Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு, மூவர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு, மூவர் மரணம்

23 Dec 2022 20:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Dec 2022 21:07
 
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெள்ளிக்கிழமையன்று (23 டிசம்பர்) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் மாண்டனர்.

மேலும் சிலர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் பாரிசின் மத்திய வட்டாரத்தின் ஸ்ட்ராஸ்பொர்க்-செயின்ட டெனிஸ் பகுதியில் நேர்ந்தது.

சந்தேக நபரான 69 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் சந்தேக நபரைக் கைதுசெய்தபோது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயுதத்தையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். 

https://www.tamilmurasu.com.sg/world/story20221223-121189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தலைநகரில் குர்திஸ் மக்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் - சீற்றமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டம்

By Rajeeban

24 Dec, 2022 | 12:24 PM
image

பாரிஸ் தலைநகரில் குர்திஸ்நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

குர்திஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் இனரீதியிலானது என பிரான்ஸ் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளன.

பகுதியில் உள்ள அகமட் காயா நிலையத்தில் 60 வயது நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வீதியில் உள்ள சிகையலங்கார நிலையம் மற்றும் உணவுவிடுதி ஆகியவற்றை இலக்குவைத்தும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது மூவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

5ql9LrhL.jpg

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குர்திஸ் மக்கள் என பிரான்சின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அரசாங்கம் எங்களை பாதுகாக்க தவறிவிட்டது  இது பயங்கரவாத தாக்குதல் என குர்திஸ் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் அந்த பகுதியில் கூடிய நூற்றுக்கணக்கான குர்திஸ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை எரிந்து தீ மூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகத்தில் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/144000

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் உயிரிழப்பு- மூவர் காயம்!

பரிஸில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் உயிரிழப்பு- மூவர் காயம்!

பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் குர்திஷ் கலாச்சார மையத்தை குறிவைத்து உள்ளூர் சமூகத்தை சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

69 வயதான ஒரு சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலை அடுத்து சம்பவ இடத்தில் கூடியிருந்த பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

மக்கள் நடுத்தெருவில் தீ மூட்டுவதையும், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதையும், கலவரத்தில் இருந்த அதிகாரிகள் கண்ணீர்ப்புகை வீசி பதிலடி கொடுத்ததையும் காணொளி காட்சிகள் காட்டுகின்றன.

காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான உறுதியான நோக்கம் எதுவும் இல்லை, ஆனால் பரிஸ் வழக்கறிஞர் லாரே பெக்குவா, சந்தேக நபர் முன்பு இனவெறி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறினார்.

அந்த சம்பவம் – அவர் பாரிஸில் குடியேறியவர்கள் முகாமில் கூடாரங்களை வாளால் தாக்கியது – 8 டிசம்பர் 2021 அன்று பெர்சியில் நடந்தது. அவர் ஏன் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இறுதியில் எதிர்ப்பின்றி சந்தேக நபரை தடுத்து வைத்த பொலிசார் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞர்கள் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட அஹ்மத்-காயா குர்திஷ் மையத்தை நடத்தும் பிரான்சில் உள்ள குர்திஷ் ஜனநாயக கவுன்சில் தாக்குதலைக் கண்டித்தது. பரிஸில் வாழும் குர்துக்களைப் பாதுகாக்க பிரான்ஸ் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை தவறிவிட்டனர் என அறிக்கையொன்றில் தெரிவித்தது.

தேசியவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின்இணை நிறுவனர் உட்பட, மூன்று குர்திஷ் பெண் ஆர்வலர்கள், கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரி பரிஸில் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

https://athavannews.com/2022/1317081

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக பயங்கரவாதியாக துருக்கி மாறிக்கொண்டு வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

உலக பயங்கரவாதியாக துருக்கி மாறிக்கொண்டு வருகின்றது. 

இது வேற அண்ணா😭

எமக்கான நிலம்  மற்றும் நாட்டை நினைவு படுத்துகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உலக பயங்கரவாதியாக துருக்கி மாறிக்கொண்டு வருகின்றது. 

தாக்குதலை நடத்தியவர் நீங்கள் ஆதரிக்கும் AfD போன்ற கட்சிகளின் நிலைப்பாட்டில் உள்ள பிரென்ஞ் வெள்ளை தோலர். முன்பும் குடியேறிகள் மீது தாக்கி சிறை போய் வந்து சில நாளில் இதை செய்துள்ளார்.

6 hours ago, விசுகு said:

எமக்கான நிலம்  மற்றும் நாட்டை நினைவு படுத்துகிறார்கள்

அப்படி ஒன்று இப்போதைக்கு இல்லை.

ஆனால் இருக்கும் நாடுகளை நாம் இன வாத சகதியில் விழாமல் தடுத்து எம்மை நாமே தற்காத்து கொள்ளலாம்.

ஆனால் நாம் இப்படியான கட்சிகளையும், கொள்கைகளையும், பிரெக்சிற் போன்றவற்றையும் ஆதரிக்கும் “ ஆசிய குருவிகள்” ஆக அல்லவா இருக்க தலைப்படுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தாக்குதலை நடத்தியவர் நீங்கள் ஆதரிக்கும் AfD போன்ற கட்சிகளின் நிலைப்பாட்டில் உள்ள பிரென்ஞ் வெள்ளை தோலர். முன்பும் குடியேறிகள் மீது தாக்கி சிறை போய் வந்து சில நாளில் இதை செய்துள்ளார்.

அப்படி ஒன்று இப்போதைக்கு இல்லை.

ஆனால் இருக்கும் நாடுகளை நாம் இன வாத சகதியில் விழாமல் தடுத்து எம்மை நாமே தற்காத்து கொள்ளலாம்.

ஆனால் நாம் இப்படியான கட்சிகளையும், கொள்கைகளையும், பிரெக்சிற் போன்றவற்றையும் ஆதரிக்கும் “ ஆசிய குருவிகள்” ஆக அல்லவா இருக்க தலைப்படுகிறோம்.

அதே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

தாக்குதலை நடத்தியவர் நீங்கள் ஆதரிக்கும் AfD போன்ற கட்சிகளின் நிலைப்பாட்டில் உள்ள பிரென்ஞ் வெள்ளை தோலர். முன்பும் குடியேறிகள் மீது தாக்கி சிறை போய் வந்து சில நாளில் இதை செய்துள்ளார்.

தாக்குதல் நடத்தியது சரிதான் என நிரூபிக்கின்றார்கள்.

Randalierer stürzen ein Auto um

Die Ausschreitungen wurden im Laufe des Nachmittags immer heftiger, mehrere Autos wurden zerstört und zum Teil in Brand gesetzt

In der französischen Hauptstadt brennen Barrikaden am Rande einer Kundgebung wegen des tödlichen Angriffs auf Kurden am Freitag

11 hours ago, விசுகு said:

இது வேற அண்ணா😭

எமக்கான நிலம்  மற்றும் நாட்டை நினைவு படுத்துகிறார்கள்

பிரான்ஸ்சில் வாழும் எத்தனை வெளிநாட்டவர்கள் பிரான்ஸ் சட்டதிட்டங்களை,பிரான்ஸ் மக்களை மதிக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தாக்குதல் நடத்தியது சரிதான் என நிரூபிக்கின்றார்கள்.

இந்த நிகழ்வுகள் எதிர் விளைவை (counter productive) தரக்கூடியன. தேவையற்ற வன்முறை.

ஆனால் முன்னர் குடியேறிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஒருவரை பெயிலில் விட்டு, அவர் கோல்ட் துப்பாக்கி, பெருமளவு ரவைகள் சேர்த்து, குடியேறிகள் பகுதிக்கு வந்து மூவரை சுடும் வரை வாளாவிருந்த பிரெஞ் போலீஸ் மீதான மக்களின் கோபம் நியாமானதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

கோபத்தை அமைதியான முறையில் காட்டியிருக்கலாம். அழிவுகள் மூலம் காட்ட ஆரம்பித்தால் சொந்த நாட்டுக்காரரும் அதை நாடுவதில் தவறில்லையே?

சாதாரண பிரான்ஸ் மக்களையும் இப்படியான விடயங்கள் திசைதிருப்பக்கூட்டும். அவர்கள் பக்கமும் நின்று நாங்கள் யோசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கோபத்தை அமைதியான முறையில் காட்டியிருக்கலாம். அழிவுகள் மூலம் காட்ட ஆரம்பித்தால் சொந்த நாட்டுக்காரரும் அதை நாடுவதில் தவறில்லையே?

நிச்சயமாக. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானில் ஒரு பழமொழி உள்ளது, "மற்றவர்களுக்கு ஒரு குழி தோண்டுபவர் எப்போதும் குழியின் அடியில் இருப்பார்.

ஈரானில் நடந்த கலவரங்களுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது. இன்று பிரான்ஸ்சின் தெருக்கள் இப்படித்தான் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈரானில் ஒரு பழமொழி உள்ளது, "மற்றவர்களுக்கு ஒரு குழி தோண்டுபவர் எப்போதும் குழியின் அடியில் இருப்பார்.

ஈரானில் நடந்த கலவரங்களுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது. இன்று பிரான்ஸ்சின் தெருக்கள் இப்படித்தான் இருக்கின்றன.

பிரான்சை விடுங்கள்.

ஈரானில் நீங்கள் யாருக்கு ஆதரவு. 

முல்லாக்களுக்கா? இல்லை மாற்றம் கேட்டு போராடுபவர்களுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிபிசி செய்தியின் படி, "ஐரோப்பியரல்லாத ஐரோப்பிய வாசிகள் மீது அசாதாரணமான  துவேசம் (pathological hatred)" கொண்டிருந்ததாக சந்தேக நபரே சொல்லியிருக்கிறாராம். எனவே, இந்த மூன்று பலிகள் யாராகவும் இருந்திருக்கக் கூடும், அதே ரெயில் லைனில் சில ஸ்ரேஷன்கள் தள்ளிப் போயிருந்தால் லா சப்பலாக, ஈழத்தமிழராகவும் இருந்திருக்கக் கூடும்! துவேசக் கொலைஞர்களின் மனப் பிறழ்வுக்கும் குடியேறிகள் தான் காரணமாக இருக்கக் கூடும் என்று யோசிப்போர் இதையும் மனதில் வைக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.