Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஐ முழுமையாக அமுல்படுத்த இடமளியோம் - சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ முழுமையாக அமுல்படுத்த இடமளியோம் - சரத் வீரசேகர

By T. Saranya

18 Jan, 2023 | 09:31 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கவே 69 இலட்ச மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இடமளிக்க முடியாது. வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். வாழ்க்கை  செலவுக்காக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தற்போது நாட்டின் தேசியத்திற்காக போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை சற்று முன்னேற்றமடைந்த நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் ஒருசிலர் தற்போது பொருளாதார ஸ்தீரத்தன்மையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்கள்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் எமது அரசாங்கம் மக்களிடம் உண்மையை குறிப்பிடவில்லை. பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி சட்டத்திற்கு முரணாக செயற்பட்டார்கள். சட்ட ஒழுங்கை நிலைப்பாட்டியதை தொடர்ந்து பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வீடு தீப்பற்றி எரியும் போது அந்த தீயில் இருந்து புகைப்பிடிப்பதற்காக தீ எடுப்பதை போன்று தமிழ் அரசியல் கட்சிகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாட்டை பிளவுப்படுத்துமாறு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதிக்கு கடுமை அழுத்தம் பிரயோகிக்கின்றன.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. இலங்கை நிலப்பரப்பினால் சிறிய நாடு, ஒன்பது மாகாணங்கள் ஊடாக அரச நிர்வாகம் வேறுப்படுத்தப்பட்டுள்ளமை அவசியமற்றது.

இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வரலாற்று ரீதியில் பல்லாயிரம் கணக்கானோர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்தி தான் 69 இலட்ச மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தேவைகளுக்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இந்தியாவின் தேவைக்காகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டது. நிறைவேற்றுத்துறையை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முன்னிலைப்படுத்தி செயல்படும் இலங்கையில் 13 ஆவது திருத்தம் அவசியமற்றது.13 ஆவது திருத்தம் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு பகிரப்பட வேண்டும் என தமிழ் தலைமைகள் அழுத்தம் பிரயோகிக்கிறார்கள்.

காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் காணப்பட வேண்டும் வேண்டும்,மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்க வேண்டிய தேவை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே காணி அதிகாரம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது.பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் மாத்திரம் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் பொறுப்பாக்கினால் பொலிஸ் ஆணைக்குழு எவ்வாறு சுயாதீனமாக செயற்படும்.நாட்டில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதுடன், விடுதலை புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.

அரசியமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஒருசில விடயங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை வெள்ளை யானை போன்று பயனற்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள் தேசியத்திற்காக போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/146058

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அரசியல் அமைப்பு சொல்வதை இவர் தடுக்க முடியாதே...🤔

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

நாட்டின் அரசியல் அமைப்பு சொல்வதை இவர் தடுக்க முடியாதே...🤔

வடமராட்சியில் இரண்டு தமிழ் போலிஸ்காரர்கள் சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வன்முறை செய்து பிடிபட்டபிறகும் உங்களுக்குத் தெரியவில்லையா தமிழன் கைகளில் போலீஸ் அதிகாரம் வந்தால் என்னவாகும் என அதுக்காகச் சிங்களத்தின் அரச பொறிமுறை நல்லது எனச்சொல்லவில்லை.

சரி இளவாலையில் காலையில் வெளியில வந்த ஒரு பதுண்ம வயதுப் பெண்ணை ஒரு பொறுக்கி பாலியல் பலாத்காரம் செய்தானே அவன் இப்போதும் பிணையில் வெளியில வந்து சந்தோசமாகக் கசிப்புக் காச்சுறதும் கஞ்சா விக்கிறதும் ஐஸ் போதைப் பொருள் விக்குறதுமாத் திரிகிறான் அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்றபோதும் அவனக் கண்டேன் இவங்களை வெளியில எடுத்து விட்டது சிங்கள அப்புக்காத்துமார் இல்லையே தமிழந்தானே

அதுவும் தமிழ் பெண் வக்கீல் அப்ப எங்களிட்டை அதிகாரம் வந்தால் என்ன செய்வினம்

ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் பெயரில் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டு பதியப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயரில் பல மில்லியம் ரூபாய் பணத்தினை பெற்று ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள் அதில் இப்போதைய யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும் தொடர்பு என அப்போது பேச்சு வந்ததே அப்போ எங்களிடம் நிர்வாகம் இருந்தால் என்னவாக இருக்கும்.

ஒரு உதாரணத்துக்கு

சந்திரிகா காலத்தில் "சத்துட்டு உயன" எனும் பெயரில் ஒரு சிறுவர் நலன் போசாக்கும் பூங்காகள் அமைக்கும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதில் யாழ் மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடாக 1995 ல் பல இலட்சம் ரூபாக்கள் அதில் முத்திரைச் சந்தையில் கல்விக்கந்தோருக்குச் சொந்தமான அரச காணியில் நிர்மானிக்கப்பட்டதுதான் கிட்டு பூங்கா ஆனால் சிங்களவன் இடிக்கும்போது அரச அதிகாரிகள் அதை இடிக்க வேண்டாம் இப்படியான நிதி ஒதுக்கீட்டில்தான் இந்தப் போங்கா நிர்மானிக்கப்பட்டது என சொல்லவேயில்லை. அவர்களுக்கு புலிகள் மேலிருந்த வெறுப்பு சொல்லாமல் விட்டுவிட்டார்கள் காரணம் யுத்த காலத்தில் அனேகமான திணைக்கள ஊழியர்களுக்கு வேலை இல்லை சும்மா கச்சேரியில் போய் கையெளுத்து வைத்துவிட்டு வீட்டுக்குக் கறி புளு வாங்கிக்கொண்ட போய் விடுவினம் புலிகள் அதுக்கு ஆப்பு வைத்து புனர் நிர்மான வேலைகள் மற்றும் புனர்வாழ்வு வேலைகளுக்குள் அவர்களை விட்டு வேலைவாங்கியது பிடிக்கவில்லை. அன்றைட திகதியில் புலிகளைப்பற்றி அவர்கள் கதைக்கும்போது "மற்றப்பாட்டி" "அவையள்" எனச்சொல்லித்தான் கதைப்பார்கள் உங்களுக்கெ தெரியும் குடாநாட்டில் இப்படியான் சொல்லாடலைக்கொண்டு குறிப்பிடுவது யாரை, யார் என.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியிலை மிலிந்த ஓடித்திரியிறார். இங்க இவர் குரைக்கிறார். ஒருவேளை 'றோ'வின்ர ஆலோசனையோ தெரியேல்லை.

13டே தேவையில்லை. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், 1833இற்கு முன்னான அதாவது, பிரித்தானிய இணைப்புக்கு முன்னான நிலைக்கு போவதே சிறந்தது. இலங்கையை மூன்று நிர்வாக அலகாக ஆள்வதற்குரியதாக மாற்றினால் நிறையப் பயனுடையதாகும். கோட்டை இராச்சியம்,கண்டி இராச்சியம் மற்றும் யாழ்ப்பாண இராச்சியம் என்று மாத்திவிட்டா இலங்கையில் அமைதிவந்திடும். எல்லோரும் மகிழ்வாக வாழலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nochchi said:

டெல்லியிலை மிலிந்த ஓடித்திரியிறார். இங்க இவர் குரைக்கிறார். ஒருவேளை 'றோ'வின்ர ஆலோசனையோ தெரியேல்லை.

13டே தேவையில்லை. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், 1833இற்கு முன்னான அதாவது, பிரித்தானிய இணைப்புக்கு முன்னான நிலைக்கு போவதே சிறந்தது. இலங்கையை மூன்று நிர்வாக அலகாக ஆள்வதற்குரியதாக மாற்றினால் நிறையப் பயனுடையதாகும். கோட்டை இராச்சியம்,கண்டி இராச்சியம் மற்றும் யாழ்ப்பாண இராச்சியம் என்று மாத்திவிட்டா இலங்கையில் அமைதிவந்திடும். எல்லோரும் மகிழ்வாக வாழலாம். 

நொச்சி,

வெள்ளைக்காரர் கிளம்ப முதல், இந்தியாவில் இருந்து வெட்டிக்கொண்டு ஓடிய முதல் நாடு பர்மா. பின்னர் சுதந்திரம் வாங்க முதல் ஓடியது பாகிஸ்தான். அத்துடன் சேர்த்து கிழக்கு பாகிஸ்தானாக கிளம்பி ஓடியது இன்றய பங்களாதேஸ்.

ஆக, படித்த முட்டாள்களாக, எமது தமிழ் தலைமைகள் சிங்கள தலைமைகளினால் ஏமாத்தப்பட்ட நிகழ்வின் துயரமே இன்றும் தொடர்கிறது.

பிரித்தானியா இனி மீண்டும் வரவோ, இந்திய பேரரசினை மீறி, ஆதிக்கம் செலுத்தவோ சந்தர்ப்பம் இல்லை.

ஆயினும் அமெரிக்கா நினைத்தால் நீங்கள் சொல்வது நிகழும். அப்படி நிகழ, சீனாவின் முனைவால், இந்தியா வேறு வழி இன்றி அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளின் முனைவுக்கு வழக்கம் போலல்லாமல் வழி விட வேண்டும்.

ஆக, இன்றய நிலையில் சீனாவே எமது நண்பன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

டெல்லியிலை மிலிந்த ஓடித்திரியிறார். இங்க இவர் குரைக்கிறார். ஒருவேளை 'றோ'வின்ர ஆலோசனையோ தெரியேல்லை.

13டே தேவையில்லை. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், 1833இற்கு முன்னான அதாவது, பிரித்தானிய இணைப்புக்கு முன்னான நிலைக்கு போவதே சிறந்தது. இலங்கையை மூன்று நிர்வாக அலகாக ஆள்வதற்குரியதாக மாற்றினால் நிறையப் பயனுடையதாகும். கோட்டை இராச்சியம்,கண்டி இராச்சியம் மற்றும் யாழ்ப்பாண இராச்சியம் என்று மாத்திவிட்டா இலங்கையில் அமைதிவந்திடும். எல்லோரும் மகிழ்வாக வாழலாம். 

சீனாவின் கடனை இந்தியா அடைக்க உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். அஜிற் டோவால் மோதியின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் தான் மிலிந்த மொறகொட பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

. கோட்டை இராச்சியம்,கண்டி இராச்சியம் மற்றும் யாழ்ப்பாண இராச்சியம் என்று மாத்திவிட்டா இலங்கையில் அமைதிவந்திடும். எல்லோரும் மகிழ்வாக வாழலாம். 

 அது நடக்க சாத்தியமில்லை! அப்படி ஒன்று வந்தால் குறுக்கால, அங்கால இங்கால என்று ஓடித்திரியிற குழு பொத்திக்கொண்டு இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

சீனாவின் கடனை இந்தியா அடைக்க உள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.

 இலங்கை சிங்கள அரசியலாளரின் முட்டாள்தனம், பொருளாதார நெருக்கடி, இனப்பிரச்சனை இவற்றை காரணமாக்கி இலங்கையை தம் ஆளுகைக்குள் வைத்திருக்க பல நாடுகள் பகீரத பிரயத்தனம் எடுக்கின்றன. சீனாவிடம் இருந்து இலங்கையை மீட்டு தம் கைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் அதன் கடன் சுமையை பொறுப்பெடுக்க வேண்டும் அதற்கு அந்த நாடுகளின் பொருளாதாரம் கைகொடுக்குமா? கடனையும், அபிவிருத்தியையும், வீட்டோ அதிகாரத்தையும் காட்டி இலங்கையை மகிழ்விக்கும் சீனா ஒத்துவருமா தனது கடனை வேறொரு நாடு பொறுப்பெடுத்து இலங்கையை கைகழுவ?  சீனாவுக்கு இந்தியாவையும் இந்தியாவுக்கு சீனாவையும் காட்டி சுகம் அனுபவிக்கும்  இலங்கையின் நிலை என்ன? இத்தனை இடர்பாட்டுக்கு மத்தியிலும் இந்தநாட்டின் சுதந்திரத்துக்கு, வளர்ச்சிக்கு உதவிய இந்த நாட்டு குடிமக்களின் அதிகாரத்தை வழங்கி, பகிர்ந்து, மகிழ்ந்து வாழத்தெரியாமல் வேறொரு நாட்டிடம் கைகட்டி வாய் பொத்தி வாழ முடியுமா இவர்களால்? ஆனால் அப்படியொரு முடிவே வரும்.

15 hours ago, கிருபன் said:

ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்தி தான் 69 இலட்ச மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அதே மக்கள் தங்கள் முடிவை மாற்றி தாங்கள் தெரிந்தெடுத்தவரை விரட்டிவிட்டார்கள் என்பது இவருக்கு தெரியாதோ? இவர் எந்த நாட்டில் இருக்கிறார்? எப்ப பார் சும்மா பழைய பல்லவியை பாடிக்கொண்டு! விரட்டப்பட்டவரே இவரே சிறந்த தலைவர் என்று விட்டு ஓரிடத்தில் இருக்க முடியாமல் அலைகிறார் இனி மக்களையும் அலைய விடுங்கோ. வெளிக்கிட்டவர்கள் போக மற்றவர்களும் விரட்டப்படப்போகிறார்கள், மக்களை அமைதியாக வாழ விடுங்கள். உங்கள் சுகத்துக்காக அவர்களை வருத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2023 at 13:14, Nathamuni said:

நொச்சி,

வெள்ளைக்காரர் கிளம்ப முதல், இந்தியாவில் இருந்து வெட்டிக்கொண்டு ஓடிய முதல் நாடு பர்மா. பின்னர் சுதந்திரம் வாங்க முதல் ஓடியது பாகிஸ்தான். அத்துடன் சேர்த்து கிழக்கு பாகிஸ்தானாக கிளம்பி ஓடியது இன்றய பங்களாதேஸ்.

ஆக, படித்த முட்டாள்களாக, எமது தமிழ் தலைமைகள் சிங்கள தலைமைகளினால் ஏமாத்தப்பட்ட நிகழ்வின் துயரமே இன்றும் தொடர்கிறது.

பிரித்தானியா இனி மீண்டும் வரவோ, இந்திய பேரரசினை மீறி, ஆதிக்கம் செலுத்தவோ சந்தர்ப்பம் இல்லை.

ஆயினும் அமெரிக்கா நினைத்தால் நீங்கள் சொல்வது நிகழும். அப்படி நிகழ, சீனாவின் முனைவால், இந்தியா வேறு வழி இன்றி அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளின் முனைவுக்கு வழக்கம் போலல்லாமல் வழி விட வேண்டும்.

ஆக, இன்றய நிலையில் சீனாவே எமது நண்பன். 


நாதமுனியவர்களே  உண்மைதான். ஆனால் சீனா இந்தியாவுக்கு கிச்சு கிச்சு மூட்டடிக்கொண்டல்லவா திரிகிறது.
சீனா சிங்களத்தின் நண்பன், சிங்களத்துக்கு இந்தியன் நண்பேன்டா.... ! இங்கே சிங்களத்தைத் தட்டிக்கேட்க முதுகெலும்பற்ற இந்தியா தமிழர்கள் மீது சவாரிசெய்து தமது நலனை அடைந்துகொண்டிருக்கிறது. மும்பை சிவப்புவிளக்கையே தூக்கிச்சாப்பிடும் வெளியுறவுக் கொள்கை. 

ஒரு கதைக்காக இந்தியாவை உடைக்க யாராவது ஈழத்தீவிலே இயங்கி, இந்திய அரசுக்கு அலுப்புக்கொடுத்தால்கூட, அப்பவும் இந்தியா சிங்களத்துக்கு உடம்பிடி(மசாஜ்) வேலையைத்தான் பார்க்கும். இந்தியா அரசுக்கு அரசென்று நகரும்போது,  தமிழகஅரசு இனத்துக்கு இனம் என்று குரல்கொடுக்கும் தன்மையற்றுத் தங்களுக்குள் அடிபடுகிறார்கள். எமக்கான விடுதலையை விரைவுபடுத்தக்கூடிய மக்கள் சக்தி தமிழகத்திலேயும், புலத்திலேயும் உள்ளன. ஆனால், அனைத்தும் உறைநிலையில் இருக்கின்றன.

நன்றி  

On 18/1/2023 at 14:32, nunavilan said:

சீனாவின் கடனை இந்தியா அடைக்க உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். அஜிற் டோவால் மோதியின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் தான் மிலிந்த மொறகொட பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

சீனாவைக் கைவிடுமாறோ அல்லது சீனாவின் முதலீடுகளை மாற்றுமாறோ கூறியிருப்பர். அவர்களுக்கான  பேரம் மடிந்தால் கடனை அடைப்பார்கள். ஆனால், சிங்களத்தால் சீனாவை அவளவு எளிதில் கடந்துவிட முடியாது. 
1. பெரும்தொகை கடன்
2. ஐ.நா. பாதுகாப்புச் சபை காப்புநிலையெடுக்கும் நாடு
3. இந்தியாவைவிட நீண்டகால நோக்கில் சீன உறவையே சிறீலங்கா பேணிவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2023 at 22:02, satan said:

 அது நடக்க சாத்தியமில்லை! அப்படி ஒன்று வந்தால் குறுக்கால, அங்கால இங்கால என்று ஓடித்திரியிற குழு பொத்திக்கொண்டு இருக்கும்!

சாத்தன் அவர்களே, பெரிதினும் பெரிது கேள் என்ற கோட்பாட்டின்படி முதலிலேயே ஈழத்தீவினை மூன்றாகப் பிரித்து நிர்வகிக்கும் கோரிக்கையைப் பொதுவாக வைத்திருக்க வேண்டும். பண்டாரநாயக்கா முதலில் சமஷ்டி குறித்து பேசியதும் அந்த அடிப்படையிலேயே. ஆனால்,அதனை ஊக்குவிக்காது  மெத்தப்படித்த தமிழர்தரப்பு மெத்தனமாய் இருந்ததன் விளைவே இன்றைய அவலநிலை.   முறையான ஆய்வுகளோடு சிங்கள மக்களின் ஏற்றத் தாழ்வுகளையும் சுட்டி அரசியல் திட்டமொன்றை தமிழர்தரப்பு வைத்திருந்தால் 100 ஆண்டுகளில் கணிசமான சிங்கள மக்களின் சிந்தனைக்காவது சென்றிருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nochchi said:

முறையான ஆய்வுகளோடு சிங்கள மக்களின் ஏற்றத் தாழ்வுகளையும் சுட்டி அரசியல் திட்டமொன்றை தமிழர்தரப்பு வைத்திருந்தால் 100 ஆண்டுகளில் கணிசமான சிங்கள மக்களின் சிந்தனைக்காவது சென்றிருக்கும்.

அவர்களிடம் ஒரு திட்டம், நோக்கம், பொறுப்பு இருக்கு என்று நம்புகிறீர்களா? இதோ எங்களது திட்டம் அதன் நிஞாயம், சாத்தியம் போன்றவற்றை சுட்டிக்காட்டி செய்து முடி அல்லது எங்களோடு பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அடித்துக்கூற முடியுதா இவர்களால்? பிச்சைக்காரர் போல் யார் கூப்பிட்டாலும் அடித்து விழுந்து போகிறார்கள் அழைத்தவர்களின் கையை நம்பி. உங்கள் திட்டம் என்னவென்றால்; திட்டம் நல்லாட்சி காலத்தில் வரைந்தாயிற்று, விவாதித்து நடைமுறை படுத்துவார்கள் என்கிறார் ஒருவர். அவரோ இனிமேற்தான் சந்திப்புகளை உருவாக்கி ஆலோசனை கேட்கப்போகிறாராம். மக்களுக்கு  என்ன பிரச்சனை என்று தெரியாதவர்கள் என்னத்தை பேசப்போகிறார்கள்? தங்களை மக்கள் எதற்காக தெரிந்தெடுத்தார்கள் என்றே புரியாமல் தங்களுக்குள் அடிபடுகிறார்கள், பிரிகிறார்கள், குற்றஞ் சாட்டுகிறார்கள். குதிரைக்கு கொம்பு முளைச்ச கதை மாதிரித்தான் இவர்கள் எங்களுக்கு தீர்வு பெற்றுத்தருவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.