Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுவிப்பு

By VISHNU

20 DEC, 2022 | 07:07 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மர் இம்ரான் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் இன்று (20) பூர்த்தி செய்த பின்னர் வெளியேறிச் சென்றுள்ளார்.

அதன்படி  கஞ்சிப்பானை இம்ரான் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொலை முயற்சி மற்றும் கொலைகள் குறித்த சந்தேகத்தில் தொடரப்பட்டிருந்த அவ்வழக்கில்  அவரை பிணையில் செல்ல நீதிமன்றம்  அனுமதித்தது.

அதன்படி இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கஞ்சிப்பானை இம்ரான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட  நிலையில்,  பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்திச் செய்தார்.

2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணைகளில் அவ்வழக்கில் விடுவிக்கப்பட்ட அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனைவிட,  வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் வலய சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான  வழக்கில் கொழும்பு பிரதான  நீதிவான் நீதிமன்றம் பிணையளித்துள்ளது.

குறித்த அவ்ழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்த நிலையில், சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தை மீளப் பெற்று தண்டனை சட்டக் கோவையின் கீழ் மட்டும் வழக்கை முன்கொண்டு செல்ல ஆலோசனையளித்திருந்தார்.

இதனையடுத்தே கஞ்சிப்பானை இம்ரான் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை ஏற்று கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க பிணையளித்துள்ளார்.

எனினும் அப்பிணை நிபந்தனைகள் இன்று பூர்த்தி செய்யப்பட்டன. அதன்படி, கஞ்சிப்பானை இம்ரான் அவ்வழக்கில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவ்வழக்கிலும் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளில் கஞ்சிப்பானை இம்ரான்  சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா மன்றில்  ஆஜரானார்.

முன்னதாக  கடந்த 2019 ஏபரல் 4 ஆம் திகதி   நாடு கடத்தப்ப்ட்ட நிலையில் சி.ஐ.டி. விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் கடந்த 2015 ஆம் ஆண்டு  மார்ச் 28 ஆம் திகதி  போலி கடவுச் சீட்டிலேயே டுபாய் சென்றுள்ளார்.

போலி கடவுச் சீட்டு தொடர்பில் சி.ஐ.டி. தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஏனைய கொலை, கொலை முயற்சிகள் தொடர்பில் அவர் சி.சி.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.

 2015 இல் டுபாய் சென்றுள்ள கஞ்சிப்பானை இம்ரான்,  2016 ஜனவரி 26 ஆம் திகதி அங்கு வதிவிட வீசாவைப் பெற்றுக்கொண்டுள்ளார்.  இவ்வாறான நிலையில் 27 சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் தற்போது அனைத்து வழக்குகளிலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/143681

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணைகளில் அவ்வழக்கில் விடுவிக்கப்பட்ட அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

பிணையை எதிர்க்காமலிருக்க எத்தனை லட்சம் கொடுக்கப்பட்டது?

அல்லது பயத்தினால் பொலிசார் பேசாமல் இருந்தார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

பிணையை எதிர்க்காமலிருக்க எத்தனை லட்சம் கொடுக்கப்பட்டது?

அல்லது பயத்தினால் பொலிசார் பேசாமல் இருந்தார்களா?

வெளில விட்டு போட்டும் தள்ளலாம் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

வெளில விட்டு போட்டும் தள்ளலாம் அண்ணை.

போட்டு தள்ளினால் துட்டு வராதே?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்

கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்

இலங்கையின் பாதாள உலகத் தலைவரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானை இம்ரான்) தமிழகத்திற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி “த ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபானை இம்ரான் இலங்கை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வாரத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொலைகள் மற்றும் திட்டமிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்படும் இம்ரான், 2019 இல் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

அத்ற்கமைய இராமநாதபுரம் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் தமிழக உளவுத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1318177

###################   ###################    ###############

@ஈழப்பிரியன்   ,  @ஏராளன் 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்

அந்த அன்பரை "கஞ்சிப்பானை" என அழைப்பதற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன். :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2022 at 21:46, ஈழப்பிரியன் said:

பிணையை எதிர்க்காமலிருக்க எத்தனை லட்சம் கொடுக்கப்பட்டது?

அல்லது பயத்தினால் பொலிசார் பேசாமல் இருந்தார்களா?

 

7 hours ago, தமிழ் சிறி said:

கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்

கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்

இலங்கையின் பாதாள உலகத் தலைவரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானை இம்ரான்) தமிழகத்திற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி “த ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபானை இம்ரான் இலங்கை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வாரத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொலைகள் மற்றும் திட்டமிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்படும் இம்ரான், 2019 இல் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

அத்ற்கமைய இராமநாதபுரம் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் தமிழக உளவுத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1318177

###################   ###################    ###############

@ஈழப்பிரியன்   ,  @ஏராளன் 😁

ஈழப்பிரியன் அண்ணை சொன்னது தான் சரி போல!👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு தப்பிச்சென்ற கஞ்சிப்பானை இம்ரான் தொடர்பில் அவரது சட்டத்தரணி வெளிப்படுத்தியது என்ன ? 

By DIGITAL DESK 2

01 JAN, 2023 | 07:59 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 

பிரபல பாதாள உலகத் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மர் இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில்,  இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக  இந்திய ஊடகங்கள், அந் நாட்டு பொலிஸ் தகவல்களை மையப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் கஞ்சிப்பானை இம்ரான் நாட்டிலிருந்து தப்பிச் சென்று  தற்போது இந்தியாவில் இருப்பதை 'வீரகேசரி ' சுயாதீனமாக உறுதி செய்தது.

பிணை நிபந்தனைகளை  கடந்த 2022 டிசம்பர் 20ஆம் திகதி பூர்த்தி செய்த பின்னர், சில நாட்களில் அவர் இவ்வாறு நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.  

கடந்த டிசம்பர் 25ஆம் திகதி கஞ்சிப்பானை இம்ரான்  தமிழ் நாடு ராமநாதபுரம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய உளவுப் பிரிவினர் தமிழ் நாட்டு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள நிலையில், அதனை மையப்படுத்தி குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

 இது தொடர்பில் தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

 எனினும் இம்ரான் இந்தியாவுக்கு சென்றுள்ளதை அவரது சட்டத்தரணி வீரகேசரியிடம் உறுதி செய்தார்.

'இம்ரானுக்கு எதிராக ஊடகங்கள் பல பொய்யான தகவல்கலை வெளியிடுகின்றன. அவருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பில் ஒரு வழக்குக் கூட இல்லை. கொலை, கொலை முயற்சி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் அவர் பிணையில் இருக்கின்றார்.

 அவர் இந்தியாவுக்கு சென்றமை தொடர்பில் எம்மால் எதுவும் செய்ய முடியாது. அது எனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் பட்டது. பிணையில் இருக்கும் அவர்  இந்தியாவுக்கு செல்வதை அரசே தடுத்திருக்க வேண்டும்.' என  கஞ்சிப்பானை இம்ரானின் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா  வீரகேசரிக்கு தெரிவித்தார்.

 கடந்த டிசம்பர் 20ஆம் திகதி  கஞ்சிப்பானை இம்ரான் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான்  ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொலை முயற்சி மற்றும் கொலைகள் குறித்த சந்தேகத்தில் தொடரப்பட்டிருந்த அந்த வழகிகில் அவரை பிணையில் செல்ல நீதிமன்றம்  அனுமதித்தது.

அதன்படி  டிசம்பர் 20ஆம் திகதி  சிறைச்சாலை அதிகாரிகளால் கஞ்சிப்பானை இம்ரான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட  நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்தார்.

2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட அவர் வெளிநாடுச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனைவிட,  வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் வலய சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கில் கொழும்பு பிரதான  நீதிவான் நீதிமன்ரம் பிணையளித்துள்ளது. 

குறித்த வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்த நிலையில், சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தை மீளப் பெற்று தண்டனை சட்டக் கோவையின் கீழ் மட்டும் வழக்கை முன் கொண்டு செல்ல ஆலோசனையளித்திருந்தார்.

இதனையடுத்தே கஞ்சிப்பானை இம்ரான் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை ஏற்று கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க பிணையளித்துள்ளார்.

எனினும் அப்பிணை நிபந்தனைகள்  டிசம்பர் 20ஆம் திகதி  பூர்த்தி செய்யப்பட்டன. அதன்படி, கஞ்சிபானை இம்ரான் அவ்வழக்கில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்ப்ட்டுள்ளார். அவ்வழக்கிலும் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளில் கஞ்சிபானை இம்ரான்  சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா மன்றில்  ஆஜரானார்.

இவ்வாறு வெளிநாட்டு பயணத் தடை இருக்கும் நிலையிலேயே அவர் இந்தியவுக்கு தப்பிச் சென்ருள்ளார்.  அவருக்கு நாட்டில் இருக்கும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் இந்தியாவுக்கு சென்றதாக கஞ்சிபானை இம்ரானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் கடந்த டிசம்பர் 25ஆம் திகதி, பிணை நிபந்தனை பிரகாரம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கஞ்சிபானை இம்ரான் கையெழுத்திட்டாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றுக்கு அறிவிக்கவும்,  தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னதாக  கடந்த 2019 ஏப்ரல் 4ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட நிலையில் சி.ஐ.டி. விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் கடந்த 2015ஆம் ஆண்டு  மார்ச் 28ஆம் திகதி  போலி கடவுச் சீட்டிலேயே டுபாய் சென்றுள்ளார்.

போலி கடவுச் சீட்டு தொடர்பில் சி.ஐ.டி. தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஏனைய கொலை, கொலை முயற்சிகள் தொடர்பில் அவர் சி.சி.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.

 2015இல் டுபாய் சென்றுள்ள கஞ்சிபானை இம்ரான்,  2016 ஜனவரி 26ஆம் திகதி அங்கு வதிவிட வீசாவைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

 

இவ்வாறான நிலையில், 27 சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் தற்போது அனைத்து வழக்குகளிலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/144716

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அந்த அன்பரை "கஞ்சிப்பானை" என அழைப்பதற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன். :cool:

உடான்ஸ்சாமிய கேட்டுச்சொல்லுவன், ஆனா வருட பிறப்பன்று திண்ணையில வந்து கேம கேட்ககூடாது😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அந்த அன்பரை "கஞ்சிப்பானை" என அழைப்பதற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன். :cool:

அவர் ஆரம்ப நாட்களில் சுண்ட கஞ்சி வியாபாரம் பாத்திருப்பார் என நினைக்குறன் தோழர்..

சுண்ட கஞ்சி

அரிசி வடித்த நீரை ஒரு கஞ்சி பானையில் போட்டு வாயினை பனை ஓலையால் மூடி கடற்கரை மணலில் புதைத்து வைப்பார்கள்

நாட்கள் கூட கூட போதை ஏகுறும்..👍

செய்திக்காக..

https://tamil.oneindia.com/news/2006/12/01/chennai.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏதோ திட்டம் போட்டே விடுவித்திருப்பார்களோ என் எண்ணத்தோன்றுகிறது. பிணையில் விடுதலை செய்யப்படுபவரை போலீசார் கண்காணிப்பது வழமை!

11 hours ago, ஏராளன் said:

50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்ப்ட்டுள்ளார்.

இதன் அர்த்தம் என்ன? இவர்கள்தான் அவர் தப்பித்து செல்லாமல் இருப்பதற்கும், தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் உறுதியளித்தனர். சட்டப்படி இவர்களை கைது செய்து கேள்வி கேட்க இடமுண்டு என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களுக்கு அழைப்பாணை!

கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களுக்கு அழைப்பாணை!

கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிப்பானை இம்ரானுக்காக அவரது சகோதரரும் வேறொருவரும் பிணையாளர்களாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், வெளிநாட்டுப் பயணத் தடை உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 50 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 20ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்டு 5 நாட்களின் பின்னர் கஞ்சிப்பானை இம்ரான் தமிழ்நாடு – இராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு பிரவேசித்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என கஞ்சிப்பானை இம்ரானுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், அவர் அவ்வாறு முன்னிலையாகாத நிலையில் அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கமைய, கஞ்சிப்பானை இம்ரானின் சகோதரரையும் மற்றைய பிணையாளரையும் எதிர்வரும் மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ள வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1318710

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சிபானி இம்ரான்: பிணையில் வந்த குற்றக்குழு தலைவன் வெளிநாடு தப்பியதாக இலங்கை போலீஸ் தகவல் - என்ன நடந்தது?

கஞ்சிபானி இம்ரான்
38 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச் சென்றதாக கூறப்படும் இலங்கையின் பிரபல நிழலுலக குற்றச்செயல்கள் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரானுக்கு பிணை வழங்க கையெழுத்திட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதவான் கேவிந்த பெரேரா, முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வரும் கஞ்சிபானியை கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி இலங்கை போலீஸ் கைது செய்திருந்தது.

அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கொழும்பு நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும், 50 லட்சம் ரூபா சரீர பிணையில் கஞ்சிபானி இம்ரானுக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பிணை விண்ணப்பத்தில், கஞ்சிபானி இம்ரானின் தாய், சகோதரர் உள்ளிட்ட மூவர் கையெழுத்திட்டிருந்தனர்.

 

நிபந்தனை ஜாமீன்

இலங்கை சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிபந்தனை அடிப்படையிலான இந்த பிணையின் அம்சமாக அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு - மாளிகாவத்தை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் கஞ்சிபானி இம்ரானுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வழியாக தமிழகத்திற்குள் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி நுழைந்துள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த தகவலை பகுதியளவு உறுதிப்படுத்தும் விதமாக, கஞ்சிபானி இம்ரான், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆஜராகவில்லை. இந்த தகவலை போலீஸார் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 4) தெரிவித்தனர்.

மேலும், கஞ்சிபானி இம்ரான், ரகசியமான முறையில் வெளிநாடு சென்று விட்டதாக போலீஸார் கூறினர்.

இதை கேட்ட நீதிபதி, கஞ்சிபானிக்கு பிணை வழங்க கையெழுத்திட்ட அவரது தாய், சகோதரன் உள்ளிட்ட மூவரை உடனடியாக ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, கஞ்சிபானி இம்ரானின் தாய், சகோதரன் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆஜராக வேண்டும் என்று நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

யார் இந்த கஞ்சிபானி இம்ரான்?

இலங்கை கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகம், கொலை உள்ளிட்ட முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபடும் நிழல் உலக குழுவின் தலைவராக கஞ்சிபானி இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் செயல்பட்டு வருகிறார்.

இலங்கையில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக இவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கஞ்சிபானி இம்ரான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

துபாயில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட பலர் சர்வதேச போலீஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட 6 பேர் அதே ஆண்டு, நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்களை இலங்கை போலீஸார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொழும்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பிணை வழங்கியது.

இவ்வாறான நிலையிலேயே, கஞ்சிபானி இம்ரான், இந்தியா நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்திய உளவுப்பிரிவு வட்டாரங்களில் விசாரித்தபோது, கஞ்சிபானி தமிழ்நாட்டுக்குள் வரவில்லை என்றும் அவர் நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கஞ்சிபானி விவகாரத்தில் அவர் இந்தியாவில் இருந்தால் அவரை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிகவில் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கும் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cw0rj6xx583o

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை சிறையில் இருப்பவர்களை வீட்டுக்காவலில் வைக்க ஆலோசனை செய்யப்பட்டது, அதை இவரில் பரீட்சித்துப்பாக்க எண்ணி விடுவித்திருப்பார்களோ? மீண்டும் சர்வதேச போலீசாரை நாடவும் உதவிக்கு. கையில பிடிச்சுக்கொடுத்தவரை பக்குவமாக கையாளத்தெரியவில்லை, வாய்ப்பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை. போலீசாருக்கும் கஞ்சா குறைஞ்சிருக்குமில்ல, விநியோகஸ்தரை அடைத்து வைத்திருந்தால் எப்படி கிடைக்கும்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.