Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம்

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்..

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1317382

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, தமிழ் சிறி said:

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை

அதை இந்த மூன்றாந்தரப்பு மூஞ்சூறு சொல்லக்கூடாது. காலநிலை ஆலோசகருக்கு ஏன் இந்தவேலை? யாரும் தங்களுக்குரிய வேலையை செய்கிறானுகளில்லை. இதுதான் சம்பந்தர்,  சுமந்திரனோடு ஆலோசிச்சவரா? இதில சுமந்திரன் வேறு மூடுமந்திரம் பேசுறார். இருக்கிறவர்களையும் பாடையில கட்டப்போறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

அதை இந்த மூன்றாந்தரப்பு மூஞ்சூறு சொல்லக்கூடாது. காலநிலை ஆலோசகருக்கு ஏன் இந்தவேலை? யாரும் தங்களுக்குரிய வேலையை செய்கிறானுகளில்லை. இதுதான் சம்பந்தர்,  சுமந்திரனோடு ஆலோசிச்சவரா? இதில சுமந்திரன் வேறு மூடுமந்திரம் பேசுறார். இருக்கிறவர்களையும் பாடையில கட்டப்போறார்.  


இந்த நரிக்கினுடைய வருகை ஆபத்தானது என்பதை யாழிலேகூடப் பல உறவுகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், ஏனிந்தத் தமிழ் அரசியல் வியாதிகளுக்குப் புரியாமலிருக்கிறது.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாம் தரப்பே இல்லாதபோது மூன்றாத்தரப்பு  எப்படி  வரும்??😭

அந்தாள் சொல்வது  சரி  தானே???

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nochchi said:

ஏனிந்தத் தமிழ் அரசியல் வியாதிகளுக்குப் புரியாமலிருக்கிறது.

அவர்களுக்கு புரியாமலில்லை அவர்களும் சேர்ந்த கேம் விளையாடுகிறார்கள். ஒருநாளும் இல்லாதவாறு மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கமாட்டோம் என்று சம்பந்தர் அறிக்கை விடும்போதே தெரியும்,  மக்களை கடைசியாய் மீண்டு ஏழாத்தவாறு கவிழ்க்கப்போறார் என்று. அங்கை பாக்கேல்லையே சுமந்திரன், எல்லோரும் வாங்கோ சேந்துபோய் பேசுவோம் என்று கூப்பிட்டிட்டு, தான் மட்டும் தனிய போயிருந்து கதைக்குது. அது ஒருநாளும் ஒரு கோப்புக்குள்ள வராது. இவருக்கு என்ன அவசரமெண்டு தனியாப்போனவர்? வாங்குகிறது குறைஞ்சு போயிடும் சேந்து போனால் என்றோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் பத்திரிகைகள் எச்சரிக்கும் தொனியில் ஆசிரியர் தலையங்கம் பிரசுரிக்க  முடியாதா?

சிங்கள, தனக்கு வந்து இருந்தால், இப்போதைய  நாய் செயற்பாட்டை மையம் வைத்து கேலிச்சித்திரத்துக்கு மேல் கேலிச்சித்திரம் கீறித்  தள்ளி இருக்கும்.

ஆசிரியர் தலையங்கமும் எழுதி இருக்கும். 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்தி ஒருவர் இருந்தார் களத்தில், பொருத்தமான கேலிச்சித்திரம் வரைபவர் பெயரை மறந்து விட்டேன். அவர் ஏன் இப்போது வருவதில்லை? பாஞ்சும் வந்தால் நல்லது. இவர்கள் எல்லாம் எங்கே போய் மறைந்திருக்கிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kadancha said:

தமிழ் பத்திரிகைகள் எச்சரிக்கும் தொனியில் ஆசிரியர் தலையங்கம் பிரசுரிக்க  முடியாதா?

சிங்கள, தனக்கு வந்து இருந்தால், இப்போதைய  நாய் செயற்பாட்டை மையம் வைத்து கேலிச்சித்திரத்துக்கு மேல் கேலிச்சித்திரம் கீறித்  தள்ளி இருக்கும்.

ஆசிரியர் தலையங்கமும் எழுதி இருக்கும். 
 

எல்லா பத்திரிகையிம் எதோ ஒரு அரசியல்வாதியின் கையில். யார் எழுதுவார் தலையங்கம்.

யாழில் நாம் எழுதுவது மட்டுமே ஓரளவு நடுநிலையானது.

 

நேரம் கிடைக்கும் போது இதில் உங்கள் கருத்தையும் பகிரவும் 🙏🏾

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kadancha said:

தமிழ் பத்திரிகைகள் எச்சரிக்கும் தொனியில் ஆசிரியர் தலையங்கம் பிரசுரிக்க  முடியாதா?

சிங்கள, தனக்கு வந்து இருந்தால், இப்போதைய  நாய் செயற்பாட்டை மையம் வைத்து கேலிச்சித்திரத்துக்கு மேல் கேலிச்சித்திரம் கீறித்  தள்ளி இருக்கும்.

ஆசிரியர் தலையங்கமும் எழுதி இருக்கும். 
 

அதெல்லாம் மனச்சாட்சி, வெக்கம், சூடு சொரணையுள்ளவர்களுக்கு வேலை செய்யும். இவர்களுக்கு பகுத்தறிவுமில்லை, பட்டறிவுமில்லை. கடைசித்தமிழன் உள்ளவரை அவர்களையும் அவர்களது அபிலாஷைகளையும் வைத்து சூதாடுங்கள். இத்தனையாண்டுகளாய் இந்த இனத்துக்கு தானே தலைவன் என்று மார்தட்டிக்கொண்டு முதுமை வரை சென்றுவிட்டார். எதையாவது சாதித்ததுண்டா? இருந்ததையும் இழந்து, திறந்த கதவுகளையும் ஓடியோடி மூடியதே சாதித்தவை. மற்றைய நாடுகளில், இனங்களில் எத்தனை புதிய புதிய  தலைவர்கள் வந்து சிறப்பாக சிந்தித்து செயலாற்றி மக்கள் பிரச்சனைகளை தீர்த்து  அபிவிருத்திகளை அடைந்திருக்கிறார்கள். இவர்கள் அடுத்தவரின் நலன் காக்கும் தலைவர்கள்! முட்டாள்களுக்கும் சுயநலவாதிகளுக்கும் யார் என்ன சொன்னாலும் அது அவர்கள் மொழியில் தவறாகத்தான் புரியும். தமிழனின் தலைவிதி இவ்வளவு நீண்டதாக இருக்கிறதே என்று வருத்தப்படுவதை வேறொன்றும் தெரியவில்லை. இவர்களின் பாத்துப்பாத்து புளித்துப்போன முகத்தை பாத்தாலே வெளிநாட்டு அரசியல்வாதிகள் முகம் சுளிப்பார்கள். இத்தனை காலமாய் ஒரே முகம், இதுவரை பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் என்ன மாற்றம் வரப்போகிறது என்று? அதனாலோ என்னவோ சிங்களத்தோடேயே பேசுவதும் முண்டுகொடுப்பதும் என்று முடங்கியிருக்கிறார்கள். வெளியில் முகம் காட்டத்துணிவில்லாமல்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.