருக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். நகரில் இயங்கிவந்த "வேல் கபே" எனும் உணவு விடுதிக்குள் நுழைந்த பொலீஸார் அதன் உரிமையாளரையும், உணவருந்திக்கொண்டிருந்த ஆறு பொதுமக்களையும்  சுட்டுக் கொன்றனர்.

அன்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பேரூந்தொன்றில் பயணம் செய்த நான்கு தமிழ்ப் பெண்களை, பேரூந்தினை மறித்த  விமானப்படடையினர் தம்முடன் இழுத்துச் சென்றனர். கூட்டாகப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட அந்த நான்கு பெண்களும் பின்னர் விமானப்படையினரால் மிருகத்தனமாகக்  கொல்லப்பட்டனர்.  மறுநாளான ஆவணி 7 ஆம் திகதி, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் வழியில், நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் கொல்லப்பட்ட மேலும் 10 தமிழர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், வழமைபோல பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட லியனகே, இத்தமிழர்கள் அனைவரும் போராளிக் குழுக்களுக்கிடையிலான மோதலில் அகப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறினார். மேலும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்குப் பழிவாங்கிய பொலீஸார் சரித்திர முக்கியத்துவம் பெற்ற தம்பலகாமம் சிவன் கோயிலை இடித்து நொறுக்கியதுடன், பூசகரையும் அடித்து இழுத்துச் சென்றனர்.

சுண்ணாகம் பொலீஸ் நிலையப் படுகொலை

ஆவணி 9 ஆம் திகதி, மொத்தத் தமிழினத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையொன்று நடந்தேறியது. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திற்கு அடுத்ததாக, சுண்ணாகத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையமே வடபகுதியில் இருந்த பொலீஸ் நிலையங்களுக்குள் பெரியதாக இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக கைதுசெய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் சுண்ணாகம் பொலீஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட இப்பொலீஸ் நிலையம் மீது புதன்கிழமை டெலோ அமைப்பினர் நடத்திய தாக்குதல் முயற்சி பொலீஸாரினால் முறியடிக்கப்பட்டிருந்தது .   ஆனால், புதன் இரவும் இன்னொரு தாக்குதல் முயற்சியில் டெலோ அமைப்பினர் இறங்கப்போகிறார்கள் என்கிற செய்தி பொலீஸாருக்குக் கிடைத்தது. பின்னாட்களில் நடந்த விசாரணைகளின்போது, அன்றிரவே சுண்ணாகம் பொலீஸார் யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், அவ்வாறு யாழ்ப்பாணத்திற்குப் போகும் முன்னர், தாம் அடைத்துவைத்திருந்த இளைஞர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் அடைத்துப் பொலீஸார் பூட்டினர். அந்த இளைஞர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டும், கண்கள் மறைக்கப்பட்டும், அவர்கள் கூச்சலிடாதபடி வாய்களுக்குள் துணிகள் பொதிந்தும் அடைக்கப்பட்டார்கள். பின்னர், அவ்வறையின் கதவினை எவராவதுதிறக்க‌ எத்தனித்தால், அவ்வறையினை முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கக் கூடியவகையில் பாரிய குண்டொன்றைப் பொலீஸார் பொறுத்திவிட்டுச் சென்றார்கள். அன்று உயிர்தப்பிய சிலர் விசாரணைகளின்போது பேசுகையில், தம்மில் சிலர் ஒருவாறு கைக்கட்டுக்களையும், வாயில் அடைக்கப்பட்ட துணிகளையும் அகற்றிவிட்டு உதவி கோரிக் கூச்சலிட்டிருக்கிறார்கள். பொலீஸார் வெளியேறியபின்னர் அப்பகுதியில் குழுமிய பொதுமக்கள் உள்ளிருந்து வரும் கூச்சல்களைச் செவிமடுத்தவுடன், கதவினை உடைத்துத் திறக்க எத்தனித்திருக்கிறார்கள். இதன்போது கதவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்பில் உள்ளே அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களும், உதவிக்கு வந்த பொதுமக்களுமாக குறைந்தது 20 பேர் அவ்விடத்திலேயே உடல்சிதறிக் கொல்லப்பட்டார்கள்.

பொலீஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் மரணங்களை கொழும்பு ஊடகங்கள் பின்வருமாறு தலைப்பிட்டு மகிழ்ந்தன, "பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டனர்". இப்படுகொலை பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை அவை முடுக்கிவிட்டிருந்தன. சண்டே ஒப்சேர்வர் தனது செய்தியில் பயங்கரவாதிகளின் தாக்குதலை பொலீஸார் முறியடித்து விட்டதாகவும், மேலதிக ஆளணி உதவி பொலீஸாரால் விடுக்கப்பட்டதாகவும் எழுதியது. மேலும், சுண்ணாகம் பொலீஸாரின் உதவி கோரலினையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த ஏனைய பொலீஸ் நிலையங்களில் இருந்து பொலீஸார் விரைந்து சென்று சண்டையில் ஈடுபட்டதாகவும், கடுமையான சண்டையில் இருபதிற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி கூறியது.

நாவற்குழி படுகொலை

மறுநாள், ஆவணி 10 ஆம் திகதி இரவு, குருதியை உரையவைக்கும் இன்னொரு கொடூரமான படுகொலை ஒன்று இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்டது. 10 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் வாகனமொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களுள் ஆறு பேர் குழந்தைகள். நாவற்குழி இராணுவத் தடைமுகாமின் அரணில் நின்ற‌ இராணுவத்தினர் அவ்வண்டியை மறித்தனர். முகாமின் அருகிலிருந்த ஆள் ஆரவாரம் அற்ற இடமொன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைகளும் பெற்றோரும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இப்படுகொலையினை அரச வானொலி பிரச்சாரப்படுத்திய விதம் தமிழ் மக்களை மேலும் ஆத்திரம்கொள்ள வைத்தது. "கைதடிப்பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் " என்று பொதுமக்களின்படுகொலை பிரச்சாரப்படுத்தப்பட்டது.

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2024 at 23:49, ரஞ்சித் said:

மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பும் வீணடிக்கப்பட்ட ஒரு திறமையும்

போராளிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான மோதல்கள் ஆவணியில் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், ஆவணி 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் நடத்த முயற்சிக்கப்பட்ட குண்டுவெடிப்பு தோல்வியில் முடிவடைந்தது. பனாகொடை மகேஸ்வரன் இதனைத் திட்டமிட்டிருந்தார். புங்குடுதீவைச் சேர்ந்த பிரபல வர்த்தகக் குடும்பம் ஒன்றில் 1955 ஆம் ஆண்டு மகேஸ்வரன் பிறந்தார். அவரது தந்தையாரான தம்பிள்ளைக்கு பல வர்த்தக நிலையங்கள் சொந்தமாக இருந்தன. அவற்றுள் ஒன்று மருதானையில் இயங்கிவந்த சைவ உணவகமான தவளகிரி ஹோட்டல். மகேஸ்வரனை கட்டிடப் பொறியியல்ப் படிப்பிற்காக இங்கிலாந்தின் குயீன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அவரது தந்தையார் அனுப்பிவைத்தார்.

1980 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய மகேஸ்வரன் அக்காலத்தில் கெஸ் என்றழைக்கப்பட்ட பின்னை நாள் ஈரோஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். திருகோணமலையில் ஈரோஸ் அமைப்பினருடன் இயங்கியவேளை தோல்வியில் முடிவடைந்த கிண்ணியா வங்கிக்கொள்ளையிலும் அவர் பங்குபற்றியிருந்தார். இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அவர் பனாகொடை இராணுவத்  தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டார். தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையின் யன்னல்க் கம்பிகளை அறுத்து அங்கிருந்து தப்பித்தார். இந்தத் துணிகரச் செயலே அவருக்குப் "பனாகொடை" எனும் அடைமொழியினை பெற்றுக்கொடுத்ததுடன் இளைஞர்கள் மத்தியிலும் மரியாதையினை ஏற்படுத்தியிருந்தது. பிற்காலத்தில் முஸ்லீம் குடும்பம் ஒன்றினால் பேலியகொடைப் பகுதியில் காட்டிக்கொடுக்கப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டார்.

5 அடி 11 அங்குலம் உயரமும், திடகாத்திரமானவராகவும் இருந்த மகேஸ்வரன் ஆடி 25 வெலிக்கடைப் படுகொலைகளை நேரில்க் கண்டவர். ஆகவே, தன்னுடன் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஏனைய தமிழ்க் கைதிகளை, காவலாளிகள் தம்மைத் தாக்க வரும்போது திருப்பித் தாக்க  ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உலோகத்திலான  பொருட்களை ஆயுதங்கள் போன்று உருமாற்றி, மிளகாய்த்தூள் போன்ற இலகுவாகக்,இடைக்கக்கூடிய பொருட்களைத் தற்காப்பிற்காக அவர்கள் எடுத்து வைத்திருந்தனர். ஆடி 27 ஆம் திகதி நடந்த இரண்டாவது படுகொலையின்போது உயிர்தப்பிய அவரது நண்பர்கள், அன்று அவர் மேற்கொண்ட தற்காப்புத் தாக்குதல் குறித்து கிலாகித்துப் பேசுகின்றனர். முதலாவது மட்டக்களப்புச் சிறையுடைப்பினைத் திட்டமிட்டவர்களில் மகேஸ்வரனும் ஒருவர். கைத்துப்பாக்கிகள் போன்று அவரால் உருவாக்கப்பட்டவற்றைப் பயன்படுத்தியே சிறைக்காவலர்களை மிரட்டி அவர் சிறையுடைப்பினை நடத்தினார். அவரால் பாவிக்கப்பட்ட பொம்மைத்துப்பாக்கிகளை உண்மையானவை என்றும், சிறைக்குள் அவரால் கடத்திவரப்பட்டவை என்றும் அதிகாரிகள் ஆரம்பத்தில் நினைத்திருந்தனர்.

சிறையுடைப்பின் பின்னர் மட்டக்களப்பிலேயே தங்கியிருந்த மகேஸ்வரன் தமிழ் ஈழ இராணுவம் எனும் அமைப்பை உருவாக்கினார். 1984 ஆம் ஆண்டு, அதுவரையில் இலங்கையில் நடத்தப்பட்ட வங்கிக்கொள்ளைகளில் மிகப்பெரிய‌ சம்பவமான காத்தான்குடி மக்கள் வங்கிக்கொள்ளையை அவர் திட்டமிட்டு நடத்தினார். காலை 9 மணிக்கு வங்கி அலுவல்கள் ஆரம்பித்தவேளை வங்கிக்குள் நுழைந்த ஆறு ஆயுதம் தரித்த இளைஞர்கள் வங்கி முகாமையாள்ரைத் துப்பாக்கிமுனையில் பணயக் கைதியாக வைத்திருந்து வங்கியில் இருந்த மொத்தப் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றார்கள். இரத்தம் சிந்தாத இந்தச் சம்பவத்தில் 36 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகளும், 240,000 பணமும் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பொலீஸார் நடத்திய தேடுதலின்போது மகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் பொலித்தீன் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி நகைகளும் பணமும் மீட்கப்பட்டிருந்தது. 

தான் கொள்ளையிட்ட பணத்தின் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற மகேஸ்வரன் பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். தமிழ்நாடு ‍- கேரளா எல்லையில் அமைந்திருந்த காட்டுப்பகுதியில் தனது அமைப்பிற்கான முகாம் ஒன்றினை உருவாக்கிய அவர், தனது அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து வந்து கரையேறும் வசதிக்காக வேதாரணியம்  இடைத்தங்கல் முகாமையும் அமைத்தார். அவரது புகழினால் ஈர்க்கப்பட்ட சுமார் 400 இளைஞர்கள் அவருடன் இணைந்துகொண்டார்கள். பின்னாட்களில் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியிலும் தமக்கான முகாம் ஒன்றிபை மகேஸ்வரன் அமைத்தார். பனாகொடைப் பையன்கள் என்று பரவலாக அறியப்பட்ட மோட்டார் சைக்கிள் படையணி ஒன்றினை அவர் உருவாக்கினார். சபாரி உடைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது அவர்களது வழக்கமாக இருந்தது.

விசாலமானதும், அதிர்ச்சி தரக்கூடியதுமான செயல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்பதே பனாகொடை மகேஸ்வரனின் எண்ணமாக இருந்தது. அதற்காக சென்னையில் நீலாங்கரை எனும் இடத்தில் வாடகைக்குத் தங்கியிருந்து, சென்னை விமானப் பயிற்சி நிலையத்தில் உறுப்பினராக இணைந்து விமனமோட்டக் கற்றுக்கொண்டார். அவரது நோக்கமெல்லாம் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து, அதனை வெடிபொருட்களால் நிரப்பி கொழும்பின் முக்கிய இலக்குகள் மீது அவற்றினை வீசி வெடிக்கச் செய்வதுதான்.

ஆனால், விமானமோட்டும் பயிற்சியின்போது தனது நோக்கத்தையும், திட்டத்தையும் அவர் மாற்றிக்கொண்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தகர்ப்பதே அவரது புதிய நோக்கமாக மாறியது. இந்த மனமாற்றத்தை ஏற்படுத்தியவர் மகேஸ்வரனின் விமானப் பயிற்சி நிலைய நண்பரான சரவணபவன் என்பவர். இலண்டன் மற்றும் பரீஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் எயர்லங்கா விமானங்களில் பயணப்பொதிகளில் குண்டுகளை மறைத்துவைத்து, அவை விமானத்தில் ஏற்றப்பட்டதன் பின்னர்  வெடிக்கவைப்பதே அவர்களின் புதிய திட்டம். தனக்கு உதவக் கூடிய சிலரை மகேஸ்வரன் தெரிந்தெடுத்தார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான விக்னேஸ்வர ராஜா, மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிராஜா, சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் பொலீஸ் காவலராக பணியாற்றிய சந்திரக்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அலுவலக ஊழியராகப்பணியாற்றிய விஜயக்குமார் மற்றும் விமான நிலையத்தில் பயணப்பொதிகளை ஏற்றி இறக்கும் சிப்பந்தி லோகநாதன் ஆகியோர் பனாகொடை மகேஸ்வரனுக்கு உதவ முன்வந்தனர்.

நீலாங்கரையில் தான் தங்கியிருந்த வீட்டில் குண்டுகளை மகேஸ்வரன் தயாரித்தார். பின்னர் அவற்றினை இரு சூட்கேஸுகளில் அடைத்தார். ஆவணி 2 ஆம் திகதி சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பயணமாகும் விமானத்தில் தனக்கு ஒரு இருக்கையினை கட்டணம் செலுத்தி அமர்த்திக்கொண்டார். யு எல் 122 எனும் அந்த போயிங் 737 விமானத்தை அவர் தெரிவுசெய்தமைக்கான காரணம் சென்னையிலிருந்து இரவு 9:50 மணிக்குக் கிளம்பும் அவ்விமானம் கொழும்பை இரவு 10:50 மணிக்கு வந்தடையும். பின்னர் 11:50 மணிக்கு மாலைதீவின் தலைநகரான மாலேக்கு அது பயணிக்கும். இந்த விமானம் கொழும்பில் தரித்து நிற்கும் அதே வேளையில் இன்னும் இரு எயர் லங்கா விமானங்கள், ஒன்று இலண்டன் கட்விக் விமான நிலையம் நோக்கியும் மற்றையது பரீஸ் நோகியும் புறப்பட ஆயத்தமாக பொதிகளை ஏற்றியபடி நிற்கும். 

பரீஸ் நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:30 மணிக்கும், இங்கிலாந்து நோக்கிச் செல்லும் விமானம் இரவு 11:50 கிளம்புவதும் வழமை.

விமான நிலையத்துடன் விமானங்களை இணைக்கும் தொடர்புப் பகுதியில் மூன்று விமானங்களும் அருகருகே நிற்கும் நேரமான இரவு 11:00 மணிக்குக் குண்டுகளை வெடிக்கவைப்பதே மகேஸ்வரனின் திட்டம். மேலதிகமாக சிங்கப்பூர் எயர்லைன் விமானம் ஒன்றும் அதேவேளையில் விமானநிலையத்தில் தரித்து நிற்கும். மகேஸ்வரனின் திட்டத்தின்படி குண்டு வெடித்திருந்தால் மூன்று எயர்லங்கா விமானங்களும், சிங்கப்பூர் விமானமும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முற்றாகச் சேதமடைந்திருக்கும்.

 ஆனால், துரதிஸ்ட்டவ்சமாக இரவு 10:52 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திலேயே குண்டு வெடித்துவிட்டது. கதிரேசன் எனும் பெயரிலேயே மகேஸ்வரன் விமானச் சீட்டினைக் கொள்வனவு செய்திருந்தார். இரவு 8:10 மணிக்கு எயர்லங்கா காரியாலயத்தில் விமானத்தில் தான் பயணிப்பதை உறுதிப்படுத்தியிருந்தார். விமானநிலையச் சிப்பந்தி லோகநாதன் சூட்கேஸுகள் இரண்டையும் சுங்க அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளே எடுத்துச் சென்றார். விக்னேஸ்வரராஜா  இதற்கான ஒழுங்குகளை ஏற்கனவே செய்துவைத்திருந்தார். சுமார் 35 கிலோகிராம் கூடிய நிறையினை அவை கொண்டிருந்தமையினால் மகேஸ்வரன் 300 இந்திய ரூபாய்களை கட்டணமாகச் செலுத்தியிருந்தார். விமானத்தில் ஏற்றுவதற்காகப் பொதிகள் வைக்கப்படும் பகுதிக்கு தனது சூட்கேஸுகள் சென்றடைந்ததும் பனாகொடை மகேஸ்வரன் அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்றுவிட்டார்.

விமான நிலைய பாதுகாப்பு ஊழியர் விஜயகுமார் தனது பங்கைச் செய்யத் தொடங்கினார். கொழும்பிற்குக் கொண்டுசெல்வதற்காகவென்று அட்டைகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த இரு சூட்கெசுகளையும் ஒன்று இங்கிலாந்திற்கும், மற்றையதை பரீசிற்கும் என்று மாற்றி புதியஅட்டைகளை அவற்றில் மாட்டிவிட்டார். கட்டுநாயக்கவில் இருந்து இவ்விரு நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இவ்விரு சூட்கேஸுகளும் ஏற்றப்படுவதை உறுதிப்படுத்தவே அவர் இதனைச் செய்தார்.

பொதிகள் விமானத்தில் ஏற்றப்பட ஆயத்தமாக இருந்தபோதிலும், மகேஸ்வரன் விமான நிலையத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறவில்லை. மக்களோடு மக்களாக நின்றுகொண்ட அவர், நடப்பவற்றை அவதானிக்கத் தொடங்கினார். ஆனால், அந்த சூட்கேஸுகள் விமானங்கள் ஏற்றப்படவில்லை. பொதிகள் வைக்கப்படும் பகுதியிலேயே அவை கிடந்தன. பின்னர் விமான நிலைய ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பு அவரை தூக்கிவாரிப்போட்டது. "பயணிகளின் கவனத்திற்கு, கொழும்பிற்குப் பயணமாகும் கதிரேஸன் அவர்கள் தனது பொதிகளை அடையாளம் காட்டுமாறு வேண்டப்படுகிறார்" என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பினை விமான நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், மகேஸ்வரன் தன்னை அடையாளப்படுத்த மறுத்ததையடுத்து, இவ்விரு பொதிகளையும் ஏற்றாமலே விமானம் கொழும்பு நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.

பின்னர், இவ்விரு சூட்கேஸுகளும் சென்னை விமான நிலையத்தில் இயங்கி வந்த எயர்லங்கா அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. இவர் கடத்தல்க்காரர்களின் பொருட்களாக இருக்கலாம் என்று சந்தேகித்த சுங்க இலாகாவினர் அவற்றினை  இடதுபக்கத்தில் அமைந்திருந்த சுங்க அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இப்பகுதிக்கு மிக அருகிலேயே வெளிநாட்டுப் பயணிகள் இடைத்தங்கல் பகுதி இருந்தது. இலங்கையிலிருந்து மும்பாயிக்குச் செல்வதற்காக வந்திருந்த இலங்கைப் பெண்கள் பலர் இப்பகுதியில் தமது அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தனர். மும்பாயிலிருந்து அபுதாபி நோக்கிச் செல்வதே அவர்களது நோக்கம்.

நடக்கப்போகும் விபரீதம் மகேஸ்வரனுக்கு நன்கு புரிந்தது. பதற்றமடைந்த அவர், கிண்டியில் வசித்துவரும் தன் நண்பரிடம் சென்றார். அங்கிருந்து விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அங்கிருக்கும் இரு பொதிகளையும் உடனேயே அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவற்றிற்குள் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை எச்சரித்தார். ஆனால், அவர் தம்முடன் விளையாட்டாகப் பேசுவதாக அதிகாரிகள் நினைத்து, தொலைபேசியைத் துண்டித்துக்கொண்டனர். ஆனால் மகேஸ்வரன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இம்முறையும் நிலைமையின் தீவிரத்தை உணரத் தவறிய அதிகாரிகள், கடத்தல்க்காரர்கள் இதனை ஒரு உத்தியாகப் பாவிப்பதாக நினைத்து தமக்குள் விவாதப்பட ஆரம்பித்தனர். ஆனால், மகேஸ்வரன், அவர்களை மூன்றாவது தடவையும் அழைத்தபோது அவர்களுக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. இரு அதிகாரிகள் அப்பொதிகளை விமான நிலையத்திற்கு வெளியே இழுத்துச் செல்ல எத்தனித்தனர்.

அப்போது குண்டு வெடித்தது. நேரம் சரியாக இரவு 10:52 மணி.

அக்குண்டு வெடிப்பு கடுமையான சேதத்தினை ஏற்படுத்தியது. 33 மக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 27 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பெண் ஒருவரின் தலை தனியே துண்டிக்கப்பட்டு விமான நிலையத்தின் கூரையின் இடுக்கில் சென்று மாட்டிக்கொண்டது. பயணிகள் வந்திறங்கும் பகுதியின் மொத்தக் கூரையுமே இடிந்து வீழ்ந்தது. அப்பகுதியில் காத்துநின்றவர்களை நசுக்கியவாறே அப்பாரிய கூரை நிலம்நோக்கி இடிந்து வீழ்ந்திருந்தது.

கொல்லப்பட்டவர்களில் 24 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாதவாறு கடுமையாகச் சேதமடைந்திருந்தன. 18 பெண்களும், 6 ஆன்களுமாக மொத்தம் 24 பேர். கொல்லப்பட்டவர்களுள்  இருவர் சுங்க இலாகா அதிகாரிகள்.

குண்டுவெடித்த செய்தி அன்றிரவே கொழும்பை வந்தடைந்தது. ஜெயார்ர், அதுலத் முதலி மற்றும் அவர்களின் பிரச்சார இயந்திரம் என்று அனைவருமே துரித கதியில் இயங்கத் தொடங்கினார்கள். நடந்த அநர்த்தத்தினை தமது பிரச்சாரத்திற்கான துரும்பாக பாவிக்க அவர்கள் எண்ணினார்கள். இந்தியாவை தற்காப்பு நிலையெடுக்கப் பண்ணுவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க முயன்றார்கள். இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு முகாம்கள் அமைத்து பயிற்சியும் ஆயுதமும் வழங்கிவருவது தொடர்பாக இலங்கையின் புலநாய்வுத்துறை அதுவரை காலமும் சேகரித்து வந்த விபரங்களைத் இதற்காக அவர்கள் பாவித்தார்கள். பல கொழும்புப் பத்திரிக்கைகள் நடைபெற்ற அநர்த்தத்தினை இந்தியாவின் தலையிலேயே சுமத்தின. "பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தீர்கள், இன்று அதனாலேயே தாக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று பல பத்திரிக்கைகள் இந்தியாவிற்குச் சுட்டிக் காட்டுவதுபோல ஆசிரியர்த் தலையங்களை வெளியிட்டு மகிழ்ந்தன.

நடத்தப்பட்ட அநர்த்தத்தினை சுட்டிக்காட்டி இந்திராவுக்கு இரங்கல்க் கடிதம் ஒன்றினை ஜெயார் அனுப்பினார். அக்கடிதத்தில் இந்தியாவைச் சீண்டும் விதமாக பின்வருமாறு எழுதினார்.

"இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட மக்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் இரங்கும் அதேவேளை, ஜனநாயக விழுமியங்களைக் கடைக்கொண்டும், ஜனநாயகவழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைகளையும் கொண்ட அனைவரும் உலகின் ஜனநாயக விழுமியங்களையும் மனிதநாகரீகத்தின் அடிப்படைகளையும் முற்றாக அழித்துவிடக் கங்கணம் கட்டிநிற்கும் பயங்கரவாதிகளை அழிக்க ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதை இக்குண்டுவெடிப்பு காட்டி நிற்கிறது" .

இதற்குப் பதிலளித்த இந்திரா, "இக்குண்டுவெடிப்பினை உங்களைப் போல் நானும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். புத்திசுயாதீனமற்ற இவ்வகையான வன்முறைகளைத் தடுப்பதற்கு இரு அரசாங்கங்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" என்று கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இதனால் மிகவும் கோபமடைந்தார். "குரூர மனம் படைத்தவர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவம்" என்று அவர் இதனைக் கண்டித்தார்.

எந்தவொரு அமைப்புமே இதற்கு உரிமைகோர முன்வரவில்லை. இக்குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அவமானத்தையடுத்து இதனை அடக்கிவாசிக்க இந்தியாவும் போராளி அமைப்புக்களும் முயன்றன. ஆகவே, இக்குண்டுவெடிப்பு இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் கைவண்ணம் என்று அவர் குற்றஞ்சாட்டின.

ஆனால் தமிழ்நாடு பொலீஸ் தன் கடமையைச் செய்தது. மகேஸ்வரன் தங்கியிருந்த நீலாங்கரை வீட்டைச் சோதனையிட்ட பொலீஸார் அங்கிருந்து வெடித்த குண்டினை ஒத்த இன்னொரு குண்டிணை மீட்டனர். மகேஸ்வரனைக் கைதுசெய்ததோடு பின்னர் விக்னேஸ்வர ராஜா, தம்பிராஜா ஆகியோரையும் இன்னும் ஏழு தமிழ்நாட்டுத் தமிழர்களையும் கைதுசெய்தனர். 1985 ஆம் ஆண்டு அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று இலங்கையர்களான மகேஸ்வரன், தம்பிராஜா மற்றும் விக்னேஸ்வர ராஜா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட ஏனைய அனைவருக்கும் ஆயுள்த்தண்டனை வழங்கப்பட்டது. பிணையில் வந்த மூன்று இலங்கைத் தமிழர்களும் பின்னாட்களில் பிணையினை முறித்துத் தப்பிச் சென்றனர். 

பெங்களூருக்குத் தப்பிச்சென்று மறைந்துவாழ்ந்த மகேஸ்வரன் 1998 ஆம் ஆண்டு மீண்டும் கைதானார். அவரதும், அவரது இயக்கமான தமிழ் ஈழ இராணுவத்தினதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பங்களிப்பென்பது மிகவும் சொற்பமானது. அவரது திறமையும், முயற்சியும் வீணாக்கப்பட்டுப்போனது.

மீனாம்பாக்கம் குண்டுவெடிப்பிலிருந்து அதியுச்ச பிரச்சார பெறுபேற்றினை பெற்றுவிட ஜெயாரும் லலித் அதுலத் முதலியும் முயன்றனர். ஆனால் இந்த பிரச்சார உத்திகள் அதிக காலம் நிலைக்கவில்லை. அடுத்துவந்த சில நாட்கள் நிலைமையினை மாற்றிப்போட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டின் ஆவணிமாதம் தமிழர் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

அந்த மாதத்திலேயே பிரபாகரன் தனது அமைப்பின் நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஒன்றினைச் செய்வதாக அறிவித்தார். இனிமேல் தனது அமைப்பு தாக்கிவிட்டு ஒழியும் உத்தியினைக் கடைப்பிடிக்காது என்றும், நிலையான கெரில்லா தாக்குதல் உத்தியினைக் கைக்கொள்ளும் என்றும் கூறினார்.

"நாங்கள் தாக்கிவிட்டு மறையும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து நிலையான கெரில்லா தாக்குதல் பாணிக்கு மாறவிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

சென்னை விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் அல்லது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண மக்கள் என்ற அடிப்படை அறிவில்லாத செயல்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்

இராணுவ அடக்குமுறைமீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்களின் மனோநிலையினை தமக்குச் சார்பாக பயன்படுத்த போராளிகள் முற்பட்டனர், முக்கியமாக புலிகள் இச்செயற்பாட்டில் முன்னிலை வகித்தனர். இராணுவத்தினர் மீதும் பொலீஸார் மீதும் தமது தாக்குதல்களை அவர்கள் தீவிரப்படுத்தினர். மேலும், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கிவிட கண்ணிவெடித் தாக்குதல்களையும் கைக்கொள்ளத் தொடங்கினர்.

மன்னார் மாவட்டத்தில், பூநகரிப் பாதையில் அமைந்திருந்த தள்ளாடி இராணுவ முகாமின் இரவு நேர ரோந்தை எதிர்பார்த்து விக்டர் தலைமையிலான புலிகளின் குழுவொன்று காத்திருந்தது. ஆவணி 11 ஆம் திகதி அதிகாலை 4:30 மணிக்கு ஜீப் வண்டியிலும், ட்ரக்கிலும் ரோந்துவந்த இராணுவத்தினரின் அணிமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருந்த 13 இராணுவத்தினரில் 6 பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர், இன்னுமொருவர் காயப்பட்டார்.

வழமைபோல தம்மீதான தாக்குதல்களுக்கு பொதுமக்கள் மீது தனது பழிவாங்கல்த் தாக்குதல்களை இராணுவம் ஆரம்பித்தது. சிவில் உடையில் மன்னார் நகரத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் தமிழருக்குச் சொந்தமான கடைகளையும் வீடுகளையும் எரிக்கத் தொடங்கினர். அடம்பன் பகுதியில் பொதுமக்களைத் தாக்கியதோடு வீடுகளையும் எரித்தனர். சிலவிடங்களில் முஸ்லீம் மக்களும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். இந்த நாட்களில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இருபது. கொல்லப்பட்டவர்களில் ஆறு இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடக்கம். அவர்களில் ஒருவர் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்குத் திரும்புவதற்காகக் காத்திருந்தவர்.

பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் குறித்து மன்னார் ஆயர் ஜெயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்திருந்தார். "ஆக்கிரமிப்பில் ஈடுபடும் இராணுவத்தினர் போன்று அவர்கள் தமது வழியில் அகப்பட்டவை எல்லாவற்றையும் அழித்து நாசம்செய்தபடி செல்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவினை மதிப்பிட அமைச்சர் எச்.எம்.மொகம்மட் அங்கு சென்றிருந்தார். ஜெயாருக்கு அவர் வழங்கிய அறிக்கையில் மன்னாரில் எரிக்கப்பட்ட பெரும்பான்மையான கடைகளும் வீடுகளும் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மொகம்மட்டிடம் பேசுகையில், தள்ளாட்டி இராணுவ முகாமில் தங்கியிருந்த இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட்டின் அதிகாரிகளே முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும், வைகாசியில் கொழும்பில் இயங்கிவரும் மொசாட்டின் அலுவலகத்திற்கு முன்னால் முஸ்லீம்கள் சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பழிவாங்கவே இது நடத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 

அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கூட மன்னாரில் ஏற்படுத்தப்பட்ட அழிவினைப் பார்வையிடச் சென்றிருந்தனர். அப்போது கொழும்பில் நடந்துகொண்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் தான் கண்டவற்றை அமிர்தலிங்கம் அறிக்கை வடிவில் வெளியிட்டார். இராணுவத்தினரைப் பாவித்து அரசாங்கம் தமிழரை அழித்துக்கொண்டிருக்கும் நிலைமையில் தமிழருக்கான அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசுவது பயனற்றது என்று அவர் குறிப்பிட்டார். "தமிழ் மக்கள் இராணுவத்தினரால் நாள்தோறும் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகையில் நாம் இங்கே அமர்ந்திருந்து எதுவுமே நடக்காதது போல பாசாங்கு செய்துகொண்டு இருக்க  முடியாது" என்றும் அவர் கூறினார்.

இந்திரா காந்தியிடம் கோரிக்கையொன்றினை அன்று விடுத்த அமிர், "பல லட்சக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலை ஒன்றினைச் சந்திக்கும் முன்னர் அவர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் தமிழர் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களையடுத்து தமிழ்நாடு, சென்னையில் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். தமிழர்களைக் காப்பாற்ற இலங்கையில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணிகளை அவர்கள் நடத்தினர். சென்னையில் அமைந்திருந்த இலங்கையின் துணைத் தூதுவராலயத்திற்கு பேரணியாகச் சென்ற மாணவர்களை பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்து கலைக்கவேண்டியதாயிற்று. சென்னையில் மேலும் இவ்வகையான போராட்டங்கள் நடைபெறலாம் என்று அஞ்சிய அன்றைய தமிழ்நாடு அரசு பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஒருவார விடுமுறை அளிப்பதாக அறிவித்தது (அன்று எம்.ஜி.ஆர் செய்ததையே 2009 இல் கருநாநிதியும் செய்தார்).

இத்தாக்குதல்களையடுத்து கொழும்பு மீது இந்திரா கடுமையான அதிருப்தி கொண்டார். அன்று புது தில்லியின் மனோநிலை குறித்து இந்துவின் செய்தியாளர் ஜி.கே.ரெட்டி பின்வருமாறு எழுதுகிறார்,                 " தமிழர்கள் மீது அரசு நடத்திவரும் வன்முறைகளால் இந்திரா காந்தி தனது பொறுமையினை இழந்துவருகிறார்" என்று எழுதினார்.

ஆவணி 15 ஆம் திகதி செங்கோட்டையில் இருந்து இந்திய மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில் இலங்கையரசை அவர் கடுமையாக எச்சரித்தார். கொழும்பு அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களைக் கொன்றுவந்தால், இந்தியா வாளாவிருக்க முடியாது என்று அவர் கூறினார்.

இராணுவத்தினரினதும், பொலீசாரினதும் பழிவாங்கல் நடவடிக்கைகளால் போராளிகளின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டெலோ, .பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களும் செயற்பாட்டில் இறங்கலாயின. புலிகள் நடத்திவரும் தாக்குதல்களின் பிரமாண்டத்தைக் காட்டிலும் தாம் அதிகமாகச் செய்துவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் நகர்வுகள், அவர்களின் சிறிய முகாம்கள் ஆகியவற்றின் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்குவதையே அன்று புலிகள் செய்துவந்தனர். அவர்களின் இந்த முயற்சி பலனளித்திருந்தது.பல பகுதிகள் இதன்மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அப்பகுதிகளில் தமது நிர்வாகக் கட்டமைப்புக்களையும் புலிகள் 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து செயற்படுத்த ஆரம்பித்திருந்தனர்.

ஆவணி 11 முதல் ஆவணி 14 வரையான நான்கு நாட்களில் மட்டும் புலிகள் இரு பொலீஸ் நிலையங்களைத் தாக்கியதோடு கண்ணிவெடித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். ஆவணி 11, சனிக்கிழமை காலை இராணுவத்தினரின் சீருடையில் வந்த சுமார் 50 புலிகள் ஊர்காவற்றுரையில் இயங்கிவந்த பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் கூறுகையில் பொலீஸாரும் போராளிகளும் காலை 3:30 மணியில் இருந்து நேரடித் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகவும், முடிவில் போராளிகளின் முயற்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

சண் மற்றும் பிற்காலத்தில் டெயிலி மிறர் பத்திரிக்கையின் ஆசிரியராகக் கடமையாற்றிய லலித் அழகக்கோன் ஊர்காவற்றுறை தாக்குதலை பின்வருமாறு விபரித்தார்,

"ஊர்காவற்றுறை பொலீஸ் நிலையத்தின்மீதும் தபால் அலுவலகத்தின்மீதும் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. காலை 3:30 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற நேரத் துப்பாக்கிச் சமரில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்". 

ஆவணி 14 ஆம் திகதி, செவ்வாயன்று வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள். காலை 4:30 மணிக்கு பொலீஸ் நிலையத்திலிருந்த பாதுகாப்பு வெளிச்சம் மீது தாக்குதல் நடத்தி, அதனை செயலிழக்கப் பண்ணியதன் பின்னர் இருட்டில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பொலீஸ் நிலையத்தின் முற்பகுதியை மட்டும் விட்டு விட்டு ஏனைய மூன்று பகுதிகளில் இருந்தும் பொலீஸ் நிலையத்தின் மீது கிர்னேட்டுக்களையும், பெற்றொல்க் குண்டுகளையும் எறிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸ் கொமாண்டோக்கள் உள்ளிருந்து நான்குதிசைகளிலும் கண்ணுக்குத் தெரியாத எதிரிமீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இத்தாக்குதலில் சுமார் 50 பொலீஸார் கொல்லப்பட்டதுடன் கட்டடமும் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது. ஆனாலும், பொலீஸார் புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதேநாள் இரவு, .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவம் காரைநகரில் அமைந்திருந்த பாரிய கடற்படை முகாம் தொகுதி மீது துணிகரமான, பாரிய தாக்குதல் ஒன்றினை ஆரம்பித்தது. இன்று .பி.டி.பி யின் தலைவராக இருக்கும் டக்கிளஸ் தேவானந்தாவே அன்று மக்கள் விடுதலை இராணுவத்தின் தளபதியாக இருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அவர் சென்னையில் தங்கியிருந்தார். முன்னாள் .பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினரும், தற்போதைய தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தார்.

தோல்வியில் முடிவடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இன் காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதல்

மக்கள் விடுதலை இராணுவத்தின் யாழ்ப்பாணத் தளபதியான ரொபேர்ட் என்று அறியப்பட்ட சுபத்திரனினாலும் , சுரேஷ் பிரேமச்சந்திரனினாலும் காரைநகர் முகாம் மீதான தாக்குதலினை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. தாம் அண்மையில் பயன்படுத்தத் தொடங்கியிருந்த இரு புதிய வழிமுறைகளைப் பாவித்து இத்தாக்குதலினை நடத்தலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். தமிழ்நாடு கும்பகோணம் முகாமில் பயிற்றப்பட்டவரும், லெபனான் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டவருமான திருகோணமலையைச் சேர்ந்த சின்னவன் என்பவர் மோட்டார் உந்துகணை தொடர்பான பயிற்சியினைக் கொண்டிருந்தார். தனது இயக்கத்திற்காக மோட்டார்க் குண்டுகளையும் அவரே உள்ளூரில் தயாரித்துமிருந்தார். இதனைவிடவும், இயக்கத்தின் இன்னொரு உறுப்பினரான சுதன் எனப்படுபவரால் தயாரிக்கப்பட்ட உள்ளூர்க் கவச வாகனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபடலாம் என்று .பி.ஆர்.எல்.எப் நினைத்தது.

மோட்டார்த் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் முகாமின் முன்வாயில் ஊடாக கவச வாகனத்தை ஓட்டிச் செல்வதே அவர்களின் திட்டம். ஆனால், இரு திட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன. அவர்கள் ஏவிய பெரும்பாலான மோட்டார்கள் வெடிக்கவில்லை. மேலும், அவர்களின் கவச வாகனமும் முகாமின் வாயிலிற்பகுதியில் செயலிழந்து நின்றுவிட்டது. ஆரம்பத்தில் முகாமின் பிற்பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றிருந்த கடற்படையினர், .பி.ஆர்.எல்.எப் இன் தாக்குதல் பிசுபிசுத்துப் போனதையடுத்து முகாமின் முற்பகுதி நோக்கி முன்னேறி கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். கடற்படையினரின் பலத்த எதிர்த்தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட, கொல்லப்பட்ட தமது சகாக்களையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு மீதிப்பேர் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றனர். இத்தாக்குதலில் .பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தமது முதலாவது பெண்போராளியை இழந்திருந்தனர். தனது 15 வயதில் மக்கள் விடுதலை இராணுவத்தில் ஷோபா என்கின்ற அந்தப் பெண்போராளி இணைந்திருந்தார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரஞ்சித் said:

மோட்டார்த் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் முகாமின் முன்வாயில் ஊடாக கவச வாகனத்தை ஓட்டிச் செல்வதே அவர்களின் திட்டம். ஆனால், இரு திட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன. அவர்கள் ஏவிய பெரும்பாலான மோட்டார்கள் வெடிக்கவில்லை.

இந்த தாக்குதலை முன்னரே அறிந்திருந்த புலிகள் தாக்குதல் தோல்வியிலிருந்த ஈபிஆர் போராளிகளை பத்திரமாக மீட்டதாக கதை வந்தது.

இதில் உண்மை பொய் தெரியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிவெடி யுத்தம்

போராளிகளின் தாக்குதல்களின் மும்முரம் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வட கிழக்கில் அதிகரித்துவரும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தது. மேலும், யாழ்ப்பாணம் செல்லும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் தமது பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது. யாழ்ப்பாணத்திற்கு மரக்கறிகளையும், தேங்காய்களையும் எடுத்துச் சென்ற பாரவூர்தியொன்று பயங்கரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி சாரதியும், நடத்துனரும் கொல்லப்பட்டதாக அவ்வறிக்கை கூறியிருந்தது.

ஆவணியின் இறுதிப்பகுதியில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினருக்கு அச்சுருத்தலாகவும், சவாலாகவும் மாறியிருந்தன. ஆகவே, இதற்கு முகம் கொடுப்பதற்காக கண்ணிவெடிகளில் இருந்து இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக் கூடிய கவச வாகனங்களை தென்னாபிரிக்காவிலிருந்து அரசு கொள்வனவு செய்தது. இதற்கு மேலதிகமாக இராணுவ ரோந்துகளுக்கு முன்னர் வீதிகளை சோதனை செய்து, கண்ணிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியது. போராளிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களும், இராணுவத்தினரின் காப்பு நடவடிக்கைகளும்  இருதரப்பினரதும் புத்திசாதுரியங்களுக்கிடையிலான போட்டியாக மாறியதுஆவணி 24 ஆம் திகதி நடைபெற்ற இரு சம்பவங்கள் அக்காலத்தில் நிலவிய சூழ்நிலையினை விளக்கப் போதுமானவை.

கண்ணிவெடிகளுக்குத் தாக்குப்பிடிக்கும் பவள் கவச வாகனத்தைப் புரட்டிப் போட்ட புலிகள்  

முதலாவது சம்பவம் கரவெட்டி மேற்கில் இருக்கும் கல்லுவம் மண்டான் பகுதியில் நடைபெற்றது. இப்பகுதியினூடாகச் செல்லும் பிரதான வீதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலை வழங்கியவர்களே புலிகள்தான். ஆகவே, இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் அப்பகுதிக்குச் சென்று தமது தேடுதலை ஆரம்பித்தனர். கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்குப் பாதுகாப்பாக இன்னொரு தொகுதி இராணுவத்தினர் தென்னாபிரிக்க பவள் கவச வாகனங்களில் வந்திருந்தனர். கண்ணிவெடி புதைக்கப்பட்ட பகுதியின் மேலாக கவச வாகனம் ஏறியபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டது. பவள் வாகனம் குடைசாய உள்ளிருந்த 8 இராணுவத்தினர் அவ்விடத்தில் பலியானார்கள்.    

அதே நாளன்று நீர்வேலிப் பகுதியில் இவ்வாறான கண்ணிவெடி அகற்றும் பிரிவொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

புரட்டாதி மாதமளவில் தமது கண்ணிவெடித் தாக்குதல் திறமையினை புலிகள் நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். இம்மாதத்தின் முதலாம் திகதி வடமாராட்சி திக்கம் பகுதியில் அவர்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க பொலீஸார் நடத்திய தாக்குதல்களில் அப்பகுதியில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதோடு வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது.

இருநாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 3 ஆம் திகதி வடமராட்சி, கிழக்குப் பருத்தித்துறைப் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த எட்டு மீனவர்களை ரோந்துவந்த கடற்படையினர் சுட்டுக் கொன்றனர்.

இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் மூலமாகவும், வெளிநாட்டு இராணுவ உதவிகள் மூலமாகவும் போராளிகளின் ஆயுதச் செயற்பாட்டினை வடக்கிற்குள் மட்டுப்படுத்திவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி நம்பிவந்தார். ஆனால், அவரின் நம்பிக்கையினைச் சிதைக்கும் விதமாக புரட்டாதி 10 ஆம் திகதி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஸ்த்தரித்துக்கொண்டனர். புரட்டாதி 11 ஆம் திகதி வர்த்தக அமைச்சின் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய லலித், பயங்கரவாதம் கிழக்கிற்கும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கிழக்கிற்கான பாதைகளை நாம் மூடிவருகிறோம். இதற்காக வடக்குக் கிழக்கு எல்லையோரங்களில் சிங்களக் கிராமங்களை நாம் உருவாக்கி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லையோர சிங்களக் குடியேற்றங்களை இலக்குவைத்த புலிகள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் லலித் அதுலத் முதலியின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்டுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்கள் மீது தமது பார்வையைத் திருப்பினர் புலிகள். பாலஸ்த்தீனத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய அரசின் திட்டத்தினைனை நகலாகக் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட இவ்வகைச் சிங்களக் குடியேற்றங்கள் திருகோணமலை முதல் முல்லைதீவு வரையான கரையோரப்பகுதிகளிலும், 1950 களில் அமைக்கப்பட்ட சிங்களைக் குடியேற்றமான பதவியாவுக்கும் பாரம்பரிய தமிழ்க் கிராமமான நெடுங்கேணிக்கும் இடையே தமிழ்ப் பிரதேசங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அமைக்கப்பட்ட சிங்கள மீனவக் குடியேற்றங்களான கொக்கிளாய் நாயாறு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் விவாசாயக் குடியேற்றக்கிராமமான பதவியாவின் விஸ்த்தரிப்பாகவும் இவை உருவாக்கப்பட்டு வந்தன. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.

 செம்மலைத் தாக்குதல்

மாத்தையா தலைமையிலான 16 போராளிகள் அடங்கிய புலிகளின் அணியொன்று, முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில், முல்லைத்தீவு நகரிலிருந்து பத்துக் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் செம்மலைக் கிராமத்தில் கண்ணிவெடியொன்றைப் புதைத்துவிட்டு இராணுவத்தினரின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலை 10:15 மணிக்கு ஜீப் வண்டி முன்னல் வர பின்னால் இரு ட்ரக்குகளில் இராணுவத்தினர் அப்பகுதிநோக்கி வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி தம்மைக் கடக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்த புலிகளின் அணி, நடுவில் வந்துகொண்டிருந்த ட்ரக்கினை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்கியது. ட்ரக் கண்ணிவெடியில் வெடித்துச் சிதற பின்னால் வந்த இரண்டாவது ட்ரக் வண்டியில் இருந்த இராணுவத்தினர் வெளியே குதித்துத் தாக்குதலில் ஈடுபட, புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சமர் மூண்டது. ஒருகட்டத்தில் தாக்குதலை முடித்துக்கொண்டு  புலிகளின் அணி பின்வாங்கிச் சென்றது.

இந்தச் சண்டையில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட மேலும் மூவர் காயமடைந்தனர். முல்லைத்தீவு முகாமிலிருந்து வந்த மேலதிக இராணுவத்தினர் அப்பகுதியை சல்லடை போட்டுத் தேடினர். இச்சண்டையில் நான்கு பயங்கரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக கொழும்பில் அரசாங்கம் கோரியபோதும், புலிகள் அதனை மறுத்திருந்தனர். மேலதிக இராணுவத்தினர் அப்பகுதிக்கு வருமுன்னரே தமது அணி அப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர்கள் அறிவித்தனர். 

கொக்கிளாயில் இராணுவத்தின்மேல் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சிலர் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினர். ஆனாலும், அப்பகுதியில் தான் முன்னெடுத்து வந்த இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை விஸ்த்தரிப்பதில் இருந்து அரசாங்கம் சிறிதும் பின்வாங்க விரும்பவில்லை.

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திம்புலாகலை பிக்கு - காவி உடையில் இனவாதப் பேய்

large.Dimbulagalamonk.jpg.512bea517d04817ff06cffc3969651e1.jpg

1983 ஆம் ஆண்டு புரட்டாதி 8 ஆம் திகதி காலை என்னைத் தொடர்புகொண்ட உள்ளகத்துறை அமைச்சர் தேவநாயகத்தின் ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் என்னை அவசர விடயம் ஒன்றிற்காகச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அமைச்சரை அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன்.

தனது தொகுதியான கல்க்குடாவில் சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்துவிட்டதாகவும் இதுதொடர்பான தனது அதிருப்தியை தான் ஜெயாரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இச்செய்தியை டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் வெளியிடவேண்டும் என்றும் என்னைக் கேட்டுக்கொண்டார்.

large.Kalkudah.png.20fa1d17de93b5555a70700fedf52e5e.png

கல்க்குடா

அவரது வேண்டுகோள் எனக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தியது. இதில் எனக்கிருக்கும் சிக்கலை அவருக்கு விளங்கப்படுத்தினேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை அரசுக்குச் சொந்தமான ஒரு ஊடகம் என்பதனையும், ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அது இயங்கிவருவதையும் அவருக்குப் புரியப்படுத்தினேன். பத்திரிக்கை ஆசிரியர் இவ்வாறான செய்தியொன்றினைப் பிரசுரிக்க விரும்பப்போவதில்லை என்பதுடன், அவ்வாறு பிரசுரிக்கப்படுமிடத்து அது ஜனாதிபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதோடு இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துவிடும். ஆகவே, அமைச்சர் தனது நிலைப்பாட்டினை பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினூடாக வெளிப்படுத்த முடியும் என்றும், அதனை என்னால் செய்தியாக்க முடியும் என்றும் அவருக்கு ஆலோசனை வழங்கினேன்.

அன்று மாலையே தேவநாயகம் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினை நடத்தினார். தனது தொகுதிற்குட்பட்ட வடமுனைப் பகுதியில் நடைபெற்றுவரும் முக்கியமான விடயம் தொடர்பாக நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தவே பத்திரிக்கையாளர்களை தான் அழைத்ததாக அவர் குறிப்பிட்டார். மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயகக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கமைய மாதுரு ஓயா பகுதியில் தமிழ் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விவசாயக் காணிகளில் தெற்கிலிருந்து வரும் சிங்கள விவசாயிகளை திம்புலாகல தேரை என்றழைக்கப்படும் சீலாலங்கார தேரை நீதிக்குப் புறம்பான முறையில் அடாத்தாகக் குடியமர்த்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

large.MaduruOyascheme.png.bb978266ab73ebe9789ead0441cce703.png

மாதுரு ஓயா குடியேற்றம்

 

புரட்டாதி முதலாம் திகதி 700 சிங்களவர்களைத் தெற்கிலிருந்து அழைத்துவந்த திமுபுலாகலை தேரை, அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து விடுத்த வேண்டுகோளினை உதாசீனம் செய்து தொடர்ந்தும் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் கூறினார் தேவநாயகம். 1974 ஆம் ஆண்டு இதே பகுதியில் அடாத்தாகச் சிங்களவர்கள் குடியேற முயன்றபோது பொலீஸாரின் உதவியுடன் அவர்களை அங்கிருந்து அரசாங்க அதிபரினால் அப்புறப்படுத்த முடிந்தபோதும், இப்போது பொலீஸார் அரசாங்க‌ அதிபருக்கு உதவ மறுப்பதோடு சிங்களக் குடியேற்றத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதாகக் கூறினார். 

நான் இந்த விடயம் பற்றி மேலும் தேடியபோது, அடாத்தான‌ இச்சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் இருப்பது தேவநாயகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதே மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்க என்பதுடன், அவரின் ஆசீருடன் இயங்கும் திம்புலாகலை தேரை அரசாங்க அதிபரை உதாசீனம் செய்துவருவதுடன், பொலீஸாரும் அமைச்சர் காமிணியின் சொற்படி நடப்பதையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. வடமுனைப் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாகக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பது முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பொது மேலாளர் ஹேர்மன் குணரட்ன என்பதும் எனக்குத் தெரிந்தது. 

மலையகத்தில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறைகளையடுத்து பல மலையகத் தமிழர்கள் வடமுனைப்பகுதியில் அரச காணிகளில் குடியேறிவருவதாக வேண்டுமென்றே வதந்தி ஒன்று பரப்பப்பட்டது. இதனை மகாவலி அபிருத்தியமைச்சர் காமிணி திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார் ஹேர்மன் குணரட்ன. இதனையடுத்து அப்பகுதிகளில் உடனடியாக சிங்களவர்களைக் குடியேற்றுமாறு காமிணி அவருக்கு உத்தரவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து திம்புலாகலை தேரையினைத் தொடர்புகொண்ட ஹேர்மன், சிங்களவர்களை அப்பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கோரியதுடன், இக்குடியேற்றத்திற்கான அனைத்து உதவிகளையும் மகாவலி அபிவிருத்திச் சபையே வழங்கும் என்றும் உறுதியளித்தார்.  அமைச்சரினதும், அமைச்சின் மேலாளரினதும் உத்தரவாதத்தினையடுத்தே திம்புலாகலை தேரை சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்திருந்தார்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து வடமுனையில் இடம்பெற்றுவந்த அடாத்தான சிங்களக் குடியேற்றம் தொடர்பான கடிதம் ஒன்றினை உள்ளக அமைச்சர் என்கிற ரீதியிலும், அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியிலும் அமைச்சர் தேவநாயகத்திற்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய கடிதத்தின் முதற்பகுதி, இப்பகுதியில் இடம்பெற்றுவரும் குடியேற்றங்கள் தொடர்பான சரித்திரத்தை விளக்கியிருந்தது. கடிதத்தின் இப்பகுதியை பத்திரிக்கையாளர்களுக்குப் படித்துக் காட்டிய அமைச்சர் தேவநாயகம், "இப்பகுதியில் மலையகத் தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் குடியேறிவருவதாக திம்புலாகலை தேரை பரப்பி வரும் பொய்யான பிரச்சாரத்திற்கு இதன்மூலம் பதில் வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். 

மேலும் கள்ளிச்சேனை, ஊற்றுச்சேனை ஆகியன பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் என்றும் அக்கடிதத்தில் விரிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கமைய 1958 ஆம் ஆண்டிலேயே 685 ஏக்கர்கள் உயர் நிலக் காணிகளும், வயற்காணிகளும் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன் இப்பகுதிகளுக்கான நீர்ப்பாசணத் திட்டமும் நடைமுறையில் இருந்தது என்கிற விடயங்களும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தொடர்ந்து பேசிய தேவநாயகம் நீர்ப்பாசண அமைச்சுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இத்திட்டத்தின் கீழ் 10 மலையகத் தமிழ்க் குடும்பங்களைத் தான் குடியமர்த்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 1977 ஆம் ஆண்டு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையடுத்து இன்னும் 48 மலையகத் தமிழ்க் குடும்பங்களை மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினூடாக இப்பகுதியில் தான் குடியமர்த்தியதாக அவர் கூறினார். மேலும், இப்பகுதியில் மீதமாயிருந்த காணிகளை இதேபகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த தமிழ் விவசாயிகளுக்குத் தான் வழங்கியதாகவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் மாதுரு ஓயா நீர்ப்பாசணத் திட்டத்தின் வலதுபுற அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்பட்ட‌ இன்னும் 600 ஏக்கர் காணிகளை 200 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் சுவீகரித்துக்கொண்டதாகவும், ஆனால் 1979 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்க கொண்டுவந்த காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம் இக்காணிகள் இவர்களுக்கே சொந்தமாவதாகவும் கூறினார்.

 large.HermonGunaratne.jpg.93595a42b4e74655efa4c9aabc4a72dd.jpg

 மலிங்க ஹேர்மன் குணரட்ன‌ (இடது)

 ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மலையகத் தமிழர்களை கிழக்கு மாகாணத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறுமாறு தூண்டிவருகின்றனர் என்பது அபத்தமான பொய்ப்பிரச்சாரம் என்றும் தேவநாயகம் கூறினார்.

மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டத்தில் தமிழர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே திம்புலாகல தேரை சிங்களவர்களை அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றிவருவதாக தேவநாயகம் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் தெரிவித்தார். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த காணிகளிலேயே சிங்களவர்களை பெளத்த பிக்கு தற்போது குடியமர்த்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். "தமிழருக்குச் சொந்தமான காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் குடியேற முயற்சிக்குமிடத்து, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இப்பகுதியில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. நான் இதுகுறித்து ஜெனாதிபதிக்குத் தெரிவித்திருப்பதுடன், இன்னொரு இனக்கலவரம் ஏற்படுவதைத் தடுக்குமாறும் கோரியிருக்கிறேன். அவர் சரியான முடிவினை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைத்து,  அழித்துவிட உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் 

 

தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் அழைப்பிற்கு வந்தவர்கள் ஓரளவிற்கு நடுநிலைமையுடன் நடந்துகொணடதுடன் அதற்குத் தேவையானளவு முக்கியத்துவத்தையும் தமது ஊடகங்களில் வழங்கியிருந்தனர். ஆனால், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மகாவலி அபிவிருத்தி அமைச்சிற்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிய, ஆனால் பலம்வாய்ந்த குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டுடனான தனிநாட்டுக்கான கோரிக்கையின் அஸ்த்திவாரத்தினை முற்றாகத் தவிடுபொடியாக்கிவிட மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் தாம் எடுத்துவரும் இரகசிய நடவடிக்கைகளை தேவநாயகத்தின் இந்த முயற்சி முறியடித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆகவே தமது இரகசியத் திட்டத்தினை துரிதப்படுத்தும் வேலைகளை அவர்கள் ஆரம்பித்தனர்.

மகாவலி அமைச்சில் செயற்பட்டு வந்த அதிதீவிர சிங்கள அமைப்பினால் இந்த இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இக்குழுவிற்கு திட்டமிடல்ப் பிரிவின் இயக்குநர் டி.எச். கருணாதிலக்கவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்கவின் செயலாளர் ஹேமப்பிரியவும் தலைமை தாங்கினர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சில் பணியாற்றிய ஏனைய உயர் அதிகாரிகள், சர்வதேச பிரசித்தி பெற்ற சிங்களக் கல்விமான்கள் ஆகியோரும் இத்திட்டத்திற்கு உதவிகளை வழங்கிவந்தனர். தமது திட்டத்தினை செயற்படுத்த மலிங்க ஹேர்மன் குணரட்ணவை இக்குழுவினர் அமர்த்திக்கொண்டனர். அமைச்சகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எனும் பதவியும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு கொழும்பில் அவரது வீட்டில் என்னுடன் பேசிய ஹேர்மன் குணரட்ண, தமது இரகசியத் திட்டத்திற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்க முழு ஆதரவினையும் வழங்கியதாகக் கூறினார். ஜனாதிபதி ஜெயாரும் இத்திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கியிருந்ததாக தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தனது நம்பிக்கைக்கான காரணங்களாக பின்வரும் இரு விடயங்களை அவர் முன்வைத்தார். "முதலாவது காரணம், எமது இரகசியத் திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய மூன்று முக்கிய மனிதர்களும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்பட்டவர்கள்". அவர் குறிப்பிட்ட அந்த மூன்று முக்கிய நபர்கள், ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தன, ஜெயார் தனது இன்னொரு மகனாக நடத்திவந்த அமைச்சர் காமிணி திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜெயாரினால் நியமிக்கப்பட்ட பண்டிதரட்ண ஆகியோராகும். இவர்கள் மூவரும் ஜெயாரிடமிருந்து எந்த விடயத்தையும் மறைப்பதில்லை என்று அறியப்பட்டவர்கள்.

ஹேர்மன் குணரட்ண கூறிய இரண்டாவது காரணம், மாதுரு ஓயா சிங்கள ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யுமாறு ஜெயார் அறிவித்த அதே நாளான ஐப்பசி 6 ஆம் திகதி தனது வீட்டில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்வில் தன்னிடம் கேள்விகேட்ட தாஸமுதலாலிக்குத் காமிணி திசாநாயக்க வழங்கிய பதிலாகும். இதுகுறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம். காமிணியிடம் பேசிய தாஸ முதலாளி, "மகாவலி அமைச்சின் இரகசியத் திட்டம் குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா?" என்று வினவியிருந்தார்.  அதற்குப் பதிலளித்த காமிணி, "ஜனாதிபதிக்கு இத்திட்டம் தெரியும் என்பது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிகரமாக பூரணப்படுத்த ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் பெருமளவு பணத்தினை அவர் வழங்க முன்வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார்.

large.Panditharadna.jpg.8217cd8e5885367aed749ac4a9d38cc7.jpg

பண்டிதரட்ண

1983 ஆம் ஆண்டின் கறுப்பு யூலை இனக்கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒன்றில், பண்டிதரட்ண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த இரகசியத் திட்டத்திற்கான மூலம் விதைக்கப்பட்டது. அமைச்சகத்தில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளுக்கு இத்திட்டம் தெரியாதவகையில் மிகவும் இரகசியமான முறையில் தீட்டப்பட்டது.

இரகசியத் திட்டம் இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. முதலாவது, தமீழத்திற்கான அடிப்படையினை முற்றாக அழிப்பது. இதனை அடைவதற்கு தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பினையும், ஒருமைப்பாட்டினையும் உடைக்கும் நோக்கில், தமிழர் தாயகத்தின் மாதுரு ஓயா, யன் ஓயா, மல்வத்து ஓயா ஆகிய நதிகளை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது.  மாதுரு ஓயா விவசாயக் குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையே இருந்த நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்படும். யன் ஓயாக் குடியேற்றத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு கடுமையாகச் சிதைக்கப்படும். மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்படும்.

large.MaduruOyariver.jpg.049e862ff17af421d40da33e13c18b8c.jpg

திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலத்தொடர்பை அறுத்தெறியும் மாதுரு ஓயா குடியேற்றத் திட்டம்

large.YanOya.jpg.49cfd1a3ca6138f96b56f6df0f09ff01.jpg

திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினைச் சிதைக்கும் யன் ஓயாக் குடியேற்றம் 

large.Malwathu-Oya.png.836ec482877407a8b78ff0b3d8aa0169.png

புத்தளம் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் மல்வத்து ஓயா குடியேற்றம்

இரகசியத் திட்டத்தின் முதலாவது கட்டம் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை விலத்தியே அமுல்ப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

 "இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்க" எனும் தலைப்பில் தான் எழுதிய புத்தகம் தொடர்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் 1990 ஆம் ஆண்டு ஆவணி 26 ஆம் திகதி, இந்த இரகசியத் திட்டத்தினை முன்னெடுத்தவர் என்கிற வகையில் ஹேர்மன் ஒரு கட்டுரையினை வரைந்திருந்தார். என்னுடன் பேசுகையில் இத்திட்டத்தின் எல்லைகள் குறித்தும் குறிப்பிட்டார் ஹேர்மன். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் 50,000 சிங்களவர்களைத் தாம் குடியேற்றத் திட்டமிட்டதாகவும், இதன்மூலம் இப்பகுதிகளின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றிவிடுவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார். 

குணரட்ணவுடன் பேசும்போது அவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தனது திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று அவர் கொண்டிருந்த உறுதிப்பாடும், அதற்காக அவர் நேர்மையாக உழைத்த விதமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, "நீங்கள் எதற்காகச் சண்டை பிடிக்கிறீர்கள்?" என்று என்னைக் கேட்டார் ஹேர்மன். "தமிழர்களுக்கென்று தனியான நாட்டினை உருவாக்கவே போராடுகிறோம்" என்று நான் பதிலளித்தேன். "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினையே நாம் அழித்துவிட்டால், அதன்பிறகு தமிழீழத்திற்காக நீங்கள் போராட முடியாது, இல்லையா?" என்று அவர் கேட்டார். பின்னர் சலித்துக்கொண்டே, "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினைச் சிதையுங்கள் என்று அவர்களே எங்களிடம் கூறிவிட்டு, பின்னர் சர்வதேசத்திற்குக் காட்ட எம்மை சிறையில் அடைத்து தம்மை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். குள்ளநரிக் கூட்டம்" என்று அவர் மேலும் கூறினார்.  குணரட்ண உடபட 40 மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் அரசால் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாத பொலீஸ் தடுப்புக்காவல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மீது நீணட தொடர்ச்சியான விசாரணைகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டன.

தொண்டைமானின் சுயசரிதையினை நான் எழுதியது குறித்து முன்னர் கூறியிருந்தேன். இதுதொடர்பான மேலதிகத் தகவல்களை சேகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறையில் ஆரம்பத்தில் பணியாற்றியவர் என்கிற ரீதியில், ஹேர்மன் குணரட்ணவைச் சந்திக்க தொண்டைமான் என்னை அனுப்பியிருந்தார். நான் அவரைச் சந்திக்க வருவது குறித்து தொண்டைமானின் செயலாளர் திருநாவுக்கரசு ஏற்கனவே குணரட்ணவிடம் தெரிவித்திருந்தமையினால், என்னுடன் ஒளிவுமறைவின்றி அவர் பேசினார். தான் எவ்வாறு கைதுசெய்யப்பட்டேன், தொண்டைமான் தன்னை எவ்வாறு பிணையில் விடுவித்தார் என்பது குறித்த பல தகவல்களை குணரட்ண என்னிடம் கூறினார்.

"காலை 4 மணியிருக்கும், எனது வீட்டுக் கதவினை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்துபார்த்தால் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்க அங்கு நின்றிருந்தார். எனது வீட்டைச் சுற்றிப் பல பொலீஸார் நிற்பதும் எனக்குத் தெரிந்தது. வீட்டில் எனது புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாதுரு ஓயா இரகசியத் திட்டத்திற்காகவே நான் கைதுசெய்யப்படுவதாக ரொனி என்னிடம் தெரிவித்தார். நான் உடனேயே, இக்கைது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா என்று ரொனியிடம் கேட்டேன். உங்களைக் கைது செய்யச் சொல்லி என்னை அனுப்பியதே ஜனாதிபதிதான் என்று ரொனி பதிலளித்தார். அப்படியானால், காமிணி திசாநாயக்கவுக்கு இக்கைது பற்றித் தெரியுமா என்று நான் மீண்டும் கேட்டேன். நீங்கள் என்னுடன் பொலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், இவைகுறித்து விரிவாக அங்கே பேசலாம் என்று அவர் பதிலளித்தார். என்னைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் தள்ளி ஏற்றிய விதத்தினைக் கண்ட எனது புதல்விகள் நடுங்கிப் போயினர்" என்று குணரட்ண என்னிடம் கூறினார்.

பொலீஸ் நிலையத்திலிருந்து காமிணி திசாநாயக்கவையும், பண்டிதரட்னவையும் தொடர்புகொள்ள தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக குணரட்ண கூறினார். ஆனால், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிந்த நாட்களில் தனக்குப் பரீட்சயமான தொண்டைமானுடன் தன்னால் தொடர்புகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "எனது அவல நிலையினை அவரிடம் கூறினேன். எனது புதல்விகள் குறித்த எனது கவலையினைனை அவரிடம் கூறினேன். அதன்பின் உடனடியாக என்னைப் பிணையில் விடுவித்தார்கள். ஜனாதிபதியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதனாலேயே ஜெயார் என்னை பிணையில் செல்ல அனுமதித்ததாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். நான் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. அப்படியிருந்தபோதும் அவர் எனக்கு உதவினார். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

இரகசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டம், முதலாவது கட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இனப்பரம்பலினைப் பாவித்து இலங்கைக்கான புதிய மாகாண வரைபடத்தினை உருவாக்குவது. பின்வரும் நான்கு மாகாணங்களின் எல்லைகளை மீள உருவாக்குவது இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாகும். அம்மாகாணங்களாவன, வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியனவவாகும். இந்த நான்கு மாகாணங்களினதும் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஐந்தாவது மாகாணம் ஒன்றினை உருவாக்குவதே இதன் நோக்கம். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய மாகாணம், வட கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும். 

இவ்வாறு உருவாக்கப்படும் மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மாவட்டங்களாவன,

1. வடக்கு மாகாணம் ‍: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு

2. வட மத்திய மாகாணம் ‍: வவுனியா, அநுராதபுரம், வலி ஓய (மணலாறு, முல்லைத்தீவு மாவட்டத்தை சிதைப்பதன் மூலம் புதிய மாவட்டமான வலி ஓய முல்லைத்தீவிலிருந்து பிரித்தெடுக்கப்படும்).

3. வட மேற்கு மாகாணம் ‍: மன்னார், புத்தளம், குருநாகலை

4. வட கிழக்கு மாகாணம் ‍: பொலொன்னறுவை, திருகோணமலை

5. கிழக்கு மாகாணம் ‍: மட்டக்களப்பு, அம்பாறை

மாவட்ட எல்லைகளை இவ்வாறு மீள வரைவதன் மூலம் வட மாகாணம் மட்டுமே தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக விளங்கும். தற்போதைய வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எஞ்சிய மாவட்டங்கள் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாக மாற்றப்படும். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் தென் எல்லையாக மாங்குளம் அமைந்திருக்கும்.

குணரட்ண தனது இரகசியத் திட்டத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார். தனது புத்தகத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். தமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம் அரச மேல் மட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆதரவு கிடைக்காது போனமையே என்று அவர் நம்புகிறார்.

நதிகளை அண்டி உருவாக்கப்படும் புதிய மாவட்ட எல்லைகள்large.Riverbasinboundary.jpg.70f656c0d3c005f7dca2e3f04fa6b54e.jpg

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதுரு ஓயா அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய அரச இயந்திரம்

large.Gamini-Dissanayake-1.jpg.10b0b4c83cf062896c64e8f952aa4515.jpg

மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் நாயகர்கள்  காமிணியும் ஜெயவர்த்தனவும்

மாதுரு ஓயா பகுதியில் பிக்கு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர்களின் அடாத்தான நிலஅபகரிப்பிற்கு அரசால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட கலவரங்களுக்குப் பின்னரும் ஜெயவர்த்தனவை ஆதரித்து நின்ற ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூட மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்ட இனக்கலவரங்களினால்  சர்வதேச அனுதாபத்தினைப் பெற்றுவந்த தமிழர்களுக்கு மாதுரு ஓயாவின் ஆக்கிரமிப்பை அரசு ஆதரிப்பதென்பது அவர்களது நிலையினை இன்னும் பலப்படுத்தியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் இது ஆத்திரப்படுத்தியிருக்கும்.

ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இரகசியமாக, மெதுமெதுவாகவே செய்ய விரும்பியிருந்தனர். ஆனால், மகாவலி அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய சிலர் மிகவும் வெளிப்படையாகவும் மூடத்தனமாகவும் மிகப்பெரிய செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்ததன் மூலம் ஜெயாரின் திட்டத்தினைப் போட்டுடைத்துவிட்டனர். இது ஜெயாரின் அரசையும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியிருந்தது.

புரட்டாதி 8 ஆம் திகதி தேவநாயகம் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. மாதுரு ஓயாவின் சிங்கள ஆக்கிரமிப்பை மகாவலி அபிவிருத்தி அமைச்சு துரிதப்படுத்தியது. திம்புலாகலை பிக்குவை அணுகிய அதிகாரிகள், சிங்களக் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்துமாறு கோரினர். பிக்குவும் மிக வெளிப்படையாகவே இக்குடியேற்றதைச் செயற்படுத்தத் தொடங்கினார். அதன் ஒரு அங்கமாக தவச எனும் சிங்கள நாளிதழில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்ட திம்புலாகலை தேரை, மகவலி நீர்ப்பசணத் திட்டத்தின் மூலம் நண்மையடையப்போகின்ற காணிகளில் விவசாயம் செய்ய விரும்புவோர் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்கிற அறிவிப்பினை அந்த விளம்பரம் தாங்கி வந்தது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து பெளத்த‌மத பீடங்களின் நாயக்கர்களுக்கும் திம்புலாகலை பிக்கு அனுப்பிய கடிதத்தில் தத்தமது பகுதிகளில் இருந்து  குறைந்தது இரு காணிகளற்ற விவசாயிகளையாவது தெரிவுசெய்து தருமாறு கேட்டிருந்தார். இவ்வாறு 700 காணிகளற்ற சிங்கள விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு மாதுரு ஓயாவிற்குச் சென்றார் திம்புலாகலை தேரை. இவரது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டக்களப்பு அரசாங்க அதிபரையும், ஏனைய அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணிகளை ஆக்கிரமித்து நின்ற 700 சிங்கள விவசாயிகளையும், பிக்குவையும் அவ்விடத்தில் இருந்து அகன்றுவிடுமாறு அரசாங்க அதிபர் கோரியபோது அவர்கள் அவரைச் சட்டை செய்யவில்லை. அரசாங்க அதிபர் பொலீஸாரின் உதவியை நாடியபோது அவர்களும் கைவிரித்து விட்டனர். ஆகவே, வேறு வழியின்றி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கல்க்குடா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் தேவநாயகத்திற்கு இதுகுறித்த கடிதம் ஒன்றினை அரசாங்கதிபர் அந்தோணிமுத்து அனுப்பிவைத்தார்.

large.Dimbulagalamonkandarmy.jpg.86dd4751e083174dac6b338a262e7b45.jpg

தமிழர் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட திம்புலாகலைப் பிக்குவின் உருவச்சிலையினைத் திறந்துவைக்கும் போர்க்குற்றவாளி சவீந்திர சில்வா 

 

மகாவலி அபிவிருத்திச் சபையும் வெளிப்படையாகவே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. திம்புலாகலை விகாரையிலிருந்து மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு சிங்கள விவசாயிகளை ஏற்றிச்செல்ல அமைச்சின் பாரவூர்திகளை அமைச்சு அனுப்பி வைத்தது. இப்பகுதியில் அத்துமீறிக் குடியேறும் சிங்கள விவசாயிகள் வீடுகளை அமைக்கவென தடிகள், பிளாத்திக்கு துணிகள், வேயப்பட்ட ஓலைகள் மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களையும் அமைச்சகத்தின் பாரவூர்திகள் கொண்டுவந்து சேர்த்தன. இதற்கு மேலதிகமாக சீமேந்துப் பக்கெற்றுக்களும் ஏனைய பொருட்களும் அமைச்சகத்திலிருந்து இப்பகுதிக்கு ஏற்றிவரப்பட்டன. மகாவலி ஆற்றில் பணியில் ஈடுபடுத்த வரவழைக்கப்பட்ட உழவு இயந்திரங்களும், புல்டோசர்களும் மாதுரு ஓயாப் பகுதியில் சிங்களவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் காணிகளை துப்பரவாக்கி சமப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டன.

புரட்டாதி 15 ஆம் திகதி தேவநாயகத்துடன் மீண்டும் தொடர்புகொண்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து, மாதுரு ஓயாவில் அத்துமீறி நுழைந்து, தமிழர் காணிகளைக் கைப்பற்றி இருக்கும் சிங்களவர்களின் தொகை 40,000 ஆக உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே தனது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பினை மறுநாளே கூட்டிய தேவநாயகம் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் இந்த நிலைமையினால் மிகுந்த அதிருப்தியடைந்து வருவதாகவும் மோதல்கள் உருவாகும் சூழ்நிலையொன்று உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சு சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேவநாயகம் குற்றஞ்சாட்டினார். தனது குற்றச்சாட்டினை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை அவர் காட்டினார். மகாவலி அமைச்சுக்குச் சொந்தமான பாரவூர்திகள் விவசாயிகளையும், கட்டடப் பொருட்களையும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குக் கொண்டுவந்து இறக்குவதைப் புகைப்படங்கள் காட்டின. மேலும், மகாவலி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் என்று பெரும் பட்டாளமே இக்குடியேற்றத்தை செயற்படுத்தும் பணிகளில்  ஈடுபட்டுவருவதையும் புகைப்படங்கள் காட்டியிருந்தன.

புகைப்படங்களுக்கு மேலாக இந்த செயற்பாடுகளை நேரடியாகக் கண்டவர்களும் ஊடகவியலாளர்களிடம் தமது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டனர். மாதுரு ஓயாவில் தற்போது காணப்படும் நிலைமை அப்பகுதியில் பாரிய விழா ஒன்று நடைபெற்றுவருவது போன்று காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திம்புலாகலை விகாரைக்கு மக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர். பாரவூர்திகளும், மினிவான்களும் மக்களை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்து மாதுரு ஓயாவின் பல பகுதிகளுக்கு அம்மக்களை மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளே அனுப்பி வைப்பதோடு அம்மக்களுக்குத் தேவையான கட்டடப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். துப்புரவு செய்யப்படும் காணிகளில் மக்கள் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள அதிகாரிகளே உதவுகின்றனர். பல தனியார் அமைப்புக்கள் இம்மக்களுக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர்" என்று பொலொன்னறுவைக்கான லேக் ஹவுஸின் நிருபர் கூறினார். .

 large.DimbulagalaVihara.jpg.d0e879a55897317718bb1ab21444320e.jpg

திம்புலாகலை விகாரை

 மகவலி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளின் திரைக்குப் பின்னரான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிய வதந்திகள் கொழும்பின் உயர்வர்க்க மட்டத்தில் பரவிவரத் தொடங்கின. மேலும் இத்திட்டத்தின் நடத்துனராகச் செயற்பட்டு வந்த ஹேர்மன் குணரட்ண மகவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்கவிடம் மாதுரு ஓயாச் சிங்கள குடியேற்றத்திற்கு இராணுவப் பாதுகாப்பினை வழங்குமாறு கோரியபோதும், இராணுவத்தினருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி காமிணி அக்கோரிக்கையினை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. குணரட்ணவிடம் பேசிய காமிணி இராணுவத்திற்குப் பதிலாக வேறு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இத்திட்டத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டிதரட்ண, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டு ஆடிக் கலவரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்ததற்காகவும் பல தமிழர்களைக் கொன்றதற்காகவும் பதவியிலிருந்து விலக்கப்பட்டகடற்படைவீரர்களை, சட்டவிரோதமாக நடந்துவந்த மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிய வருகிறது.

மிகுந்த கோபத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேவநாயகம் எச்சரிக்கை ஒன்றினையும் அங்கு விடுத்தார்.

"மீண்டுமொருமுறை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இனமோதல் ஒன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால், மாதுரு ஓயாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். எனது கோரிக்கைகுச் சாதகமான பதில் ஒன்றினை இந்த அரசாங்கத்தினால் தரமுடியாது போனால் நான் எனது பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.

தேவநாயகத்தின் இந்த எச்சரிக்கைகள் ஊடகங்களில் வந்ததையடுத்து ஜெயார் கோபப்பட்டார். இன்னொரு இனக்கலவரத்தையோ அல்லது தேவநாயகம் விலகிச் செல்வதையோ ஜெயாரினால் அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. தமிழர்கள் தனது ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு தேவநாயகமே ஜெயாருக்கு உதவிவந்தார்.  தேவநாயகமும், தொண்டைமானுமே தமிழர்கள் மீது ஜெயார் கருணையுடன் இருக்கிறார் என்று காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட நடிகர்களாக அன்று இருந்தார்கள். தேவநாயகத்தின் பதவி விலகலும், இன்னொரு இனக்கலவரமும் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின்  பின்னால் தான் இருப்பதை உலகிற்குக் காட்டிவிடும் என்று அவர் அஞ்சினார். 

ஆகவே, தேவநாயகத்துடன் நேரடியாகப் பேசிய ஜெயார், "நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் பொறுமையாக இருங்கள்" என்று கெஞ்சினார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிடப்பட்ட நிதியம்

 large.MaduruOyaHill.jpg.9e5e11316226a8f1d6f8fbf155717342.jpg

மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டம் குறித்த தகவல்கள் வெளியே வருவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து காமிணி கவலைப்படவில்லை. தனது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நவீன துட்டகைமுனுவாக சிங்களவரின் முன்னால் தன்னை அவர் காண்பிக்க நினைத்தார். ஆகவே, தனது உத்தியோகபூர்வ‌  வாசஸ்த்தலத்திற்கு முன்னணிச் சிங்கள வர்த்தகர்களை அழைத்த காமிணி தமிழரின் இலட்சியமான தமிழ் ஈழத்தின் அடித்தளத்தை எப்படி அழிக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். தன்னுடைய‌ அமைச்சான மகாவலி அபிவிருத்திச் சபையில் பணிபுரியும் அதிகாரிகளை தமது இரகசியத் திட்டம் குறித்து வந்திருந்த வர்த்தகர்களுக்கு விளக்குமாறு அவர் கூறினார். தமது இரகசியத் திட்டம் இந்தியாவை உசுப்பேற்றிவிடும் என்பதனால், அரசாங்கத்தின் ஊடாக தமது திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்று அவர் தெரிவித்தார். ஆகவே தனியாரின் உதவியின் மூலம் பணம் திரட்டப்பட்டு சிங்கள குடியேற்றத் திட்டம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

 large.GaminiDiss.jpg.a414a310d9a4ac712320cc2d08dd8133.jpg

காமிணி திசாநாயக்க‌

தாச முதலாளி காமினியிடம் பேசும்போது "இந்த இரகசியக் குடியேற்றம் குறித்து ஜனாதிபதி அறிவாரா?" என்று கேட்டார். அதற்கு ஆமென்று பதிலளித்தார் காமிணி. மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து இக்குடியேற்றத்திட்டத்திற்குத் தேவையான பணத்தைத் தரமுடியும் என்று கூறியதாகவும் காமிணி குறிப்பிட்டார். அதன்பின்னர், நிதியத்திற்கான தகுந்த பெயர் ஒன்றினை தேடும்படியும், நல்லநாள் பார்த்து நிதியத்தை ஆரம்பிக்கலாம் என்றும் தாச முதலாளியிடம் கோரினார் காமிணி.

large.DasaMuda.jpg.5d99e66c10abba2017f4e358375f9905.jpg

தாச முதலாளி

நிதியத்தின் தொடக்க நாள் நிகழ்வும் காமிணியின் வீட்டிலேயே நடைபெற்றது. தாச முதலாளி முதலாவதாக பத்து இலட்சம் ரூபாவுக்கான காசோலையினை நிதியத்திற்கு வழங்கினார். அன்று அங்கு வருகை தந்திருந்த ஏனைய சிங்கள வர்த்தகர்களும் தமது பங்களிப்பைச் செய்தனர். மொத்தமாக அன்று 35 லட்சம் ரூபாய்கள் நிதியத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இவ்வாறு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் மாற்றப்படும் முன்னரே ஜெயவர்த்தன இந்த விவகாரத்தில் தலையிட்டு, திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹேர்மன் குணரட்ணவைக் கைது செய்ததுடன் தமிழர் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்களவர்களையும் அங்கிருந்து அகற்றினார்.  

பதறிப்போன காமிணி, தனக்கும் மாதுரு ஓயாத் திட்டத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று நழுவி விட்டார்.

இந்தியாவிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்தும் ஜெயார் மீது கடுமையான அழுத்தம் பிரியோகிக்கப்பட்டது. சென்னையில் அப்போது தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இத்திட்டம் குறித்து இந்திரா காந்தியை எச்சரித்திருந்தனர். லண்டனில் இருந்து இந்திராவையும், பார்த்தசாரதியையும் தொடர்புகொண்டு பேசிய அமிர்தலிங்கம், "தமிழருக்கு ஜெயார் கொடுக்கவிருக்கும் இறுதித்தீர்வின் ஒரு அங்கமே அவர்  முன்னெடுத்திருக்கும் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம்" என்று கூறியிருந்தார். என்னுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் மாதுரு ஓயாத் திட்டம் குறித்து அறிந்துகொண்டபோது இந்திரா கோபப்பட்டதாகக் கூறினார். கொழும்பிலிருந்த இந்தியத் தூதரான சத்வாலிடம் இந்தியாவின் ஆட்சேபத்தினை ஜெயவர்த்தனவிடம் தெரிவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை கோரியது.

அதன்படி, ஜெயாருடன் பேசிய சத்வால் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்க்கிறது என்று கூறினார். இதனால் ஆத்திரப்பட்ட ஜெயவர்த்தன, தனது கோபத்தினை காமிணி மீது காட்டினார். காமிணி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக அவர் கருதினார். இரகசியமாகத் தான் முன்னெடுக்க விரும்பிய ஆக்கிரமிப்புத் திட்டத்தினை காமிணி வெளிப்படையாகப் போட்டுடைத்து விட்டதாக அவர் உணர்ந்தார். 500 அல்லது 1000 பேருடன் ஆரம்பித்திருக்க வேண்டிய தனது திட்டத்தை, காமிணி ஒரே நேரத்தில் 45,000 சிங்களவர்களைக் குடியேற்ற முற்பட்டதன் மூலம் கெடுத்துவிட்டதாக அவர் காமிணி மீது கோபப்பட்டார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் பல கூட்டங்களை ஜெயார் நடத்தினார். ஆக்கிரமிப்புத் திட்டத்தின் முன்னோடியான பண்டிதரட்ணவிடம் அப்பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக விலக்கிவிடுமாறு பணித்தார். அதற்குப் பதிலளித்த பண்டிதரட்ண, "சிங்களவர்களை அங்கு அழைத்துச் சென்றது திம்புலாகலை பிக்குதான்" என்று பதிலளித்தார். இதனால் கோபமடைந்த ஜெயார், "மகாவலி அதிகார சபையினை திம்புலாகலை பிக்குவே நடத்துவதாக இருந்தால், நான் அவரை தலைவராக நியமிக்கிறேன்,  நீங்கள் எனக்குத் தேவையில்லை, வீட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினார்.

பண்டிதரட்ணவும் ஏனைய அதிகாரிகளும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பினை சிறிய விடயமாகக் காண்பிக்க எத்தனித்தனர். உள்நாட்டுப் பத்திரிக்கைகளிலும், இந்தியாவின் ஊடகங்களிலும் வெளிவரும் அறிக்கைகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டவை என்று அவர்கள் கூறினர். வெறும் 2000 சிங்கள விவசாயிகளே மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்குச் சென்றதாக அவர்கள் ஜெயாரிடம் கூறினர். ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலியும் இன்னும் சிலரும் ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைதான் என்று ஜெயாரிடம் வலியுறுத்தினர். மேலும், நேர்த்தியாகச் செய்யப்படவேண்டிய ஆக்கிரமிப்பினை காமிணி போன்றவர்கள் தவறாக வழிநடத்தி வெளிக்கொணர்ந்துவிட்டனர் என்று ஜெயாரிடம் கூறினர். காமிணியுடனான ஜெயாரின் தற்காலிக வெறுப்பினைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஜெயாருடன் நெருக்கமாகலாம் என்று லலித் கணக்குப்போட்டுக் கொண்டார்.

ஜெயார் செய்துவந்த அரசியல் நடைமுறை அவருக்கான படுகுழியினை அவரே தோண்டும்படி செய்துவிட்டிருந்தது. தனது அமைச்சர்களுக்கிடையே போட்டி மனப்பான்மையினை அவரே தூண்டிவிட்டார். லலித்தும் காமிணியும் இளமையான, அரசியலில் வளர வேண்டும் என்கிற ஆசையைக் கொண்டிருந்த மனிதர்கள். ஜெயாருக்குப் பின் கட்சியின் தலைமைப்பதவிக்குத் தாமே சரியானவர்கள் என்பதை இருவரும் தனித்தனியாக அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருந்தனர். ஆனால், பிரதமாரான பிரேமதாசவும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஆர்வமாக இருந்தார். ஆனால், இவர்கள் மூவரிலும் காமிணியையே ஜெயார் அதிகம் விரும்பினார் என்பது இரகசியமல்ல. அமைச்சுக்களில் முக்கியமான காணிகள் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு எனும் பதவி காமிணிக்கு வழங்கப்பட்டிருந்தது. லலித்தோ ஆரம்பத்திலிருந்தே எப்படியாவது ஜெயாருக்கு நெருக்கமாக வரவேண்டும் என்று அயராது முயன்று வந்திருந்தார்.

large.RacistTrio.jpg.4b9ea1008ebd56f16e8bd1450593ebc1.jpg

நான்கு இனவாதிகள் :காமிணி பொன்சேக்கா, லலித், காமிணி திசாநாயக்கா மற்றும் ஜெயார்

இக்காலத்தில் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த .ஜே.வில்சன் (தந்தை செல்வாவின் மருமகன்) முன்னாள் இந்தியத் தூதுவர் திக்சீத் எழுதிய "கொழும்பில் எனது பணி" எனும் புத்தகத்திற்கான உரையில் ஜெயாரின் இந்த மூன்று அமைச்சர்களிடையேயும் நிலவிவந்த போட்டி மனப்பான்மையினை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஐலண்ட் நாளிதழில் வில்சன் எழுதிய இவ்வுரையில், ஜெயாரின் மைதானத்தில் இந்த மூன்று அமைச்சர்களுக்கிடையேயும் நிகழ்த்தப்பட்டு வந்த சூழ்ச்சிகள் பற்றி எழுதியிருந்தார்.

"தனக்குப் பின்னர் ஜனாதிபதிப் பொறுப்பு காமிணிக்கே வழங்கப்படவேண்டும் என்று ஜெயார் விரும்பியிருந்தது ஒன்றும் இரகசியமல்ல. தொண்டைமானே ஒருமுறை காமிணி பற்றிப் பேசும்போது அவர் ஜெயாரின் செல்லப்பிள்ளை என்று குறிப்பிட்டிருந்தார். ஜெயாருடனான எனது சம்பாஷணைகளின்பொழுது காமிணிக்கு ஜெயார் தனது இதயத்தில் தனியான இடம் ஒன்றினைக் கொடுத்திருந்தார் என்பதை உணர்ந்துகொண்டேன். 1982 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர் தொல்லைகொடுப்பவரான பிரதமர் பிரேமதாசவை அகற்றிவிட்டு காமிணியைப் பிரதமராக்கும் எண்ணம் ஜெயாருக்கு இருந்தது" என்று வில்சன் எழுதியிருந்தார்.

ஜெயாருக்குப் பின்னர் தான் தலைமைப் பொறுப்பினை எடுக்கமுடியாது என்பதை லலித் நன்கு அறிந்தே இருந்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒன்றியத்தில் செயலாளராக ஆரம்பத்தில் பதவி வகித்து பின்னர் ஒன்றியத் தலைவராக வந்ததுபோல ஐக்கிய தேசியக் கட்சியில் பின்னாட்களில் இணைந்தபோதும் கூட ஒருநாள் நிச்சயமாக தலைமைப் பதவியினைப் பிடிப்பேன் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் பலமுறை கூறியிருக்கிறார்.

லலித்திற்குக் கிடைத்த சந்தர்ப்பம்

மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அரசாங்கத்திற்கு அவப்பெயரினை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பாவிக்க லலித் நினைத்தார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிவந்ததையடுத்து சர்வதேசத்தில் ஜெயாரின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டிருப்பதாக ஜெயாரின் காதுகளில் உரைக்கத் தொடங்கினார் லலித். அக்காலப்பகுதியில் இந்தியாவிடமிருந்தும், சர்வதேசத்திடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தம் ஜெயார் மீது பிரியோகிக்கப்பட்டு வந்தது. ஆகவே, ஜெயாரின் கோபம் காமிணி மீதும், பண்டிதரட்ண மீதும் திரும்பியது. அவர்களுடன் பேசுவதையே ஜெயார் தவிர்க்கத் தொடங்கினார். அவர்களுக்குச் செவிமடுப்பதையோ அல்லது அவர்கள் கூறுவதை நம்புவதையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

 large.PaulPerera.jpg.e4a8f61da77b2c5fa8eff0baad427208.jpg

போல் பெரேரா

தனக்கு நெருக்கமான இன்னொரு அமைச்சரான போல் பெரேராவிடம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு மேலால் உலங்குவானூர்தியில் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து தனக்கு அறிவிக்குமாறு பணித்தார் ஜெயார். அதன்படி ஐப்பசி 1 ஆம் திகதி அப்பகுதியின் மேலாக வானூர்தியில் வலம் வந்தார் பெரேரா. அவர் கொழும்பிற்கு வந்தவுடன் அவருடன் தொலைபேசியில் நான் உரையாடினேன். உலங்கு வானூர்தியில் இருந்து பார்க்கும்போது சுமார் 20,000 குடிசைகளை அப்பகுதியெங்கும் தான் கண்டதாக பெரேரா என்னிடம் கூறினார்.  

உடனடியாக செயலில் இறங்கிய ஜெயார், பெரேராவை பொலொன்னறுவை மாவட்டத்தில் மேலதிக அமைச்சராக நியமித்ததுடன் மாதுரு ஓயாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு பணித்தார். தேவையேற்படின் பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியினையும் கோரலாம் என்றும் அவருக்குக் கூறப்பட்டது. தன்னார்வ ஆயுதப் படைகளின் அதிகாரியான கேணல் பெனடிக்ட்  சில்வா பெரேராவுக்கு உதவியாளராக ஜெயாரினால் நியமிக்கப்பட்டார்.    ஆனால், பெரேராவோ உடனடியாக செயலில் இறங்க விரும்பவில்லை. தனது பணிக்குச் சார்பான சூழ்நிலையினை ஊடகங்கள் ஊடாக உருவாக்க அவர் நினைத்தார். அவர் என்னிடம் ஒரு விசேட கதையொன்றினைக் கூறினார். அக்கதையின்படி, மாதுரு ஓயாவை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களவர்களிடம் தமது பகுதிகளுக்குத் திரும்புமாறு தான் கேட்கப்போவதாகக் கூறினார். அரசுக்குச் சொந்தமான நிலங்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அதிகாரம் தனியாருக்கு இல்லையென்று தான் கூறப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், தனது கோரிக்கைக்கு விவசாயிகள் இணங்காதவிடத்து வேறு வழியின்றி தான் பலத்தைப் பிரியோகிக்க வேண்டி ஏற்படும் என்பதையும் மிகவும் நாசுக்காக அவர் கூறினார்.

போல் பெரேரா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை மிகவும் திறம்படச் செய்யத் தொடங்கினார். தனது கோரிக்கையினை நிராகரித்து மாதுரு ஓயாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்கள விவசாயிகளை பொலீஸாரையும் இராணுவத்தினரையும் கொண்டு அகற்றினார். பொலொன்னறுவைக்குச் சென்ற பெரேரா அங்கு இராணுவத்தினருடனும் பொலீஸாருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டார். மிகவும் தந்திரமாக செயற்படுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். "அவர்கள் அனைவருமே தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள். அவர்கள் மீது தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாம்" என்று அவர் படையினரிடமும், பொலீஸாரிடமும் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அங்கிருந்த சிங்கள விவசாயிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். திம்புலாகலைப் பிக்குவும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் பொலீஸாரை உதாசீனம் செய்து அப்பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருக்க பிக்கு முயன்றபோதும், ஜெயாரின் கட்டளைக்கு அமைவாகவே தாம் அவரை வெளியேற்றுவதாகப் பொலீஸார் கூறியவுடன் அவர் அங்கிருந்து வெளியேறச் சம்மதித்தார்.

ஜெயாருக்கு நெருக்கமாகும் தனது முயற்சியில் லலித் சிறிது தூரம் தற்போது பயணித்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கான அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்ட அவர் எட்டு மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம், அமைச்சரவையில் மிகப் பலம் பொறுத்தியவராக வலம்வரத் தொடங்கினார். இதனால் பிரேமதாசவுக்கான முதலாவது எதிரியாகவும் அவர் தெரியத் தொடங்கினார். காமிணி சிறிது சிறிதாக வெளிச்சத்திலிருந்து மறைந்து போய்க்கொண்டிருந்தார். தனது முக்கியத்துவத்தினை மீளக் கட்டியெழுப்ப காமிணிக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. இந்தியாவுக்கு நெருக்கமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதுடன், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு இலங்கை அரசு சார்பாக செயற்பட்டவர்களில் முக்கியமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதன் மூலமும் அந்நிலையினை அவரால் எய்தமுடிந்தது.

மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்தை இரத்துச் செய்ய ஜெயார் இட்ட ஆணையினை மீளப் பெறச் செய்யும் நோக்குடன் காமிணியையும், பண்டிதரட்ணவையும் சந்திக்க கொழும்பிற்குச் சென்றார் திம்புலாகலைப் பிக்கு. மகாவலி அமைச்சிற்குச் சென்ற அவரைச் சந்திக்க காமிணியும், பண்டிதரட்ணவும் மறுத்து விட்டனர். அதன்பின்னர் கொழும்பில் இயங்கிய அனைத்துச் செய்திதாள்களின் அலுவலகங்களுக்கும் அவர் சென்றார். லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வந்த அவர் தினமின நாளிதழின் ஆசிரியரைச் சந்தித்தார். பின்னர் ஆசிரியரின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவர் ஆசிரியர் அலுவலக ஊழியர்களிடம் பேசினார். தினமின ஆசிரியர்ப் பீடத்தின் அருகிலேயே டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியர்ப் பீடமும் அமைந்திருந்தது. நான் அன்று அங்கு நின்றிருந்தேன்.

 திம்புலாகலைப் பிக்கு மிகுந்த ஆவேசமாகக் காணப்பட்டார். உச்சஸ்த்தானியில் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சிங்கள நாட்டிற்கும், சிங்களத் தேசியத்திற்கும் எதிராக போல் பெரேரா செயற்பட்டுள்ளதாக அவர் கடுமையாகச் சாடினார். பெரேரா ஒரு கத்தோலிக்கர் என்பதாலேயே சிங்கள பெளத்தர்களுக்கெதிராகச் செயற்பட்டுள்ளதாக பிக்கு குற்றஞ்சுமத்தினார். தான் கொண்டுவந்த பெரிய குடையினை உயர்த்திக் காட்டிய பிக்கு, "அவனைக் கண்டால் இதனாலேயே அவனை அடிப்பேன்" என்று கத்தினார்.

மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்துவது ஜெயாருக்கு அன்று தேவையாக இருந்தது. தேவநாயகம் பதவி விலகிச் செல்வதை ஜெயார் விரும்பவில்லை. இன்னொரு இனக்கலவரம் ஆரம்பிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. இவை எல்லாவற்றையும் விட, இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடுவதை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று அவர் கருதினார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்பின் மூலம் இந்திரா காந்தி மிகவும் சினங்கொண்டிருப்பதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்த்தானிகர் பேர்ணாட் திலகரட்ண ஜெயாரிடம் அப்போது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஆகவே, இச்சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சில விடயங்கள ஜெயாரினால் செய்யவேண்டியிருந்தது. முதலாவதாக ஹேர்மன் குணரட்ணவும் இன்னும் 40 மகாவலி உயர் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், ஈழத்திற்கான அடித்தளத்தினைச் சிதைப்பதை ஜெயார் தொடர்ந்தும் முன்னெடுக்க கங்கணம் கட்டினார். தனது இரகசியத் திட்டத்தினைக் குழப்பியதற்காக காமிணி, ஜெயாரினால் ஓரங்கட்டப்பட்டார்.அப்பொறுப்பினை காமிணியின் எதிரியான லலித்திடம் ஜெயார் கொடுத்தார். யன் ஓயா அபிவிருத்தித் திட்டத்தினைக் கையாளும் பொறுப்பு லலித்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி ஓயவாக மாறிய தமிழர்களின் தாயகப்பகுதியான மணலாறு

large.Yan_Oya_Mahaweli_geological_map.jpg.e1466be8353dacc26c837d743bc042a3.jpg

தமிழர் தாயகத்தின்  இரு மாவட்டங்களான திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலான  நிலத்தொடர்பினை தந்திரமாக அறுத்தெறிவதுதான் யான் ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினை வகுத்தவர்களின் நோக்கம் இப்பகுதியூடாகப் பாய்ந்து, திருகோணமலையின் வடக்கில் அமைந்திருக்கும் திரியாய்ப் பகுதிக்கூடாகக் கடலில் கலக்கும் யான் ஓயாவின் கரைகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இதனைச் செய்வதாகும். யான் ஓயாவின் கரைகளில் சிங்கள விவசாயிகளையும், முல்லைத்தீவின் கரைகளில் சிங்கள மீனவர்களையும் குடியமர்த்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் தோல்வியடைவதை உணர்ந்த மகாவலி அபிவிருத்தி அமைச்சின் தலைவர் பண்டிதரட்ண, மாதுரு ஓயாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகளைக் குடியமர்த்துவதற்கு  வவுனியாவுக்கு அருகில் உகந்த பகுதியொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பணித்து கருணாதிலக்கவை  அனுப்பிவைத்தார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாத முதல்வாரத்தில் வவுனியாவுக்குச் சென்ற கருணாதிலக்க, வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர்  ஆதர் ஹேரத்தையும், வவுனியாவுக்கான மேலதிக அரசாங்க அதிபரான சிங்களவரையும் சந்தித்துப் பேசினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் நெடுங்கேணிக்கு கருணாதிலக்கவை அழைத்துச் சென்ற அவர்கள் இருவரும், அப்பகுதியில் காணப்பட்ட செழிப்பான விவசாயநிலங்களை அவருக்குக் காண்பித்தனர். 

large.Mullaitivumap.gif.e8b161a014bd77326696da78f3a01c38.gif

இப்பகுதியின் பெரும்பாலான நிலங்களில் பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமங்கள் காணப்பட்டன. மேலும், மீதியிடங்களில் தமிழருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் பண்ணைகளை குறுகிய மற்றும் நீண்டகால குத்தகை அடிப்படையில் அமைத்துச் செயற்பட்டு வந்தன. 1965 ஆம் ஆண்டிலிருந்து 99 வருடக் குத்தகைக்கு இக்காணிகள் தமிழர்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்தன. தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு காணித் துண்டும் சுமார் 10 இலிருந்து 50 ஏக்கர்கள் வரை கொண்டிருந்தது. வியாபா நிறுவனங்கள் பாரிய பண்ணைகளை இப்பகுதியில் அமைத்திருந்ததுடன், இவ்வகையான 16 வியாபாரப் பண்ணைகள் சுமார் 1000 ஏக்கர்கள் அல்லது அதற்கும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்டிருந்தன.  அவ்வாறான பாரிய பண்ணைகளில் நாவலர் பண்ணை, சிலோன் தியெட்டர்ஸ் பண்ணை, ரயில்வே குறூப் பண்ணை, போஸ்ட் மாஸ்ட்டர் பண்ணை, கென்ட் பண்ணை, டொலர் பண்ணை ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். 

1977 ஆம் ஆண்டு மலையகத்தில் தமிழர்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து அங்கிருந்து விரட்டப்பட்ட பல தமிழர்கள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் வாழ்ந்துவந்தனர். இப்பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட சிறப்பான அறுவடைகளையடுத்து இப்பெயர்கள் அனைவராலும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்தன. இக்காணிகளை கருணாதிலக்கவிடம் காண்பித்த பொலீஸ் அத்தியட்சகர் இவற்றில் வசிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் என்றும் கூறியதோடு .பி.ஆர்.எல்.எப் பயங்கரவாதிகள் இந்தப் பண்ணைகளில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இப்பண்ணைகளினால் பதவிய எனும் சிங்களக் குடியிருப்பின் வடக்கு நோக்கிய விஸ்த்தரிப்பு தடைப்பட்டு நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐப்பசி 12 ஆம் திகதி தனது அறிக்கையினை கருணாதிலக்க மகாவலி அதிகார சபையிடம் கையளித்தார்.

அவரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் பின்வருமாறு,

"சட்டத்திற்குப் புறம்பானதும், தேசியத்திற்கு எதிரானதுமான இத்தமிழ்க் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் குடியேற்றங்களினால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தட்டுக்கப்பட்டு வருவதோடு, தேசியப் பாதுகாப்பிற்கும் இவற்றால் அச்சுருத்தல் ஏற்பட்டிருக்கிறது".

large.Padaviyascheme.jpg.e73740abd5dd9487c0d3ea0f25c4fb48.jpg

வடக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு வந்த பதவியா சிங்களக் குடியேற்றம்

ஆனால், நெடுங்கேணியில் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டத்தினை ஜெயாரிடம் கொண்டுசெல்வதில் மகாவலி அபிவிருத்திச் சபைக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஏனென்றால், மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் காமிணியின் தாந்தோன்றித்தனத்தினால் பிசுபிசுத்துப்போனனால் கோபம் அடைந்திருந்த ஜெயார், யான் ஓயாத் திட்டத்தை லலித் அதுலத் முதலியிடமே கொடுத்திருந்தார். அவரும் அதனை மிகவும் தந்திரமாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்தார்.

1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் லலித் நியமிக்கப்பட்டார். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான கொவி பொல என்பதை மாங்குளத்தில் ஆரம்பித்து வைக்க அப்பகுதிக்குச் சென்றார் லலித் அதுலத் முதலி. அவரது விஜயத்தை செய்தியாக்கும் நோக்குடன் அங்குசென்ற பத்திரிக்கையாளர் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். லலித்தும், காமிணியும் செய்தித்தாள்களின் முதற்பக்கங்களில் எவ்வாறு இடம்பிடிப்பது எனும் கைங்கரியத்தில் மிகவும் கைதேர்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களிடமிருந்து முக்கியமான செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் பத்திரிக்கையாளர்களும் இவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டனர். இவர்கள் இருவர் பற்றியும் செய்திகளை வெளியிட எனக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன.

இதற்கிடையில், 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 26 ஆம் திகதி லலித்தின் பிறந்தநாளிற்கு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார், "சபா, இன்றைக்கு பிரபாகரனுக்கும் பிறந்தநாள் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். நாங்கள் இருவரும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் பிறந்திருக்கிறோம். அவர் என்னைவிடவும் வயதில் நன்கு இளையவர். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரம வைரிகளாக மாறியிருக்கிறோம். இருவரில் எவர் வெற்றிபெறப்போகிறோம் என்பது எனக்குத் தெரியாதுவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயம். நாம் இருவரும் இலங்கையின் சரித்திரத்தில் முக்கியமான பங்கினை ஆற்றவே படைக்கப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்.

பிரபாகரனோ தமிழரின் தனிநடான ஈழத்தை அமைக்கப் பாடுபட்டு வந்தார். ஆனால் லலித்தோ அந்த ஈழத்திற்கான அடித்தளத்தை அழிக்கப் பாடுபட்டு வந்தார். தமிழர் தாயகத்தின் அடித்தளத்தை அழிக்கும் அவரது முயற்சியின் முதற்பகுதியான மாங்குளம் - நெடுங்கேணிப் பகுதியை அவருடன் சென்று பார்க்க எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடன் பயணித்த ஊடகவியலாளர் குழுவில் நானும் இருந்தேன்.

வழமைபோல கொவி பொல (விவசாயிகள் சந்தை) சனிக்கிழமை காலை ஆரம்பமானது. தன்னுடன் வந்திருந்த செய்தியாளர்களுக்கு சிறப்பான செய்தியொன்றினை லலித் வழங்கினார். கொழும்பிலிருந்து வெள்ளிக்கிழமை வந்திருந்த செய்தியாளர்களும், வர்த்தகக் குழுவினரும் மாங்குளம் விருந்தினர் மாளிகையின் அன்றிரவு தங்கினர். அங்கு அவர்களுக்கு இரவு விருந்தொன்றும் வழங்கப்பட்டது. வவுனியா பொலீஸ் நிலையத்தின் அத்தியட்சகர் ஆதர் ஹேரத்தும் அந்த இரவுணவில் கலந்துகொண்டார். அவருடன் நீண்ட உரையாடல் ஒன்றில் நான் ஈடுபட்டேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதைத் தெரிந்துவைத்திருந்த ஹேரத், மலையகத் தமிழர்கள் இப்பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளதால் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து இப்பகுதியில் குடியேறி வாழும் விவசாயிகளுக்கும் கடுமையான இடைஞ்சல் ஏற்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார்.

"இந்த இந்தியர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளிகள் வேலையின்றித் திண்டாடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்குச் சொந்தமாகவேண்டிய அரச காணிகளை இந்தியத் தமிழர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்” என்று கூறினார்.

மறுநாள்க் காலை சந்தை திறந்துவைக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சில வியாபாரிகளுடன் பேசிய ஹேரத் முன்னாள் இரவு என்னிடம் கூறிய அதே முறைப்படுகளை அவர்களிடமும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கெதிராக யாழ்ப்பாணத் தமிழர்களையும், வன்னித் தமிழர்களையும் தூண்டிவிடவே ஹேரத் முயல்கிறார் என்பது எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் உளவுப்படையான மொசாட்டின் ஆலோசனைகளின் படி செயற்பட்ட லலித்

large.Lalith(1).jpg.05ef31f15c0c5cb65c9d1cd73c9f68d9.jpg

லலித்தும் அவருடன் வந்தோரும் நெடுங்கேணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அடைக்கலமாகியிருந்த கென்ட் மற்றும் டொலர் எனப்படும் செழிப்பான பண்ணைகளுக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். சிறு தானியப் பயிர்ச்செய்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பேட்டி காண்பதற்கு எமக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமக்குப் போதுமான வருமானம் கிடைப்பதால் தாம் மகிழ்ச்சியாக அங்கு வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அப்பிரதேசமெங்கும் பச்சைப் பசேல் என்று காட்சியளித்தது.

 large.Kandiyamfarm.jpg.e876ae30b5d65a30915f65d94ace5a07.jpg

காந்தியம் பண்ணையில் அடைக்கலமாகி வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர்

 

ஆனால், அதேவருடம் ஆனியில் இப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அவர்கள் விரட்டப்பட்டனர். வவுனியா பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத் இந்த விரட்டியடிப்பிற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தினார். இப்பண்ணைகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்பட்டு வருவதாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு அவர் வதந்திகளைக்  கசியவிட்டார். அதன்பிறகு இப்பண்ணைகள் வேலைபார்த்துவந்த மலையகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டு, மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு  தெருக்களில் அநாதரவாக விடப்பட்டனர்.

இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவரான தொண்டைமானை இச்செயல் கடும் சினங்கொள்ள வைத்தது. மந்திரிசபையில் இந்த விவகாரத்தை தான் எழுப்பியதாக அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பதிலளித்த இனவாதியான சிறில் மத்தியூ பண்ணைகளில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததாக கர்ஜித்தார். சிறில் மத்தியூவிற்கு ஆதரவாக காமிணி திசாநாயக்கவும் அமைச்சரவையில் தொண்டைமானுடன் தர்க்கித்தார். அங்கு பேசிய லலித் அதுலத் முதலி அரசாங்கத்தின்  ஒரே நோக்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.  பின்னர் ஜெயாருடனான தனியான சந்திப்பொன்றில் இப்பிரச்சினை குறித்து தான் பேசியதாக தொண்டைமான் கூறினார். ஆனால், சிரித்துக்கொண்டே தொண்டைமான் கூறிய விடயங்களை அவர் புறங்கையால் தட்டிவிட்டதாக தொண்டைமான் கூறினார்.  "இதன் பின்னால் இருந்தது ஜெயார் தான் என்பதை நான் அப்போது உணர்ந்துகொண்டேன்" என்று தொண்டைமான் என்னிடம் கூறினார்.

large.Thondaiman.jpg.4934ed8eebe26b51cd9695b4ca541dab.jpg 

எஸ் தொண்டைமான்

டொலர் பண்ணையிலிருந்து துரத்தப்பட்ட இரு மலையகத் தமிழ்க் குடும்பங்களை தொண்டைமான் சந்தித்துப் பேசினார். அக்குடும்பங்களில் ஒன்றின் தலைவரான‌  பாண்டியன் அவிசாவளையில் அமைந்திருந்த இறப்பர் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர். அவர் வாழ்ந்துவந்த லயன் அறை 1977 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது சிங்களவர்களால் எரிக்கப்பட்டிருந்தது. சிலகாலம் அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்துவிட்டு பின்னர் வவுனியாவுக்குச் சென்றது அவரது குடும்பம். வவுனியாவில் அவரது குடும்பத்தைப் போலவே சிங்களவர்களால் மலையகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பல இந்திய வம்சாவளித் தமிழர்கள்  அடைக்கலமாகியிருப்பதை அவர் கண்டார்.

"நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவந்தோம். எமது பண்ணையில் கடலையும், மிளகாயும் பயிரிடப்பட்டிருந்தன. நல்ல விளைச்சலும் எமக்குக் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து பொலீஸார் விரட்டியடித்துவருவதாக எமக்குத் தகவல் கிடைத்தது. வெள்ளியன்று மாலை நான்கு பஸ்களில் பொலீஸார் வந்திறங்கினர். ஒலிபெருக்கியூடாகப் பேசிய பொலீஸார் அப்பகுதியில் இருந்த ஆண்களையெல்லாம் முன்னால் வரும்படி கூறினார்கள். அவர்கள் கூறியதன்படியே வீதியில் நாம் வரிசையில் வந்து நின்றோம். எங்களனைவரையும் மீண்டும் எமது குடிசைகளுக்குச் சென்று அங்கிருந்த மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, உடைமைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் வீதிக்கு வருமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். ஏன் என்று கேட்ட சிலர் பொலீஸாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்" என்று பாண்டியன் கூறினார்.

"பின்னர் எங்களை தாம் கொண்டுவந்த பஸ்வண்டிகளில் ஏறுமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். நாம் மறுக்கத் தொடங்கினோம். உடனடியாக எம்மீது தாக்குதல் நடத்திய பொலீஸார் எம்மைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றினர். எம்மீது தாக்குதல் நடத்தப்படுவதைப் பார்த்து அழுதுகொண்டிருந்த எமது குடும்பங்களையும்  பொலீஸார் பஸ்களில் பலவந்தமாக ஏற்றினர். இரவோடு இரவாக நாம் அங்கிருந்து மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டோம். காலை புலரும் வேளைக்கு முன்னர் பஸ்களில் இருந்து எம்மை வீதியில் தள்ளி இறக்கிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். பொழுது புலரும்போது நாம் இறக்கிவிடப்பட்டிருப்பது ஹட்டன் நகரம் என்பது எமக்குப் புரிந்தது. பின்னர் அங்கிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்றோம்" என்று பாண்டியன் மேலும் கூறினார்.

இரண்டாவது குடும்பத்தின் தலைவரான வடிவேலும் இதே சம்பவத்தை தானும் நினைவுகூர்ந்தார். மேலும், பொலீஸார் தம்மை பலவந்தமாக பஸ்களில் ஏற்றிய வேளை தமது குழந்தைகளின் ஒன்று கடும் சுகவீனமுற்று இருந்ததாகவும், பொலீஸார் தம்மீது நடத்திய தாக்குதல்களைக் கண்ணுற்ற அவரது குழந்தை கடுமையான அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு சில வாரங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

இந்தியாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றிற்காக இச்செய்தியை நான் அப்போது எழுதியிருந்தேன். 

இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து விரட்டியடிக்கும் கைங்கரியத்தை லலித் மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். தனது நடவடிக்கைக்கான சூழலை ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரவ விட்டதன் மூலம் உருவாக்கிக் கொண்டார். ஆனால், பொதுக்கூட்டங்களில் பேசிய லலித் தான் மலையகத் தமிழர்களையோ இலங்கைத் தமிழர்களையோ வெறுக்கவில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தார். பயங்கரவாதிகளிடமிருந்து அவர்களைக் காக்கவே தான் பாடுபட்டு வருவதாக அவர் வாதாடினார். இந்திய வம்சாவளித் தமிழர்களை அச்சுருத்தி, அவர்களின் பிள்ளைகளைக் கடத்திச் சென்று பயங்கவாத‌ நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தமிழ்ப் பயங்கரவாதிகள் முயன்றுவருவதாக அவர் மேலும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்துவரும் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தின் நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவை அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறிய லலித், அவற்றினை அரசாங்கம் மீள எடுத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் இப்பகுதி திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டு கைதிகள் குடியமர்த்தப்படுவர் என்றும், அவர்களுடன் அவர்களது குடும்பங்களும் இப்பகுதிகளில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தால் மீளக் கையகப்படுத்தப்பட்டதுடன் அவற்றில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளை அமைப்பதாக விசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசு தெரிவித்தது. சில நாட்களிலேயே சுமார் 450 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்த பயிர்களும், தமிழர்கள் வாழ்ந்து வந்த நிரந்தரக் குடிசைகளும் சிங்களக் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. 

 சிங்களக் குற்றவாளிகளை வெற்றிகரமாக நெடுங்கேணியின் டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளில் குடியேற்றிய கையோடு ஒன்றிணைந்த படைகளின் விசேட படையணியின் தலைமையகத்தினை அநுராதபுரத்தில் லலித் நிர்மாணித்தார். இஸ்ரேலிய புலநாய்வுத்துறையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்கமைய தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டின் அடித்தளத்தினைச் சிதைக்கும் நடவடிக்கைகளை இந்த தலைமையகத்திலிருந்தே லலித் முன்னெடுக்க ஆரம்பித்தார்.

இஸ்ரேலிய உளவுப்படையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைத் திட்டம் பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது,

 1. இப்பகுதிகளில் இருந்து தமிழர்களை முற்றாக விரட்டியடிப்பது.

2. தமிழர்கள் வாழும் கிராமங்களை அழிப்பதன் ஊடாக தீவிரவாதிகளுக்கு உதவிகள் கிடைப்பதைத் தடுப்பது.

3. தமிழர்களால் நேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்ச்செய்கைகளை அழிப்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் இப்பகுதிகளில் பயிர்ச்செய்களில் ஈடுபடுவதைத் தடுப்பது. 

இவ்வகையான திட்டத்தினை மலேசியாவை ஆக்கிரமித்து நின்றவேளை பிரிட்டிஷாரும் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அன்று அவர்கள் பயன்படுத்திய திட்டத்தினை தமக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்த இஸ்ரேலியர்கள், எல்லையோர யூதக் குடியேற்றங்களை உருவாக்கி அப்பகுதியூடாக ஊடறுத்து உள்நுழையும் பலஸ்த்தீனப் போராளிகளை தடுக்க முயன்று வந்தனர். தாம் ஆக்கிரமித்துவரும் பலஸ்த்தீனத்தில் தாம் கைக்கொள்ளும் திட்டத்தினையே இலங்கையும் கைக்கொள்ள வேண்டும் என்று மொசாட் அதிகாரிகள் லலித்திடம் வலியுறுத்திவந்தனர். "பயங்கரவாதிகள் உள்நுழையும் வழிகளை அடைத்துவிடுங்கள், அவர்களுக்கான வளங்களை தடுத்துவிடுங்கள்" என்பதே அவர்களின் தாரக மந்திரமாகும். தமிழர்களின் தாயகத்திற்கான அடித்தளத்தினைச் சிதைத்து ஜெயாருக்குப் பின்னர் ஜனாதிபதியாகும் கனவில் இருந்த லலித்திற்கு மொசாட் அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள் மிகுந்த திருப்தியைக் கொடுத்தன.

 

Edited by ரஞ்சித்
spelling
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கிராமங்களைச் சூறையாடி, தமிழ்ப் பெண்களை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சிங்களக் குடியேற்றக்காரர்கள்
 

large_rape.jpg.5a5bae7f5494b69dc6d13dac6240d267.jpg

தனது குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள, தான் அமைத்த இணைந்த தலைமையகம் உதவும் என்று லலித் கருதினார். இத்தலைமையகத்தின் முக்கிய கடமைகளாக மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பினைக் கண்காணிப்பது, சிவில் நிர்வாகத்தைக் கண்காணிப்பது, நில வழங்கலைக் கையாள்வது என்பன காணப்பட்டன. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் "L" வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்தத் தலைமையகம் தனது கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தது.   இத்தலைமையகத்திற்கு முப்படைகள், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களின் முற்றான ஆதரவு கிடைக்கப்பெற்று வந்தது.

large.Manal_AruandPadaviya.jpg.db015e51cd3b23854c79fe4b520d20f2.jpg

 தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான மணலாற்றில் தான் விரும்பிய வகையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்துக்கொள்ளும் அதிகாரத்தினை இணைந்த தலைமையகத்தினூடாக லலித் அதுலத் முதலி பெற்றுக்கொண்டார்.  மணலாறு பிரதேசம் ஏற்கனவே அமைக்கப்பட்டு வந்த இன்னொரு சிங்கள குடியேற்றமான பதவியாவிற்கு வடக்கே அமைந்திருந்தது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு உட்பட்ட பகுதி எனும் அடிப்படையில், இப்பிரதேசத்தில் இருக்கும் காணிகளில் தனது திட்டத்திற்கென்று எவற்றையும் கையகப்படுத்தும் அதிகாரம் லலித்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

large.Asoka_de_Silva.jpg.94a86c98cf120da045ad54f5179a0624.jpg

அசோக டி சில்வா

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்வாங்கப்படுகின்ற பகுதி எனும் போர்வையில் மணலாற்றின் நிர்வாகத்தை பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்டஅநுராதபுரத்திற்கு லலித் மாற்றினார்.இப்பகுதியை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததுடன் தமிழர்களை இப்பகுதியிலிருந்து முற்றாக வெளியேற்றினார் லலித்.வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் தமிழ் நிர்வாக அதிகாரிகள் கூட இராணுவத்தினரின் அனுமதியின்றி இப்பகுதிக்குள் செல்வது தடுக்கப்பட்டது. இராணுவத் தேவைக்காக வலி ஓயா (மணலாறு) தனிமாவட்டமாக கணிக்கப்பட்டு இப்பகுதிக்கென்று தனியான ஒருங்கிணைப்பு அதிகாரியொருவரும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

லலித்தின் கூட்டுச் சேவைகள் தலைமையகத்திற்கு முன்னாள் கடற்படைத் தளபதியான அசோக டி சில்வா நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாளராக முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமாகக் கடமையாற்றிய டி.ஜே. பண்டாரகொட நியமிக்கப்பட்டார்.  பண்டாரகொடவுக்கு வழங்கப்பட்ட ஒரே பணி வலி ஓயா திட்டம் வெற்றிகரமாக நடத்தப்படுவதைக் கண்காணிப்பது மட்டும்தான். பண்டாரகொடவை ஜெயார் தனது சொந்த விருப்பின் பெயரில் முன்னர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமித்திருந்தார். ஜெயாரின் அபிமானத்தைப் பெற்றிருந்த பண்டாரகொடவும் தனது நிர்வாகத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெரும் எடுப்பிலான சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்ததுடன், தமிழர்களின் சனத்தொகை வீதாசாரத்தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தார். இவரையே வலி ஓயா திட்டத்திற்கும் அரசாங்கம் நியமித்திருந்தது.

லலித்தினால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் சேவைகள் தலைமையகம் உடனடியாகச் செயற்பாட்டில் இறங்கியது. இதன் செயற்பாடு குறித்து 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி வீக்கெண்ட் எனும் வார இறுதிப் பத்திரிக்கையில் டொன் மிதுன இவ்வாறு எழுதுகிறார்,

"கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய‌ வடமுனையில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசு முன்னெடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அவர்களை வேறு பகுதியில் குடியமர்த்தவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே, பதவியாவின் எல்லையோரமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணியிலிருந்து பதவியா வரையான பகுதிகளை சிங்களப் பாதுகாப்பு அரணாக மாற்றும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றத்தை  உருவாக்கஅரசு தீர்மானித்திருக்கிறது".

ஆரியகுண்டம், டொலர் பண்ணை மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இருந்த காடுகளை அரசு அழித்து துப்பரவு செய்ய ஆரம்பித்தது. பதவியா சிங்களக் குடியேற்றத்திலிருந்து டொலர் பண்ணை, கும்பகர்ணன் மலை, ஆரியகுண்டம், கொக்குச்சான்குளம், கொக்குத்தொடுவாய் மற்றும் வெடுக்கன் மலை ஆகிய பகுதிகளை இணைக்க நான்கு சாலைகள் அமைக்கப்பட்டன. வலி ஓயா குடியேற்றத்தை முன்னெடுக்க இராணுவ வாகனங்கள், விவசாயக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், இல்மனைட் தொழிற்சாலையின் வாகனங்கள், புகையிலைக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் என்பன பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. டொலர் பண்ணைப் பகுதியில் உடனடியாகவே சில சிங்களக் குடும்பங்கள் குடியேறத் தொடங்கியிருந்தன.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், காணி அதிகாரிகள் என்று தமிழ் பேசும் எவருமே வலி ஓயாத் திட்டம் குறித்து எதுவித தகவல்களையும் அறிந்துகொள்ளாதபடி இருட்டில் வைக்கப்பட்டிருந்தனர். இப்பகுதியினை இராணுவம் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் விமானப்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான ரோந்துகளும் இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, வெளியார் இப்பகுதிக்குள் நுழைவதை முற்றாகத் தடுத்து வந்தனர். முல்லைத்தீவில் வசித்துவந்த தமிழர்கள் இரவுவேளைகளில் தொடர்ச்சியாக பாரிய புல்டோசர்கள் காட்டுப்பகுதிகளில் இயங்கிவருவதைக் கேட்டதுடன், பாரிய குழாய்கள் அப்பகுதி நோக்கிக் கொண்டுசெல்லப்படுவதையும் கண்டிருக்கின்றனர்.

பிரபல சிங்களச் செய்தியாளர் ஒருவரின் அறிக்கை கீழே.

"தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தின் முக்கிய மாகாணங்களான வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முக்கிய நிலப்பகுதியை உடைத்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்து அரச உயர்மட்டத்தின் இரகசியத் திட்டத்தின் ஆரம்பமே இந்தக் குடியேற்றமாகும்".

இத்திட்டத்தின்படி 200,000 சிங்களவர்களை வலி ஓயாவில் அரசு குடியேற்றியதாக குணரட்ண பின்னாட்களில் என்னிடம் கூறினார்.

கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆகும். களவு, கள்ளச்சாரயம் காய்ச்சுதல், வன்முறைகளில் ஈடுபடுதல், பொதுமக்களை அச்சுருத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தென்பகுதிச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களையே குடும்பங்களுடன் இப்பகுதியில் அரசு குடியேற்றியது.

பின்னாட்களில் இப்பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களையடுத்து பல தென்பகுதி ஊடகங்களும், அரச ஊடகங்களும் கடுமையான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தன. தாக்குதலில் உயிர்தப்பிய சில சிங்களவர்கள் பேசும்போது சிங்களக் குடியேற்றத்திற்கு அருகில் இருந்த தமிழ்க் கிராமங்களுக்குள் சென்ற இராணுவத்தினரும், சிறைக் காவலர்களும், சிறைக் கைதிகளும் தமிழர்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததுடன், அப்பகுதிகளில் இருந்து தமிழர்களை விரட்டுவதிலும் ஈடுபட்டு வந்ததை ஒத்துக்கொண்டிருந்தனர். சிங்களக் குடியேற்றத்திற்கு அயலில் இருந்த‌ தமிழ்க் கிராமங்களில் இளைஞர்களைத் தாக்கித் துன்புறுத்தியதுடன், அங்கிருந்து கால்நடைகளையும் விவசாயப் பொருட்களையும் மிரட்டி எடுத்துவந்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனும் அமைப்பினர் புலிகளின் தாக்குதலின் பின்னர் உயிர்தப்பியவர்களுடன் நடத்திய நேர்காணலில் சில விடயங்களைச் சிங்களக் குடியேற்றவாசிகள் தெரிவித்திருந்தனர். சிங்களக் கைதிகளையும், காடையர்களையும் இப்பகுதியில் குடியேற்றியதன் இன்னொரு நோக்கம் அயலில் உள்ள தமிழர்களை விரட்டுவது ஆகும் என்று கூறினர். மேலும் பல தமிழ்ப்பெண்களை இழுத்துவந்து கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் சிங்களவர்கள் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினரால் இழுத்துவரப்படும் தமிழ்ப்பெண்கள் முதலில் இராணுவத்தால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்டபின்னர் சிறைக் காவலர்களிடம் கொடுக்கப்படுவார்கள் என்றும், சிறைக்காவலர்கள அவர்களைக் கூட்டாக வன்புணர்ந்த பின்னர் இறுதியாக சிங்களக் கைதிகள் அப்பெண்கள் மீது வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் உயிர்தப்பிய சிங்களவர்கள் தெரிவித்தனர்.  

 

Jessi Nona, Hemasiri Fernando and others also spoke of harassment of Tamils living in surrounding villages by soldiers, prison guards and some convicts.  Those from the settlement stole poultry, cattle and agricultural produce.  They assaulted Tamil youths.

The UTHR (J) report quotes a Sinhala activist from a leftwing political group who went to Dollar and Kent Farms for humanitarian work following the LTTE attack thus:

"The survivors had told them that the settlement of the prisoners was being used to further harass Tamils into leaving the area.  They were told that young Tamil women were abducted, brought there and gang-raped, first by the forces, next by the prison guards and finally by the prisoners".

2002 ஆம் ஆண்டு சிறந்த இளைய ஊடகவியலாளருக்கானவிருதினைப் பெற்ற சிங்களவரான அமந்த பெரேரா எழுதும்போது, " தமிழ்க் கிராமங்களைச் சூறையாடுவது மட்டுமே சிங்களச் சிறைக்கைதிகளின் நோக்கம் அல்ல, தமிழ்ப் பெண்களை இழுத்து வந்து வன்புணர்வில் ஈடுபடுவதும் அவர்களது இன்னொரு நோக்கமாக  இருந்தது" என்று எழுதுகிறார்.

Winner of the Young Journalist Award for 2002, Amantha Perera of the Sunday Leader, in his On the Spot Report published in his paper of 19 May 2002, says:

"The convicts, in fact, had been used to stealing from Tamil villages from the area and incidents of rape too had been attributed to the convicts".

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளாகவே பார்க்கப்படல் வேண்டும் ‍- சிங்களப் பாதிரியார்
 

large.Kentdollarfarm.jpg.62926c8693eb4f172b64bc3ea27c183b.jpg

கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் இருந்து இந்திய வம்சாவளித் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் பின்னர் வலி ஓயாவில் குடியேறிய சிங்கள் காடையர்கள் அயலில் உள்ள பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்து தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து வந்ததும் தமிழ் மக்களுக்கு மிகுந்த வலியினை ஏற்படுத்தியிருந்தது. சிங்களத் தலைவர்களிடமிருந்து நியாயத்தன்மையினை ஒருபோதுமே எதிர்பார்க்க முடியாது என்கிற நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தொண்டைமான். என்னுடன் தனிப்பட்ட ரீதியில் அவர் பேசும்போது சிங்களத் தலைவர்கள் தூரநோக்கற்றுச் செயற்படுகிறார்கள் என்றும் தமது செயற்பாடுகளால் தமிழ் மக்கள் எவ்வகையான துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்றோ அல்லது தமிழ மக்களின் இதுதொடர்பான உணர்வுகள் என்னெவென்றோ அவர்கள் சிறிதும் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். "இதற்குச் சரியான விலையினை அவர்கள் விரைவில் செலுத்த வேண்டி வரும்" என்று என்னிடம் அவர் மேலும் கூறினார்.

அவர் கூறியவாறே தமது செயல்களுக்கான விலையினை சிங்களத் தலைவர்கள் 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 30 ஆம் திகதி செலுத்தினார்கள். மறுநாள்க் காலை தொண்டைமானைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நான் உள்ளே நுழையும்போதே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் அவர். "செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைக் கேட்டார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்பதற்காக எதுவும் தெரியாதவர் போல அவரைப் பார்த்துக்கொண்டு நின்றேன். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்டிருந்த காடையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துப் பேசிய அவர், "தம்மிடம் அதிகாரப் பலம் இருப்பதால் தாம் எதனையும் செய்துவிடமுடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவர்களைக் காட்டிலும் பலமான சக்திகளும் இருக்கின்றன" என்று கூறினார்.

தொண்டைமானிடமிருந்து தமிழ் உணர்வு வெளிப்பட்டது இதுவே முதற்தடவையுமல்ல. அப்பாவிச் சிங்களவர்கள் கொல்லப்பட்டது தனக்கு வருத்தத்தினையளிப்பதாக அவர் கூறினாலும், தமிழர்களுக்கும் சுயகெளரவம், கண்ணியம், தமது மொழி மீதான பற்று, தமது மதம் மீதான பற்று, தமது அடையாளம் குறித்த பெருமை ஆகியன இருப்பதை சிங்களத் தலைமைகள் கண்டுகொள்ளாமைக்கான தண்டனையாக இத்தாக்குதல்களை அவர் பார்த்தார்.  

கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல் கார்த்திகை 30 ஆம் திகதி நடைபெற்றது. சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் இத்திட்டத்தினை வகுக்க, தாயகத்தில் இருந்த மாத்தையா அதனை செயற்படுத்தினார். சுமார் 50 போராளிகள் கொண்ட குழுவினர் இரவு வேளையில் பஸ் வண்டிகளில் ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என்பவற்றைத் தாங்கியவாறு அப்பகுதி நோக்கிச் சென்றனர். ஒரு பஸ் கென்ட் பண்ணை நோக்கிச் செல்ல மற்றையது டொலர் பண்ணை நோக்கிச் சென்றது. அதிகாலை வேளையில் ஒரே நேரத்தில் இந்த பண்ணைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பமாகின.

தாக்குதலில் ஈடுபட்ட புலிகள், காவலாளிகள், ஆண்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் சிலரை வெட்டியும் கொன்றனர். சில காடையர்கள் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுக் குண்டுவைத்துக் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் அன்று 62 சிங்களவர்களும் மூன்று சிறைக் காவலர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த கென்ட் பண்ணைக்குச் சென்ற புலிகள் அங்கும் 20 சிங்களவர்களைக் கொன்றார்கள். மறுநாள்க் காலையில் இராணுவமும் பொலீஸாரும் அவ்விடத்தை அடையுமுன்னர் புலிகளின் அணி அங்கிருந்து வெளியேறியிருந்தது. 

காலையில் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதியைச் சுற்றித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்போது 30 புலிகளைத் தாம் கொன்றுவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அயலில் இருந்த தமிழ்க் கிராமங்களில் இருந்து இராணுவத்தால் இழுத்துவரப்பட்ட பொதுமக்கள் தான் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தமது அணி இழப்புக்கள் எதுவுமின்றி பாதுகாப்பாக தளம் திரும்பியதாக புலிகள் பின்னர் அறிவித்திருந்தனர்.

பொதுமக்கள் மீது புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களாகும்.இத்தாக்குதல்களை புலிகளுக்கெதிரான தீவிரப் பிரச்சாரப் பொருளாக அரசு பாவித்தது. சிங்களப் பொதுமக்கள் மீதான இத்தாக்குதல்கள் ஏனைய போராளி அமைப்புகளுக்குள்ளும் தமிழ் மக்களுக்குள்ளும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. .பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் பத்மநாபா இத்தாக்குதல்களைக் கண்டித்திருந்தார். தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் எதிரானதேயன்றி சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று அவர் கூறினார்.   

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மனச் சாட்சிக்கு விரோதமானவை என்று புலிகள் கருதியதால் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோருவதில் இருந்து விலகிநின்றனர். ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்பினர் சிலர் பிரபாகரனிடம் தனிப்பட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் குறித்து வினவியபோது அதனைத் தாமே நடத்தியதாக அவர் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால், தம்மால் கொல்லப்பட்டவர்கள் சாதாரண பொதுமக்கள் இல்லையென்பதை ஆணித்தரமாக மறுத்த அவர்,  தமிழரின் தாயகத்தைக் கூறுபோடுவதற்காக அரசாலும், இராணுவத்தாலும் அப்பகுதியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட சிங்களக் கிரிமினல்கள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக  அவர் வாதிட்டார். மேலும், தாக்குதல்களின்போது பெண்களையும் குழந்தைகளையும் தவிர்த்து விடுமாறு தனது போராளிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார். தாக்குதலில் ஒரேயொரு பெண் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், அவர்கூட தனது கணவரை அணைத்தபடி அறைக்குள் சென்றபோது அவ்வறை மீது குண்டெறியப்பட்ட வேளை கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இத்தாக்குதல் குறித்து இரு சிங்களக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களில் ஒருவரான செலெஸ்ட்டின் பெர்ணான்டோ எனும் பாதிரியார், வலி ஓயா குடியேற்றத் திட்டம் அரசால் வேண்டுமென்றே வலிந்து உருவாக்கப்படதென்றும், தமிழ் மக்களையும் போராளிகளையும் சீண்டும் நோக்கிலேயே இது ஆரம்பிக்கப்பட்டதென்றும் கூறியதோடு, இத்தாகுலை பொதுமக்கள் மீதான தாக்குதல் என்று பார்க்கமுடியாதென்றும் இராணுவ இலக்காகவே பார்க்கப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

தாக்குதல் நடந்தவேளையில் அங்கிருந்து உயிர்தப்பிய சிங்களப் பெண்ணான ஜெஸி நோனா என்பவர் தானும் தனது மகளும் அயலில் இருந்த இன்னொரு சிங்களக் குடியேற்றக் கிராமமான‌ பதவியாவின் பராக்கிரமபுரவுக்குள் ஓடிச் சென்றதாகவும், தனது மருமகன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்திருந்தார்.

 லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்களப் பத்திரிக்கையான சிலுமினவுக்குப் பேட்டியளித்த ஹேமசிறி பெர்ணாண்டோ சாவிலிருந்து தான் எவ்வாறு தப்பி வந்தேன் என்பதை விளக்கியிருந்தார். "எனது குடும்பத்தினருடன் ஆழ்ந்த உறக்கத்தில் நான் இருந்தேன். திடீரென்று நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. கூடவே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வெளியே வந்தேன். யாரோ ஒருவர் எனது முகத்தை நோக்கி டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சுவது தெரிந்தது. என் முகத்திற்கு நேரே துப்பாக்கியை ஏந்திப் பிடித்த அவர் எனது கைகளை உயர்த்துமாறு கட்டளையிட்டார். பின்னர் சத்தம் போடாமல் ஓடிவிடு என்று மெதுவான குரலில் என்னைப் பணித்தார், நானும் அதற்குப் பணியச் சம்மதித்தேன்.."

"அவர் என்னை அருகிலிருந்த ஒரு குடிசைக்குள் இழுத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து இன்னொரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். என்னைப்போல இன்னும் மூன்று ஆண்களை அவர் பிடித்து வைத்திருந்தார். நாங்கள் நடத்திச் செல்லப்படும்போது குண்டு வெடிக்கும் ஓசையொன்று கேட்டது. அவ்வெடிப்பில் 15 கைதிகள் கொல்லப்பட்டனர். அதுவே போராளிகள் தாக்குதலை முடித்துக்கொண்டு திரும்புவதற்கான சமிக்ஞையாக இருந்திருக்கும்" என்றும் அவர் கூறினார்.

 

Edited by ரஞ்சித்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிளாய், நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றங்களும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட படுகொலைகளும்

large.kokkilai-Sinhala.jpg.ec2628169a2c11dbd5c0d98f954eab7b.jpg

கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றம் ஒன்று

 

மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி பெண்போராளிகள் அடங்கிய புலிகளின் அணி நாயாறு மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்கள மீனவக் கிராமங்கள் மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். சுமார் 15 கிலோமிட்டர்கள் இடையே அமைக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்கள் மீதான தாக்குதலில் 59 சிங்கள மீனவக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டனர். திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரை கடற்கரைகளை அண்மித்து தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களின் வடக்கு எல்லையிலேயே கொக்கிளாயும் நாயாறும் அமைந்திருந்தன. இக்குடியேற்றங்களில் வசித்துவந்த பெரும்பாலான சிங்களவர்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் காயப்பட்ட சில சிங்களவர்கள் அருகிலிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு உதவிகேட்டு ஓடியபோதே தாக்குதல் குறித்து இராணுவத்தினர் அறிந்துகொண்டனர். சிங்களக் குடியேற்றம் அமைந்திருந்த பகுதிக்குச் சென்ற இராணுவ வாகனம் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானது. அப்பகுதியில் சிங்களவர்களால் உரிமைகோரி நிறுவப்பட்டிருந்த கல்வெட்டுக்களும் புலிகளால் அழிக்கப்பட்டன. 

புலிகளின் இத்தாக்குதல்கள் எதிர்பாரா விதமாக இன்னும் பல சம்பவங்களுக்கு அடிகோலியிருந்தது. தமிழர் தாயகத்தில் சிங்கள அரசால் உருவாக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்களில் வாழ்ந்துவந்த சிங்கள விவசாயிகளும், மீனவர்களும் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கினர். சிங்கள மக்களிடையே முதலாவது அகதிகள் பிரச்சினையினை இத்தாக்குதல்கள் தோற்றுவித்தன. புலிகளின் தாக்குதல்களின் பின்னர்  டொலர் பண்ணைக்குச் சென்ற நிவாரணப் பணியாளர்கள் அங்கு வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு பதவியா நோக்கித் தப்பிச் செல்வதாகத் தெரிவித்திருந்தார்கள்.  தாம் வாழ்ந்துவந்த குடியேற்றங்களில் இருந்து இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்பட்டமையினால் தொடர்ந்தும் அப்பகுதிகளில் வாழ அச்சப்படுவதாகவும், அதனாலேயே தாம் அங்கிருந்து தப்பிச் செல்வதாகவும் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதிகளுக்கு அண்மையாக அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரைகளிலும் பாடசாலைகளிலும் சிங்கள அகதிகள் அடைக்கலம் புகுந்தனர்.

வலி ஓயாப் பகுதியில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள கைதிகளுக்கு நிவாரணம் வழங்கச் சென்றவர்களில் ஹேர்மன் குணரட்ணவும் ஒருவர். இறையாண்மையுள்ள நாட்டை நோக்கி என்று தான் எழுதிய புத்தகத்தில் புலிகளின் தாக்குதல்களின் பின்னர் தான் கண்ட காட்சிகளை விபரித்திருந்தார்.

"நூற்றுக்கணக்கானோர் தமது மனைவிகளுடன், கைகளில் பிள்ளைகளையும் ஏனைய அவசியப் பொருட்களையும் ஏந்திக்கொண்டு அகதி முகாம்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டேன்".

இராணுவத்தினரும், சிறைக் கைதிகளும் மணலாற்றில் (தற்போதைய வலி ஓயா) பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்களை முற்றாக அங்கிருந்து விரட்டி விடும் நடவடிக்கைகளில் இறங்கினர்.இந்த விரட்டியடிப்பு முன்னெடுக்கப்பட்ட விதத்தினை தமிழ்ச் செய்தியாளர்களும் சரித்திர எழுத்தாளர்களும் விளக்கமாகப் பதிவிட்டிருந்தனர். மிகவும் தந்திரமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் வாழிடங்களுக்குச் சென்ற இராணுவத்தினர் இப்பகுதி மீது தாக்குதல் ஒன்று நடத்தப்படப் போகிறது, ஆகவே உயிரைக் காத்துக்கொள்ள இங்கிருந்து ஓடுங்கள் என்று முதலில் எச்சரிப்பார்கள். தமது எச்சரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இராணுவத்தினர், அவர்களின் விலைமதிப்பான பொருட்களை சூறையாடியபின்னர் வீடுகளுக்குத் தீமூட்டினர். இளம்பெண்கள் இருந்த வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் அப்பெண்களை வெளியே இழுத்து வந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர். இவையெல்லாம் நடந்து முடிந்ததன் பின்னர் இப்பகுதி மீது பாரிய நேரடித் தாக்குதல் ஒன்றினை நடத்தி தமிழர்களை அங்கிருந்து முற்றாக விரட்டியடித்தனர்

மணலாறு மற்றும் ஒதியாமலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் சிங்கள இராணுவத்தாலும், சிங்களக் குடியேற்றக்காரர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பலநூறுகளைத் தாண்டும் என்று வரலாற்று பதிவாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், ஒதியாமலைப் படுகொலையில் 25 பெண்களும் சிறுவர்களும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையும் பதிவாகியிருக்கிறது. 

large.Janakapuramap.jpg.839d4aae7daca5deb0319c6fc34e4414.jpg

  பதவியாவில் ஆரம்பித்து சிறிபுரவாக முன்னெடுக்கப்பட்டு ஈற்றில் ஜனகபுர வரை விஸ்த்தரிக்கப்பட்டிருக்கும் சிங்களப் பேரினவாதிகளின் தமிழர் இதயபூமி மீதான வல்வளைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த பாரம்பரியமான தமிழ்க் கிராமம்தான் அமரவயல். இதற்கு அருகிலேயே சிங்களக் குடியேற்றக் கிராமமான பதவியா அமைக்கப்பட்டிருந்தது. அமரவயல் கிராமத்திற்கு நடந்த அனர்த்தமே முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்த பல பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்கும் நடைபெற்றிருந்தது. இக்கிராமம் அரசாங்கத்தால் முற்றாக கைவிடப்பட்டிருந்ததுடன், வயற்செய்கைக்கு மிகவும் உகந்த இடமான இப்பகுதியைக்  கைப்பற்றுவதற்காக அயலில் குடியேறி இருந்த சிங்களக் காடையர்கள் தொடர்ச்சியாக முயன்று வந்தனர். இக்கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்கள் இங்கு வசித்துவந்த தமிழ் மக்களை எப்படியாவது விரட்டிவிட முயன்று வந்தனர். மணலாறு எனும் புத்தகத்தை எழுதிய திரு விஜயரட்ணம் இக்கிராமத்திற்கு நடந்த அநர்த்தம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் முடிவடைந்து மூன்று நாட்களின் பின்னர் அமரவயல்க் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ்க் கிராமங்களுக்கு இராணுவத்தால் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், இல்லையேல் கொல்லப்படுவீர்கள் என்பதே அது. இதுகுறித்து விஜயரட்ணம் எழுதிய விபரங்கள் கீழே,

"இராணுவத்தினரிடமிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையினையடுத்து இங்கு வாழ்ந்துவந்த தமிழர்கள் தம்மால் எடுத்துச் செல்லக்கூடிய சில பொருட்களையும் சில உடுபுடவைகளையும் எடுத்துக்கொண்டு அயலில் இருந்த காட்டுப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்த இரவு முழுவதும் காட்டிற்குள்ளேயே அவர்கள் மறைந்து இருந்தனர். திடீரென்று தமது கிராமமம் இருந்த திசையிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. பின்னர் கிராமத்திலிருந்து வானை நோக்கித் தீபிழம்புகள் எழுவதை அவர்கள் கண்டனர். எரிந்துகொண்டிருந்த இதயத்தோடு அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாம் நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினர். அகதிமுகாமில் தஞ்சமடைந்த மக்களில் இளவயது ஆண்களும் பெண்களும் புலிகளுடன் இணைந்து தமது கிராமத்தை விடுவிக்க உறுதிபூண்டனர். அவர்களுக்கு வெற்றி இன்னமும் கிட்டவில்லை, ஆனால் அவர்கள் வெல்வார் என்பது நிச்சயம்".

சி.குருநாதன் எனும் எழுதாளரும் "அகதிக் கிராமங்கள்" எனும் பெயரில் ஒரு தொடரினை தினக்குரல் பத்திரிக்கையில் 2002 இல் எழுதியிருந்தார்.இத்தொடரில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழரின் பாரம்பரியக் கரையோரக் கிராமமான தென்னைமரவாடியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குருநாதன் பின்வருமாறு எழுதுகிறார்.

"மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்ற நாளுக்கு அடுத்தநாள், கொக்கிளாய் மற்றும் நாயாறுக் குடியேற்றங்களில் இருந்து பெருமளவு சிங்களக் குடியேற்றவாசிகளும் இராணுவத்தினரும் தென்னைமரவாடிக் கிராமத்தினுள் நுழைந்தனர். அவர்கள் அனைவரதும் முகங்களில் குரோதமும், தமிழர்களை அழிக்கவேண்டும் என்கிற வெறியும் காணப்பட்டது. தமிழர்கள் மீது பழிதீர்க்க வந்திருக்கிறோம் என்று கத்திக்கொண்டே அப்பகுதிக்குள் அவர்கள் நுழைந்திருந்தார்கள். துப்பாக்கிகள், வாட்கள், கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் அவர்கள் தமிழர்களைத் தாக்க வந்திருந்தனர்.

 சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் தென்னைமரவாடி எனப்படும் பாரம்பரிய தமிழ்க் கிராமத்தில் அப்போது வாழ்ந்து வந்திருந்தனர். சிங்களவர்கள் ஆவேசத்துடன் அப்பகுதிநோக்கி வருவதைக் கண்டதும் தமிழர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்டனர். தாம் தேடிவந்த தமிழர்களைக் காணமுடியாததால் அவர்களின் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் தீவைத்துவிட்டு அங்கிருந்து சென்றது அந்தக் கும்பல்.

மறுநாளும் தமிழர்களைத் தேடி அந்தக் கும்பல் தென்னைமரவாடிக் கிராமத்திற்கு வந்தது. வீடுகளுக்குள் தமிழர்களைக் காணாததால் அருகிலிருக்கும் காடுகளுக்குள் அவர்களைத் தேடி நுழைந்தது. சில தமிழர்களைக் கண்டதும் அவர்களை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது சிங்கள இராணுவம்.

தமிழ் இளைஞர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பெண்களை காடுகளுக்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் இராணுவத்தினரும் சிங்களமீனவர்களும் ஈடுபட்டார்கள். கொக்கிளாய் வாழ் தமிழர்கள் மீது இரு நாட்களில் இராணுவமும் சிங்கள மீனவர்களும் நடத்திய தாக்குதல்களில் 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

மூன்றாவது நாள், மார்கழி 4 ஆம் திகதி தென்னைமரவாடிக் கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்கள் அங்கிருந்து பாதுகாப்புத் தேடி தமது பயணத்தை ஆரம்பித்தார்கள். நான்கு நாட்களாக காடுகளுக்குள் நடந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியை அடைந்தார்கள். அப்பகுதியில் தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துத் தங்கிக் கொண்டார்கள். தமது தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்ட பகுதிக்கு "பொன் நகர்" என்று அவர்கள் பெயரிட்டனர். அவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக இன்னமும் அங்கே வாழ்ந்து வருகிறார்கள்" (2002 இல் எழுதப்பட்ட தொடரின்படி).

அமர வயலும் தென்னமரவாடியும் வலி ஓயாப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட பல கிராமங்களுக்குள் இரண்டு கிராமங்கள் ஆகும். புதிதாகக் குடியேற்றப்படும் சிங்களக் குடியேற்றக்காரர்களின் பாதுகாப்பிற்காக சுற்றியிருக்கும் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அக்கிராமங்களை அழிப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கை போன்றே அன்று செயற்படுத்தப்பட்டது.

1984 ஆம் ஆண்டு மார்கழி 24 ஆம் திகதி இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியெங்கும் ஒலிபெருக்கி அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவத்தினர் கொக்கிளாய், கொக்கொத்துடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று கட்டளையிட்டனர். 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் முடிவில் இப்பகுதிகளிலிருந்து குறைந்தது 2,700 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினரால் அச்சுருத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இவற்றுள் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், தென்னைமரவாடி கிராம சேவகர் பிரிவு திருகோணமலை மாவட்டத்திலும் அமைந்திருந்தன.

1984 மார்கழி முதல் 1985 தை மாத இறுதிவரை வரை இப்பகுதியில் நடத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் சாராம்சம்,
ஓதியாமலை - ‍ மார்கழி 1, 1984 ‍- 27 தமிழர்கள்
குமுழமுனை ‍- மார்கழி 2, 1984 - குறைந்தது 7 தமிழர்கள்
செட்டிகுளம் -  மார்கழி 2, 1984 - 52 தமிழர்கள்
மணலாறு - மார்கழி 3, 1984 -  குறைந்தது 100 தமிழர்கள்
மன்னார் - மார்கழி 4, 1984 - 59 தமிழர்கள்
கொக்கிளாய் - மார்கழி 15, 1984 - 31 பெண்களும், 21 சிறுவர்களும் அடங்கலாக 131 தமிழர்கள்
முள்ளியவளை -  தை 16, 1985 ‍-  17 தமிழர்கள்
வட்டக்கண்டல் - தை 30, 1985 -  52 தமிழர்கள்

(மேலதிக வாசிப்பிற்கு : https://tamilgenocidememorial.org/wp-content/uploads/2022/09/Massacres-of-Tamils-1956-2008.pdf)

 

large.ThennaimaravadiTamilrefugees.jpg.142f5202688f214884e0418a875cdba2.jpg

தென்னைமரவாடிப் படுகொலைகளின் பின்னர் உயிர்தப்பி வாழும் தமிழர்கள் (2004)

1988 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சம்பந்தன் வழங்கிய தகவலில் மகாவலி "L" வலயத்திலிருந்து 3,100 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினராலும், சிங்களவர்களாலும் அடித்து விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவர்களுள் 2,910 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும், 290 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழரின் பூர்வீகத் தாயகத்தின் சுமார் 15 கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் இவ்வாறு விரட்டப்பட்டிருந்தனர். இந்தக் கிராமங்களில் பெரும்பான்மமையானோர் கொக்குத்தொடுவாய் (861 குடும்பங்கள்), கருநாற்றுக் கேணி (370 குடும்பங்கள்), கொக்கிளாய் (507 குடும்பங்கள்) மற்றும் முகத்துவாரம் (1004 குடும்பங்கள்) ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

சம்பந்தனின் அறிக்கையின்படி தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட கிராமங்களின் பட்டியலொன்று வெளியிடப்பட்டது,

கொக்கிளாய், கருநாற்றுக் கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, ஆண்டான்குளம் கணுக்கேணி, உத்தராயன் குளம் மற்றும் உதங்கை என்பனவாகும்.

மேலும் தமிழர்கள் பகுதியளவில் வெளியேற்றப்பட்ட கிராமங்களாக ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை (கிழக்கும் மற்றும் மேற்கு), தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அளம்பில் ஆகியவை அடையாளம் காணப்பட்டன.

இதேவகையான தமிழ் நீக்கச் செயற்பாடுகள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்பட்ட பாரம்பரிய தமிழ்க் கிராமங்களிலும் அரசால், இராணுவத்தினரின் துணைகொண்டு அரங்கேற்றப்பட்டு வந்தது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுமையும், பதின்ம வயதுத் திருமணமும், விபச்சாரமும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடிய சிங்களக் குடியேற்றங்கள்


புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கென்ட்டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொக்கிளாய்நாயாறு குடியேற்றங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மார்கழியில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பினை அதிகரிப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. இவ்வாறான பாதுகாப்புச் சபை கூட்டமொன்றில் பிரபல சிங்கள இனவாதியும் சிகல உறுமயவின் ஸ்த்தாபகருமாகிய எஸ்.எல்.குணசேகரவினாலும், இன்னொரு பெயர்பெற்ற இனவாதியான தவிந்த சேனநாயக்கவினாலும்  தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றினை பிரிகேடியர் டெனிஸ் ஹபுகள்ள எனும் அதிகாரி சபையிடம் கையளித்தார்.

large.SLGunasekara.jpg.4acf772a0dd3e010828762b7bc752ed3.jpg

வலி ஓயாவை இராணுவமயப்படுத்தும் ஆலோசனையினை வழங்கிய சிங்களப் பேரினவாதி எஸ் எல் குணசேகர‌
   

தொடர்ந்துவந்த சில வருடங்களில் வலி ஓயாவின் விரிவாக்கத்திற்கான அரசாங்கத்தின் கொள்கையில் பாரியளவு செல்வாக்குச் செலுத்திய இவ்வறிக்கை இரு முக்கிய விடயங்கள குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தது. சிங்களக் குடியேற்றங்களுக்கு நடுவில் இராணுவ நிலைகளை அமைத்தல் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குதல் என்பனவே அவையாகும். இக்கூட்டத்தில் பங்குபற்றிய ஜெயாரின் மகனும் ஆலோசகருமாகிய ரவி ஜெயவர்த்தன உடனடியாகவே இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டதுடன் சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கான ஆயுதப் பயிற்சியினையும் ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்கத்தின் இக்கொள்கையின் அடிப்படியில் வலி ஓயா முற்றான இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றமாக மாறியது. இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சிங்களக் கிராமங்களுக்கான சிவில் நிர்வாகத்தை இராணுவம் பொறுப்பெடுத்துக்கொண்டது. கென்ட் பண்ணை அமைந்திருந்த இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் வலி ஓயா படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டது. இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளின் தலைவராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜனக பெரேரா வலி ஓயாப் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வலி ஓயாவில் அமைக்கப்பட்ட ஜனகபுர எனும் புதிய சிங்களக் கிராமம் அவரது பெயரை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டது.  ஜனக பெரேராவின் மனவியின் பெயரை அடிப்படையாகக் கொண்டு கென்ட் பண்ணைப்பகுதி கல்யாணிபுர என்று அழைக்கப்பட  அவரது மகனின் பெயரை அடிப்படையாகக் கொண்டு சம்பத்புர எனும் புதிய கிராமும் அப்பகுதியில் உருவாக்கப்பட்டது.

large.Janaka.jpg.ba55852b802fdeb6c46ceba4364922ca.jpg

போர்க்குற்றவாளி ஜனக பெரேரா

வலி ஓயாவில் குடியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகளின் வாழ்வு முற்றான இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளானது. இங்கு குடியேறிய குடும்பங்களிலிருந்து பல இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், இப்பகுதியின் பெண்கள் பலரும் இராணுவ வீரர்களை மணம் முடித்துக்கொண்டனர்.

மனிதவுரிமைகளுக்கான பயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு இப்பகுதி மக்களைப் பேட்டி கண்டிருந்தது. அவ்வாறான் பேட்டி ஒன்றில் தென்மாவட்டமான காலியின் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தனபால என்பவரது குடும்பம் இப்பகுதியில் வாழ்ந்து வந்தது. ஆரம்பத்தில் மாதுரு ஓயாவுக்குக் குடியேற, திம்புலாகலை பிக்குவின் தலைமையில் சென்ற இவருக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது. பின்னர் மணலாறு வலி ஓயாவாக மாற்றப்பட அப்பகுதியில் உருவாக்கப்பட்ட சின்ஹபுர எனும் கிராமத்தில் அவருக்கு நிலம் ஒன்று வழங்கப்பட்டது. தமது வாழ்க்கை ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது என்று அவர் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் கலந்தபடி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு வேளைகளில் கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருப்பதாக அவர் கூறினார். காலம் செல்லச் செல்ல பல குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்ததாக அவர் கூறினார். தொடர்ச்சியான இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழலில் , போர் அச்சத்திற்கு நடுவே வாழ விரும்பாது, தமது வீடுகளைக் காலி செய்துவிட்டு அவர்கள் வெளியேறியதாக அவர் கூறினார். ஆனால், தனது குடும்பத்தினால் வெளியேற முடியாதவாறு இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். அவரது மகன் ஒருவர் இராணுவத்தில் இணைந்துகொள்ள, மூன்று புதல்விகளில் ஒருவர் அப்பகுதியில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவரை மணம் முடித்துக்கொண்டதாக அவர் மேலும் கூறினார். 

அப்பகுதியெங்கும் தொடர்ச்சியான அச்சம் சூழ்ந்திருந்தது. புலிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தபடி இருந்தனர். இராணுவத்தினர் எதிர்பார்க்கத நேரத்தில் திடீரென்று அப்பகுதி மீது துணிகரமான தாக்குதல்களை அவர்களால் நடத்தக்கூடியதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையினை மனிதவுரிமைக்கான (யாழ்) பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது,

பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களிடம், கரும்பலகையினைப் பார்க்க வேண்டாம், அருகேயிருக்கும் காடுகளிலிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருங்கள் என்று கூறப்பட்டதாம். யாழ்ப்பாணத்துச் சிறுவர்கள் குண்டுவீச்சு விமானங்களுக்காக வானை அண்ணாந்து பார்ப்பதுபோல இச்சிறுவர்கள் காடுகளைப் பார்த்தபடி இருந்தார்கள். ஆனால், இவை வெறுமனே வெளியில்த் தெரியும் விடயங்கள் மட்டும்தான். ஆனால், இதனை விடவும், ஆளமான, மறைந்துகிடக்கும் விடயங்களும் இங்கு இருக்கின்றன. குறிப்பாக பொதுமக்கள் வாழிடங்களுக்கிடையே பரவிக் கிடக்கும் இராணுவ முகாம்கள்.......

இப்பகுதியில் பல ஆண்களுடன் பேசியபோது, "எமக்கு இராணுவம் பாதுகாப்பு அளிக்கின்றதா அல்லது இராணுவ முகாம்களுக்கு நாம் பாதுகாப்புக் கவசங்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றோமா என்று எமக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். இரவு வேளைகளில் முன்னணிக் காப்பரண்களுக்கு ரைபிள்களுடன் ஆண்கள் அனுப்பிவைக்கப்பட வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை இராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்துவந்தார்கள்.

அமந்த பெரேரா இப்பகுதியின் நிலைமை குறித்து விரிவான ஆய்வொன்றினைச் செய்திருந்தார். அவரது கருத்துப்படி வலி ஓயாவில் வாழும் சிங்களவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறுகிறார். இப்பகுதியின் நிர்வாகக் கட்டமைப்பு மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. சிறுவர்களுக்கான கல்வி வசதிகள் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டதுடன், மருத்துவ வசதிகளும் சீரற்றுக் காணப்பட்டன. முழுமையாக இயங்கும் மருந்தகமோ அல்லது சீரான போக்குவரத்து வசதிகளோ இப்பகுதியில் இன்னும் அமையப்பெறவில்லை என்று அவர் எழுதியிருந்தார்.

வலி ஓயாவில் வாழும் சிங்களக் குடியேற்றக்காரர்கள் மிகவும் வறுமையானவர்கள். பணம் தேவைப்படும்போதெல்லாம், குறிப்பாக நீர் இறைக்கும் இயந்திரங்களை வாங்ககடனெடுப்பதைத் தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இருக்கவில்லை. அரசினதும், அரசு சாரா அமைப்புக்களினதும் உதவியிலேயே அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சமூகக் கட்டமைப்பும், வாழ்க்கைமுறையும் இப்பிரதேசத்தில் சீர்குலைந்து காணப்பட்டது. பதின்ம வயதுத் திருமணங்களும், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகமும் இப்பகுதியில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. அமந்த பெரேராவின் அறிக்கையின்படி இப்பகுதியில் வைத்தியராகக் கடமையாற்றும் சரத் குமார கூறுகையில் 12 வயதுச் சிறுமிகள் கர்ப்பம் தரித்தபடி வைத்தியசாலைக் கொண்டுவரப்படுவது சாதாரண விடயமாகிவிட்டது என்று கூறுகிறார். பிள்ளைகளுக்கான சரியான வசதிகளைச் செய்துகொடுக்க முடியாமையும், அவர்களைப் பாதுகாப்பாக வைத்துப் பராமரிக்க முடியாமையும், பதின்ம வயதுத் திருமணங்கள் நடக்கக் காரணமாகிவிடுகின்றன. மேலும் பெருமளவான இராணுவ வீரர்களின் பாலியல்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய விபச்சாரத்தைப் இப்பகுதியின் பெண்கள் தொழிலாகச் செய்துவருவதாகவும், பாலியல்ப் பலாத்காரம் என்பது சாதாரணமாக நடக்கு விடயம் என்றும் வைத்தியர் சரத் குமார கூறியிருக்கிறார்.

வலி ஓயவில் வசிக்கும் பெண்களின் நாளாந்த வாழ்வில் விபச்சாரம் என்பது ஒரு அங்கமாகிவிட்டதாக அமந்த பெரேரா கூறுகிறார். இவ்வாறான பெண்களை இப்பகுதியில் சூழ்நிலைக்கான பாலியல்த் தொழிலாளிகள் என்று அழைக்கிறார்கள். அதாவது பணம் தேவைப்படும்போது மட்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொள்வது. ரஞ்சனி என்கிற பெயரில் இப்பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் வாழ்க்கை குறித்து சில விடயங்கள் கீழே பகிரப்படுகிறது,

ரஞ்சனி எனப்படும் 38 வயது பெண்ணொருத்திக்குப் பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். இரு குடும்பங்களை அவர் தனக்கு அரசிடமிருந்து மாதாந்தம் கிடைக்கும் 2200 ரூபாய்களை வைத்துக்கொண்டே சமாளித்து வருகிறார். ஊர்காவல்ப் படையில் பணிபுரிந்த வேளை கஜபாபுர பகுதியில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் கொல்லப்பட்டதற்காக மாதாந்த பணமாக அரசால் இந்த 2200 ரூபாய்கள் வழங்கப்பட்டு வந்தது. 

அவருக்கு இரு புதல்விகள். ஒருவருக்கு 19 வயது மற்றையவருக்கு 9 வயது. மூத்த மகள் 14 வயதில் திருமணம் முடித்துக்கொண்டார். அவரும் அவரது கணவரும் வீட்டில் வேலையின்றி வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் அவர்களது குழந்தைக்கும் ரஞ்சனியே உணவு வழங்கிப் பராமரித்து வருகிறார்.

உங்களுடைய மகளை இவ்வளவு சிறிய வயதில், வேலையற்ற ஒருவருக்கு ஏன் திருமணம் முடித்து வைத்தீர்கள்? என்று நாம் அவரைக் கேட்டோம். அவரால் சரியான பதில் ஒன்றினை வழங்க முடியவில்லை. "தன்னால் இனிமேல்ப் பாடசாலைக்குப் போக முடியாது, எனக்குத் திருமணம் முடித்து வையுங்கள் என்று ஒருநாள் என்னிடம் வந்து கூறினாள்", என்று அவர் எம்மிடம் கூறினார். 

"உங்களை இப்பகுதியில் உள்ள ஆண்கள் தமது இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக அழைப்பதுண்டா என்று நாம் கேட்டபோது, அவரால் சிரிப்பதைத் தவிர வேறு எதனையும் கூற முடியாது போய்விட்டது. ஆனால், அவரது சிரிப்பு எமக்குப் பல விடயங்களைப் புரியவைத்தது. அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு வழங்க வேண்டுமானால் தனது உடலை விற்றால் மட்டுமே முடியும் என்கிற நிலை, ஆகவே அவரும் அதனை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார் என்பது புரிந்தது.

மகாவலி அமைச்சினால் தீட்டப்பட்ட தந்திரமும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் வறுமையில் வாழ்ந்துவரும் இரு இனங்களுக்கும் மிகவும் பாரதூரமான இன்னல்களை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தினை உருவாக்கி, நடத்திய செல்வச் செழிப்புக்கொண்ட சிங்கள மேற்தட்டு தலைமைகள் கொழும்பில் என்றும்போல் இன்றும் ஆடம்பரமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை வலி ஓயாவுக்கான பயணம் என்பது ஒரு பொழுது போக்கு, உலங்கு வானூர்தியிலிருந்து சுற்றுலா செல்வதுபோல ஓரிரு மணிநேரத்தில் பார்த்துவிட்டுவரும் உல்லாசப் பயணம், அவ்வளவுதான். சிறுபான்மையின மக்களுக்கு சுயகெளரவம், மரியாதை, இனமானம் என்பவை இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறியமையே வறுமைக் கோட்டுக்குக் கீழான இந்நாட்டு மக்களை குடியேற்றங்கள் மூலம் பலியிட அவர்களைத் தூண்டியது. சனத்தொகையில் அதிகம் இருப்பதால் மட்டுமே பெரும்பான்மையினம் தன்னுடன் அதிகாரத்தையும், பலத்தையும் வைத்துக்கொள்ள முயலக் கூடாது. ஒவ்வொரு தனி மனிதனும் அடிப்படை மனிதவுரிமை, சுய கெளரவம், மரியாதை, சொத்து என்று அனைத்தையும் வைத்திருக்கும் உரிமையினைக் கொண்டிருக்கிறான். இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவன் அடக்குமுறைக்கெதிராக புரட்சி செய்வதற்கான சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவுகள் நடந்து நீண்டகாலமானாலும் திரும்பவும் படிக்க மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்வண்டிப் படுகொலைகள்

large.Busmassacre.jpg.73f79ab50bfd51009de796936f308f34.jpg

கடந்த அத்தியாயங்களில் தாக்கிவிட்டு மறையும் தந்திரத்திலிருந்து விடுபட்டு, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைமைக்கு புலிகள் இயக்கத்தை பிரபாகரன் மாற்றிய சந்தர்ப்பங்கள் குறித்தும் அது எவ்வாறு முதலாவது ஈழப்போராக பரிணமித்தது என்பது குறித்தும் எழுதியிருந்தேன். இந்த மாற்றம் 1984 ஆம் ஆவணி மாதம் 4 ஆம் திகதில் கடலில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறை மீது இராணுவமும், கடற்படையும் சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கல்த் தாக்குதல்களுடனும் ஏக காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடனும் ஆரம்பமானது.

இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களுக்கான பதிலை ஆவணி 5 ஆம் திகதி நெடியகாடு பகுதியில் பொலீஸ் கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி பொலீஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர உட்பட 8 பொலீஸாரைக் கொன்றதன் மூலமும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தைத் தாக்கி பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லை உட்பட இன்னும் ஏழு பொலீஸரைக் கொன்றதன் மூலமும் புலிகள் கொடுத்தார்கள். 

தமது சகாக்களின் இழப்புகளுக்கான பழிவாங்கல்த் தாக்குதல்களில் இராணுவத்தினர் ஈடுபடத் தொடங்கினர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கிய இராணுவத்தினர், தனியார் கட்டடங்களுக்கும் தீவைத்தனர். யாழ்ப்பாணத்தில் ரோந்துவந்த இராணுவக் கவச வாகனம் மீது புலிகள் கிர்னேட் தாக்குதலை நடத்தி பெற்றொல்க் குண்டுகளை அதன் மீது வீசியபோது அது சேதமடைந்தது. புலிகளுடன் இணைந்துகொண்ட பொதுமக்கள் வீதிகளை அடைத்து மூடியதன் மூலம் இராணுவத்தினரின் போக்குவரத்தினைத் தடுத்தனர்.

அதிலிருந்து நிலைமை மோசமாகத் தொடங்கியது. வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர் ஆதர் ஹேரத் புலிகளால் கொல்லப்பட்டபோது பொலீஸார் பல பொதுமக்களை சுட்டுக் கொன்றனர். சுண்ணாகப் பொலீஸ் நிலையப் படுகொலையும், நாவற்குழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இராணுவத்தால் இழுத்துச் சென்று சுட்டுக்கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களைப் பெரிதும் ஆத்திரம் கொள்ள வைத்தது. மேலும் மன்னாரில் இராணுவத்தினரின் ரோந்து அணிமீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டபோது மக்கள் புரட்சியின் பிரதேசம் விரிவடையத் தொடங்கியது. வல்வெட்டித்துறை மற்றும் ஊர்காவற்றுரை பொலீஸ் நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள், கரவெட்டி, நீர்வேலி, பருத்தித்துறை, கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு இராணுவத்தினர் மிகவும் மூர்க்கத்தனமான பழிவாங்கல்த் தாக்குதல்களை பொதுமக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டனர்.

large.Hartleycollege.jpg.7b28fe17a1f96d74808d0f3bf76d72a7.jpg

ஹாட்லீக் கல்லூரி 2008

பருத்தித்துறை நகருக்கு அண்மையாக அமைந்திருக்கும் திக்கம் பகுதியில் பொலீஸார் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 5 பொலீஸார் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் அப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடமாராட்சியின் புகழ்பூத்த கல்லூரியான ஹாட்லீக் கல்லூரிக்குள் நுழைந்த இராணுவத்தினர் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கல்லூரி நூலகத்தையும், இரசாயண ஆய்வுகூடத்தையும் எரித்து நாசமாக்கினர். கல்லூரி மாணவர்களை தூண்டிவிடும் நோக்கில் கல்லூரி வாயிலில் வேண்டுமென்றே பொலீஸ் கொமாண்டோக்களின் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளிலுமிருந்த மாணவர்கள் இப்பொலீஸ் நிலையத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு தமிழ்  மக்கள் அனைவருமே இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுக்க ஆரம்பித்தனர்.

சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் பருத்தித்துறையில் பொதுமக்கள், இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையினைக் கண்டித்திருந்தார். அதற்கு ஏளனமாகப் பதிலளித்த லலித் அதுலத் முதலி, "யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று அமிர்தலிங்கத்திற்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டிருந்தார். "தமிழர்கள் அமிர்தலிங்கத்தையும் அவரது சகாக்களையும் முற்றாக நிராகரித்து விட்டார்கள்" என்றும் லலித் கூறினார். தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வந்த தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை கண்டித்து, அதுகுறித்து விளக்கமளிக்குமாறு சர்வதேச அழுத்தம் லலித் அதுலத் முதலி மீது பிரயோகிக்கப்பட்டு வந்தது. தனது வாதத் திறமையினை வைத்து இவ்வகையான சவால்களை அவர் எதிர்கொள்ளத் தொடங்கினார். "சுண்ணாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை விமானப்படையினர் சுட்டுக் கொன்றது எதற்காக?" என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பின் லலித்திடம் வினவியபோது, "சந்தையின் கூரையின் மீதிருந்த பயங்கரவாதிகளை விமானப்படையினர் வானிலிருந்து சுடும்போது சன்னங்கள் கூரையினைத் துளைத்துக்கொண்டு வியாபாரிகள் மேல் பாய்ந்திருக்கலாம்" என்று பதிலளித்தார்.

large.JeremyCorbyn.jpg.1ae30c1bd2a057408773ee9fcbd8d785.jpg

ஜெரமி கோர்பின்

வல்வெட்டித்துறையில் புலிகளுடனான கடற்சண்டையின் பின்னரும், நெடியகாட்டில் கண்ணிவெடித் தாக்குதலில் பலமான இழப்புக்களைச் சந்தித்ததன் பின்னரும் கடலில் இருந்து வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய பகுதிகள் நோக்கி கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாகநடத்திவந்தனர். திக்கம் பகுதியில் மேலும் இழப்புக்களை பொலீஸார் சந்தித்ததையடுத்து இப்பீரங்கித்தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துக் காணப்பட்டது. கரையோரக் கிராமங்கள் மீது கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல் நடத்துவதென்பது அன்றாட நிகழ்வாகிப்போனது. புரட்டாதி முதாலம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை பருத்தித்துறையில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அன்றைய நாள் திருப்பலியை ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில், திடீரென்று கடற்படையினர் கடலில் இருந்து பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். இத்தாக்குதலில் ஆலயமும், குருவானவரின் தங்கும் அறையும் சேதமடைந்தது. ஆலயத்திற்கு அருகில் இருந்த பல வீடுகளும் சேதமடைந்தன.

 புரட்டாதி 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் செருப்புத் தைக்கும் தொழிலாளியான தங்கத்துரையின் குடிசையின் முன்னால் செல் வீழ்ந்து வெடித்ததில் தலையில் குண்டுச் சிதறல்கள் பட்டு மனைவி அவ்விடத்திலேயே உயிர் துறக்க, தங்கத்துரை நிரந்தரமாகவே அங்கவீனரானார்.

இராணுவத்தினர் ரோந்து சுற்றும் கவச வாகனங்களில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மனைகள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது. இத்தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டபோது பலர் அங்கவீனர்களாயினர்.  மக்களின் அன்றாட வாழ்வும் முடங்கிப் போனது. 1984 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி கொக்கிளாயில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மறுநாள் சம்பவ இடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் வீதிகளில் தென்பட்ட நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்று இராணுவத்தின்னர் அறிவித்தபோது, மறுத்த புலிகள், அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று கூறியிருந்தனர்.

பஸ் படுகொலையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளும் - 11, புரட்டாதி 1984

அதேநாள், புரட்டாதி 11 ஆம் திகதி இரவு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்வண்டியை 46 பயணிகளுடன் கடத்திச் சென்ற இராணுவத்தினர், 60 வயதுச் சாரதி உட்பட 17 பேரைச் சுட்டுக் கொன்றனர். இப்படுகொலை தொடர்பான விடயங்களை யாழ்ப்பாணத்துப் பத்திரிக்கைகள் விலாவாரியாக செய்தியுடன் விளக்கியிருந்தன. ஈழநாடு பத்திரிக்கை இப்படுகொலையில் உயிர் தப்பிய 29 வயதுடைய கிறிஸ்ட்டோபர் பஸ்டியாம்பிள்ளை ஆனந்தராஜாவை பேட்டி கண்டிருந்தது. அப்பேட்டியின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு,

"நான் எனது சித்தியுடன் கொட்டாஞ்சேனையில் வாழ்ந்து வருகிறேன். யாழ்ப்பாணம் செல்வதற்காக தனியார் கடுகதி பஸ்வண்டியில் இரவு 8 மணிக்கு கொழும்பு, புறக்கோட்டையில் ஏறினேன். அவ்வண்டியில் 46 பயணிகளும், இரு சாரதிகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் தமிழர், மற்றையவர் சிங்களவர். பயணிகளில் 10 இலிருந்து 15 வரையானவர்கள் பெண்கள். அவர்களில் இருவர் இளவயதுப் பெண்கள். அதிகாலை 2 மணிக்கு தேனீர் அருந்துவதற்காக றம்பாவ‌ எனும் இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அதுவரை வண்டியை சிங்களச் சாரதி ஓட்டிவந்திருக்க, அப்போதுதான் தமிழ்ச் சாரதி ஓட்டும் பொறுப்பினை எடுத்திருந்தார். வவுனியாவிற்கு இன்னும் 10 கிலோமீட்டர்களே இருக்க வீதியோரத்தில் நின்ற‌ ஐந்து இராணுவத்தினர் வண்டியை மறித்தார்கள். அவர்கள் அனைவரும் திடகாத்திரமானவர்களாக இருந்ததுடன், ஒருவர் மட்டுமே சீருடையினை அணிந்திருந்தார். அவர்கள் மறிக்கவே, சாரதியும் வண்டியை நிறுத்தினார்". 

"பஸ்வண்டியில் ஏறிக்கொண்டதும், சீருடையில் காணப்பட்ட இராணுவத்தினன், "பஸ்வண்டியில் பயங்கரவாதிகள் எவராவது இருக்கிறார்களா என்று தாம் சோதனை செய்யவேண்டும்" என்று கூறினான். அவர்கள் அனைவரும் நிறைபோதையில் இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் குண்டுகள் ஏற்றப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன. அவர்களில் ஒருவன் தமிழர்களைக் கேவலமாகத் திட்ட ஆரம்பித்தான். "சிங்கள இராணுவத்தினரைக் கொன்றுவிட்டு விலைமாதர்களுக்குப் பிறந்த தமிழர்கள் சொகுசு பஸ் வண்டிகளில் பயணிக்கிறீர்களா" என்பது போன்ற மிகக் கேவலமான தூஷண வார்த்தைகளை அவன் பாவித்துத் திட்டினான். "முறைதவறிப் பிறந்த தமிழர்கள் எமது பொலீஸ் காரர்களில் எட்டுப் பேரை இன்றிரவு கொன்றிருக்கிறீர்கள், அதற்குப் பழிதீர்க்க உங்கள் அனைவரையும் நாம் இப்போது கொல்லபோகிறோம்" என்று அவன் கர்ஜித்தான்".

"எனக்கு நடுங்கத் தொடங்கியது. பதற்றமாகிப் போனது. நான் பிரார்த்திக்கத் தொடங்கினேன். தமிழ்ச் சாரதியை வாகனத்தை விட்டு இறங்குமாறு சீருடையில் நின்ற இராணுவத்தினன் கட்டளையிட்டான். அதற்கு இணங்க மறுத்த சாரதி, "பயணிகளின் பாதுகாப்பு எனக்கு முக்கியமானது" என்று பணிவுடன் பதிலளித்தார். உடனேயே அவரை துவக்கின் பின்புறத்தால் அவன் கடுமையாகத் தாக்கினான். தான் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர் "முருகா, முருகா, இந்த மக்களையெல்லாம் காப்பாற்று" என்று பலத்த குரலில் கத்தத் தொடங்கினார். பஸ்ஸைவிட்டு இறங்கும்படி வற்புறுத்தப்பட்ட அவரை, ஓடும்படி அவர்கள் பணித்தார்கள். அவரும் வீதியின் ஓரத்தில் இருந்த பற்றையொன்றினை நோக்கி ஓடத் தொடங்கினார். அவர் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் மீது ஒருவன் துப்பாக்கியால் சுட்டான், அவர் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தார்".

"அதன்பின்னர் பஸ்ஸிலிருந்த பயணிகளில் இளைஞர்களை அவர்கள் வெளியே இழுத்து எடுத்தார்கள். நான் எனது இருக்கையின் கீழ் பதுங்கிக் கொண்டேன். கீழே இறக்கப்பட்ட இளைஞர்களை ஓடும்படி கட்டளையிட்டு, அவர்கள் ஓடத் தொடங்கியதும் அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கித்தாக்குதலை நடத்தினார்கள். அந்த இளைஞர்கள் அனைவரும் இறந்து வீழ்ந்தார்கள்".

"பின்னர், நான் இருந்த இருக்கைப் பக்கம் வந்த ஒருவன் என்னை பிடித்து வெளியே இழுத்தான். தாம் வைத்திருந்த துப்பாக்கியின் பின்புறத்தால் என்னைச் சரமாரியாகத் தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் எனது முகத்தில் தான் அணிந்திருந்த பூட்ஸ் காலினால் பலமாக உதைந்தான். பஸ்ஸில் இருந்து வெளியே குதித்த நான் அதன் அடிப்பகுதியில் சென்று பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் இன்னும் நான்கு பயணிகள் பஸ்ஸின் கீழ் பதுங்கியிருப்பது எனக்குத் தெரிந்தது".

"என்னைக் கைவிட்டு விட்டு பஸ்ஸில் இருந்த இரு இளம் பெண்களிடம் அவர்கள் சென்றார்கள். நாம் மெது மெதுவாக பஸ்ஸின் அடிப்பகுதியில் இருந்து ஊர்ந்து சென்று அருகிலிருந்த காட்டிற்குள் ஒளிந்துகொண்டோம். அங்கிருந்து நீண்ட நேரம் நடந்து தமிழ்க் கிராமம் ஒன்றினை நாம் அடைந்தோம். அங்கிருந்து தப்பி வந்தோம்" என்று ஆனந்தராஜா கூறினார். 

இப்படுகொலையில் இருந்து உயிர் தப்பிய இன்னொருவர் 64 வயதுடைய கந்தையா பரமநாதன். பஸ்ஸில் நடந்த ஏனைய அநர்த்தம் குறித்து அவரிடம் பேட்டி காணப்பட்டது. கொழும்பில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் இருந்து தான் பஸ்ஸில் ஏறிக்கொண்டதாக அவர் கூறினார்.

"நான் றம்பாவ‌ பகுதியில் பஸ்ஸை விட்டு இறங்கவில்லை. நான் ஒரு இருதய நோயாளி. இராணுவத்தினர் பஸ்ஸில் ஏறிய வேளை நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். யாரோ உரத்த குரலில் பேசுவது கேட்டு நான் விழித்துக்கொண்டேன். அவர்களில் ஐந்து பேர் இருந்தனர். ஒருவன் மட்டுமே சீருடையில் இருந்தான். மற்றைய நால்வரும் கட்டைக் காற்சட்டையும் டீ சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே இராணுவத்தினர்தான் என்பதை நாம் புரிந்துகொண்டோம்".

"அவர்கள் முதலில் சாரதியைச் சுட்டார்கள். பின்னர் இளைஞர்களைக் கொன்றார்கள். இளவயதுப் பெண்களையும், ஏனைய பெண்களையும் வெளியே இழுத்து எடுத்தார்கள். பெண்கள் ஓவென்று கதறியழவே நாம் உரத்த குரலில் சத்தமிடத் தொடங்கினோம். எம்மை அமைதியாக இருக்கும்படி அதட்டிய அவர்கள், இல்லாதுவிடில் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார்கள். பின்னர் பெண்கள் அனைவரையும் அவர்கள் பற்றைகளுக்குள் இழுத்துச் செல்ல நான் மயங்கிவிட்டேன்என்று கந்தையா பரமநாதன் கூறினார். 

இக்கொடூரமான பஸ் படுகொலைகள் சென்னையில் தங்கியிருந்த முன்னணியின் தலைவர்களை கவலைப்படுத்தியிருந்தது. அனைத்துக் கட்சி மாநாடு புரட்டாதி 21 வரை பிற்போடப்பட்டது. அதன் இறுதிக் கூட்டமான புரட்டதி 3 ஆம் திகதி சந்திப்பில், அதிகாரப் பரவலாக்கலுக்கான அலகு குறித்து நெகிழ்வான தன்மையினை ஜெயார் காண்பித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியினரும், பெளத்த மகா சங்கத்தினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு அதிகமாக எதனையும் தமிழர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டு வந்த நிலையில், இந்தியா, மாகாணசபை வரை அலகு விஸ்த்தரிக்கப்படலாம் என்று எதிர்ர்வுகூறத் தொடங்கியது.

அமிர்தலிங்கம் கடுமையான தொனியில் ஜெயாருக்கு தந்தியொன்றினை அனுப்பினார். "இராணுவம் அப்பாவிப் பஸ் பயணிகளைப் படுகொலை செய்யும்போது அதன் அரசாங்கத்துடன் நாம் எப்படிப் பேசுவது?" என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார். முன்னணியினது விமர்சனத்தையடுத்து இந்தியாவும் ஜெயவர்த்தன மீது அழுத்தம் கொடுத்தது. சர்வதேச ஊடகங்களிலும் இச்செய்தி வெளிவந்தபோது வேறு வழியின்றி இப்படுகொலைகளை விசாரிக்க பொலீஸ் குழுவொன்றினை ஜெயார் அமைத்தார். படுகொலை நடைபெற்ற இடத்திற்குச் சென்ற பொலீஸ் குழு, சேதப்படுத்தப்பட்டு, அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பஸ் வண்டியையும், அருகில் இருந்த புதர்களுக்குள் பெண்கள் அணியும் ஆடைகள் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடப்பதையும் கண்டனர்.

புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதம் முழுவதிலும் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். புரட்டாதி மாதத்தின் 3 ஆம் வாரத்தில் நடந்த தாக்குதலில் இரு பொலீஸார் கொல்லப்பட்டனர்.புரட்டாதி 22 ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அரச பேச்சாளர் தமிழ்நாடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயங்கரவாதிகளின் படகைக் கடற்படையினர் தாக்கி அழித்தபோது 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1980 களில் இராணுவத்தின் அட்டூழியங்களை இனக்கொலை என்று அழைத்த இந்துவின் என்.ராம்

large.NRamandMR.jpg.edf0bfd3cea7235db07dff1558340727.jpg

2009 இல் தமிழர்களையும், விடுதலைப் போராட்டத்தையும் அழித்தமைக்காக இனக்கொலையாளி ராஜபச்க்ஷவைப் போறிப் புகழும் அதே என்.ராம்

தனது கடுமையான நிலைப்பாட்டிற்காக லலித் அதுலத் முதலி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களால் பெரிதும் தேடப்பட்டவராக மாறினார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னர் எழுதிவந்தவரும் ஹிந்துப் பத்திரிக்கையின் ஆசிரியருமான என்.ராம், அதுலத் முதலியைப் பேட்டி கண்டார். அரசாங்கத்தின் அரசியல்ப் பேச்சாளரும், இராணுவப் பேச்சாளருமாக அதுலத்முதலியே அன்று செயற்பட்டு வந்தார். அத்துடன் சர்வகட்சி மாநாட்டின் உத்தியோகபூர்வப் பேச்சாளரும் அவராகவே இருந்தார்.

ராம் எழுதிய கட்டுரை புரட்டாதி 22 ஆம் திகதி ஹிந்துப் பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் கொழும்பில் இலண்ட் பத்திரிக்கை அதனை மீள்பிரசுரம் செய்திருந்தது.

ராம் தனது பேட்டியினை இரு பகுதிகளாக வகுத்திருந்தார்.  முதலாவதாக சர்வகட்சி மாநாடு குறித்து லலித்திடம் வினவிய அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்னவென்றும் கேட்டார். சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒற்றைத்தீர்வு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்று லலித் பிடிவாதமாகப் பதிலளித்தார். அதற்குமேல் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்க அரசாங்கத்தால் முடியாது என்றும் அவர் கூறினார். இதனை விடவும் அதிகமான அதிகாரங்களை தமிழருக்கு அரசு வழங்கினால், அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டு செயலற்றுப்போக, அதிதீவிர சிங்களக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும், அதன்பின்னர் தமிழருக்கான தீர்வு குறித்து எவருமே பேசமுடியாது போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார். 

தனது பேட்டியில் இரண்டாம் பகுதியில் எதேச்சாதிகாரத்துடன் செயற்பட்டுவரும் இராணுவத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது இருப்பது குறித்து ராம் லலித்திடம் கேட்டார். இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களை லலித் மறுக்கவில்லை, நடப்பது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டார். ஆனால், அந்தப் பழிவாங்கல்த் தாக்குதல்களை அவர் நியாயப்படுத்தினார். தமது சகாக்கள் கொல்லப்படும்போது அவர்கள் தமது கட்டுப்பாட்டை இழந்து பழிவாங்கல்த் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார். இராணுவத்தினரைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சாதாரண சட்ட நடைமுறைகளையோ அல்லது இராணுவ நீதிமன்றங்களையோ அமைத்து ஏன் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்று ராம் கேட்டார். இக்கேள்விக்கு சட்டரீதியாகப் பதிலளித்த லலித், போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதென்பது சாதாரண சட்ட வழக்குகளுக்கு பொருந்தாது என்றும், இராணுவத்தினருக்கு சட்ட விலக்கல்களும், சிறப்புரிமைகளும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய லலித், தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயல்வது குறித்து இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கத் தவறுவது பாரிய குற்றமாகும் என்றும் தெரிவித்தார்.

லலித்துடனான பேட்டியின் பின்னர் ஹிந்துப் பத்திரிக்கை தமது மூத்த செய்தியாளரான எஸ்.பார்த்தசாரதியை யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையினை அறிந்துவருமாறு அனுப்பியது. கொழும்பு வந்த பார்த்தசாரதி, யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி புகையிரதத்தில் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஏறினார். 1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையினை இரு பாகங்களாக ஐப்பசி 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஹிந்துவில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகளை நான் இங்கு  இணைக்கிறேன். குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2005 ஆம் ஆண்டின்படி) ஹிந்துப்பத்திரிக்கை இப்படுகொலைகளை "இனக்கொலை" எனும் பதத்தினைப் பாவித்து விளித்திருந்தது என்பதை வாசகர்கள் கவனித்தல் வேண்டும். "இராணுவத்தினரின் வன்முறைகளும், கலாசார இனக்கொலையும்" என்கிற தலைப்பில் இந்த அறிக்கை வெளிவந்திருந்தது.

"யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒற்றை ரயிலில் ஏறி அமர்ந்துகொண்ட இந்தச் செய்தியாளர், ரயில் தமிழர் பகுதிக்குள் சென்றதும் பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் காணப்பட்டதை உணர்ந்தார். இறுகிய முகத்துடன் காணப்பட்ட இராணுவ வீரர்கள் தமது துப்பாக்கிகளை சுடுவதற்கு ஆயத்தமாக கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு, அப்பெட்டியெங்கும் நிரம்பிக் காணப்பட்டனர். இன்னொரு நாட்டினுள் நுழைவது போன்ற மனப்பான்மையுடன் செயற்பட்ட அந்த இராணுவ வீரர்கள் அப்பெட்டியில் இருந்த தமிழர்களை மிரட்டி அவர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தனர். மாலையாகி, ரயில் யாழ்ப்பாணத்தை அடைந்ததும் ரயில் பிளட்போமில் பெரிய சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், இவர்கள் எவரும் அங்கு நின்றிருந்த இராணுவத்தினரின் கழுகுப் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை. யாழ்ப்பாண நகருக்கு முதன்முதலாக வரும் ஒருவருக்கு அந்த நகரம் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், சில மணிநேரத்திற்குள் அந்த அமைதியும், இயல்புநிலையும் வெறும் மாயை என்பதும், அவற்றிற்குப் பின்னால் தொடர்ச்சியான பதற்றமும், அச்சமும் நிலவுவதும் தெரிந்துவிடும். வீதிகளில் சிறிய இடைவெளிவிட்டு நிரைகளாக இராணுவக் கவச வாகனங்களும், ட்ரக் வண்டிகளும் வேகமாக ரோந்துபுரிவதும், வீதியால் செல்லும் மக்களை உரசிக்கொண்டு போவதும் புரியும். தமது சொந்தத் தாயகத்தில், கைதிகள் போலத் தமிழ் மக்கள் அடையாள அட்டைகளைக் காவித்திரிய வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்தியிருக்கிறது, இதுவும் கிட்டத்தட்ட தென்னாபிரிக்கா போலத்தான் இருக்கிறது என்று அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் கூறினார். உங்கள் பார்வைக்குத் தெரிவதை அப்படியே நம்பிவிடாதீர்கள், சாட்சியங்களுடன் அவற்றை கண்டு உணருங்கள் என்று பயம் கலந்த பதற்றத்துடன் இரகசியமாக என்னிடம் பேசினார் அந்த அரசாங்க அதிகாரி".

புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் பார்த்தசாரதி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்குச் சென்றுவந்தார். அப்பாவி மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை இராணுவம் நடத்திவருவதை பார்த்தசாரதி கண்டார். இவ்வாறான பல தாக்குதல் சம்பவங்கள் யாழ்க்குடா நாடெங்கும் பரவலாக நடந்து வந்தது. தாக்கப்பட்டு உயிர்தப்பியவர்களை அவர் பேட்டிகண்டபோது, "உங்களை எதற்காகத் தாக்குகிறார்கள்?" என்று வினவியபோது, "பையன்கள் கொள்ளையிட்டார்களாம், இராணுவ ஆயுதக் கிடங்குகளுக்குள் நுழைந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றார்களாம், நகைகளைத் திருடினார்களாம் என்று எங்கள் மேல் பழிவாங்கல்த் தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால், இன்றுவரை அவ்வாறு செய்த பையன்களில் ஒருவரைத்தன்னும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. அப்பாவி இளைஞர்களை பிடித்துச் சென்று, கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்திக் கொல்கிறார்கள் அல்லது நடைபிணங்களாக வெளியே விடுகிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.

பார்த்தசாரதி சென்ற இடமெல்லாம் இதே கதைதான் திரும்பத் திரும்ப மக்களால் அவருக்குச் சொல்லப்பட்டது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் முகமாக 18 வயதிலிருந்து 35 வயது வரையான இளைஞர்களை சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்று கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மீது நடத்துகிறார்கள். சுற்றியிருக்கும் வீடுகளையும் கடைகளை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சந்தைகளும், ஆலயங்களும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு இடத்திற்குள்ளும் ஆழமாகச் செல்ல செல்ல, அப்பகுதியில் இராணுவம் புரிந்துவரும் அட்டூழியத்தின் அளவும், மக்கள் எதிர்கொண்ட அழிவுகளின் அளவும் தெளிவாக வெளித்தெரிய ஆரம்பிக்கும். 

ஒருவர் எங்கு சென்றாலும், ஏதோவொரு வீட்டில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக சொந்தங்கள் அழுதுகொண்டிருப்பதும், சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுக் காணாமற் போன தமது பிள்ளைகளுக்காக‌ பெற்றோர்கள் அலறுவதும் கேட்டுக்கொண்டிருக்கும். குறைந்தது நூறு முறைகளாவது இராணுவம் தம்மீது மிகக் கொடூரமாகத் தாக்குதலில் ஈடுபட்டதென்பதை யாழ்ப்பாணத்து மக்கள் அவரிடம் சொல்லக்கேட்டர் அவர். யாழ்ப்பாணத்து மக்களால் சொல்லப்பட்ட இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்ச் சம்பவங்களின் பட்டியல் முடிவின்றி நீண்டு சென்றுகொண்டிருந்தது. 

"ஆயுதம் தரிக்காத அப்பாவி ஆன்களும், பெண்களும், சிறுவர்களும் பல்லாயிரம்பேர் கொண்ட கனரக ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் தம்மை யாழ்ப்பாணத்தில் முற்றுகை ஒன்றிற்குள் வைத்திருப்பதாக உணர்கிறார்கள்.  வங்கியொன்றில் முகாமையாளராகப் பணிபுரியும் ஒரு தமிழர் பார்த்தசாரதியிடம் பேசுகையில்,  வங்கியில் போராளிகள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நாம் முறையாக பொலீஸாரிடமோ இராணுவத்தினரிடமோ முறைப்பாடு செய்தாலும், அவர்கள் அன்று வரப்போவதில்லை. போராளிகள் அங்கிருந்து அகன்று சென்றபின்னர், மறுநாள், தமக்கு சேதம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு அங்கு வருவார்கள். வந்ததும் அங்கிருக்கும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தி அப்பாவிகளைக் கொன்று குவிப்பார்கள்".

"உங்களின் சகாக்களின் காயங்களுக்கு நாம் மருந்திட வேண்டுமென்றால், அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்துங்கள் என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிலர் இராணுவத்தைக் கடிந்துகொண்டபோதுதான் தமிழர்களைக் கொல்வதை அப்போதைக்கு, அவர்கள் நிறுத்தினார்கள்" என்று உயிர்தப்பிய இன்னொருவர் கூறினார்.

பொலீஸார் பயம் காரணமாக பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிவிட, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சூழலில் சில சமூக விரோதிகள் தம் கைவரிசயினைக் காட்டவும் தயங்கவில்லை என்றும் மக்கள் கூறினார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.