Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா உலையிலிருந்து ஒரு மில்லியன் தொன் சுத்திகரிக்கப்பட்ட நீரை விடுவிப்பதற்கு ஜப்பான் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா உலையிலிருந்து ஒரு மில்லியன் தொன் சுத்திகரிக்கப்பட்ட நீரை விடுவிப்பதற்கு ஜப்பான் திட்டம்

By SETHU

13 JAN, 2023 | 12:00 PM
image

அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் ஆலையிலிருந்து, ஒரு மில்லியன் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட நீரை சமுத்திரத்தில் விடுவிக்கும் நடவடிக்கை இவ்வருடம்  ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய அரச அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தள்ளார். 

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தையடுத்து. சுனாமி அலைகள் புகுஷிமா அணு மின் நிலைய உலைகளையும் தாக்கின. இதனால், அணு உலைகளை குளிர்விக்கும் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு அணுக்கசிவும் ஏற்பட்டது. 

1984 ஆம் ஆண்டின் செர்னோபில் அணுசக்தி நிலைய விபத்துக்கு பின்னர் ஏற்பட்ட மிக மோசமான அணுசக்தி நிலைய விபத்து இதுவாகும். 

இம்மின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகான நீரை சமுத்திரத்தில் விடுவிக்கப்பதற்கு ஜப்பான் திட்டமிட்டுள்ளது. 

இதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகமும் அனுமதி அளித்துள்ளது. எனினும், இம்முகவரகத்திடமிருந்து விரிவான அறிக்கையொன்று கிடைக்கும் வரை ஜப்பானிய அரசாங்கம் காத்திருக்கும் என சஜப்பானிய அமைச்சரவை செயலாளர் ஹிரோகஸு மெட்சுனோ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/145693

அணு உலைகளில் உள்ள பிரச்சனை இதுதான், கழிவுகளை என்ன செய்வது. 

விபத்து ஏற்பட்டுச் சில நாட்களில் கதிரேற்றம் பெற்ற பல மில்லியன் லீற்றற்ர் நீர் ஏற்கனவே கடலில் கலந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புகுஷிமா அணு உலையில் இருந்து கதிரியக்க கழிவு நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டது

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில இரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்த கடலில் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது.

அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. சுத்திகரித்து அவற்றை பேரல்களில் சேமித்து வைத்திருந்தது. ஆனால், மீனவர்கள் மற்றும் சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஜப்பான் பெற்றது.

7-3-300x200.jpg

இதனால் இன்று முதல் (24) சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று முதல் பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது. அணுஉலை நிலையத்தின் கட்டுப்பாடு அறையில் இருந்து லைவ் வீடியோ மூலம் தண்ணீர் திறந்து விடப்படும் காட்சி வெளியானது. அதில் முக்கிய ஆபரேட்டர் ஒருவர், “கடல் நீர் வெளியேற்றப்படும் பணி செயற்படுத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/270122

  • கருத்துக்கள உறவுகள்

சீனா கடும் எதிர்ப்பை காட்டியுள்ளது. ஜப்பானில் இருந்து கடலுணவு இறக்குமதியையும் தடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

புகுஷிமா அணு உலையில் இருந்து கதிரியக்க கழிவு நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டது

Walfang: Australien gegen Japan - Kriminalität - FAZ

ஜப்பான் எப்போதுமே உலக சட்டங்களை மதித்து நடந்ததில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் நேற்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடைவிதித்துள்ளனர்.

நாட்டின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு அணுசக்தியால் அசுத்தமான நீர் வெளியேற்றத்தின் அபாயங்களைத் தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும்” என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தாய்வான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

https://thinakkural.lk/article/270363

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முடிவு, ஜப்பானுக்கும், அயல் நாடுகளுக்கும் இருக்கும் தெரிவுகளில் சிறந்த தெரிவு மட்டுமல்ல, விஞ்ஞான ரீதியில் எடுக்கப் பட்ட ஒரு தெரிவும் கூட. எப்படி என்று கீழே இருக்கும் இணைப்பின் அடிப்படையில் பார்க்கலாம்.

1. 2011 Fukushima விபத்து இயற்கை அனர்த்தம் காரணமாக நிகழ்ந்தது. அந்த வேளையில், அணு உலையின் எரிபொருளைக் குளிர்வித்திருக்கா விட்டால், பெரு வெடிப்பு ஏற்பட்டு, கதிரியக்கம் காற்றில் கலந்திருக்கும், நெடுந்தூரம் பரவியிருக்கும். எனவே, கடல் நீரைக் கொண்டு குளிர்வித்து, அதைச் சில ஆயிரம் பீப்பாக்களில் சேமித்து வைத்தார்கள். இந்த சேமித்த நீரில் 64 வகையான கதிரியக்க மூலகங்கள்  இருக்கின்றன. அவற்றுள், சீசியம், ஸ்ரொஞ்சியம், கோபால்ற் போன்றவை கடந்த 12 வருடங்களில் கதிரியக்க ரீதியில் வலுவிழந்திருக்கும்.

2. ஆனாலும், ஜப்பான் ஒரு வடிகட்டல் முறை மூலம், 64 கதிரியக்க மூலகங்களில், 62 இனைப் பெருமளவு அகற்றி விட்டது. தற்போது இந்த வடி கட்டிய நீரில் எஞ்சியிருப்பது பெருமளவு பார ஐதரசனும் (H3 or Tritium), காபன் 14 உம். இவையிரண்டும் நீண்ட வாழ்வு காலம் கொண்டவை. கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், சாதாரண அணு உலைகளில் இருந்து கூட பார ஐதரசன் கொண்ட கழிவு நீர் உலகெங்கும் கடலில் கலக்கப் படுகிறது. எனவே, இதனால் கடலுயிர் அல்லது மனிதனுக்கு பாரிய ஆபத்துகள் இருந்தால் அவை இப்போது வெளி வந்திருக்க வேண்டும்.

3.  இந்த இரு கதிரியக்க மூலகங்களும் சிறிது சிறிதாக பசுபிக் சமுத்திரத்தில் கலக்கப் படும் போது, ஐதாக்கல் (dilution) மூலம் இவற்றின் கதிரியக்கம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத மட்டத்திற்குக் குறைவடையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

4. ஆனால், ஒரு விடயம் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது: இந்த ஐதான கதிரியக்க மூலகங்கள் இரண்டும் உயிரினங்களால் உள்வாங்கப் படும் போது, உணவுச் சங்கிலி மூலம் அது செறிவாக்கப் படுமா? என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. ஆய்வு கூட மட்டத்தில், இந்த நீரில் வளர்ந்த கடலுயிரிகள் ஆரம்பத்தில் இந்த கதிரியக்க மூலகங்களை உடலில் தேக்கினாலும், பின்னர் அவை குறைவடைந்து சாதாரண மட்டத்திற்கு திரும்புகின்றன எனத் தெரிகிறது.

இந்த இறுதிப் புள்ளி தான் கேள்விக்குரிய ஒரு விடயம்.

மறுபக்கம், இந்தக் கழிவு நீரை ஜப்பான் பீப்பாக்களிலேயே வைத்திருந்தால் என்ன நிகழும்? நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக் கூடிய பிரதேசத்தில்  ஜப்பான் அமைந்திருக்கிறது. இன்னொரு நில நடுக்கம், சுனாமி உருவானால் இந்த பீப்பாக்களில் இருக்கும் முழு நீரும் ஒரே நாளில் பசுபிக்கில் கலக்கலாம். அப்படிக் கலந்தால் அது பேரழிவு தரும் ஒரு நிகழ்வாக இருக்கும்.

எனவே, அடுத்த 30 ஆண்டுகளுக்கு சிறிது சிறிதாக இந்த நீரை பசுபிக்கில் கலப்பது தான் எல்லோருக்கும் பாதுகாப்பான தெரிவு!

https://www.nature.com/articles/d41586-023-02057-y

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

4. ஆனால், ஒரு விடயம் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது: இந்த ஐதான கதிரியக்க மூலகங்கள் இரண்டும் உயிரினங்களால் உள்வாங்கப் படும் போது, உணவுச் சங்கிலி மூலம் அது செறிவாக்கப் படுமா? என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. ஆய்வு கூட மட்டத்தில், இந்த நீரில் வளர்ந்த கடலுயிரிகள் ஆரம்பத்தில் இந்த கதிரியக்க மூலகங்களை உடலில் தேக்கினாலும், பின்னர் அவை குறைவடைந்து சாதாரண மட்டத்திற்கு திரும்புகின்றன எனத் தெரிகிறது.

இந்த இறுதிப் புள்ளி தான் கேள்விக்குரிய ஒரு விடயம்.

மறுபக்கம், இந்தக் கழிவு நீரை ஜப்பான் பீப்பாக்களிலேயே வைத்திருந்தால் என்ன நிகழும்? நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக் கூடிய பிரதேசத்தில்  ஜப்பான் அமைந்திருக்கிறது. இன்னொரு நில நடுக்கம், சுனாமி உருவானால் இந்த பீப்பாக்களில் இருக்கும் முழு நீரும் ஒரே நாளில் பசுபிக்கில் கலக்கலாம். அப்படிக் கலந்தால் அது பேரழிவு தரும் ஒரு நிகழ்வாக இருக்கும்.

எனவே, அடுத்த 30 ஆண்டுகளுக்கு சிறிது சிறிதாக இந்த நீரை பசுபிக்கில் கலப்பது தான் எல்லோருக்கும் பாதுகாப்பான தெரிவு!

https://www.nature.com/articles/d41586-023-02057-y

நன்றி அண்ணை விளக்கத்திற்கு.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் பசிபிக் கடலில் திறப்பு - மீன்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்படுமா?

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் நிலத்தடி சுரங்கப்பாதை வழியே பசிபிக் பெருங்கடலில் கலக்கப்படுகிறது.

6 மணி நேரங்களுக்கு முன்னர்

புகுஷிமா அணுஉலை கழிவு நீரை சுத்திகரித்த பின்னர் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் திறந்து விட்டுள்ளது. இதனை ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு ஏற்றுக் கொண்டாலும், அந்த நீரில் இன்னும் கதிரியக்கம் எஞ்சியிருக்குமோ என்ற அச்சம் அகலவில்லை. இதையடுத்து, ஜப்பானில் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய சீனாவும், தென் கொரியாவும் தடை விதித்துள்ளன. ஹாங்காங்கும் விரைவில் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தடைகளை எதிர்கொள்ள ஜப்பானும் தயாராகி வருகிறது.

ஜப்பானை 2011-ம் ஆண்டு தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் சேதமடைந்த அணு உலைகளில் இருந்த கதிரியக்க எரிபொருளை குளிர்விக்க ஏராளமான கடல் நீர் உள்ளே 'பம்ப்' செய்யப்பட்டது. கதிரியக்கம் கலந்த அந்த அணுகழிவு நீரைத் தான் ஜப்பான் தற்போது பசிபிக் பெருங்கடலில் திறந்துவிட்டுள்ளது.

ஜப்பான் என்ன சொல்கிறது?

சேதடைந்த புகுஷிமா அணுஉலையை குளிர்க்க பல கோடி லிட்டர் கடல் நீர் பயன்படுத்தப்பட்டது. அந்த கழிவு நீர் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல சுற்றுகள் சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை இனியும் அப்படியே வைத்திருப்பது சரியான தீர்வாகாது என்று வாதிடும் ஜப்பான், அதனை பாதுகாப்பான முறையில் சிறிதுசிறிதாக பசிபிக் பெருங்கடலில் கலந்து நீர்த்துப் போகச் செய்துவிடலாம், அதனால் எந்த பாதிப்பும் வராது என்று கூறுகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள கதிரியக்கத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும் ஜப்பான் அரசு உறுதியளித்துள்ளது.

ஜப்பானின் வாதத்தை பல அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பும் கூட ஜப்பானின் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இது சர்வதேச தரத்திற்கு உட்பட்டது, அது சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் நாம் கவலை கொள்ளத் தேவையில்லாத அளவுக்கு மிகச்சிறியதாகவே அமையும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

சீனாவும், சில விஞ்ஞானிகளும் எதிர்ப்பது ஏன்?

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜப்பானின் புகுஷிமா திட்டத்திற்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. புகுஷிமா அணுஉலை கழிவுநீரை என்னதான் சுத்திரித்தாலும் அதில் ட்ரிட்டியம் மற்றும் கார்பன்-14 ஆகிய கதிரியக்கத் தனிமங்கள் இன்னும் ஆபத்தான அளவுக்கு இருப்பதாகவும், அவற்றை நீக்குவது மிகவும் கடினம் என்று சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் கலப்பதன் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற ஜப்பானின் வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஜப்பான் கலன்களில் தேக்கி வைத்துள்ள அணுஉலை கழிவுநீரை இன்னும் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பெருங்கடலின் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை ஆகியவற்றில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

புகுஷிமா நீரைத் திறக்க ஜப்பான் மீனவர்கள் எதிர்ப்பு

புகுஷிமா அணுஉலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விடும் ஜப்பான் அரசின் திட்டத்தை அந்நாட்டு மக்களே ஒருமனதாக ஆதரிக்கவில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஜப்பானில் சரிபாதி மக்களே அரசின் திட்டத்தை ஆதரிக்கின்றனர். ஜப்பான் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வாழும் மக்களிடையே அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது.

2011-ம் ஆண்டு புகுஷிமா பேரழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அவர்கள், ஜப்பான் அரசின் திட்டத்தால் இன்னும் கூடுதலாக மக்கள் கடல் உணவை புறக்கணிக்கக் கூடும் என்று அஞ்சுகின்றனர். இதனால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் சீர்லைந்துவிடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.

"அணு கழிவுநீரை பசிபிக் கடலில் கலப்பதை விட சிறந்த வேறு பல தீர்வுகள் இருக்கக் கூடும். ஆனால், அவர்கள் இந்த நீரை கடலில் திறந்துவிட முடிவு செய்துள்ளனர். இதனால் உலகிற்கும் பிரச்னைதான். இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது." என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜப்பான் மீனவர்கள் தெரிவித்தனர்.

 
புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவின் எதிர்வினை என்ன?

2011-ம் ஆண்டு புகுஷிமா அணுஉலை விபத்து நேரிட்டதுமே, அந்த பிராந்தியத்தில் பிடிக்கப்படும் மீன்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம், சீனா, தென் கொரியா ஆகியவை தடை விதித்துவிட்டன. தற்போது, புகுஷிமா அணுஉலை கழிவு நீரை திறந்துவிடும் ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிராக சீனா மட்டுமே கடுமையாக எதிர்வினை புரிகிறது. தடையைத் தொடர்ந்தாலும், ஜப்பானின் தற்போதைய நடவடிக்கைக்கு எதிராக தென்கொரியா வெளிப்படையாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. சியோலில் ஜப்பான் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் அங்கே கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம்,EPA

மறுபுறம், சீனாவோ புகுஷிமா பிராந்தியத்திற்கு மட்டுமே இருந்த தடையை, ஜப்பான் முழுமைக்குமாக விரிவாக்கியுள்ளது. ஜப்பானில் இருந்து கடல் உணவு இறக்குமதியை சீனா முற்றிலுமாக தடை விதித்துள்ளது. சீனாவைப் பின்தொடர்ந்து ஹாங்காங்கும் விரைவில் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் ஏற்றுமதி செய்யும் மீன்களில் பாதிக்கும் மேல் இந்த இரு நாடுகளுக்கும்தான் செல்கிறது. அவற்றின் தடையால், ஜப்பானுக்கு சுமார் 8,500 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

ஜப்பான் எப்படி சமாளிக்கப் போகிறது?

2021-ம் ஆண்டு இந்த திட்டத்தை முன்மொழியும் போதே எதிர்ப்பு கிளம்பியதால், இதுபோன்ற எதிர்வினைகள் வரலாம் என்பதை எதிர்பார்த்தே, ஜப்பான் அரசு மீனவர்களை காக்க மாற்றுத்திட்டத்தை ஏற்கனவே வகுத்துள்ளது. புகுஷிமா அணுஉலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்துவிட்ட பிறகு, ஜப்பான் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை விற்பதில் சிரமம் ஏறபட்டால் அரசே அவற்றை வாங்கிக் கொள்ளும் என்று அந்நாடு தெரிவித்துள்ளதாக ஜபபான் டைம்ஸ் இதழ் கூறியுள்ளது.

புகுஷிமா மற்றும் ஜப்பான் பிற பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை வாங்க புதிய நிதி ஒன்று உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

'சூஷி' உணவை விரும்பும் சீனர்கள் என்ன சொல்கிறார்கள்?

சீனா மற்றும் ஹாங்காங்கில் ஜப்பானிய கடல் உணவான 'சூஷி' மக்களிடையே வெகுவாக பிரபலம். ஜப்பான் நடவடிக்கைக்கு எதிர்வினையாக இதுபோன்ற தடைகள் வரக்கூடும் என்று கணித்த உள்ளூர் மக்கள், இப்போதே ஜப்பானிய உணவகங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், கடந்த சில வாரங்களால் ஜப்பானிய உணவகங்களில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கிறது.

"ஜப்பானிய கடல் உணவுகளை தொடர்ந்து ருசிப்பேன். அந்த அளவுக்கு அதன் ருசிக்கு நான் அடிமையாகி விட்டேன்" என்கிறார் ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய உணவகத்திற்கு வெளியே காத்திருக்கும் ஹூ என்ற வாடிக்கையாளர்.

 
புகுஷிமா அணுஉலை கழிவுநீர் கடலில் கலப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய உணவகம்.

புகுஷிமாவில் என்ன நடக்கிறது?

நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் ஒரு மணி முதல் புகுஷிமா அணுஉலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலுக்குள் திறந்து விடப்படுவதாக ஜபபானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கென கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியே இந்த கழிவுநீர் பசிபிக் பெருங்கடலில் கலப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

புகுஷிமா அணுஉலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி லிட்டர் கதிரியக்க நீர் சிறிதுசிறிதாக அடுத்த 30 ஆண்டுகளில் முழுவதுமாக பசிபிக் பெருங்கடலுக்குள் கலக்கப்படும் என்பதே ஜப்பான் அரசின் திட்டம்.

https://www.bbc.com/tamil/articles/c84kyxw85nzo

  • கருத்துக்கள உறவுகள்

That water will contain about 190 becquerels of tritium per liter, which is below the World Health Organisation’s drinking limit of 10,000 becquerels per liter, as per a report by Reuters. A becquerel is one unit of radioactivity.

அந்த நீரில் ஒரு லிட்டருக்கு சுமார் 190 பெக்கரல் டிரிடியம் இருக்கும், இது உலக சுகாதார அமைப்பின் குடி வரம்பான லிட்டருக்கு 10,000 பெக்கரல்களுக்குக் கீழே உள்ளது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது. பெக்கரல் என்பது கதிரியக்கத்தின் ஒரு அலகு.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா உட்பட்ட சர்வதேச அமைப்புகள் எல்லாம் ஜப்பானின் இந்த நகர்வை ஆட்சேபிக்கவில்லை என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.