Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் : மஹிந்த அமரவீர !

December 17, 2022
 
Mahinda.Amaraweera%20(1).jpg

இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும் என்றார்.

அடுத்த அறுவடைக் காலத்தில், விளைச்சலை அதிகரிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இளைஞர்களுக்கு கையளிப்பதற்காக பயிர் செய்யப்படாத நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுமார் 100,000 ஏக்கரில் நெற்செய்கைகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை எனவும், நெல் பயிரிடப்படாவிட்டால் ஏனைய பயிர்களை பயிரிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.battinews.com/2022/12/2023_3.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது தமிழர்களுக்கு மிகவும் சவாலான விடயம், புலம் பெயர் மக்கள் தங்கள் நிலங்களை ஊர் மக்களுக்கு பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களையும் வழங்க வேண்டும், அல்லது இது வேறு இனத்தவருக்கு போவதை தடுக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, உடையார் said:

இது தமிழர்களுக்கு மிகவும் சவாலான விடயம், புலம் பெயர் மக்கள் தங்கள் நிலங்களை ஊர் மக்களுக்கு பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களையும் வழங்க வேண்டும், அல்லது இது வேறு இனத்தவருக்கு போவதை தடுக்க முடியாது

நாட்டு நிலவரம் தெரியாத, இவங்கட கதைகள் உப்புச் சப்பில்லாது.

உரம் இல்லாமல் பலர் விவசாயம் வேண்டாம்என்று இருக்கிறார்கள்.

முதலில் உரத்தை இறக்குமதி செய்து தாராளமாக கிடைக்க செய்யட்டும்.

பிறகு உந்த வெருடல்களை விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விவசாயம் செய்தவர்களே முடங்கியிருக்கிறார்கள், அவர்களை முடக்கிவிட்டு பறிப்பது புத்திசாலித்தனமல்ல சுத்த பைத்தியக்காரத்தனம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள்ளக்காணி பிடிக்கற சனத்துக்கு நல்ல சந்தர்ப்பம். 😂

  • Like 1
Posted

உறவுகளிடம் ஒரு வேண்டுகோள் 

உங்களிடம் அல்லது  உங்களின் உறவினர்களிடம் எதாவது வயல் நிலங்கள் 
பரந்தன் கிளிநொச்சி முரசுமோடடை கண்டாவளை ,புளியம்பொக்கணை கல்மடு வடடகச்சி போன்ற பகுதிகளில் இருப்பின் நீங்கள் குத்தகைக்கு குடுக்க விருப்பம் இருக்குமாயின் ஐந்து வருட பிற் குத்தகைக்கு  எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, உடையார் said:

இது தமிழர்களுக்கு மிகவும் சவாலான விடயம், புலம் பெயர் மக்கள் தங்கள் நிலங்களை ஊர் மக்களுக்கு பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களையும் வழங்க வேண்டும், அல்லது இது வேறு இனத்தவருக்கு போவதை தடுக்க முடியாது

ம் நல்லது ஆனால் கொடுக்க மாட்டார்கள்

6 hours ago, Nathamuni said:

நாட்டு நிலவரம் தெரியாத, இவங்கட கதைகள் உப்புச் சப்பில்லாது.

உரம் இல்லாமல் பலர் விவசாயம் வேண்டாம்என்று இருக்கிறார்கள்.

முதலில் உரத்தை இறக்குமதி செய்து தாராளமாக கிடைக்க செய்யட்டும்.

பிறகு உந்த வெருடல்களை விடலாம்.

ம் இதுவும் ஒரு காரணம்தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, குமாரசாமி said:

கள்ளக்காணி பிடிக்கற சனத்துக்கு நல்ல சந்தர்ப்பம். 😂

இதெல்லாம் வேலைக்காகாது. இதுக்கு முதலும் இப்படி சொல்லி, விவசாயம் செய்ய வைத்தார்கள். அப்போதே, கனடா முதல், ஐரோப்பா, அவுஸ்திரேலியா வரையுள்ள பெரிசுகளை மடக்கி, பலர் காணிகளை பிடித்து விட்டார்கள்.

விவசாயம் செய்யாத காணிகளை பறிக்க இலங்கையில் சட்டம் இல்லை. ஆனால், பிரதேசபை உள்ளூர் ஆட்களை பயிர் இடப்படாத காணிகளில் விவசாயம் செய்து, பலன் பெற அனுமதி கொடுக்கும். உரிமையாளர் திடீரெனெ வந்தால், பிரதேச சபை, அவர்களுடன் பேசி, குத்தகை போன்று காசு பெற்றுக் கொள்ள உதவும். பிரதேச சபை (அதாவது உள்ளூர் அரசு) அனுமதியுடன் செய்வதால், நீதிமன்று போகவோ, பயிர்களை அழிக்கவோ முடியாது. பயிர் அறுவடை முடிந்ததும் காணிகளை மீண்டும் பெறலாம்.

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👆 சிறையில் உள்ள சிங்கள கைதிகளுக்கு விவசாயம் பழக்கி,
தமிழ்ப் பகுதிகளில்... பாவனையில் இல்லாத விவசாய காணிகளில் 
கொண்டு வந்து குடியேற்றப் போகிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

👆 சிறையில் உள்ள சிங்கள கைதிகளுக்கு விவசாயம் பழக்கி,
தமிழ்ப் பகுதிகளில்... பாவனையில் இல்லாத விவசாய காணிகளில் 
கொண்டு வந்து குடியேற்றப் போகிறார்கள் போலுள்ளது.

நமது ஆட்கள் அடுத்த பிளேன் பிடித்து வெளிய போக முனைந்தால், சும்மா இருக்கிற காணியை யாரும் அமத்த தான் நினைப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

👆 சிறையில் உள்ள சிங்கள கைதிகளுக்கு விவசாயம் பழக்கி,
தமிழ்ப் பகுதிகளில்... பாவனையில் இல்லாத விவசாய காணிகளில் 
கொண்டு வந்து குடியேற்றப் போகிறார்கள் போலுள்ளது.

கடற்படை, இராணுவம் ... யாழ் மாவட்டத்தில் மட்டும் இன்னும் பல இடங்களில் விவசாயம் செய்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, உடையார் said:

கடற்படை, இராணுவம் ... யாழ் மாவட்டத்தில் மட்டும் இன்னும் பல இடங்களில் விவசாயம் செய்கின்றார்கள்

அத்துடன்... இந்தக் கள்ளரும் வந்தால்.... இன்னும் தமிழ் மண்ணுக்கு சோதனை  அதிகரிக்கும். 😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

👆 சிறையில் உள்ள சிங்கள கைதிகளுக்கு விவசாயம் பழக்கி,
தமிழ்ப் பகுதிகளில்... பாவனையில் இல்லாத விவசாய காணிகளில் 
கொண்டு வந்து குடியேற்றப் போகிறார்கள் போலுள்ளது.

பதவி விலகும், விலக்கப்படும் படையினர்!

வடக்கிலுள்ள படையினர் வடக்கை விட்டு போக விரும்பார், அரசும் அவர்களை அங்கு இருந்து அனுப்ப விரும்பாது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.