Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரத நிலைய சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர கடலோர, புத்தளம் மற்றும் பிரதான வழித்தடங்களில் தலா ஒரு புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றும் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையே இதற்கான பிரதான காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 500 பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளமையினால் ஏற்பட்ட வெற்றிடத்தால் நேற்றும் 30 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தது.

ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1318234

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தில் அளவுக்கு அதிகமான உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள் என்றார்கள்.
டிசம்பர் 31´ம் திகதியுடன் பலர் ஒய்வு பெறப் போவதும் அரசாங்கத்துக்கு முன்பே தெரியும்.
அப்படியென்றால்... முன்பே தகுந்தவர்களை  அந்த வேலைக்குப் பழக்கி வைத்திருப்பது 
அரசின் கடமை அல்லவா? வருடம் முழுக்க சோம்பேறியாக இருந்து விட்டு,
ஒய்வு பெற்றவர்கள் போனவுடன், ஆட்கள் இல்லை என்று... 
ரயிலை ரத்து செய்வதை  எந்த வகையில் சேர்ப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேற்பாடில்லாத திட்டங்களும், அமுல்படுத்தல்களும், புத்திசாலிகள் நாட்டை கட்டியெழுப்புகிறோம் என்கிற நினைப்பு உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக்கள்ளன் என்கிற மாதிரி  நாட்டின் பொருளாதாரத்தை  இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டுபோவதோடு, மக்களை இன்னும் சிரமத்திற்கு ஆளாக்குமென்பதை அறியாத அமைச்சரவை, வழிநடத்தல்கள். திறமையானவர்கள் என்று தங்களைத்தாங்களே தட்டிக்கொடுக்க வேண்டியதுதான். வற்புறுத்தி ஓய்வில் அனுப்பியவர்கள், தாங்கள் சேவை செய்ய மாட்டோம், மீள பழையபடி இணைக்காவிட்டால் என்று ஊழியர் பேரம்பேசினால் என்ன ஆகும்? அடுத்தநாள் திட்டம் என்ன, யார் ரயிலை இயக்குவது என்று யோசிக்கவேயில்லையா இவர்கள்? ரயில் திணைக்களம் இதை முதலில் அறிவித்திருக்க வேண்டாமோ?முட்டாள் பயலுக இன்னும் என்னென்ன மூடப்படப்போகுதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கத்தில் அளவுக்கு அதிகமான உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள் என்றார்கள்.
டிசம்பர் 31´ம் திகதியுடன் பலர் ஒய்வு பெறப் போவதும் அரசாங்கத்துக்கு முன்பே தெரியும்.
அப்படியென்றால்... முன்பே தகுந்தவர்களை  அந்த வேலைக்குப் பழக்கி வைத்திருப்பது 
அரசின் கடமை அல்லவா? வருடம் முழுக்க சோம்பேறியாக இருந்து விட்டு,
ஒய்வு பெற்றவர்கள் போனவுடன், ஆட்கள் இல்லை என்று... 
ரயிலை ரத்து செய்வதை  எந்த வகையில் சேர்ப்பது?

மோட்டு சிங்களவனுக்கு முன்னோக்கிய சிந்தனைகள் இருந்தால் நாடு ஏன் இப்பிடி கஸ்டப்படப்போகுது?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரயில் எஞ்சின்களை இயக்குவது லேசுபட்ட வேலை இல்லையாம். பழக்கி எடுக்க காலம் செல்லுமாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மோட்டு சிங்களவனுக்கு முன்னோக்கிய சிந்தனைகள் இருந்தால் நாடு ஏன் இப்பிடி கஸ்டப்படப்போகுது?

மோட்டு  சிங்களவன் என்று சொல்லக்கூடாதாம் பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

By DIGITAL DESK 2

02 JAN, 2023 | 08:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மாத்தறை முதல் பெலியத்தை,தலைமன்னார் முதல் மதவாச்சி  வரையிலான புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச சேவையில் 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற வேண்டும் என அரசாங்கம் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் எடுத்த தீர்மானம் புகையிரத சேவை துறையை தற்போது மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

பெரும்பாலான மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக புகையிரத சேவை காணப்படுகிறது.புத்தாண்டு காலத்தில் வழமைக்கு மாறாக அதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்,ஆனால் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கூட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையால் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் நாளாந்தம் 40 இற்கும் அதிகமான புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன.

ஏனைய அரச சேவைகளை போல் புகையிரத சேவை தனித்த சேவை அல்ல.புகையிரத சேவையில் ஒவ்வொரு பிரிவும் முக்கியமானது.ஒரு பிரிவின் சேவை பாதிக்கப்பட்டால் முழு புகையிரத சேவை கட்டமைப்பும் பாதிக்கப்படும் என்பதை தீர்மானம் எடுக்கும் அரச தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

புகையிரத சேவையில் 500 கனிஸ்ட மற்றும் உயர் சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள், இவர்களில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளடங்குகிறார்கள்.

பெரும்பாலான புகையிரத நிலையங்களில் அனைத்து பணிகளையும் நிலைய பொறுப்பதிகாரி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மாத்தறை தொடக்கம் பெலியத்த மற்றும் தலைமன்னார் முதல் மெதவாச்சி வரையிலான புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்.புகையிரத நிலைய அதிபர் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/144783

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பெருமாள் said:

மோட்டு  சிங்களவன் என்று சொல்லக்கூடாதாம் பாஸ் .

இல்லை நான் அப்பிடித்தான் சொல்லுவன் 🤣

Child Tantrum GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரத சேவை வழமைக்கு மாறாக தாமதமடையும் - புகையிரத திணைக்களம்

By T. SARANYA

02 JAN, 2023 | 08:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

 

புகையிரத சேவையில் 500 கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட சேவையாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து சேவையாளர் பற்றாக்குறையால் புகையிரத சேவை பாரிய நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.

சேவையாளர் பற்றாக்குறையால் கடந்த 31 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை (ஜன 2) வரை நூற்றுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் பொருள் விநியோக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இனி வரும் நாட்களில் புகையிரத சேவை வழமைக்கு மாறாக தாமதமடையும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டது.

ஓய்வுப் பெற்ற புகையிரத சேவையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

60 வயதை பூர்த்தி செய்த அரச சேவையாளர்கள் அனைவரும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பில் அரச சேவையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்குவது மூன்று வருட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லாத வகையில் அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக நிர்ணயிப்பது அரச சேவை கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அரச சேவையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இருப்பினும் அரசாங்கம் இவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.

புகையிரத சேவையாளர்கள் ஓய்வு - புகையிரத சேவை நெருக்கடி

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய 30,000 அரச சேவையாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்கள்.இவர்களில் 500 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட புகையிரத சேவையார்கள் உள்ளடங்குகிறார்கள்.

புகையிரத சேவையாளர்கள் ஓய்வு பெற்றதால் புகையிரத சேவையில் ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது.கடந்த மாதம் 31 ஆம் திகதி 48 பயணிகள் புகையிரத சேவைகளும்,11 பொருள் விநியோக சேவைகள் உள்ளடங்களாக 59 புகையிரத சேவைகளும்,2023 ஆம் ஆண்டு முதலாம் திகதி 24 பயணிகள் புகையிரத சேவைகளும்,12 பொருள் விநியோக சேவைகளும் உள்ளடங்களாக 36 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன.நேற்று காலை முதல் பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் மாத்திரம் 11 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

புகையிரத திணைக்களம்

புகையிரத சேவையில் இருந்து ஒரே தடவையில் 500 சேவையாளர்கள் ஓய்வு பெற்றதால் புகையிரத சேவை பாரிய அசௌகரியங்களை தற்போது எதிர் கொண்டுள்ளது.சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ள போதும்,அதற்கு சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.

தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு மத்தியில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடும் போது மட்டுப்படுத்தப்பட்ட அளவு ஊதியம் மாத்திரம் கிடைக்கப் பெறும். ஆகவே ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைவது சாத்தியமற்றது என அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

புகையிரத சேவையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது என்பதை 2020 ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்டு வருகிறோம்.பொருளாதார நெருக்கடியால் புதிய நியமனம் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டது.கடந்த ஆண்டு ஒரு புகையிரத சாரதி ஒரு நாளைக்கு இரு தடவை புகையிரதம் இயக்கும் பணியில் ஈடுப்பட்டார். அவர் தற்போது ஒரு நாளைக்கு 6 முறை புகையிரதத்தை இயக்கும் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.

புகையிரத சாரதி ஒருவருக்கு அச்சேவைக்கு குறைந்தபட்சம் 3 வருட காலம் பயிற்சி வழங்கப்படும். தற்போது புதிய சாரதிகளை இணைத்துக் கொள்வதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புகையிரத சாரதிகளில் 50 இற்கும் அதிகமானோர் சேவையில் இருந்து ஓய்வுப் பெறுவார்கள்.ஆகவே பிரச்சினை தீவிரமடையுமே தவிர குறைவடையாது.இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்மானத்தை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்தார்.

புகையிரத தொழிற்சங்கங்கள்

துவிச்சக்கர வண்டியை செலுத்துவதை போன்று புதியவர்களை கொண்டு புகையிரதத்தை செலுத்த முடியாது என்பதை அரசாங்கம் முதலில் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.மருத்துவம்,புகையிரதம் ஆகிய அரச சேவைகள் சிரேஷ்டத்துவத்தை அடிப்படையாக கொண்டு வினைத்திறனாக செயற்பட வேண்டிய முக்கிய துறைகளாகும்.

60 வயதை அடைந்த அரச சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற தீர்மானம் ஏனைய அரச சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும்,அந்த தீர்மானம் புகையிரத சேவை துறைக்கு பாரிய நெருக்கடியை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

புகையிரத சாரதிகள் உட்பட ஏனைய சேவையாளர்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றால் முதலாம் திகதி சேவையில் பாதிப்பு ஏற்படும் என்பதை அரசாங்கம் அறியவில்லையா,அரசாங்கத்திடம் எவ்வித திட்டமிடலும் கிடையாது.புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் முயற்சியில் அரசாங்கம் செய்றபடுகிறது.

வினைத்திறனான சேவையை வழங்காவிட்டால் புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துங்கள் என மக்கள் கோபத்தில் குறிப்பிடுவார்கள்.மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த அரசாங்கம் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சேவையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்து புதிய தரப்பினருக்கு முறையான பயிற்சி வழங்கி இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.புகையிரத சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்க தலைவர் எம்.கே.விதானகே தெரிவித்தார்.

பொது பயணிகள் கடும் விசனம்

அரச சேவையாளர்கள் 31 ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றால் முதலாம் திகதி ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டு சேவை பாதிக்கப்படும் என்பதை அரசாங்கம் அறியவில்லையா,அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. புகையிரதத்திற்கு புகையிரத நிலையங்களில் காத்திருக்கும் போது உரிய காரியாலய புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது,

புகையிரதம் இரத்து என உரிய தரப்பினர் அறிவித்ததுடன் அவர்களின் கடமை முடிந்து விட்டது,இதனால் பயணிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் அரசாங்கமோ அல்லது துறைசார் தரப்பினரோ கவனம் செலுத்தவில்லை.வழமைக்கு மாறாக புகையிரதங்கள் தாமதமாக வருகின்றன.சேவைக்கு தாமதமாகி செல்லும் போது பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையிலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது என புகையிரத பொது பயணிகள் கடும் விசனத்தையும்,அரசாங்கத்திற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்கள்.

https://www.virakesari.lk/article/144775

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மோட்டு சிங்களவனுக்கு முன்னோக்கிய சிந்தனைகள் இருந்தால் நாடு ஏன் இப்பிடி கஸ்டப்படப்போகுது?

 

25 minutes ago, பெருமாள் said:

மோட்டு  சிங்களவன் என்று சொல்லக்கூடாதாம் பாஸ் .

 

9 minutes ago, குமாரசாமி said:

இல்லை நான் அப்பிடித்தான் சொல்லுவன் 🤣

Child Tantrum GIFs | Tenor

அப்பிடி சொன்னால், அடி விழும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

மோட்டு  சிங்களவன் என்று சொல்லக்கூடாதாம் பாஸ் .

சொல்லலாம்.

ஆனால் அவனிடம் 75 வருடமாய் தோற்பவன் யார் என கேட்டாள் “நே” என முழிக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது வயதில் ஓய்வு என்று அறிக்கை விட முன், அவர்கள் பணியை பொறுப்பேற்க ஆட்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதா என்பதை யோசிக்கத்தெரியாத முட்டாள்கள் தான் தமிழர் இல்லாமல் நாடு முன்னேறும் என்று அழித்தார்கள், இன்று நாடு எப்படி இருக்கு? இன்னும் வீரப்பேச்சுக்கு குறையில்லை. அடித்து விரட்டியவர் அலைகிறார். கம்மன் பில, சரத் வீரசேகர எப்போ பயணப்பெட்டி தூக்கிறது?

25 minutes ago, goshan_che said:

சொல்லலாம்.

ஆனால் அவனிடம் 75 வருடமாய் தோற்பவன் யார் என கேட்டாள் “நே” என முழிக்கக்கூடாது.

தோற்க வைத்தவர்கள் தோற்று விட்டார்கள் அவனிடம், அதனால் அவனும் தோற்றுவிட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

சொல்லலாம்.

ஆனால் அவனிடம் 75 வருடமாய் தோற்பவன் யார் என கேட்டாள் “நே” என முழிக்கக்கூடாது.

வயிரவருக்கு நாய் வந்து வாய்ச்ச மாதிரி எங்களுக்கெண்டு வந்ததும் அப்படி......வந்து சேர்ந்ததும் அப்பிடி....😡

Bild

  • கருத்துக்கள உறவுகள்

பக்குவமாய் தான் பாதுகாத்ததை பொருத்தமானவரிடந்தான் கையளிக்கிறார் தலைவர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.