Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2022 ஆண்டின் சிறந்த மனிதர் - டைம் சஞ்சிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 வருடம்தோறும் டைம் சஞ்சிகை ஆண்டின் சிறந்த மனிதர் என ஒருவரை தெரிவு செய்யும்.

இந்த ஆண்டு உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் செலன்ஸ்கியையும்  உக்ரேனிய ஓர்மத்தையும் ஆண்டின் சிறந்த மனிதராக தெரிவுசெய்துள்ளது டைம்.

ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல).

இந்த கெளரவத்திற்கு பரிசீலிக்கப்பட்ட இன்னுமொரு நபர்/குழு “ஈரானின் பெண் ஆர்பாட்டகாரர்கள்” ஆவர். அவர்களுக்கு ஆண்டின் கதாநாயகர்கள் கெளரவம் வழங்கப்படுகிறது. 

https://time.com/person-of-the-year-2022-volodymyr-zelensky/

  • கருத்துக்கள உறவுகள்

மறு புறமாக

உலகுக்கே அதிக  பயத்தையும் வைராக்கியத்தையும் காட்டிவந்த  ரசியா???😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல).

இது அமெரிக்காவால் நன்கு திட்டமிட்டு ரஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படும் ஒரு கேவலம் கெட்ட யுத்தம். இதே போல் தான் இலங்கையில் இந்தியாவால் நடத்தப்பட்ட யுத்தத்தில் மகிந்தவும் கோத்தபாயவும் போர் வீரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.

கோமாளி செலென்ஸ்கிக்கு அடுத்தது நோபல் பரிசுதான் இலக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இது அமெரிக்காவால் நன்கு திட்டமிட்டு ரஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படும் ஒரு கேவலம் கெட்ட யுத்தம். இதே போல் தான் இலங்கையில் இந்தியாவால் நடத்தப்பட்ட யுத்தத்தில் மகிந்தவும் கோத்தபாயவும் போர் வீரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.

கோமாளி செலென்ஸ்கிக்கு அடுத்தது நோபல் பரிசுதான் இலக்கு...

போற போக்கில புட்டின் கையால Hero of Russia அவார்ட்டு வாங்கினாலும் வாங்கிடுவார்.

#கோமாளி கிட்ட அடி வாங்கிற பேமானி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

.

#கோமாளி கிட்ட அடி வாங்கிற பேமானி

முடியலயப்பு

சிரிச்சு  முடியல🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

 வருடம்தோறும் டைம் சஞ்சிகை ஆண்டின் சிறந்த மனிதர் என ஒருவரை தெரிவு செய்யும்.

இந்த ஆண்டு உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் செலன்ஸ்கியையும்  உக்ரேனிய ஓர்மத்தையும் ஆண்டின் சிறந்த மனிதராக தெரிவுசெய்துள்ளது டைம்.

ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல).

இந்த கெளரவத்திற்கு பரிசீலிக்கப்பட்ட இன்னுமொரு நபர்/குழு “ஈரானின் பெண் ஆர்பாட்டகாரர்கள்” ஆவர். அவர்களுக்கு ஆண்டின் கதாநாயகர்கள் கெளரவம் வழங்கப்படுகிறது. 

https://time.com/person-of-the-year-2022-volodymyr-zelensky/

தகுதியான ஆளுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த வேளையில் சொந்தக் காலுக்கும் இரவல் காலுக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக் காட்ட வேண்டும்:

21 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவழித்த தொகை 2.3 ட்ரில்லியன் டொலர்கள்!- ஆண்டுக்கு 100 பில்லியனுக்கும் அதிகம்! இந்த ஆண்டுக்கு 100 பில்லியன் செலவில், 750 மில்லியன் டொலர்கள் ஆப்கான் இராணுவத்தின் (அரிக்கன் ஆடுகள்😂?) சம்பளத்திற்கான செலவு. இறுதியில், அந்தச் சம்பளக் காசு ஊழல் தலைகளின் வங்கியில் சேர்ந்தாகக் கண்டு கொண்ட பின்னர் தான் பிளக்கைப் பிடுங்கி விட்டு வெளியேறினர். பின்னர் நடந்தது உலகப் பிரபலச் செய்தி!

பெப்ரவரி 2022 முதல் இன்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய தொகை ஏறத்தாழ 18 பில்லியன் டொலர்கள் (மிகுதி நேட்டோ நாடுகள் இதை விட மிகக் குறைவாக வழங்கியிருக்கின்றன). இதை எடுத்துக் கொண்டு, ஊழல்களை பின் தள்ளி விட்டு உக்ரைன் புட்டின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

("ஆப்கானிஸ்தான் அரிக்கன் ஆடுகளை அமெரிக்கா உக்ரைன் போல கவனிக்கவில்லை" என்று அடிக்கடி குறைப்படும் நுணாவிற்கு இது சமர்ப்பணம்!😁)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

முடியலயப்பு

சிரிச்சு  முடியல🤣

🤣 ஒத்தகையால பென்ஸ் S கிளாஸ்ச சுத்தி சுத்தி ஓடுற ஒரு பெரும் தலைவன் - இந்தளவு கூட கலாய்க்காட்டில் என்ன மரியாதை🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தகுதியான ஆளுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த வேளையில் சொந்தக் காலுக்கும் இரவல் காலுக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக் காட்ட வேண்டும்:

21 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவழித்த தொகை 2.3 ட்ரில்லியன் டொலர்கள்!- ஆண்டுக்கு 100 பில்லியனுக்கும் அதிகம்! இந்த ஆண்டுக்கு 100 பில்லியன் செலவில், 750 மில்லியன் டொலர்கள் ஆப்கான் இராணுவத்தின் (அரிக்கன் ஆடுகள்😂?) சம்பளத்திற்கான செலவு. இறுதியில், அந்தச் சம்பளக் காசு ஊழல் தலைகளின் வங்கியில் சேர்ந்தாகக் கண்டு கொண்ட பின்னர் தான் பிளக்கைப் பிடுங்கி விட்டு வெளியேறினர். பின்னர் நடந்தது உலகப் பிரபலச் செய்தி!

பெப்ரவரி 2022 முதல் இன்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய தொகை ஏறத்தாழ 18 பில்லியன் டொலர்கள் (மிகுதி நேட்டோ நாடுகள் இதை விட மிகக் குறைவாக வழங்கியிருக்கின்றன). இதை எடுத்துக் கொண்டு, ஊழல்களை பின் தள்ளி விட்டு உக்ரைன் புட்டின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

("ஆப்கானிஸ்தான் அரிக்கன் ஆடுகளை அமெரிக்கா உக்ரைன் போல கவனிக்கவில்லை" என்று அடிக்கடி குறைப்படும் நுணாவிற்கு இது சமர்ப்பணம்!😁)

அழுதழுதும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும்.

சுதந்திரம், இறையாண்மை, மக்களாட்சி, ஜனநாயகம் - வாடகைதாய் பிரசவிக்க முடியாத குழந்தைகள்.

எத்தனை செவிலியர் அருகில் நின்று ஆதரவு தந்தாலும்.

  • கருத்துக்கள உறவுகள்

1938ல் Adolf Hitler க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1930 மகாத்மா காந்திக்ஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் பில் கிளின்ரன், 2004 ஜோஜ் புஸ் ஜூனியருக்கும், 2007,2008 ல் பராக் ஒபாமாவுக்கும் 2008ல் புட்டினுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

1938ல் Adolf Hitler க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1930 மகாத்மா காந்திக்ஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் பில் கிளின்ரன், 2004 ஜோஜ் புஸ் ஜூனியருக்கும், 2007,2008 ல் பராக் ஒபாமாவுக்கும் 2008ல் புட்டினுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இடி அமீன்,  ஒசாமா பின்லாடன்…. ஆகியோர்
இன்னும் கொஞ்சக் காலம் உயிருடன் இருந்திருந்தால்…
டைம் சஞ்சிகை, அவர்களுக்கும் இந்தப் பரிசை கொடுத்திருக்கும். 😎

அதி உத்தமர் புட்டின் அவர்கள், 2008’ம் ஆண்டிலேயே வாங்கிய பரிசைத் தான்…
கோமாளி நடிகர் செலென்ஸ்கி 2022’ம் ஆண்டு வாங்கியுள்ளார்.
கோமாளி படித்த பள்ளிக்கூடத்தில்… அதி உத்தமர் பிரின்சிப்பால்(டா) 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

1938ல் Adolf Hitler க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1930 மகாத்மா காந்திக்ஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் பில் கிளின்ரன், 2004 ஜோஜ் புஸ் ஜூனியருக்கும், 2007,2008 ல் பராக் ஒபாமாவுக்கும் 2008ல் புட்டினுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

1938 இல் "ஆண்டின் மனிதர்" (TIMES Man of the Year) ஹிற்லருக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அது   புகழ்ந்து  வழங்கப் பட்டதல்ல என்பதை நீங்கள் ஆழ வாசித்தறிந்திருக்க மாட்டீர்கள்! கீழே இணைப்பில் சென்று வாசியுங்கள். மொழி மாற்றம் அவசியமில்லையென நினைக்கிறேன்!👇

"......Hitler was chosen in 1938 because of his negative impact" Others included former Soviet Union leader Joseph Stalin, former Soviet premier Nikita Khrushchev and Iran's former supreme leader Ayatullah Khomeini"

https://www.usatoday.com/story/news/factcheck/2021/08/19/fact-check-hitler-time-magazine-man-year-1938-not-honor/8149799002/

2022 செலன்ஸ்கிக்கு ஏன் வழங்கப் பட்டதென கூறும் குறிப்பையும் வாசியுங்கள்.

வாசிப்பு நல்லது, அடிக்கடி உங்கள் கருத்துக்கள் மொக்கேனத்துற்குள்ளாவ்தைத் தடுக்கும் சக்தி வாசிப்பிற்குண்டு கப்ரன்!

https://time.com/person-of-the-year-2022-volodymyr-zelensky/?utm_source=twitter&utm_medium=social&utm_campaign=person-of-the-year&utm_term=world_ukraine&linkId=192718440

https://twitter.com/TIME/status/1600470652363866113/photo/1

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

1938 இல் "ஆண்டின் மனிதர்" (TIMES Man of the Year) ஹிற்லருக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அது   புகழ்ந்து  வழங்கப் பட்டதல்ல என்பதை நீங்கள் ஆழ வாசித்தறிந்திருக்க மாட்டீர்கள்! கீழே இணைப்பில் சென்று வாசியுங்கள். மொழி மாற்றம் அவசியமில்லையென நினைக்கிறேன்!👇

"......Hitler was chosen in 1938 because of his negative impact" Others included former Soviet Union leader Joseph Stalin, former Soviet premier Nikita Khrushchev and Iran's former supreme leader Ayatullah Khomeini"

https://www.usatoday.com/story/news/factcheck/2021/08/19/fact-check-hitler-time-magazine-man-year-1938-not-honor/8149799002/

யார் யாருக்குக்.கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளேன் என்பதைக் கவனித்திருந்தீர்களாக இருந்தால் இதை இங்கே குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

யார் யாருக்குக்.கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளேன் என்பதைக் கவனித்திருந்தீர்களாக இருந்தால் இதை இங்கே குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 

சும்மா தகவலுக்காகத் தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை நம்புகிறேன்!

பட்டியலில் இருக்கும் ஒபாமா, புட்டின், பின்னர் நான் சேர்த்த ஸ்ராலின், குருஷேவ், அல் கொமெய்னி - இவர்கள் யாவரும் ஒன்றே என்பதைக் குறிப்பிடுவதற்காக அல்ல என்பதையும் நம்புகிறேன்!😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

#கோமாளி கிட்ட அடி வாங்கிற பேமானி

நான் விழுந்து விழுந்து சிரிச்சதிலை முழங்கால் சில்லு உடைஞ்சு போச்சுது கண்டியளோ.....🤪

வியாபார டைம் சஞ்சிகை தனக்கு பிடித்த ஆக்களை தூக்கி பிடிப்பதிலை ஆச்சரியம் ஒண்டுமில்லை பாருங்கோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

சும்மா தகவலுக்காகத் தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை நம்புகிறேன்!

பட்டியலில் இருக்கும் ஒபாமா, புட்டின், பின்னர் நான் சேர்த்த ஸ்ராலின், குருஷேவ், அல் கொமெய்னி - இவர்கள் யாவரும் ஒன்றே என்பதைக் குறிப்பிடுவதற்காக அல்ல என்பதையும் நம்புகிறேன்!😎

சும்மா  தகவலுக்காக குறிப்பிடவில்லை. யார் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்களின் செயல்களுக்கிடையேயான முரண்பாட்டையும் காட்டுவதற்காக இங்கே குறிப்பிட்டிருந்தேன்.  

சுருக்கமாகச் சொல்லுவதானால், முரண்பாட்டின் மொத்த வடிவமே இந்த Man of the Year தெரிவு. 

அந்தப்பக்கம் புடின், இந்தப்பக்கம்  செலண்ஸ்கி. இவர்கள் இருவருக்குமே இந்த்க் கெளரவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இப்போது இந்த தெரிவின் பெறுமதி என்ன? 

😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உங்களுக்கு உண்மையிலேயே அடிப்படை புரிதலில் பாரிய குறைபாடு உள்ளது கற்ப்ஸ்.

இது ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை குறிக்கும் விருது இல்லை.

 உண்மையில் இது ஒரு விருதே அல்ல. அங்கீகாரம்.

ஒரு வருடத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபர் யார் என்ற அங்கீகாரம்தான் இது. அதனால்தான் ஹிட்லருக்கும், காந்திக்கும், டிரம்புக்கும், கிரேட்டாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.9F28CEA6-8191-46D1-9CBC-DA2B9DA252ED.jpeg.c382f69ab57602feea60604497eba9dc.jpeg

எரியுதடி மாலா!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்களுக்கு உண்மையிலேயே அடிப்படை புரிதலில் பாரிய குறைபாடு உள்ளது கற்ப்ஸ்.

இது ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை குறிக்கும் விருது இல்லை.

 உண்மையில் இது ஒரு விருதே அல்ல. அங்கீகாரம்.

ஒரு வருடத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபர் யார் என்ற அங்கீகாரம்தான் இது. அதனால்தான் ஹிட்லருக்கும், காந்திக்கும், டிரம்புக்கும், கிரேட்டாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனக்கு "பாரிய புரிதல் குறைபாடு" என்பது ஒருபக்கம் இருக்க்ட்டும் கோசான். அதப் பின்னர் கவனிப்போம். 😉

இங்கே எந்த இடத்திலும் நான் விருது என்று குறிப்பிடவில்லை.

Justin க்கு கொடுக்கப்பட்ட விளக்கத்தில் எனது நோக்கத்தைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

அந்தப்பக்கம் புடின், இந்தப்பக்கம்  செலண்ஸ்கி. இவர்கள் இருவருக்குமே இந்த்க் கெளரவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இப்போது இந்த தெரிவின் பெறுமதி என்ன? 

இந்த பந்தி உங்கள் புரிதல் குறைபாட்டை விளக்கி நிக்கிறது கற்ப்ஸ்.

நான் சொன்னதைதான் ஜஸ்டீன் அண்ணாவும் தன்மையாக சொன்னார் ஆனால் நீங்கள் உங்கள் ஏலவே எடுத்த தவறான முடிவில் அறுதியாக இருப்பதால் அவர் சொன்னதை காதில் போட்டு கொள்ளவே இல்லை.

புட்டின் ஒரு வருடத்தில் (2007) அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் - அவரை குறிப்பிட்டார்கள்.

2022 இல் செலன்ஸ்கி.

இது தனியே “தாக்கம்” (impact) தின் அடிப்படையிலான தெரிவு. ஒழிய நியா/அநியாய, நல்லது/கெட்டது பற்றிய தெரிவு அல்ல.

இப்படி - தனியே தாக்கத்தை மட்டும் கருதி, எதிரெதிர் துருவங்களுக்கு கொடுப்பது இந்த தெரிவு பொறி முறையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறதே ஒழிய குறைக்க வில்லை.

பிகு

இங்கே இந்த அங்கீகாரம் தனியே தாக்கம் (impact) அடிப்படையில் மட்டுமே கொடுக்கபடுகிறது என்பதை புரிந்து கொண்டால்,

ஹிட்லருக்கும், காந்திக்கும் கொடுத்தார்களே என்ற கேள்வியே எழாது.

ஆகவே

#அடிப்படை புரிதல் அவசியம் குமாரு

Edited by goshan_che
2007

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பெப்ரவரி 2022 முதல் இன்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய தொகை ஏறத்தாழ 18 பில்லியன் டொலர்கள் (மிகுதி நேட்டோ நாடுகள் இதை விட மிகக் குறைவாக வழங்கியிருக்கின்றன). இதை எடுத்துக் கொண்டு, ஊழல்களை பின் தள்ளி விட்டு உக்ரைன் புட்டின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

2023 இல் இந் தொகைகள் காங்கிரசால் மட்டுப்படுத்தப்படலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

2023 இல் இந் தொகைகள் காங்கிரசால் மட்டுப்படுத்தப்படலாம்.

இருக்கலாம்.

டிசாண்டிசின் உக்ரேன் கொள்கை எப்படி?

சிலவேளை இதை அவர் ஒரு கட்சி அரசியல் விடயமாக மாற்றாமல் அமெரிக்கா, நேட்டோ என்ற ரீதியில் அணுகினால் - ரிபளிக்கன் கொள்கை மாறலாம்?

டிரம்பின் ரஸ்ய தொடர்புகள், ரகசிய கோப்புக்களை ரஸ்யாவிடம் கொடுத்தது, ஜனவரி 6 விசாரணை போகும் போக்கை வைத்து, ரிபக்ளிகன் கட்சி, டிரம்பை விரைந்து கைவிடுவதோடு, தாம் ரஸ்ய ஏஜெண்டுகள் என்ற வசையில் இருந்து தப்ப - டெமோகிரெட்சை விட பெரிய உக்ரேனிய அனுதாபிகளாக மாறக்கூடுமா?

அடுத்த 12 மாதங்களில் அமெரிக்க தேசிய அரசியல் மிக சுவாரசியமாக இருக்க போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

2023 இல் இந் தொகைகள் காங்கிரசால் மட்டுப்படுத்தப்படலாம்.

இருக்கலாம். ஆனால், செனட் நீலக்கட்சியிடம். கீழ்சபை செனட்டுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் தனியே எதையும் செய்ய முடியாது.

என் ஆசை: சிவப்புக் கட்சி உக்ரைன் உதவியை வெட்டும் முயற்சியை எடுக்க வேண்டும், இதன் மூலம் யோசிக்கும் புத்தியுள்ள சுதந்திர வாக்காளர்கள் 2024 இல் ட்ரம்ப் வென்றால் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்க முடியும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இருக்கலாம். ஆனால், செனட் நீலக்கட்சியிடம். கீழ்சபை செனட்டுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் தனியே எதையும் செய்ய முடியாது.

என் ஆசை: சிவப்புக் கட்சி உக்ரைன் உதவியை வெட்டும் முயற்சியை எடுக்க வேண்டும், இதன் மூலம் யோசிக்கும் புத்தியுள்ள சுதந்திர வாக்காளர்கள் 2024 இல் ட்ரம்ப் வென்றால் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்க முடியும்!

ஒரு நீலகட்சி ஆதரவாளராக உங்கள் ஆசையை புரிந்து கொண்டாலும்.

ஒரு மேற்கின் அடிவருடியாக, வெள்ளை தோல் அடிமையாக (🤣),

அமெரிக்காவின், சீன கொள்கைபோல், புட்லரின் ரஸ்யவை வெளுத்து கட்டவேண்டும் என்ற கொள்கையும் கட்சி பேதத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

புட்டினின் கைப்பாவை டிரம் அமரிக்க அரசியலில் வந்திராவிட்டால் - ரஸ்ய விடயத்தில் நீல கட்சியை விட சிவப்பு கடும் போக்கை எடுத்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

Where is Dubya when you need him 🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இந்த பந்தி உங்கள் புரிதல் குறைபாட்டை விளக்கி நிக்கிறது கற்ப்ஸ்.

நான் சொன்னதைதான் ஜஸ்டீன் அண்ணாவும் தன்மையாக சொன்னார் ஆனால் நீங்கள் உங்கள் ஏலவே எடுத்த தவறான முடிவில் அறுதியாக இருப்பதால் அவர் சொன்னதை காதில் போட்டு கொள்ளவே இல்லை.

புட்டின் ஒரு வருடத்தில் (2007) அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் - அவரை குறிப்பிட்டார்கள்.

2022 இல் செலன்ஸ்கி.

இது தனியே “தாக்கம்” (impact) தின் அடிப்படையிலான தெரிவு. ஒழிய நியா/அநியாய, நல்லது/கெட்டது பற்றிய தெரிவு அல்ல.

இப்படி - தனியே தாக்கத்தை மட்டும் கருதி, எதிரெதிர் துருவங்களுக்கு கொடுப்பது இந்த தெரிவு பொறி முறையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறதே ஒழிய குறைக்க வில்லை.

பிகு

இங்கே இந்த அங்கீகாரம் தனியே தாக்கம் (impact) அடிப்படையில் மட்டுமே கொடுக்கபடுகிறது என்பதை புரிந்து கொண்டால்,

ஹிட்லருக்கும், காந்திக்கும் கொடுத்தார்களே என்ற கேள்வியே எழாது.

ஆகவே

#அடிப்படை புரிதல் அவசியம் குமாரு

எனக்கு அடிப்படைப் புரிதலில் குறைபாடு இருக்கிறதா என்பதைப்பற்றி பின்னர் பார்ப்போம் என ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். 😉

👇

1) ""இது தனியே “தாக்கம்” (impact) தின் அடிப்படையிலான தெரிவு. ஒழிய நியா/அநியாய, நல்லது/கெட்டது பற்றிய தெரிவு அல்ல.""

👆இதுதான் விடயம்  கோசான். ஊரில் தாக்கத்தைக் கொண்டுவந்தான் (அது நல்லதோ கெட்டதோ) என்பதற்காக திருடனை யாரும் கெளரவிப்பதில்லை. 

ஆதல்லால்தான் புடினையும் செலன்ஸ்கியையும் குறிப்பிட்டு தெரிவின் பெறுமதி என்ன எனக் கேட்டிருந்தேன். 

🤦🏼‍♂️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உக்கிரேன் என்றால் முதலில் எமக்கு தோன்றுவது செலன்ஸ்கியின் முகம்தான், அது எவ்வாறெனில் அப்பிள், அமேசன் என்றால் எப்படி ஒரு சில முகங்கள் மனதிற்குள் வருவது போலத்தான் இதுவும்.

இதனை (பிராண்ட்) திட்டமிட்டும் உருவாக்கலாம், அப்படி உருவாக்கினால் அப்படி உருவாகுபவர்களுக்கு என்ன இலாபம்? இங்கு செலன்ஸ்கி திட்டமிட்டு அவ்வாறு உருவாக்கப்படுகிறாரா? அப்படியாயின் இதனால் உக்கிரேனிற்கு என்ன பாதிப்பு? அல்லது இலாபம்? என ஏற்படுகின்ற கேள்விகளுக்கு உக்கிரேனியர்கள் விடை தேடவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.