Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!!

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷிய படைகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் தரைமட்டமாகின.

உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!!

கீவ், 

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.

உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கீவ் நகர் மீது மீண்டும் கவனம்

போர் தொடங்கிய சமயத்தில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக முயன்றன. ஆனால் உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது கவனத்தை திருப்பிய ரஷிய படைகள் கடுமையான தாக்குதல்கள் மூலம் பல நகரங்களை ஆக்கிரமித்தன.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரஷிய படைகள் மீண்டும் கீவ் நகர் மீது கவனத்தை குவித்தன. அங்கு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி சரமாரியாக தாக்குதல்களை நடத்தின. எனினும் புத்தாண்டு (ஜனவரி 1-ந் தேதி) முதல் கீவ் நகரில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை.

ஏவுகணை மழை

இந்த நிலையில் நேற்று அதிகாலை கீவ் நகர் மீது ரஷிய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கின. ரஷியாவின் ஏவுகணை மழையில் கீவ் நகரம் அதிர்ந்தது. இதில் 18 வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஏவுகணை தாக்குதலில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

முன்னதாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள சோலிடர் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷியா நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால் அதை மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சோலிடர் நகரில் சண்டை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/World/russian-missiles-hit-ukraines-capital-kyiv-kharkiv-and-more-879291

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் ஏவுகணைகள்…. இத்துப் போன, உக்கல் ஏவுகணைகள் என்றபடியால்…
உக்ரைன் மக்கள், பயப்படத் தேவையில்லை.
பங்கருக்குள் பதுங்கி  இருக்காமல், வெளியே வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் ஏவுகணைகள்…. இத்துப் போன, உக்கல் ஏவுகணைகள் என்றபடியால்…
உக்ரைன் மக்கள், பயப்படத் தேவையில்லை.
பங்கருக்குள் பதுங்கி  இருக்காமல், வெளியே வாருங்கள்.

எல்லாம் உக்கல் பேணியிலை செய்தது எண்டபடியால உக்ரேனுக்கும் செலென்ஸ்சிக்கும் நேட்டோவுக்கும் ஒரு சேதாரமும் இருக்காது. 

உவையள் ரஷ்யாவுக்கு எதிராய் போட்ட பொருளாதார தடையளாலை ரஷ்ய சனம் பட்டினியிலை வாடுதுகளாம்.......

இது  சொர்க்க லோகத்திலை.....😎

 

இந்த அலங்கோலம் ரஷ்யாவிலை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முக்கியமான திருப்பம், ருஷ்யா ஏவுகணைகள் பெரும்பாலும் உக்கிரேனிய ஏவுகணை / போர் விமான எதிர்ப்பு உத்திகள் மற்றும் ஏவுகணைகளளை ஏய்த்து (அதாவது நாடு வேனில் தஹகி அழிக்கப்படாமல்) உக்கிரைன் நிலப் பகுதியில் தாக்கி உள்ளது.

அனால், இது வேறு  இடத்தில உதைக்கிறது.

இதுவரை, அமெரிக்க / நேட்டோ செய்மதிகள், போலந்து, ரோமானிய வான்பரப்பில் ஏறத்தாழ 24 மணிநேரமும் பாராது கொண்டு இருக்கும் அமெரிக்க AWACS மற்றும் கருங்கடல்  பகுதியில் பறந்து  கொண்ண்டு இருக்கும் அமெரிக்கா / நேட்டோ ஆளில்லா உளவு விமானம் (uav, drones)  =, உக்கிரனுக்கு ருசியா எவெருகனை தாக்குதல் பற்றி முன் அறிவித்தல், சாத்தியமான பாதைகள் போன்றவற்றை அறிவிக, உக்கிரேனும் அதை பெரும்பாலும் பாவித்தே எதிர் தாக்குதல் நடத்தியது.

ஆனாலும் ருசியா நீர் மூக்கிகள் கப்பல்கள் உக்கிரைன் பக்கம் கருங்கடலில் சென்றது பகிரங்கமானது. ரஷ்யா தாக்குதல் அறிகுறி பகிரங்கமானது   

இந்த முறை நேட்டோ / அமெரிக்கா முன் உளவு, அறிவித்தலில் ஏதோ பிசகிவிட்டது போலவே வெளியில் தெரிகிறது. ரஷ்யாவின் எலக்ட்ரானிக் யுத்தம் நேட்டோ / அமெரிக்கா செய்மதி, ஆளில்லா உளவு விமானம் (uav, drones)   மற்றும் awacs இந்த கண்களை மறைத்து இருக்கலாம் என்பது ஓர் சாத்திய கூறு.

மேற்கு (முதன்மை ஊடகங்கள்)  மனித அழிவு, எத்தனை பொதுமக்கள்  கொல்லப்பட்டதை தூக்கி பிடிப்பது, ருஸ்சியா  எவுகணைகள் உக்கிரைன் ஐ பெரும்பாலும் தாக்கி  உள்ளது என்பதை ஓர் ஓரமாக வைப்பதற்கு. (மனித அழிவு இருக்காது என்று ஒரு பொது நான் சொல்லமாட்டேன்).

முன்னைய தாக்குதல்களில், மேற்கு முதன்மை ஊடகங்கள், எத்தனை ருசியா ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதிலேயே குறியாக இருந்தன.  

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பிட்டு தான் நிலையை பார்க்க வேண்டும். மேற்கு பல ஊடகங்கள் துள்ளி குதித்தன உக்கிரைன் இல் நடப்பது இனப்படுகொலை என்று.  அமெரிக்கா அதிகாரிகளும்ம் வெளிப்டையாக சொல்லினர். 
எனது நினைனைவில் - Biden கூட அப்படியான நிலைக்கு ஒப்பிட்டு இருந்தார் (தவறு என்றால் சுட்டி காட்டவும்).

அனால், உ.ம். ஆக ஈராக் இல் முதல் 2 வாரத்தில் நடந்த shock and awe இல் அழிந்த பொதுமக்களின் மிகக்குறைந்த மதிப்பீடு 7000. இவ்வளவு  கதைக்கும் மேற்கு, இறப்பு / அழிவு ந்த காலப்  பகுதியில் கணக்கெடுக்கப்படுவதை தடுத்து மற்றும் குழப்பியது.

நான் இங்கு ருசியா ஆதரவுக்கு கதைக்கவில்லை. அனால், ரஷ்யா முதலில் ஓர் மிருதுவான தன்மை ராணுவ நடவடிக்கையே மேற்கொண்டது என்பதற்கு வலுவான   சூழ்நிலை ஆதாரம்.   

 

https://www.theguardian.com/world/live/2023/jan/17/russia-ukraine-war-live-7000-civilians-confirmed-killed-but-actual-toll-considerably-higher-says-un#top-of-blog

Russia-Ukraine war live: 7,000 civilians confirmed killed, but actual toll ‘considerably higher’, says UN

UN confirms 7,031 civilian deaths but some areas where most intense fighting has occurred inaccessible; ex-Wagner member seeking asylum in Norway

 
Martin Belam (now) and Helen Sullivan (earlier)
Tue 17 Jan 2023 09.33 GMT

 

 
 

“Most of the civilian casualties recorded were caused by the use of explosive weapons with wide area effects, including shelling from heavy artillery, multiple launch rocket systems, missiles and airstrikes,” an OHCHR statement said.

The UN rights office said it had confirmed 7,031 civilian deaths but believes actual casualty tolls are “considerably higher” given the pending corroboration of many reports and the inaccessibility of areas where intense fighting is taking place.

Most of the recorded civilian deaths occurred in government-held areas of Ukraine – 6,536 compared with 495 recorded in Russian-held areas. OHCHR did not attribute responsibility for the deaths.

Ukraine says the numbers of civilians killed could run into the tens of thousands. Both countries deny targeting civilians.

  •  
  •  
Updated at 06.29 GMT
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.