Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரோடு இடைத்தேர்தல் | அதிருப்தி வாக்குகளைப் பிரிக்கும் நாம் தமிழர் - யாருக்கு சாதகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், அதிமுகவிற்கு முழுமையாகச் செல்லாமல், நாம் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்வதை திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக, வாக்காளர்களின் கவனம் பெற்ற வேட்பாளராக மாறி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன். ஒவ்வொரு தேர்தலிலும், பிரதான கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் நடைமுறை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நடைமுறையை மேடைதோறும் சாடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள செங்குந்த முதலியார் சமுதாயத்தில் இருந்து, பெண் வேட்பாளரை நிறுத்தி தேர்தல் களத்தை தனக்கு சாதகமாக்க முயற்சி எடுத்துள்ளார்.

கடந்த தேர்தலில் மூன்றாமிடம்: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோமதி, 11 ஆயிரத்து 629 வாக்குகளைப் பெற்றார். வாக்குப்பதிவில் 7.65 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பிடித்தது நாம் தமிழர் கட்சி. தற்போதைய இடைத்தேர்தலில், இந்த வாக்கு சதவீதம் உயருமா, நாம் தமிழர் வேட்பாளர் பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆதரவு திரட்டிய சபரீசன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாய்ப்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி பரவலாக உள்ளது. இந்த அதிருப்தியை போக்கவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஈரோட்டில் முகாமிட்டு, முதலியார் சமுதாய அமைப்புகள், பிரமுகர்களிடம் பேசி ஆதரவு திரட்டினார். அதன் பலனாக சில அமைப்புகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ஆனால், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும்போது, அவருக்கு ஆதரவு தரவேண்டியது நமது கடமை என்ற குரல் அந்த சமுதாய பிரமுகர்களிடம் இன்னமும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த அதிருப்தியை புரிந்துகொண்டு, அவற்றை வாக்குகளாக மாற்றும் திட்டத்தோடுதான், தனது பிரச்சாரக் கூட்டத்தில், முதலியார் சமுதாயத்தின் பெருமையை தனது வழக்கமான கர்ஜனைக் குரலில் சீமான் பேசினார். இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு, இதர கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

16764540462027.jfif

பிரச்சாரத்திற்கு வரவேற்பு: ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பரிவாரங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட, வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த நாம் தமிழர் படை, வீடு, வீடாய் சென்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாய் வாக்கு சேகரிக்கிறது. சாலை வசதி, குடிநீர் வசதி, மதுக்கடை அகற்றம், போக்குவரத்து பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு என இடத்திற்கு ஏற்றார்போல், பிரச்சினைகளை முன் நிறுத்தி நாம் தமிழர் கட்சி செய்யும் பிரச்சாரம் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது. இரு கட்சியும் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், வாக்கினை எங்களுக்கு செலுத்துங்கள் என்ற வேண்டுகோளும், பிரச்சாரத்தில் வைக்கப்படுகிறது.

கடந்த இரு நாட்களாக பிரச்சார வாகனத்தில் பயணித்து தெருத்தெருவாய் பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். செல்லுமிடங்களில் எல்லாம், குறை சொல்ல முடியாத அளவுக்கு கூட்டம் கூடி வரவேற்பு அளிக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் வரவேற்பு வாக்காக மாறுமானால், கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்குகளை நாம் தமிழர் வேட்பாளர் பெற வாய்ப்புள்ளது.

அறுவடையாகும் அதிருப்தி வாக்குகள்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கான 'எடைத்தேர்தலாகவே' பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை அதிமுகவைக் காட்டிலும், சீமான் வலுவாக எடுத்து வைக்கிறார். உதாரணமாக பேனா நினைவுச்சின்ன விவகாரத்தில், ‘நினைவுச்சின்னம் வைத்தால் உடைப்பேன்’ என சீமான் ஆவேசத்துடன் பேசியது, திமுக எதிர்ப்பு என்ற மனநிலையில் உள்ள வாக்குகளை அவர் பக்கம் சேர்த்துள்ளது.

ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பிரதான எதிர்கட்சியான அதிமுகவிற்கு மட்டுமே போகாமல், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு பிரிந்து செல்வது நமக்கு சாதகம் எனக் கருதும் ஆளுங்கட்சி, சீமானின் பிரச்சாரத்தை வரவேற்கவே செய்கிறது. தங்களுக்கு சேர வேண்டிய அதிருப்தி வாக்குகளை நாம் தமிழர் கட்சி பிரிப்பதால் கவலையில் உள்ளது அதிமுக. ஈரோடு கிழக்கில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டினால், மக்களவைத் தேர்தலை உத்வேகத்துடன் சந்திக்கலாம் என்ற சீமானின் எண்ணத்தை, வாக்காளர்கள் ஈடேற்றுவார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியும்.

ஈரோடு இடைத்தேர்தல் | அதிருப்தி வாக்குகளைப் பிரிக்கும் நாம் தமிழர் - யாருக்கு சாதகம்? | Erode East Bypolls: What will Seemans Naam Thamizhar Katchi do in the voting trend? - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கட்சி வளர்வது தமிழர்களுக்கு ஒரு நட்டமும் இல்லை என்பதால் மகிழ்ச்சியே…

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் கட்சி வளர்வது தமிழர்களுக்கு ஒரு நட்டமும் இல்லை என்பதால் மகிழ்ச்சியே…

ஓம் த‌ல‌

ச‌ரியா சோன்னீங்க‌ள்.....................

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் கட்சி வளர்வது தமிழர்களுக்கு ஒரு நட்டமும் இல்லை என்பதால் மகிழ்ச்சியே…

BJP தமிழ் நாட்டில் வளர்வதை விட, சீமானின் கட்சி நாம் தமிழர் வளர்வது மகிழ்ச்சி தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, நிழலி said:

BJP தமிழ் நாட்டில் வளர்வதை விட, சீமானின் கட்சி நாம் தமிழர் வளர்வது மகிழ்ச்சி தான்.

நான் அப்பவே சொல்லல.....🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏந்தியுள்ள பிரசார ஆயுதம் - பிபிசி கள நிலவரம்

  • மோகன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒரு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு அரசியலின் தற்போதைய மையப்புள்ளி போல இயங்கி வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் எவ்வாறு நடைபெறுகிறது? என்னென்ன பிரச்னைகள் விவாதிக்கப்படுகின்றன? விவரம் அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு 8,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தது. ஆனால் இம்முறை அதிமுக நேரடியாகக் களம் காண்கிறது. அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார்.

ஓ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் டிடிவி தினகரன் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குக்கர் சின்னம் கிடைக்காததாலும் பின்வாங்கினார்கள். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நான்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே ஈரோடு கிழக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்னரே கூட்டணிக்காக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக கூட்டணி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது சற்று தாமதமானாலும் தற்போது முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. திமுக அமைச்சர்கள் பகுதி வாரியாக முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக தரப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு பகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தனித்து தேர்தலைச் சந்திக்கும் நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளும் தங்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்கள் போல வேடமணிந்து தனித்துவமான வழிகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி -சில அடிப்படைத் தகவல்கள்

ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கீழ் வருகின்றன.

ஜவுளித் துறை சார்ந்து இயங்கும் பல்வேறு தொழில்களின் மையமாகவும் இந்தத் தொகுதி உள்ளது. மஞ்சள் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களும் இங்கு கணிசமாக உள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 2,26,898 வாக்காளர்கள் உள்ளனர். மாநகர் சார்ந்த தொகுதி என்பதால் மாநகரின் பிரச்னைகள், கோரிக்கைகள்தான் பிரதானமாகத் தாக்கம் செலுத்துகின்றன.

தேர்தல் பிரசாரம் எவ்வாறு உள்ளது?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இடைத்தேர்தலில் களம் காணும் பிரதானமான இரு கூட்டணிகளுக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் முக்கிய பிரசார கருவியாக உள்ளது.

திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச பேருந்து பயணம் போன்ற புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மையப்படுத்தியே தங்களின் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரம் அதிமுகவின் தேர்தல் பிரசாரம் திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை மையப்படுத்தியே உள்ளன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டருக்கு மானியம் போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தில் அதிகம் எழுப்பப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டேதான் பிரசாரத்தை மேற்கொண்டார். ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிவிட்டன. மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக கூறினார்கள். 21 மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு வருகிறபோது 21,000 ரூபாய் எங்கே எனக் கேளுங்கள்," என்றார். இவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் அதிமுக தரப்பினராலும் ட்ரெண்ட் செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

திமுக கூட்டணியின் பிரசாரங்களை காங்கிரஸ், திமுகவின் முக்கிய தலைவர்கள் பெரும்பாலான இடங்களில் இணைந்தே மேற்கொள்கின்றனர். திமுக அமைச்சர்கள் அக்கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் பிரசாரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தற்போது வரை அதிமுகவின் பிரசாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த வாரத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, "பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களுடன் பேசி வருகின்றனர். விரைவில் ஈரோட்டில் இரு கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்," என்றார்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வும் தேர்தல் பிரசாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிமுகவினர் தங்களுடைய பிரசாரத்திலும் இதைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

வரி உயர்வின் தாக்கம்

பாரதி
 
படக்குறிப்பு,

எஸ். பாரதி

ஈரோடு வரி செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்தத் தொகுதியில் பல இடங்களில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பல இடங்களில் அவசரமாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழை நீர் வடிகால் மாநகராட்சி பகுதியில் பெரும் பிரச்னையாக உள்ளது. மழை அதிகமாகச் செய்தால் பல இடங்களில் தண்ணீர் தேங்கிவிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கன மழையின்போது அதன் பாதிப்புகளைப் பார்த்தோம். வரியை உயர்த்தமாட்டோம் என்கிற வாக்குறுதிக்கு எதிராக வரி உயர்த்தப்பட்டது.

சென்னை, கோவையை விட ஈரோட்டில் சொத்து வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது, குப்பை வரியும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இவை குறைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாக்குறுதி அளிக்கப்பட்ட புதிய மேம்பால பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். இதுதான் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது," என்றார்.

மின் கட்டண உயர்வின் தாக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

விசைத்தறியைச் சார்ந்திருப்பவர்கள் கணிசமான வாக்கு வங்கியாக உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் 18,000 விசைத்தறிகள் இயங்குகின்றன என்கிறார் விசைத்தறியாளர் சங்கத்தின் கந்தவேல், "விசைத்தறியை நம்பி மட்டும் 5,000 குடும்பங்கள் உள்ளன. 20,000 பேர் நேரடியாக இதைச் சார்ந்துள்ளனர். ஜவுளித்துறையில் விசைத்தறி மட்டுமில்லாமல், டையிங், ப்ராசஸிங், சில்லறை வணிகம் எனப் பல பிரிவுகள் உள்ளன. மின் கட்டண உயர்வால் ஜவுளி உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்குப் பிறகு விசைத்தறியாளர்கள் தற்போது வரை மின் கட்டணம் செலுத்தவில்லை. விசைத்தறியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஜவுளித்துறையின் இதர சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களையும் இது கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்," என்றார்.

நீண்ட கால நிலுவையில் உள்ள திட்டங்கள்

ராஜமாணிக்கம்
 
படக்குறிப்பு,

ராஜமாணிக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் மற்றும் முக்கிய கோரிக்கைகள் அனைத்து வணிக சங்க கூட்டமைப்பின் சார்பில் இரண்டு வேட்பாளர்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அக்கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் கூட்டமைப்பில் 75க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. தற்போது தேர்தல் களம் காணும் இரண்டு வேட்பாளர்களிடமும் எங்களுடைய கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

சமீபத்திய மின் கட்டண உயர்வில் பல்வேறு அம்சங்கள் தொழில்துறைக்குப் பாதகமாக உள்ளன. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஈரோட்டில் முறையான குளிர்பதன கிடங்குகள். அதை அமைத்துத் தர வேண்டும். கனி மார்க்கட்டில் உள்ள வியாபாரிகளுக்குப் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கவேண்டும். ஜவுளித்துறை சார்ந்த கழிவு நீர் மறு சுழற்சி மையங்கள் அதிக அளவில் இல்லை. அதை நிறுவ வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் 15 ஆண்டுகளாகப் பெயரவிலேயே உள்ளது. அதையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்," என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கில் மூன்று நாள் பிரசார பயணம் மேற்கொண்டார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். திமுகவின் கனிமொழி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இனி வரும் நாட்களில் தான் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

ஆளும் கட்சியான திமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் 21 மாத கால ஆட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை மதிப்பிடும் ஒரு தேர்வுக் களமாகவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

அதேநேரம் அடுத்தடுத்த தேர்தல் தோல்வி, கூட்டணியிலிருந்து கட்சிகள் விலகல் மற்றும் உட்கட்சி சிக்கல்களைச் சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்தத் தேர்தல் தன் பலத்தையும் தன் கூட்டணி பலத்தையும் பரிசோதித்துப் பார்க்கும் சோதனை களமாகவும் இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் தாக்கம் செலுத்தவதாகவே அமையும் நிலை உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-64681643

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு திமுக ஆட்சிக்கான அங்கீகாரமாக இருக்கும் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக
5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் பிபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார்.

நீண்ட அரசியல் அனுபவம், பல முறை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ள நீங்கள் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் ஈரோடு மாநகர் என்பது என்னுடைய சொந்த ஊர், நான் பிறந்து வளர்ந்த இடம். நான் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஒரு முறை செயல் தலைவராகவும் இருந்துள்ளேன். என்னைப் பொருத்தவரை நான் பிறந்த ஊருக்கு நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

மறைந்த என் மகன் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். பல விஷயங்களை செய்ய முடியவில்லை. அதற்குள் இயற்கை அவரைப் பிரித்துவிட்டது. அவர் விட்டுச் சென்ற பணிகளை என்னுடைய சொந்த ஊருக்குச் செய்ய வேண்டும், என் ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.

 

தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்ட நிலையில் உங்களின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? அதற்கான காரணமாக என்ன இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த 21 மாதங்களில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பெண்களுக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மோதியின் மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. மதத்தால் மக்களைப் பிரிக்க வேண்டும், சாதியால் பிரிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவராக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பின்மை கொண்டவர்கள். அதோடு கடந்த 18, 20 மாதங்களில் என் மகன் ஈரோட்டில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

800 இடங்களில் மின் விளக்கு அமைக்கப்பட்டு, பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியுள்ளன. சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் சரி செய்யப்பட வேண்டியிருக்கிறது. அதனால் அந்தப் பணிகளைத் தொடர என்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள்.

நீங்கள் வெற்றி பெற்றால் மூன்று ஆண்டுகள்தான் பதவிக்காலம் உள்ளன. அதற்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக என்ன செய்துவிட முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

ஏற்கெனவே பல அரசு திட்டங்கள் அமைச்சர்கள் அளவில், அதிகாரிகள் அளவில் கையெழுத்தாகி நிற்கின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதற்கான பணிகளைத் தொடங்க முடியாமல் போய்விட்டது. என் மகன் மறைந்த இரண்டு வாரங்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதனால் தமிழ்நாடு அரசால் ஈரோட்டில் எந்தப் பணிகளையும் தொடங்க முடியவில்லை. மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதற்கான பணிகள் தொடங்கும். முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டார்.

திமுக - காங்கிரஸ்

தேர்தல் பிரசாரத்தில் திமுக - காங்கிரஸ் ஒருங்கிணைப்பு எந்த அளவில் உள்ளது? பல இடங்களில் திமுக அமைச்சர்கள் தனியாக பிரசாரம் மேற்கொள்வதாக செய்திகள் வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை திமுக - காங்கிரஸ் என்ற வேறுபாடே கிடையாது. திமுகவினர் கை சின்னத்தில் நிற்கும் என்னை அவர்களின் சொந்த வேட்பாளராகவே கருதி மிகச் சிறப்பாக வேலை செய்கிறார்கள்.

திமுக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் எல்லோரும் ஒன்றிணைந்தே பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உறவு சரியில்லை என விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். இந்தத் தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒன்றாகவே வேலை செய்து வருகிறோம்.

இந்த இடைத்தேர்தலில் திமுக அதிகார துஷ்பிரயோகத்திலும் பணப் பட்டுவாடாவிலும் ஈடுபடுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. அதற்கு உங்களுடைய பதில் என்ன?

திமுக மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் எதிர்க்கட்சிகள் அவ்வாறுதான் சொல்வார்கள். இன்றைக்கும் அதைத்தான் சொல்கிறார்கள். திமுகவினர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கை சின்னத்திற்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டனர்.

அதிமுகவில் மிகப்பெரிய குழப்பம் இருந்தது. மிகத் தாமதமாக தேர்தல் களத்திற்கு வந்தார்கள். தேர்தல் களம் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. திமுக கூட்டணி வேட்பாளராக இருக்கும் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன், தாங்கள் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதை உணர்ந்ததால் திமுக மீது பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவார்கள். பாஜகவின் குற்றச்சாட்டிற்குச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் தேர்தல் களத்திலேயே இல்லை. வீண் பொய் குற்றச்சாட்டைப் பரப்பி வருகிறார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்கிற கருத்து நிலவுகிறதே. அதற்கு தங்களின் பதில் என்ன?

மிகத் தவறான கருத்து. எந்த காங்கிரஸ் தலைவர்கள் வராமல் இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி ஏற்கெனவே இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தற்போது மூன்றாவது நாளாக உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தினேஷ் குண்டு ராவ் இங்கு உள்ளார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்னுபிரசாத் பிரசாரம் செய்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் வருவதில்லை எனச் சொல்வது வடிகட்டிய பொய். சிலர் வேண்டுமென்றே தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.

திமுக முதலில் பிரசாரத்தை தொடங்கியது, அதிமுக சற்று தாமதமானாலும் தற்போது தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும் என்கிற நிலை உள்ளது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?

என்னைப் பொருத்தவரையில் இந்தத் தேர்தல் மிகச் சுலபம் தான். ஈரோடு மக்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்து விடுவார்கள். நான் தேர்தல் பிரசாரத்திற்கு வார்டு வார்டாக செல்கிறபோது அதைப் பார்க்க முடிகிறது.

முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும், ராகுல்காந்திக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் இந்தத் தேர்தல் சுலபமான ஒன்றுதான்.

திமுக ஆட்சி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு, உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஓர் ஆண்டு கழித்து இந்த இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவை திமுக ஆட்சி மீதான மக்களின் மதிப்பீடாக எடுத்துக் கொள்ளலாமா?

கண்டிப்பாக இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு கொடுக்கின்ற அங்கீகாரமாகவும் ஆதரவாகவும் இருக்கும். திமுகவிற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்.

https://www.bbc.com/tamil/india-64691404

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி வளர்வது தமிழ்த்தேசிய அரசியலை அணையாமல் பாதுகாக்க உதவும். தேசியக் கட்சியான காங்கிரஸச திராவிடக்கட்சிகள் வேரறுத்ததைப் போல 9 இப்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆதரவு மத்தியில் ஆட்சியில் பங்கு பெறுவதற்காக)திராவிடக்கட்சிகளை அழிப்பதற்கு தமிழ்த்தேசியக்கட்சியான நாம் தமிழர்கட்சியைப்பலப்படுத்த வேண்டும்.சீமான்  பேசுவதில் இருக்கும்பல உண்மைகளை மறைத்து அவர் உணர்ச்சி வசப்பட்டு பேசும் ஒரு சில விடயங்களை திராவிட ஊதுகுழல் ஊடகங்களள் மக்களுக்கு கொண்டு செல்லுகின்றன். தலைவர் உயிருடன் இருப்பதால் சீமான் பதற்படுவதாக திட்டமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றன. 2009 இற்குப் பிறகு யாருமே பேசப்பட்ட விடயத்தை  தலைவரை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங';கும் கொண்டு சேர்த்தது சீமானும் நாம்தமிழர்கட்சியும் தான். பதற வேண்டியவர்கள் பாலச்சந்திரன் மரணம் எனக்கு மகிழ்ச்சியை ளெpக்கிறது என்று சொன்ன இளங்கோவனை ஆரத்தழுவி ஆதரவைக்கொடுக்கும் வேகோ.திருமா>மற்றும்திராவிடக்கட்சியினர் இன அழிப்பின் பங்காளிகளான காங்கிரஜ்.திமுக கட்சிகளே அதை மறைத்து சீமானை அவதூறு செய்வதன் மா;மம் என்ன?.இன்று திமுக ஆதிமுகவைக் காட்டிலும் அதிகம் எதிர்பது நாம்தமிழரைத்தான் என்பதிலேயே அதன் வளர்ச்சி தெரிகிறது. மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்?

ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம்
பிரீமியம் ஸ்டோரி
News

ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம்

  • Share
  •  
  •  
  •  
  •  

தி.மு.க-வின் அடாவடி, வாக்காளர்களோடு நின்றுவிடவில்லை. ‘அ.தி.மு.க-காரங்க கேட்டால் பந்தல், விளக்கு, ஏன்... தீப்பந்தம்கூட கொடுக்கக் கூடாது’ என உள்ளூர் லைட்-சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு ‘அன்பு’ கட்டளை போட்டிருக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

ஜெயித்தே ஆக வேண்டும் என ஆட்டத்தைத் தொடங்கிய எடப்பாடி, இரண்டாம் இடமே போதும் எனத் தன் வியூகத்தை மாற்றியிருக்கிறார். வெற்றிக் கணக்கோடு பெட்டியைத் திறந்தவர், தி.மு.க-வின் மூட்டைகளைப் பார்த்துத் திகைத்துப்போய் பின்வாங்கியிருக்கிறார். “அதிக வித்தியாசத்தில் ஜெயிக்காவிட்டால் தொலைத்துவிடுவேன்...” என்று தி.மு.க-வினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமை காட்டியதால், கடந்த 72 மணி நேரத்தில் தேர்தல் களத்தின் தட்பவெப்பமே முற்றிலுமாக மாறிப்போயிருக்கிறது!

ஆடு மாடுகளை அடைத்துவைப்பதுபோல, வாக்காளர்களை ஷாமியானா பந்தல்களிலும், கொட்டகைகளிலும், திருமண மண்டபங்களிலும் அடைத்துவைத்து மிக மோசமாக ‘மனித பட்டி’களைத் தி.மு.க - அ.தி.மு.க-வினர் உருவாக்கியிருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. வாக்கு சேகரிக்கக்கூட வீடுகளில் வாக்காளர்கள் இல்லாததால், பூட்டிய வீடுகளின் முன்பு பேசிவிட்டுச் செல்கிறார்கள் எதிர்க்கட்சியினர். சாப்பாடு, சரக்கு, பணம் எனத் தொகுதிக்குள் இருக்கும் 238 பூத்களிலும் ‘திருவிழா’தான். பணமழைப் புகார்கள், தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுகள் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தினமும் குறைந்தது 20 புகார்கள் பறக்கின்றன. நாளுக்கு நாள் ‘உத்திகள்’ என்கிற பெயரில், அநாகரிகக் காட்சிகள் அரங்கேறுவதால், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்னவாகும்?’ என்கிற முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது.

மூன்று வேளை சாப்பாடு... போரடித்தால் ‘உதயநிதி’ படம்...
வார்டுக்கு வார்டு மனித ‘பட்டிகள்’


காலை 7 மணிக்கெல்லாம், ‘ஓடிவருகிறான் உதயசூரியன்...’ பாடலைத் தேர்தல் பணிமனைகளில் ஒலிக்கவிட்டுவிடுகிறார்கள் தி.மு.க-வினர். பாடல் ஒலிக்கும்போதே, தொகுதிக்குள்ளிருக்கும் வார்டுகளில் லாரிகள் வரிசைகட்டுகின்றன. அவற்றில், வாக்காளர்களை மந்தை மந்தையாக ஏற்றிச் சென்று பெரிய கொட்டகைகளில் அமரவைத்துவிடுகிறார்கள். அங்கேயே மூன்று வேளைச் சாப்பாடு, அவ்வப்போது டீ, காபி, ஜூஸ், மோர் வகைகள் பரிமாறப்படுகின்றன. வாக்காளர்களுக்கு போரடித்தால், பெரிய திரைகளில் சினிமாப் படங்களும் திரையிடப்படுகின்றன. சில இடங்களில் கரகாட்டம். வாக்கு சேகரிக்க எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும் வீதி வீதியாக நடந்தால்கூட, வாக்காளர்கள் இருப்பதில்லை.

நம்மிடம் பேசிய கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் சிலர், “2009-ம் ஆண்டு நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, பணம், பரிசுப்பொருள்களை மழையாகப் பொழிந்து ‘திருமங்கலம் ஃபார்முலா’-வை அறிமுகப்படுத்தினார்கள் தி.மு.க-வினர். இப்போது, ஈரோடு கிழக்கில் ஒருபடி மேலே சென்று, வாக்காளர்களைக் குத்தகைக்கே எடுத்துவிட்டார்கள். வாக்கு சேகரிக்க நாங்கள் தெருவுக்குள் நுழைந்தால், அங்கு மக்களே இருப்பதில்லை. காலை 8 மணிக்கெல்லாம் வாக்காளர்களைக் கொத்து கொத்தாக லாரிகளில் ஏற்றிச் செல்லும் தி.மு.க நிர்வாகிகள், திருமண மண்டபம், காலி இடங்களில் கொட்டகை அமைத்து, அதில் வாக்காளர்களை அடைத்துவைத்துவிடுகிறார்கள். வார்டுக்கு வார்டு இதுபோன்ற மனிதப் பட்டிகளை அமைத்திருக்கிறது ஆளுங்கட்சி.

 
மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்?
 

அந்த மனிதப் பட்டிகளில், வாக்காளர்களுக்கு 500 ரூபாயுடன் காலை உணவு வழங்கப்படுகிறது. பெரிய திரையில் உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ படங்களைத் திரையிடுகிறார்கள். படங்களைத் திரையிடும் பொறுப்பை வடமாவட்ட அமைச்சர் ஒருவர்தான் ஏற்றிருக்கிறார். முதல் படம் முடிந்தவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு மீண்டும் ஒரு படம். இடையிடையே ‘டீ, ஸ்நாக்ஸ்’ கொடுக்கிறார்கள். இரவு 8 மணிக்கு மேல், மீண்டும் 500 ரூபாய் கொடுத்து, ‘குடிமகன்’களுக்குச் சரக்கு பாட்டிலையும் திணித்து, மனிதப் பட்டியிலிருந்து விடுவிக்கிறது தி.மு.க. இந்தக் கேடுகெட்ட செயலுக்கு முதல்வரின் பொறுப்பிலிருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுத்து நிற்பதுதான் வெட்கக்கேடான விஷயம்.

ஷாமியானா பந்தலுக்குத் தடை... வேட்பாளர் வரும்போது டூர்!

சில இடங்களில், வாக்காளரின் பெயர் உள்ளிட்ட தகவல்களுடன் ஐ.டி கார்டுகளை தி.மு.க-வினர் அச்சிட்டுள்ளனர். அதைக் கொடுத்துவிட்டு மனிதப் பட்டிகளுக்குள் செல்ல வேண்டும். வெளியே வந்ததும், பணத்துடன் ஐ.டி கார்டும் திருப்பியளிக்கப்படும். அடுத்த நாள் வரும்போது, அதே முறை தொடரும். ஒவ்வொரு நாள் வரும்போதும் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவுசெய்துகொள்கிறார்கள். ஒருவேளை வாக்காளர்கள் வரவில்லையென்றால், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மூலமாக வாக்காளர்களைத் தொடர்புகொண்டு கட்டாயப்படுத்தி அவர்களை வரவழைத்துவிடுகிறார்கள்.

தி.மு.க-வின் அடாவடி, வாக்காளர்களோடு நின்றுவிடவில்லை. ‘அ.தி.மு.க-காரங்க கேட்டால் பந்தல், விளக்கு, ஏன்... தீப்பந்தம்கூட கொடுக்கக் கூடாது’ என உள்ளூர் லைட்-சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு ‘அன்பு’ கட்டளை போட்டிருக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். வேறு வழியில்லாமல் கோவை, திருப்பூர் பகுதியிலிருந்துதான் ஷாமியானா பந்தலை வரவழைத்துப் பயன்படுத்துகிறோம். அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு பிரசாரம் செய்யும் இடத்திலிருக்கும் மக்களை, அவர் வரும் நேரத்தில் மட்டும் கொடிவேரி, பவானி என ஒரு நாள் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். ஆளுங்கட்சி அமைத்திருக்கும் 120 தேர்தல் பணிமனைகளிலும் விதிமீறல்கள் தாண்டவமாடுகின்றன. தேர்தல் ஆணையத்திடமும், காவல்துறையிடமும் தினமும் புகாரளிக்கிறோம். ஆனால், துரித நடவடிக்கை ஏதுமில்லை. இது போன்ற ஜனநாயகப் படுகொலை உலகத்தில் எங்கும் நடக்க வாய்ப்பே இல்லை” என்றனர் ஆக்ரோஷமாக.

பிப்ரவரி 15-ம் தேதி, எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்குச் சென்றிருந்தபோது, அவர் பிரசாரத்துக்கே ஆள் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோபத்தில்தான், ‘மீசைவைத்த ஆம்பளையாக இருந்தால்... வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால்... வாக்காளர்களை வெளியேவிட்டு வாக்கு சேகரியுங்கள்’ என்று தி.மு.க-வினரை ஏக வசனத்தில் வறுத்தெடுத்திருக்கிறார் எடப்பாடி.

அவிழ்க்கப்படும் பணமூட்டைகள்... கேலிக்கூத்தான ஜனநாயகம்!

ஆரம்பத்தில் தி.மு.க-வுக்கு இணையாக அ.தி.மு.க செலவு செய்தது. ஆனால், அந்தச் செலவை இப்போது குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “அ.தி.மு.க தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றிருந்த முக்கியமான 40 பொறுப்பாளர்களிடம் தேர்தல் செலவுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களிடமிருந்து இந்நேரம் 40 ஸ்வீட் பாக்ஸுகள் வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 16 ஸ்வீட் பாக்ஸுகள் மட்டுமே வந்திருக்கின்றன. ‘சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்துவிட்டோம். இப்போதைக்கு எங்ககிட்ட காசு இல்லைண்ணே’ என வெளிப்படையாகக் கைவிரித்துவிட்டார்கள் பொறுப்பாளர்கள்.

தொகுதிக்குள்ளிருக்கும் அ.தி.மு.க வட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோர் தேர்தல் பணிக்கு வருவதே இல்லை. உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலானோரை ‘பேக்கேஜ்’ பேசி, விலைக்கு வாங்கிவிட்டது தி.மு.க. வெளியூரிலிருந்து வந்திருக்கும் கழக நிர்வாகிகள்தான் தேர்தல் பணியாற்றுகிறார்கள். தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச் சாவடிக்கு, நாளொன்றுக்கு லட்சங்களில் செலவு செய்கிறது தி.மு.க. ஆனால், நாங்கள் 20,000 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறோம். இந்தக் கணக்கின்படி பார்த்தால், நாளொன்றுக்கே கோடிகளை வாரி இறைக்கிறது ஆளுங்கட்சி. அவ்வளவு தொகைக்கு நாங்கள் எங்கே போவோம்?

இவ்வளவு நாள் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத தி.மு.க-வினர், இப்போது வார்டுகளில் லைட், தண்ணீர்க் குழாய் இல்லை எனப் புகாரளித்தால், அடுத்த நிமிடம் அதைச் சரிபண்ணுகிறார்கள். வடமாவட்ட அமைச்சர் ஒருவர் பிரசாரத்துக்குச் சென்றபோது, ‘எனக்கு 21,000 ரூபாய் பணம் கட்டாததால் என்.ஓ.சி சர்டிஃபிகேட் கிடைக்கவில்லை’ எனப் பெண் ஒருவர் கூற, உடனடியாகத் தன் இடுப்பில் சொருகிவைத்திருந்த பணக்கட்டை அப்படியே எடுத்து அந்தப் பெண்ணிடம் திணித்தார் அமைச்சர். பணத்தை இடுப்பில் சொருகிக்கொண்டு அலையும் தி.மு.க-வினர், ஈரோட்டில் பணமூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, வாக்காளர்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்து, இந்தத் தேர்தலையே கேலிக்கூத்தாக்கிவிட்டார்கள்.

பறக்கும் புகார்கள்... என்னவாகும் இடைத்தேர்தல்?

உண்மையில், ஆளுங்கட்சியின் பணபலத்துக்கு ஈடாக அ.தி.மு.க தொண்டர்களால் நின்று போராட முடியவில்லை. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் தி.மு.க-வின் பணப் பாய்ச்சல் அதிரடியாக அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு இணையாக அ.தி.மு.க தலைவர்கள் நினைத்தால் ‘ஃபைட்’ கொடுக்க முடியும்தான். ஆனால், ‘இது எடப்பாடி தன்னை ஆளுமையாக நிலைநிறுத்த வேண்டிய தேர்தல். அதற்கு அவர்தானே அதிக செலவு செய்ய வேண்டும்... நாங்கள் ஏன் எங்கள் மூட்டையை அவிழ்க்க வேண்டும்...’ எனக் கட்சி சீனியர்கள் நினைக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க-வின் தேர்தல் பணி சுணங்கிவிட்டது. இந்தச் சூழலில், ஆளுங்கட்சியின் அதீதப் பணப் பட்டுவாடா புகாரைப் பெரிதாக்கி, ஈரோடு இடைத்தேர்தலையே ரத்து செய்யவைக்க வியூகம் வகுக்க ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. தினமும் தேர்தல் ஆணையத்துக்கு இது குறித்த புகார்கள் அனுப்பப்படுகின்றன. ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோரிடம் அதற்கான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார் எடப்பாடி” என்றனர் விரிவாக.

மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்?
 

அ.தி.மு.க-வினர் சொல்வதும், களத்திலிருந்து நமக்கு வரும் தகவல்களும் புகைப்படங்களும் வீடியோக்களும் ஒத்துத்தான் போகின்றன. சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிலோ கறியை இலவசமாக அளித்திருக்கிறார் ‘கல்வீச்சு’ அமைச்சர். சில இடங்களில், பட்டுப் புடவை, எவர் சில்வர் குடம் போன்ற பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே டிரெய்லர்தானாம். தேர்தல் நெருக்கத்தில், குத்துவிளக்கு, கம்மல், மூக்குத்தி கொடுத்து வாக்காளர்களிடம் மேஜிக் காட்டத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்காக இப்போதே மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்திடம் ஆர்டர் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் பேசிய தி.மு.க கூட்டணியின் சீனியர் நிர்வாகி ஒருவர், “இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரைத் தவிர, இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறது அறிவாலயம். பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை, வாக்காளர்களின் கை விரல்களைவிட அதிக எண்ணிக்கையில் ரோஸ் மில்க் தாள்களை வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வாக்குப் பதிவுக்கு முன்னதாக, தனியாகப் பத்து கரும்பச்சைத் தாள்களை வழங்கவும் திட்டமிருக்கிறது. ஆக, ஒரு ஓட்டுக்கு மொத்தமாக 15 ரோஸ் மில்க் தாள்கள் வழங்க இலக்கு வைத்திருக்கிறது ஆளுங்கட்சி. முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு வரும்போது, ஒரு லட்சம் பேரைத் திரட்டி பிரமாண்டக் கூட்டம் நடத்தவும் தீவிரமாகிறார்கள். அன்றைக்கு வாக்காளர்களுக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பும் உண்டு” என்று கண்சிமிட்டினார்.

 
மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்?
 

“தூங்கும் தேர்தல் ஆணையம்!”

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி, மாநில, இந்திய தேர்தல் ஆணையர் எனப் பல்வேறு படிநிலை நிர்வாகத்துக்கும் புகார்களைப் பறக்கவிடுக்கிறது அ.தி.மு.க. குறிப்பாக, ‘வாக்காளர் பட்டியலிலுள்ள பல வாக்காளர்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லை. இறந்தவர்கள் பெயர்கள்கூட வாக்காளர் பட்டியலில் இருக்கின்றன. சுமார் 40,000 வாக்குகள் மோசடியாக இருக்கின்றன’ என டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரளித்திருந்தார். இதையடுத்துதான், ஈரோட்டில் அனுமதியின்றி இயங்கிய தி.மு.க-வின் 10 பணிமனைகள், அ.தி.மு.க-வின் 4 பணிமனைகளுக்கு சீல் வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இது தொடர்பாக ‘நாம் தமிழர் கட்சி’யின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பேசினோம். “தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் இரு கட்சிகளும் எந்த அளவுக்குக் கொள்ளை அடித்தன என்பதை இந்த இடைத்தேர்தல் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் கொடுத்த காலம் போய், வாக்காளர்களையே ஆடு, மாடுகளைப்போல லாரியில் ஏற்றி மனிதப் பட்டியில் அடைக்கிறார்கள். பகலிலேயே வாக்கு சேகரிக்கத் தெருவுக்குள் சென்றால், ஆளே இல்லை. ஆள் இருந்தால்தானே வாக்கு சேகரிக்க முடியும்... ஆட்களைப் பணம் கொடுத்து, கடத்திக் கொண்டுபோய் அடைத்து வைப்பதில் தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான். தி.மு.க 1,000 பேரை லாரியில் ஏற்றுகிறது என்றால், அ.தி.மு.க 200 பேரை ஏற்றுகிறது. அவ்வளவுதான். அதனால்தான், அவர்கள் அடைத்துவைத்திருக்கும் இடத்துக்கே சென்று நாங்கள் வாக்கு கேட்டுவருகிறோம்.

 

ஈரோடு முழுக்க இரண்டு கட்சிகள் சார்பிலும் அனுமதியில்லாமல் பணிமனைகள் இயங்குகின்றன. அவை பணிமனை இல்லை... ‘Money’மனை. இரு கட்சிகளும் இதுவரை 50 கோடிகளாவது செலவு செய்திருப்பார்கள். வாக்காளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களைப் போட்டுக்காட்டும் தி.மு.க-வினர், பிபிசி-யின் ஆவணப்படத்தைப் போட்டுக் காண்பிப்பார்களா... தேர்தல் மூலமாக ஜனநாயகம் மலரும் என்பதற்கான அறிகுறியே அங்கு இல்லை. அங்கு நடக்கும் மனித உரிமை, தேர்தல் விதி மீறல்களையெல்லாம் தேர்தல் ஆணையம் வாய் மூடி வேடிக்கை பார்க்கிறது. தேர்தல் பறக்கும் படை, மரத்தடியில் ‘படுத்து உறங்கும் படை’யாகவே இருக்கிறது. இப்படியோர் இடைத்தேர்தலை நடத்துவதற்கு, பேசாமல் ஏலம் விட்டுவிடலாம்” என்றார் காட்டமாக.

“ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியை வைத்து பெரும் அரசியல் சூதாட்டம் நடக்கிறது ஈரோடு கிழக்கில். தமிழ்நாட்டின் பல பிரச்னைகளைச் சரிசெய்ய ஆகும் செலவை, ஒரு தொகுதியின் வாக்காளர்களை மூளைச்சலவை செய்ய வாரி இறைக்கின்றன கட்சிகள். பணம், மனித உரிமை மீறல், தேர்தல் விதிமுறை மீறல், அடிப்படை அரசியல் அறம்கூட இல்லாத அநாகரிகக் களமாக மாறியிருக்கிறது ஈரோடு கிழக்கு” என்று கொதிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். ‘குவியும் புகார்களால், நியாயமற்ற கள நிலவரத்தால், எந்தச் சூழலிலும் தேர்தல் ரத்தாகலாம்’ என்கின்றன எதிர்க்கட்சிகள். ‘வாய்ப்பே இல்லை... நாங்கள்தான் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெல்லப்போகிறோம்’ என்கிறது தி.மு.க கூட்டணி வட்டாரம். ‘நம்மையும், நம் சுயமரியாதையையும் சில ரூபாய்த் தாள்களுக்கு விற்கிறோம்’ என்பதை உணராமல், மனிதப் பட்டியில் சென்று வாக்காளர்கள் அமர்வது கொடூரம். கட்சிகள் தங்களைத் திருத்திக்கொள்கின்றனவோ இல்லையோ... வாக்காளர்களின் மனநிலை மாற வேண்டும்!

நன்றி ஜீனியர் விகடன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கில் திமுக செய்யும் அட்டகாசங்கள் - விளாசும் சவுக்கு சங்கர் | கொடி பறக்குது

திமுகவால் செட்டில் அடக்கப்பட்ட அனைத்து மக்களும் தேர்தல் அன்று இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் திமுகவின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

Amsa Karur

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ரூ 1 கோடி பரிசு! விண்ணப்பிக்க கடைசி நாள்! கரூர் போஸ்டர்

கரூர்: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் அதிகாரிக்கு ரூ 1 கோடி பரிசு தரப்படும் என கரூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்கள். அது போல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.
நாம் தமிழர் சீமான்
நாம் தமிழர் சீமான்

மேலும் நாம் தமிழர் சீமான், தேமுதிகவின் விஜயபிரபாகரன், பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்திருந்தனர். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அது போல் ஒரு இடத்தில் மக்களை பிற கட்சிகள் சந்திக்கவிடாமல் ஆடு,மாடுகளை போல் அடைத்துவைத்து மூன்று வேளையும் கறி சோறு போட்டு பணம் கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

வெள்ளி கொலுசு

வெள்ளி கொலுசு தேர்தல் தேதி நெருங்க நெருங்க புகார்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வில் உள்ளதாக தெரிகிறது. இந்தத் தேர்தலில் பட்டுப்புடவை, வெள்ளி கொலுசு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், பணம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் எலுமிச்சை பழத்தை வைத்து சில அரசியல் கட்சிகள் சத்தியம் வாங்கிக் கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

பரிசு பொருட்கள்

பரிசு பொருட்கள் இந்தப் பரிசு பொருட்கள் விநியோகம் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மாறி மாறி புகார் கூறி வருகின்றன. தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூட தேமுதிக வலியுறுத்தியது. இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஈரோட்டில் போஸ்டர்

ஈரோட்டில் போஸ்டர்

இந்த நிலையில் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்று வரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூரில் போஸ்டர்

கரூரில் போஸ்டர்

இந்த போஸ்டர் கரூரில் ஒட்டப்பட்டுள்ளது. பரிசு மற்றும் பாராட்டு விழாவானது கரூரில் 27 ஆம் தேதி நடைபெறும். இந்த பரிசுக்காக விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி! இந்த போஸ்டரில் ஒருவரின் புகைப்படம் உள்ளது. இப்படிக்கு எனும் இடத்தில் நானும் தமிழர் ராஜேஸ் கண்ணன், கரூர் என ஒட்டப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. பொதுமக்களையும் கவர்ந்து வருகிறது.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர்

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளார். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/karur/karur-poster-goes-like-forest-fire-about-1-crore-prize-money-for-electoral-officer/articlecontent-pf869329-500373.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பணமழை பொழியும் காலம் - பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
 
படக்குறிப்பு,

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஒரு கட்சியினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணம், பொருள் தருகிறார்கள். இதனால், தொகுதியின் பிரச்னைகளைப் பேசுவது பின்னுக்குத் தள்ளப்பட்டு, யார், எவ்வளவு கொடுக்கிறார்கள் என்ற பேச்சே தொகுதி முழுவுதும் ஒலிக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி இறந்த நிலையில், அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது.

ஆளும் தி.மு.கவும் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாகக் கருதுகின்றன. தங்கள் ஆட்சி மீதான மக்களின் தீர்ப்பாக இந்தத் தேர்தல் முடிவை முன்வைக்க விரும்பிய தி.மு.க., எப்படியாவது மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக்காட்ட விரும்புகிறது.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவே கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராகிவிட்ட நிலையில், சமீபத்தில் வந்த நீதிமன்றத் தீர்ப்பும் கட்சியின் தலைமைப் பொறுப்பை எடப்பாடிக்கே அளித்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் தன் தலைமையை நிரூபித்துக்காட்ட விரும்புகிறார் அவர்.

 

இந்தக் காரணங்களால், எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் சாதாரணமாகக் கடந்துபோயிருக்க வேண்டிய இடைத்தேர்தல் மிக மிக முக்கியமான இடைத்தேர்தலாக மாறிவிட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, அது ஒரு புதிய தொகுதி. 2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. பிராமண பெரிய அக்ரஹாரம், ஈரோடு, வீரப்பன் சத்திரம் ஆகியவை இந்தத் தொகுதிக்குள் அடங்கியிருக்கின்றன.

தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு முதன் முதலாக 2011ஆம் ஆண்டில் இந்தத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இந்தத் தொகுதி தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் சுமார் 10,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரான கே.எஸ். தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை சுமார் 2,30,000 வாக்குகள் இருக்கின்றன.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் பிரச்சனைகள் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

பெரிதும் நகர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை, குறிப்பிட்டுச் சொல்வது போன்ற பெரிய பிரச்சனைகள் ஏதும் கிடையாது. இந்தத் தொகுதியின் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள், தேர்தலுக்கு முன்பாக முழுமையாகச் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளும் முழுமையாக தீர்க்கப்பட்டிருக்கின்றன. வெகுசிலர் தங்கள் பகுதிக்கு பேருந்து சரியாக வருவதில்லை போன்ற பிரச்சனைகளை சொல்கிறார்கள்.

மற்றபடி, ஈரோடு மாவட்டத்திற்கான பொதுவான பிரச்சனைகளான சாயக் கழிவு பிரச்சனை, தமிழ்நாட்டின் பொதுவான பிரச்சனைகளான மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றையே மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கேற்ப தேர்தல் பிரசாரமும் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள், தி.மு.க. தந்த வாக்குறுதிகள் ஆகியவற்றைச் சுற்றியே நடக்கிறது. அ.தி.மு.கவின் பிரசாரத்தில், தி.மு.க. அரசு சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெண்களுக்குத் தருவதாகச் சொன்ன உரிமைத் தொகையைத் தரவில்லை என்பது போன்ற விஷயங்களை முன்வைக்கிறார்கள். தி.மு.கவைப் பொறுத்தவரை, இதுவரை நிறைவேற்றப்பட்ட காலை உணவுத் திட்டம், பெண்களுக்குப் பேருந்து இலவசப் பயணம் போன்றவற்றை முன்னிறுத்திப் பேசுகிறார்கள்.

ஆனால், இவையெல்லாம் தேர்தல் பிரசாரத்தில் பேச வேண்டும் என்பதற்காக பேசப்படுவதுதான். உண்மையான போட்டி வேறு களத்தில் நடக்கிறது.

ஆறாக ஓடும் பணம்

இந்தத் தொகுதிக்குள் சென்று யாரிடம் பேசினாலும், இந்த இடைத்தேர்தலில் பணம் ஆறாக ஓடுவது தெரியும். இலவசமாக வேஷ்டி சேலைகள், வெள்ளி விளக்கு, வெள்ளி கொலுசு, ஒவ்வொரு வாக்காளருக்கும் 3,000 முதல் 5,000 வரையில் பணம், தினசரி வருமானத்திற்கு ஏற்பாடு என பக்கத்துத் தொகுதிகாரர்களை பொறாமைப்பட வைக்கிறார்கள் இந்தத் தொகுதிக்காரர்கள்.

மதிய நேரத்தில் மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சண்முகம், உற்சாகமாகச் சொல்கிறார். "நானும் என் மனைவியும் காலையிலும் மாலையிலும் கட்சி மன்றங்களில் போய் உட்கார்ந்துவிடுவோம். ஆளுக்கு தினம் ஐநூறு ரூபாய் கிடைக்கும். சாப்பாடும் கொடுத்துவிடுவார்கள். கடந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட இதுவே பத்தாயிரம் ரூபாய் வந்துவிட்டது.

இதுபோக, விளக்கு, கொலுசு, பேண்ட், சட்டை எல்லாம் கொடுத்துவிட்டார்கள். ஒரு கட்சி ஆளுக்கு 5 ஆயிரம் கொடுத்துவிட்டது. ஆனால், நான் இந்தக் கட்சியோட கூட்டத்துக்கு ரெகுலரா போவதால், அந்தக் கட்சி தர வேண்டிய பணத்தை தரமாட்டேன் என்கிறார்கள். எப்படியாவது அதை பேசி வாங்க வேண்டும்" என்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் தவிர்த்த பிற இடைத்தேர்தல்களில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியே பெரிதும் வெற்றிபெற்று வந்துள்ளது. அந்த நிலையே இந்தத் தேர்தலிலும் எதிரொலிக்கக்கூடும் என்பதையே சமீபத்தில் வந்த சில கருத்துக் கணிப்புகள் சொல்வதோடு, அரசியல் நோக்கர்களும் அப்படித்தான் கருதுகிறார்கள்.

ஆனால், ஆளும்கட்சி அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்வதாக இல்லை. இதன் காரணமாக, இலவசப் பொருட்கள் வாக்காளர்களை இலக்குவைத்து தரப்படுகின்றன. வெள்ளி விளக்கு, வெள்ளிக் கொலுசு, ஸ்மார்ட் கடிகாரங்கள், ஆடைகள், பணம் என என்னென்ன வாக்காளர்களுக்கு அளிக்க முடியுமோ அத்தனையையும் அளிக்கப்படுகிறது.

இது தவிர இந்தத் தேர்தலில் புதிய முயற்சியாக தேர்தல் பணிமனைகளில் காலை முதல் மாலை வரை ஆட்களை அமரவைத்து, அதற்கு பணம் தருவது பெரிய அளவில் நடக்கிறது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே இதைச் செய்கின்றன. இவற்றை மனிதப் பட்டிகள் என ஊடகங்கள் அழைத்துவருகின்றன.

தி.மு.கவைப் பொறுத்தவரை, பெரும்பாலான அமைச்சர்கள் இந்தத் தொகுதிக்குள்தான் இருக்கிறார்கள். ஒரு நீளமான சாலையை கடந்து செல்லும் பொதுஜனம், குறைந்தது இரண்டு அமைச்சர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

"வெளியிலிருந்து ஆட்களை அழைத்துவருகிறார்கள்"

மு.க.ஸ்டாலின்

"எந்த இடைத் தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இப்படி ஈடுபடுவது இயற்கைதான். அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்களும் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்" என்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

ஆட்களை அடைத்துவைக்கும் மனிதப் பட்டிகள் குறித்துக்கேட்டபோது, "எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதி மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். யாரையும் கட்டாயப்படுத்தி கூப்பிடவில்லை. அடைத்துவைக்கவில்லை. சுதந்திரமாக இருக்கிறார்கள். அ.தி.மு.கவின் கூட்டத்திற்கு அவர்கள் போக மாறுக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வந்தபோது இந்தப் பகுதி மக்கள் அவரோடு வர மறுத்துவிட்டார்கள். அதனால், வெளியிலிருந்து ஆட்களை அழைத்துவருகிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம், எங்களுக்கு வருகிற வாக்காளர்கள் உள்ளூர் வாக்காளர்கள், அவர்களுக்கு வருகிறவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். நாங்கள் காசு கொடுத்த ஆட்களை அமரவைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் ரகுபதி.

தி.மு.க. கூட்டணியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தொகுதிக்குள் பெரியாரின் பேரன் என்ற அறிமுகத்தோடும் மகன் இறந்ததால் ஏற்பட்ட அனுதாபத்தோடும், ஆளும் கட்சியின் அதீதமான ஆதரவோடும் வலம்வருகிறார். சாதாரணமாக செய்தியாளர்களிடம் பேசுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

அதிமுக கட்சித் தலைமையே நேரடியாக தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டுவதால் அ.தி.மு.க வேட்பாளரான தென்னரசுவும் தெம்புடன்தான் இருக்கிறார். ஆனால், ஊடகங்களைக் கண்டால் சற்றுத் தள்ளியே இருக்கிறார். "நான் ஊடகங்களிடம் பேசுவதில்லை. வேண்டுமானால் பிரசாரத்தில் பேசுவதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்கிறார்.

எளிய முறையில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

இவர்கள் இருவர் தவிர, களத்தில் மிக உற்சாகமாகத் தென்படுவது நாம் தமிழர் கட்சியினர்தான். அதிகாலையிலேயே சாலையின் பல்வேறு பகுதிகளில் பதாகைகளுடன் நின்று எளிய முறையில் வாக்கு கேட்கிறார்கள். அக்கட்சியின் வேட்பாளர் மேனகா, "இரண்டு கட்சிகளும் மக்களை மந்தைகளைப் போல அடைத்துவைத்திருக்கிறார்கள். இதனால் மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்பதே சிரமமாக உள்ளது. ஆனால், மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம்" என்கிறார். இளைஞர்களின் ஆதரவோடு மிக சுறுசுறுப்பாக வாக்கு சேகரித்துவருகிறார் இவர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தைப் பொறுத்தவரை, நான்கைந்து பேரோடு ஜீப்பில் சுற்றி வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார். மற்ற கட்சிக்காரர்கள் இன்னோவாவில் பறந்துகொண்டிருக்க, தே.மு.தி.கவினர் கட்சிக் கொடிகளோடு, பேருந்துகளில் சென்று வாக்குகளைச் சேகரித்துவருகிறார்கள்.

இந்தப் பிரதான கட்சிகளைத் தவிர, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் இளைஞரான தீபன் சக்ரவர்த்தியும் தொகுதி மக்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார். இவரது பிரசாரம் முழுக்க முழுக்க டிஜிட்டலில்தான் நடக்கிறது. "ஒரு வாக்காளரைக்கூட நான் நேரில் சந்திக்கவில்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யு டியூப் மூலம்தான் பிரசாரம் செய்கிறேன். மொத்த பட்ஜெட்டே சில ஆயிரங்கள்தான்" என்கிறார். தனது யு டியூப் சேனலுக்கான விளம்பரமாக இதை அவர் செய்தாலும், சமீபத்தில் அவருக்கு வரும் கமெண்ட்கள், அவருக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருக்கின்றன.

"தேர்தலில் போட்டியிட்டால் அதை மிக சீரியஸாக செய்ய வேண்டுமென்பதை இந்த கமெண்ட்கள் உணர்த்துகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருநூற்றுச் சொச்சம் வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் அதைவிட நிச்சயம் கூடுதலாகக் கிடைக்குமென கருதுகிறேன்" என்கிறார் தீபன்.

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான பிப்ரவரி 25ஆம் தேதி சனிக்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் தொகுதிக்குள் வலம்வருவதால் திக்குமுக்காடிப்போனது ஈரோடு தொகுதி. ஈரோடு மாவட்டம் முழுக்கவும் உள்ள ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. உணவங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதனால் பெய்யும் பண மழையும் பிரசாரத்தால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலும் தொகுதி மக்களுக்கு திணறலை ஏற்படுத்தியிருக்கின்றன.

மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பிறகு, திருமங்கலம் பார்முலா என்ற சொற்றொடர் உருவனதைப் போல, இந்தத் தேர்தலுக்குப் பிறகு, "ஈரோடு கிழக்கு ஃபார்முலா" என்ற தொடர் உருவாகலாம். ஆனால், அதுவும் ஜனநாயகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது.

https://www.bbc.com/tamil/articles/crg2xjrrlw2o

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உரிமைத் தொகை குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறலா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பேசிய நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை முதல்வர் மீறி விட்டதாக அதிமுக சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி காலமான நிலையில், அவரது தொகுதியாக ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், திமுக கூட்டணி சார்பில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதேபோல், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

களத்தில் திமுக, அதிமுகவுக்கு இடையே தான் நேரடி போட்டி காணப்படுகிறது. திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சி விரும்புகிறது. அதேநேரத்தில், தேர்தல் களத்தில் மட்டுமல்லாது கட்சிக்குள்ளும் தனது தலைமையை நிரூபித்துக் காட்ட வேண்டி ஈரோட்டில் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இடைத்தேர்தலையொட்டி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மகளிர் உரிமைத் தொகை பற்றிய வாக்குறுதி

இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தனது பிரச்சாரத்தின்போது, “நீட் தேர்விற்கு உரிய மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஆளுநரோ, மத்திய அரசோ இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்னுடைய காலத்தில் நீட் தேர்வு விலக்கு பெறவேண்டும் என்பது ஆசை. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

 

திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிவருவது தொடர்பாக பேசிய முதல்வர், “ 85 சதவீத பணிகளை நிறைவேற்றியுள்ளோம். இன்னும் பணிகள் மிச்சம் உள்ளன, இல்லையென்று சொல்லவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டு தேவையில்லை. இந்த ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று மிச்சமிருக்கிறது. அதை நான் மறக்கவில்லை. எதிர்கட்சி தலைவர், மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். பெண்களுக்கான உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினோம். நிதி நிலைமையை முன்னர் இருந்தவர்கள் ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம். வரும் மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி நிலை அறிக்கையில் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படும்” என்று பிரசாரத்தின்போது கூறினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்

பட மூலாதாரம்,INBADURAI

 
படக்குறிப்பு,

இன்பதுரை

முதல்வருக்கு எதிராக அதிமுக புகார்

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான ஐ.எஸ்.இன்பதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில், “ இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக ஈரோடு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவித்து வழங்கப்படும் என்று பிரசாரம் செய்துள்ளது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு உறுதிமொழி அளிப்பதன் மூலம் அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது.

தனது புகார் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இன்பதுரை, “ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கான உரிமை தொகையை மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவித்து, கொடுப்போம் என்று கூறியது விதிமீறல். நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது புதிய அறிவிப்பை வெளியிடுவது தவறு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாக்குறுதி குறித்துதான் பேசுவதாக முதல்வர் கூறினால், அது மோசடியாகும். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் உரிமை தொகையை கொடுப்பதாக கூறியவர்கள் 21 மாதங்களாக கொடுக்காமல், இப்போது கொடுக்க போவதாக கூறுவது விதி மீறல்தான். தற்போது இதனை சொல்வதற்கான அவசியம் என்ன? மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கூறுகிறார். பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சம் குறித்து முன்னரே அறிவிப்பது என்பது உரிமை மீறல் ஆகும். மேலும், அது சட்டமன்றத்தின் பிரத்யேக உரிமையில் தலையிடுவது ஆகும். அந்த வகையிலும் இது தண்டனைக்குரியதுதான்” என்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்

பட மூலாதாரம்,FACEBOOK/CONSTANDINE RAVINDRA

 
படக்குறிப்பு,

கான்ஸ்டான்டைன்

திமுக கூறுவது என்ன?

அதிமுகவின் இந்த குற்றச்சாட்டு குறித்து திமுக செய்தித் தொடர் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்டதைதான் முதல்வர் சொன்னாரே தவிர புதிதாக ஈரோடுக்கு என்று எதையும் அறிவிக்கவில்லை. மகளிர் உரிமைத் தொகையை வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும்போது அது தொடர்பாக விளக்கமளிப்பதில் என்ன தவறு?

ஈரோடுக்கு பாலம் அமைப்பேன், ஈரோடு தொகுதிக்கு எதாவது செய்வேன் என்று கூறுவதுதான் தவறு. எந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறதோ அந்த தொகுதிக்கோ, அந்த பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கோ பலனளிக்கக் கூடிய வகையில் புதிதாக திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பும்போது, அது குறித்து பதிலளித்துள்ளார்". எனவே, இது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் வராது என்றார்.

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியை பிபிசி சார்பில் தொடர்புகொண்டு இது தொடர்பாக கேட்டபோது, “நாங்கள் புதிதாக எதையும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைப் பற்றிதான் மீண்டும் கூறினோம் என்று திமுக தரப்பில் கூறலாம். அதேவேளையில், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி இது புதிய வாக்குறுதிதான் என்று அதிமுக சார்பில் வாதிடலாம். விதிமீறலில் வருமா வராதா என்பதை தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்க முடியும்” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c6p7dnqd64do

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.