Jump to content

நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை

IMG-20230212-110201.jpg

இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள்.

விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்கு மக்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாசாங்கு செய்கின்றார். அவர் சந்தர்ப்பவாதி” – என்றார்.

சமஷ்டி தொடர்பிலும், மகாசங்கத்தினர் குறித்தும் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கள் தெற்கு அரசியலில் பெரும் சொற்போரை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும் விக்கியை விமர்சித்து வருகின்றனர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185098/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலங்கை பிரஜையான விக்கி ஐயாவை நாட்டை விட்டு ஓடென்று சொல்ல பொன்சேக்காவுக்கு எந்த சட்ட அருகதையும் கிடையாது. இது வெளிப்படையான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில்.. பொன்சேக்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு..இவரின் கடந்த காலச் செயற்பாடுகளில் மனித குலத்துக்கு எதிரான அரச பயங்கரவாத சிங்கள இராணுவப் பயங்கரவாதச் செயலகள் மற்றும் படுகொலைகளில் பங்களித்தமை.. இனப்படுகொலைகளில்.. போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை உள்ளடங்க அனைத்தும் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்க சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஒருமித்த குரல் எழுப்புவதோடு.. இவர் மீது உடனடி சர்வதேசப் பயணத்தடைகள் விதிக்கப்படவும் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி விசாரிக்கவும் வகை செய்ய வேண்டும். ஏனெனில்... இவர் வெளிப்படையாக மனித குலத்துக்கு எதிரான எச்சரிக்கை விடும்.. பயமுறுத்தும் செயற்பாடுகளை தொடர்வது குறித்து முழு உலகமும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார்.

அடப்பாவி பொன்ஸ்….அந்தாள் 30 வருடத்துக்கும் மேலாய் தபுதாரன். காலமான அவரின் ஒரே மனைவி தமிழ்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை

இவருக்குத்தானே சம்சும்  கோஷ்டி சப்போட் பண்ணினது? :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்படி கதைப்பது இதுதான் முதற்தடவையல்ல, முன்பு தமிழர் எல்லோரையும் சொன்னது இப்போ விக்கியரை மட்டும் சொல்லுது. அவர் இலங்கையிலேயே பிறந்தார், கல்விகற்றார், இன்னும் இலங்கை குடிமகனாகவே வாழ்கிறார். இவரோ அங்கும் இங்கும் தாவித்திரிபவர் இவரும்அமெரிக்க வதிவிட விசாவில் இருந்து வந்தவர் தானே? அது இருக்க அவரது பிள்ளைகள் சிங்களப்பெண்களை மணந்தால் அவர் ஏன் இலண்டனுக்கு ஓட வேண்டும்? அப்போ சிங்களவர் இலண்டன் பிரஜைகளா? என்ன கதைக்கிறோம் என்று யோசிக்கத் தெரியாதவர்கள் அரசியல்வாதிகள், அமைச்சர்கள். முன்பு இங்கு ஒருவர் கருத்து பதிந்த்திருந்தார். அதாவது சிங்களவர் தமிழரைப்போல் இல்லையாம் நன்றி உடையவர்களாம். அது உண்மைதானென்று மைத்திரி குண்டு வைத்து நிரூபித்தார், இவர் எச்சரிக்கை விட்டு நிரூபிக்கிறார். முன்பு இந்தியாவுக்கு ஓடுங்கள் என்பார்கள் இப்போ இந்தியாவுக்கு கொஞ்சம் மரியாதை, நக்குண்டிருக்கினமெல்லோ.             

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.