Jump to content

அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம்! சொந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எங்கேயும் “உங்கள்” உடலை கேட்க வாய்ப்பில்லை 🤣

தம்பி ஆழம் அறியாமல் கோலை வைக்கக்கூடாது 🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நன்றி அண்ணா 👍

ஏன் திரிய திசை திருப்பிட்டனோ?  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

உங்கட பெரியவர்-சின்னவர் கூட்டணிக்கு கிட்டயும் வருவமா நாங்கள் 🤣

எனக்கு போத்தல் 

போத்தல் மூடிக்கதை தான் ஞாபகம் வந்தது 😂

Just now, குமாரசாமி said:

ஏன் திரிய திசை திருப்பிட்டனோ?  😂

இல்லை அண்ணா

இன்று ஓய்வு நாள்

அமைதி அமைதி 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

எங்கேயும் “உங்கள்” உடலை கேட்க வாய்ப்பில்லை 🤣

அப்பனுக்கு நம்மளப்பற்றி தெரியேல்ல.....😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா சொல்லும் விடயத்தை ஒரு கேள்வியாக இங்கே ஒரு செய்திச் சேவையில் ஒரு சிவப்புக் கட்சிப் பிரநிதியிடம் கேட்டார்கள்: இந்த இழுபறியைக் காணும் மக்கள் சர்வாதிகாரம், ஒரு கட்சி ஆட்சி என்பன மேற்கத்தைய ஜனநாயகத்தை விட மேலானவை என நினைக்கக் கூடுமல்லவா?

அந்தப் பிரநிதியின் பதிலும் மேலே விசுகர், கோசான் சொல்வது போலத்தான் இருந்தது. எல்லாவற்றையும் ஒருவரின் அல்லது ஒரு கட்சியின் கையில் கொடுத்து விட்டால் ஒரே மாதிரியான முடிவுகள் (தற்போது ரஷ்யா போல) இலகுவாக எடுக்கலாம். முன்னோக்கி நகர்வது என்பது காலப் போக்கில் இயலாமல் போய் விடும், சில சமயங்களில் பின்னோக்கி நகர்வது (இப்போது ரஷ்யா நகர்வது போல) மட்டும் நடக்கும். எனவே என்ன தான் மொக்கேனப் பட்டாலும் மேற்கத்தைய ஜனநாயகம் தான் இப்போதுள்ள ஆட்சி முறைகளில் சிறந்தது.

குறைந்த பட்சம் நாணயமாற்று விகிதத்தை உயர்வாக வைத்திருக்கவாவது உதவும் முறை - எனவே எங்கள் தமிழ் ஆட்களுக்கும் நல்லது தானே?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், மக்கார்தியின் போராட்டம் முடியவில்லை இன்னும்.

1. அதி வலதுசாரிகள் தங்கள் வாக்குகளை (4 வாக்குகள்) வழங்க மக்கார்திக்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். பெரும்பாலானவை வெளியே வராத நிபந்தனைகள். வெளியே கசிந்திருக்கும் ஒரு நிபந்தனை சபாநாயகரை நீக்கும் பிரேரணையை தனி ஒரு உறுப்பினர் தனித்துக் கொண்டுவர முடியும் (பின்னர் வாக்கெடுப்பில் சபாநாயகரை நீக்குவதா இல்லையா என்பது தீர்மானிக்கப் படும்).

பெலோசி இருந்த போது இத்தகைய ஒரு பிரேரணை கொண்டுவர 50 உறுப்பினர்களின் கையொப்பம் அவசியம் என்ற விதி இருந்தது. தீவிர இடதுசாரிகளான "the Squad" என்று அழைக்கப் பட்ட AOC தரப்பு பெலோசியை தூக்கியெறிய முடியாமல் இந்த விதி காத்தது.

2. இனி வரும் ஒவ்வொரு சட்டவாக்கல் முயற்சியின் போதும் மக்கார்தி எதிர்ப்பாளர்கள் விடயங்களைத் தாமதப் படுத்த , தடுக்க முடியும். Freedom Caucus எனப்படும் குழுவில் இருக்கும் 20 பேரில், 4 பேர் மட்டும் நினைத்தால் சட்டவாக்கல் முயற்சியை இழுத்தடிக்கலாம். விவாதிக்கப் படும் சட்டத்தைப் பொறுத்து இந்த எண்ணிக்கை 4 ஐ விடக் கூடுதலாக இருக்கலாம்.

3. ஆனால், மேலே இருக்கும் நிலை 2 நடந்தால்,  மக்கார்திக்கு உதவ நீலக் கட்சியின் ஒரு பகுதி முன்வரலாம். அப்படி அவர்கள் உதவ முன்வரும் போது சட்டவாக்கத்தில் அனுசரித்துப் போதல் என்பது நிகழலாம். மேல் சபையும், வெள்ளை மாளிகையும் நீலக் கட்சி கையில் இருக்கும் வரை இப்படி அனுசரித்துப் போக வேண்டிய ஒரு அழுத்தம் மக்கார்தி சார்ந்த சிவப்புக் கட்சிக்கு இருக்கும்.

4. இந்த இடத்தில் ஒரு தெளிவான silver line : அண்டி பிக்ஸ், மற் கேற்ஸ் போன்ற ஒரு அதி வலதுசாரி சபாநாயகராக வராமல் மக்கார்தி வந்திருப்பது தான். மக்கார்தி வளையக் கூடிய Teflon முள்ளந்தண்டுடைய , பதவி ஆசை மிகுந்த ஒரு அரசியல் வாதி. ஒரு அதி வலது சாரியை விட இவரைக் கையாள்வது எதிரணிக்கு இலகுவாக இருக்கும்! 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

நன்றி உங்கள் நேரத்திற்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

நன்றி இதில் நிபந்தனை 1ஐ பற்றி அறிந்திருந்தேன். மிகுதியை இப்போ அறிந்தேன்🙏🏾.

ஒரு கேள்வி

நிபந்தனை 1 ஐ நிறைவேற்ற (to reduce the minimum from 50 to 1) காங்கிரசின் நிலை சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமா? 

அப்படி என்றால் நிலைசட்டம் மாற்றும் வாக்கெடுப்பில் முழு நீலகட்சி+சில சிவப்பு கட்சி சேர்ந்தாலே நிபந்தனையை ஒன்றும் இல்லாமல் ஆக்க முடியும் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த பிரதிநிதிகள் சபை விதிகளை மாற்றும் சக்தி தான் சபாநாயகர் பதவியின் மூலைக்கல், கவர்ச்சிகரமான அங்கம்.

அமெரிக்க காங்கிரஸின் (மேல் சபையும், கீழ் சபை) பெரும்பாலான செயல்பாடுகள் செயற்குழுக்கள் (committees) மட்டத்தில் தான் நடைபெறுகிறது. இந்தக் குழுக்களுள் சக்தி வாய்ந்த ஒரு குழுவாக Rules Committee இருக்கிறது. இதற்கு இன்னொரு பெயர்  The Speaker's Committee - ஏனெனில் சபாநாயகரின் மறைமுகக் கட்டுப் பாட்டில் இந்தக் குழு இருப்பதால். பெரும்பான்மைக் கட்சி (இப்போது சிவப்புக் கட்சி) இந்தக் குழுவில் 2:1 என்ற விகிதாசாரத்தில் சிறுபான்மைக் கட்சியை விட மேலாண்மை வைத்திருக்கும். இந்தக் குழு வழியாக சபாநாயகர் விசேட விதிகளை (Special Rules) உருவாக்கலாம்  , நிலை விதிகளை (Standing Rules) மாற்றியமைக்கலாம். மேலே குறிப்பிட்ட Motion to vacate the Speaker நிலை விதிகளில் அடங்குகிறதென நினைக்கிறேன்.

இப்படி ஒரு உறுப்பினர் பிரேரணை கொண்டு வந்து சபாநாயகரை மாற்றக் கோரும் வகையிலான மாற்றத்தை "மக்கார்தி தன் கழுத்தில் சுருக்குக் கயிற்றைக் கட்டி, கயிற்று நுணியை தீவிர வலது சாரிகளிடம் கொடுத்து விட்ட நிலை" என்று விபரிக்கிறார்கள்.

சிவப்புக் கட்சிக்கு இது ஏற்கனவே நடந்திருக்கிறது. 2015 இல் இப்படி இருந்த ஒற்றை உறுப்பினர் விதியைப் பயன்படுத்தி, ஒபாமாவோடு சில விடயங்களில்  இணக்கமாகச் செயல்பட்ட சிவப்புக் கட்சிச் சபாநாயகர் ஜோன் பேனரை நீக்க ஆயத்தமானார்கள். ஜோன் பேனர் தானாகவே பதவி விலகிக் கொண்டார். அந்த நேரம் ஜோன் பேனருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் மக்கார்தி. ஆனாலும், 2015 இன் தீவிர வலது சாரிகள் மக்கார்தி சரிவரார் என்று போல் றையனை சபாநாயகராக்கினர்.

இப்ப பகிடி என்னவென்றால், 2015 இன் தீவிர வலதுசாரிகளை விட பல மடங்கு "நட் கேசுகள்" தான் 2023 இன் தீவிர வலது சாரிகள். மக்கார்தியின் பதவியாசை எப்படி இயங்கப் போகிறதென பொப் கோர்னோடு பார்த்து ரசிக்க ஆவலாக உள்ளேன்! 😂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நன்றி அண்ணா. மிக தெளிவான விளக்கம்👍🏿👏🏾

பிகு

மருத்துவம், அரசியல், பாராளுமன்ற நடைமுறைச்சட்டம், வரலாறு, இராஜதந்திரம் என கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல்துறைகளில் தரவுபூர்வமாக நீங்கள் கொடுத்த தகவல்கள் பிறிதொரு படிநிலை, பிறிதொரு படிநிலை  (அதாவது வேறலெவல், வேறலெவல்🤣).

ஆகவே உங்களுக்கு “அட எப்புர்றா” விருதை வழங்கி கெளரவிக்கிறேன்👏🏾👏🏾👏🏾

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நன்றி அண்ணா. மிக தெளிவான விளக்கம்👍🏿👏🏾

பிகு

மருத்துவம், அரசியல், பாராளுமன்ற நடைமுறைச்சட்டம், வரலாறு, இராஜதந்திரம் என கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல்துறைகளில் தரவுபூர்வமாக நீங்கள் கொடுத்த தகவல்கள் பிறிதொரு படிநிலை, பிறிதொரு படிநிலை  (அதாவது வேறலெவல், வேறலெவல்🤣).

ஆகவே உங்களுக்கு “அட எப்புர்றா” விருதை வழங்கி கெளரவிக்கிறேன்👏🏾👏🏾👏🏾

விருதுக்கான விளக்கம் பிலீஸ்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

என் அனுபவத்தில் வாக்காளர்கள் அதிலும் தமது வாக்களிப்பின் அருமை தெரியாமல் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் வாக்காளர்களுக்கான எச்சரிக்கை இது. 

நல்லதொரு எச்சரிக்கை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

விருதுக்கான விளக்கம் பிலீஸ்😂

உண்மையில் நான் இங்கே கேட்ட கேள்வி அவர் துறைசார்ந்ததல்ல. 

அவர் கொடுத்த பதிலில், அதை வாசிக்கும் போது அடுத்து என் மனதில் வந்த கேள்விகளுக்கும், அடுத்தடுத்த வரிகளில் பதில் இருந்தது (நான் கேட்காமலேயே).

துறைசாரா ஒரு விடயத்தை பற்றி இப்படி ஒரு பூரணமான பதிலை எப்படி கொடுக்க முடிகிறது? அந்த விடயதான கிரகிப்பு வியக்கத்தக்கது.

அதனால்

# அட எப்புர்ரா விருது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

வேலை பிறேக்கில் வந்து பார்த்தால் விருதெல்லாம் குடுத்து "உயரமான" பப்பா மரத்தில ஏத்தியிருக்கிறாங்கள்?😂

சீரியசாக: இணைய யுகத்தில் யாரும் எதையும் தேடியறியும் வசதி இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பலர் உரிய இடங்களில் தேடாமல் நம்பிக்கை குறைந்த மூலங்களில் முட்டுப் பட்டு நிற்பதே பிரச்சினை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

வேலை பிறேக்கில் வந்து பார்த்தால் விருதெல்லாம் குடுத்து "உயரமான" பப்பா மரத்தில ஏத்தியிருக்கிறாங்கள்?😂

சீரியசாக: இணைய யுகத்தில் யாரும் எதையும் தேடியறியும் வசதி இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பலர் உரிய இடங்களில் தேடாமல் நம்பிக்கை குறைந்த மூலங்களில் முட்டுப் பட்டு நிற்பதே பிரச்சினை.

உண்மைதான் 

எனக்கும் இந்தக்குறைபாடுண்டு

எனது  மக்களே  சுட்டிக்காட்டுவார்கள்

எங்களிடம்  கேட்காமல்  உங்களாலேயே தேடிப்பிடித்த  வாசித்தறிய முடியுமப்பா  என்று...

என்ன  செய்வது  பழக்கதோசம்?😭

ஆனால் நானாவது  இக்குறையை  ஒப்புக்கொள்கிறேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

வேலை பிறேக்கில் வந்து பார்த்தால் விருதெல்லாம் குடுத்து "உயரமான" பப்பா மரத்தில ஏத்தியிருக்கிறாங்கள்?😂

சீரியசாக: இணைய யுகத்தில் யாரும் எதையும் தேடியறியும் வசதி இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பலர் உரிய இடங்களில் தேடாமல் நம்பிக்கை குறைந்த மூலங்களில் முட்டுப் பட்டு நிற்பதே பிரச்சினை.

எல்லாராலும் தேடி அறிய முடியும் என்றால் எல்லாரும் உங்களை போல தரவு சுத்தமாக அல்லவா எழுதுவார்கள்?

தனது வாழ்நாள் முழுவதும் எமக்காக உழைத்த மனிதன் - பாலா அண்ணையின் பூர்வீகம் என்ன என்பதை கூகிள் ஒரு நொடியில் காட்டி விடும்.    

ஆனாலும் பிழையாக எழுதுகிறார்களே? 

அதுவும் நீங்கள் சொன்ன விடயத்தை நான் உண்மையில் மேலோட்டமாக தேடிப்பார்த்தேன் - இன்னும் ஆழமாக தேட வேண்டும் போல் இருந்தது - ஆகவே இது சாதாரணமாக தேடி எடுக்கும் விடயம் அல்ல.

கூகிள்-பின்னான உலகில் அறிவு என்பது - எங்கே தேடுவது அதில் எது நம்பக்கூடியது என்பதை தெரிந்து வைத்திருப்பதே - அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை, குறிப்பாக துறைசாரா, துறைகளில்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.