Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது ...தமிழர்களை விட சிங்களவர்களது உபசரிப்பு நன்றாக இருந்தது என்று அவர் சொல்லவில்லையா?

  • Replies 122
  • Views 8.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையை பொறுத்தவரை  தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂 ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார். ✅ 1) திருகோணமலையில் நீ

  • நியாயம்
    நியாயம்

    நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும். 

  • என்னட்ட காசில்லை. இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன். ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 06:03, goshan_che said:

அருமையான ஆக்கம் @தமிழ் சிறி அண்ணா. வாசிக்க எழுத்தாளர் மதனின் சாயல் அடித்தது.

பெடியனிட்ட எனக்கு ஒரே கேள்விதான்…..

ஜேர்மனியில் கிடைக்கும் அதே சம்பளம், உறவுகள், நட்புகள் எல்லாம் அப்படியே கிடைக்கும் என்றால், அவரின் தெரிவு ஜேர்மனியா? இலங்கையா?

பல சமயம் முடிவுகளை எடுக்கும் போது உள்ளுணர்வு அடிப்படையிலேயே எடுக்கிறோம் என கருதுகிறேன்(Herd mentality?).

பொருளாதாரம், காலனிலை போன்ற வாழ்வாதாரத்தில் முன்னிற்கும் சில நாடுகளை தவிர்த்து குளிர் நிறைந்த ஒப்பீட்டளவில் பொருளாதார ரீதியில் குறைவான நாடுகளில் ஏன் எம்மவர்கள் அதிகளவில் குடியேறுகின்றனர்?

முக்கியமாக பாதுகாப்பு உணர்வு(Native),மற்றது ஒவ்வொருவரது பட்டறிவு(Perception)?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

எமது மக்கள் அதிகம் குடியேற விரும்புவது G7 + Au+NZ இல் தான் என நான் நினைக்கிறேன். இந்த 9 நாட்டில் எங்கே போவது என்பதில் பலருக்கு அதிகம் தெரிவு இருப்பதில்லை. எங்கே மாணவ, வேலை வீசா கிடைக்கிறதோ, எங்கே மனைவி/கணவன் அமைகிறாரோ, எங்கே ஏஜென்ட் கொண்டுபோய் விடுகிறாரோ, அல்லது எங்கே குடும்பத்தினர், ஊர்காரார் ஏலவே உள்ளார்களோ - அதுவே தெரிவாகிறது.

இது முடியாதவர்கள்தான் அடுத்த தெரிவாக எனைய வெப்ப வலய நாடுகளில் குடியேறுகிறனர். அதிலும் சிங்கபூர் போவோர் மட்டுமே நிரந்தரமாக தங்குகிறனர்.

மேலோட்டமாக பார்த்தால் இது முழுக்க முழுக்க பொருளாதார அடிப்படையான முடிவாக தெரியும்.

ஆனால் உண்மை அதுவல்ல. இந்த பொருளாதார முன்னேற்றம் கட்டி எழுப்பபட்டுள்ளது இந்த நாடுகளில் இருக்கும் ஓப்பீட்டளவு மேம்பட்ட ஜனநாயகத்தில், வியாபாரம் செய்வது உட்பட்ட மனித சுதந்திரம் மதிக்கப்படுவதிலும், சட்டத்தின் மேலாண்மையிலுமே.

உதாரணமாக, ஒரு தமிழர் அம்பாந்தோட்டையிலோ, அபுதாபியிலோ கடை திறந்தால் - அது எந்த நேரமும் பறிக்கப்படலாம் என்ற பாதுகாப்பற்ற/நிச்சயமற்ற தன்மையை உணர்வார்.

ஆனால் அடிலேடில் கடை திறந்தால் அப்படி பறிக்கப்படுவதில் இருந்து அவுஸ்ரேலிய சட்டம் தன்னை பாதுகாக்கும் என உணர்கிறார். அதனால் முதலையும், உழைப்பையும் முதலிடுகிறார்.

இதில் உள்ளூர்காரர் (native) என்பதை விட அந்த நாட்டின் ஜனநாயக சுட்டி எங்கே உள்ளது என்பதே பிரதானமாகிறது.

தமிழர்கள் G7+ ANZ ஐ தேடி வரும் காரணம் - பாதுகாப்பு - அதில் பெளதீக, பொருளாதார, சிந்தனை, கலாச்சார, மத, கல்வி பாதுகாப்பு+சுதந்திரம் அடங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 23:36, goshan_che said:

நன்றி அண்ணா.

ஜேர்மன் தம்பி கிட்டதட்ட என்னை போலவே சிந்தித்து இருக்கு.

ஊருக்கு போகும் எண்ணம் பார்த்திருக்க கரைந்து போகுது.

இப்போ இருக்கும் பாதுகாப்பின்மை (எல்லா வழியிலும்) யுத்த காலத்தில் கூட இருந்ததாக உணரவில்லை. ஆனால் நான் கொவிட்டுக்கு பிறகு போகவில்லை. போனால் மனம் மாறக்கூடும்.

On 7/2/2023 at 22:03, தமிழ் சிறி said:

நீங்கள் கேட்ட கேள்வியை, இன்று காலை பெடியனிடம் கேட்ட போது…
அவன் சிறிதும் யோசிக்காமல், படாரென்று கூறிய மூன்று காரணங்களை கேட்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.

ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கூட இலங்கையில் வசிப்பாராம், ஆனால்…  நிரந்தரமாக வசிக்க ஜேர்மனிதான் தனது சிறந்த தெரிவு என்றான்.

1) இலங்கையில்… உறவுகள், நட்புகள், கை நிறைய சம்பளம் இருந்தாலும், தன்னுடைய முதுமை காலத்தில்… அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பு இல்லையாம்.

2) மருந்து தட்டுப்பாட்டை நேரில் பார்த்து அனுபவித்து இருக்கின்றான். இவன் அங்கு கூடுதலாக உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் குடும்பங்களின் வீடுகளில்தான் தங்கி உள்ளான்.

ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த முதியவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாம், அவர்கள் அந்த நகரத்தில் உள்ள எந்த மருந்துக் கடையிலும் அதற்குரிய மருந்து இல்லை. இவனுடைய நண்பி ஜேர்மனியில் உள்ள வைத்தியசாலையில்  அவசரகால மருத்துவ சேவைப் பகுதியில் வேலை செய்யும் நர்ஸ் என்ற படியால் இவர்கள் கொண்டு சென்ற முதலுதவி மருத்துவ பைக்குள், சிறுநீரக தொற்றுக்கான மருந்தும் இருந்துள்ளது. அவர்கள் கொடுத்த நான்கு குளிசைகளில் அந்த முதியவரின் நோய் குணமாகி விட்டதாம்.

முதலில் அவர்கள் மருந்து இல்லாமல் அவர்கள் கஸ்ரப் பட்டதையும், மருந்து கொடுத்து குணமாகியதன் பின் அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியும்… அவர்களை  சிந்திக்கத் தூண்டியுள்ளது. தாங்கள் இங்கு வாங்கிக் கொண்டு போன மருத்துவ பொதியின் விலை 100 € தானாம். அது அங்கு ஒருவரின் நோயை குணப்படுத்த உதவியது மகிழ்ச்சியாக இருந்ததாம்.

3) முக்கியமானது அங்கு உள்ள அரசியல் பாதுகாப்பற்ற தன்மை. அரசியல்வாதிகள்… நாட்டை சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு விற்று விட்டார்களாம். இனி விற்பதற்கு அங்கு ஒன்றும் இல்லையாம். அப்படி உள்ள நாட்டில் எப்படி நிரந்தரமாக வசிப்பது என்று கேட்கிறான். 🙂

### அவனது பதிலை பார்த்து உங்களது கருத்தை, அறிய ஆவல். ### 😎

இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்..  ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னட்ட காசில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் எனக்கு தெரிந்து எத்தனையோபேர் வீட்டு சமையலுக்கு வீடு துப்பரவு செய்ய வைத்திருக்கினம் வாகன ஓட்டுநர் வைத்திருக்கினம்

பிள்ளையை வயது வந்த பெற்றோரை பார்க்க ஆள் வைத்திருக்கினம். ஊரிலிருந்து sponsor செய்தவையும் உண்டு.

இங்கும் தனியார் வைத்தியசாலைகள் GP உண்டு.

எங்கட பல ஆட்களுக்களுக்கு அரசாங்க பணத்தில் வாழ்பவர்களையும் கள்ள மட்டைக்காரர்களையும் தான் தெரியும். ஏனென்றால் அவர்களை சுற்றி அவர்கள் தான்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்ட காசில்லை.

இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை.

பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன்.

ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு ஒரு திருவிழாவிலோ அல்லது கூட்டத்திலோ லண்டன் புஷ்டியோடு என் மகன் நிற்பதை பார்த்து வெட்கப்பட்டிருக்கிறேன்.

கால்கள் இல்லாமல் வீதியில் நின்று ஐஸ்கிரீம் வித்த முன்னாள் போராளியிடம் நைக் சூ போட்டபடி ஓடிவந்த நான் ஐஸ்கிரீம் வாங்கி குடித்த போது வெட்கத்தால் கூனி குறுகி போயிருக்கிறேன்.

ஆனால் என்றும் என் பொருளாதாரத்தை, இல்லாமையை எண்ணி வெட்கப்பட்டதில்லை.

நான் எப்போதுமே மத்திய தர வாழ்க்கையே. இலங்கையிலும், வெளிநாட்டிலும். 

ஆனால் நீங்கள் சொல்லுவது மிக சரி. வெளிநாட்டில் மத்திய தர வாழ்க்கை வாழ்வோர் டிரைவர், வேலையாள் வைத்து வாழ முடியாது. 

ஆனால் ஒன்று தெரியுமா ? இலங்கையில் ஒரு டிரைவர், ஒரு வேலையாள் வைக்கும் காசுக்கு சென்ட்ரல் ஆபிரிகன் ரிபப்ளிக்கில் இருபது பேரை வேலைக்கு வைக்கலாம். டிரைவருக்கு டிரைவரும் வைக்கலாம்.

அதற்காக சென்ரல் ஆபிரிக்கன் ரிபளிக் இலங்கையை விட சொர்க்கம் என்றா சொல்வீர்கள்.

நீங்கள் தினேஷ் ஷாப்ரடை விட பெரிய பணக்காரரா ஓணாண்டி?

அவரின் அப்பா என்ன சொல்லியுள்ளார் என பாருங்கள் - குடும்பத்தை லண்டனுக்கு கொண்டு வந்து செட்டில் ஆக்க, கொலையாகிய இரவு புறப்பட இருந்துள்ளார்.

கொவிட்டுக்கு பின் மட்டும் என் தெரிந்த வட்டத்தில் இருந்து 10 பேர் அளவில் என்னிடம் வெளிநாடு போவது பற்றி கேட்டிருப்பார்கள். அதில் பலர் பவுண்ஸ்கணக்கில் மல்டி மில்லியனர்கள்.

ஆள், அம்பு, சேனை, நிறைவேற்று அதிகாரி, கொழும்பு 7 மாளிகை, எல்லாவறையும் விட்டு விட்டு, மனைவியை ஸ்டூடன் விசாவில் அனுப்பி விட்டு, தாமும் பிள்ளைகளும் அவரில் தங்கியவர்களாக வந்து இறங்கியுள்ளார்கள். 

ஒருவர் இருவர் அல்ல. பலர். இதுதான் இலங்கையில் பணக்காரரின் நிலை. 

நீங்கள் சொல்வதை போல் அப்போலோவில் மருந்து பார்க்கலாம் - என் நெருங்கிய உறவை வைத்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன் - கையிருப்பு இருக்கும் வரை, சொத்தை வித்தும் செலவழிக்கலாம் - அதன் பின்?

முன்பும் சொல்லி இருக்கிறேன். நிச்சயமாக நான் ஒரு போதும் (கொவிட்டுக்கு முன் கூட) இலங்கைக்கு முற்றாக போக மாட்டேன். ஒரு 10 வருடம் வெள்ளன ஓய்வை எடுத்து விட்டு, 6 மாதம் அங்கே, 6 மாதம் இங்கே என இருப்பதே என் ஐடியாவாக இருந்தது. வாழ்க்கை பூராக இங்கே வரியை கட்டி விட்டு, பாழும் வயதில் இலங்கை போய், சொத்தை வித்தோ, அல்லது சொந்த காசிலோ வைத்தியம் பார்க்க நான் மடையன் இல்லை.

அதே போல் உங்களுக்கு நேரடியாகவே சொல்லி உள்ளேன், வாழ வேண்டிய பிள்ளைகை, வாய்புக்கள் நிறைந்த வெளிநாட்டில் இருந்து கூட்டிப் போய் சிங்களவனுக்கு பின்பக்கம் கழுவும் நிலைக்கு உள்ளாக்குவதை போல் ஒரு சுயநலம் வேறு எதுவும் இல்லை.

என்னை பொறுத்தவரை என்ன பொருளாதார வளம் நாளை எனக்கு கிடைத்தாலும், மகனின் படிப்பு ஏ எல் தாண்டும் வரை நான் அவரை விட்டு அகல போவதுமில்லை, அவரை யூகேயை விட்டு அகற்ற போவதும் இல்லை ( பள்ளி படிப்பை யூகேயில் படியாததால் நான் கண்ட பிரதிகூலங்களை வைத்து) . 

அதன் பின் விருப்ப ஓய்வை எடுத்து, 6 மாதம் 6 மாதம் யுகேயிலும் இன்னொரு நாட்டிலும் இருப்பதுதான் திட்டம். அந்த இன்னொரு நாட்டு லிஸ்டில் இலங்கை முதலாம் இடத்தில் முன்பு இருந்தது. இப்போ யோசிக்க வேண்டி உள்ளது.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்..  ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..

7 minutes ago, MEERA said:

பிரித்தானியாவில் எனக்கு தெரிந்து எத்தனையோபேர் வீட்டு சமையலுக்கு வீடு துப்பரவு செய்ய வைத்திருக்கினம் வாகன ஓட்டுநர் வைத்திருக்கினம்

பிள்ளையை வயது வந்த பெற்றோரை பார்க்க ஆள் வைத்திருக்கினம். ஊரிலிருந்து sponsor செய்தவையும் உண்டு.

எங்கட பல ஆட்களுக்களுக்கு அரசாங்க பணத்தில் வாழ்பவர்களையும் கள்ள மட்டைக்காரர்களையும் தான் தெரியும். ஏனென்றால் அவர்களை சுற்றி அவர்கள் தான்.

ஓம்… மிக சரியான தகவல். 

Edited by goshan_che

1 hour ago, goshan_che said:

ஆள், அம்பு, சேனை, நிறைவேற்று அதிகாரி, கொழும்பு 7 மாளிகை, எல்லாவறையும் விட்டு விட்டு, மனைவியை ஸ்டூடன் விசாவில் அனுப்பி விட்டு, தாமும் பிள்ளைகளும் அவரில் தங்கியவர்களாக வந்து இறங்கியுள்ளார்கள். 

ஒருவர் இருவர் அல்ல. பலர். இதுதான் இலங்கையில் பணக்காரரின் நிலை. 

இலங்கை ரெலிகொம்மில் மிக உயர்ந்த நிலை அதிகாரியாக இருந்த என் நண்பன் 
(வேலையில் இவன் கார் கதவை திறக்க என்றே ஒருவர் இருந்தார் என்பதை கண்கூடாக கண்டனான்), குடும்பத்துடன் இங்கு வந்து விட்டான். ஏன் என்று கேட்டதுக்கு, இங்கு பிச்சை எடுத்தாலும் பாதுகாப்பாக, முக்கியமாக தனி மனித சுதந்திரத்துடன் வாழலாம் என்கின்றான்.

Millennium m IT இல் உயர் பதவியில் வேலை செய்கின்ற, சிங்களப் பெண்ணை மணந்த என் தமிழ் நண்பன், தன் மகனையும் மகளையும் இங்கு படிக்க அனுப்பி வைத்து செட்டிலாக்கி விட என் மூலம் முயல்கின்றான்

1 hour ago, goshan_che said:

. வாழ்க்கை பூராக இங்கே வரியை கட்டி விட்டு, பாழும் வயதில் இலங்கை போய், சொத்தை வித்தோ, அல்லது சொந்த காசிலோ வைத்தியம் பார்க்க நான் மடையன் இல்லை.

அதே போல் உங்களுக்கு நேரடியாகவே சொல்லி உள்ளேன், வாழ வேண்டிய பிள்ளைகை, வாய்புக்கள் நிறைந்த வெளிநாட்டில் இருந்து கூட்டிப் போய் சிங்களவனுக்கு பின்பக்கம் கழுவும் நிலைக்கு உள்ளாக்குவதை போல் ஒரு சுயநலம் வேறு எதுவும் இல்லை.

என் திட்டமும் எண்ணமும் அச்சொட்டாக இது தான்

1 hour ago, goshan_che said:

அதன் பின் விருப்ப ஓய்வை எடுத்து, 6 மாதம் 6 மாதம் யுகேயிலும் இன்னொரு நாட்டிலும் இருப்பதுதான் திட்டம். அந்த இன்னொரு நாட்டு லிஸ்டில் இலங்கை முதலாம் இடத்தில் முன்பு இருந்தது. இப்போ யோசிக்க வேண்டி உள்ளது.

கொழும்பு என்று (யாழ்ப்பாணம் அல்லவே அல்ல) இருந்த எண்ணம், கொஞ்சம் நகர்ந்து சென்னை என்று ஆகியுள்ளது இப்ப.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது ...தமிழர்களை விட சிங்களவர்களது உபசரிப்பு நன்றாக இருந்தது என்று அவர் சொல்லவில்லையா?

அவர் தமிழர், சிங்களவர் என்று பிரித்து பார்க்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் விடுதியிலும், சிங்களப் பகுதிகளில்… கிராமத்து வீடுகளிலும் தங்கியுள்ளார்.
இலங்கையில் இறங்கிய முதல் நாள் மட்டும் கொழும்பில் நின்றதாகவும்,
அங்கு ஒரு ஹொட்டேலில் இரண்டு பேர் படுக்கும் அறைக்கு 150 € கொடுத்ததாகவும்,
அது அதிகமாக தெரிந்ததால் உள்ளூர் நகரங்களில் தங்க முடிவு எடுத்ததாகவும் கூறினார்.
உள்ளூரில்…. 20 € விலிருந்து 35 € விற்கு அந்த  குடும்பத்தினருடன் தங்கக் கூடிய
திருப்திகரமன அறைகள் கிடைத்ததாக சொன்னார்.

கொழும்பில் நின்ற காலங்களில்… பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்த மாதிரியும்,
வங்கிக்கு சென்றால் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களாம்.
(வெளிநாட்டு பணத்தை வாங்கி விற்பவர்காளாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.)

அத்துடன் இலங்கை தெருக்கள்  முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளும், குப்பைகளும் 
அதிகமாக இருந்தனவாம். திருகோணமலை கடலில் சுழியோடிய போது,
கடலுக்கு அடியிலும்.. பிளாஸ்ரிக் போத்தல்களை கண்டதாக கூறினார். 

தனக்கு அங்குள்ள சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை..
கிடைப்பதை வைத்து, மிக மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறினார்.
உதாரணத்துக்கு…. ஒரு வீட்டில் ஒரு சிறுவர் சைக்கிள் இருந்தால்…
அந்தத் தெருவில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் அதனை மாறி, மாறி ஒடி குதூகலமாக
இருந்தார்களாம். பெரியவர்களிடம் நவீன தொலை பேசிகள் இல்லாமல்  “Nokkia“ 
கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டே திருப்தியான வாழ்க்கை வாழ்வதாக குறிப்பிட்டார்.

ஜேர்மனியில் என்றால்… வருடா வருடம் புதிதாக வரும் தொலை பேசிக்கும்,
குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை,  பாவிக்கும் வாகனத்தை மாற்றவும்… பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இலங்கை ரெலிகொம்மில் மிக உயர்ந்த நிலை அதிகாரியாக இருந்த என் நண்பன் 
(வேலையில் இவன் கார் கதவை திறக்க என்றே ஒருவர் இருந்தார் என்பதை கண்கூடாக கண்டனான்), குடும்பத்துடன் இங்கு வந்து விட்டான். ஏன் என்று கேட்டதுக்கு, இங்கு பிச்சை எடுத்தாலும் பாதுகாப்பாக, முக்கியமாக தனி மனித சுதந்திரத்துடன் வாழலாம் என்கின்றான்.

Millennium m IT இல் உயர் பதவியில் வேலை செய்கின்ற, சிங்களப் பெண்ணை மணந்த என் தமிழ் நண்பன், தன் மகனையும் மகளையும் இங்கு படிக்க அனுப்பி வைத்து செட்டிலாக்கி விட என் மூலம் முயல்கின்றான்

என் திட்டமும் எண்ணமும் அச்சொட்டாக இது தான்

கொழும்பு என்று (யாழ்ப்பாணம் அல்லவே அல்ல) இருந்த எண்ணம், கொஞ்சம் நகர்ந்து சென்னை என்று ஆகியுள்ளது இப்ப.

நன்றி. நான் ஊரில் ஒரு கணிசமான முதலீட்டையும் போட்டு, போயிருக்கும் போது பிராக்காக செய்ய என ஒரு திட்டத்தையும் அமல்படுத்தியும் ஆகி விட்டது. ஆனால் இப்போ அதை போய் செய்யத்தான் வேணுமா என்றாகி விட்டது. 

அண்மையில் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் சொன்னது யோசிக்க வைத்தது. அவரின் அப்பாவுக்கு ஒரு மருந்து கட்டாயம் தேவை. என்ன விலை கொடுத்தும் வாங்க முடியும். வசதி அப்படி. ஆனால் எங்கும் மருந்து இல்லை. ஒரு பாமசியில் நம்பரை வாங்கி கொண்டு பிறகு கூப்பிடுகிறோம் என்றுள்ளார்கள்.

பின் ஒரு அழைப்பு வந்துள்ளது சாதாரண விலையை விட 3 மடங்கு அதிகம், அத்தோடு நாம் தரும் மருந்தில் எந்த நிறுவன, மருந்து பெயரும் இராது என்றுள்ளார்கள்.

ஆரோ ஒரு அநாமேதய நபர் தரும் பெயர் இல்லாத மருந்தை வாங்கி போட வேண்டும் அல்லது மருந்து போடாமல் இருக்க வேண்டும். 

எப்படி இருக்கு?

இப்போ கொஞ்சம் நிலமை சீராகியுள்ளது.

ஆனாலும் முன்னரே கான்சர் என போய் அப்பலோவில் படுத்தால் - மஹரகமவுக்கு கொண்டு போங்கோ என்பதே பதில்.

எனக்கு தெரிய சிறுநீரக பிரச்சனைக்கே நவலோக்கா - பல மில்லியனை புடிங்கி விட்டு, கடைசியில் தேசிய ஆஸ்பத்திரிக்கு போங்கோ எண்டு சொல்லி உள்ளது.

49 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில் என்றால்… வருடா வருடம் புதிதாக வரும் தொலை பேசிக்கும்,
குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை,  பாவிக்கும் வாகனத்தை மாற்றவும்… பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றார்.

எல்லாம் ஒப்பீட்டளவில்தான் அண்ணை. அந்த நோக்கியாவை புடிங்கி விட்டால் அவர்களும் சோகம் ஆகி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எமது மக்கள் அதிகம் குடியேற விரும்புவது G7 + Au+NZ இல் தான் என நான் நினைக்கிறேன். இந்த 9 நாட்டில் எங்கே போவது என்பதில் பலருக்கு அதிகம் தெரிவு இருப்பதில்லை. எங்கே மாணவ, வேலை வீசா கிடைக்கிறதோ, எங்கே மனைவி/கணவன் அமைகிறாரோ, எங்கே ஏஜென்ட் கொண்டுபோய் விடுகிறாரோ, அல்லது எங்கே குடும்பத்தினர், ஊர்காரார் ஏலவே உள்ளார்களோ - அதுவே தெரிவாகிறது.

இது முடியாதவர்கள்தான் அடுத்த தெரிவாக எனைய வெப்ப வலய நாடுகளில் குடியேறுகிறனர். அதிலும் சிங்கபூர் போவோர் மட்டுமே நிரந்தரமாக தங்குகிறனர்.

மேலோட்டமாக பார்த்தால் இது முழுக்க முழுக்க பொருளாதார அடிப்படையான முடிவாக தெரியும்.

ஆனால் உண்மை அதுவல்ல. இந்த பொருளாதார முன்னேற்றம் கட்டி எழுப்பபட்டுள்ளது இந்த நாடுகளில் இருக்கும் ஓப்பீட்டளவு மேம்பட்ட ஜனநாயகத்தில், வியாபாரம் செய்வது உட்பட்ட மனித சுதந்திரம் மதிக்கப்படுவதிலும், சட்டத்தின் மேலாண்மையிலுமே.

உதாரணமாக, ஒரு தமிழர் அம்பாந்தோட்டையிலோ, அபுதாபியிலோ கடை திறந்தால் - அது எந்த நேரமும் பறிக்கப்படலாம் என்ற பாதுகாப்பற்ற/நிச்சயமற்ற தன்மையை உணர்வார்.

ஆனால் அடிலேடில் கடை திறந்தால் அப்படி பறிக்கப்படுவதில் இருந்து அவுஸ்ரேலிய சட்டம் தன்னை பாதுகாக்கும் என உணர்கிறார். அதனால் முதலையும், உழைப்பையும் முதலிடுகிறார்.

இதில் உள்ளூர்காரர் (native) என்பதை விட அந்த நாட்டின் ஜனநாயக சுட்டி எங்கே உள்ளது என்பதே பிரதானமாகிறது.

தமிழர்கள் G7+ ANZ ஐ தேடி வரும் காரணம் - பாதுகாப்பு - அதில் பெளதீக, பொருளாதார, சிந்தனை, கலாச்சார, மத, கல்வி பாதுகாப்பு+சுதந்திரம் அடங்கியுள்ளது.

கோவிட் காலத்தில் வேலை குறைவாக இருந்த போது தற்காலிகமாக வழங்கல் பிரிவில் வேலை செய்தேன் அப்போது ஒரு அவுஸ்ரேலியருடன் நட்பு ஏற்பட்டது.

அவரது வயது 50, அவருக்கு பேர குழந்தையும் உண்டு, வேலை குறைப்பு ஏற்பட்ட போது தாய்லாந்திற்கு குடியேற முயன்றார்; ஆனால் நிரந்தரமாக குடியேற முடியாது 6 மாதகாலத்திற்கு ஒரு முறை விசாவினை புதுப்பிக்க வேண்டும் என கூறியதாக நினைக்கிறேன் (சரியாக நினைவில்லை).

அவருக்கு சில உறவினர் அந்த நாட்டில் உள்ளதாக கூறியிருந்தார், அவுஸ்ரேலியாவிற்கு அவர் சிறிய வயதில் பெற்றோருடன் பிரித்தானியாவிலிருந்து வந்து குடியேறியிருந்துள்ளார், வளர்ந்து வரும் நாட்டில் குடியேறுவதற்கான காரணம் வாழ்கை செலவு குறைவு என்ற காரணத்தினை கூறியிருந்தார்.

தாய்லாந்து சென்று ஒரு மாதத்தில் வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

எல்லாம் ஒப்பீட்டளவில்தான் அண்ணை. அந்த நோக்கியாவை புடிங்கி விட்டால் அவர்களும் சோகம் ஆகி விடுவார்கள்.

சரியாக சொன்னீர்கள். ஒவ்வொருவருக்கும் தமது வசதிக்கு ஏற்ற
ஏதோ ஒன்று மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.
அது திடீரென்று இல்லாமல் போனால்… சோகம்தான். 🙂

நீங்கள், “நோக்கியாவை புடுங்கி விட்டால்” என்று அடாத்தாக சொன்னதுதான் இன்னும் சோகத்தை வரவழைத்தது. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

கோவிட் காலத்தில் வேலை குறைவாக இருந்த போது தற்காலிகமாக வழங்கல் பிரிவில் வேலை செய்தேன் அப்போது ஒரு அவுஸ்ரேலியருடன் நட்பு ஏற்பட்டது.

அவரது வயது 50, அவருக்கு பேர குழந்தையும் உண்டு, வேலை குறைப்பு ஏற்பட்ட போது தாய்லாந்திற்கு குடியேற முயன்றார்; ஆனால் நிரந்தரமாக குடியேற முடியாது 6 மாதகாலத்திற்கு ஒரு முறை விசாவினை புதுப்பிக்க வேண்டும் என கூறியதாக நினைக்கிறேன் (சரியாக நினைவில்லை).

அவருக்கு சில உறவினர் அந்த நாட்டில் உள்ளதாக கூறியிருந்தார், அவுஸ்ரேலியாவிற்கு அவர் சிறிய வயதில் பெற்றோருடன் பிரித்தானியாவிலிருந்து வந்து குடியேறியிருந்துள்ளார், வளர்ந்து வரும் நாட்டில் குடியேறுவதற்கான காரணம் வாழ்கை செலவு குறைவு என்ற காரணத்தினை கூறியிருந்தார்.

தாய்லாந்து சென்று ஒரு மாதத்தில் வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

ஐயோ பாவமே.

தாய்லாந்தில் குடியேற வேற காரணங்கள் 🤣.

வாழ்க்கை செலவு குறைய, பேத்தி வயதான பெண் - இதுதான் பல வெள்ளைகள் தாய்லாந்து போக காரணம்.

இந்த வெள்ளைகளை firangi (பரங்கி) என அழைப்பார்கள். கல்லூரியில் படிக்கும் பெண்கள் கூட, short term, long term என எழுதாத ஒப்பந்தங்கள் போட்டு, கணவன் மனைவியாக வாழ்வார்கள். 

ஆனால் எத்தனை 20-45 வயதானவர்கள் இப்படி போகிறார்கள். மிக சிலரே. அப்படி போபவர்கள் கூட digital nomad   என வேலை மேற்கில் இருக்கும் வாழ்க்கை கிழக்கில் இருக்கும் வேலைகளோடுதான் போகிறார்கள்.

மேற்கின் சுக வாழ்வை அனுபவித்து விட்டு, பென்சன் காசை எடுத்து கொண்டு வாழ்வின் கால் இறுதியை வெப்பவலய நாடுகளில் வாழப்போவது - வேறு. 

இங்கே பலர் ஸ்பெயினுக்கு போவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அவர் ஒரு ஆண், பெண்ணில்லை. அவருக்கு வேலை இழப்பு ஏற்பட்ட போது130000 அவுஸ்ரேலிய பணம் கிடைத்தது என கூறியிருந்தார்.

நான் நினைக்கிறேன் மேலை நாட்டவர்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து சலித்துவிட்டதால் ஒரு சவாலான வாழ்க்கை வாழ முயற்சிக்ககூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

🤣 ம்ம்ம்… பொதுபடையாக கூறப்போய் அசிங்கப்பட்டு விட்டேன்🤣.

என் பழைய நேர்ஸ் - இலங்கை என்றதும் என்னை பிலுபிலு என பிடித்துக்கொண்டார்.

அவருக்கு அப்போ 60 இருக்கும். அவரின் 30 வயதுகளில் இருந்த போது, வேலை நீக்க காசை எடுத்து கொண்டு இலங்கையில் 3 வருடம் வாழ்ந்தாவாம். மவுண்ட்லேவனியாவில் ஒரு வீட்டில் ரூம் எடுத்து, ஹோட்டலில் ஒவ்வொரு நாளும் குளியலாம், கும்மாளமாம். அருமையான நாடு என்றார்.

நானும் ஓமோம் சிறிலங்கா சொர்க்கம் என சொல்லிகொண்டே மனதுக்குள் நினைத்தேன் - அதே காலகட்டத்தில்தான் அந்த “நரகத்தில்” இருந்து தலை தெறிக்க என் மக்கள் ஓடி கொண்டிருந்தார்கள் என.

ஒரே ஒரு உதாரணம். கொவிட் நேரம் இப்படி உலகம் முழுவதும் போன ஐரோப்பியருக்கு என்ன நடந்தது. அடிச்சு பிடிச்சு தத்தம் நாடுகள் அனுப்பிய பிளேனில் ஏறி நாடு திரும்பிவிட்டார்கள். எங்கே போனாலும் பாஸ்போர்ட்டை மாத்தவே மாட்டர்க🤣.

இதுதான் நான் சொன்ன “பாதுகாப்பு”. 

ரொனி பிரிக்ஸ் என ஒரு கொள்ளையன் கதை உண்டு. 25ம் ஆண்டு பதிவாக போடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

நான் வெளிநாடு வருவததென்று நினைத்துகூட பார்த்திருக்கவில்லை, மேற்கு நாட்டிற்கான பயணமாகவும் ஆரம்பிக்கவில்லை, தற்போது மேற்கு நடொன்றில் வாழ்கிறேன், ஆனால் இதுவரை ஒரு தடவை கூட இலங்கைக்கு பயணிக்கவில்லை, அனால் பயணிக்க வேண்டிய தேவைகள் உண்டு.

இலங்கையிலிருந்து வெளியேறும் போது திரும்ப இலங்கைக்கு வருவதில்லை எனும் முடிவுடன் வெளியேறியிருந்தாலும், எதிர்காலத்தில் அதில் மாற்றம் ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நன்றி. நான் ஊரில் ஒரு கணிசமான முதலீட்டையும் போட்டு, போயிருக்கும் போது பிராக்காக செய்ய என ஒரு திட்டத்தையும் அமல்படுத்தியும் ஆகி விட்டது. ஆனால் இப்போ அதை போய் செய்யத்தான் வேணுமா என்றாகி விட்டது. 

அண்மையில் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் சொன்னது யோசிக்க வைத்தது. அவரின் அப்பாவுக்கு ஒரு மருந்து கட்டாயம் தேவை. என்ன விலை கொடுத்தும் வாங்க முடியும். வசதி அப்படி. ஆனால் எங்கும் மருந்து இல்லை. ஒரு பாமசியில் நம்பரை வாங்கி கொண்டு பிறகு கூப்பிடுகிறோம் என்றுள்ளார்கள்.

பின் ஒரு அழைப்பு வந்துள்ளது சாதாரண விலையை விட 3 மடங்கு அதிகம், அத்தோடு நாம் தரும் மருந்தில் எந்த நிறுவன, மருந்து பெயரும் இராது என்றுள்ளார்கள்.

ஆரோ ஒரு அநாமேதய நபர் தரும் பெயர் இல்லாத மருந்தை வாங்கி போட வேண்டும் அல்லது மருந்து போடாமல் இருக்க வேண்டும். 

எப்படி இருக்கு?

இப்போ கொஞ்சம் நிலமை சீராகியுள்ளது.

ஆனாலும் முன்னரே கான்சர் என போய் அப்பலோவில் படுத்தால் - மஹரகமவுக்கு கொண்டு போங்கோ என்பதே பதில்.

எனக்கு தெரிய சிறுநீரக பிரச்சனைக்கே நவலோக்கா - பல மில்லியனை புடிங்கி விட்டு, கடைசியில் தேசிய ஆஸ்பத்திரிக்கு போங்கோ எண்டு சொல்லி உள்ளது.

வேறு நாட்டினர் எந்த நாட்டுக்கு போய் குடியேறினாலும் தாம் பிறந்த நாட்டை மறக்க மாட்டார்கள் . தாம் பிறந்த நாட்டுக்கு நன்றி விசுவாசமாய்த் தான் இருப்பார்கள்...உதாரணத்திற்கு இந்தியர்கள் ஐந்தாம் தலைமுறையாய் இங்கு வாழ்ந்தாலும் , ஐந்தாம் தலைமுறை குழந்தைக்கும் அவர்களது பாஷை தெரிந்திருக்கும் ,தங்கள் மூதாதையர்களது நாட்டை பற்றி தெரிந்திருக்கும்.
ஆனால் நாம், இலவசக் கல்வியில் படித்து,இலவச மருத்துவம் எல்லாம் பாவித்து வளர்ந்து விட்டு எந்த விதத்திலும் போரில் பாதிக்க படாமல் [என்னையும் சேர்த்து தான் ] இங்கு வந்து அடைக்கலம் கோரி புகலிடம் எடுத்த பின் அது ஒரு நாடா? அங்கு மனிசன் இருப்பானா என்று சீன் காட்டுவோம்... எந்த விதத்திலாவது நாம் பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்து இருப்போமா என்று பார்த்தால் இல்லை.
முந்தி போரை குற்றம் சாட்டினார்கள்...இப்ப பொருளாதாரத்தை குற்றம் சாட்டுகிறார்கள் ...ஊரில் போய் இருக்க விருப்பமில்லாவிட்டால் போக வேண்டாம் ....யாராவது உங்களை வெத்திலை பாக்கு வைத்து அழைத்தார்களா?
வளர்ந்துவரும் நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் இருக்கும் தான்..போர்,ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் ,கொரோனா , அதை விட ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் அதனால் நாடு பாதிக்கப்பட்டு இருக்குது என்பது உண்மை தான் ...அந்த நேரத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டது என்பது உண்மை தான் ...அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை விட்டு , எம்மால் எப்படி உதவலாம் என்பதை விட்டுட்டு உதவ விருப்பம்  இல்லாட்டில் பேசாமல் இருப்பது நல்லது  .
அங்கு இருப்பவர்கள் மனிசர்கள் இல்லையா?...அங்கு இருக்கும் பெரிய பணக்காரர்களுக்கும், பெரும் பதவியில் இருப்பவர்களுக்கும் நாட்டை விட்டு போவது நாகரீகமாய் போய் விட்டது ...ஒருவர் போனால் அவர்களை பார்த்து தாமும் போக வெளிக்கிடுவது , வெளி நாட்டு மோகத்திற்காய் ஆயிரம் கதைகள் சொல்ல வேண்டி இருக்குது 
ஊர் ஆகோ ,ஓகோ என்று இருக்குது என்று சொல்ல வரவில்லை ஆனால் இப்ப ஊரை விட்டு வெளிக்கிடுபவர்கள் எல்லோரும் அந்த நேரத்தில் போரினால் பாதிக்க படாமல் ஒருத்தரை பார்த்து மற்றவர்கள் வெளிக்கிடும் ஆட்கள்....ஓவர் பில்டப் விடும் ஆட்கள் 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2023 at 08:03, தமிழ் சிறி said:

1) இலங்கையில்… உறவுகள், நட்புகள், கை நிறைய சம்பளம் இருந்தாலும், தன்னுடைய முதுமை காலத்தில்… அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பு இல்லையாம்.

2) மருந்து தட்டுப்பாட்டை நேரில் பார்த்து அனுபவித்து இருக்கின்றான். இவன் அங்கு கூடுதலாக உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் குடும்பங்களின் வீடுகளில்தான் தங்கி உள்ளான்.

3) முக்கியமானது அங்கு உள்ள அரசியல் பாதுகாப்பற்ற தன்மை. அரசியல்வாதிகள்… நாட்டை சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு விற்று விட்டார்களாம். இனி விற்பதற்கு அங்கு ஒன்றும் இல்லையாம். அப்படி உள்ள நாட்டில் எப்படி நிரந்தரமாக வசிப்பது என்று கேட்கிறான். 🙂

பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்..

உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே 

இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. 

எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). 

எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். 

ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வேறு நாட்டினர் எந்த நாட்டுக்கு போய் குடியேறினாலும் தாம் பிறந்த நாட்டை மறக்க மாட்டார்கள் . தாம் பிறந்த நாட்டுக்கு நன்றி விசுவாசமாய்த் தான் இருப்பார்கள்...உதாரணத்திற்கு இந்தியர்கள் ஐந்தாம் தலைமுறையாய் இங்கு வாழ்ந்தாலும் , ஐந்தாம் தலைமுறை குழந்தைக்கும் அவர்களது பாஷை தெரிந்திருக்கும் ,தங்கள் மூதாதையர்களது நாட்டை பற்றி தெரிந்திருக்கும்.
ஆனால் நாம், இலவசக் கல்வியில் படித்து,இலவச மருத்துவம் எல்லாம் பாவித்து வளர்ந்து விட்டு எந்த விதத்திலும் போரில் பாதிக்க படாமல் [என்னையும் சேர்த்து தான் ] இங்கு வந்து அடைக்கலம் கோரி புகலிடம் எடுத்த பின் அது ஒரு நாடா? அங்கு மனிசன் இருப்பானா என்று சீன் காட்டுவோம்... எந்த விதத்திலாவது நாம் பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்து இருப்போமா என்று பார்த்தால் இல்லை.
முந்தி போரை குற்றம் சாட்டினார்கள்...இப்ப பொருளாதாரத்தை குற்றம் சாட்டுகிறார்கள் ...ஊரில் போய் இருக்க விருப்பமில்லாவிட்டால் போக வேண்டாம் ....யாராவது உங்களை வெத்திலை பாக்கு வைத்து அழைத்தார்களா?
வளர்ந்துவரும் நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் இருக்கும் தான்..போர்,ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் ,கொரோனா , அதை விட ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் அதனால் நாடு பாதிக்கப்பட்டு இருக்குது என்பது உண்மை தான் ...அந்த நேரத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டது என்பது உண்மை தான் ...அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை விட்டு , எம்மால் எப்படி உதவலாம் என்பதை விட்டுட்டு உதவ விருப்பம்  இல்லாட்டில் பேசாமல் இருப்பது நல்லது  .
அங்கு இருப்பவர்கள் மனிசர்கள் இல்லையா?...அங்கு இருக்கும் பெரிய பணக்காரர்களுக்கும், பெரும் பதவியில் இருப்பவர்களுக்கும் நாட்டை விட்டு போவது நாகரீகமாய் போய் விட்டது ...ஒருவர் போனால் அவர்களை பார்த்து தாமும் போக வெளிக்கிடுவது , வெளி நாட்டு மோகத்திற்காய் ஆயிரம் கதைகள் சொல்ல வேண்டி இருக்குது 
ஊர் ஆகோ ,ஓகோ என்று இருக்குது என்று சொல்ல வரவில்லை ஆனால் இப்ப ஊரை விட்டு வெளிக்கிடுபவர்கள் எல்லோரும் அந்த நேரத்தில் போரினால் பாதிக்க படாமல் ஒருத்தரை பார்த்து மற்றவர்கள் வெளிக்கிடும் ஆட்கள்....ஓவர் பில்டப் விடும் ஆட்கள் 

நாங்கள் எல்லாரும் எங்களை போலவே ஏனையோரையும் நினைக்கிறோம் அதுதான் பிரச்சனை.

இப்ப பாருங்கோ…கொவிட் வரைக்கும் ஊருக்கு அடிக்கடி போன, அங்கே நேரத்தையும், பணத்தையும் முதலிட்ட, திரும்பி அங்கே வரவேண்டும், பிரயோசனமாய் ஏதாவது செய்ய வேண்டும் என முனைந்து, அதன் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து யோசித்து கொண்டிருக்கும் எனது அனுபவமும், பட்டறிவும் 2009 க்கு பின் நாட்டுக்கு ஒரு தடவை (என நினைக்கிறேன்) சுற்றுலா போய் வந்த உங்கள் அனுபவமும் வேறு வேறாகத்தான் இருக்கும். 

எனது முதலாவது கருத்திலேயே சொல்லி உள்ளேன், போர், குண்டு வெடிப்பு போல அல்ல, பொருளாதார சிக்கல் - இங்கே இருக்கத்தான் முடியுமா என்ற நிலைக்கு பெரும் பண வசதி படைத்தவர்களியே கொண்டு வந்து விட்டுள்ளது.

Trend இல் ஆளை ஆள் பார்த்து வெளியேற இவங்கள் அன்றாடம் காய்சிகளோ அல்லது உழைக்கும் வர்கமோ, மத்திய வர்கமோ கூட இல்லை(இதுவும் நடக்கிறது) . வெளிநாட்டில் வந்து படித்து விட்டு கொழும்பு திரும்பிய, உயர் தட்டு மக்கள். பலருக்கு யூகேயில் நிரந்தர வதிவிட உரிமை ஏலவே உண்டு, ஆனால் வியாபாரம், சொத்து இலங்கையில் என்பதால் திரும்பியவர்கள். பிள்ளைகளை பின்பு மேற்படிப்பு படிக்க அனுப்பும் எண்ணத்தில் கொழும்பில் சர்வதேச பாடசாலையில் யூகே கல்விமுறையை பின்பற்ற வைத்தவர்கள்.

இப்போ குடும்பமாக கிளம்பி வந்துள்ளார்கள்.

பிகு

முன்பே சொல்லியுள்ளேன் - சிறிலங்கா என்ற தேசத்தின் மீது - தமிழருக்கு சுயயாட்ட்சி வழங்கும் வரை எனக்கு எந்த விசுவாசமும் வராது. நான் இலங்கையில் இருக்கும் போதே என் மனநிலை அப்படித்தான். 

இலவச கல்வி - அது எல்லாருக்கும் இலவசம் இல்லை. பெற்றார் வரி கட்டும் வேலையில் இருந்து, நியாயமான, தொழில், காணி உட்பட்ட வரிகளை செலுத்தி, அந்நிய செலாவணியையும் ஈட்டி தந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு - இலவச கல்வி  கிட்டவில்லை.  சொல்லப்போனால் இலவச கல்விக்கும் மேலதிகாமாகவே, ஏனையோருக்கு சேர்த்தே அவர்கள் செலவழித்துள்ளார்கள்.

Don’t judge others with your own yardstick 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்..

உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே 

இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. 

எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). 

எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். 

ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது.. 

மிக தெளிவான பார்வை.

ஒரு பிரச்சனை வரும் வரைக்கும் எல்லாம் சுவர்க்கம் போலத்தான் இருக்கும். 

இலங்கை திரும்பி போனவர்கள் யாராவது G7 + Aus+ NZ கடவுச்சீட்டை, அல்லது நிரந்தர வதிவிட உரிமையை விட்டெறிந்து விட்டு போனார்களா?

இல்லவே இல்லை.

ஏன்?

சொர்க்கத்தில் போய் இருப்பவர்களுக்கு ஏன் நரகத்துக்கு மீண்டும் வரும் வழி தேவைபடுகிறது🤣.

அங்கே இறுகினால் இங்கே ஓடி வந்து சோசலிடம் கையை தூக்கலாம்.

இதுதான் நான் சொல்லும் பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறி

தொடர்ச்சியை  காணவில்லை?

தொடருங்கள்

எழுதாது  விட்டாலும் பார்வையிடுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாங்கள் எல்லாரும் எங்களை போலவே ஏனையோரையும் நினைக்கிறோம் அதுதான் பிரச்சனை.

இப்ப பாருங்கோ…கொவிட் வரைக்கும் ஊருக்கு அடிக்கடி போன, அங்கே நேரத்தையும், பணத்தையும் முதலிட்ட, திரும்பி அங்கே வரவேண்டும், பிரயோசனமாய் ஏதாவது செய்ய வேண்டும் என முனைந்து, அதன் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து யோசித்து கொண்டிருக்கும் எனது அனுபவமும், பட்டறிவும் 2009 க்கு பின் நாட்டுக்கு ஒரு தடவை (என நினைக்கிறேன்) சுற்றுலா போய் வந்த உங்கள் அனுபவமும் வேறு வேறாகத்தான் இருக்கும். 

எனது முதலாவது கருத்திலேயே சொல்லி உள்ளேன், போர், குண்டு வெடிப்பு போல அல்ல, பொருளாதார சிக்கல் - இங்கே இருக்கத்தான் முடியுமா என்ற நிலைக்கு பெரும் பண வசதி படைத்தவர்களியே கொண்டு வந்து விட்டுள்ளது.

Trend இல் ஆளை ஆள் பார்த்து வெளியேற இவங்கள் அன்றாடம் காய்சிகளோ அல்லது உழைக்கும் வர்கமோ, மத்திய வர்கமோ கூட இல்லை(இதுவும் நடக்கிறது) . வெளிநாட்டில் வந்து படித்து விட்டு கொழும்பு திரும்பிய, உயர் தட்டு மக்கள். பலருக்கு யூகேயில் நிரந்தர வதிவிட உரிமை ஏலவே உண்டு, ஆனால் வியாபாரம், சொத்து இலங்கையில் என்பதால் திரும்பியவர்கள். பிள்ளைகளை பின்பு மேற்படிப்பு படிக்க அனுப்பும் எண்ணத்தில் கொழும்பில் சர்வதேச பாடசாலையில் யூகே கல்விமுறையை பின்பற்ற வைத்தவர்கள்.

இப்போ குடும்பமாக கிளம்பி வந்துள்ளார்கள்.

பிகு

முன்பே சொல்லியுள்ளேன் - சிறிலங்கா என்ற தேசத்தின் மீது - தமிழருக்கு சுயயாட்ட்சி வழங்கும் வரை எனக்கு எந்த விசுவாசமும் வராது. நான் இலங்கையில் இருக்கும் போதே என் மனநிலை அப்படித்தான். 

இலவச கல்வி - அது எல்லாருக்கும் இலவசம் இல்லை. பெற்றார் வரி கட்டும் வேலையில் இருந்து, நியாயமான, தொழில், காணி உட்பட்ட வரிகளை செலுத்தி, அந்நிய செலாவணியையும் ஈட்டி தந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு - இலவச கல்வி  கிட்டவில்லை.  சொல்லப்போனால் இலவச கல்விக்கும் மேலதிகாமாகவே, ஏனையோருக்கு சேர்த்தே அவர்கள் செலவழித்துள்ளார்கள்.

Don’t judge others with your own yardstick 

இங்க பாருடா குயின் எலிசபெத் பேரன் இங்கிலீசில எல்லாம் திட்டுறார் ...உங்கட பெரிய படிப்பிக்கும்,பணத்திற்கும் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்கட காசை கொண்டு போய் பிச்சைகார நாட்டில கொண்டு போய் கொட்டுகிறீர்கள் ...போய் அமெரிக்காவில் கொட்டலாமே?...உங்களை தங்க தாம்பாளம் வைச்சு கூப்பிடினம்.
அங்க போய் இருக்க போவதுமில்லை .அங்கிருங்ப்பவர்களுக்காய் ஒரு மண்ணாங்கட்டியும் புடுங்க போவதுமில்லை ..ஆனால் இங்கிருந்து கொண்டு உங்களுக்கு தமிழீழமும் ,சுயாட்சியும்,மண்ணாங்கட்டியும் வேண்டும் 
நீங்கள் அங்கே போய் வீடுகள் ,காணிகள் வாங்கேலை என்று யார் அழுதா?...உங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவதற்காய் அங்கே போய் வீடுகள் ,காணிகள் அறா விலைக்கு வாங்கிப் போட்டு ,அங்கேயிருப்பவர்களை  இவற்றை வாங்க முடியாத நிலைக்கு  தள்ளுவது உங்களை போல ஆட்கள் தான்....சிங்களவன் இனவாதி தான் அதில் எந்த மாற்றுக கருத்துமில்லை ...அவர்கள் ஒரு காலத்தில் திருந்த வாய்ப்புண்டு ...ஆனால் உங்களை மாதிரி பண திமிர் பிடித்த ஆட்களால் தமிழருக்கு அழிவு...உங்களை போன்றவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லை ...நாடு நல்ல கீழ் நிலைக்கு போகோணும் அதை விஸ்கியை குடித்து கொண்டு உங்களை மாதிரி ஆட்கள் ரசிக்கோணும்  
நீங்கள் எழுதினது தான் அதே உங்களுக்கே திரும்பி சொல்கிறேன் ...உங்களை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாம்...உங்கள் பணக்கார மேற் தட்டு வர்க்கத்தை வைத்து மற்றவரை எடை போட வேண்டாம்   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்..

உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே 

இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. 

எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). 

எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். 

ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது.. 

நீங்கள் அவுசில் நல்ல நிலையில் இருக்கிறீர்கள் ...ஊரில் இருந்து அவுசுக்கு ஹொலிடே வந்த ஒருவர் உங்களிடம் அப்படி செய்யாதே ,இப்படி செய்யாதே என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
விடுமுறைக்கு வந்து இருக்கின்ற இவர் ,இங்கு இருக்க போவதுமில்லை இவர் யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று தான் நினைப்பீர்கள் ...அங்கிருப்பார்களது மனநிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் சொல்வது ,செய்வது சரி .
மருந்துக்கள் ,பொருட்கள் தட்டுப்பாடு , இல்லா விட்டாலும் அங்குள்ளவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள்...அவர்களும் மனிதர்கள் தானே 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2023 at 16:56, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்… அந்தப் பெடியனும், பெட்டையும் அங்கை ஸ்கூட்டர் 🛵 எல்லாம் வாடகைக்கு எடுத்து ஒடி இருக்கினம். இவ்வளவிற்கும் அதற்குரிய லைசன்ஸ் இல்லை. ஸ்கூட்டர் வாடகைக்கு கொடுப்பவர்…. வெள்ளைக்காரரை பொலிஸ் சோதிக்க மாட்டுது என்று சொல்லித்தானாம் கொடுத்தவர். 😂

ஆனால் ஒரு நாள் இரண்டு பேரையும் பொலிஸ் மறிக்க, இவையளுக்கு பயங்கர உதறல் எடுத்திருக்கு. இங்கத்தை பொலிஸ் மாதிரி கடுமையான தண்டனை கிடைக்கப் போகுது என்று பயந்து கொண்டிருக்க… பொலிஸ்காரன்  சும்மா கதைத்து விட்டு அனுப்பி விட்டானாம். 😁

பொலிஸ்காரனுக்கு… வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசையாக இருந்திருக்குமாம்‼️, அதுதான் தங்களை மறித்து கதைத்தவனாம் என்று பெடியன் சொல்லுறான். 🤣

பொலிஸ்காரனுக்கு வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசை என்பது உண்மைதான். வாகனத்தை மறித்துவிட்டு தாங்கள் வெளிநாடு வருவது எப்படி என ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. தவிர கைவிசேடம் கேட்பவர்களும் உண்டு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 13:48, பிரபா சிதம்பரநாதன் said:

பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்..

உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே 

இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. 

எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). 

எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். 

ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது.. 

பிரபா சிதம்பரநாதன் அவர்களே.. வாசித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. 🙂

On 11/2/2023 at 15:14, விசுகு said:

என்ன சிறி

தொடர்ச்சியை  காணவில்லை?

தொடருங்கள்

எழுதாது  விட்டாலும் பார்வையிடுகிறோம்

நன்றி விசுகர். எழுத வேண்டிய முக்கியமானவற்றை எழுதி விட்டேன் என நினைக்கின்றேன்.

9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பொலிஸ்காரனுக்கு வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசை என்பது உண்மைதான். வாகனத்தை மறித்துவிட்டு தாங்கள் வெளிநாடு வருவது எப்படி என ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. தவிர கைவிசேடம் கேட்பவர்களும் உண்டு. 

வரவுக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நியாயத்தை கதைப்போம் அவர்களே. 🙂

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.