Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை  வழங்கி  கௌரவித்துள்ளார்.

P9-600x433.jpeg

லைக்கா ஹெல்த்தின் (lyca Health) நிறுவனரும் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன் வைத்தியத் துறைசார் சேவையில் பிரதான இடத்தை தக்கவைத்துள்ளார்.

லைக்கா ஹெல்த்தின் (lyca Health) தலைவரான பிரேமா சுபாஸ்கரன் ஒரு முக்கிய தொழில்முனைவோராகவும், பரோபகாரியாகவும் விளங்குகிறார். வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை அணுகுவதில் குறிப்பாக கவனம் செலுத்துகிறார். 2015 இல் Lyca Health ஐ நிறுவி அதன் தலைவராகவும் தொடர்கிறார்.

பிரேமா சுபாஸ்கரன்  வைத்திய துறைசார்ந்த புதிய சந்தைகளில் விரிவாக்கம் மற்றும் மையங்களின் ஒட்டுமொத்த இயக்கம் உட்பட வணிகத்தின் செயல்பாட்டு மற்றும் மூலோபாய வளர்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.

2015 ஆம் ஆண்டில் Lyca Health இன் கனரி வார்ஃப் கிளினிக்கை ஆரம்பித்தார. அப்போது லண்டன் மேயராக இருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பொரிஸ் ஜோன்சன்   திறந்து வைத்திரு்தார்.

1Poris-600x368.jpg

இதேவேளை  Lyca Health, இலங்கை மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே நன்கொடை  வழங்கியுள்ளது.

Lyca Group இன் நோக்கத்தின் ஒரு பகுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் இரண்டு வெவ்வேறு திட்டங்களுக்கு LycaHealth இன் நன்கொடை ஆதரவளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4-600x424.jpg

2021 செப்டம்பரில் பிரிட்டனின் முக்கிய வைத்தியசாலைகளில் ஒன்றான Kent உள்ள, 100 படுககைகள கொண்ட    KIMS Hospital ஐ வாங்கியதன் மூலம்  Lyca Health ஐ மேலும் விரிவாக்கி உள்ளார்.  . (KIMS Hospital, the largest independent hospital in Kent, has today, Thursday 14th October 2021 announced that Lyca Health, has invested in KIMS Hospital.)

P5-400x600.jpeg

பிரேமா சுபாஸ்கரன் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார், இது உலகெங்கிலும் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சமூகங்களுக்கு, குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக நிறுவப்பட்டது.

2mrs-subaskaran--600x339.jpg

Lyca குழுமத்தின் CSR முன்முயற்சிகளுக்கு அவர்  தலைமையும்  தாங்குகிறார், இதில், அண்மையில், UK அல்சைமர்ஸ் ஆராய்ச்சியின் முக்கிய பணிகளுக்கான நிதியுதவி, கறுப்பு இன மக்கள் உள்ளிட்ட  சிறுபான்மை இன (BAME) சமூகங்களுக்கு நோய், அதன் அடையாளம் மற்றும் தடுப்பு பற்றிய கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

பிரேமா சுபாஸ்கரன் யாழ் மருத்துவ பீட மாணவியாக பயின்றபோது இடைவிலகி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தார். பிரித்தானியாவில் தனது கல்வியை தொடர்ந்த அவர்,  பயோமெடிக்கல் அறிவியலில் முதுகலைமானிப் பட்டம் பெற்றவர்.

3mrs-subaskaran-1-600x338.jpg

மனிதாபிமான சேவைகளுக்காக சிறந்த பெண்மணி விருதுகளான (G.O.D) ஹவுஸ் ஆஃப் கொமன்ஸ் மற்றும் சர்வதேச உத்தியோகபூர்வ டிக்னிட்டி விருது (G.O.D), அரசியல், பொது வாழ்க்கை மற்றும் வணிகம் என்பவற்றிற்கான ஆசியாவின் குரல்  விருது 2018, மற்றும் மனிதாபிமான சேவைகளுக்கான ஐநாவின் சிறந்த பெண்மணிக்கான விருது 2017 ஆகிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (Winner of the Asian Voice Political and Public Life Businessperson of the Year Award 2018 at the House of Commons and Global Officials of Dignity Awards (G.O.D)

un-prema-338x600.jpeg

Distinguished Woman of the Year 2017 at UN for humanitarian services.)

UN-600x315.jpg

டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

DR-MGR-UNi-568x600.png

P2-1-600x400.jpeg

P3-600x400.jpeg

P4-600x400.jpeg

P6-600x401.jpeg

P7-400x600.jpeg

P8-600x400.jpeg

P9-1-600x433.jpeg

P10-600x400.jpeg

P11-600x400.jpeg

P12-600x400.jpeg

P13-600x400.jpeg

P14-600x400.jpeg

P16-600x400.jpeg

P17-397x600.jpeg

https://athavannews.com/2022/1314880

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் லைக்கா குழுமத்துக்கு.........!  💐

நன்றி சிறியர்.......!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிரேமா சுபாஸ்கரனுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இவர்களால் 5 மாடிக்  கட்டடம் கட்டப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமா சுபாஸ்கரனுக்கு.வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.