Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை

Featured Replies

  • தொடங்கியவர்

தூயவன்!

நான்தான் ஏற்கனவே சொன்னேன், "பெரியார் தாடி வளர்த்தார் என்பதற்காக பெரியாரின் தொண்டர்கள் அனைவரும் அவரைப் போல் தாடி வளர்ப்பது இல்லை", "பெரியாருக்கு குளிப்பது அலர்ஜி என்பதற்காக பெரியார் தொண்டர்கள் எல்லோருக்கும் அப்படி அல்ல"

பெரியார் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை கோயிலுக்கு போகாமல் தடுப்பதற்காக அவர் கையாண்ட வழிகளை பெரியார் தொண்டர்களும் கையாளத் தேவையில்லை.

அதற்கான அறிவை பெரியார் கொடுத்து விட்டு போயிருக்கிறார்.

அத்துடன் பெரியார் தன்னுடைய மனைவியை கோயிலுக்குப் போகமல் தடுப்பதற்காக அவர் கையாண்ட வழி குறித்து அவருடைய மனைவிதான் கவலைப்பட வேண்டும்.

ஆனால் உங்களுடைய மனைவி பற்றியும் உங்களுடைய தாய் பற்றியும் இந்து மதம் சொல்வது குறித்து கவலைப்படாமல் இருக்கிறீர்களே என்பதுதான் என் கவலை.

அத்துடன் பெரியார் கன்னட வெறியன் என்று சொன்னதற்கு நீங்கள் விளக்கம் தரவில்லை. இந்தியாவில் சோனியா காந்தியை இத்தாலியப் பெண் என்று அவருடைய எதிர்பாளர்கள் சொல்வர்கள். ஆனால் அவரை இத்தாலிய வெறியர் என்று சொல்வதில்லை.

ஒரு சொல்லுடன் (உதாரணம் தமிழ், சிங்களம், கன்னடம், இந்து) வெறியர் என்ற சொல்லை சேர்த்தால் அதன் அர்த்தம், குறிப்பிட்டவர் அந்த குறிப்பிட்ட இனமோ, மதமோ, மொழியோதான் உலகில் உயர்ந்தது என்றும் மற்றயைவை தாழ்ந்தது என்றும் சிந்தனையைக் கொண்டிருப்பவர் என்பதாகும்.

அப்படியான சிந்தனை பெரியாரிடம் இருக்கவில்லை. அவரை திராவிட சிந்தனையை ஒரு தத்துவம் என்ற அடிப்படையில் அவரை திராவிட வெறியர் என்று சொல்வதிலாவது ஒரு அர்த்தம் இருக்கக்கூடும். ஆனால் திராவிடம் இனம் என்று பார்த்தால், அப்பொழுது அவரை திராவிட வெறியர் என்று சொல்ல முடியாது.

ஆகவே வெறியர் என்ற சொல்லைப் பாவிக்கும் போது அதன் அர்த்தம் அறிந்து தயவு செய்து பாவியுங்கள்

வெற்றிவேல்!

நீங்கள் இங்குள்ள சிலரைப் போல் அன்றி ஓரளவு நேர்மையாக வாதிடுபவர் என்று நினைத்திருந்தேன். நீங்கள் தந்த ஆதாரங்கள் மோசடியானவை என்று உங்களுக்கு தெரியும்.

அவர் முரசொலியில் தந்த பேட்டி என்று ஒன்றை தந்திருக்கிறீர்கள். இப்படியான பேட்டிகளை பார்ப்பனர் சொல்வது போன்று எள்ளலோடு பெரியார் கொடுத்திருக்கிறார். அப்படியான பேட்டியொன்றை முழுவதும் தராது மேலும் கீழும் வெட்டி மோசடி செய்கிறீர்கள்.

பெரியார் தன்னுடைய அனைத்துக் கருத்துக்களையும் அவருடைய குடியரசு இதழில் பதிவு செய்திருக்கிறார். அவருடைய உரைகளும் அதில் இருக்கின்றன.

அதில் நீங்கள் ஆதாரம் தந்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் அவருடைய எதிரிகள் எழுதிய புத்தகங்களில் உள்ள பொய்யான விடயங்களை ஆதாரம் காட்டுவது சரியா என்று சிந்தியுங்கள்.

ஆனால் நாம் இந்து மத எதிரிகள் எழுதியவற்றை ஆதாரமாக தரவில்லை.

பெண்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள்:

(பகவத்கீதை)

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய

ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு

பி யாந்தி பராங்கதிம்

நீ வேறு அப்பனுக்கும் பிறந்திருக்கலாம்:

'யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண

  • Replies 76
  • Views 9.8k
  • Created
  • Last Reply

சமூகத்தை சீர்திருத்த நீங்கள் முன் வைக்கும் தனிமனித மாற்றங்கள் என்ன..??! நீங்கள் முன்வைப்பத்தை அடுத்த மனிதன் ஏற்க வேண்டும் என்பதற்கான காரணிகள் என்ன..??! ஏன் ஒரு தனிமனிதன் உங்களைப் போன்றன்றி வேறொரு பாதையில் சிந்திக்க முடியாது..??! அல்லது கூடாது...??!

ஒவ்வொருவரும் "உண்மையை" தேடுங்கள். நான் இதுவரை எழுதிய எந்தக் கருத்திலாவது நான் சொல்வதை பின்பற்றுங்கள் என்று கூறியிருக்கிறேனா? நான் முன்வைப்பதை அடுத்த மனிதன் ஏற்க வேண்டும் என்பதோ அல்லது கருத்தை திணிப்பதோ என் நோக்கம் அல்ல. நான் இதற்காக தான் "விடைகள்" எழுதாமல், கேள்விகளை மட்டும் கேட்டு உங்களினூடே ஒரு சலனத்தை உண்டாக்க நினைக்கிறேன். பதில்களை கூறிவிட்டால் அதுகூட "சரியா?" "பிழையா?" என்ற பகுப்பாய்வுக்குள் வந்துவிடும். வேறொரு மனிதன் தன்போக்கில் சிந்திக்கலாம். ஆனால் அதில் "உண்மை" இருக்கிறதா என்பதை பாருங்கள். உண்மை என்பது தனிமனித மனம் சாராதது. அதை அடைவது எளிதல்ல.

கெட்டது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள். காரணம்.. நல்லது கெட்டது ஆளாளுக்கு மாறுபடுகின்றது. நீங்களே உங்களுக்குள் இதுதான் நல்லது இதுதான் கெட்டது என்று வரையறுத்துவிட்டு.. அதையே எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதானது.. திணித்தலே அன்றி.. சிந்தத்தலுக்கான தூண்டலல்லவே..! எப்போது மனிதருக்குள் இன்னொருவர் தனது சிந்தனைகளை திணிக்க முற்படுகிறாரோ.. அப்பவே முரண்பாடுகளும் சச்சரவுகளும்.. எதிர்ப்புக்குரல்களும் எழத் தொடங்குகின்றன..! ஆக எப்படி.. நல்லது கெட்டதை ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனைக்கும் ஏற்ற வகையில் வரையறுக்கப் போகிறீர்கள்..???!

நான் கருத்தை திணித்த ஒரு எழுத்தை காட்டுங்கள்.

எமது பிறப்பு.. தொடங்கி இறப்பு வரை எல்லாமே தற்காலிகமானவை. பொய்த் தோற்றங்கள் மத்தியில் தான் வாழ்க்கை என்பதே ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் என்பதன் அடிப்படை இதைத்தான் சொல்கிறது. நிலையாமை என்பதை. அந்த நிலையாமைக்குள் எப்படி ஒரு மனிதன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பதை ஆன்மீக ரீதியில் சொல்ல விளைவதே மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள். நீங்கள் குறிப்பிடும் மாயைத் தோற்றம் எதில் இல்லை. எமது புலனுக்குப் புலப்பட்டு விட்டதற்காக உருவங்களை உண்மை என்று வரையறுக்கும் நாம்.. அதன் பின்னணியில் உள்ள மாயைகளைப் பற்றி அறிய முற்பட்டிருக்கிறோமா..??! அறிவியல் கூட மாயையைக்குள் மாயைகள் பற்றிய விளக்கம் தேடுகிறதே தவிர.. அது எதையும் உண்மை என்று அறுதியிட்டுக் கூறிட..இன்னும் முடியல்ல..! ஆக மதங்கள் மட்டுமே மாயையை விதைக்கின்றன என்பது தவறு. இந்த உலகை அகிலத்தை மனிதன் முற்றாக அறிவியல் கொண்டு உணரும் வரை.. இது தொடரும்..??! முடிவிலிக்கு முடிவு காணும் திறன் மனிதனுக்கு இருந்தால்...???!

நிலையாமைக்குள் நிலைநிறுத்துவதா? :lol::D .

கண்டபடி "உண்மை" என்ற சொல்லை பாவிக்கிறீர்கள். "உண்மையை" கண்டு வெளியே எழுதவோ, கூறவோ முடியுமா? அதுசரி. உங்கள் சமயம் சொல்லும் "மாயை" என்றால் என்ன?

நீங்கள் மதங்கள் பற்றி தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். மதங்கள் கடவுளை.. பிறிதென்றாகக் காட்டவில்லை. மனிதனுக்குள் உள்ள ஒன்றாகவே காட்டுகின்றன. அன்பாகக் காட்டுகின்றன.. உயிராகக் காட்டுகின்றன.. சக்தியாகக் காட்டுகின்றன..! மனிதன் என்ற அலகுக்குள் தான் மதம் அடங்கி இருக்கிறதே தவிர.. நீங்கள் கடவுள் என்ற ஒன்றை நோக்கி மதம் உள்ளதாக எண்ணத் தலைப்பட்டதில் இருந்து நீங்கள் மதங்கள் தொடர்பில் சரியான விளக்கத்தை இன்னும் பெறவில்லை என்பதை உணர முடிகிறது. இப்படித்தான் பலர் அரைகுறையாக மத அடிப்படைகளை விளங்கிக் கொண்டு.. மதத் திரிபுகளை மத அடிப்படைகளாகச் சித்தரித்துக் கொண்டு.. மத விரோதம் என்று மனித விரோத சிந்தனைகளை விதைத்து வருகின்றனர். இதில் மதம் என்பதை தவறாக விளங்கிக் கொண்ட மதவாதிகளும் அடங்குவர்.. அதே வகையில் அமைந்த மத விரோதிகளும் அடங்குவர்..!

எதை வைத்து "தவறு" என்று கருதுகிறீர்கள். அதுகூட உங்கள் "சொந்த" மனதின் தீர்ப்பு தானே? இல்லையா?

மனிதனுள் உள்ள அல்லது மனிதனுக்கு வெளியேயுள்ள அந்தக் கடவுளை உருவாக்கியவர் யார்? நாம்தானே?

கடைசியில் கடவுள் என்பது மதத்துக்கு அவசியமா? இல்லையா? :D:D அரைகுறை அறிவுடன்தான் கேட்கிறேன். :P :P

சைவம் சொல்லும்.. பதி.. பசு.. பாசம்.. இவை அனைத்தும்.. மனிதனை அடையாளப்படுத்துவது..! ஆணவம் கன்மம் மாயை என்பதெல்லாம்.. மனித மன இயல்புகளைக் குறிப்பது. நீங்கள் கேட்ட கோபம் பொறாமை..போட்டி.. அமைதின்மை இவற்றிற்கு எல்லாம் காரணம்.. மனித மனங்களை.. அதாவது சிந்தனைகளைச் சூழ்ந்துள்ள மும் மலங்கள். மனித சிந்தனைக்குள் குடிகொண்டுள்ள தவறான சுயநலம் மிக்க.. எண்ணங்கள்..! இதைத்தான் மதம் சொல்கிறது.

சரி. இப்ப சைவசமயம். "பதி, பசு,பாசம்", "ஆணவம், கன்மம், மாயை" இவை அனத்துக்கும் சொந்தக்காரன் யார்? மனிதன் தானே? இதை நீக்க உங்கள் மதம் என்ன சொல்கிறது? அடக்கச் சொல்கிறதா? இதைத்தானே உங்கள் ரிஷிகளும் முனிவர்களும் செய்தார்கள். இல்லையா?அதில் இருக்கும் அபாயம் தெரிகிறதா? :rolleyes::huh:

கடவுள் என்பதை... உனக்குள் உள்ள அன்பில் காண் என்பதும் மதம் தான். உருவ வழிபாடுகள் என்பது மனிதன் தன்னை உணர்ந்து கொள்ள மன ஒருமைப்பாட்டை மையப்படுத்தி.. அனுஸ்டிக்கப்படுவது. மதங்கள் மனிதர்களை தவறான வழியில் சிந்திக்க தூண்டவில்லை. ஆனால் மதத்தை சாட்டுவைத்து உருவாக்கிய சில படைப்புக்கள் தனிமனிதர்களின் வக்கிரத்தனங்களை இணைத்துக் கொண்டு சமூகத்தில் உலாவுவதால் அந்த வக்கிரங்களையும் மதம் தான் போதிக்கிறது என்ற தப்பான எண்ணம் வளர்க்கப்பட்டு.. இன்று அதுவே பிழைப்புக்கும் புகழுக்கும்..என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது. அதற்கு பகுத்தறிவு என்று வேற அடைமொழி..! :lol:

"கடவுள் என்பதை அன்பால் காண்." மிகவும் நல்லது. இதுநாள் வரையில் அந்த அன்பினால் காணமுடியாமல் போனதேனோ? கடவுளை அன்பால் அடைய எத்தனிப்பவர்கள் வெவ்வேறு கொள்கைகளை உருவாக்கியது ஏனோ? "அன்பு" என்பது தனிமனிதன் சார்ந்ததா? அல்லது "அன்பு" என்பதன்மீது மனிதனின் தாக்கம் எதுவும் இல்லை, அதை எட்ட நின்று அனுபவிக்க மட்டும்தான் முடியுமா?

அன்பு என்பதைக்கூட தவறாக பயன்படுத்துகிறோம். பறவாயில்லை. வரிக்கு வரி "மதத்தை சாட்டுவைத்து உருவாக்கிய சில படைப்புக்கள் தனிமனிதர்களின் வக்கிரத்தனங்களை இணைத்துக் கொண்டு சமூகத்தில் உலாவுகின்றன" என்றுமட்டும் கூறிவிடுகிறீர்கள். அப்படியானால் உடனேயே அதை நீக்கிவிட வேண்டியது தானே. இன்னமும் அதை செய்ய யாரும் தயாரில்லை. அப்படியா? இதற்குத்தான் முன்னமே எழுதியிருந்தேன் இவை "வெறும் சொற்கள்" என்று. அதனுள் அமிழ்ந்தவாறே அவற்றை மாற்ற வேண்டும் என நினைப்பதுகூட ஒரு பிறழ்வே.

Edited by Eelathirumagan

வெற்றிவேல் இணைத்தது ஆங்கில விகிபீடியாவில் இருந்த மொழி பெயர்ப்பு , அவர் அதன் இணைப்பை வழங்காததற்கான காரணம் அந்தக்கட்டுரையின் நடு நிலமையும் அதில் உள்ள அவதூறுகளும் விகிபீடியாவில் கேள்விக்கு உள்ளாக்கப்படுள்ளன எங்கிற உண்மை வெளி வந்துவிடும் என்னும் கபட எண்ணம் தான்.

வெற்றிவேல் இவ்வளவு தான் உங்கள் நேர்மை என்றால், நீதி நேர்மை நியாயம் நல் ஒழுக்கம் என்பதற்கும் கடவுள் நபிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது இங்கு நிரூபணமாகிறது.

வெட்கக் கேடான விடயம்.

அந்தக் கட்டுரை வந்த இணைப்பு இங்கே

http://en.wikipedia.org/wiki/E._V._Ramasami_Naicker

http://en.wikiquote.org/wiki/E._V._Ramasami_Naicker

The neutrality of this article is disputed.

Please see the discussion on the talk page.

Please do not remove this message until the dispute is resolved

This page is currently protected from editing until disputes have been resolved.

Protection is not an endorsement of the current version (protection log). Please discuss changes on the talk page or request unprotection. You may use {{editprotected}} on the talk page to ask for an administrator to make an edit for you.

This article or section is in need of attention from an expert on the subject.

WikiProject India or the India Portal may be able to help recruit one.

If a more appropriate WikiProject or portal exists, please adjust this template accordingly.

இந்தக் கட்டுரையில் வேண்டுமென்றே தொடர்ந்தும் அவதூறான, பொய்யான விடயங்களை பார்ப்பனர்கள் இணைத்த வண்ணம் உள்ளதாலேயே இந்தக் கட்டுரை நடுனிலையற்றது என்று விகிபீடியாவில் வரையறை செய்யப்படுள்ளது.

அது பற்றிய வாதப் பிரதிவாதங்களை disucion என்னும் tab காணலாம்.

Edited by narathar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் இயக்கம் எண்டு சொல்லுறத விட்டிட்டு சிறியர் இயக்கம் எண்டு வையுங்கண்னே பொருத்தமாயிருக்கும்.

உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்க தெரியாத மந்தைக்கூட்டம். தங்களுடைய கொள்கைப்பரப்பு எண்ட பேரில பெண்களுக்கு தாசிப்பட்டம், கிழவயதிலும் இளம் பெண்களை நாடி ஓடுற நரிக்குணம், ஒண்டுக்கு ரெண்டு பொண்ணாட்டிமார், உதுவளுக்கு ஆதரவா நாடகமாட பெரியாரியக்கம் எண்டு பரப்புரை. :angry:

  • தொடங்கியவர்

ஆதி!

விவாதம் செய்யத் தெரியாமல் வசைபாடுவதற்கு என்றே இங்கே யாழ் களத்தில் ஒரிருவர் இருக்கிறார்கள். இப்பொழுது நீங்களும் வந்துவிட்டீர்கள்.

அல்லது நீங்கள் எல்லோரும் ஒருவர்தானா?

  • கருத்துக்கள உறவுகள்

"கடவுள் என்பதை அன்பால் காண்." மிகவும் நல்லது. இதுநாள் வரையில் அந்த அன்பினால் காணமுடியாமல் போனதேனோ? கடவுளை அன்பால் அடைய எத்தனிப்பவர்கள் வெவ்வேறு கொள்கைகளை உருவாக்கியது ஏனோ? "அன்பு" என்பது தனிமனிதன் சார்ந்ததா? அல்லது "அன்பு" என்பதன்மீது மனிதனின் தாக்கம் எதுவும் இல்லை, அதை எட்ட நின்று அனுபவிக்க மட்டும்தான் முடியுமா?

அன்பு என்பதைக்கூட தவறாக பயன்படுத்துகிறோம். பறவாயில்லை. வரிக்கு வரி "மதத்தை சாட்டுவைத்து உருவாக்கிய சில படைப்புக்கள் தனிமனிதர்களின் வக்கிரத்தனங்களை இணைத்துக் கொண்டு சமூகத்தில் உலாவுகின்றன" என்றுமட்டும் கூறிவிடுகிறீர்கள். அப்படியானால் உடனேயே அதை நீக்கிவிட வேண்டியது தானே. இன்னமும் அதை செய்ய யாரும் தயாரில்லை. அப்படியா? இதற்குத்தான் முன்னமே எழுதியிருந்தேன் இவை "வெறும் சொற்கள்" என்று. அதனுள் அமிழ்ந்தவாறே அவற்றை மாற்ற வேண்டும் என நினைப்பதுகூட ஒரு பிறழ்வே.

உங்களுடைய இதர பதில்களுக்குள்ளும் பல முரண்பாடுகள் எமக்கு உண்டு. எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தடிச்சால்.. இறுதியில் சாம்பாறுதான் மிஞ்சும்.

ஆகவே இந்த விடயத்தை மட்டும் நோக்கி பதில் தருகிறேன்.. தன் அன்பை பிறருடம் பகிர்ந்து கொள்வதால்.. மனிதன் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தி... அவனை வாழும் வாழ்க்கையில் நம்பிக்கை பெற வைக்கிறான்.. என்பதைத்தான் தாய் - சேய் அன்புப் பிணைப்பு முதல்.. நாம் உணர்கிறோமே..! அன்பு என்பதை நீங்கள் உணர்பவராக இருந்தால் அதையே இறைவன் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள்.. அதிக தூரம் செல்லத் தேவையில்லை. அணுவை உடைக்கத் தேவையில்லை..! மதங்கள் போதிக்கும் கடவுள் என்பது அந்த அன்புதான்..! அதை சில மனிதர்களால் உணர முடியவில்லை என்றால் அவர்களின் மூளையின் ஒரு பகுதியில் பிரச்சனை என்பதுதான் அர்த்தம்..!

நீங்கள் சைவ சித்தாந்த நூல்களைப் படித்தீர்களோ தெரியவில்லை. சைவம் சார்ந்த இந்து மத அடிப்படைக் கோட்பாடுகள் ... இடைத் திரிபுகள் கடந்து பதி பசு பாசம்.. மும் மலம்.. ஆன்மா பற்றியும் அன்பு பற்றியுமே பேசுகின்றன. மனிதன் ஆன்மா என்றுதான் விடயங்கள் அணுகப்படுகின்றன. ஆண் பெண் என்று கூட வரையறுக்கவில்லை..! அந்தளவுக்கு பரந்த ஒரு சிந்தனை அங்கு வெளிப்படுகிறது. அதுவே இன்று மனித நேயத்தை வேண்டி நிற்பவர்கள் உணர வேண்டியதாகவும் உள்ளது.

மனித நேயம் எங்கிறோமோ.. அப்படி என்பதையாவது உணர்கிறீர்களா.. அந்த நேயமே கடவுள்..அப்படி என்று எண்ணிக் கொள்ளுங்கள்..! இலகுவானது.

உணர்வுகளை அளவிட.. அறிவியலில் கூட கருவிகள் கிடையாது. ஆனால் உணர முடிகிறதே.. அந்த மாயத்துக்கு என்ன விளக்கம் சொல்ல விரும்புறீங்கள். துன்பம் என்பதை உணர்கிறோம்.. அதை அளவிட கருவி உண்டா..???! :rolleyes: அந்த உணர்வு உணரக் கூடியது.. ஆனால் அதற்கு physical body..physical property பெளதீக உடல் மற்றும் பெளதீகத் தன்மை.. இல்லை என்பதாலேயே கருவிகளால் உணர முடியாத அளவுக்கே இருக்கிறது இன்றும். :)

Edited by nedukkalapoovan

அரோகரா :rolleyes::)

நமோ பார்வதி பதியே எண்டு வரவேண்டும்... அதுக்கு அரகர மகா தேவா எண்று வர வேண்டும்... இது வட மொழியின் கலப்பு இருக்கிறது ஆகவே

"தென்னாடுடைய சிவனே போற்றி"... என்பதுக்கு

"என்னாட்டவர்கும் இறைவா போற்றி" எண்று தமிழில் சொல்லாம்...

பெண்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள்:

(பகவத்கீதை)

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய

ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு

பி யாந்தி பராங்கதிம்

யோனி என்பது குறியைத்தானே குறிக்கிறது... அப்படீங்களா... ???

ஆனால் இங்கு பலம் என்பதை குறிக்கும் பொருளாகவே சோதிடங்கள் பார்பவர்களால் சொல்ல படுகிறது விசாரித்து பார்த்து கொள்ளுங்கள் ( நம்மாளுங்கள் சிலர் அந்த விசயம் பற்றிய பொருத்தம் எண்டு அளப்பதையும் கேட்டு இருகிறேன்) ... ஆனால் பாவ ஜோனி என்பது பெண்களின் பலவீனதை குறிக்கிறது... அதைத்தான் உங்களின் பெரியாரும் பெண்களுக்கு சிறையே தாலியும், கர்ப்பமும் என்கிறார்....

ஒரே விடயம் பெரியார் சொல்லும் போது வேதமாகவும் . கிதையில் சொல்லும் போது அசீங்கமாகவும் தெரிகிறதா...??

நீ வேறு அப்பனுக்கும் பிறந்திருக்கலாம

'யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண

ஆண்டு ஆண்டாக தமிழர் முது மொழிகளில் இருப்பவை , "அம்மா சொல்லித்தான் அப்பா யார் எண்று தெரியும்"... அதனால்தான் உலகளாவிய ரீதியில் அப்பாவின் விலாசத்தை கொடுத்து அதை முதல் எழுத்தாக பிள்ளைகளுக்கு சூட செய்கிறார்கள்... அதை Initial என்பார்கள்...

ஆகவே initial உங்களின் தாயை கேவலப்படுத்து கிறதே அதை தூக்கி எறியலாமா...??

Edited by தயா

உங்களுடைய இதர பதில்களுக்குள்ளும் பல முரண்பாடுகள் எமக்கு உண்டு. எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தடிச்சால்.. இறுதியில் சாம்பாறுதான் மிஞ்சும்.

ஆகவே இந்த விடயத்தை மட்டும் நோக்கி பதில் தருகிறேன்.. தன் அன்பை பிறருடம் பகிர்ந்து கொள்வதால்.. மனிதன் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தி... அவனை வாழும் வாழ்க்கையில் நம்பிக்கை பெற வைக்கிறான்.. என்பதைத்தான் தாய் - சேய் அன்புப் பிணைப்பு முதல்.. நாம் உணர்கிறோமே..! அன்பு என்பதை நீங்கள் உணர்பவராக இருந்தால் அதையே இறைவன் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள்.. அதிக தூரம் செல்லத் தேவையில்லை. அணுவை உடைக்கத் தேவையில்லை..! மதங்கள் போதிக்கும் கடவுள் என்பது அந்த அன்புதான்..! அதை சில மனிதர்களால் உணர முடியவில்லை என்றால் அவர்களின் மூளையின் ஒரு பகுதியில் பிரச்சனை என்பதுதான் அர்த்தம்..!

நீங்கள் சைவ சித்தாந்த நூல்களைப் படித்தீர்களோ தெரியவில்லை. சைவம் சார்ந்த இந்து மத அடிப்படைக் கோட்பாடுகள் ... இடைத் திரிபுகள் கடந்து பதி பசு பாசம்.. மும் மலம்.. ஆன்மா பற்றியும் அன்பு பற்றியுமே பேசுகின்றன. மனிதன் ஆன்மா என்றுதான் விடயங்கள் அணுகப்படுகின்றன. ஆண் பெண் என்று கூட வரையறுக்கவில்லை..! அந்தளவுக்கு பரந்த ஒரு சிந்தனை அங்கு வெளிப்படுகிறது. அதுவே இன்று மனித நேயத்தை வேண்டி நிற்பவர்கள் உணர வேண்டியதாகவும் உள்ளது.

மனித நேயம் எங்கிறோமோ.. அப்படி என்பதையாவது உணர்கிறீர்களா.. அந்த நேயமே கடவுள்..அப்படி என்று எண்ணிக் கொள்ளுங்கள்..! இலகுவானது.

உணர்வுகளை அளவிட.. அறிவியலில் கூட கருவிகள் கிடையாது. ஆனால் உணர முடிகிறதே.. அந்த மாயத்துக்கு என்ன விளக்கம் சொல்ல விரும்புறீங்கள். துன்பம் என்பதை உணர்கிறோம்.. அதை அளவிட கருவி உண்டா..???! :) அந்த உணர்வு உணரக் கூடியது.. ஆனால் அதற்கு physical body..physical property பெளதீக உடல் மற்றும் பெளதீகத் தன்மை.. இல்லை என்பதாலேயே கருவிகளால் உணர முடியாத அளவுக்கே இருக்கிறது இன்றும். :(

நெடுக்ஸ். எல்லாத்துக்கும் சேர்த்து பதில் எழுத தேவையில்லை. ஒவ்வொன்றாகவே பார்க்கலாம். :D:D

அன்பு என்று ஒன்று இருந்தால் அதை முற்றாக அனுபவியுங்கள். அதற்குள் "கடவுள்" என்பதை ஏன் உட்புகுத்துகிறீர்கள்? இரண்டையும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்? அதற்காக தான் "அன்பு" என்பது மனிதனில் சார்ந்ததா என கேட்டேன். உண்மையில் அடிமனதில் எழும் ஆசையின் ஒரு வெளிப்பாடு அன்பென பரிணமிக்கிறது. இதை நீங்கள் நம்ப வேண்டும் என்றில்லை. ஒவ்வொருவரும் அன்பின் அடிநாதம் எது என தேடிக்கொண்டு போனால் அங்கு இறுதியில் ஒரு "ஆசை" தொக்கு நிற்பதை காணலாம்.

மற்றது, சைவசித்தாந்தம் படிக்க வேண்டிய தேவை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இவற்றை படிப்பதன் மூலம் உண்மையை தேட முடியும் என நான் நம்பவில்லை. இது கால விரையமே அன்றி வேறல்ல. அது கூறும் "பசு" என்பதும் "பதி" என்பதும் வெறுந்தமிழில் "மனிதன்", "கடவுள்" என்பவற்றின் சோடிக்கப்பட்ட வார்த்தைகளே. எவ்வளவு பெரிய கோலாகலமான வார்த்தைகளால் விபரித்தாலும் கற்பனை கற்பனைதான்.

சரி. துன்பம் என்பதை அளவிட கருவி இல்லை. அது ஒரு உணர்வு. உணர்வு என்பது மனித மூளையில் பதியப்படும் ஒருவகை pattern. பௌதீக உடல், பரிசோதனைகள் என்பன (அளத்தல், நிறுத்தல், நேரம்) என்பனகூட மனித மூளையில் பதியப்படும் pattern என்பதை தவிர வேறென்ன? நீங்கள் எந்தவித பரிசோதனையை செய்தாலும் சரி, அதைப்பற்றி விபரித்தாலும் சரி அது முற்றுமுழுதாகவே உங்கள் சார்ந்ததாக வந்துவிடுகிறது. அப்படியானால் இதையெல்லாம் தாண்டி ஏதாவது இருக்கிறதா? :rolleyes:

வெற்றிவேல் இணைத்தது ஆங்கில விகிபீடியாவில் இருந்த மொழி பெயர்ப்பு , அவர் அதன் இணைப்பை வழங்காததற்கான காரணம் அந்தக்கட்டுரையின் நடு நிலமையும் அதில் உள்ள அவதூறுகளும் விகிபீடியாவில் கேள்விக்கு உள்ளாக்கப்படுள்ளன எங்கிற உண்மை வெளி வந்துவிடும் என்னும் கபட எண்ணம் தான்.

அந்தக் கட்டுரை வந்த இணைப்பு இங்கே

http://en.wikipedia.org/wiki/E._V._Ramasami_Naicker

http://en.wikiquote.org/wiki/E._V._Ramasami_Naicker

The neutrality of this article is disputed.

Please see the discussion on the talk page.

Please do not remove this message until the dispute is resolved

This page is currently protected from editing until disputes have been resolved.

Protection is not an endorsement of the current version (protection log). Please discuss changes on the talk page or request unprotection. You may use {{editprotected}} on the talk page to ask for an administrator to make an edit for you.

This article or section is in need of attention from an expert on the subject.

WikiProject India or the India Portal may be able to help recruit one.

If a more appropriate WikiProject or portal exists, please adjust this template accordingly.

இந்தக் கட்டுரையில் வேண்டுமென்றே தொடர்ந்தும் அவதூறான, பொய்யான விடயங்களை பார்ப்பனர்கள் இணைத்த வண்ணம் உள்ளதாலேயே இந்தக் கட்டுரை நடுனிலையற்றது என்று விகிபீடியாவில் வரையறை செய்யப்படுள்ளது.

அது பற்றிய வாதப் பிரதிவாதங்களை disucion என்னும் tab காணலாம்.

நாரதரே நீங்கள் தான் சரியான ஒரு தகவலுடன் பிழையான ஒரு தகவலையும் கலந்து வாசிப்பவரை குழப்ப நினைக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னதில் சரியான தகவல்:

விக்கிபீடியாவில் கீழ்வரும் பக்கம் பக்கசார்பின் நிமித்தம் தற்காலிகமாக மேலதிக மாற்றங்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் அது எந்த பக்கம் சார்பு என்று விக்கிபீடியா எதுவும் கூறவில்லை. ஆகவே அது பெரியார் பக்க சார்பாலும் நிறுத்தப்பட்டிருக்கலாம், கடவுள் பக்க சார்பாலும் நிறுத்தப்பட்டிருக்கலாம்

http://en.wikipedia.org/wiki/E._V._Ramasami_Naicker

The neutrality of this article is disputed.

This article or section is in need of attention from an expert on the subject.

WikiProject India or the India Portal may be able to help recruit one.

If a more appropriate WikiProject or portal exists, please adjust this template accordingly

NB: மேலும், பக்கச்சார்பென்று கருதப்பட்ட இந்த பக்கத்தில் இருந்து நான் எந்த கருத்தையும் எடுத்து இங்கு இணைக்கவில்லை.

நீங்கள் சொன்னதில் பிழையன தகவல்

கீழ் உள்ள விக்கிகோட் பக்கங்கள் பக்கச்சார்பான பக்கம் என்று எங்கும் சொல்லப்படவில்லை. இந்த பக்கத்தில் தான் நான் எழுதியுள்ள கருத்துக்கள் உள்ளன.

http://en.wikiquote.org/wiki/E._V._Ramasami_Naicker

The neutrality of this article is not disputed.

அத்தோடு நான் எழுதிய கருத்துக்களின் மூலமும் கருத்துக்களோடு இணைக்கப்பட்டு தான் உள்ளது. இந்த இணையதளம் (wikiquote.org) கருத்துக்களின் மூலம் அல்ல. அதனால் அவர்களும் இந்த கருத்துக்களை பெற்ற மூலங்களை இணைத்து உள்ளார்கள். அந்த மூலங்களை நானும் இணைத்தே உள்ளேன் (Source: Lloyd I. Rudolph Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras The Journal of Asian Studies, Vol. 20, No. 3 (May, 1961), pp. 283-297) அவற்றை கொண்டு எவரும் கருத்துக்களின் சரிபிழை பார்ர்த்துக் கொள்ளலாம்.

தணிக்கையின் கீழுள்ள ஒரு பக்கத்துடன் தணிக்கையின் கீழ் இல்லாத இன்னொரு பக்கத்தையும் சேர்த்து இரண்டு பக்கங்களும் தணிக்கையின் கீழ் இருப்பது போன்று காட்டும் விதமாக கருத்து எழுதி நீங்கள் தான் வாசிப்பவர்களை குழப்ப முனந்திருக்கிறீர்கள்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சரி. துன்பம் என்பதை அளவிட கருவி இல்லை. அது ஒரு உணர்வு. உணர்வு என்பது மனித மூளையில் பதியப்படும் ஒருவகை pattern. பௌதீக உடல், பரிசோதனைகள் என்பன (அளத்தல், நிறுத்தல், நேரம்) என்பன கூட மனித மூளையில் பதியப்படும் pattern என்பதை தவிர வேறென்ன? நீங்கள் எந்தவித பரிசோதனையை செய்தாலும் சரி, அதைப்பற்றி விபரித்தாலும் சரி அது முற்றுமுழுதாகவே உங்கள் சார்ந்ததாக வந்துவிடுகிறது. அப்படியானால் இதையெல்லாம் தாண்டி ஏதாவது இருக்கிறதா?

pattern... என்பது வடிவம். உங்கள் எண்ணத்தில் அதை எப்படிப் பதிகிறீர்கள்.. உண்மையில் இருந்தா கற்பனையில் இருந்தா..???!

நீங்கள் கடவுள் என்பதையும் ஒரு pattern ஆக உணரலாம் இல்லையா..??! அன்பை உணர முடிகிறது என்றால்.. அந்த அன்பைக் கடவுளாக என்னும் மனிதன்.. அதை அப்படி உணர்வதில் என்ன தவறு. ஏன் அது.. கூடாது..???! அது அவனுக்கான pattern...??! அதில் ஏன் நாம் தலையீடு செய்ய வேண்டும்..???! ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் வடிவத்தில் ஒன்றை அணுக உரிமை இருக்க.. இல்லை.. நீ இப்படித்தான் அணுக வேண்டும் என்பது.. எவ்வாறு.. உண்மை ஆகும். உலகில் இது வரை அறியப்பட்ட absolute truth எது...????! Nothing...!

பதி பசு பாசம்.. தாய் தந்தை உயிர் என்ற நிலைக்குரியது. அது மனிதனைச் சார்ந்தே கடவுளைக் காட்டுகிறது. கடவுள்.. மனிதனுக்கு வெளியில் இல்லை என்பதை உணரும் pattern.. அளத்தல்.. நிறுத்தல்.. நேரம் போன்று.. ஒரு வடிவமாகப் பதியப்படுகிறது. அது உணர்வியல் ரீதியாக உள்ள போது... நாம் எப்படி அதை அடுத்தவனில் உள்ள வடிவத்துக்கு ஏற்ப உணர முடியும். நாம் கற்பனை என்று வகுப்பது கூட ஒரு pattern... சிந்தனை வடிவம் தானே..??! :rolleyes:

  • தொடங்கியவர்

தயா!

நீங்கள் சிறுபிள்ளையாக இருந்த பொழுது யாராவது உங்களுக்கு யோனி என்றால் பலம் என்று சொல்லித் தந்திருக்கலாம். அதை இப்பொழுதும் நம்பாமல் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பான் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

(சிறுபிள்ளையாக இருந்த பொழுது சொல்லித் தந்த அனைத்தையும் இப்பொழுதும் கேள்வி கேட்காமல் நம்புவதால்தான், பலர் மதங்களை கைவிட மறுக்கிறார்கள்.)

நான் தந்த "நீ வேறு அப்பாவிற்கும் பிறந்திருக்கலாம்" என்று தந்தை மந்திரத்திற்கு இன்னமும் முறையான பொருள் தரவில்லை. நான் பொருள் தந்த பிற்பாடு, நீங்கள் இது தவறு என்று வேறு விளக்கம் சொல்லாமல், இப்பொழுதே அந்த மந்திரத்திற்கான பொருளை தர முடியுமா?

ஆதி!

நீங்கள் மீண்டும் மீண்டும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியே பேசுவதில் இருந்து உங்களுக்கு பெரியார் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது தெரிகிறது.

தன்னை நண்பர்களைக் கொண்டு பயமுறித்தியது பற்றி அவருடைய மனைவி நாகம்மையும்,

வயதான ஒருவரை மணந்து கொண்டது பற்றி மணியம்மையும்தான் கவலைப்பட வேண்டும்.

நீங்கள் கவலைப்படுகின்ற காரணம் எனக்கு விளங்கவில்லை.

அதுவம் ஒரு பெண்ணுக்கு 18 வயது வந்தவுடனேயே திருமணப் பக்குவம் வந்துவிட்டதாக சொல்கின்ற ஒரு சமூகம், 28 வயதுப் பெண் எடுத்த முடிவு குறித்து எதற்கு ஆராய வேண்டும்?

நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பெரியார் தற்பொழுது தேர்தலில் நிற்கவில்லை. நாம் அவருக்காக வாக்குச் சேகரிக்கவும் இங்கு வரவில்லை.

பெரியார் தமிழர்களைப் பார்த்து நிறைய சீர்திருத்தக் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அந்தக் கருத்துக்களையே கொண்டு வந்திருக்கிறோம்.

ஆகவே அது குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?

பெரியாரை நீங்கள் ஏற்க வேண்டாம். வேண்டுமென்றால் அவரை வசைபாடுவது என்றாலும் செய்யுங்கள்.

ஆனால் பெரியார் கூறிய கருத்துக்கள் ஐரோப்பியத் தமிழர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அவர் மூடநம்பிக்கையை எதிர்த்து நடத்திய போராட்டம் தேவையானதாக இருக்கிறது.

தமிழ் மக்களின் மூட நம்பிக்கையை போக்கும் விதமாக நீங்கள் எதாவது செய்யுங்கள். பெரியார் பெயரை பாவிக்காது செய்வது என்றாலும் செய்யுங்கள். வேண்டுமென்றால் பாரதியின் பெயரைப் பாவித்து நீங்கள் போராடுங்கள்.

ஆனால் சும்மா இருந்து மூடநம்பிக்கைகளுக்கு ஒத்து ஊதுவதும், தவறு என்று தெரிந்தும் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்தபடி இருக்கிறீர்கள்.

நாம் சீர்திருத்தக் கருத்துக்களை சொன்னால், அப்பொழுது குதித்தோடி வந்து பெரியாரை தூற்றி விட்டு போய்விடுகிறீர்கள்.

மீண்டும் சொல்கிறேன். பெரியாரை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். நான் கூட பெரியார் சொன்ன அனைத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை.

(விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் கூட, விடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகளோடு உடன்படுவதில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகளைத்தான் அவர்கள் ஆதரிப்பார்கள்.)

ஆகவே பெரியாரை ஏற்காவிட்டாலும் கூட, தமிழ் மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை களைவதற்கு முன்வாருங்கள். தமிழ் மக்களின் மதம் தமிழாக இருப்பதற்கும், ஏற்றத் தாழ்வு இல்லாமல் இருப்பதற்கும் பாடுபடுங்கள்.

இல்லையென்றால் எதிர்காலத் தமிழினம் உங்களைப் பழிக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டுமொரு தடவை யானை பார்த்த குருடர்களின் விபரணமாகவும் தொலைக்காட்சியின் முடிவிலித் தொடராகவும் நீட்சியுறும் இக்கருத்துப் பதிவுகள் சலிப்பூட்டுவனவாகவே உள்ளன.

:rolleyes:

தயா!

நீங்கள் சிறுபிள்ளையாக இருந்த பொழுது யாராவது உங்களுக்கு யோனி என்றால் பலம் என்று சொல்லித் தந்திருக்கலாம். அதை இப்பொழுதும் நம்பாமல் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பான் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

(சிறுபிள்ளையாக இருந்த பொழுது சொல்லித் தந்த அனைத்தையும் இப்பொழுதும் கேள்வி கேட்காமல் நம்புவதால்தான், பலர் மதங்களை கைவிட மறுக்கிறார்கள்.)

நான் தந்த "நீ வேறு அப்பாவிற்கும் பிறந்திருக்கலாம்" என்று தந்தை மந்திரத்திற்கு இன்னமும் முறையான பொருள் தரவில்லை. நான் பொருள் தந்த பிற்பாடு, நீங்கள் இது தவறு என்று வேறு விளக்கம் சொல்லாமல், இப்பொழுதே அந்த மந்திரத்திற்கான பொருளை தர முடியுமா?

யோனி என்பது வட சொல் எனவே அது தமிழ் சொல் இல்லை என்பதை தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்...

திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பெருத்தம் எண்ற ஒண்றை பார்ப்பார்கள் தெரியுமா...?? அவைகளுக்கு விலங்கு ஒண்றின் பெயரையும் வைத்து இருப்பார்கள்.... அது எதுக்காக..??? ஆணும் பெண்ணும் கலவி செய்ய பொருத்தம் இருக்கிறதா எண்றா...??? அப்படிதான் சிலர் அரைகுறையாக அறிந்து வைத்து சொல்லி திரிகிறார்கள்... தெரியவில்லை எண்றால் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து கோள்ளுங்கள் சபேசன்...!

ஆனால் அந்த பொருத்தம் இருவரின் பலம் ரீதியான பொருத்தம்... ஆணும் பெண்ணும் கலவி கொள்தல் சம்பந்தமானது அல்ல...

மற்றது நீங்கள் கேட்ட மந்திரத்தை ஆராய்ந்து பதில் சொல்ல தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அனாலும் அதில் எனக்கு ஈடுபாடு இல்லை... !

Edited by தயா

[ஃஉஒடெ நமெ='வெட்ட்ரி-வெல்' டடெ='ஸெப் 6 2007, 04:33 ஆM' பொச்ட்='341015']

நாரதரே நீங்கள் தான் சரியான ஒரு தகவலுடன் பிழையான ஒரு தகவலையும் கலந்து வாசிப்பவரை குழப்ப நினைக்கிறீர்கள்.

[உ][cஒலொர்="#FF0000"][ப்]நீங்கள் சொன்னதில் சரியான தகவல்:[/ப்][/cஒலொர்][/உ]

விக்கிபீடியாவில் கீழ்வரும் பக்கம் பக்கசார்பின் நிமித்தம் தற்காலிகமாக மேலதிக மாற்றங்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் அது எந்த பக்கம் சார்பு என்று விக்கிபீடியா எதுவும் கூறவில்லை. ஆகவே அது பெரியார் பக்க சார்பாலும் நிறுத்தப்பட்டிருக்கலாம், கடவுள் பக்க சார்பாலும் நிறுத்தப்பட்டிருக்கலாம்

[ப்] [உர்ல்="க்ட்ட்ப்://என்.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/ஏ._V._றமசமி_ணைcகெர்"]க்ட்ட்ப்://என்.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/ஏ._V._றமசமி_ணைcகெர்[/உர்ல்][/ப்]

இப்போது நேரம் இல்லை விரிவாக எழுத , நான் கேட்ட கேள்வி நீங்கள் எங்கிருந்து உங்கள் தகவலை எடுத்திருகிறீர்கள் என்று ஏன் குறிப்பிடவில்லை.இப்போது தான் சொல்கிறீர்கள் விகிபீடியா கோட் சில் இருந்து தான் போட்டேன் என்று. நீங்கள் சொல்லும் மூலங்கள் விகிபிடீயாக் கட்டுரையிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.அதனால் தான் நான் இரண்டு இணைப்பையிம் போட வேண்டி வந்தது. நீங்கள் எதில் இருந்து எடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது.இந்த மூலங்கள் புனையப்படவையாக அல்லது திரிக்கப்பட்டவையாக இருக்கலாம்.இவை பற்றிய விவாதம் அங்கே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.வாசிதுப் பாருங்கள்.

^ Lloyd I. Rudolph and Suzanne Hoeber Rudolph, The Modernity of Tradition: political development in India P78,University of Chicago Press 1969, ISBN:0226731375

//Periyar and anti-Brahmanism

Periyar's self-respect movement was founded on a principle of intense anti-Brahmanist racism, while nominally claiming to be a movement espousing "rationalism" and "athieism".Tamil Brahmins (Iyers and Iyengars) were frequently held responsible by followers of Periyar for direct or indirect oppression of lower-caste people on the canard of "Brahmin oppression" and resulted in innumerable hate attacks on Brahmins and which amoung other reasons started a wave of forced mass-migration of the Brahmin population.[18]. Periyar is alleged to have called for "Brahmin killing"s and burning down Brahmin homes. Later, in regards to a DK member's attempt to assassinate Rajagopalachari, he "expressed his abhorrence of violence as a means of settling political differences".[19]The canard of "Brahmin oppression" rationalized conspiracy theories and pointed to Brahmins as enemies against whom the radical movements pitted themselves.[18] The legacy of the anti-Brahmanism of the self-respect movement was taken over by the later Dravidan parties. Growing anti-Brahmanism in Chennai provided a rationale for polarization of the lower castes in the DMK movement.[20] Eventually, the virulent anti-Brahmanism subsided somewhat with the replacement of the DMK party by the AIADMK[21].EVR's followers have broken temple icons, cut sacred threads and tufts from Brahmin priests, and have often portrayed Brahmins in the most derogatory manner in their meetings and magazines (see http://www.viduthalai.com and http://www.unmaionline.com - both in Tamil language).//

அடுத்தது விகிபிடியா கோட்ஸ் என்னும் பக்தியில் எந்தவித எடிடும் செய்யப்படவில்லை ,இப்போது அந்த இணைப்பிறிக்குச் சென்று பாருங்கள் அங்கு எதுவும் இருக்காது என்னில் நானே அதைனீக்கி விட்டேன்.மீண்டும் வேறு யாராவது வேறு எதையும்

இணைக்கலாம்.

http://en.wikiquote.org/wiki/E._V._Ramasami_Naicker

விகிபீடியாவில் இருப்பது போல் இன்னும் விகி கோட்சில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுறுதினர்களோ விவாதங்களோ இன்னும் ஏற்படவில்லை.

உங்களுக்கு ஒன்றில் விகிபிட்டியா எப்படி இயங்குகிறது என்று விளங்கவில்லை இல்லை வேண்டுமென்றே இப்படிச் செய்துள்ளீர்கள் என்றே கருதுகுறேன்.அதற்க்குக் காரணம் நீங்கள் எங்கிருந்து உங்கள் மூலங்களை எடுதீர்கள் என்று சொல்லவில்லை.அப்படினீங்கள் விகி கோட்சில் இருந்து அல்லாமால் மூல ஆவணம் உங்களிடம் இருந்தால் அதனைப் பிரதியுடுங்கள்.விகி கோட்சில் எவரும் என்னதையும் எழுதலாம்.அவை மட்டுறுதப்பட்டு பலராலும் விவாதிக்கப்பட்டாலையே அவை நடுனினைலாயணவையாக இருக்கும்.அந்த நிலை நீங்கள் எடுத்த விகி கோர்ட்ஸ் பக்கதில் இல்லை.

Edited by narathar

அடக் கடவுளே! :rolleyes:

யோனி அப்ப தமிழில்லையா? அதுவும் அப்ப கடன் வாங்கினதா? B)

அடக் கடவுளே! :rolleyes:

யோனி அப்ப தமிழில்லையா? அதுவும் அப்ப கடன் வாங்கினதா? B)

கடவுளை கூப்பிடாதையும். அதுகூட கடன் வாங்கியதுதான். :):(

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். தமிழன் கடவுளை வணங்காமல் இருந்தான் என்று கண்டுபிடித்த ஈழத்திருமகன் வாழ்க.

ஆமாம். தமிழன் கடவுளை வணங்காமல் இருந்தான் என்று கண்டுபிடித்த ஈழத்திருமகன் வாழ்க.

தூய்ஸ். எப்பிடி இருக்கிறீர்?

அதுசரி. நாம் வணங்கும் எந்தக் கடவுள் "நம்முடைய கடவுள்" ?? எல்லாம் இறக்குமதி தானே. :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டும், முதுகை கதிரையில் சாய்த்துக் கொண்டும். B)

அது தான் சொன்னனே, தமிழனுடைய வரலாற்று ஆவணங்கள் முழுமையாக எம் கைக்குள் கிடைக்காதபோதும், அதை ஆழச்சென்று கண்டுபிடித்து வந்த உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

தமிழனுடைய கடவுள்கள் பற்றிய விவாதங்கள் ஏற்கனவே பல தடவை நடந்திருக்கின்றன. எனிமேல் தேவைப்படாது என நினைக்கின்றேன்

Edited by தூயவன்

pattern... என்பது வடிவம். உங்கள் எண்ணத்தில் அதை எப்படிப் பதிகிறீர்கள்.. உண்மையில் இருந்தா கற்பனையில் இருந்தா..???!

நீங்கள் கடவுள் என்பதையும் ஒரு pattern ஆக உணரலாம் இல்லையா..??! அன்பை உணர முடிகிறது என்றால்.. அந்த அன்பைக் கடவுளாக என்னும் மனிதன்.. அதை அப்படி உணர்வதில் என்ன தவறு. ஏன் அது.. கூடாது..???! அது அவனுக்கான pattern...??! அதில் ஏன் நாம் தலையீடு செய்ய வேண்டும்..???! ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் வடிவத்தில் ஒன்றை அணுக உரிமை இருக்க.. இல்லை.. நீ இப்படித்தான் அணுக வேண்டும் என்பது.. எவ்வாறு.. உண்மை ஆகும். உலகில் இது வரை அறியப்பட்ட absolute truth எது...????! Nothing...!

பதி பசு பாசம்.. தாய் தந்தை உயிர் என்ற நிலைக்குரியது. அது மனிதனைச் சார்ந்தே கடவுளைக் காட்டுகிறது. கடவுள்.. மனிதனுக்கு வெளியில் இல்லை என்பதை உணரும் pattern.. அளத்தல்.. நிறுத்தல்.. நேரம் போன்று.. ஒரு வடிவமாகப் பதியப்படுகிறது. அது உணர்வியல் ரீதியாக உள்ள போது... நாம் எப்படி அதை அடுத்தவனில் உள்ள வடிவத்துக்கு ஏற்ப உணர முடியும். நாம் கற்பனை என்று வகுப்பது கூட ஒரு pattern... சிந்தனை வடிவம் தானே..??! :rolleyes:

நெடுக்ஸ்..

அந்த வடிவங்களை நாம் எண்ணத்தில் பதிப்பதில்லை. கவனித்து பாருங்கள். "எண்ணம்" என்பதே அந்த "வடிவங்களின்" recognition தான். நான் வேலைத்தளத்துக்கு செல்வதாக இருந்தாலும் சரி, பரிசோதனைகள் செய்வதாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கணத்திலும் இந்த "ஏற்கெனவே சேமிக்கப்பட்ட" வடிவங்களை மீழ் அழைக்கிறேன் என்பதே உண்மை.

மற்றது. நம்மில் பெரும்பாலாக எல்லோருக்கும் இருக்கும் ஒரு "பழக்கம்" எதையும் முற்றுமுழுதாக பார்ப்பது கிடையாது. நாம் ஒரு இயற்கை காட்சியையோ அல்லது வேறெதையாவது பார்த்தோமானால், அல்லது அனுபவித்தோமானால் உடனே அந்தக் கணத்தில் நாம் பார்த்த அல்லது அனுபவித்த விடயத்தை பற்றி ஒரு எண்ணக்கரு (idea) உருவாக்கி விடுகிறோம். இது உண்மையில் பார்க்கப்படும் பொருளை முற்றுமுழுதாக பார்ப்பதில் இருந்து தடுத்துவிடுகிறது. எதையுமே முற்றுமுழுதாக அனுபவிக்க முடியாமல் இடையில் இந்த எண்ணக்கருவை உருவாக்கும் பொறிமுறை ஏன் எம்முள் கருக்கொண்டது?

அன்பு என்பதை முற்றுமுழுதாக அனுபவிப்போமானால் நாம் எம்மை இழந்துவிடுவோம். பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் வேறுபாடற்றுவிடும். (கவனிக்க: பௌதீகரீதியில் அல்ல. இந்தக் கொள்கையை தான் வேதங்களும் புராணங்களும் மனிதன் பறவையாக மாறினான் என்றும் பழமாக மாறினான் என்றும் திரித்துக் கூறின. உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வாறான அனுபவம் ஒருதடவையவது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும்.) அங்கு இடையில் வேறெந்த எண்ணமும் எழ அந்தர்ப்பம் இல்லை. அவ்வாறான அனுபவத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகளோ அல்லது எண்ணங்களோ இல்லை. ஒவ்வொரு மனிதனும் இதை உணர முடியும்.

மற்றது நீங்கள் கேட்ட "absolute truth". அவ்வாறெதுவும் இல்லை. உண்மை (truth) என்பது இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு சிரிப்பிலும் அதை தரிசிக்கலாம். ஆனால் அது எண்னங்களுக்கு அப்பாற்பட்டது. எமது தொடர்பாடல்கள் அனைத்தும் எண்ணங்களால் ஆனது. எண்ணம் இல்லாமல் சொல் இல்லை. எனவே உண்மை என்பதை இன்னொருவருக்கு எழுதியோ அல்லது வார்த்தைகளாலோ தெரிவிக்க முடியாது. மேலும் உண்மை என்பதை எந்த வழிமுறையை வகுத்து அதன்வழி சென்றும் தரிசிக்க முடியாது. சரி, உண்மை என்பது இருக்கிறது. நாம் எங்கள் புலன்கள்மூலம் அறிபவையும் இருக்கின்றன. அப்படியானால் இவை இரண்டும் ஒன்றா? உண்மை என்பதன்மீது எமது கூர்ந்த அறிவு தொழிற்படும்போது பௌதீக பொருட்களை காண்கிற்றோம். இதையே "ரியாலிட்டி" என அழைப்பர். ரியாலிட்டி என்பதன்மீது உண்மையின் தாக்கம் இருக்கிறது. ஆனால் "உண்மை" என்பதன்மீது ரியாலிட்டியின் தாக்கம் இல்லை. எமது எந்தவித தாக்கங்களும் இல்லாமல் என்றும் புதிதாக அதேநேரம் ஒவ்வொரு கணமும் "உண்மை" இருக்கிறது. இதையே நான் "இயற்கையின் அளவிடமுடியா பெரும் சக்தி" என முன்பொருமுறை எழுதியிருந்தேன். இதை வணங்குவதோ ஆராதிப்பதோ எந்தவித பலனையும் தராது. எமது தாக்கம் அதன்மேல் சிறிதளவும் இல்ல. இந்த "உண்மையை" நீங்கள் உங்கள் வழியில் "கடவுள்" என்று கூறினாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. அது எல்லாவற்றையும் தாண்டி, எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், எமது எண்ணங்களுக்கு வெளியே மிகச் சுதந்திரமாக அப்படியே இருக்கிறது. எல்லோருக்கும் பொதுவாக் இருக்கிறது. அது எங்களை கருத்தில் எடுப்பதுகூட இல்லை.

அடுத்தது நீங்கள் கூறிய "nothingness". இதனை அடுத்த பதிவில் எழுத முயற்சிக்கிறேன். இப்பொழுது பல்கலைக்கழகத்துக்கு ஓடவேண்டி இருக்கிறது. :):)

ஐரோப்பாவில் பெரியார் இயக்கத்துக்கான அவசியம் என்ன சபேசன்? பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை, சாதி எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளை ஒட்டிய பெரியாரிய செயல்வடிவம் ஐரோப்பாவுக்கு எந்த வகையில் பொருந்தும் என்று நினைக்கிறீர்கள்? எனக்கென்னவோ, தன் சொந்தங்களையும், தன் நாட்டையும், தன் உடைமைகளையும் விட்டு விட்டு கடல் கடந்து ஐரோப்பாவுக்கு அகதியாக வரும்போது சாதி, சமய, சம்பிரதாயங்களை மட்டும் காவிக் கொண்டுவந்தவர்கள் தான் இந்த ஐரோப்பியத் தமிழர்கள். இல்லையென்றால் எம்மை அடக்கி ஆண்டவர்; எம் மண்ணில் வந்து கோயில்களை சிதைத்தவர்; அப்படியானவர் நாட்டிலேயே கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்வார்களா? அவர்களிடம் பெரியாரின் செயல்வடிவத்தை உங்களால் நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

இந்து மதக்கோயில்களில் தேங்காய் உடைப்பதை கண்டிக்கும் நாங்கள், யேர்மனியில் Kevelaer நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தமிழர்கள் மதபேதமற்று (இந்துக்களும்) நகையள்ளிக் கொட்டுவதைப் பற்றி சிந்தித்தோமா? அதன் அடிப்படை என்ன என்பது பற்றி புரிந்துகொள்ள முயற்சித்தோமா?

வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதாலும், மேடையில் ஏறி முழங்குவதாலும் எதையும் இன்று சாதிக்க முடியாது. ஊடகங்களும், தொழில்நுட்பங்களும், அறிவியல் வெளிப்பாடுகளுமே இன்று மாற்றத்தை நிகழ்த்தவல்ல சாதனங்கள். நான் வியப்பது என்னவென்றால், இந்து மதக் கடவுளர்களும், கடவுளச்சிகளும் AK47 களும் இன்னபிற நவீன ஆயுதங்களும் வந்தபின்னரும் கூட, இன்னும் பழைய ஆயுதங்களையே தம் கைகளில் வைத்திருப்பது போல பெரியார் வாதிகளும், மார்க்சிச லெனினிச வாதிகளும் மாவோவிச வாதிகளும் அநேக பழைய துருப்பிடித்த செயல்வடிவங்களையே இன்றும் கையாள்வது.

ரகசியா, ரீமாசென், நமீதா காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி காலத்து கவர்ச்சி நடிகைகளை ஆடவைக்க முடியுமா? :) ஆடினாலும் எடுபடுமா?

வடிவத்தை மாற்றுங்கள்.

அழகாய் இருக்கும்.

கவர்ச்சியாய் இருக்கும் :rolleyes:

பி.கு.: எழுதி முடியமுதல் அனுப்புப்பட்டு விட்டது.

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அடக்கி ஆண்டவர்; எம் மண்ணில் வந்து கோயில்களை சிதைத்தவர்; அப்படியானவர் நாட்டிலேயே கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்வார்களா?

நம்மூரில் வந்து நம்மை அழித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் நாட்டில் குடிபுக வந்திருப்பார்களா? அது தான் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும்

  • தொடங்கியவர்

ஐரோப்பாவில் பெரியார் இயக்கம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஆனால் அப்படியான ஒரு இயக்கம் அவசியம் என்று கருதுகிறேன்.

ஐரோப்பாவில் இந்து மத மூடநம்பிக்கைகளும், அலேலூய கும்பல்களும் வளர்ந்து வருகின்றன.

மூடநம்பிக்கை வியாபாரிகளின் இலக்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் மாறி வருகிறார்கள்.

தமிழர்கள் தங்களின் மண்ணை விட்டுத்தான் இங்கு வந்தார்கள். இங்கு அடையாளத்தையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் செய்ய வேண்டிய நிறையப் பணிகள் இருக்கின்றன. அதிலே தன்னால் இயன்றதை பெரியார் இயக்கம் செய்யும் என்று நம்புகிறேன்.

அதற்காக பெரியார் கையாண்ட அதே போராட்ட வடிவங்களைத்தான் அவர்களும் கையாள வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

காலத்திற்கு ஏற்றபடி போராட்டங்களும் பரப்புரைகளும் முன்னெடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது நீங்கள் கேட்ட "absolute truth". அவ்வாறெதுவும் இல்லை. உண்மை (truth) என்பது இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு சிரிப்பிலும் அதை தரிசிக்கலாம். ஆனால் அது எண்னங்களுக்கு அப்பாற்பட்டது. எமது தொடர்பாடல்கள் அனைத்தும் எண்ணங்களால் ஆனது. எண்ணம் இல்லாமல் சொல் இல்லை. எனவே உண்மை என்பதை இன்னொருவருக்கு எழுதியோ அல்லது வார்த்தைகளாலோ தெரிவிக்க முடியாது. மேலும் உண்மை என்பதை எந்த வழிமுறையை வகுத்து அதன்வழி சென்றும் தரிசிக்க முடியாது. சரி, உண்மை என்பது இருக்கிறது. நாம் எங்கள் புலன்கள்மூலம் அறிபவையும் இருக்கின்றன. அப்படியானால் இவை இரண்டும் ஒன்றா? உண்மை என்பதன்மீது எமது கூர்ந்த அறிவு தொழிற்படும்போது பௌதீக பொருட்களை காண்கிற்றோம். இதையே "ரியாலிட்டி" என அழைப்பர். ரியாலிட்டி என்பதன்மீது உண்மையின் தாக்கம் இருக்கிறது. ஆனால் "உண்மை" என்பதன்மீது ரியாலிட்டியின் தாக்கம் இல்லை. எமது எந்தவித தாக்கங்களும் இல்லாமல் என்றும் புதிதாக அதேநேரம் ஒவ்வொரு கணமும் "உண்மை" இருக்கிறது. இதையே நான் "இயற்கையின் அளவிடமுடியா பெரும் சக்தி" என முன்பொருமுறை எழுதியிருந்தேன். இதை வணங்குவதோ ஆராதிப்பதோ எந்தவித பலனையும் தராது. எமது தாக்கம் அதன்மேல் சிறிதளவும் இல்ல. இந்த "உண்மையை" நீங்கள் உங்கள் வழியில் "கடவுள்" என்று கூறினாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. அது எல்லாவற்றையும் தாண்டி, எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், எமது எண்ணங்களுக்கு வெளியே மிகச் சுதந்திரமாக அப்படியே இருக்கிறது. எல்லோருக்கும் பொதுவாக் இருக்கிறது. அது எங்களை கருத்தில் எடுப்பதுகூட இல்லை.

இவை தொடர்பில் உலகில் மாறுபாடான கருத்து நிலைகள் இருக்கின்றன. அதை விளக்க முற்படுவது.. இந்தத் தலைப்புக்குப் பொருத்தமாக இருக்குமா என்ற கேள்வியை மட்டுமன்றி.. நாமிருவர் விளங்கிக் கொள்வதால்.. என்ன பயன்...??! பலர் படிப்பார்கள்.. ஆனால் விளங்கிக் கொள்ள முனைவரா..??! :rolleyes:

எனவே இந்த இணைப்பை கொஞ்சம் படித்து.. உங்களின் சிந்தனையோடு அது ஒருமிக்கும் இடங்களை சுட்டிக்காட்டுங்கள். மாறுபடும் இடங்களை ஏன் என்று விளக்குங்கள்..!

Absolute Truth

We all know there is absolute truth. It seems the more we argue against it, the more we prove its existence. Reality is absolute whether you feel like being cogent or not. Philosophically, relativism is contradictory. Practically, relativism is anarchy. The world is filled with absolute truth.

http://www.absolute--truth.com/

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.