Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, nilmini said:

குடிலை கொஞ்சம் பெருப்பிச்சு வாங்கு or கதிரை போடலாம் என்று இருக்கிறன் கு.சா அண்ணா.

வாங்கும் வைக்கலாம்.....கதிரையும் வைக்கலாம்....ஐ திங்......புழுதி மண்ணை பரப்பி தென்னங்குத்தியும் வைக்கலாம் :face_with_tears_of_joy:

  • Replies 89
  • Views 5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்த

  • நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள்.   வீட்ட

  • இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:
23 minutes ago, nilmini said:

குடிலை கொஞ்சம் பெருப்பிச்சு வாங்கு or கதிரை போடலாம் என்று இருக்கிறன் கு.சா அண்ணா.

வாங்கும் வைக்கலாம்.....கதிரையும் வைக்கலாம்....ஐ திங்......புழுதி மண்ணை பரப்பி தென்னங்குத்தியும் வைக்கலாம்

தங்கச்சி

 ஒட்டகம் மெதுவா தலையை ஓட்டுது.கவனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வாங்கும் வைக்கலாம்.....கதிரையும் வைக்கலாம்....ஐ திங்......புழுதி மண்ணை பரப்பி தென்னங்குத்தியும் வைக்கலாம் :face_with_tears_of_joy:

புழுதி மண்ணுக்குள்ள தென்னங்குத்தி. சூப்பர் ஐடியா.

2 hours ago, ஈழப்பிரியன் said:

ம் ம்  குடிலைக் கண்டவுடனை கள் அடிக்க நல்ல இடம் வாச்சிருக்கு என்று எண்ணிவிட்டீர்கள் போல.

இரண்டு மூன்று பிழாவும் செய்து அதில தொங்க விட்டுவிடுங்கோ.

அது என்ன பிழா? கேள்விப்படேல. கிணத்துக்கு துலா செய்து தோய்க்கிற கல்லு, வக்குகள்  எல்லாத்தயும் நல்லா பொலிஷ்  பண்ணலாம் என்று இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி ............பிளா  என்பது பனை ஓலையால் செய்த boat  போன்ற  கள் கூழ் குடிக்க பயன்படும் கிராமத்து  soup  bowl .  😃

  • கருத்துக்கள உறவுகள்

52 minutes ago, nilmini said:

அது என்ன பிழா? கேள்விப்படேல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிலாமதி said:

நில்மினி ............பிளா  என்பது பனை ஓலையால் செய்த boat  போன்ற  கள் கூழ் குடிக்க பயன்படும் கிராமத்து  soup  bowl .  😃

நன்றி நிலாமதி. சின்னனில பிளா வில் கூழ் குடிக்க ட்ரை பண்ணினான். ஆனால் பெயர் தெரியவில்லை. சிரட்டையில் குடித்திருக்கிறேன்

12 minutes ago, nunavilan said:

நன்றி நுணாவிலான். கட்டாயம் ஒருக்கா செய்து பார்க்கவேணும். உங்கள் புனை பெயர் எமது அய்யாவின் (அம்மாவின் அப்பா) ஊரை ஞாபகப்படுத்துகிறது (எழுதுமட்டுவாள்).

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

நன்றி நிலாமதி. சின்னனில பிளா வில் கூழ் குடிக்க ட்ரை பண்ணினான். ஆனால் பெயர் தெரியவில்லை. சிரட்டையில் குடித்திருக்கிறேன்

நன்றி நுணாவிலான். கட்டாயம் ஒருக்கா செய்து பார்க்கவேணும். உங்கள் புனை பெயர் எமது அய்யாவின் (அம்மாவின் அப்பா) ஊரை ஞாபகப்படுத்துகிறது (எழுதுமட்டுவாள்).

சில ஊர்கள் தாண்டித்தான் எனது ஊர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

புழுதி மண்ணுக்குள்ள தென்னங்குத்தி. சூப்பர் ஐடியா.

கள்ளுகொட்டிலுக்கு போனால் சிறிய கொட்டில் வெள்ளைமண் தென்னங்குத்தி.அதில் இருந்து பிழாவில் கள்ளு வாய்க்கு உருசையான ரேஸ்ற்.அங்கினேக்கை போய்வரும் போது ஒரக்கா கள்ளுக் கொட்டிலையும் எட்டிப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் நில்மினியை பிளாவுல கள்ளு குடிக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் போலிருக்குது.......இந்தப் பெருமையெல்லாம் கு.சா, பிரியன், நிலாமதி, நுணா ஆகியோருக்குத்தான் சேரும்......போகட்டும் நானும் என் பங்குக்கு, பிள்ளை கள்ளுல ஒரு பனைக் கள்ளுதான் உடம்புக்கு நல்லது. ஒரு வடலியை கொண்டுவந்து வளவுக்க ஒரு ஓரமா வைத்தீர்கள் என்றால் அது வளர்ந்து பாளை விட பிறகென்ன காலையும் மாலையும் ஒவ்வொரு பிளா கள்ளுதான் ......!   😂

நான் பகிடியாய் எழுதினானாலும், முன்பு நல்லூரில் எனது காணிக்குள் ஒரு மூலையில் பனை ஒன்று வளர்த்தனான். அதுவும் கொஞ்சம் வளர்ந்து மதிலுக்கு மேலால வந்துட்டுது. அப்பா பக்கத்து வீட்டு அண்ணர் (உறவினர்தான்) தம்பி உது வளர வளர என்ர டாய்லட் குழியை உடைத்துக் கொண்டு போகுது என்று சொல்லி தறித்துப் போட்டச்சுது.......அங்கு சின்ன காணிதான்......முன்னுக்கு ஒரு வேம்பு வைத்து அது வளர்ந்து வர இன்னொரு அக்கா அது மதிலை உடைக்குது என்று சொல்லி வெட்டிபோட்டா........   😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nilmini said:

புழுதி மண்ணுக்குள்ள தென்னங்குத்தி. சூப்பர் ஐடியா.

வணக்கம் தங்கச்சி! ஊரிலையே நாங்கள் ஆரெண்டு பாத்தால் எல்லாம் பெரிய ஐடியா ஐயாத்துரையள் கண்டியளோ...:rolling_on_the_floor_laughing:
ஆறுகோணத்தில தென்னங்குத்தியளை அடுக்கினால் மொடேர்னாய் இருக்கும்.:beaming_face_with_smiling_eyes:

275px-Regular_Hexagon_Inscribed_in_a_Circle.gif 220px-Construction_of_an_almost_regular_hexagon_and_dodecagon..svg.png

கவனிக்க...
புழுதி மண் நாகர் கோவில் வெள்ளை மண் நல்லது.தடக்குப்பட்டு விழுந்தாலும் சேதாரம் இருக்காது.:cool:

12 hours ago, ஈழப்பிரியன் said:

தங்கச்சி

 ஒட்டகம் மெதுவா தலையை ஓட்டுது.கவனம்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ......அருமை .....அருமை.......!  👍  😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

வணக்கம் தங்கச்சி! ஊரிலையே நாங்கள் ஆரெண்டு பாத்தால் எல்லாம் பெரிய ஐடியா ஐயாத்துரையள் கண்டியளோ...:rolling_on_the_floor_laughing:
ஆறுகோணத்தில தென்னங்குத்தியளை அடுக்கினால் மொடேர்னாய் இருக்கும்.:beaming_face_with_smiling_eyes:

275px-Regular_Hexagon_Inscribed_in_a_Circle.gif 220px-Construction_of_an_almost_regular_hexagon_and_dodecagon..svg.png

கவனிக்க...
புழுதி மண் நாகர் கோவில் வெள்ளை மண் நல்லது.தடக்குப்பட்டு விழுந்தாலும் சேதாரம் இருக்காது.:cool:

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.

படித்தவன் படித்தவன் தான்.
உடனே வரை படத்துடன் திட்டமே வந்துட்டுது.
அதென்ன அட்சரகணிதம் எல்லாம் பழைய ஞாபகமோ?

13 hours ago, suvy said:

நான் பகிடியாய் எழுதினானாலும், முன்பு நல்லூரில் எனது காணிக்குள் ஒரு மூலையில் பனை ஒன்று வளர்த்தனான். அதுவும் கொஞ்சம் வளர்ந்து மதிலுக்கு மேலால வந்துட்டுது. அப்பா பக்கத்து வீட்டு அண்ணர் (உறவினர்தான்) தம்பி உது வளர வளர என்ர டாய்லட் குழியை உடைத்துக் கொண்டு போகுது என்று சொல்லி தறித்துப் போட்டச்சுது.......அங்கு சின்ன காணிதான்......முன்னுக்கு ஒரு வேம்பு வைத்து அது வளர்ந்து வர இன்னொரு அக்கா அது மதிலை உடைக்குது என்று சொல்லி வெட்டிபோட்டா........   😢

அப்ப என்ன கடைசியா காணியையே வித்தாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப என்ன கடைசியா காணியையே வித்தாச்சோ?

இல்லை பிரியன்.......அதுக்காக விக்கேலுமே .......மீண்டும் வேதாளம் முருங்கையிலை ஏறினமாதிரி இரண்டு மாதத்துக்கு முன் என்ர மச்சாள் போனவை.....அதில் ஒரு மாங்கன்றும் தென்னம் பிள்ளையும் வைத்து விட்டு வந்திருக்கிறா........இன்னும் ஒரு சத்தத்தையும் காணேல்ல.......!  😂

அவர் போடுறது கேத்திர கணிதம் இல்லையா .........!   😴

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

அவர் போடுறது கேத்திர கணிதம் இல்லையா .....

ஏதோ ஒரு கணிதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

கள்ளுகொட்டிலுக்கு போனால் சிறிய கொட்டில் வெள்ளைமண் தென்னங்குத்தி.அதில் இருந்து பிழாவில் கள்ளு வாய்க்கு உருசையான ரேஸ்ற்.அங்கினேக்கை போய்வரும் போது ஒரக்கா கள்ளுக் கொட்டிலையும் எட்டிப் பாருங்கோ.

என்ன ஈழப்பிரியன் , கு. சா அண்ணாக்கள் எல்லாரும் ஒரே கள்ளுக்கொட்டில் கதையா கிடக்கு? அப்பத்துக்கு கலக்கும்போது அம்மம்மா கள்ளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து கொண்டுவந்து வைத்ததுதான் ஞாபகம் வருகுது. கள்ளில் ஒரு after taste இருக்கு என்று சொல்ல்கிறார்கள் உண்மையா?

5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் தங்கச்சி! ஊரிலையே நாங்கள் ஆரெண்டு பாத்தால் எல்லாம் பெரிய ஐடியா ஐயாத்துரையள் கண்டியளோ...:rolling_on_the_floor_laughing:
ஆறுகோணத்தில தென்னங்குத்தியளை அடுக்கினால் மொடேர்னாய் இருக்கும்.:beaming_face_with_smiling_eyes:

275px-Regular_Hexagon_Inscribed_in_a_Circle.gif 220px-Construction_of_an_almost_regular_hexagon_and_dodecagon..svg.png

கவனிக்க...
புழுதி மண் நாகர் கோவில் வெள்ளை மண் நல்லது.தடக்குப்பட்டு விழுந்தாலும் சேதாரம் இருக்காது.:cool:

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.

இப்பதான் கு .சா அண்ணா ஆர் என்று தெரியுது. உண்மையிலேயே நல்ல ஐடியா. மேலும் விளக்கம் தர முடிந்தால் பகிரவும். ஆடி மாதம் போய் வேலைகளை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nilmini said:

என்ன ஈழப்பிரியன் , கு. சா அண்ணாக்கள் எல்லாரும் ஒரே கள்ளுக்கொட்டில் கதையா கிடக்கு? அப்பத்துக்கு கலக்கும்போது அம்மம்மா கள்ளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து கொண்டுவந்து வைத்ததுதான் ஞாபகம் வருகுது. கள்ளில் ஒரு after taste இருக்கு என்று சொல்ல்கிறார்கள் உண்மையா?

இதை சொல்லி உணர்ந்து கொள்ள முடியாது.

சுவைத்து பார்த்தா தான் தெரியும்.

நில்மினி பிரபா மாதிரி யாழின் 24 அகவையில் நீங்களும் ஒரு தனி திரி திறந்து உங்கள் பயணங்கள் படங்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

இவையள் நில்மினியை பிளாவுல கள்ளு குடிக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் போலிருக்குது.......இந்தப் பெருமையெல்லாம் கு.சா, பிரியன், நிலாமதி, நுணா ஆகியோருக்குத்தான் சேரும்......போகட்டும் நானும் என் பங்குக்கு, பிள்ளை கள்ளுல ஒரு பனைக் கள்ளுதான் உடம்புக்கு நல்லது. ஒரு வடலியை கொண்டுவந்து வளவுக்க ஒரு ஓரமா வைத்தீர்கள் என்றால் அது வளர்ந்து பாளை விட பிறகென்ன காலையும் மாலையும் ஒவ்வொரு பிளா கள்ளுதான் ......!   😂

நான் பகிடியாய் எழுதினானாலும், முன்பு நல்லூரில் எனது காணிக்குள் ஒரு மூலையில் பனை ஒன்று வளர்த்தனான். அதுவும் கொஞ்சம் வளர்ந்து மதிலுக்கு மேலால வந்துட்டுது. அப்பா பக்கத்து வீட்டு அண்ணர் (உறவினர்தான்) தம்பி உது வளர வளர என்ர டாய்லட் குழியை உடைத்துக் கொண்டு போகுது என்று சொல்லி தறித்துப் போட்டச்சுது.......அங்கு சின்ன காணிதான்......முன்னுக்கு ஒரு வேம்பு வைத்து அது வளர்ந்து வர இன்னொரு அக்கா அது மதிலை உடைக்குது என்று சொல்லி வெட்டிபோட்டா........   😢

அதுதானே இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஐடியா தருவதால் கட்டாயம் ஒருக்கால் ட்ரை பண்ணலாம்🤣. எமது வீட்டிலும் இதே கதைதான். ஓட்டை உடைக்குது என்று மாமா அருமந்த மாமரத்தை தறித்துப்போட்டார் . நின்றது ஒரே ஒரு பனை. அதையும் ஆண் பனை என்று தறிச்சாச்சு. வேப்பம் மரம் எப்பவோ இல்லாமல் போய்விட்டது. எனது முயற்சியால் தான் இப்ப 10 கமுகு, 3 தென்னை, ஒரு விளாட்டு நட்டிருக்கு.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:
6 hours ago, suvy said:

இவையள் நில்மினியை பிளாவுல கள்ளு குடிக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் போலிருக்குது.......இந்தப் பெருமையெல்லாம் கு.சா, பிரியன், நிலாமதி, நுணா ஆகியோருக்குத்தான் சேரும்......போகட்டும் நானும் என் பங்குக்கு, பிள்ளை கள்ளுல ஒரு பனைக் கள்ளுதான் உடம்புக்கு நல்லது. ஒரு வடலியை கொண்டுவந்து வளவுக்க ஒரு ஓரமா வைத்தீர்கள் என்றால் அது வளர்ந்து பாளை விட பிறகென்ன காலையும் மாலையும் ஒவ்வொரு பிளா கள்ளுதான் ......!   😂

நான் பகிடியாய் எழுதினானாலும், முன்பு நல்லூரில் எனது காணிக்குள் ஒரு மூலையில் பனை ஒன்று வளர்த்தனான். அதுவும் கொஞ்சம் வளர்ந்து மதிலுக்கு மேலால வந்துட்டுது. அப்பா பக்கத்து வீட்டு அண்ணர் (உறவினர்தான்) தம்பி உது வளர வளர என்ர டாய்லட் குழியை உடைத்துக் கொண்டு போகுது என்று சொல்லி தறித்துப் போட்டச்சுது.......அங்கு சின்ன காணிதான்......முன்னுக்கு ஒரு வேம்பு வைத்து அது வளர்ந்து வர இன்னொரு அக்கா அது மதிலை உடைக்குது என்று சொல்லி வெட்டிபோட்டா........   😢

Expand  

அதுதானே இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஐடியா தருவதால் கட்டாயம் ஒருக்கால் ட்ரை பண்ணலாம்🤣. எமது வீட்டிலும் இதே கதைதான். ஓட்டை உடைக்குது என்று மாமா அருமந்த மாமரத்தை தறித்துப்போட்டார் த . நின்றது ஒரே ஒரு பானை. அதையும் ஆண் பனை என்று தறிச்சாச்சு . வேப்பம் மரம் எப்பவோ இல்லாமல் போய்விட்டது. எனது முயற்சியால் தான் இப்ப 10 கமுகு, 3 தென்னை, ஒரு விளைட்டு நட்டிருக்கு

குடில் சும்மா கிடக்குதென்று ஏதாவது யோசனை சொன்னாலும் குற்றமாப்பா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதை சொல்லி உணர்ந்து கொள்ள முடியாது.

சுவைத்து பார்த்தா தான் தெரியும்.

நில்மினி பிரபா மாதிரி யாழின் 24 அகவையில் நீங்களும் ஒரு தனி திரி திறந்து உங்கள் பயணங்கள் படங்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும்.

நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள்.
 
வீட்டு வேலை நான் நினைத்தது போல் இன்னும் முடிக்கவிலை. ஜூலை மாதம் செய்யலாம் என்று இருக்கிறேன்.
 
17.jpg

18.jpg

19.jpg

20.jpg

21.jpg

22.jpg

23.jpg

24.jpg

25.jpg

26.jpg

27.jpg

o2.jpg

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

@nilmini

அக்கா அல்வாய், பருத்தித்துறையில் Hari Engineering என்ற நிறுவனம் வீட்டு கட்டுமானத்தில் ஓரளவு நல்லது. அவர்களின் Rate அதிகம் ஆனால் வேலைகளின் தரம் வெளிநாடுகளில் செய்வது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nilmini said:

அப்பத்துக்கு கலக்கும்போது அம்மம்மா கள்ளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து கொண்டுவந்து வைத்ததுதான் ஞாபகம் வருகுது. கள்ளில் ஒரு after taste இருக்கு என்று சொல்ல்கிறார்கள் உண்மையா?

வீட்டுக்கு வீடு வாசற்படி. :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nilmini said:

இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள்.

வணக்கம் தங்கச்சி!
நல்ல விடயம் எழுதுங்கள். 👍🏼

நீங்கள் இணைக்கும் படங்களையும்  பயணக்கட்டுரைகளையும்  உங்களுக்கென ஒரு தனித்திரி ஆரம்பித்து தொடருங்கள். இங்கே இணைத்த படங்களையும்  அதற்குரிய கருத்துக்களையும் உங்கள் பெயரில் தனித் திரியை ஆரம்பித்து அங்கே இணைத்து விடுமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தால் நிச்சயம் செய்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மிகவும் நன்றி கு.சா அண்ணா. மடகாஸ்கர் என்று புதுசா ஒரு திரி தொடங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2023 at 19:20, nunavilan said:

சில ஊர்கள் தாண்டித்தான் எனது ஊர்.

எழுதுமட்டுவாளில் இருந்து எமது உறவினர் பலர் நுணாவிலில் கலியாணம் செய்திருக்கிறரார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி உங்கள் தோட்டத்தில் நிற்கும் பொன்னொச்சி மரம் சிட்னியில் ஒரு ஆற்றங்கரையில் வரிசையாக வளர்ந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கும். ஊரின் நினைவுகள மீட்டுத் தருவதால், அங்கு அடிக்கடி செல்வதுண்டு..! 

பி.ஈ; இன்னும் கோவில் காரருக்குத் தெரியாது..!😅

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.