Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா

By RAJEEBAN

26 JAN, 2023 | 01:22 PM
image

அவுஸ்திரேலியாவின் பலநகரங்களில்  இடம்பெற்ற படையெடுப்பு நாள் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் தேசிய தினத்தை  படையெடுப்பு தினமாக கருதி பல நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

1788 இல் சிட்னிகோவில் குற்றவாளிகளுடன் பிரிட்டிஸ் கடற்படையினர் முதன்முதலில் தரையிறங்கிய நாளே - ஜனவரி 26 அவுஸ்திரேலிய தினமாக நினைவுகூறப்படுகின்றது.

download__77_.jpg

இதுவே அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது.

இந்த தினத்தை ஆக்கிரமிப்பு தினம் என தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்;றுள்ளன

அவுஸ்திரேலியாவின் காலனித்துவ வரலாறு குறித்து கடும் விவாதங்களும் அரசியல் சர்ச்சைகளும் இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

invasion-day-darwin-2023.jpg

நாங்கள் பொய்சொல்வதை நிறுத்தவேண்டும் என பேராசிரியர் மார்சியா லாங்டொன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தேசிய தினம் குடியேற்றத்தை கொண்டாடுவதாக காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினம் என்பதே மிகப்பெரிய பொய் என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் பொருத்தமான தினத்தை கண்டுபிடிக்கவேண்டும் அதன் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலிய வரலாறு குறித்த உண்மையை தெரிவிக்க ஆரம்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிற்கும் பூர்வீககுடிகள் அல்லாதவர்களிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் உயிர்பிழைத்தவர்களிற்கு ஒரு மரியாதையை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

invasion-day-brisbane-2023.jpg

19ம் நூற்றாண்டிலிருந்து இந்த தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 1994 முதல் அவுஸ்திரேலிய தினம்

பொதுவிடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது .

மேலும் பூர்வீககுடிகளை திட்டமிட்டு அகற்றியது பிரிட்டிஸ் குடியேற்றங்களிற்காக இடம்பெற்ற இனப்படுகொலை பூர்வீககுடிகள் தொடர்ச்சியாக எதிர்கொண்ட புறக்கணிப்புகள் போன்றவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளமை இந்த தினத்தை இரண்டு வகையான மனோநிலையுடன் கடைப்பிடிக்கப்படும் நாளாக மாற்றியுள்ளது.

கடந்தகாலங்களில் 26ம் திகதி கொடி பட்டாசுகள் வாணவேடிக்கை போன்றவற்றுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த நிலை மாறி ஆர்ப்பாட்டங்களை மையப்படுத்தியதாக இந்த நாள் மாறியுள்ளது.

இந்த தினத்தை மாற்றவேண்டும் என்பதற்கான பரப்புரைகளில் அதிகளவான அவுஸ்திரேலியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்றைய தினம் வெள்ளை அவுஸ்திரேலியாவை அங்கீகரித்த தினம் என சிட்னியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விராட்ஜூரி சமூகத்தை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

invasion-day-survival-day-events-austral

அவர்கள் எங்களை முற்றாக அழிக்க முயன்றார்கள் நாங்கள் இன்னமும் இங்கிருக்கின்றோம்,அவர்கள் எங்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட முயன்றார்கள் நாங்கள் இங்கிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினத்தை வேறு திகதிக்கு மாற்றுவதற்கான  யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் கார்டியன் நடத்திய கருத்துக்கணிப்பு 23வீதமானவர்கள் திகதி மாற்றத்தை ஆதரிப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/146745

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2023 at 19:07, ஏராளன் said:

அவர்கள் எங்களை முற்றாக அழிக்க முயன்றார்கள் நாங்கள் இன்னமும் இங்கிருக்கின்றோம்,அவர்கள் எங்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட முயன்றார்கள் நாங்கள் இங்கிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதான் எங்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் நடந்தது

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣.

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பிறகு சீனர்.

கடைசியாக ஐரோப்பியர்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

இவ்வண்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்

மாஸ்கோ

இரஸ்யா

கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣.

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பிறகு சீனர்.

கடைசியாக ஐரோப்பியர்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

இவ்வண்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்

மாஸ்கோ

இரஸ்யா

கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்

அது  தானே..

அவர்களும் நாமும்  பொருளாதாரம்  தேடி  புறப்பட்டவர்கள் தானே???

  • கருத்துக்கள உறவுகள்

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்  ரஷ்யாவின் இந்த நீதியான தீர்மானத்தை நான் கடுமையாக பரிந்துரை செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

4/1/2021ல் தான் அவுஸ்ரேலிய தேசிய கீதத்தில் இருந்த “  we are young and free“ என்ற வரியை “ we are one and free” என மாற்றினார்கள். ஏனெனில் அவுஸ்ரேலியா பூர்வீக குடிகளைக் கொண்ட பழைய தேசம் என்பதால்.. 

அதுபோல இந்த தினமும் ஒரு நாள் மாறும்☺️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/1/2023 at 15:36, goshan_che said:

அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣.

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பிறகு சீனர்.

கடைசியாக ஐரோப்பியர்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

இவ்வண்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்

மாஸ்கோ

இரஸ்யா

கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்

தெற்கு ஆபிரிக்காவை மறந்து விட்டீர்களோ?   :491:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தெற்கு ஆபிரிக்காவை மறந்து விட்டீர்களோ?   :491:

அங்கே இருந்து வெள்ளையளை வெளியேற்றினால் அநேகம் பேர் ஜேர்மனிக்கும், நெதர்லாந்துக்கும்தான் வருவார்கள்🤣.

பிறகு ஜேர்மனியில் இருந்து பழுப்புதோலரை ஆசியா, துருக்கிக்கு அனுப்பலாம் 🤣.

Recycling is good for the environment 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அங்கே இருந்து வெள்ளையளை வெளியேற்றினால் அநேகம் பேர் ஜேர்மனிக்கும், நெதர்லாந்துக்கும்தான் வருவார்கள்🤣.

பிறகு ஜேர்மனியில் இருந்து பழுப்புதோலரை ஆசியா, துருக்கிக்கு அனுப்பலாம் 🤣.

Recycling is good for the environment 🤣

அப்படியே வட அமெரிக்க செல்லங்கள் இரண்டு  பேரிலும் கை வைக்க உலகம் அமைதிக்கு வரும். அவரவர் அவர்களின் நாடுகளில் வாழ்ந்து விட்டால் உலகம் அமைதி பெறும்.:face_with_tears_of_joy:

இயற்கை கூட அந்தந்த நாடுகளுக்கேற்ப மரம் செடி கொடி உயிரினங்களை படைத்துள்ளது.
உதாரணத்திற்கு நான் ஜேர்மனியில் வடலி வளர்த்து கள்ளு குடிக்க முடியாதல்லவா? :zany_face:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அப்படியே வட அமெரிக்க செல்லங்கள் இரண்டு  பேரிலும் கை வைக்க உலகம் அமைதிக்கு வரும். அவரவர் அவர்களின் நாடுகளில் வாழ்ந்து விட்டால் உலகம் அமைதி பெறும்.:face_with_tears_of_joy:

இயற்கை கூட அந்தந்த நாடுகளுக்கேற்ப மரம் செடி கொடி உயிரினங்களை படைத்துள்ளது.
உதாரணத்திற்கு நான் ஜேர்மனியில் வடலி வளர்த்து கள்ளு குடிக்க முடியாதல்லவா? :zany_face:

ஓம். ரிசைக்கிளிங் நல்லதுதான்.

ஆனால் ரிசைக்கிளிங் என்ற போர்வையில் ஐரோப்பிய கழிவுகளை இலங்கையில் கொட்டுவதை, குறிப்பாக தமிழர் பகுதியில் கொட்டுவதை ஏற்க முடியாது என அந்த மக்கள் சொல்ல கூடும்🤣.

பிகு

ஜேர்மனியில் முடியாது ஆனல் கென்யாவில் வடலி வளர்த்து கள்ளும் குடிக்கலாம், வேலியும் பாயலாம் 🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

ஓம். ரிசைக்கிளிங் நல்லதுதான்.

ஆனால் ரிசைக்கிளிங் என்ற போர்வையில் ஐரோப்பிய கழிவுகளை இலங்கையில் கொட்டுவதை, குறிப்பாக தமிழர் பகுதியில் கொட்டுவதை ஏற்க முடியாது என அந்த மக்கள் சொல்ல கூடும்🤣.

உலகம் போகும் போக்கை பார்க்க ரிசைக்கிளின் நடக்கும் போல கிடக்கு... தமிழர் பகுதி சொல்லக்கூடும். ஆனால் எனது உங்களது அடுத்த சந்ததி போராட வாய்ப்புள்ளது. அதன் பின் உலகம் எப்படியோ யாரறிவார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.