Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று சந்திப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று சந்திப்பு !

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று சனிக்கிழமை இரவு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெற்றால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடியாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்கம் தேர்தலை பிற்போடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அடுத்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1317228

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் விசேட சந்திப்பு

By Nanthini

25 Dec, 2022 | 12:28 PM
image

மிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர். 

நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (டிச. 24) மாலை ஒன்றுகூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் 2 மணிநேரம் வரை கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல், ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

VideoCapture_20221224-203244.jpg

VideoCapture_20221224-202447.jpg

VideoCapture_20221224-202455.jpg

https://www.virakesari.lk/article/144057

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மற்றைய  தமிழ்  கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு,
என்றுமே... சம்பந்தனோ, சுமந்திரனோ சென்றதில்லை.
ஏனென்றால்... தாங்கள் பெரிசு என்ற தலைக்கனமும், 
இவர்கள் யார் எம்மை கூப்பிட.. என்ற, இறுமாப்பும் பல காலமாகவே உண்டு.  

முன்பு... மனோ கணேசன், அமைச்சராக இருந்து...
கல்முனை நகரசபை பிரச்சினை  சம்பந்தமாக ஆலோசிக்க முற்பட்ட போதும், 
இவர்கள் போகாமல் நொண்டிச் சாட்டு சொல்லிக் கொண்டிருந்தவர்கள்.

ஆனால்.... சிங்களத் தலைமைகள்,  கூப்பிடும் போது,
முதல் ஆட்களாக... முன் கதவாலும், பின் கதவாலும் போய் சந்திப்பார்கள்.   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மற்றைய  தமிழ்  கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு,
என்றுமே... சம்பந்தனோ, சுமந்திரனோ சென்றதில்லை.
ஏனென்றால்... தாங்கள் பெரிசு என்ற தலைக்கனமும், 
இவர்கள் யார் எம்மை கூப்பிட.. என்ற, இறுமாப்பும் பல காலமாகவே உண்டு.  

முன்பு... மனோ கணேசன், அமைச்சராக இருந்து...
கல்முனை நகரசபை பிரச்சினை  சம்பந்தமாக ஆலோசிக்க முற்பட்ட போதும், 
இவர்கள் போகாமல் நொண்டிச் சாட்டு சொல்லிக் கொண்டிருந்தவர்கள்.

ஆனால்.... சிங்களத் தலைமைகள்,  கூப்பிடும் போது,
முதல் ஆட்களாக... முன் கதவாலும், பின் கதவாலும் போய் சந்திப்பார்கள்.   

இவர்கள் இருவரையும் போல இன்னும் இருவர் தான் கஜன் & கஜன்.

இந்த நால்வரையும் ஓரம் கட்டி, ஏனைய தலைவர்கள், கட்சிகள் எல்லாம் சீவி யின் கீழ் ஒன்றிணைந்தால் - இவர்களை ஆக கூடியது 2/3 எம்பி சீட்டோடு முடக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இவர்கள் இருவரையும் போல இன்னும் இருவர் தான் கஜன் & கஜன்.

இந்த நால்வரையும் ஓரம் கட்டி, ஏனைய தலைவர்கள், கட்சிகள் எல்லாம் சீவி யின் கீழ் ஒன்றிணைந்தால் - இவர்களை ஆக கூடியது 2/3 எம்பி சீட்டோடு முடக்கலாம்.

சம்பந்தன், சுமந்திரனை.... ஓரம் கட்டி வைக்க, 
விக்னேஸ்வரன்,  தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்
சம்மதிப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
ஆனால்... மாவையைத்தான், தமிழரசு கட்சி  தலைவர் என்ற முறையில் சரிக்கட்ட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனித்தனியாக செல்லவே முடியாது - செல்வம், சித்தார்த்தனிடம் மாவை தெரிவிப்பு

By NANTHINI

25 DEC, 2022 | 06:20 PM
image

(ஆர்.ராம்)

மிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பயணித்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ற வகையில் தனித்தனியாக செல்ல முடியாது என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனிடத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருக்கும், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (டிச. 25) முற்பகல் 11 மணியளவில் மாவிட்டபுரத்தில் உள்ள மாவை.சோ.சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் முதலில் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்கள். 

அதனை தொடர்ந்து, வவுனியாவில் இறுதியாக நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தமிழரசு கட்சி தனியாக முகங்கொடுப்பது பற்றி வெளிப்படுத்திய பிரதிபலிப்புக்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

அச்சமயத்தில், தமிழரசு கட்சியானது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தனித்து முகங்கொடுப்பதாக இருந்தால் தாமதமின்றி அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், அதன் சாதக, பாதக நிலைமைகள் தொடர்பிலும் சித்தார்த்தன் மற்றும் செல்வம் ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை.சோ.சேனாதிராஜா, 

புளொட், ரெலோ தலைவர்கள் என்னை நேரில் வந்து சந்தித்திருந்தார்கள். அதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கான சாதக நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.

இதன்போது தமிழரசு கட்சியின் சார்பில் தனியாக போட்டியிடுவது பற்றி வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராய்ந்திருந்தோம்.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை  வென்றெடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சியாகும். தற்போதைய நிலையில், கூட்டுச்செயற்பாடு மற்றும் ஒற்றுமையான பயணம் என்பவற்றை தமிழரசு கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றது.

அவ்விதமானதொரு சூழலில் தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக ஒன்றுபட்ட பயணமே அவசியமாகும். அந்த வகையில், ஒற்றுமையான தேர்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் முகங்கொடுப்பது பற்றியே தீவிரமான கரிசனையை கட்சி கொண்டுள்ளது.

அந்த வகையில் கட்சியானது தனித்து செயற்படுவதையோ, தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/144097

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன், சுமந்திரனை.... ஓரம் கட்டி வைக்க, 
விக்னேஸ்வரன்,  தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்
சம்மதிப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
ஆனால்... மாவையைத்தான், தமிழரசு கட்சி  தலைவர் என்ற முறையில் சரிக்கட்ட வேணும்.

மாவை, சும்மை நம்பி போனமுறை எம் பி சீட்டை இழந்ததுதான் மிச்சம். அதை தொடர்ந்து கட்சியிலும் ஓரம் கட்ட பார்த்தார்கள் - சுதாரித்து கொண்டார். அடுத்த முறையும் எம்பி ஆக வில்லை என்றால், அவரினதும் மகனினதும் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான்.

தமிழரசு கட்சியை சம்+சும் பிடியில் இருந்து மீட்பது தமிழர்களை விட மாவைக்கு அத்தியாவசியமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மாவை, சும்மை நம்பி போனமுறை எம் பி சீட்டை இழந்ததுதான் மிச்சம். அதை தொடர்ந்து கட்சியிலும் ஓரம் கட்ட பார்த்தார்கள் - சுதாரித்து கொண்டார். அடுத்த முறையும் எம்பி ஆக வில்லை என்றால், அவரினதும் மகனினதும் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான்.

தமிழரசு கட்சியை சம்+சும் பிடியில் இருந்து மீட்பது தமிழர்களை விட மாவைக்கு அத்தியாவசியமானது.

மாவையின் மகன்.... தமிழரசு கட்சியில் இருந்து இரண்டு, 
மூன்று வருடங்களுக்கு முன்பே விலத்தி  விட்டார். 
அந்த செய்தி இங்கு இணைக்கப் பட்டிருந்தது.

பி.கு:::: அவர் மீண்டும், அப்பாவுடன் சேர மாட்டார்  என்று நான் உத்தரவாதம் தரமுடியாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

மாவையின் மகன்.... தமிழரசு கட்சியில் இருந்து இரண்டு, 
மூன்று வருடங்களுக்கு முன்பே விலத்தி  விட்டார். 
அந்த செய்தி இங்கு இணைக்கப் பட்டிருந்தது.

பி.கு:::: அவர் மீண்டும், அப்பாவுடன் சேர மாட்டார்  என்று நான் உத்தரவாதம் தரமுடியாது. 😂

😀 பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ😀

  • கருத்துக்கள உறவுகள்

சம்சும் கோஸ்டி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓத்துழைத்தார் மாவை. கடைசியில் சுமத்திரன் சிறிதரனுக்கு தலைமைப்பதவி தருவதாகக் கூறி அவரைச் சேர்த்துக் கொண்டு மாவைக்கு ஆப்படித்தார். அது மட்டுமல்லாது தேசியப்பட்டியல் பதவியையும்  மாவைக்குத் தெரியாமல் அம்பாறைத்தொகுதிக்கு கொடுத்து  மாவையை ஓரங்கட்டினார்கள். கடைசியில் சுமத்தரன் சாணக்கியனோடு சேர்ந்து சிறிதரனுக்கு ஆப்படித்தார். சிறிதரன் தமிழரசுகட்சியின் தலைமைப்பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தொடர்ந்து எம்பியாக இருக்க வேண்டும் என்று சுமத்தரனைக் கைகழுவி மாவையோடு நல்லிணக்கம் காட்டுகிறார். சம்பந்தன்>சுமத்தரனைச் சமாளிப்பதிலும் பார்க்க மாவையைச் சமாளிப்பது சுலபம் என்று வச்வமும்> சித்ததார்த்தனும்  மாவையோடு நெருக்கமானார்கள். விக்கியும் மாவையோடு சசர்வதில் பெரிய பிர்சினை இல்லை என்பதை உணர்கிறார்.சுமத்திரன் இப்போது தனித்து நிற்கிறார். சம்பந்தருக்குப் பிறகு அவருக்கு அரசியலில் பெரிய முன்னேற்றம் வராது. அதற்கு அவருடைய தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் மற்றவர்களை மதிக்காத தன்மையும்தான் காரணம். இதே போல்தான் மணிவண்ணனையும் கொம்பு சீவிவிட்டு முன்னணியில் இருந்து பிரித்து விட்டு இப்போது மணிவண்ணனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விட்டது.அநேகமாக  மணி மாவையோடு இணைவதற்கான சாத்தியம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

மாவை (முடிந்தால் தமிழரசு அல்லது அதில் ஒரு பெரும் பகுதி) + சீவி+ உதிரிகள் - 2கஜே - சம்சும்.

இது காலத்தின் தேவை

  • கருத்துக்கள உறவுகள்

மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவதும் விக்கியை நம்புவதும் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மாவை, சும்மை நம்பி போனமுறை எம் பி சீட்டை இழந்ததுதான் மிச்சம். அதை தொடர்ந்து கட்சியிலும் ஓரம் கட்ட பார்த்தார்கள் - சுதாரித்து கொண்டார். அடுத்த முறையும் எம்பி ஆக வில்லை என்றால், அவரினதும் மகனினதும் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான்.

தமிழரசு கட்சியை சம்+சும் பிடியில் இருந்து மீட்பது தமிழர்களை விட மாவைக்கு அத்தியாவசியமானது.

மாவையின் பழைய தோசைமா மிக்ஸ் தாங்கவே இயலாதப்பா. இதற்கு ஏதாவது வழி உண்டா??😄

4 hours ago, புலவர் said:

சம்சும் கோஸ்டி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓத்துழைத்தார் மாவை. கடைசியில் சுமத்திரன் சிறிதரனுக்கு தலைமைப்பதவி தருவதாகக் கூறி அவரைச் சேர்த்துக் கொண்டு மாவைக்கு ஆப்படித்தார். அது மட்டுமல்லாது தேசியப்பட்டியல் பதவியையும்  மாவைக்குத் தெரியாமல் அம்பாறைத்தொகுதிக்கு கொடுத்து  மாவையை ஓரங்கட்டினார்கள். கடைசியில் சுமத்தரன் சாணக்கியனோடு சேர்ந்து சிறிதரனுக்கு ஆப்படித்தார். சிறிதரன் தமிழரசுகட்சியின் தலைமைப்பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தொடர்ந்து எம்பியாக இருக்க வேண்டும் என்று சுமத்தரனைக் கைகழுவி மாவையோடு நல்லிணக்கம் காட்டுகிறார். சம்பந்தன்>சுமத்தரனைச் சமாளிப்பதிலும் பார்க்க மாவையைச் சமாளிப்பது சுலபம் என்று வச்வமும்> சித்ததார்த்தனும்  மாவையோடு நெருக்கமானார்கள். விக்கியும் மாவையோடு சசர்வதில் பெரிய பிர்சினை இல்லை என்பதை உணர்கிறார்.சுமத்திரன் இப்போது தனித்து நிற்கிறார். சம்பந்தருக்குப் பிறகு அவருக்கு அரசியலில் பெரிய முன்னேற்றம் வராது. அதற்கு அவருடைய தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் மற்றவர்களை மதிக்காத தன்மையும்தான் காரணம். இதே போல்தான் மணிவண்ணனையும் கொம்பு சீவிவிட்டு முன்னணியில் இருந்து பிரித்து விட்டு இப்போது மணிவண்ணனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விட்டது.அநேகமாக  மணி மாவையோடு இணைவதற்கான சாத்தியம் இருக்கிறது.

நீங்கள் வேறை புலவர். இப்போ சாணக்கியனோடு கூட்டு தெரியாதோ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இந்தக்காட்சியும் மாறும். ஆனா தங்களைத்தாங்கள் அறியாமல்,  சொந்தபுத்தியில்லாமல் பதவிக்காக  இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடுபவர்களை நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் சொல்வோர் சொல்கேட்டு அலைபாய்ந்து கொண்டேயிருப்பார்கள். சுமந்திரன் ஒரு குழப்பி, தன் சுயநலத்திற்காக பொய் கூறி, பதவியாசை காட்டி எல்லோரையும் குழப்பிக்கொண்டிருப்பார். அது அவரின் இயல்பு. தான் மட்டுமே திறமையுள்ள, உத்தமன் என்கிற நினைப்பு அவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மாவையின் பழைய தோசைமா மிக்ஸ் தாங்கவே இயலாதப்பா. இதற்கு ஏதாவது வழி உண்டா??😄

🤣 இருப்பது எல்லாமுமே புளிச்ச மாவுதானே. இப்போதைக்கு இதை சகித்துத்தான் ஆக வேண்டும். சயனைடுகளை ஓரம் கட்ட.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

🤣 இருப்பது எல்லாமுமே புளிச்ச மாவுதானே. இப்போதைக்கு இதை சகித்துத்தான் ஆக வேண்டும். சயனைடுகளை ஓரம் கட்ட.

ரைட்டு.🙂  சயனைட்டுகள் பிடிச்சிருக்கு.

1 hour ago, satan said:

இந்தக்காட்சியும் மாறும். ஆனா தங்களைத்தாங்கள் அறியாமல்,  சொந்தபுத்தியில்லாமல் பதவிக்காக  இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடுபவர்களை நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் சொல்வோர் சொல்கேட்டு அலைபாய்ந்து கொண்டேயிருப்பார்கள். சுமந்திரன் ஒரு குழப்பி, தன் சுயநலத்திற்காக பொய் கூறி, பதவியாசை காட்டி எல்லோரையும் குழப்பிக்கொண்டிருப்பார். அது அவரின் இயல்பு. தான் மட்டுமே திறமையுள்ள, உத்தமன் என்கிற நினைப்பு அவருக்கு.

இவர்களை தெரிந்த மக்களை என்ன சொல்வது சாத்தான்.?

யாரை தெரிய வேண்டும் என சிங்களம் நினைக்கிறார்களோ அவர்களையே எமது மக்கள் தெரிக்கிறார்களே.!!!!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

யாரை தெரிய வேண்டும் என சிங்களம் நினைக்கிறார்களோ அவர்களையே எமது மக்கள் தெரிக்கிறார்களே.!!!!

அந்தளவுக்கு மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள் சிங்களத்தின் முகவர்கள் . ஒரு சரியான தலைவனை இனங்காணும் வரைக்கும் அவர்களுக்கும் வேறு தெரிவில்லை, அப்படி ஒருவர் வந்தாலும் அவரை மக்கள் தெரிவு செய்யுமளவுக்கு விடவும் மாடார்கள். தங்களது பேச்சாற்றல், மொழியாற்றல், திட்டம் போட்டு, சூழ்ச்சி செய்து பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் முடக்குவது, மற்றவர் அவரை பின்தொடர்வதை தடுத்து தம்மை முன்னிலைப்படுத்திவிடுவார்கள். மக்களும் கவற்சியையே விரும்புகிறார்கள். ஆணவம் ஆரவாரம் செய்து தன்னை முதன்மைப்படுத்துகிறது. காலங்கடந்தே தாம் ஏமாற்றப்படுவதை அப்பாவிகள் உணர்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

ஆம். நல்லதோர் வீணையை நலம் கெட புழுதியில் எறிந்து விட்டோம்.

இப்போ குத்துகிறது ,குடைகிறது என மன சஞ்சலம் அடைகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.