Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

விகடகவி மாமா........................காலகண்ணாடியில உங்க முகத்தை பார்க்க ஆவலாக இருகிறேன் எங்கே போய்விட்டீங்க..............பேபிக்கு நித்தா வருதுங்கோ........... :P :P

  • Replies 912
  • Views 67.8k
  • Created
  • Last Reply

விகடகவி சீக்கிரம் வாங்கோ. காலக்கண்னாடியைப் பார்க்கும் ஆவலில் நிலா

நிலா அக்கா மாமா ஓடி வந்து கண்ணாடியை கீழே விழுத்தி போட்டாலும் மெல்லமா வரட்டும்...... :P :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியின் விகடமான காலக்கண்ணாடி வந்துகொண்டிருப்பதை..நான் வரும் பாதையில் சந்தித்தேன்...ஒரு கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருப்பதாக பிந்திய தகவல்..

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியின் விகடமான காலக்கண்ணாடி வந்துகொண்டிருப்பதை..நான் வரும் பாதையில் சந்தித்தேன்...ஒரு கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருப்பதாக பிந்திய தகவல்..

கவனம் தேனீர் நெஞ்சை சுட்டுடாமல்

ரொப் 10 ஐ வைத்து அசத்தியிருக்கிறீர்கள்

பாராட்டுக்கள் விகடகவி

சிலஇடங்களில் வசனங்கள் தெளிவில்லாமல் இருக்கிறது அதை கவனித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

10 தெரிவும் சிறந்த தெரிவு

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஹிட்... :(:(

வித்தியாசமான படைப்பு, சிந்தனை.... அருமை....

கலக்கீட்டா சந்துரு... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக படைத்திருந்தீர்கள் விகட கவி. தெரிவு செய்த 10 தெரிவும் நன்றாக இருந்தது. இதற்கு பாராட்டுக்கள்

ஆனால் நீங்கள் தமிழ் நாட்டுச் சாக்கடை சினிமாவை காலக்கண்ணாடியில் கொண்டுவருவீர்கள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. காலக்கண்ணாடியில் இந்த சினிமா நடிகர்களைக் கொண்டுவந்ததினால் எதோ எமக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிக்கு சென்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அவர்களே உங்களது விகடத்தனமான தொகுப்புக்கு பாராட்டுக்கள். இருந்தாலும் சினிமாவை அதிகமாக புகுத்தியுள்ளது எனது மனது ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது..

தொழில் நுட்பத்தில் நீங்களும் கவனம் செலுத்தியுள்ளீர்கள்..

உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்தது கொஞ்சம் வித்தியாசமானது..

இந்த வார காலக்கண்ணாடியின் சந்தர்ப்த்தை எனக்கு வழங்கியுள்ளீர்கள் நன்றி...

விகடகவிமாமா சூப்பரா டொப் 10 வழங்கினீங்க அது சரி ஒரு தடவையாவது முகத்தை காட்டுவீங்க என்று பார்த்தா ஸ்கேப் ஆகிட்டீங்க.............சரி.......... சரி.............நல்லா இருந்துச்சு..........நல்லா தான் கதைகிறீங்க நடிகர்களை மாதிரி..........அது சரி ஏன் மாமா கைக்கு கிளவுஸ் போட்டு இருந்தனீங்க எனக்கு அதை கொஞ்சம் எஸ்பிளைன் பண்ணுங்கோ.........மொத்தத்தில இந்த முறை காலகண்ணாட்டி ரசிக்க பார்க்க கூடியதாக இருந்தது என்று என்னுடைய விமர்சனத்தை கூறி விடை பெறுகிறேன்........... :P ;)

அப்ப நான் வரட்டா மாமா...... :P

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமா அழகாய் இருக்கிறது விகடகவி.

ஆனாலும் உங்க காலக்கண்ணடி பார்த்து நான் ஏமாந்து போனேன்.

இப்படி ஒரு காலக்கண்ணாடி செய்விங்க எண்டு கனவிலேயும் நினைக்கல.

அழகான சொல் எடுத்து கவிதையாலே காலக் கண்ணாடியை அழங்கரிப்பிங்க எண்டு ஆசை ஆசையா இருந்தேனே. கவிதைக்காக காத்திருந்தேன். சினிமா பாட்டை போட்டதற்கு பதிலாக நீங்களே பாடியிருக்கலாம்

கடைசியிலாவது உங்க அழகான முகத்தை காட்டுவீங்க எண்டு பார்த்தன்.

ம்..................பரவாயில்ல நேரில்ல தானே பாத்திருக்கிறேனே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் உங்க காலக்கண்ணடி பார்த்து நான் ஏமாந்து போனேன்.

நானும் தான் எமாந்து விட்டேன். விகடகவி அவர்கள் யாழில் வரும் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். இதனால் நானும் அவரிடமிருந்து கவிதைகளைத் தான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் இவரது காலக்கண்ணாடி பார்க்க சன் தொலைக்காட்சியைப் பார்த்த உணர்வே எனக்கு ஏற்பட்டது. ரி.ரி.என் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகளைப் பார்க்கும் போது ஏற்படும் திருப்தி எனக்கு இக்காலக் கண்ணாடியில் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணத்திரை விகடமாய் இருந்தது காலக்கண்ணாடியின் காட்சித் தெறிப்பு. விடயங்கள் பெற்ற முக்கியத்துவத்தை விட சினிப்பாடல்களும் நடிகர்களும் பெற்றனர்.

மொத்தத்தில்.. இக்காலக்கண்ணாடி வண்ணத்திரை. :lol:

ஏன் எல்லோரும் யுரிப்பையும்.. வீடியோ கென்வேட்டரையும் நம்பித்தான் படைப்புகளைத் தரனும் என்று சபதம் எடுத்திட்டீங்களா..??! :D

விகட கவியின் காலக்கண்ணாடி நல்லாருக்கு .... நகைச்சுவையாய் செய்திருக்கிறீங்க... பாராட்டுக்கள்

நட்சத்திரங்களின் முகங்களை முகமூடியாப் போட்டீங்க அட கடைசியி முகம் காட்டப் போறீங்கண்ணு பார்த்தால் ..... வட்டா என்றுவிட்டு ஓடிட்டீங்க அதுதான் கொஞ்சம் கடுப்பாகிப் போச்சு...... :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் யுரிப்பையும்.. வீடியோ கென்வேட்டரையும் நம்பித்தான் படைப்புகளைத் தரனும் என்று சபதம் எடுத்திட்டீங்களா..??!

உங்க முறை வரும் போது அசத்துங்க நெடுக்கு

எதிர்பார்த்த மாதிரி நான் செய்யவில்லை என்று தெரிகிறது..

ஒரு யாழ்கள நண்பர் சொன்னார் கவிதையிலே செய்யாம வித்தியாசமா செய்ய சொல்லி..

பரவாயில்லை...சினிமாவின் பிரபல்யம் கருதி இப்படி செய்ததால் பிழைகளைப்பொறுத்து சிறியவனை மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

அதிகப்படியானவர்கள் பார்வையிட்டு கொண்டு இருப்பதால் எனக்கு தற்காலிகமாக தரவிறக்க முடியவில்லை.... :D:lol:

அதிகப்படியானவர்கள் பார்வையிட்டு கொண்டு இருப்பதால் எனக்கு தற்காலிகமாக தரவிறக்க முடியவில்லை.... :D:lol:

படம் டிக்கட் கிடைக்காம ஓடுது போல..

எங்கயும் பிளக்ல டிக்கட் கிடைக்குமா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

உங்க முறை வரும் போது அசத்துங்க நெடுக்கு

வயசான காலத்தில.. என்னத்தை செய்ய முடியும் பிள்ள..! சொல்லத்தான் முடியும். அப்படி செய்யச் சொன்னாலும் எல்லாருக்கும் கடைசில தான் செய்வம். வந்தா கடைசியா வரும் இல்ல வரமாட்டம். :lol:

  • தொடங்கியவர்

படம் டிக்கட் கிடைக்காம ஓடுது போல..

எங்கயும் பிளக்ல டிக்கட் கிடைக்குமா என்ன

கொஞ்சம் பொறுங்கோ... ஒரு பவுன்சுக்கு ((விக்னேஸ்)) கடைக்கு வரும்போது பாக்கலாம்... :P :P :P

:angry: விகடகவி ரொம்ப ரொம்ப வித்தியாசமாக நினைச்சேன் ஆனால் நீங்கள் 10 விடயங்களை மட்டும் எடுத்து உங்கள் முகத்தையும் மறைத்து காலக்கண்ணாடிக்கு முகமூடி போட்டு திரையில் வந்து மறைச்சுப்போட்டீங்க.

உங்கள் குரல் சூப்பராக இருந்திச்சுங்க. நான் நினைச்சேன் ஒவ்வொரு விடயமும் வரும் போதும் கவிதையிலேயே சொல்லுவீங்க னு. ம்ம்ம்ம்ம் அவசரத்தில் செய்துட்டீங்க போல இருக்கு. :P :P :P

கொஞ்சம் பொறுங்கோ... ஒரு பவுன்சுக்கு ((விக்னேஸ்)) கடைக்கு வரும்போது பாக்கலாம்... :P :P :P

அட இத கூடவா திருடு விசிடி..... ஆஹா கிளம்பிட்டாங்ஙையா கிளம்பிட்டாங்க........

  • தொடங்கியவர்

அட இத கூடவா திருடு விசிடி..... ஆஹா கிளம்பிட்டாங்ஙையா கிளம்பிட்டாங்க........

பின்னை என்ன " கவி " செய்ததை பாக்கலாம் எண்டு Youtube பை ஒரு மணித்தியாலமாய் ஓட விட்டுவிட்டு பாத்து கொண்டே இருக்கிறன் தரவிறங்கின பாடும் இல்லை படம் தெரியவும் இல்லை.... கடுப்பாயிட்டமில்ல...! :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்திருக்கின்றபோது, விகடகவி இப்படி ஒரு தேர்வு செய்ததில் தவறில்லை. அதை 100 வீதம் வாழ்த்துகின்றேன். பிழை பிடிக்கப் போனால், ஒவ்வொருவருடைய செயற்பாட்டிலும் அதைப் பிடிக்க முடியும்.

விகடகவியின் பாணி என்பது இது, அதை அவர் அழகாகக் செய்திருக்கின்றார். சினிமாப் பாணியில் அமைந்தது என்பதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. சினிமாவிற்கு நாங்கள் ஒரு போதும் எதிரானவர்கள் கிடையாது. சினிமா ஒரு சிறந்த ஊடகம். அதை எம் பக்கம் சாய்த்து வெற்றி பெறுவதே மேலானதே தவிர, அதை ஒதுக்குவதால் நாங்கள் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.

அருமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இருந்தாலும் விகடகவியின் கவிக்குறும்பு இங்கு காணவில்லை. கவிதையில் அசத்துவீங்கள் என்று எதிர்பாhத்து ஆவலுடன் ஓடோடிவந்தேன் என்னை ஏமாற்றிவிடடீர்களே நாதா ? ?

உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். மிகவும் சிரமப்பட்டு அத்தனை படங்களையும் பிரின்ட் எடுத்து வீடியோ செய்து ஆகா அசத்தியிருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.