Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவரை , திடீர் சுகவீனமுற்றுள்ளார் என யாழ்.போதனா வைத்திய சாலையில் , அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , இளைஞன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக் கொண்டமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞனும் , அவரது நண்பர்கள் மூவருமாக போதைப்பொருளினை ஊசி மூலம் உடம்பினுள் உட்செலுத்திக்கொண்டுள்ளனர்.

நண்பர்கள் மூவரும் , போதைப்பொருளை உட்செலுத்திய பின்னர் , மிகுதியானதை முழுவதுமாக உயிரிழந்த இளைஞன் உட்செலுத்தியுள்ளார்.

அவ்வாறு அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்டமையால் , மயக்கமுற்று விழுந்த இளைஞனை , போதையில் மயங்கி உள்ளதாக நினைத்து , போதை தெளியும் என காத்திருந்துள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் ஆகியும் இளைஞன் அசைவற்று காணப்பட்டமையால் , இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோப்பாய் பொலிஸார், உயிரிழந்த இளைஞனுடன் , சம்பவ தினத்தன்று போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய ஏனைய மூவரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் ஏனைய மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தலே ,அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் நபர்களை அடையாளம் காணமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை , யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலமாக உட்செலுத்தியதில் இதுவரை 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனவும் , உயிரிழந்தவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1317789

  • Replies 89
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கத்தியில்லாமல், சத்தமில்லாமல், ரத்தம் சிந்தாமல், குற்றச்சாட்டு இல்லாமல், விசாரணையில்லாமல் இலகுவான இனவழிப்பு! எதிரி சாமர்த்தியமாய் காய் நகர்த்துகிறான் அதை தடுக்க ஒரு நல்ல தலைவன் இல்லை நமக்கு. எதிரியின் கையை பலப்படுத்த, திட்டத்தை நிறைவேற்ற  ஓடித்திரிகிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது.

இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகரிப்பானது முன்னைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

https://athavannews.com/2023/1318493

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'i போதைப்பொருளுக்காக பணம் செலுத்தாமை காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண் கைது News lankans lank அதான் எங்க நாடு அங்கதான் நாங்க இருக்கம்'

போதைப் பொருளுக்கு, பணம் செலுத்தாததால்... 
10 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண்.  

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கோண்டாவிலில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற குற்றத்தில் ஒருவர் கைது!

Published By: DIGITAL DESK 5

20 FEB, 2023 | 11:09 AM
image

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை மடக்கி சோதனை செய்த போது , 750 கிராம் போதை கலந்த பாக்கு உடைமையில் இருந்து மீட்கப்பட்டது. 

அதனை அடுத்து சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/148620

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மாப்பிளை குடிகாரனாக இல்லை என கவலைப்பட்ட மாமியார்!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் குடிப்பழக்கம் இல்லாததால் சம்மந்தம் ஒன்று குழம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, சாவச்சேரியில் தரகர் மூலம் பெண் பொருந்திய நிலையில், கடந்த வாரம் பெண்வீட்டிற்கு பெண்பார்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது, கதை வழக்கில் மாப்பிள்ளை தண்ணி அடிப்பாரா என கதை வந்துள்ளது.

மைலோ மட்டுமே குடித்து பழகிய மாப்பிள்ளை.. ச்சே ச்சே… நான் குடிக்கிறதே இல்லை என பெருமையாக கூறியுள்ளார்.

அதன்போது மணப் பெண்ணின் தாயார், “இந்தக் காலத்தில் குடிக்காதவனெல்லாம் ஆம்பிளையா” என நக்கலாக கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாப்பிள்ளைவீட்டார் சம்பந்தத்தை குழப்பிக்கொண்டு வெளியேறியுள்ளனர்.

தனது ஒழுக்கமாக வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு இது தானா என மாப்பிள்ளை வருந்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://samugammedia.com/confusion-over-lack-of-drinking---a-true-incident-that-happened-in-jaffna-chavacheri-samugammedia-1678284242

  • கருத்துக்கள உறவுகள்

என் இனமாடா நீ ........!  👍  😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

அப்போது, கதை வழக்கில் மாப்பிள்ளை தண்ணி அடிப்பாரா என கதை வந்துள்ளது.

மைலோ மட்டுமே குடித்து பழகிய மாப்பிள்ளை.. ச்சே ச்சே… நான் குடிக்கிறதே இல்லை என பெருமையாக கூறியுள்ளார்.

அதன்போது மணப் பெண்ணின் தாயார், “இந்தக் காலத்தில் குடிக்காதவனெல்லாம் ஆம்பிளையா” என நக்கலாக கூறியுள்ளார்.

💰Kaufe Nestlé Milo Active Go 400g zum besten Preis im Online-Shop bei Joom

மாப்பிள்ளை...தண்ணி அடித்தால்,  மாமியார்... அவருடன் சேர்ந்து 
தண்ணி அடிக்கலாம் என்று பிளான் போட்டிருக்கிறா போலை கிடக்கு. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'Newtamils.com 3h. யாழில் மாப்பிளை குடிகாரனாக இல்லை என கவலைப்பட்ட மாமியார்!! கலியாணம் குழம்பியது!! https://vampan.net/ 42921/ MONKEY MEMES Monkey Memes இதென்னடா குடிக்காதவனுக்கு வந்த சோதனை'

animiertes-alkohol-bild-0023.gif  இனி.. குடிக்கத்தான் வேணும். 😂 animiertes-alkohol-bild-0064.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, colomban said:

மைலோ மட்டுமே குடித்து பழகிய மாப்பிள்ளை.. ச்சே ச்சே… நான் குடிக்கிறதே இல்லை என பெருமையாக கூறியுள்ளார்.

அதன்போது மணப் பெண்ணின் தாயார், “இந்தக் காலத்தில் குடிக்காதவனெல்லாம் ஆம்பிளையா” என நக்கலாக கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாப்பிள்ளைவீட்டார் சம்பந்தத்தை குழப்பிக்கொண்டு வெளியேறியுள்ளனர்.

@விசுகு

விசுகருக்கு  நான் கொஞ்ச நாளைக்கு முதல் ஏதோ ஒரு திரியில தண்ணியடிக்காத மாப்பிளை வாழ்க்கைக்கு சரிப்பட்டு வர மாட்டார் எண்டு சொன்ன ஞாபகம். :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

மாப்பிள்ளை...தண்ணி அடித்தால்,  மாமியார்... அவருடன் சேர்ந்து 
தண்ணி அடிக்கலாம் என்று பிளான் போட்டிருக்கிறா போலை கிடக்கு. 😂

மாமி டெய்லி யாழ்களம் வந்து போறா எண்டு நான் நினைக்கிறன் சிறித்தம்பி.....:hahaha:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மாமி டெய்லி யாழ்களம் வந்து போறா எண்டு நான் நினைக்கிறன் சிறித்தம்பி.....:hahaha:

அண்ணை...  சம்பவம் நடந்த இடம், சாவாகக்சேரி.  animiertes-lachen-bild-0116.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சுழிபுரம் பகுதியில் 64 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ். சுழிபுரம் பகுதியில் 64 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.எழுதுமட்டுவாள் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமாா் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் மீட்கப்பட்டிருக்கின்றது.

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் மோட்டாா் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டனா்.

குறித்த கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில்,அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை சுழிபுரம் காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த50 கிலோ கேரள கஞ்சாவை இராணுவத்தினா் மீட்டுள்ளனா். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில்  மேற்படி கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது.

https://athavannews.com/2023/1327073

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாதகல் கடற்கரையில் ரூ.4 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையில் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

kanja-300x180.png
கடற்படையினர் நேற்று மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கிடமான 4 பைகளில் 55 பொதிகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவை கேரள கஞ்சா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் எடை 126 கிலோவுக்கும் அதிகமாகும்.

https://thinakkural.lk/article/244385

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2022 at 19:14, தமிழ் சிறி said:

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இனி என்ன ,உந்த கருத்தடை சாதனம் "கொண்டம்" இலவசமாக வழங்க வேண்டும் என யாரவது அதிகம் படிச்ச புத்தாசாலி கருத்து சொல்ல அதை அமுல் படுத்த புலம் பெயர்ந்த புண்ணியவாங்கள் விசிலடிச்சுக் கொண்டு முன்னுக்கு வருவாங்கள் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.