Jump to content

மனமும் அறிவும்


Recommended Posts

Posted

நெடுக்ஸ்.

உடல் ஒரு thermodynamic system (open) என்பதில் வேறுபாடான கருத்துக்கள் இல்லை. ஆனால் அதன் இயக்கம் ஒரு irreversible process. (All our activities increase the entropy. i.e. increase the disorder)

நான் உங்களிடம் ஏற்கெனவே கேட்ட கேள்விகள் (மனம், உலகம்) பற்றி நினைத்துப் பார்த்தீர்களா? பல "பிடிகளில்" இருந்து விடுபடுவதற்கு அவற்றை விளங்கிக்கொள்ளுதல் மிக அவசியமானது.

  • Replies 64
  • Created
  • Last Reply
Posted

மற்றது நீங்கள் அறிய முயற்சிக்கும் "உயிர்" தொடர்பானது. உண்மையில் "மரணம்" என்பதை அறியாமல் யாருமே "வாழ்க்கை", "காதல்" என்பவற்றை அறியமுடியாது. இந்த மரணம் என்பது பிடித்து உலுக்காத உயிரினமே இல்லை எனலாம். இது மிகவும் ஆழமானதும், பலரும் எண்ணமறுப்பதுமான பகுதி. ஆனால் மிக அற்புதமானது. "யார் மரணத்தை அறிந்து கொள்கிறானோ, அவனே வாழ்க்கையை வாழ்கிறான்" என நான் நம்புகிறேன்.

சாகிற நாள் தெரிஞ்சுகிட்டா வாழுற நாட்கள் நரகமாயிடும். நமக்கு சந்தோசம் தாங்க முக்கியம். :lol:

Posted

சாகிற நாள் தெரிஞ்சுகிட்டா வாழுற நாட்கள் நரகமாயிடும். நமக்கு சந்தோசம் தாங்க முக்கியம். :lol:

ஆ..

இதுதான் நாம் விடும் தவறு. "மரணம்" என்பதை தெரிந்தவன் அந்த நாளை பற்றி நினைக்கவே மாட்டான். சரி மரணம் என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பது ஒரு "தொடர் இயக்கத்தின் முடிவா?" (நான் நினைக்கிறேன் எல்லோருமே இதைத்தான் நினைக்கிறோம் என்று) அல்லது வேறு எதையாவதா? அல்லது இதை நாம் முற்றாகவே புரிந்துகொள்ளவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக நுணுக்கமான பல விடயங்களை "இராமர் பாலம்........" என்ற தலையங்கத்தினுள் எழுதுவது சரியென தெரியவில்லை. இதைப்பற்றி வாசிக்க நினைக்கும் பலரும் இதை தவறவிடுவதற்கான சந்தர்ப்பமே அதிகம்.

இராமரின் பாலத்தை இடிக்கத் திறந்த தலைப்பில் எல்லாவற்றையும் புகுத்திவிட்டோம் என்றே நானும் நினைக்கின்றேன். எனவே பிரபஞ்சத் தத்துவத்தைப் பற்றி அலச புதிய பக்கம் ஒன்றை சாவகாசமாக திறக்கலாம் என்று யோசித்துள்ளேன். யாரவது தொடங்கினாலும் கலந்து கொள்ளலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ்.

உடல் ஒரு thermodynamic system (open) என்பதில் வேறுபாடான கருத்துக்கள் இல்லை. ஆனால் அதன் இயக்கம் ஒரு irreversible process. (All our activities increase the entropy. i.e. increase the disorder)

நான் உங்களிடம் ஏற்கெனவே கேட்ட கேள்விகள் (மனம், உலகம்) பற்றி நினைத்துப் பார்த்தீர்களா? பல "பிடிகளில்" இருந்து விடுபடுவதற்கு அவற்றை விளங்கிக்கொள்ளுதல் மிக அவசியமானது.

மனம் என்பது மூளையின் இரசாயனம் மற்றும் அதன் தாக்கங்களின் விளைவின் அடிப்படையில் உருவாகும் ஒரு தன்னிலை அறியும் மூளை சார்ந்த ஓர் உணர்வுடல்.

உலகம் என்பது எமது உடல் என்ற இரசாயனத் தொகுதி சார்ந்துள்ள புறச்சூழல்.

சூழல் மாற்றங்கள்.. தூண்டல்களாகி.. உடலில் இரசாயன குழப்பங்களை விளைத்து தாக்கங்களை தந்து அதன் விளைவுகளை உணர்வுகளாக்கி.. புலன் மற்றும் மூளை கொண்டு உணர வைக்கிறது. அதற்கு மனம் என்ற மூளை சார்ந்த உணர்வுடல் உதவுகிறது. மரணம் நிகழும் போது.. இந்தச் சமநிலை அழிக்கப்படுகிறது..! :lol:

Posted

மனம் என்பது மூளையின் இரசாயனம் மற்றும் அதன் தாக்கங்களின் விளைவின் அடிப்படையில் உருவாகும் ஒரு தன்னிலை அறியும் மூளை சார்ந்த ஓர் உணர்வுடல்.

உலகம் என்பது எமது உடல் என்ற இரசாயனத் தொகுதி சார்ந்துள்ள புறச்சூழல்.

சூழல் மாற்றங்கள்.. தூண்டல்களாகி.. உடலின் இரசாயன குழப்பங்களை விளைத்து தாக்கங்களை தந்து அதன் விளைவுகளை உணர்வுகளாக்கி.. புலன் மற்றும் மூளை கொண்டு உணர வைக்கிறது. அதற்கு மனம் என்ற மூளை சார்ந்த உணர்வுடல் உதவுகிறது. மரணம் நிகழும் போது.. இந்தச் சமநிலை அழிக்கப்படுகிறது..! :lol:

இல்லை. நெடுக்ஸ்.

நாம் இன்னமும் ஆழமாக போகவேண்டும்.

இதை இங்கு பேசுவதை விட தனித்தனி அலகுகளாக பிரித்து (மெய்யியல் கோவைக்குள்) நல்லதொரு கருத்துக் கோர்வை ஆக்கினோம் என்றால், அதை எப்போது வாசிப்பவருக்கும் குழப்பம் இருக்காது. மிக நல்ல ஒரு கருத்தாடலாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் ஆர்வம் மிகவும் நல்லது.

இவற்றை நாம்

1. மனமும் அறிவும்

2. மனித வாழ்க்கை

3. உண்மை, நன்மை, தீமை

4. மரணம்

என்ற பிரிவுகளில் பேசலாம் என நினைக்கிறேன். உங்கள் எண்ணங்களை வெளியிடுங்கள்.

Posted

ஈழத்திருமகன்,

உலக மக்கள் பொதுவாகக் கொண்டிருக்கும், விம்பங்களால் கட்டுப்படுத்தப்பட்ட, சிந்தனைத் தளங்களில் இருந்து முற்றாக விலகி, முற்றிலும் விடுதலைபெற்ற ஒரு மனவமைப்பில் இருந்து விடயங்களை ஆழ்ந்து சிந்திக்கப் பழகிக் கொள்ளவேண்டும் என்ற கருத்துத் தான் மீளவும் மீளவும் உங்கள் கருத்துக்களில் தெரிகின்றது. வாசிப்பதற்கு நன்றாக உள்ளது என்றாலும், ஏனோ என்னால் இத்தகைய ஒரு சிந்தனையை visualize பண்ணமுடியாதுள்ளது.

நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளர் என்று இங்கு கூறப்படுவதனால், உங்கள் ஆராய்ச்சிகளில், மேற்படி சிந்தனைக்கு உதாரணமான வழிமுறையாக நீங்கள் எதனையேனும் அடையாளப்படத்திப் பாவித்திருந்தால், அவை பற்றிக் கூற முடியும் என்றால் கூறினீர்களேயாயின் அது உங்களின் கருத்தை மேலும் தெளிவாக உங்வாங்க உதவும்

நட்புடன்

இன்னுமொருவன்

Posted

ஈழத்திருமகன்,

உலக மக்கள் பொதுவாகக் கொண்டிருக்கும், விம்பங்களால் கட்டுப்படுத்தப்பட்ட, சிந்தனைத் தளங்களில் இருந்து முற்றாக விலகி, முற்றிலும் விடுதலைபெற்ற ஒரு மனவமைப்பில் இருந்து விடயங்களை ஆழ்ந்து சிந்திக்கப் பழகிக் கொள்ளவேண்டும் என்ற கருத்துத் தான் மீளவும் மீளவும் உங்கள் கருத்துக்களில் தெரிகின்றது. வாசிப்பதற்கு நன்றாக உள்ளது என்றாலும், ஏனோ என்னால் இத்தகைய ஒரு சிந்தனையை visualize பண்ணமுடியாதுள்ளது.

நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளர் என்று இங்கு கூறப்படுவதனால், உங்கள் ஆராய்ச்சிகளில், மேற்படி சிந்தனைக்கு உதாரணமான வழிமுறையாக நீங்கள் எதனையேனும் அடையாளப்படத்திப் பாவித்திருந்தால், அவை பற்றிக் கூற முடியும் என்றால் கூறினீர்களேயாயின் அது உங்களின் கருத்தை மேலும் தெளிவாக உங்வாங்க உதவும்

நட்புடன்

இன்னுமொருவன்

இன்னுமொருவன் !!

நான் திரும்பத் திரும்ப பல்வேறு விதங்களில் கூறவருவது அதைத்தான். எனது பெரும்பாலான கருத்துக்களில் உள்ளிருக்கும்ம் கருவும் அதுதான். உண்மையில் "பிரச்சனைகள்" உருவாவது வெளியில் இருந்தல்ல. அனைத்தும் எமக்குள்ளே இருந்துதான். நாம் எந்தத்தேவையும் இல்லாமல், "நாம் காணும், பழகும், பேசும்...." அத்தனை மனிதர்கள் மேலும் ஒருவித "தோற்றப்பாட்டை" (இமேஜ்) எமக்குள்ளே ஏற்படுத்திவிட்டு அவர்களை அதைவைத்து அளவிட முனைகிறோம். இந்த இமேஜ் எதற்கு? இதனால் ஏதாவது பயன் இருக்கிறதா? நான் இன்னொருவரை சந்திக்கிறேன் என்றால் உண்மையில் நடப்பது "என்னுள் அவரைப்பற்றி ஏற்படுத்தி வைத்துள்ள அந்த இமேஜ்" தான் அவரை சந்திக்கிறது. இல்லையா? எம்மை நாமே புரிந்துகொள்ளாத தன்மையால், பிறருடனான தொடர்புகளின்போது கோபம், பொறாமை, வெறுப்பு, பயம் போன்ற "பிரச்சனைகளின் மூலக்காரணிகள்" எமது அறிவையும் மீறி, எமக்கு தெரியாமலே ஆழ்மனதில் இந்த விகாரமான விம்பங்களை ஏற்படுத்தி விடுகிறது.

உண்மையில், இயற்கையின் பார்வை இப்படியல்ல. நாம் அதை தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு கணத்திலும் இயற்கை புத்தம்புதிதாகவே இருக்கிறது. அதை எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆழ்மனதில் சேமிக்கப்படும் இந்த விம்பங்கள் அவற்றை "என்றும் புதியதாக" பார்ப்பதை தடுக்கின்றன. அதாவது இயற்கை, மனிதர்கள்,... போன்றவற்றினுடனான எமது தொடர்புகள் என்றுமே "பழையதாக" இருக்கின்றது. வாழ்க்கை என்றுமே "பழையது" அல்ல. அது ஒவ்வொரு கணத்திலும் "புத்தம் புதிய சவால்களை" எமக்குமுன் வைக்கிறது. நாம் இந்த புதிய சவால்களை என்றுமே "பழைய" என்ற எமது "புரிதல்" மூலம் தீர்க்கவும், அணுகவும் முயற்சிக்கிறோம். என்னவே அந்த சவால்களை பூரணமாக புரிந்துகொள்ள முடிவதில்லை. பிரச்சனைகளை தீர்க்க முடிவதில்லை. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்வும், புதிய பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது.

ஒரு மனிதன் என்னை எந்தளவு திட்டினாலும், புகழ்ந்தாலும் அது என் மனதில் எந்தவித இமேஜ் உம் அவனைபற்றி ஏற்படுத்தாவிடின், அடுத்த கணமே அவனை நான் புத்தம்புதியவனாக பார்ப்பேன். அவனுடனான என் தொடர்புகளில் என்சார்பில் பிரச்சனைகள் எழ வாய்ப்பு இல்லை.(He may be in conflict, but not me. I am not supressing my angor, jealous... but I get rid of them, free from them) முற்றுமுழுதாக அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை எந்தவித மனக் கட்டுப்பாடும் இன்றி என்னால் புரிந்துகொள்ள முடியும். அப்படியான ஒரு தளத்துக்கு வரமுடியுமா? ஆம். முடியும். எல்லோராலும் முடியும். அதுதான் இயற்கை.

இந்த மனம் செய்யும் வினோதத்தை பாருங்கள். 1+2=3 என எந்த சிறுபிள்ளையும் அறியும். இதில் 1 என்பதோ அல்லது கூட்டல் என்பதோ எமது மனதில் ஏதாவது இமேஜ் உருவாக்கி வைத்திருக்கிறதா? இல்லை. இதை technological memory என்றும் கூறுவார்கள். இதில் விருப்பு, கோபம் என்பதெல்லாம் இல்லை. ஏனென்றால் அவை எந்தவொரு இமேஜ் ஐயும் மனதில் ஏற்படுத்தி வைத்திருப்பதில்லை. உண்மையில் ஒருவிடயத்தை, அதன் ஆணிவேர்வரை சென்று புரிந்துவிட்டோமானால் (If we understand it) அதன் இமேஜ் இல்லாமல் போய்விடுகிறது. பாருங்கள், கணித அறிவில் (உண்மையில் புரிந்துகொண்டிருப்போமானால்) இமேஜ்கள் உருவாக சந்தர்ப்பம் இல்லை. வாழ்க்கையில் சகல விடயங்களையும் முற்றாக புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதால் மனம் இந்த இமேஜ்களை உருவாக்கி சேமிக்கிறது. ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை முன்னமே எழுதிவிட்டேன்.

எனவே ஒவ்வொரூவரும் தன் கோபம், பொறாமை, வெறுப்பு... போன்றவற்றிற்கான ஆணிவேர் எது என கண்டறிந்து, விளங்கிக்கொண்டால் அந்தக் கணமே அதில் இருந்து விடுதலை பெறலாம். மற்றவரை புரிந்துகொள்ள முற்படுதல் என்றுமே சாத்தியப்படாது. எம்மில் பலர் அதைத்தான் காலாகாலமாக செய்கிறோம். உடனேயே தோற்றும் போகிறோம். பாருங்கள், சமுதாயத்தை சீர்திருத்த புறப்பட்ட மனிதர் தொகை இன்றுவரை எண்ணில் அடங்குமா? சமுதாயம் திருந்தியதா என்றால் இல்லை. ஏன்? இதற்கான காரணம் என்ன? எம் முயற்சிகள் அனைத்தையும் "அடித்துத் தூளாக்க" மிகப் பெரும் அபாயம் ஒவ்வொரு கணமும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமல், மீண்டும் மீண்டும் பழைய வழியில் சென்று காலத்தையும் சக்தியையும் வீணாக்குதல் தகுமா?

இவை அனைத்துக்கும் மூலகாரணம் எமது "பார்வை". நீங்கள் அதை visualize பண்ண முடியவில்லை என கூறுவதன் பொருள் we do not know how to "look". நான் இங்கு பல பதிவுகளில் "விடைகள்" எழுத விரும்புவதில்லை. அதுகூட இன்னுமொரு வட்டத்துக்குள் பலரை இழுத்து விடும் என்பதே உண்மை. ஒவ்வொருவரையும் சிந்திக்க தூண்டும் கேள்விக்களை கேட்பதன் மூலம், அவர்களாகவே பதிலை தேடும் ஒரு வித்தியாசமான "state of mind" இற்கு, அதனை அனுபவிப்பதற்க்கு தூண்டுகோலாக இருக்க விரும்புகிறேன்.

வாழ்க்கையின் புத்தம்புதிய சவால்களை புதியதாகவே பார்த்து விளங்கி, இயற்கையின் அழகை பூரணமாக அனுபவித்தவாறே உள்ளேயும் சரி, சமூகத்திலும் சரி எதுவித முரண்பாடுகளும் இல்லாமல், விடுதலை பெற்ற ஒரு "மனிதனாக" வாழ்வது என்பதே "வாழ்க்கை". இதில் சமயம், அரசியல் என்பன எந்தவிதத்திலும் உள்நுளைவதில்லை. அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த நிலையில் தான் பிரச்சனைகளை தீர்க்க வழி தெரியும். (We must be aware of all problems but they have no effect on us, then we can solve them without introducing another problem)

எமது கல்விமுறையோ அல்லது சமயங்களோ இவ்வாறான எந்தவித அணுகுமுறைகளையும் எமக்கு தரவில்லை. மனித சிந்தனையை அவை கட்டிப் போட்டிருக்கின்றன. இன்றும் கல்வியில் பாருங்கள், MCQ கேள்விகள். உண்மையில் ஒரு மாணவன், ஏற்கெனவே தரப்பட்ட விடைகளை "சரி", அல்லது "பிழை" என compare பண்ணவே இது வழிசமைக்கிறது. இது படிப்பு (study). அறிதல் அல்ல (not learning). தரப்பட்டவற்றில் "ஏதாவது உண்மை இருக்கிறதா?" என உள்நுளைந்து அறியும் ஆற்றலை நாம் இழந்து விடுகிறோம். It always keeps the understanding away, and create images, leads to conflicts.

Technological life இல், தற்போது உயர்கணித அணுகுமுறைகள் மாறிக்கொண்டு வருகின்றன. தற்காலத்தில் இயற்கை விதிகளெவையும் ஆள்கூற்று சட்டகத்தை சார்ந்து எழுதப்படுவதில்லை. அதாவது coordinate free form என அமைக்கிறார்கள். நான்கூட எனது சிலகட்டுரைகள் tensors ஐ பாவித்து coordinate free form இல் எழுதியுள்ளேன். அதாவது இயற்கையை, நம் கண்களினூடாக பார்ப்பதை விடுத்து, அதன் கண்களினூடாக அது எவ்வாறு இருக்கிறதோ அப்படியே பார்க்க பழகுகிறோம்.

என்னை பொறுத்தவரை, என் எண்ணங்கள் மாறுவதற்கு இந்த "டென்ஸ்ஸர்" கள் ஒரு பிரதான காரணம். கணிதத்தில் மிகக் கடினமான பகுதியாக இது இருப்பதால் இங்கு அதை துறைபோக கற்பிப்பவர்கள் மிகக் குறைவு. வரும் பேராசிரியர்களும் புத்தகங்களை மறுபதிப்பு செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். They have their own confusions. எனவே இதை நான் எந்த ஆசிரியரிடமும் கற்கவில்லை. என்விடாமுயற்சி (இதை படிப்பதை எத்தனைமுறை கைவிட்டிருப்பேன் என எனக்கு நினைவில்லை) பல உண்மைகளை வெளிப்படுத்தியது. இதை யாராவது ஒரு பேராசிரியரிடம் கற்றிருந்தால் இன்றுவரை அவரின் "எண்ணங்களையே" சுமந்துகொண்டிருப்பேன். எனது சிந்தனை என எதுவும் இருந்திருக்காது. நீங்கள் அறிய ஆர்வமாக கேட்டதால் எழுதினேன்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Posted

ஈழத்திருமகன்,

முதற்கண், உங்களது பொறுமையான பதிலிற்கும் உங்கள் ஆராய்ச்சி முனை பற்றிக் குறிப்பிட்டமைக்கும் நன்றி.

எனினும் மேலும் சில கேள்விகள் பிறக்கின்றன. குழந்தைப் பருவம் தொட்டு ஒரு மனிதனுடைய வாழ்க்கை அனுபவங்களைச் சேமித்தவண்ணம் நகர்வதில் எவ்வித நன்மையும் இல்லை என்று கூற முடியாதுள்ளதே. தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்று தெரிந்த பின்னரும் ஒவ்வொரு நாளும் தீ தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருகலாம், இன்று ஒருவேளை குளிரலாம் என்ற எண்ணத்தில் திருப்பத் திருப்ப விரலைச் சுட்டுக்கொள்ள முடியாதுள்ளதே. ஒருவேளை நேற்றை தீயிற்கும் இன்றைய தீயிற்கும் மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் எனது மூளை உணரக் கூடிய விதத்தில் அதன சூட்டில் வித்தியாசமில்லை என்ற போது, தீ தன்னைப் புதுப்பித்துக் கொண்டதா இல்லையா என்பதில் எனக்கு முக்கியமானதா?

உண்மையில், இயற்கையின் பார்வை இப்படியல்ல. ..

இயற்கையின் பார்வை என்றால் என்ன? இயற்கையின் பார்வை என்ற வார்த்தைப் பதத்தில் இயற்கை அதற்கு வெளியே பார்ப்பது போன்ற கருத்துமல்லவா புலப்படுகின்றது? இயற்கையின் பார்வை இப்படியல்ல மாறாக அப்படி என்று எந்த அடிப்படையில் உங்ளால் கூறக்கூடியதாக உள்ளது?

உணர்வுகள் அனைத்தையும் விட்டு உங்களால் விட்டுவிடுதலையாகி technological memory என்ற தளத்தில் இயங்க முடிகிறது என்றால், திருமணம் மகப்பேறு முதலியன தொடர்பில் உங்களது கருத்து எவ்வாறு அமைகிறது? பூமியில் மனித இனத்தைத் தக்கவைத்தல் போன்ற விடயங்களில் உங்களிற்கு உடன்பாடு இருக்காது என்றே எனக்குத் தோன்றுவதோடு கடமை போன்ற ரீதியிலாக எதையும் நீங்கள் நோக்க வெளிக்கிட்டு கட்டுண்டு போக மாட்டீர்கள் என்றே படுகிறது. இம்முனையிலும் சற்று உங்கள் கருத்து நிலை பற்றி விபரிக்க முடியுமா?

உங்களுடன் கருத்துப்பரிமாறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இன்னுமொருவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அயின்ச்ரைன் அய்யா முருக அவதாரம் எண்டு கொண்டாடுவம், ஒருபடி மேல போய் அசைலம் அடிச்சுப்போட்டு உயிர் உடல்பற்றியெல்லாம் விசாலம் காட்டுவம், அதுக்கும் மேலாலபோய் விதை விதையா விதச்சுப்போட்டு மறு அவதாரமெண்டு மறுபிறப்பு எண்டு பூ சுத்தி சாடைமாடயா கதையும் விடுவம், ஆனா சைவசமயத்தை மட்டும் மட்டம் தட்டுவம்.

சுக்ர சுக அவதாரமெடுத்து, மூலிகைவிக்கிரகம் பூசை செய்து, பாலபிசேக தீத்தம் உண்டு, பாழயத்தம்மன் புகழ் பாடுவம், உடல்மேல வேப்பங்குழையடிச்சு நோயற்ற வாழ்வுக்கு வழிதேடுவம். அதேநிரத்தில அதற்கு எதிர்மாறா அயின்ச்ரைன் அவதாரமெடுத்து உடல்பற்றி அதனுடைய ரசாயணக்கலப்புபற்றி உயிர்பற்றி மனிதன்பற்றி அவனுடைய சிந்தனைபற்றி, அவனுடைய இருக்கைபற்றி மனமும் அறிவும், மனித வாழ்க்கை, உண்மை, நன்மை, தீமை, மரணம் பற்றியெல்லாம் விலாசம் வைப்பம்.

:D:D

Posted

ஈழத்திருமகன்,

முதற்கண், உங்களது பொறுமையான பதிலிற்கும் உங்கள் ஆராய்ச்சி முனை பற்றிக் குறிப்பிட்டமைக்கும் நன்றி.

எனினும் மேலும் சில கேள்விகள் பிறக்கின்றன. குழந்தைப் பருவம் தொட்டு ஒரு மனிதனுடைய வாழ்க்கை அனுபவங்களைச் சேமித்தவண்ணம் நகர்வதில் எவ்வித நன்மையும் இல்லை என்று கூற முடியாதுள்ளதே. தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்று தெரிந்த பின்னரும் ஒவ்வொரு நாளும் தீ தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருகலாம், இன்று ஒருவேளை குளிரலாம் என்ற எண்ணத்தில் திருப்பத் திருப்ப விரலைச் சுட்டுக்கொள்ள முடியாதுள்ளதே. ஒருவேளை நேற்றை தீயிற்கும் இன்றைய தீயிற்கும் மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் எனது மூளை உணரக் கூடிய விதத்தில் அதன சூட்டில் வித்தியாசமில்லை என்ற போது, தீ தன்னைப் புதுப்பித்துக் கொண்டதா இல்லையா என்பதில் எனக்கு முக்கியமானதா?

இயற்கையின் பார்வை என்றால் என்ன? இயற்கையின் பார்வை என்ற வார்த்தைப் பதத்தில் இயற்கை அதற்கு வெளியே பார்ப்பது போன்ற கருத்துமல்லவா புலப்படுகின்றது? இயற்கையின் பார்வை இப்படியல்ல மாறாக அப்படி என்று எந்த அடிப்படையில் உங்ளால் கூறக்கூடியதாக உள்ளது?

உணர்வுகள் அனைத்தையும் விட்டு உங்களால் விட்டுவிடுதலையாகி technological memory என்ற தளத்தில் இயங்க முடிகிறது என்றால், திருமணம் மகப்பேறு முதலியன தொடர்பில் உங்களது கருத்து எவ்வாறு அமைகிறது? பூமியில் மனித இனத்தைத் தக்கவைத்தல் போன்ற விடயங்களில் உங்களிற்கு உடன்பாடு இருக்காது என்றே எனக்குத் தோன்றுவதோடு கடமை போன்ற ரீதியிலாக எதையும் நீங்கள் நோக்க வெளிக்கிட்டு கட்டுண்டு போக மாட்டீர்கள் என்றே படுகிறது. இம்முனையிலும் சற்று உங்கள் கருத்து நிலை பற்றி விபரிக்க முடியுமா?

உங்களுடன் கருத்துப்பரிமாறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இன்னுமொருவன்

மிகவும் நல்லது. இன்னுமொருவன்.!!

மனிதன் பிறந்த பொழுதில் இருந்தே, அனுபவங்களை சந்திக்க வேண்டி வருகிறது. இந்த அனுபவங்களில் முற்றுமுழுதாக என்றல்ல, அனேகமான எல்லாம் விம்பங்களாக மனதில் பதிந்துவிடுகின்றன. என்றுமே "உண்மைகள்" விம்பங்களாக பதிவதில்லை. நீங்கள் கூறிய "தீ சுடும்" என்பது "உண்மை". அதை எந்த நேரமும் நினைவில் வைத்திருக்கிறோமா? (Do we have any form of effort to keep that in mind?). இல்லை. அதைப்பற்றிய எண்ணமே "தீயை" எழுவதில்லை. அவ்வாறானவை factual memory. நாம் இயங்குவதற்கும், தொழிற்படுவதற்கும் இவ்வாறான factual memory மிக அவசியமானது. அல்லதுபோனால் நாமும் சடப்பொருளே. இதில் உள்ள வினோதத்தை பாருங்கள். தீ சுடும்போது ஒரு கணமேனும் அதை பற்றி ஒரு விம்பத்தை உருவாக்க நினைக்கிறோமா? அல்லது உடனேயே ஒரு செயல் (action) இடம்பெறுகிறதா? நிகழ்வு நடைபெறும் அந்தக் "கணம்" மிக முக்கியம். It is a reality. True at that moment. The body has its own intelligence to handle it "very appropriately". நாம் அதைப்பற்றி சிந்திப்பதுகூட இல்லை.

எனவே இந்த விம்பங்களிலாத, factual memory எப்பொழுதுமே புதிய சவால்களை புதியதாகவே அணுகுகிறது. (நாம் தீ சுடும்போது நேற்று எப்படி சுட்டது, நான் எப்படி தப்பினேன், இப்ப எப்படி தப்பவேணும் என்ற தொடரிகள் இல்லாமல், அந்தக் கணத்திலே அந்த புதிய பிரச்சனை அதற்கு ஏற்றவிதமாக தீர்க்கப்பட்டு விடுகிறது). இதில் நாம் தெளிவாக இருக்கிறோம் என நம்புகிறேன். (So, the memory which doe snot accumulate images responds immediately, freshly and appropriately)

இரண்டாவது. இயற்கையின் பார்வை என எழுதியிருந்தேன். இது சிறிது சிக்கலானது. எடுத்த எடுப்பில் விபரித்தால் அதன் உண்மையான பொருள் தவறிவிடும் என நினைக்கிறேன். என்னை நானே, "நான்" என்ற எண்ணம் எதுவும் இன்றி பார்க்க முடியுமா? நாம் எதை பார்த்தாலும் "எமக்கும்", அந்த "பார்க்கப்படும் பொருளுக்கும்" இடையில் ஒரு வெளி உருவாகிவிடுகிறது. அந்த வெளி இல்லாமல், பார்ப்பவனே இல்லாமல் நாம் பார்க்க முடியுமா? ஆம். நிச்சயமாக முடியும். இதை சிறிது கருத்துக்களுக்கு பிறகு இன்னும் விரிவாக என்னால் முடிந்தளவு எழுதுகிறேன். இப்போது வேண்டாம்.

உணர்வுகளை விட்டு விடுவதென்பதல்ல. நடைபெறும் சகல நிகழ்வுகளும் அவற்றின் பாதிப்பு இன்றி அறிந்து கொள்ளுதல். உண்மையில் இன்னொரு வகையில் கூறப்போனால், ( இதை நீங்கள் சிறிது சிந்தித்தால் நம் வாழும் வாழ்க்கை மீது சிரிப்புத்தான் வரும்), நம்மில் பலர் "எதிர்கால கனவில்" வாழுகின்றனர். சிலர் "இறந்த கால" கனவில் (சிங்களர் சரியான ஒரு உதாரணம்) வாழுகின்றனர். இவை "reality" யா? (Past is not real. Future is our own thought projection from the field of past, so it is also not real). "ரியாலிட்டி" யான ஒவ்வொரு கணத்திலும் பூரணமாக வாழ்ந்துவிடுவதை பலர் "பழைய non-factual immages" ஐ காவி வருவது மூலம் தொலைத்து விடுகிறோம். அந்தக் கணம்தான் உடனடியாக எமது "past" ஆக மாறிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறோம். வாழும் ஒவ்வொரு கணமும், பொய்மையில் வாழ்ந்துகொண்டு நன்மையை எதிர்பார்ப்பதன் விளைவுதான் நாம் பல எதிர்த்தாக்கங்களை செய்வதற்கு காரணம். (Please see, we always react to something. We never act. When I feel pain suddenly, at that moment we act).

இந்த "technological memory" தேவை ஏற்படும் அந்தக் கணத்தில் தொழிற்படுகிறது. பாருங்கள், நாம் எந்த நேரமும் "கணிதத்தை பற்றியே" சிந்திக்கிறோமா? இல்லை. எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்பொழுது அது தொழிற்படுகிறது. அதில் குழப்பமோ, பிரச்சனையோ வர இடமில்லை. முடிவுகளும் நேர்த்தியாக இருக்கும்.

திருமண உறவு, மகப்பேறு, பிள்ளைகள் என்பன ஒவ்வொரு கணமும் இருக்கின்றன. (Are they real or unrela?) எமது பிள்ளைகள், மனைவி, உறவினர் என்பவை ஒவ்வொரு கணமும் வாழும் reality. (They are not "old" or "unreal". We need to meet the challenges with their relationship freshly, understand them. It is real. Not past)

Posted

அயின்ச்ரைன் அய்யா முருக அவதாரம் எண்டு கொண்டாடுவம், ஒருபடி மேல போய் அசைலம் அடிச்சுப்போட்டு உயிர் உடல்பற்றியெல்லாம் விசாலம் காட்டுவம், அதுக்கும் மேலாலபோய் விதை விதையா விதச்சுப்போட்டு மறு அவதாரமெண்டு மறுபிறப்பு எண்டு பூ சுத்தி சாடைமாடயா கதையும் விடுவம், ஆனா சைவசமயத்தை மட்டும் மட்டம் தட்டுவம்.

சுக்ர சுக அவதாரமெடுத்து, மூலிகைவிக்கிரகம் பூசை செய்து, பாலபிசேக தீத்தம் உண்டு, பாழயத்தம்மன் புகழ் பாடுவம், உடல்மேல வேப்பங்குழையடிச்சு நோயற்ற வாழ்வுக்கு வழிதேடுவம். அதேநிரத்தில அதற்கு எதிர்மாறா அயின்ச்ரைன் அவதாரமெடுத்து உடல்பற்றி அதனுடைய ரசாயணக்கலப்புபற்றி உயிர்பற்றி மனிதன்பற்றி அவனுடைய சிந்தனைபற்றி, அவனுடைய இருக்கைபற்றி மனமும் அறிவும், மனித வாழ்க்கை, உண்மை, நன்மை, தீமை, மரணம் பற்றியெல்லாம் விலாசம் வைப்பம். :D:D

:D:D

அப்பனே. என்னை பொறுத்தவரை இன்னும் அசைலம் அடிக்கவில்லை. படிப்பு முடிந்தவுடன் ஊருக்கு நடையை கட்டுவதாக இருக்கிறேன். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:D:D

அப்பனே. என்னை பொறுத்தவரை இன்னும் அசைலம் அடிக்கவில்லை. படிப்பு முடிந்தவுடன் ஊருக்கு நடையை கட்டுவதாக இருக்கிறேன். :D:D

ஏன் ஊருக்குப் போவதை கவலையோடு சொல்கிறீர்கள். யாழ் பல்கலைக்கழகத்திலும்... கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்.. கொழும்பு.. பேராதனியா.. களனி.. ஜெயவர்த்தனபுர என்று இலங்கையில் உள்ள 13 (நான் ஊரை விட்டு வெளிக்கிடும் போது இருந்தவை) பல்கலைக்கழகத்திலும் உள்ள பேராசிரியர்கள்.. விரிவுரையாளர்கள்.. அசைலம் அடிக்கனும் என்று நினைத்திருந்தால்.. இன்று நாம் இங்கு கருத்தாட அறிவுதான் கிட்டி இருக்குமா..??!

ஊரில் உள்ள ஒரே பிரச்சனை.. தமிழன் என்பவனுக்கு பாதுகாப்பு உத்தரவாதமில்லை. அதுதான் சற்று சிந்திக்க வைக்குதே தவிர... எம்மவர்க்கு பணி செய்வதை எமது தேசத்தை அறிவியல் மயமாக்குவதை.. நாம் தவிர்த்து.. பிச்சை எடுத்து எமக்கு இலவசக் கல்வி தந்த மண்ணை விட்டு அடிமையாக நடத்தும் அந்நியருக்கு உழைக்க வேண்டும் என்பது நியதியா என்ன..??!

மக்கள் எல்லோரையும் எல்லோரும் சமனாக மதிப்பர் என்றால்.. இந்த தேசியப் பற்றுக்கு மேலதிகமாக.. கல்விப் பற்று இருந்திருக்கும். ஆனால்.. மனிதர்கள் சமனாக மதிக்கப்படுகிறார்கள் இல்லையே..! :D

Posted

ஏன் ஊருக்குப் போவதை கவலையோடு சொல்கிறீர்கள்

ஊரில் உள்ள ஒரே பிரச்சனை.. தமிழன் என்பவனுக்கு பாதுகாப்பு உத்தரவாதமில்லை. அதுதான் சற்று சிந்திக்க வைக்குதே தவிர... எம்மவர்க்கு பணி செய்வதை எமது தேசத்தை அறிவியல் மயமாக்குவதை.. நாம் தவிர்த்து.. பிச்சை எடுத்து எமக்கு இலவசக் கல்வி தந்த மண்ணை விட்டு அடிமையாக நடத்தும் அந்நியருக்கு உழைக்க வேண்டும் என்பது நியதியா என்ன..??!

நெடுக்ஸ். நான் கவலைப்படவில்லை. இப்போதெல்லாம் ஊருக்கு போவதென்றால் கவலைப்படுகிறார்கள் தானே. அதுதான் ஆதிக்காக அப்படி முகக்குறி போட்டேன். :D:D

ஆமாம். எனது சேவை, எமது மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் என நான் மிகவும் விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் திரும்பத் திரும்ப பல்வேறு விதங்களில் கூறவருவது அதைத்தான். எனது பெரும்பாலான கருத்துக்களில் உள்ளிருக்கும்ம் கருவும் அதுதான். உண்மையில் "பிரச்சனைகள்" உருவாவது வெளியில் இருந்தல்ல. அனைத்தும் எமக்குள்ளே இருந்துதான். நாம் எந்தத்தேவையும் இல்லாமல், "நாம் காணும், பழகும், பேசும்...." அத்தனை மனிதர்கள் மேலும் ஒருவித "தோற்றப்பாட்டை" (இமேஜ்) எமக்குள்ளே ஏற்படுத்திவிட்டு அவர்களை அதைவைத்து அளவிட முனைகிறோம். இந்த இமேஜ் எதற்கு? இதனால் ஏதாவது பயன் இருக்கிறதா? நான் இன்னொருவரை சந்திக்கிறேன் என்றால் உண்மையில் நடப்பது "என்னுள் அவரைப்பற்றி ஏற்படுத்தி வைத்துள்ள அந்த இமேஜ்" தான் அவரை சந்திக்கிறது. இல்லையா? எம்மை நாமே புரிந்துகொள்ளாத தன்மையால், பிறருடனான தொடர்புகளின்போது கோபம், பொறாமை, வெறுப்பு, பயம் போன்ற "பிரச்சனைகளின் மூலக்காரணிகள்" எமது அறிவையும் மீறி, எமக்கு தெரியாமலே ஆழ்மனதில் இந்த விகாரமான விம்பங்களை ஏற்படுத்தி விடுகிறது.

ஒவ்வொரு நாளும் காலமை எழும்பி 50 first dates இல் வருவது போல எனது மனைவி யார் எனது குழந்தை யார் அன்று முதலிலிருந்து அறிவதற்குள்ளேயே இருண்டுவிடும்.

பிறகு என்ன அண்ணை செய்யிறது? :D

Posted

ஒவ்வொரு நாளும் காலமை எழும்பி 50 first dates இல் வருவது போல எனது மனைவி யார் எனது குழந்தை யார் அன்று முதலிலிருந்து அறிவதற்குள்ளேயே இருண்டுவிடும்.

பிறகு என்ன அண்ணை செய்யிறது? :D

ஆ..

இதை எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்ல. "இமேஜை நீக்கிவிட்டு பாருங்கள்" என்று எழுதியவுடன் உங்கள் சிந்தனை செய்யும் வேலையை அறிகிறீர்களா? மனத்தின் வழமையான செயற்பாடான "பழையதை தேட" முயற்சிக்கிறீர்கள். அப்படித்தானே. இதை ஏற்கெனவே எனது பதிவில் எழுதியிருக்கிறேன். (We are completely aware, but have no image. I am sure it may be hard to break those regular habit of thinking.)

Posted

தீ மற்றும் தீயின் சூடு பற்றிய எனது கேள்வியை, அவற்றிற்கான நேரடி விளக்கத்திற்காக மட்டுமன்றி அவை உருவகப்படுத்தும் சில விடயங்கள் (சில மனிதரின் அல்லது சந்தர்ப்பங்களின் எப்போதும் மாறாத, அல்லது எம்மால் மாற்றமாக காணவோ உணரவோ முடியாத குணவியல்பு) பற்றியதாகவும் தான் முன் வைத்தேன்.

நீங்கள் கூறுகின்றீர்கள் அனுபவங்களை உண்மை மற்றும் உண்மையல்லாதன என்று இருவகையாகப் பிரித்துப் பார்க்கவேண்டும் என்றும் இதில் உண்மைகள் factual மெமரியாகவும் உண்மையல்லாதன விம்பங்களாகவும் மனதில் பதிகின்றன என்று.

இதனை எவ்வாறு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது?

நானறிந்த வரை எந்த விடயங்கள் எவ்வாறு மூளையில் எப்பகுதியில் பதிவாகின்றன என்பதை Real Time ல் பார்ப்பதற்கான கருவி ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. எனவே technological memory, factual memory, விம்பங்கள் என்ற வித்தியாசத்தை கருதுகோள் நிலைக்கு அப்பால் எவ்வாறு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது?

வித்தியாசமான முனையில் சிந்திப்பது என்பதும், அச்சிந்தனை உண்மை அல்லது சரி என்று நிறுவுவதும் இரு வேறு விடயங்கள் அல்லவா? அதற்கும் மேலால், வித்தியாசமான சிந்தனையால் விளைந்த நன்மை என்பதனை அளவீடு செய்தல் என்ற ஒரு சவாலும் உள்ளது அல்லவா?

உண்மைகள் என்றுமே விம்பங்களை உருவாக்குவதில்லை என்ற கருத்தும் கேள்விகளையே எழுப்புகின்றன.

நீங்கள் விம்பத்திற்கு வரைவிலக்கணமாக, ஒரு மனப்பதிவு பற்றிய நினைவினால் ஒரு வினை பிறக்காதவரை அது விம்பம் அல்ல உண்மை என்கின்றீர்கள். உதாரணமாக தீயிடம் சூடு வாங்கிய ஒருவர் அந்த அனுபவம் பற்றி நினைப்பது தீயினை உருவாக்காது என்பதால் அது விம்பம் இல்லை உண்மை என்கிறீர்கள். எந்த அடிப்படையில் விம்பத்திற்கான இந்த வரைவிலக்கணம் அடையப்பட்டது? அனைவரும் இந்த வரைவிலக்கணத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதனால் ஆகின்றது?

இந்திய இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்டவர்களிற்க

Posted

மிகவும் நல்லது. இன்னுமொருவன்.!!

உங்கள் இந்தப் பதிவை ஒரு தகுந்த தலையங்கத்தின் கீழ் இணைத்துவிட்டால் அங்கிருந்து தொடரலாம்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆ.. இதை எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்ல. "இமேஜை நீக்கிவிட்டு பாருங்கள்" என்று எழுதியவுடன் உங்கள் சிந்தனை செய்யும் வேலையை அறிகிறீர்களா? மனத்தின் வழமையான செயற்பாடான "பழையதை தேட" முயற்சிக்கிறீர்கள். அப்படித்தானே. இதை ஏற்கெனவே எனது பதிவில் எழுதியிருக்கிறேன். (We are completely aware, but have no image. I am sure it may be hard to break those regular habit of thinking.)

என்ன ஈழத்திருமகன் அண்ணை,

இந்த திரியில் உள்ள எல்லாக் கருத்தையும் வாசிக்க எனக்கு நேரம் கிடைக்க வில்லை. ஆனாலும் அடிக்கடி வந்து நுனிப்புல் மட்டும் மேய்ந்து விட்டுப் போவேன் (இது எனது தற்போதைய வேலைப்பழுவால் வந்த விடயம், அதை விடுவம்). அப்படி செய்த போது பொறிதட்டிய மாதிரி சில நல்ல கருத்துக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அட யார் எழுதுவது என்று பார்த்தால் அது நீங்கள். அத்துடன் சிறிது சிறிதாக நீங்கள் அறிவில் ஒரு வல்லவர். படிப்பாளர் போன்ற பல விம்பங்கள் உருவாகின. அதன்படி எனது மனதில் எழும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலிறுக்கும் (அல்லது பதிலை நோக்கி என்னை திருப்பும்) வல்லவர் என்ற தோற்றமும் உருவாகியது.

நீங்கள் சொல்வது போல பழையவை எல்லாவற்றையும் விட்டு விட்டு நான் விவாதம் செய்வது என்றால் மீண்டும் மீண்டும் புலிப்பாசறையுடன் அல்லவா விவாதம் செய்ய வேண்டிவரும்? (இந்த தளத்தில் நான் முதன் முதல் விவாதம் செய்தது அவருடன் தான்.):D

Posted

ஈழத்திருமகனை எல்லாரும் லோட் பண்ணுறமோ தெரியாது...

என்னுடை 1 சந்தேகம்..

conscious mind, subconscious mind, reflex இவற்றை எப்படி எங்கு factual/non-factual memory தளங்களில் வைத்துப்பு பார்க்கலாம்?

பி.கு:

பதிவு #292 இல் இருந்து வந்தவற்றை "மனமும் அறிவும்" என்ற தனித் திரியில் போட்ட படி தொடர்வது பொருத்தமாக இருக்குமா என்று ஆர்வமாக கருத்தெழுதுபவர்கள் சொன்னால் மடத்துறுத்தினர்கள் யாராவது மாத்திவிடுவார்கள். #292 முன்னர் உள்ள பதிவுகள் எதாவது இந்த வகைக்குள் அடங்கும் என்றால் அறிவிக்கவும் அதையும் சேர்த்து நகர்த்துவம்.

---

#292 பதிவுக்கு முன்ன உள்ளவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பின்வரும் பதிவுகளையும் நகர்தலாம் மனமும் அறிவும் என்ற திரிக்குள்.

251, 255, 258, 259, 261, 262, 267, 268, 277, 280, 281, 282, 289, 290, 291

வேறை பதிவுகளை சேர்க்க விரும்புபவர்கள் மேலே தெரிவு செய்தவற்றில் நீக்க விரும்புபவர்கள் இங்கு குறிப்பிடவும். ஒரு முடிவுக்கு வந்தவுடன் நகர்த்தச் சொல்லிக் கேட்பம்.

Posted

குறுக்காலபோவன் குறிப்பிடுவது போன்று இந்த கருத்துக்களைத் தனித்திரிக்கு

மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என்றே எனக்கும் படுகின்றது.

நன்றி.

Posted

"இராமர் பாலம்" தொடர்பான கருத்தாடலில் இருந்து பிரிக்கப்பட்டு, அத் தலைப்பில் கருத்தாடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது தனித்தலைப்பாக இங்கு இடப்படுகிறது. இத் தலைப்பில் சில இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்கள் http://www.yarl.com/forum3/index.php?showt...6943&st=260 என்ற இணைப்பில் உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனது மேற்படி கேள்வி தொடர்பான இன்னுமொரு தகவல்.

கீழ்வரும் விடயத்தை நீங்கள் முன்பு கூறியிருந்தீர்கள்.

நம்மில் பலர் "எதிர்கால கனவில்" வாழுகின்றனர். சிலர் "இறந்த கால" கனவில் (சிங்களர் சரியான ஒரு உதாரணம்) வாழுகின்றனர்.

இப்படி சிங்களவர் எல்லாரையும் பற்றி ஒரு பிம்பத்தை நீங்கள் உங்கள் மனதில் ஏற்படுத்தி வைத்திருந்ததால் தான் அப்படி சொல்ல வேண்டி வந்ததா?

Posted

நண்பர்களே!!

மிகவும் நல்லது. நாம் கருத்து பரிமாறுவதற்கு ஒரு வரையறைக்குள் வந்துவிட்டதாக தெரிகிறது. எனவே இதில் எனது நோக்கத்தை தெளிவாக எழுதிவிடவேண்டியது அவசியமாகிறது. இதை வாசிக்கும் நண்பர்கள் கருத்தில் எடுக்கவேண்டிய மிகமுக்கியமான விடயங்கள்:

1. முதலில் எனக்கு ஒரு "இமேஜ்" தருவதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள். இவன் "முட்டாள்", "நல்லவன்",

"அறிவில்லாதவன்", "அறிவாளி" போன்ற எதையும் உங்கள் மனதில் தயவுசெய்து ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். கருத்தெழுதும் நான் எந்தவிதத்திலும் முக்கியமானவன் அல்ல.

2. நான் கூற வருவதை, "சரியாக இருக்கும்" என்றோ அல்லது "பிழையாக இருக்கும்" என்றோ எடுத்த எடுப்பில் தீர்மானிக்க வேண்டாம். எந்தவித கட்டுப்பாடுமற்று, "இவன் கூறுவதில் ஏதேனும் உண்மை இருக்குமா? அப்படியானால் அது என்ன?" என்பதை அறியத்துணியுங்கள்.

3. என்னுடைய எழுத்துக்களில், உங்களுக்கான "விடைகள்", "உங்கள் மனதை சாந்தப்படுத்தும்" எவையும் இருக்காது. அப்படி எழுதுவது ஒரு பொறுப்பற்ற செயல் என நினைக்கிறேன். நான் விடைகளை எழுதிவிட்டால், உங்கள் எண்ணங்கள் எப்போதும் அதை "சுற்றிச்சுற்றி" வருமே ஒழிய, அதில் "உண்மை" இருக்கிறதா என்பதை தேடாது. நான் எனது கேள்விகள் மூலம், உங்கள் எண்ணக்குவியல்களினூடாக உங்களை ஊடுருவிச் செல்ல வைக்கும் ஒரு கருவி மட்டுமே. கருவி முக்கியமல்ல. நீங்கள் செய்யப் போகும் செயல்தான் முக்கியம். எனவே என் எழுத்துக்களில் "ஈர்க்கப்படுவதை" எந்த நேரமும் அவதானமாக இருப்பதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம்.

4. இதில் நாம் விவாதம் நடத்தப்போவதில்லை. நீங்களும் நானும் சேர்ந்து விடயங்களை சிந்திக்க போகிறோம். அதில் இருக்கும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் புரிந்துகொள்ளவும், அவற்றில் இருந்து விடுபட்டுகொள்ளவும் எமது அறிவை பயன்படுத்துவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

2. நான் கூற வருவதை, "சரியாக இருக்கும்" என்றோ அல்லது "பிழையாக இருக்கும்" என்றோ எடுத்த எடுப்பில் தீர்மானிக்க வேண்டாம். எந்தவித கட்டுப்பாடுமற்று, "இவன் கூறுவதில் ஏதேனும் உண்மை இருக்குமா? அப்படியானால் அது என்ன?" என்பதை அறியத்துணியுங்கள்.

நீங்கள் கூறுவதில் உண்மை இருக்குமா இல்லையா என்று நான் ஏன் சிந்திக்க வேண்டும்?

இங்கு பலர் பல கருத்து கூறுகிறார்கள். அதில் இது சிறந்தது என்று தெரிவு செய்யக் கூடாது என்கிறீர்கள்.

இந்த திரியில் கருத்துப் பகிர்வதால் ஒரு தெளிவு கிட்டும் விடயங்களை சிந்திப்பதால் அதில் இருக்கும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் புரிந்துகொள்ளவும், அவற்றில் இருந்து விடுபட்டுகொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கை இருப்பது நல்லதா கூடாதா?

அப்படி ஒரு நம்பிக்கையை வைக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள்?

அப்படி ஒரு நம்பிக்கை இல்லாத இடத்து நான் ஏன் இங்கு கருத்து எழுதி மினக்கெட வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.