Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சூழலியலாளார் எரிக்சோல்கைம்மை சந்தித்து,
தமிழ்மக்களின்  அரசியல் பற்றி கதைத்த சம்பந்தனின் பேய்க்காட்டு அரசியலை
அம்பலப் படுத்திய குணா கவியழகனுக்கு நன்றி. 🙏

வெள்ளைக்காரனை சந்திக்கிறது என்றால்,
வேட்டியை மடிச்சுக் கட்டிக்கொண்டு கிளம்பீடுவான்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசியில் குணாவுக்கும் வாசகரை ஈர்க்க "அதிரடி" என்ற சொல் தேவையாகி விட்டது!

நான் இப்போது தான் "அதிரடியாக" பாத்றூம் போய் விட்டு வந்தேன்!

இன்று காலையில் நான் "அதிரடியாக" துயிலெழுந்தேன்!

சாவடிக்கிறான்களே!😅

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அய்யகோ நான் என்ன செய்வேன் 
இப்படி "அதிரடியாக" கூத்தமைப்பை வச்சு செய்கிறார்களே...
உங்களெல்லாருக்கும் கூத்தாடிகள்  அவ்வளவு காமெடி பீஸாக போயிட்டானுகள் என்ன ...
இளகிய இரும்பை கண்டால் என்னத்தையோ தூக்கி தூக்கி அடிக்கிறது போல அடிக்கிறீர்கள்.

பொறுங்கோ இந்த பொங்கல் முடியட்டும் எல்லாவற்றையும் லிஸ்டில் போட்டு டீல் பண்ணுவோம் அப்போ தெரியும் நாங்க யாரென்று. 
ஆமா ...சட்டி கருகிற வாசனை கொஞ்சம் தூக்கலாகவே வருது யாருடையதோ தெரியாது     

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தலைப்புத்தான் அதிரடியா இருக்கே தவிர.. சந்திப்பு... வழமை போல்.. உப்புச் சப்பே இல்லை. 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எ.சூ வுக்கு Hero of environment, Champion of the Earth, Europian of the year 2010 என்றெல்லாம் பட்டங்களை வழங்கி கெளரவ டாக்டர் பட்டமும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஆள் ஒரு கில்லாடி இராஜதந்திரி என்றால் மிகப் பொருந்தும் . மத்தியஸ்த்தம், போர்நிறுத்தம், சமாதான பேச்சுவார்த்தை என்று சொல்லிக்கொண்டு இறங்கி மூன்றாம் தரப்புக்காக மறைமுக நிகழ்ச்சி நிரலில் புகுந்து விளையாடியபின் இறுதியில் அறுத்துவிடுவதில் கெட்டிக்காரன். இப்போது இவர் ஐ.நா. பணியில் இல்லை. 2018 இல் தனக்கெதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு சமர்ப்பிக்கப்பட இருப்பதை அறிந்து நோர்வே அரசின்வேண்டுகோளுக்கு இணங்கி தானாகவே பதவியை துறந்தார். குணாவின் கானொளியில்  இப்போது எ.சூ ஐ.நாவின் சூழல் பிரிவின் இயக்குனர் என்று சொல்லிருப்பது பிழை. அவர் தற்போது இலங்கை ஜனாதிபதியின் சுற்று  சூழல் ஆலோசகர் (அவரின் கூற்றுப்படி சம்பளம் எதுவும் பெறாமல் !!!) என்று சொல்லி ஒரு கண்துடைப்புக்கு இருந்துகொண்டு ரணிலின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக செயற்படுவதாகவும் தகவல் உண்டு.

Edited by vanangaamudi
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/12/2022 at 17:23, Justin said:

கடைசியில் குணாவுக்கும் வாசகரை ஈர்க்க "அதிரடி" என்ற சொல் தேவையாகி விட்டது!

நான் இப்போது தான் "அதிரடியாக" பாத்றூம் போய் விட்டு வந்தேன்!

இன்று காலையில் நான் "அதிரடியாக" துயிலெழுந்தேன்!

சாவடிக்கிறான்களே!😅

உங்களால் முடியாத விடயத்தை அவர் செய்கிறார் யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும் .

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

உங்களால் முடியாத விடயத்தை அவர் செய்கிறார் யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும் .

குற்றுவதை யார் வேண்டாமென்பது? 😏ஆமை வேகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு அதிரடித் தலைப்பெதற்கு என்பது தான் கேள்வி!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.