Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் தொலைக்காட்சியும், விளங்கிக் கொள்ள வேண்டியனவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் தனிப்பட்ட கடவுள் என்ற ஒன்றை நம்பவில்லை அத்துடன் மறுதலித்தும் விடவில்லை. அதை நான் தெளிவாக வெளியிட்டிருக்கிறேன். மதம் என்ற ஒன்று எனக்குள் இருக்குமானால் அது இந்த உலகின் கட்டமைப்பிற்கான எல்லையற்ற மெச்சத்தக்க இயல்பின் விளைவு என்பதை விஞ்ஞானம் மூலம் அது குறித்து வெளிப்படுத்த முடிந்த வரை ஏற்றுக்கொள்வேன்.

I do not believe in a personal God and I have never denied this but have expressed it clearly. If something is in me which can be called religious then it is the unbounded admiration for the structure of the world so far as our science can reveal it. (Albert Einstein, 1954)

நான் ஒழுங்கமைப்பட்ட ஒருமித்திருக்கின்ற இந்த அகிலத்தையே கடவுளாகப் பார்கிறேன். மனிதனின் விதியை.. அவனின் நடத்தையை பற்றி.. அக்கறைப்படுவதை கடவுளாகக் கருதவில்லை.

I believe in Spinoza's God who reveals himself in the orderly harmony of what exists, not in a God who concerns himself with the fates and actions of human beings. (Albert Einstein)

புத்தமதத்தின் இயற்கைக்கு மதிப்பளிக்கும்.. மற்றும் மெஞ்ஞான நிலை தேடும் மனித சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கும் அயன்ஸ் ரீன்.. எதிர்கால மதம் இப்படி இருக்கனும் என்றும் சொல்கிறார். "The religion of the future will be a cosmic religion. It should transcend personal God and avoid dogma and theology. Covering both the natural and the spiritual."

எதிர்கால மதம் பிரபஞ்ச தன்மை உள்ளதா (காலத்தோடு சிந்தனை சார்ந்து பரந்து விரிந்து கொண்டிருக்கும் நிலை) இருக்க வேண்டும். தனிப்பட்ட கடவுள்... ஆதாரமற்ற சிந்தனைகளின் கொள்ளிடம்.. இதுதான் மதம் என்ற வரையறைகள் கடந்து.. காலத்தோடு விரிவடையும்..இயற்கையை மற்றும் மெஞ்ஞான அறிவைப் போதிப்பதாக அமைய வேண்டும்.

-------------------

இறைவன் அன்பின் வடிவம் என்பதுதான் மதங்களின் சிந்தனையும்..! அன்பு இயற்கையின் ஒரு வடிவம்.. உணர்வியலால் எழுவது..! அந்த அன்பு இல்லையேல் harmony (ஒற்றுமை) என்பது உலகில் உயிர்களிடத்தில் நிலைத்திருக்காது. அகிலத்தை கடவுளாக வணங்குதலையே.. இந்து சைவ மத அடிப்படை கொள்கைகள் சொல்கின்றன. புத்தமத ஸ்தாபகர் புத்த பெருமான் கூட இந்து மத அடிப்படைகளில் இருந்துதான் தனது மெஞ்ஞானப் போதனைகளைச் செய்தவர்.

ஆக.. நாம் குறிப்பிடுவது போல.. மூடப்பழக்க வழக்கங்கள்.. விதியின் விதிப்பு என்ற மதத்தின் பெயரால் மனித சிந்தனைகளைக் கட்டிப்போடாமல்.. மனிதனை சிந்திக்க அனுமதிக்க வேண்டும். அந்தச் சிந்தனை விஞ்ஞான ரீதியா.. மெய்யியல் ரீதியா.. இயற்கையை உணரக் கூடிய தன்மை உடையதா.. ஒற்றுமை அன்பை வலியுறுத்துவதா இருக்க வேண்டும். எவரும் மதம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்று கூறவில்லை. எல்லா மதங்களிலும் இந்த அடிப்படை இருக்கிறது என்பதை அவற்றை ஆழ நோக்கின் புரியும். மேலோட்டமா படிச்சிட்டு.. மேலோட்டமா விளங்கினதை வைச்சு இதுதான் மதம் என்று மக்களை மேய்க்கிற வேலையை செய்யும் சில மேய்ச்சல்காரர்கள் மதவாதிகளும் அல்ல. அவர்களை திருத்த முனைந்து மதத்தைக் கடிந்து கொள்வது பகுத்தறிவுவாதமும் அல்ல..! :P

இப்படித்தான் மனிதனை மனிதன் சுரண்டுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.. தெளிய வேண்டியது.. தெரிய வேண்டியது.. தீர்வு தேட வேண்டிய எமது சிந்தனை செயல்களே தவிர.. அடுத்தவர்கள் அல்ல..! :rolleyes:

Edited by nedukkalapoovan

இறைவன் அன்பின் வடிவம் என்பதுதான் மதங்களின் சிந்தனையும்..! அன்பு இயற்கையின் ஒரு வடிவம்.. உணர்வியலால் எழுவது..! அந்த அன்பு இல்லையேல் harmony (ஒற்றுமை) என்பது உலகில் உயிர்களிடத்தில் நிலைத்திருக்காது. அகிலத்தை கடவுளாக வணங்குதலையே.. இந்து சைவ மத அடிப்படை கொள்கைகள் சொல்கின்றன. புத்தமத ஸ்தாபகர் புத்த பெருமான் கூட இந்து மத அடிப்படைகளில் இருந்துதான் தனது மெஞ்ஞானப் போதனைகளைச் செய்தவர்.

இது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து.

அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் இது அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

"நாத்திகம் பேசும் மனிதருக்கெல்லாம் அன்பே சிவமாகும்"

பார்ப்பனியவாதிகளும் பகுத்தறிவுவாதிகளும் இணைந்து ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை எதிக்க வேண்டுமா?

அப்படி என்றால்

ஒரு சுரண்டலை இன்னொரு சுரண்டலோடு சேர்ந்து எதிர்க்க வேண்டுமா?

(உண்மையில் விஜய் ரிவி பற்றியும் ஏகாதிபத்திய சுரண்டல் பற்றியும் இன்னுமொருவன் நல்ல ஒரு கட்டுரையை தந்திருக்கிறார். ஆனால் விடயத்தை சொல்லாது, பொருந்தாத "அட்வைஸ்களை" தர முனைந்தது கட்டுரையை திசை திருப்பி விட்டது)

  • தொடங்கியவர்

சபேசன் உங்களது விமர்சனத்திற்கு முதற்கண் நன்றி;.

சுரண்டல்கள், மற்றும் ஒடுக்கு முறைகள் அவை எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்க்கப்படவேண்டும் என்பதில் எவரிற்கும் இங்கு முரண்பாடு இருப்பதாய்த் தெரியவில்லை. அத்தோடு, ஒடுக்குமுறைகள், எத்தனை ஆழமான வடுக்களை அதன் பிடிக்குட்பட்டவர்கள் மீது விட்டுச் செல்கின்றன என்பதும், அத்தகைய ஒரு விடயம் பற்றிய விவாதங்கள் எத்தனை பொறுப்புணர்வோடு நூதனமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சற்று இந்தியாவை விட்டு விட்டு, நானும் நீங்களும் வாழுகின்ற மேற்கினை ஒரு கணம் பார்த்தால், இங்கு தொழில் முறைகள் தோறும் (ஆராய்ச்சி கூடம் தொட்டு அடுப்படி வரை) இன்னோரன்ன கடைப்பிடிக்கப்படவேண்டிய வழிமுறைகள் (புறோசஸ்) அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. தொடர்ந்து அவற்றின் வினைத்திறன் அளவிடப்பட்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த வழிமுறைகள் பற்றிய மக்களின் கருத்தானது, "ஒரு வழிமுறை என்பது எமது வினைத்திறனைப் பெருக்கும் வகை செயற்பட வேண்டுமே அன்றி, வழிமுறையின் இருப்பிற்காக நாம் செயற்படக் கூடாது" என்ற வகையில் தான் அமைகிறது. நல்ல விடயங்களை நாம் யாரிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாமே.

அந்த வகையில், இந்தியாவில் ஒடுக்குமுறைகளிற்கு எதிராக, ஒரு கட்டமைப்பாக இயங்குகின்ற பெரியாரிஸ்ருக்களை நோக்கி முன்வைக்கப்படுகின்ற கருத்து என்னவெனில், கடந்த கால அணுகுமுறைகள் அல்லது வழிமுறைகள் கணிசமான வெற்றியை மட்டுமே பெற்றுள்ள நிலையில், சுரண்டல் புதுப்புது வடிவங்களில் தொடர்கிறது. 15 வீத இந்தியர்கள் 85 வீத இந்தியர்களை கனகச்சிதமாகக் கட்டுப் படுத்தும் நிலைதான் இன்னமும் உள்ளது (இந்நிலை உடனே ஏற்பட்டது அல்ல. பல கால, பன்முகப்பட்ட, சுரண்டலின் விளைவு). எனவே, இந்தியா அதன் மீதான சுரண்டல் வடிவ மாற்றத்தின் தொடக்கத்தில் நிற்கின்ற இச்சந்தர்ப்பத்திலாவது, இதுவரை இருந்துவந்த வழிமுறைகள் பற்றிப் பரிசீலிக்கலாமே என்பது மட்டுமே.

//சுரண்டல் புதுப்புது வடிவங்களில் தொடர்கிறது. 15 வீத இந்தியர்கள் 85 வீத இந்தியர்களை கனகச்சிதமாகக் கட்டுப் படுத்தும் நிலைதான் இன்னமும் உள்ளது (இந்நிலை உடனே ஏற்பட்டது அல்ல. பல கால, பன்முகப்பட்ட, சுரண்டலின் விளைவு). எனவே, இந்தியா அதன் மீதான சுரண்டல் வடிவ மாற்றத்தின் தொடக்கத்தில் நிற்கின்ற இச்சந்தர்ப்பத்திலாவது, இதுவரை இருந்துவந்த வழிமுறைகள் பற்றிப் பரிசீலிக்கலாமே என்பது மட்டுமே.//

இன்னுமொருவன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உண்மையாக எனக்கு விளங்கவில்லை, நீங்கள் முன் மொழியும் கருதுக்களை இன்னும் தெளிவாக வையுங்கள்.

இன்று இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்துவந்த சாதியக் கட்டுமானத்தின் மேல் தான் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், அதிகாரக் குவிப்பும் இருகிறது என்பதை நீங்கள் முதலில் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதைத் தெளிவாக்குங்கள்.

அப்படி நீங்கள் இதனை ஏற்றுக் கொண்டால் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

முதலில் இவ்வாறான ஒரு நிலை இருக்கிறது என்பதை போராடும் மக்களுக்கு தெளிவாகத் தெரியும் போது தான், ஒரு பரந்துபட்ட வெகுஜன இயக்கம் கட்டி எழுப்பப்பட முடியும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை ஆக்கிரமிக்கும் அரசு அதன் வரலாற்றுக் குண இயல்புகள் அதனை எதிர்க்கும் தமிழத் தேசியம் என்னும் கருதுகோள்களின் அடிப்படையிலையே தமிழத் தேசிய இயக்கமான விடுதலைப் புலிகள் எழுகிறார்கள்.ஆகவே முதலில் மக்களுக்கன அரசியல் விழிப்புணர்வு என்பது அவர்களின் வரலாற்றில் இருந்தே எழுகிறது.

இங்கே இந்திய ஆளும் வர்க்கமானது எத்தகையது அதன் வரலாற்று வகி பாத்திரம் என்ன தற்போதைய உலகில் அது எப்படியாகத் தன்னை உருமாற்றிச் செயற்படுகிறது என்பதைச் சொல்வதே பெரியார் வழி வந்தவர்கள் ஆரியத் திராவிட கோட்பாட்டையும்,சாதிய அடுக்கின் பாற்பட்ட வரலாற்றுச் சுரண்டலையும் சொல்கிறார்கள்.சாதிய அடுக்கு எங்கிருந்து வந்தது, அதன் தோற்றுவாய் என்ன அதனைக் ஏன் எதற்காக் கொண்டு வந்தனர், அதற்கும் இப்போது இருக்கும் அதிகார அமைப்பிற்க்கும் என்ன தொடர்பு என்று கதைக்க வேண்டி இருக்கிறது.

இதற்க்கு மாற்றாக இந்திய உபகண்டத்தை இந்து சமயம் என்னும் ஒற்றைப்படையான அடையாளத்தின் மூலம் ஆட்சி செய்ய இந்த அதிகார மையங்கள் விரும்புகின்றன.அதன் வெளிப்பாடே பாரதிய ஜனதாவின் கிந்துவாக் கோட்பாடு.இது தமிழர்கள் ,ஆரியர் -திராவிடர் என்பவை எல்லாவர்றையும் மறுதலித்து,பார்ப்பனர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் எனவும், திராவிடர் ஆரியர் என்பவை எல்லாம் வெறும் கற்பனைகள் எனவும் நிறுவ முற்படுகிறது.இதன் அடிப்படை மக்கள் இப்போது இருக்கும் அதிகார மையங்களை நோக்கிக் கிளர்ந்து எளாமல் ஒரு இந்து இராச்சியத்தை ஏற்படுத்தி தாம் தமது வரலார்று ரீதியான சுரண்டலைத் தொடர்ந்தும் செய்ய வேண்டும் என்னும் சுய நோக்கில் ஆனது.அன்று எவ்வாறு அரசை தாம்தான் கடவுளின் தரகர்கள் என்ரு சொல்லி ஏமாற்றினார்களோ அதே செயற்பாட்டை இன்று மத நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய விழைகின்றனர்.

சரி இதில் ஈழத் தமிழர்களான எமக்கு என்ன அனுகூலம் இருக்கிறது.இந்துதுவ வாதிகள் தமிழர் எங்கிற அடையாளத்தை மறுதலித்து, இந்தியர் என்னும் அடையாளததையே வலியுறுதுகின்றனர்.மாற்றாக தமிழ் நாட்டின் திராவிடக் கட்சிகள் நாம் தமிழர் எமக்கும் ஈழத் தமிழர்களுக்கும் தொன்மையான உறவு இருகிறது,ஆகவே இந்தியா ஈழத் தமிழர்களின் பால் கரிசனை உடையதாக தனது வெளி உறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் எங்கிறார்கள்.இங்கே ஈழத் தமிழர்களின் நலங்கள் தமிழ் நாடில் தமிழர்கள் இந்திய அரசில் செலுத்தும் அதிகார ஆழுமையுடன் சம்பந்தப் படுத்தப்படதாக இருகிறது.ஆகவே தான் ஈழ மக்களாகிய நாம் இந்தியக் கூட்டாட்ச்சிக்குள் தமிழ் நாடுத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு உயர அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலையில் இருகிறோம்.

ஈழத் தமிழ்ச் சமூகத்திற்குள் அமிழ்ந்திருக்கும் சாதிய வேற்றுமைகளும் களையப்பட வேண்டியவையே.ஆகவே திராவிட அரசியலும், தமிழ்த் தேசிய விடுதலைப் போரும் ஒன்றோடொன்று ஒருங்கிணையானவை.எமது போரட்டத்தை அவர்களும் ,அவர்களின் போரட்டத்தையும் அதன் நியாயத்தை நாமும் அங்கீகரிக்க வேண்டும்.எவ்வாறு சிங்கள இனவாத்தின் வரலாற்றை மறந்து விட்டு நாம் எமது போரட்டத்தைக் கைவிட முடியாதோ அவ்வாறே தமிழ் நாட்டு மக்களும் தமது வரலாற்றை மறுதலித்து விட முடியாது.வரலாற்று முரண்களில் இருந்தே அரசியற் போராட்டங்களும் அவற்றிற்குத் தலமை தாங்கும் இயக்கங்களும் எழுகின்றன.

இங்கே எழுதித் தள்ளும் நாம் அல்ல போராடப் போவது.அப்படிச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது. நாம் உண்மை பேசுவதும், நீது நீயாயத்தின் படி கருத்து எழுதுவதுமே இங்கே நாங்கள் செய்யக்கூடிய குறைந்த பட்ச செயற்பாடு.அது கருத்தியல் ரீதியாக நாம் ஒடுக்கப்படும் மக்களுக்குச் செய்யும் ஒரு சிறு பங்களிப்பு மட்டுமே.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆக்கம் இன்னொமொருவன்,

ஆனால் உதில கனபேர் தங்களது கருத்துகளை கடினமான மொழியில் தந்திருகிறார்கள் இந்த மரமண்டைகுள்ள ஒரு கத்தரிக்காயும் ஏறவில்லை. :P

இந்து சைவ மத அடிப்படை கொள்கைகள் சொல்கின்றன. புத்தமத ஸ்தாபகர் புத்த பெருமான் கூட இந்து மத அடிப்படைகளில் இருந்துதான் தனது மெஞ்ஞானப் போதனைகளைச் செய்தவர்.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கமும் புத்தர் ஒரு இந்து சீர்திருத்தவாதி என்று இரண்டு,மூன்று வருடங்களிற்கு முன் குறிபிட்டு இருந்தார்.அப்பொழுதும் சில இணையதளங்களிள் கேள்வி எழுப்பி இருந்தார்கள் புத்தர் காலத்தில் இந்து மதம் இருந்ததா என்று எனக்கும் அதே சந்தேகம் தான்! பெரியோர்களே,புத்திஜீவிகளே இந்து மதம் அந்த காலத்தில இருந்ததா இல்லையா என்று அறியதரமுடியுமா.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.