Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிச் சோலை

Featured Replies

யாழ் களக் கவிஞர்களுக்கு வணக்கம்.

வாரமொரு தலைப்பிலே கவிவடிக்க வாருங்கள் என்று அழைக்கிறேன்.

இது குறித்த தலைப்பில் கவி வடிக்கும் திறனை வளர்ப்பதற்கும் ஒரே விடயத்தை பல கோணத்திலும் அணுகும் அழகை ரசிக்கவும் உதவும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பகுதியில் இணைக்கப்படும் கவிதைகளில் சிறந்தவை வேறு வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வகையில் முதல் தலைப்பாய்

அவனியிலே நாம்சிறக்க அனுதினமும் கனவு காணும் அன்னையின் பெருமையைக் கவியாக்குவோமா? இத்தலைப்பிலே ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்த கவிதைகளையும் இணைக்கலாம்.

10 - 09 - 2007 வரை இந்தத் தலைப்பிலான கவிதைகளை இங்கே இணைப்போம்.

எங்கே கவிதைகளை எதிர்பார்க்கிறேன்

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை இங்கே இணைக்கிறேன்

ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாய்ப் பொய்சொன்னேன்

பெத்தவளே உன்பெருமை

ஒத்தைவரி சொல்லலையே

காத்தெல்லாம் அவன்பாட்டு

காகிதத்தில் அவனெழுத்து

ஊரெல்லாம் அவன்பேச்சு

உன்கீர்த்தி எழுதலையே

எழுதவோ படிக்கவோ

இயலாத தாய்பற்றி

எழுதியென்ன லாபமென்று

எழுதாமல் விட்டேனோ

பொன்னையாதேவன் பெற்ற

பொன்னே குலமகளே

என்னைப் புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே

வயிரமுத்து பிறப்பான்னு

வயிற்றில்நீ சுமந்ததில்லை

வயிற்றில்நீ சுமந்தஒண்ணு

வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை

கறுப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கிடக்கையிலை

என்னென்ன நினைச்சிருப்ப

கத்தி எடுப்பவனோ

களவாடப் பிறந்தவனோ

தரணியாள வந்திருக்கும்

தாசில்தார் இவன்தானோ

இந்த விபரங்கள்

ஏதொண்ணும் தெரியாமை

நெஞ்சூட்டி வளத்தஉன்னை

நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி

கழிக்குள்ளை குழிவெட்டி

கருப்பெட்டி நல்லெண்ணை

கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையிலை இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா

தித்திக்கச் சமைச்சாலும்

திட்டிகிட்டே சமைச்சாலும்

கத்தரிக்காய் நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்

கோழிக்குழம்பு மேலை

குட்டிகுட்டியா மிதக்கும்

தேங்காய்ச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊறும்

வைகையிலை ஊர்முழுக

வல்லாரும் சேர்ந்தொழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரையேத்தி விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா

உனககுவேறை பிள்ளையுண்டு

உனக்கொண்ணு ஆனதுன்னா

எனக்குவேறை தாயிருக்கா

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

நானெழுதி களத்திலே எற்கனவே பதிவிட்டிருந்த கவிதையையும் இந்தப் பகுதியில் இணைக்கிறேன்.

எந்தன்குரல் கேட்கிறதா?

அவனியிலே வித்தகனாய்

அறிவுடனே நான்வாழ

அனுதினமும் கனவுகண்ட

அன்பான அம்மாக்கு

என்னருகே இருக்கையிலே

உன்னருமை தெரியவில்லை

அருமையினை உணர்கையிலே

அருகினிலே நீயில்லை

மெழுகுவாத்தியாய் உருகி

வெளிச்சத்தைத் தந்தவளே

வெளிச்சத்தின் அருமையினை

இருட்டில்தான் உணர்கின்றேன்

உன்பேனா பிரசவித்த

உரைகளைநான் மேடையேற்றி

பேச்சாளன் ஆகியதை

பெருமையுடன் நினைக்கின்றேன்

பரீட்சைக்கு முதல்நாளும்

படுக்கையிலே விழுந்திடுவேன்

என்னருகே வந்திருந்து

எனக்காக நீபடித்தாய்

என்பாடம் தனைப்படித்து

எனைஉயர்த்த முயன்றவளே

உன்பாசம்தனை எந்த

உலகத்தில் காண்பேனோ

சிந்தையிலே எந்நாளும்

எந்தனையே தாங்கியதால்

உந்தனுக்கு எப்போதும்

நிம்மதியே இருந்ததில்லை

உனக்காக எதையும்நீ

என்னிடத்தில் கேட்டதில்லை

எனக்காக எதையும்நீ

செய்யாமல் விட்டதில்லை

சேவைசெய்தோம் என்கின்ற

செருக்கொடு இருப்போரே

சேயெனக்குத் தாய்செய்த

செயலுக்கு இணைவருமோ

கடைமையினைச் செய்துவிட்ட

களிப்போடு சென்றுவிட்டாய்

கைம்மாறு செய்யாமல்

கலங்குகின்றேன் தனியாக

வியர்வையினை நீராக்கி

விளைவித்த பயிரெங்கள்

விளைச்சலினைக் காணாமல்

விட்டுவிட்டுப் போனாயே

கடனாளி இல்லாமல்

கடைசிவரை வாழுமெந்தன்

கனவினைநீ கலைத்துவிட்டு

கண்மூடிப் போனாயே

உன்னிடத்தில் பட்டகடன்

அடைப்பதற்கு வழியின்றி

அரைவழியில் விட்டுவிட்டு

அவ்வுலகம் போனாடீய

அடுத்துஒரு பிறப்பிருந்தால்

அம்மாஉன் பிள்ளையாகப்

பிறக்கின்ற வரமெனக்குப்

பிச்சையாகவும் வேண்டாம்

மாறாக நீயெனக்கு

மகனாக வரவேண்டும்

நான்செய்த தவறெல்லாம்

நீசெய்ய அழவேண்டும்

எமனுன்னைப் பிரித்தெடுத்து

எங்கேதான் வைத்தாலும்

என்மீது ஒருகண்ணை

எப்போதும் வைத்திருப்பாய்

உதிரத்தை எரித்துநீயும்

உழைத்திட்ட உழைப்பெந்தன்

உள்ளத்தில் இருக்கும்வரை

உன்நினைவோ டிருந்திடுவேன்

நான் முந்தி களத்தில எழுதினது ஒண்டு.

நன்றி கெட்ட நான்..!

================

கண் மூடியபடி நான் பிறந்தேன்..

அன்று முதல் - அம்மா

தன் கண்களை தூக்கம்

காவு கொள்ள விடாதிருந்து

எனைக் காத்தாள்!

எங்கே என்னை எறும்பு

கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..

நான் தவழ தொடங்கினேன்..

தரையோடு தனை விழுத்தி

தானும் சேர்ந்து தவழ்ந்து..

என் தத்தக்கா பித்தக்கா

என்ற ஊர்தலில் தன் உயிர் மூச்சை

ஒளித்து வைத்தாள் -அம்மா

வளர்ந்தேன்...

கங்காரு போல் எனை உடலில்

காவி காவியே தான் மெலிந்தாள்.

கண்ணு இல்ல.....செல்லம் இல்ல....

காகம் சொல்லு...மேகம் சொல்லு.....

அம்மா...என்னை பேச பழக்கினாள்!

காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!

இப்போ அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....

தட்டு தடுமாறி படியேறி வருகிறாள்..பிள்ளை

சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......

முகம் சிவக்கிறது எனக்கு..........

"உன்னை பேசாம இரு எண்டு

சொன்னன் தானேமா..

பெரிய கரைச்சல்"

எனக்கு பேச கற்று கொடுத்தவளை

பேசாமல் இருக்க சொல்லி..

நான் நன்றி செய்தேன்!

என்னை எறும்பு கடித்திடுமோ என்று

பயந்தவள் மனசை

இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!

ஓடி வாடி..ஓடி வாடி....

அம்மா உலகத்தை மறந்து..

என்னுள் மீண்டும் பிறந்து..

நடை பழக்கினாள்!

தன் இரு கை நீட்டி அதனிடையுள்

என்னை நடக்கவைத்தாள்..

எங்கே...நான் விழுந்து விடுவேனோ

என்று பயம் ..அம்மாக்கு!

வாழ்வு புத்தகத்தை கால காற்று மறுபடியும்..

பக்கம் வேறாய் புரட்டுகிறது

அம்மா தலை வெள்ளி சரிகை கொண்டு நெய்த

கறுப்பு துணி என்றாகிறது!

"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா

கடைக்கு போட்டு வாயேன்"

இது..அம்மா!

"எனக்கு ஏலாது சும்மா போமா"

அது..நான்!

முழங்கால் வலிக்க..

முக்கி முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!

எனக்கு நடை பழக்கியவளை..

பாதம் கொதிக்க நடக்கவிட்டு..

நான் நன்றி செய்தேன்!

திரும்பி வந்தபின்

தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!

எனக்கு முதல் தந்துவிட்டு..

தான் குடிப்பாள்!

கால் கடுக்க சென்றது அவள்....

களைப்பாறியது ..நான்!

எப்படிச் சொல்ல?

இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும் சரி..

இடியென்று அவள் தலையுள் நான்

இறங்கினாலும் சரி..

எதையுமே ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!

காலம் ஓடும் ...அம்மா

ஒருபொழுதில் காலமாவாள்..

கதறி அழுவேன் ..நான்

அம்மா போயிட்டாளே என்றா?

இல்லை இனி எல்லாம்

நானேதான் செய்யவேண்டும் என்றுமா?

கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. சீ..

நன்றி கெட்ட நான்!!

அம்மாவைத் தேடி..

அம்மா...அம்மா...அம்மா -உன்

பிள்ளை அழைக்கிறேனம்மா....

கண்ணீர்ச் சூட்டில் கரைந்து

இமை கனக்குதே அம்மா...

மடி தேடும் நான் அன்பு மகனல்லவோ...

தலைமுடி கோதும் விரலெங்கு தூரத்திலோ..

தாயே நான் செய்த தவறென்ன சொல்லு..

ஜீவனிரண்டை சுமந்த தாயே

எந்தன் நெஞ்சும் ஈரம்தானே..

அன்பு என்பது ஆதாரம்

தாயினன்போ பெரிதாகும்..

கண்கள் கருணைக்கடலல்லவோ..

எந்தன் உருவம் தந்ததுன்னுடல்லவோ...

கருவறை ஒளியும்

தாய்நெஞ்சு வலியும்

மனதுக்குத்தானே தெரியும்

அன்னையினன்பைப் பிரித்திட நினைத்தால்

பூலோகம் தீயினில் எரியும்...

இடிஇடியென பல இன்னல்கள் நேரிலும்

தாயின்நிழலின் கீழ் மனம் தாங்கும்..

வேரின்றி மரமில்லை

தாயின்றி வாழ்வில்லை

நீயின்றி நானில்லை அம்மா..

தீர்க்கமுடியாத கடனே..

தாய்கேட்க மாட்டாளே மகனே..

தீர்க்கமுடியாத கடனே..

பிறர் தீண்ட முடியாத உறவே..

இனிவரும் பிறவிகள் யாவிலும்..அம்மா

நீயே வேண்டுமென் தாயாக..

நீயே வேண்டுமென் தாயாக..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அம்மா

ஈரைந்து மாதம் எனை கருவில் சுமந்தாள்- எத்தனை

மாதம் என் கனவைச் சுமந்தாள்?

அன்னைக்கு ஈடாக யாரும் இல்லை- அவள்

அன்பிற்கு இணையாக தெய்வம் இல்லை

கோயிலில் மட்டுமா தெய்வம்? இல்லை

எம் கோலத்தில் மகிழ்வாளே அவள் தான் அன்னை

நாம் நோயுற்ற போதெல்லாம் விழிப்பாள் கண்ணை

தனை வருத்தி நிற்பாளே அவள் தான் அன்னை!

பாலூட்டி வளர்ப்பதால் பிள்ளை இல்லை -நல்ல

பண்போடு வளர்த்தாளே அவள் என் அன்னை

சீரோடு! சிறப்போடு வாழ்க்கை தந்தாள் என்

சிரிப்பில் அவள் அல்லவா மனம் குளிர்ந்தாள்

அன்னையாய் நான் உன்னைப் பெற்றதெல்லாம்

அவனியில் நான் செய்த புண்ணியமே!

கண்ணியமான வாழ்க்கை தன்னை கற்று

தந்தவள் அல்லவா என் அன்னை!

பரீட்சை என்று நான் கண் விழித்தால்!

பக்கத்தில் அவள் அல்லவா துணை இருப்பாள்

சிறு பிள்ளை நான் செய்யும் தவறையெல்லாம்- சினம்

கொள்ளாது அன்போடு எடுத்துரைப்பாள்!

கருணைக்கு வேறேதும் மொழியும் உண்டோ? அந்த

கருத்துக்கு என் தாயே பொருத்தம் அன்றோ?!

எண்ணற்ற கவிதைகள் வடித்தாலும்! கண்ணாக

எனைக் காத்த கருவறையை மறப்பேனோ?!

விண்ணிலே அல்ல! தெய்வங்கள்! மண்ணிலே

எம் கண்முன்னே கோடி உண்டு! பொறுமைக்கு

மறுபெயரே 'தாய் தானே! அந்த தெய்வத்தை

நாள் தோறும் போற்றி நிற்போம்!!

நன்றி!!

பெற்ற பொழுதினிலே உற்ற பெருவலியும்

இற்றை வரையெனது வெங்குறும்பும் - என்முகங்கண்ட

சொற்ப கணத்தினிலே தான்மறக்கும் என்தாயை

பெற்ற பயனே பயன்.

- ஈழத்திருமகன் -

கவியாற்றல்

வளர்த்திடவே

களம் தந்தாய்-யாழ்

களமே நன்றிகள்

கோடி உனக்கு

வாரா வாரம்

புதிய தலைப்பிட்டு

வளந்து வரும்

புதுக்கவிஞர்-எம்

சிந்தையைத்தூண்டி

சிறப்புற கவிசமைக்க

வழி தந்தாய் மணிவாசகனே நன்றி ஜயா

1

அன்புக்கு

இலக்கணமும் நீ தான்

தமிழ் பண்புக்கு

புததகமும் நீ தான்

கற்புக்கு

கண்ணகியும் நீ தான்

பொறுமைக்கு

பூமியும் நீ தான்

கண்டிப்பதில்

கிட்லறும் நீ தான்

அன்புக்கு அன்னை

திரேசாவும் நீ தான்

படி என்று சொல்லவதற்கு

ஆசானும் நீ தான்

வீட்டில் இரட்சியத்துக்கு

அரசியும் நீ தான்

அன்போடு பேசும்

தோழியும் நீ தான்

பூமியில் வாழும் உயிர் உள்ள

தெய்வமும் நீ தான்

2

பத்துமாதம்

சுமந்து

பத்திரமாக

பெற்றதாய்க்கு

பத்து ஜென்மம்

எடுத்தாலும்

பட்டகடன்

தீர்ந்துடுமா

எந்த ஜென்மம்

என்றாலும் நீதான்

எனக்கு தாயாக

வேண்டும் அம்மா

இவை யாழ்களத்தில் ஏற்கனவே பதியப்பட்டது

Edited by இலக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

"சுகமே அறியாத சன்யாசியா

சுமங்கலி அறியாத வைகாசியா

வைத்தியன் வேண்டாத கைராசியா

காதலை வளர்க்காத கடுதாசியா

சாரலடிக்காத தென்காசியா

சரங்கள் வெடிக்காத சிவகாசியா

ஆசை அறியாத சுகவாசியா

அரசாங்கம் ஏற்றாத விலைவாசியா

அறுத்தால் இனிக்காத அன்னாசியா

ஆட்டத்தில் ஜெயிக்காத அகாசியா

சுதந்திர உணர்வில்லா சுதேசியா

உங்களை சுகமாக வாழவைக்கும் மலேசியா! "

மலேசியா 'கண்ணதாசன் இலக்கிய விழாவில்' விசாலியின் கவிதை, 2003

  • கருத்துக்கள உறவுகள்

பத்துமாதங்கள் கருவறையில் கருவாய்

பக்குவமாய் என்னை சுமந்தாள்

உற்றார் பலர் இருந்தும் தினம் தினம்

உன் நினைப்பில் கலங்குகிறேன்

அம்மா உன்னை நினைத்தாலே

அணுதினமும் கலங்கும் என் இதயம்

சுமைகள் மறந்து உன் மடிசாய்ந்து

சுதந்திரமாய் ஒருமுறை அழவேண்டும்

என்னைத்தொட்டு தழுவி மகளே என்று

எனை அழைத்து கண்ணீர் துடைக்க வருவாயா

நான் இரசிச்ச கவிதை ஒண்டு

அம்மாவுக்கு இறுதி அஞ்சலி

அம்மாவுக்கு இறுதி அஞ்சலி

ஐந்து மணிக்கு விமானம்

அவசரமாய் வந்த தந்தி

அதனால் விரைகிறேன் பறந்து

அம்மா உயிர் ஊசலாடுகிறதாம்.

அரைணாக்கயிறு மட்டுமே ஆடையாய்

அலைந்த காலம் முதல் இன்று

அரவிந்த் மில் கோட்டு சூட்டுடன்

உயர் அதிகாரியாய் பதவியில் இருக்கும்

எனக்கு என்னுயிர் அம்மா தான் எல்லாம்

ஊட்டிவிட்ட பருப்பு சாதமும் தயிரும்

இன்னும் நெய் வாசனையுடன் நினைவில்

எத்தனை சண்டைகள் சமாதானங்கள்

பித்தனாய் அடிக்கடிக் கத்தும் அப்பா

நாளும் சோம்பித் திரியும் என் தம்பி

மூளும் சண்டைகளின் மூலகாரணமாய் தங்கை

படிப்பே மூச்சாய் (சு)வாசித்த நான்

இத்தனை பேரையும் ஒருத்தியாய்

இன்னல்கள் பலவற்றிற்கு நடுவே

ஓடாய் உழைத்து ஒவ்வொரு நாளும்

ஒரு யுகமாய் நகர்த்தி சிறிதும் அயராது

முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் மாறாது

அன்பாய் அனுசரணையாய் அவரவர்

தேவைக்கு அதிகமாய் செய்து தந்து

நடமாடும் தேவதையாய் எனக்கும்

தரித்திரம் பிடித்த சனியனாய் அப்பாவிற்கும்

காசே தராத கருமியாய் எனது தம்பிக்கும்

பாசமே இல்லாத பிடாரியாய் தங்கைக்கும்

பல அவதாரம் எடுத்து பட்டினியாய் தான்

பலநாட்கள் நீர்மட்டும் அருந்தி வாழ்ந்தவள்.

சிலநாட்களாவது என்னுடன் அவள் வந்து

இருக்க பத்தினியின் அனுமதிக்கு இதுவரை

பொ(சி)றுமையாய் காத்திருந்தேன் இனி தேவையில்லை.

இனிமேல் தலையாய கடமையாய் இறுதியாய் முகதரிசனம்

காண இதோ புறப்படுகிறேன். செல் கிணுகிணுத்தது.

சகோதரி போனில் அம்மா இறந்ததைச் சொன்னாள்

அவசரமாய் ஏர்போர்ட் ஏகினேன் இறுதிப் பயணமாய்

அவளைக் கொண்டு செல்ல அவளுடல் எரிக்க.

முடிவு தெரிந்திருந்தால் அவளே மயானம் சென்று

தன்சிதையில் படுத்திருப்பாள் சுமக்கும் சிரமமில்லாமல்.

மீண்டும் செல் அழைத்தது செகரட்டரி பேசினாள்

பிரதமர் உடனே அழைப்பதாய். ஒரு நிமிடம்

நிதானித்தேன் தியானித்தேன் அம்மாவின் புதல்வனாய்

அவளின் ஆன்மா சாந்தியடைய. பிள்ளையின் கடமை

முடிந்ததாய் நினைந்து எனது காரைத் திருப்பினேன்.

பாரதப் பிரதமர் அலுவலகம் நோக்கி விரைந்தேன்

அம்மாவின் ஆன்மா புரிந்து கொண்டு பெருமைப்படும்.

- கே.சந்திரசேகரன்

அனி எழுதிய கீழ்க்கண்ட கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். இலகு தமிழில் உணர்வுகளை தொடும் விதத்தில் அனுபவிச்சு எழுதி இருக்கிறா.

என் அன்புத் தெய்வம்

அம்மா என் அம்மா..

அன்பாய் அரவணைத்து..

ஆசை முத்தம் தந்து..

ஆராரிரோ பாடல் பாடி

என்னை தூங்க வைப்பாள் என் அம்மா..!

காலையில் நான் தூக்கத்தில் இருக்க..

என் பக்கத்தில் வந்து..

என் தலையை வருடியபடி..

என் நெற்றியில் முத்தமிட்டு..

காலை வணக்கம் சொல்லி ..

சிரிப்புடன் அரவணைப்பாள் என் அம்மா...!

படிப்பும் சொல்லித்தந்து ..

பாடல்களையும் படித்து காட்டி

தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து

நன்றாக படிக்க சொல்லி

உற்சாகமும் தருகிறாள் என் அம்மா...!

நான் கோபத்தில் சாப்பிடாமல் இருந்தால்

என்னிடம் எதோ சொல்லி

என்னை சமாதான படுத்தி..

எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள் என் அம்மா...!

எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..

பட படர்த்த இதயத்துடன்

துடி துடித்த பார்வையுடன்

என் காயத்துக்கும் மருந்து போடுவாள் என் அம்மா...!

என் அம்மா நீ அம்மா ... என் அன்புத்தெய்வம் நீதானம்மா...!!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

அம்மாவின் புகழ்தன்னை

அழகுக் கவியாக்கி

கணத்தினிலே பதிந்திட்ட

கவிஞர்க்கு என்நன்றி

  • தொடங்கியவர்

இந்த வாரத் தலைப்பாய்

தமிழ் மண்ணின் மீட்பிற்காய் தண்ணீரும் அருந்தாது தன்னுயிரைத் தந்த தியாகி திலீபன் புகழ் பாடும் கவிதைகளைத் தாருங்கள்

  • தொடங்கியவர்

தியாக தீபமே

தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில்

தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே

அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில்

அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும்

ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும்

ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான்

ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன்

கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான்

தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால்

மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது

இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன்

இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே

சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய்

கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன்

தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே

தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே

அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால்

ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்

அஹிம்சையே கொள்கையாம் சொன்னவர் செய்கையால்

அருமருந் தானஎம் திலீபனும் தூங்கினான்

அடிதடி மட்டுமே அறிந்தவர் இவரென

அயலுள நாடுகள் எள்ளிய வேளையில்

அறவழிப் போரிலும் அசையா இனமென

அகிலமே கண்டிட அமரனாய் ஆகினான்

வாய்களில் வார்த்தைகள் வந்திட மறுத்தது

விழிகளும் நீரினைச் சொரிந்துமே களைத்தது

தமிழரெம் தலைகளும் ஒருநொடி சரிந்தது

தவப்பெரும் புதல்வனின் மறைவினால் பதைத்தது

இருக்கையில் பிறர்பணி செய்திட மறுப்பவர்

இருக்குமிப் புூமியில் இருந்துமே வந்தவன்

இறந்துமே உடல்தனை அடுத்தவர்க் கீந்தவன்

இருக்கிறான் தமிழரெம் இதயச் சிறையிலே

தென்றல் காற்றின்

தேகம் குளிர்ந்தது

கொன்றல் மரத்தின்

கோலம் அழிந்தது

நானிலம் போற்றும்

நல்லூர் முன்றலில்

கன்றது கண்டோம்

காரிருள் தன்னில்

ஒளியினை எடுத்து

ஓடியே வருவர்

எனவழி பார்த்து

ஏங்கிய துள்ளம்

உள்ளம் நொந்து

ஊரார் வருவர்

பண்பற்ற வெய்யில்

பாடாய்ப் படுத்தும்

பதினொரு நாளும்

பாழாய்ப் போனது

மறைதரு நாட்டின்

மானம் அவிழ்ந்தது

அன்றப் பொழுதில்

ஆருயிர் கொழுத்தி

வென்றது உந்தன்

வேட்கை தானே

அன்பின் அண்ணல்

ஆருயிர்த் திலீப

உந்தன் கொள்கை

ஊக்கம தாமே

- ஈழத்திருமகன் -

  • கருத்துக்கள உறவுகள்

மறவர் படைதான் தமிழ்ப்படை -குல

மானமொன்று தான் அடிப்படை

வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்

வெல்வார் என்பது வெளிப்படை

புதிதோ அன்று போர்க்களம் -வரும்

புல்லர் போவார் சாக்களம்

பதறிப்போகும் சிங்களம் -கவி

பாடிமுடிப்பார் மங்களம்

சிரிக்கும் உள்ளம் போர் கண்டு -தமிழ்

சேய்க்கும் சண்டை கற்கண்டு

உரத்து தமிழை போய்முண்டு -என

துள்ளும் நாக்கும் இருதுண்டு

தமிழன் பண்பில் உருப்படி -அவன்

தலையும் சாய்ப்பான் அறப்படி

அமையும் தன்னை முதற்படி -பிறர்

அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு -நீ

வேங்கை மாற்றான் வெள்ளாடு

சீறும் பாம்பை வென்றாடு -கண்

சிவந்து நின்று போராடு

கவிஞர் காசியானந்தன்

திலீபன் அண்ணா..

ஆண்டுகள் ஓடினாலும்..

சுற்றம் மாறினாலும்..

மறவாத நாமம்..

திலீபன் அண்ணா...

அழியாத தியாகச்சுடர்

நீங்களண்ணா..

அகிம்சை வழிநின்று

இன்னுயிர் தந்த

அண்ணா உன்வரிக்

கொள்கைகள்தாம்

இன்றும் வாழுதடா..

உன் உமிழ்நீர்

காய்ந்த வேளையிலும்

தமிழ் வீரத்தின்

வேட்டுகள் சொல்லெனத்

தீர்த்தாயடா..

ஈழ மண்ணின்

மாதவம் நீயடா...

நம் மறத்தாய்

ஈன்ற தீயடா..

வலிகளைச் சுமக்கும்

புலிகளின் ஒருவன்..

உயிரினை உருக்கி

விதையென வீழ்ந்தயடா

அண்ணா..

விடியும் ஈழமடா..

அந்த திருநாள்...

சேருமடா..அண்ணா

புதிதாய்ப் பூப்பாயடா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகி திலீபா!!

ஆயுதம் ஏந்தவே எம்மவர் கூட்டம் என்ற

சொல்லடை நீ மாற்றினாய்!! அமைதிப்படை

என்று வந்தவர் அட்டூழியம் அண்ணலே!

கோடிட்டு நீ காட்டினாய்!!

நல்லூரின் வீதியில் நாயகா நீயொரு

அஹிம்சையை நிலைநாட்டினாய்!

தியாகத்தின் பாதையில் நடை போட்டே

அண்ணா அநீதியை நீ சாடினாய்!

பன்னிரு நாட்களாய் கடும் தவம்

புரிந்தவா!! தமிழ் மானம் அரங்கேற்றினாய்!

விடுதலைப் போரிலே உனக்கென ஓர்

வரலாறை உருவாக்கினாய்!

அடங்கிக் கிடக்கவோ தமிழன்

என்றே நீ கூவினாய்!! அஹிம்சையே

தம் நாடென்று சொல்பவர் நாடகம்!

வெளிப்படுத்தவே தியாகியானாய்!!

"எலிக்குக்கூட தனிவளை வேண்டுமே

புலிக்கு வேண்டாமோ? தமிழினமே!

இன்னும் அடிமையாய் வாழ்வதோ?

விடுதலை வேண்டாமோ?!!

'ஒன்றாகி ஓர் பாதை ஓர் நெறி

கொண்டிட்டால் ஈழமே எங்கள் பக்கம்!

வியட்நாம் மக்கள் கொண்டது அவ்வழி

அதனால் அங்கு சொர்க்கம்"

இத்தனை பாடங்கள் எமக்காய் தந்தவா!!

தியாகியே திலீபன் அண்ணா!. எத்தனை

காலங்கள் கடந்தாலும் உன்பெயர் மன

ஏட்டில் இருக்கும் அண்ணா!.

உன் வழி சென்றாலும் நல்வழி நின்றாலும்!!

செவிடர் காதில் விழுமோ?!!.இன்னும்

எம்மினம் அடக்கு முறைக்குள் அடங்கியே

கிடத்தல் நலமோ?!!"

காற்றினை மட்டுமே ஏற்று நீ

வாழ்ந்திட்ட பன்னிரு நாட்கள் சாட்சி!

முடிந்ததோ! விடிந்ததோ! அரக்கரின்

கொடுமைகள் இன்னுமே அவர்கள் ஆட்சி!

அண்ணனே!! உன்னிடம் சத்தியம்

செய்கின்றோம் நீதிகள் தோற்பதில்லை!!

விரைவினில் கொடும்பகை அழித்தே வெல்வோம்

இனி ஈழத் தமிழன் அழுவதில்லை!!.அழிவதில்லை!!

வென்றிடும் காலம்! வெற்றியின் கோலம்!

ஈழப் படையினால் உருவாகும்! நீ சென்றிட்ட

தலைமையின் ஒளியிலே எம் இருள்

விரைவினில் வெளியேறும்!..

நன்றி!!.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபன்

பல்கலைக் கழக மாணவனாய்

கல்விதனையே தூக்கி எறிந்தே

தமிழர் தாயகத்தின் விடுதலைக்காய்

பாசறை புகுந்திட்ட தியாகி திலீபன்

வலிமை கொண்ட நெஞ்சோடு

தலைவன் பாதையிற் சென்று

புலி என்றே சீறி எதிரிகளை

கிலி கொள்ள வைத்த வீரனே திலீபன்

பன்னிரு நாட்களின் வேள்வியில்

கண்களிரண்டும் ஒளியிழந்த போதும்

மனதில் கொண்ட உறுதிமட்டும் மங்காமல்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் அகிம்சைத் தீயாய்

அகிம்சைக்கு அர்த்தம் கற்பித்த புலி வீரனே திலீபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.