Jump to content

சுமந்திரனின் பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி: அறிக்கையினால் வெடித்தது சர்ச்சை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வன்மையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இறுதி முடிவு

அவ்வாறான ஒரு தீர்மானம் தமிழரசு கட்சியின் அரசியல் குழுவில் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.

அரசியல் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் குழு உறுப்பினர்கள் சகலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.

பின்னர் இறுதி தீர்மானத்தை தை மாதம்7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற உள்ள மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதாகவும் அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

சுமந்திரனின் பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி: அறிக்கையினால் வெடித்தது சர்ச்சை | Tamil Sri Lankan Political Crisis Sumanthiran

எந்த சூழ்நிலையிலும் மற்றைய தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் கூட்டணியாக உள்வாங்குவதில்லை என்ற முடிவு. இணைய வழி முறையில் நடத்தப்பட்ட அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.

உண்மைக்கு புறம்பான கருத்து

இணைய வழி முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்து பதினைந்து நிமிடங்களில் தனக்கு வேறு ஒரு கூட்டம் உள்ளதாக கூறி வேறு ஒரு கூட்டத்திற்கு சென்று விட்டார். இறுதிவரை அவர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை.

பொய்யான அறிக்கையை பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்திருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்பதை பொறுப்போடு கூறிக்கொள்கின்றேன் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/tamil-sri-lankan-political-crisis-sumanthiran-1672408848?itm_source=parsely-detail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

டெலோ, புளொட்டோடு மட்டும்தான் கூட்டு என தமிழரசு முடிவெடுத்து விட்டதாக சும் கூறியதாக எந்த தமிழ் பத்திரிரிகையிலாவது செய்தி வந்ததா?

 நேற்று ஆங்கில டெய்லிமிரர் சும்மை மேற்கோள் காட்டி இந்த செய்தியை போட்டிருந்தது.

அப்பவே யோசித்தேன் இது சுமாவின் சு.மாத்து வாய் இருக்குமோ என.

பிகு

தவராசா, மாவை, சிவிகே மூவரும் சும்மை காய்ச்சி எடுக்கிறார்கள். இவர்களால் அவரை கட்சியில் இருந்து தூக்கி போட முடியாதா? இணைந்து செயல்பட்டால்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுமந்திரன் எப்பதான் உண்மையை பேசியிருக்கிறார். அவர் பேசுவது உண்மை என்று நம்பியவர்களுக்குத்தான் இந்தச் செய்தி உரித்துடையதாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி அம்பலப்படுத்துவதற்கு இன்னும் என்ன ரகசியம் இருக்கிறது  அவரிடம்? இனி அம்மணமாய் ஓடித்திரிய வேண்டியதுதான். துரோகிகளுக்கு சூடு சொரணை கிடையாது, கோபமும் வராது கபடப்புத்தியே தாராளமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣. 
    • அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.