Jump to content

நேபாள விமான விபத்து 32 பேர் பலி ;16 உடல்கள் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள விமான விபத்து 32 பேர் பலி ;16 உடல்கள் மீட்பு

நேபாளத்தின் பொகாராவில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளனது.

நேபாள விமான விபத்து  32  பேர் பலி ;16 உடல்கள் மீட்பு

காத்மாண்டு,

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது.

இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது

எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், "2 கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர் விமானத்தில் இருந்தனர்.மேலும் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷியர்கள் ஒரு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் (2), அர்ஜென்டினா, பிரான்ஸ் தலா ஒருவர் என மொத்தம் 67 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறி உள்ளார்.

இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்பு பணிகள் கடினமாக உள்ளது என்று நேபாள பத்திரிகையாளர் திலீப் தாபா தெரிவித்து உள்ளார்.

விபத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/India/a-plane-carrying-68-passengers-crashed-in-nepals-pokhara-879324

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 40 பேர் பலி.. ஏனையவர்களின் நிலை என்ன? தேடுதல் தீவிரம் !

15 Jan, 2023 | 02:22 PM

image

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உட்பட 72 பேருடன் பயணித்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. 

322240225_502886778657644_32521937189851

இந்த் விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. 

319549681_882998689793208_57929921621991

இந்த விபத்தில் 40  பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

322295200_829224498178259_79399923717641

இதுவரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

323133885_5705523196230967_4441598189008

 காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

322838579_489808873229438_18397952448038

விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், "2 கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர் விமானத்தில் இருந்தனர். மேலும் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷியர்கள் ஒரு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் (2), அர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 67 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறி உள்ளார். இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்பு பணிகள் கடினமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

 

https://www.virakesari.lk/article/145844

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு ரசியாகாரர்?🤔

புட்டினோடை கொழுவின ஆட்கள் ஒருத்தர் இருந்தாலும், புட்டின் வேலையாயிருக்கும் 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்மண்டுவில் விமானம் இறங்குவதே பயங்கரமாக இருக்கும்.

நீண்ட தூரத்துக்கு இரு மலைகளுக்கு நடுவால் மலைநாட்டில் வாகனம் போவது போல இங்கும் அங்குமாக திசைகள் மாறிமாறி இறங்கிக் கொண்டிருக்கும்.

இருபக்கம் பார்த்தாலும் உயரமான மலைகள் தான் தெரியும்.

விமானம் பதிவாக போவதும் மலைகள் அதைவிட உயரத்தில் இருப்பதும் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் உள்ளூர ஒரு பயமும் லேசாக வரும்.

 

முதல் 10 பயங்கரமான விமானநிலையங்களில் நேபாலில் உள்ள ஒரு சிறிய விமானநிலையமும் உள்ளடங்குகிறது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

காத்மண்டுவில் விமானம் இறங்குவதே பயங்கரமாக இருக்கும்.

நீண்ட தூரத்துக்கு இரு மலைகளுக்கு நடுவால் மலைநாட்டில் வாகனம் போவது போல இங்கும் அங்குமாக திசைகள் மாறிமாறி இறங்கிக் கொண்டிருக்கும்.

இருபக்கம் பார்த்தாலும் உயரமான மலைகள் தான் தெரியும்.

விமானம் பதிவாக போவதும் மலைகள் அதைவிட உயரத்தில் இருப்பதும் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் உள்ளூர ஒரு பயமும் லேசாக வரும்.

 

முதல் 10 பயங்கரமான விமானநிலையங்களில் நேபாலில் உள்ள ஒரு சிறிய விமானநிலையமும் உள்ளடங்குகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில்…. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குண்டு வெடிக்கிற மாதிரி,
நேபாளத்தில்… அனேகமாக ஒவ்வொரு வருடமும் விமான விபத்து  நடைபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுவரை 68 பேர் இறந்துள்ளதாக சிஎன்என் கூறுகிறது.03:36
இதுவரை 68 பேர் இறந்துள்ளதாக சிஎன்என் கூறுகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள விமான விபத்து: 68 உடல்கள் மீட்பு, பயணிகளில் 5 பேர் இந்தியர்கள்

நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து – 40 உடல்கள் மீட்பு, பயணிகளில் 5 பேர் இந்தியர்கள்

பட மூலாதாரம்,KRISHNAMANI BARAL

15 ஜனவரி 2023

நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், ஆனால், அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறினார் காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல்.

“செட்டி கோஞ்சில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தேடுவதற்காக மீட்புப் பணியாளர்கள் கயிற்றில் தொங்கியபடி இறங்கியுள்ளார்கள்,” என்று அவர் கூறினார்.

 

செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிராவுலா, விமானப் பயணிகளில் 53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும் இருந்ததாகக் கூறினார்.

ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து இரண்டு பயணிகள் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்ததாகக் கூறினார்.

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா, மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகக் கூறினார்.

“தற்போது கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.

போக்கரா சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர், விமானம் தரையிறங்க 10 முதல் 20 வினாடிகள் மட்டுமே இருந்தன எனக் கூறினார்.

விபத்து குறித்து நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி கூறுகையில், “போக்கரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேதி ஆற்றின் அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து நொறுங்கி தீப் பிடித்தது. 120 ரேஞ்சர்களும், 180 ஜவான்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ” என்றார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, 72 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் விமானம் போக்கரா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விமானத்தில் மொத்தம் 68 பயணிகள், 4 பணியாளர்கள் இருந்ததாக காத்மண்டு போஸ்ட் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. எட்டி ஏர்லைன்ஸின் இந்த விமானம் பழைய விமான நிலையத்திற்கும் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்திற்குள்ளானது.

நேபாளத்தில் 68 விமான பயணிகளுடன் பயணிகள் விமானம் விபத்து – மீட்புப் பணி தீவிரம்

பட மூலாதாரம்,FACEBOOK/NEPAL PRESS

எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்துலா ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறுகையில், “விமானத்தில் 68 பயணிகளுடன் நான்கு பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் எத்தனை பேர் உயிர் பிழைத்தனர் என்பது இன்னும் தெரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி, “போக்கரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள செட்டி ஆற்றின் பள்ளத்தாக்கில் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 120 ரேஞ்சர்களும் 180 ராணுவ வீரர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” எனக் கூறினார்.

தொடரும் மீட்புப் பணி

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

காத்மண்டுவில் இருந்து இரவு 10:32 மணிக்கு விமானம் புறப்பட்டது.

தற்போது விபத்து நடந்த இடத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக நேபாள் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் விமானத்திலிருந்து புகை எழும்புவதாகவும் அதை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தரையிறங்கும்போது விமானம் விபத்திற்குள்ளானது. விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் புஷ்ப கமல் தஹால், அமைச்சர்கள் குழுவின் அவசர கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானத்தில் ஏற்பட்ட தீ தற்போது கிட்டத்தட்ட அணைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு 5 பேர் கொண்ட கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. இந்த விபத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கான எண்களும் வெளியிடப்பட்டுள்ளன:

தூதரகத்தின் உதவி எண்கள்: I) காத்மாண்டு: ஸ்ரீ திவாகர் சர்மா:+977-9851107021 II) போக்கரா : லெப்டினன்ட் கர்னல் ஷஷாங்க் திரிபாதி: +977-9856037699 தூதரகத்தின் ஹெல்ப்லைன் தொடர்புகள்: தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கண்காணித்து வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cqv3y0e56ezo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளத்தில் துக்கதினம்!

விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளத்தில் துக்கதினம்!

சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மிக மோசமான விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளிகள் துக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

நேபாள பிரதமர் திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக அறிவித்தார், மேலும் பேரழிவுக்கான காரணத்தை ஆராய அரசாங்கம் ஒரு விஷேட குழுவை அமைத்தது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காராவுக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 68பேர் உயிரிழந்தனர்.

யெட்டி எயார்லைன்ஸ் விமானம், விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நூற்றுக்கணக்கான நேபாள மீட்பு பணியாளர்களை உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இருள் காரணமாக இரவு முழுவதும் இடைநிறுத்தப்பட்டது, ஆனால் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தொடங்கியுள்ளது.

முன்னதாக, உள்ளூர் தொலைக்காட்சி அறிக்கைகள் விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள சேதி ஆற்றின் பள்ளத்தாக்கில் தரையில் மோதிய விமானத்தின் எரிந்த பகுதிகளைச் சுற்றி மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதைக் காட்டியது.

72 பயணிகள் மற்றும் பணியாளர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற போது, பலத்த காயம் அடைந்த பலர் உயிர் பிழைத்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://athavannews.com/2023/1320255

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“விமானம் ஒரு வெடிகுண்டு போல வெடித்தது” – நேபாள விமான விபத்தை நேரில் கண்ட சாட்சிகள்

நேபாள விமான விபத்து

பட மூலாதாரம்,ASHOK DAHAL/BBC

4 மணி நேரங்களுக்கு முன்னர்

நேபாளத்தின் போக்கராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்துக்கு கடைசி நேரத்தில் ‘தரையிறங்குவதற்கான ஓடுதளத்தை மாற்றியது காரணமா என்ற கேள்வி நிலவுகிறது.

பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணித்த விமானம், நேபாள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக விபத்திற்குள்ளானது. அதில் 68 பேர் உயிரிழந்துள்ளதை நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு ஐந்து பேர் கொண்ட ஆணையத்தை அமைத்துள்ளது.

பிபிசி நேபாளி சேவையின் செய்திப்படி, இதுவரை நடந்த விசாரணைகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தரையிறங்கும் முன் விமான ஓடுதளத்தை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது குறித்துப் பெரும்பாலான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

 

விமான நிலைய அதிகாரி ஒருவர், போக்கராவில் விழுந்து நொறுங்கிய எட்டி ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்து 24.5 கிமீ தொலைவு வரை நெருங்கிய நேரத்தில் தரையிறங்கும் தளத்தை மாற்றியது எனக் கூறினார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கேப்டன் கமல் கேசி தலைமையில் விமானத்தைத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுவரை விமானம் மற்றும் அது பறப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

ஆனால், திடீரென விமானத்தில் இருந்த விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடம், “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

“விமானிக்கு ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அவர் ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரினார்,” என்று அதிகாரி கூறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

‘விமானம் கீழே விழுந்தது’

தரையிறங்குவதற்கான அனுமதி கிடைத்ததும், விமானம் ‘விசிபிலிட்டி ஸ்பேஸில்’ வந்துவிட்டது. அதாவது, கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும் பகுதிக்கு வானில் நெருங்கி வந்துவிட்டது. இதன் அடிப்படையில் விமான ஓடுதளத்தில் 10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஆனால், “திருப்பத்தின்போது விமானத்தின் தரையிறங்கும் கியர் திறக்கப்பட்டது. அப்போது விமானம் ‘ஸ்தம்பித்து’ கீழே விழத் தொடங்கியது,” என்று பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறிப் பேசிய விமான நிலையத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்து சார்ந்த பதங்களில் ‘ஸ்டால்’ என்பதற்கு விமானம் அதன் உயரத்தைத் தக்கவைக்கத் தவறியதைக் குறிக்கிறது.

அந்த அதிகாரி பேசும்போது, “கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து விமானம் தெளிவாகத் தெரிந்தது,” என்றார்.

போக்கரா விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விஷ்ணு அதிகாரியும், “ஞாயிற்றுக்கிழமை இங்கு வானிலை தெளிவாக இருந்ததாகவும் அனைத்து விமானங்களும் வழக்கமானவையாக இருந்ததாகவும்” கூறினார்.

நேபாள விமான விபத்து

பட மூலாதாரம்,KRISHNA MANI VIRAL

நேரில் கண்ட சாட்சிகள் என்ன சொல்கிறார்கள்?

பிபிசியின் நேபாள சேவையுடனான உரையாடலில், சில நேரில் கண்ட சாட்சிகள், தரையிறங்குவதற்கு முன்பாக விமானம் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறினார்கள்.

விபத்து குறித்த கூடுதல் தகவலுக்காக விபத்தை நேரில் கண்ட பல சாட்சிகளிடம் பிபிசி பேசியது. அவர்களுடைய கூற்றுப்படி, இவையனைத்தும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு திடீரென நடந்துவிட்டன.

இதுகுறித்து 43 வயதான கமலா குருங் பேசியபோது, “ என் கண் முன்னே விமானம் எரிவதைப் பார்த்தேன்,” என்றார்.

கமலா குருங், கரிபடன் பகுதியில் வசிப்பவர். அங்குதான் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. விமானத்தின் ஜன்னல்கள், தேநீர் கோப்பைகள், எரிந்த பொருட்கள் அங்கு சிதறிக் கிடக்கின்றன.

நேபாள விமான விபத்து

பட மூலாதாரம்,EMPICS

‘விமானம் வெடிகுண்டு போல வெடித்தது’

விபத்தை நேரில் பார்த்த குழந்தைகள் பயந்து வீட்டிற்குள் ஓடியதாக கமலா கூறுகிறார்.

“காலை 11:30 வரை அனைத்தும் சாதாரணமாக இருந்தது. நான் வழக்கம் போல மொட்டை மாடியில் குழந்தைகளுடன் சூரியக் குளியல் செய்தேன். வீட்டிலிருந்து விமானங்கள் வந்து செல்லும் சத்தம் வழக்கமாகக் கேட்கக்கூடியது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் விமானம் மேலே செல்லும் சத்தம் வழக்கத்திலிருந்து வேறுபட்டிருந்தது. நான் பார்த்த நேரத்தில், விமானம் கீழே விழுந்துவிட்டது,” என்று கமலா குருங் கூறுகிறார்.

இதுபோன்ற பயங்கரமான விமான விபத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும் கமலா கூறினார்.

“விமான கீழே விழுந்தபோது, மிகப்பெரிய சத்தம் கேட்டது. அதற்குப் பிறகு, சிறிது நேரத்திற்குக் கருமேகம் மட்டுமே தெரிந்தது. அதைப் பார்த்த போது, தீப்பிழம்புகள் எழத் தொடங்கின,” என்றார் அவர்.

அந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் சில உயரமான வீடுகள் உள்ளன. மற்றொரு உள்ளூர்வாசியான பால் பகதூர் குருங் பேசியபோது, “விமானம் மிகவும் தாழ்வாக வந்தது. பள்ளத்தாக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டு போல வெடித்துச் சிதறியது. சுற்றியுள்ள காட்டுப்பகுதியும் தீப்பிடித்து எரிந்தது,” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் போக்கராவில் விபத்திற்குள்ளான செய்தி பரவியது.

குடியிருப்புப் பகுதியில் விழுந்த விமான பாகங்கள்
 
படக்குறிப்பு,

குடியிருப்புப் பகுதியில் விழுந்த விமான பாகங்கள்

புறப்படவிருந்த விமானம்

போக்கராவில் உள்ள சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. கிழக்கு, மேற்கு திசைகளில் இருந்து விமானங்கள் அங்கு தரையிறங்குகின்றன.

விமானங்கள் கிழக்கிலிருந்து தரையிறங்குவதற்கு ஓடுதளம் 30 மற்றும் மேற்கிலிருந்து தரையிறங்குவதற்கு ஓடுதளம் 12ஐ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, விபத்தில் பலியான விமானி ‘விஷுவல் ஃப்ளைட் ரூல்ஸ்’ நுட்பத்தைப் பயன்படுத்தித் தரையிறங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

விஆர்எஃப் தொழில்நுட்பம், தெளிவான வானிலையில் விமானத்தைப் பறக்க வைக்கவும் தரையிறக்கவும் விமானிகளால் பயன்படுத்தப்படுகிறது.

“விமானம் முதலில் தொடர்புகொண்டபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஓடுபாதை 30இல் தரையிறங்க அனுமதியளித்தது. ஆனால், 24.5 கி.மீட்டருக்கு அருகில் வந்த பிறகு, விமானம் ஓடுபாதை 12இல் தரையிறங்க அனுமதி கோரியது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாள விமான விபத்து

விமானத்தின் விமானி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் “நான் எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன், நான் மேற்கிலிருந்து தரையிறங்குகிறேன்,” என்று கூறியுள்ளார்.

புதிய விமான நிலையத்தின் தொழில்நுட்பம் தான் விபத்திற்குக் காரணமா என்ற கேள்விக்கு விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விஷ்ணு அதிகாரி, “இந்த நேரத்தில் எதையும் கூறுவது கடினம். விரிவான விசாரணைக்குப் பிறகே விபத்திற்கான காரணம் தெரிய வரும்,” என்றார்.

போக்கரா விமான விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய 5 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. இதோடு, விமான விபத்துகளைத் தடுக்க, அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களும் விமானம் கிளம்புவதற்கு முன்பாக தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

விபத்து நடந்த பிறகு, நேபாளில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான எண்களை வெளியிட்டுள்ளது:

  • காத்மாண்டு: ஸ்ரீ திவாகர் சர்மா:+977-9851107021
  • போக்கரா : லெப்டினன்ட் கர்னல் ஷஷாங்க் திரிபாதி: +977-9856037699

https://www.bbc.com/tamil/articles/crg68dvr53zo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில நிமிடங்களிற்குள் கலைந்த விமானியாகும் கனவு - ஒரு பெண் விமானியின் துயரக்கதை

By RAJEEBAN

16 JAN, 2023 | 04:09 PM
image

16 வருடங்களிற்கு முன்னர்  யெட்டி எயர்லைன்சின் விமானவிபத்தில் தனது முதல் கணவரை பறிகொடுத்த இணை  விமானி அஞ்சு கத்திவாடா   நேற்று நேபாளத்தில் இடம்பெற்றவிமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டிவாடாவின் முன்னாள் கணவர் தீபக் பொஹரேல் 16 வருடங்களிற்கு முன்னர் ( 2006 ஜூன் 21ம் திகதி) ஜூம்லாவில் இடம்பெற்ற யெட்டி எயர்லைன்ஸ் விபத்தில் உயிரிழந்தார்.

images__15_.jpg

அவரது மரணத்தின் பின்னர் அஞ்சு விமானியாக பணியாற்ற ஆரம்பித்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது கணவரின் மரணத்தின் பின்னர் கிடைத்த காப்புறுதி பணத்தின் மூலம் அவர் விமானியாவதற்கான பயிற்சிகளை பெற்றார் என யெட்டி எயர்லைன்சின்  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அஞ்சு விமானியாவதற்கு சில நிமிடங்களே இருந்தன விபத்திற்குள்ளான விமானம் ஆபத்தின்றி தரையிறங்கியிருந்தால் விமானியாகும் அவரது கனவு நினைவாகியிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமானமே அவர் இணை விமானியாக பணியாற்றும் இறுதி விமானம் என்ற நிலை காணப்பட்டது

அஞ்சு 6400மணித்தியாலங்களிற்கு மேல் விமானத்தை செலுத்தியுள்ளார் இதேவேளை விபத்திற்குள்ளான விமானத்தின் விமானி கமால் கே.சியின் உடல் அடையாளம்காணப்பட்டுள்ளது எனினும் அஞ்சு கத்திவாடாவின் உடல் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

https://www.virakesari.lk/article/145932

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நேபாள விமான விபத்து: 72 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமானிகளின் தவறு

விமானிகளின் தவறால் உயிரிழந்த 72 பேர், நேபாள விமான விபத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

விபத்தில் சிக்கியுள்ள ஏடிஆர் 72 விமானம்

5 மணி நேரங்களுக்கு முன்னர்

நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 72 பேர் பலியான சம்பவத்தில் விமானிகள் தவறுதலாக விமானம் இயங்கத் தேவையான ஆற்றல் விநியோகத்தை நிறுத்தியதே காரணம் என்று அரசுத் தரப்பு விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இது கடந்த ஜனவரி 15 அன்று தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான போகராவுக்குச் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம். கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மோசமான விமான விபத்துகளில் ஒன்று இது.

ஜனவரி 15 அன்று ஏடிஆர் 72 விமானக் குழுவினருக்கு காத்மாண்டு மற்றும் போகரா இடையே அது மூன்றாவது செக்டர் பயணம்.

இந்தத் தனியார் விமானம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி 1.5 கிமீ (0.9 மைல்) தொலைவில் உள்ள சேதி நதி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் நொறுங்கியது. இந்நிலையில் இங்கு மீட்புப் பணிக்காக உடனடியாக நூற்றுக்கணக்கான நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேபாள விமான விபத்து: 72 பேரை பலிகொண்ட விபத்தில் விமானி செய்த தவறு என்ன?

"அதன் வேகம் காரணமாக, தரையில் மோதுவதற்கு முன்பு விமானம் 49 நொடிகள் வரை மேலே பறந்ததாக" விசாரணைக் குழுவின் உறுப்பினரான விமானப் பொறியாளர் தீபக் பிரசாத் பாஸ்டோலா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

விமானிகள் ஃபிளாப் லிவரை இயக்குவதற்குப் பதிலாக, விமானத்தின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் கண்டிஷன் லிவர்களை ஃபெதரிங் நிலையில் வைத்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார். மேலும் இதுவே இன்ஜினை "இயங்கு நிலைக்கு உந்தாமல் இயங்கா நிலைக்குத் தள்ளிவிடும்" என்று விளக்குகிறார் திரு பாஸ்டோலா.

அந்த அறிக்கையின்படி, "உள்நோக்கமின்றி இரண்டு இன்ஜின் ப்ரொப்பல்லர்களும் ஃபெதரிங் நிலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, உடனே பிரச்னையைக் கண்டறிந்து, பணியாளர்குழு எச்சரிக்கை செய்த போதிலும் சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்க விமானிகள் தவறிவிட்டதாக" கூறப்பட்டுள்ளது.

நேபாள விமான விபத்து: 72 பேரை பலிகொண்ட விபத்தில் விமானி செய்த தவறு என்ன?

பட மூலாதாரம்,EMPICS

தகுந்த தொழில்நுட்ப மற்றும் திறன் அடிப்படையிலான பயிற்சி குறைபாடு, அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம், நிலையான இயக்க செயல்முறைகளைக் கடைபிடிக்காதது ஆகியவை விபத்துக்கான காரணங்களாக இருப்பதாக அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, அந்த விமானத்தின் விமானி அறை பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும், விமானம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும், குறைபாடுகள் ஏதும் அதில் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த டஜன் கணக்கான புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர்வாசியான திவ்யா தக்கால், ஜனவரி மாதம் இந்த விபத்து 11 மணியளவில் (05:15 GMT) நடந்தபோது விமானம் மேலிருந்து கீழே விழுந்ததைப் பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு விரைந்ததாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நேபாள விமான விபத்து: 72 பேரை பலிகொண்ட விபத்தில் விமானி செய்த தவறு என்ன?

பட மூலாதாரம்,FACEBOOK/NEPAL PRESS

"நான் அங்கு சென்றபோது, விபத்து நடந்த இடத்தில் ஏற்கெனவே கூட்டமாக இருந்தது. விமானத்தில் எரிந்துகொண்டிருந்த தீயில் இருந்து பெரும் புகை வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அங்கு ஹெலிகாப்டர்கள் வந்தன," என்று கூறினார் அவர்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக நேபாள விமானங்களைத் தனது வான்வெளியில் தடை செய்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

தொலைதூர ஓடுபாதைகள் மற்றும் திடீர் வானிலை மாற்றங்கள் அபாயகரமான நிலைமைகளை ஏற்படுத்துவதால், நேபாளத்தில் விமான விபத்துகள் ஒன்றும் அசாதாரணமானது அல்ல.

கடந்த மே மாதம்கூட, எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தாரா ஏர்197 விமானம் மலைப்பகுதியில் மோதியதில் 22 பயணிகள் மற்றும் அதன் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c28ynv1vdleo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.