Jump to content

ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மட்டும் தான் தமிழ்நாடு. மற்றும் படி.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ஊழ‌னில் த‌ந்தை க‌ருணாநிதியின் ம‌க‌ன் ஊட‌க‌ம் முன்னாள் நிக்க‌ வெக்க‌ப் ப‌ட‌மும் சீ சீ இது எல்லாம் வெற்றியா...................................

பையா கடைசிப் பந்தியை வாசியுங்கோ.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

பையா கடைசிப் பந்தியை வாசியுங்கோ.

வாசித்தேன் ச‌கோ
அண்ண‌ன் சீமான் சொல்லாத‌தை சொன்ன‌து என்று குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணி குளிர் காய்ந்த‌து இந்த‌ குண்ட‌ர்க‌ள் தான்.................அருந்த‌தியின‌ர் ப‌ற்றி அண்ண‌ன் சீமான் வார்த்தைய‌ விட‌மா இருந்து இருக்க‌னும்.................இத‌னால் தான் பின்ன‌டைவு என்று சொல்வ‌து ஏற்புடைய‌த‌ல்ல‌ 

பண‌ ம‌ழை அதோடு தேசிக்காய் மீது ம‌க்க‌ளை ச‌த்திய‌ம் பண்ண‌ வைச்சு..............காசு வேண்டி போட்டு எங்க‌ளுக்கு போடாட்டி காசு வேண்டின‌வ‌ர்க‌ள் குடும்ப‌த்தில் கெடுதி ந‌ட‌க்கும் என்று தெய்வ‌ங்க‌ளை வைத்து மிர‌ட்டி ப‌ல கொடு பிடிக‌ளுக்கு ம‌த்தியில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்

300கோடிக்கு மேல் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் இந்த‌ தேர்த‌லுக்கு சில‌வு செய்து இருக்கு

ம‌த்திய‌ அர‌சு நினைத்து இருந்தா இந்த‌ தேர்த‌லை ர‌த்து செய்து இருக்க‌லாம்............சிமாட் வாச் 8000 ரூபாயாம் 
இப்ப‌டி எல்லாம் அள்ளி கொடுத்தா ம‌க்க‌ள் என்ன‌ செய்வின‌ம் வேண்டின‌ பொருளுக்கு காசுக்கு இந்த‌ கோதாரி பிடிப்பாங்க‌ளுக்கு ஓட்டு போட்டு தான் ஆக‌னும்...................
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொதுத் தேர்தலுக்கு செலவழிக்க வேண்டிய பணத்தை ஒரு இடைத்தேர்தலுக்குசெலவழித்திருக்கிறார்கள்.உலகத்தில் எங்கும் நடந்திராத மோசடி நிறைந்த தேர்தல் இது. எதிர்கட்சிகள் மக்களைச் சந்திக்க விடாமல் ஆடு மாடுகளைப் போல் பட்டியில் அடைத்து 3 வேளை புரியாணியும் திரப்பங்களும்  பணமும் இரவில் ஆண்களுக்கு மதுவும் கொடுத்து வெற்றி. வீடகளில் மக்கள் இல்லை. மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து மக்களைச் சந்திக்க உரிமை இருக்கு என்று சொன்ன எடப்பாடியின் பேச்சைக் கேட்டு விட்டு அடைத்து வைத்த மக்களை பஜ்களில் ஏற்றி மேட்டடூர் அணைக்கு சுற்றுலா  கொண்டு போன அவலமும் நடந்தேறியது இந்த ஆட்சியில்தான். மக்கள் வேலைக்குப் போகாமால் கூலி வெலையையை விட அதிக பணமும் சாப்பாடும் களியாட்ங்களும் குழைந்தைகளுக்கான விளையாட்டுகளும் கிடைக்கிறது என்று பட்டிகளில்  ஒருமாதமாக அடைந்து கிடந்தார்கள். தேர்தல் ஆணையம் கும்பகர்ண நித்திரையில் இருந்தது.இந்த தேர்தல் முடிவுகளுக்காக வாக்காளர்கள் வெட்கப்பட வேண்டும். நாளை முதல் அவர்கள் கூலிவேலைக்குப் போகவேண்டியதுதான். கொடுத்த பணத்தை எப்படிக்கறப்பது என்பது அமைச்சர்களுக்கு நன்றாகவே தெரியும்..அமிமுகவில் இருந்த போது ஊழல் செய்தார் என்று ஜடாலினால் வழக்குனுத் தொடுக்கப்பட்ட செந்தில் பாலாஸிதான் இன்று ஜடாலினின் செல்லப்பிள்ளை. அவர்தலைமயில்தான் ஈரோகிழக்கு தேர்தல் திருவிழா அரங்கேறி இருக்கின்றது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

நித‌ர்ச‌ன‌ உண்மை
இந்த‌ தேர்த‌ல் முற்றிலும் அருவ‌ருக்க‌ த‌க்க‌ வெறுக்க‌ த‌க்க‌ தேர்த‌ல்...............ஆளும் க‌ட்சி வெக்கி த‌லை குனிய‌னும்................தேர்த‌ல் ஆனைய‌ம் நேர்மையா செய‌ல் ப‌ட்ட‌தாக‌ தெரிய‌ வில்லை..............ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் இருந்தும் அத‌ க‌ண்டு கொள்ளாம‌ விட்ட‌வை................இது ப‌ண‌நாய‌க‌ தேர்த‌ல்.................காசு இருப்ப‌வ‌னுக்கு தான் வெற்றி.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு செலவழித்த காசை திரும்ப எடுக்க வேணுமே.
அதற்கு... இவர்களின் வயிற்றில் தான்... அடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.....அதாவது  எம்,ஜி,ஆர்   இந்த தேர்தலில் போட்டி இட்டுயிருந்தல்.  ..காசு  பொருள்கள் கொடுத்து வெற்றி பெற்று இருக்க முடியுமா?. நிச்சயமாக இல்லை அல்லவா?.    எனவே… இந்த தேர்தலில் தகுதியான வேட்பாளர்கள் எவரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று இத்தால். உறுதிப்படுத்துகிறேன். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

தேர்தலுக்கு செலவழித்த காசை திரும்ப எடுக்க வேணுமே.
அதற்கு... இவர்களின் வயிற்றில் தான்... அடிப்பார்கள்.

அடிச்சாத் தான் புத்தி வ‌ரும் த‌மிழ் சிறி அண்ணா

இனி ஈரோடு ம‌க்க‌ளை எட்டியும் பார்க்க‌ மாட்டாங்க‌ள்..................ம‌து க‌டை விருப்ப‌ப் ப‌டி திற‌ந்து இருக்கும் வ‌ரி உய‌ர்வு மின் க‌ட்ட‌ன‌ உய‌ர்வு என்று குடுத்த‌ காசை எடுத்து போடுவாங்க‌ள் அது தான் திராவிட‌ம்...............

ஜெய‌ல‌லிதா உயிரோட‌ இருக்கும் வ‌ரை க‌ம‌லகாச‌னுக்கு அர‌சிய‌ல் என்றால் என்ன‌ என்று தெரியா , அவ‌ர் கூட‌ இவைக்கு பிர‌ச்சார‌ம் செய்தார்

திமுக்கா கொடுத்த‌ தொலைக் காட்சியை உடைத்தார்   , இப்ப‌ அவ‌ர்க‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வு...............இவ‌னையும் ந‌ம்பி த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்டிச்சின‌ம் , முடிய‌ல‌......................... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

பையா... இப்படி கோமாளித்தனமான தேர்தலை நடத்தியலும் பார்க்க, 
நடத்தாமல் விட்டிருக்கலாம். சனங்களின் நேரம் மிச்சமாகி இருக்கும்.

தேர்தல் ஆணையம், காவல் துறை எல்லாம்.... தூக்கு மாட்டிக் கொண்டு சாக வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

பையா... இப்படி கோமாளித்தனமான தேர்தலை நடத்தியலும் பார்க்க, 
நடத்தாமல் விட்டிருக்கலாம். சனங்களின் நேரம் மிச்சமாகி இருக்கும்.

தேர்தல் ஆணையம், காவல் துறை எல்லாம்.... தூக்கு மாட்டிக் கொண்டு சாக வேணும்.

இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண் துடைப்பு நாட‌க‌ம் போல் ஆகி விட்ட‌து................இந்தியா ஜ‌ன‌நாய‌க‌ நாடு கிடையாது..............ஊழ‌ல் பெருகிய‌ பெரிச்சாளிக‌ள் வாழும் நாடு

இவ‌ங்க‌ள் தேர்த‌ல் நேர‌ம் ம‌க்க‌ளை அடைச்சு வைச்ச‌தில் இருந்து காசு கொடுப்ப‌தில் இருந்து எல்லாம் தெரிந்தும் ந‌ட‌வ‌டிக்கை இல்லை.................

இந்த‌ தேர்த‌லில் திமுக்காவின் ச‌தி ஈரோடு தேர்த‌லில் 68க‌ட்சிக‌ளுக்கு மேல் போட்டியிட‌ வைச்ச‌து.............விவ‌சாயி சின்ன‌ம் ஓட்டு மிசினில் 22வ‌து இட‌த்தில்...............

இவ‌ள‌வு அட‌க்குமுறைக்குள்ளும் காசு கொடுத்தும் கிட்ட‌ த‌ட்ட‌  11000ஆயிர‌ம் பேர் நாம் த‌மிழ‌ருக்கு போட்டு இருக்கின‌ம்...................

தேமுதிக்கா க‌ட்சி 2011ம் ஆண்டு எதிர் க‌ட்சியாய் வ‌ந்தார்க‌ள்..............அவ‌ர்க‌ளுக்கு கிடைச்ச‌ ஓட்டை பார்க்க‌ அந்த‌ க‌ட்சி ப‌டு பாதால‌த்தில் போய் விட்ட‌து போல் இருக்கு..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

Image

வாழ்க பணநாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடைத் தேர்தலில்... பணத்தை கொடுத்து வெல்வார்கள் என்று... 
இளங்கோவன் சில வருடங்களுக்கு முன்பு பேசிய காணொளி.
அவரின், இன்றைய வெற்றிக்கு பொருந்துகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று, கூச்சமில்லாமல் சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஈவிகேஎஸ்
2 மார்ச் 2023, 02:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றிருந்தனர். இருவருக்குமான வாக்குகள் வித்தியாசம் 66,575 வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். பிற்பகலுக்குப் பிறகு அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் இளங்கோவனின் தேர்தல் வெற்றியை கொண்டாடத் தொடங்கினர்.

அவரது வெற்றி குறித்து செய்தியை ஆளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்ததைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

வரலாற்று வெற்றி - முதலமைச்சர் ஸ்டாலின்

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றிருப்பது வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

20 மாதகால திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் பேசிய அவர், "திமுக ஆட்சியை எடைபோடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும் எனக் கூறி வந்தேன். மக்களும் அதற்கேற்றாற் போல எடைபோட்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர்.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மக்களவை தேர்தலில் இதைவிட மிகப்பெரிய வெற்றியை மக்கள் வழங்குவர். தன்னையே மறந்து நாலாந்தர பேச்சாளர் போல எடப்பாடி பழனிசாமி பேசிவந்தார். அவருக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்." என்று கூறினார்.

இதேபோல் தேசிய அரசியலுக்கு ஃபரூக் அப்துல்லா அழைப்பு விடுத்தது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். அதன் அடிப்படையில் நேற்று நடந்த விழாவில் நான் பேசியிருந்தேன். யார் தேர்தலில் வென்று பிரதமராக வரவேண்டும் என்பதைவிட யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் இப்போதைய கொள்கை." என்றார்.

கடந்த முறை கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டபோது 8,900 வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையில் தற்போது அதிமுக இரட்டை இல்லை சின்னத்தில் நேரடியாக போட்டியிட்டும் வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

முன்னிலை பெற்றது குறித்துப் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதல் அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என்றார்.

“தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அதிமுகவே கூறியுள்ளது. இந்த பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

என்ன சொல்கிறது அதிமுக?

அதிமுக
 
படக்குறிப்பு,

கே.வி. ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் (அதிமுக)

தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் தென்னரசு, "பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது" என ஒரே வாக்கியத்தை கூறிவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேடிக்கை பார்த்த தேர்தல் ஆணையம், விளையாடிய ஆளும் கட்சி, இது. பண நாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த தோல்வி அதிமுகவை பாதிக்காது. அதிமுக ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு எழும். திமுகவின் 'பி' அணியாக செயல்படுபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்றார்.

ஈரோடு கிழக்கு

முன்னதாக, மொத்தம் 16 மேசைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன.

வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததாலும் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததாலும் பத்திரிகையாளர் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும் போட்டியிட்டனர்.

தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

238 வாக்குச் சாவடிகள் கொண்ட இந்த இடைத்தேர்தலில் 74.69 % வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை விட இது 9% அதிகம்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு மாவட்டம் சித்தோடில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன.

ஈரோடு கிழக்கு

மொத்தம் 238 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 32 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டன. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி நாளன்று பிரசாரம் செய்தனர்.

திமுக ஆட்சியின் மீதான எடைத்தேர்தல் இது என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/c4njyd8jkkeo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20230302-175234-You-Tube.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு: "ரூ.400 கோடிக்கு வாங்கிய தேர்தல் வெற்றி இது" - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

சீமான் - பிரேமலதா

பட மூலாதாரம்,SOCIALMEDIA

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்க, இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடர்ந்தார்.

இந்த தொகுதியில் ஏற்கனவே 2016 தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் தென்னரசு, அதேபோல 2011 தேர்தலில் தேமுதிக இந்த தொகுதியில் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், இந்த முறை இவ்விரு போட்டியாளர்களுமே காங்கிரஸ் வேட்பாளரிடம் ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கினர்.

அதிலும் குறிப்பாக, இத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,804 வாக்குகள் பெற்றுள்ளார்.

"ரூ. 400 கோடிக்கு வாங்கிய வெற்றி இது"

நாம் தமிழர் கட்சி
 
படக்குறிப்பு,

மேனகா நவநீதன்

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் மேனகா நவநீதன்.

"நாங்கள் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இம்முறை 600 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளோம். ஆளும் கட்சி இந்த தேர்தலுக்கு ரூ. 400 கோடி வரை செலவு செய்துள்ளது. மக்களை பணம் கொடுத்து விலக்கி வாங்கி ஏமாற்றி விட்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே அவர்களின் தொகுதியில் வேலை செய்யாமல் இங்கு தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தினார்கள். நாம் தமிழர் கட்சி எப்போதும் மக்களுடன் இருக்கும். இந்த ஒரு மாதத்தில் கொடுத்த பணம் டாஸ்மாக்கிற்கு செலவாகிவிட்டது. அதனால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மளிகை பொருள் வழங்குவதாக டோக்கன் கொடுத்துள்ளார்கள். அதையாவது முழுமையாக வழங்குங்கள் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

மக்களின் வறுமைதான் அரசியல் கட்சிகளின் மிகப்பெரிய முதலீடு. பகுத்தறிவு பகலவன் பெரியாரின் ஊரில் சூடத்தின் மேல் சத்தியம் வாங்கிக் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார்கள். திமுக கூட்டணி பெற்றுள்ள இந்த அமோக வெற்றிக்கு மாபெரும் வெற்றி விழா நடத்துவார்கள். அப்போது தேர்தல் ஆணையத்திற்கும் ஒரு வெற்றி விழா நடத்திவிடுங்கள்.

பண பட்டுவாடா தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தபோது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வெற்றி அவர்களுக்கு சாத்தியமாகிருக்காது," என்றார்.

ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதி என்ற நம்பிக்கை, கூட்டணிக்குள் நிலவிய அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களால் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த தேமுதிக, சூட்டோடு சூடாக வேட்பாளரையும் அறிவித்தது.

அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளரைக் களத்தில் இறக்கி முழுவீச்சில் பிரசாரத்தை முன்னெடுத்தது நாம் தமிழர் கட்சி.

தொகுதி முழுவதும் சீமானும், கட்சியின் பிரதிநிதிகளும் காரசாரமான பிரசாரத்தை முன்னெடுத்தனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக எனப் பிரதான கட்சிகள் அனைத்தையும் சரமாரியாக விமர்சித்து மேடைகள்தோறும் அக்கட்சியினர் உரையாற்றினர்.

தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாததால், பிரேமலதாவும், அவரது மகன் விஜய பிரபாகரனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுதீஷும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த இரு கட்சிகளின் கூட்டங்களும் சில சர்ச்சைகளையும் சந்தித்தன. சீமான் அருந்ததியர் பற்றி பேசியது, விஜய பிரபாகரன் கூட்டத்தின் போது கோபப்பட்டது உள்ளிட்டவை தேர்தல் களத்தில் பேசுபொருளானது.

நாம் தமிழர் கட்சி

இப்படி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இத்தேர்தலை இவ்விரு கட்சிகளும் எதிர்கொண்டன. இந்நிலையில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை இருகட்சிகளுக்குமே எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுத்துள்ளதா என்றால் சந்தேகமே. அதிலும் குறிப்பாக தேமுதிக கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் ஈரோடு கிழக்கு வாக்காளர்கள்.

எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் அதிமுக இருக்கிறது. அதேபோல இதுவரையிலான முடிவுகளின் படி, தேமுதிகவை நான்காவது இடத்திற்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது நாம் தமிழர் கட்சி. தேமுதிக நான்காவது இடத்தையே பிடித்துள்ளது.

இதில் முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளர் மற்றும் நோட்டாவை விடவும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார் தேமுதிக வேட்பாளர் ஆனந்த். அதன்பிறகு அவரது வாக்கு எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இறுதிச்சுற்றின் முடிவில் நாம் தமிழர் கட்சி, 10,804 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 11,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cx79x3655lyo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பையா... இப்படி கோமாளித்தனமான தேர்தலை நடத்தியலும் பார்க்க, 
நடத்தாமல் விட்டிருக்கலாம். சனங்களின் நேரம் மிச்சமாகி இருக்கும்.

தேர்தல் ஆணையம், காவல் துறை எல்லாம்.... தூக்கு மாட்டிக் கொண்டு சாக வேணும்.

சீமானின் தமிழ்நாட்டு அரசியலை மட்டுமே வைத்து இந்த கருத்தை எழுதுகின்றேன்.

சிறித்தம்பி! ஒரு தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்காமலும்,அன்பளிப்புகள் வழங்காமலும்,விருந்துபசாரங்கள் வழங்காமலும் வாக்குகளை பெற்று வெற்றியீட்டியிருந்தால் பாராட்டலாம் வாழ்த்தலாம். சீமான் கொண்ட கொள்கைகளை பரிசீலிக்கலாம். வாக்கு வெற்றிக்காக பகிரங்கமாகவே பண விநியோகம் செய்த காணொளிகள் உலாவந்ததை கண்டும் நாம் தமிழர் வெற்றியை ஏளனம் செய்பவர்களின் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சீமானின் தமிழ்நாட்டு அரசியலை மட்டுமே வைத்து இந்த கருத்தை எழுதுகின்றேன்.

சிறித்தம்பி! ஒரு தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்காமலும்,அன்பளிப்புகள் வழங்காமலும்,விருந்துபசாரங்கள் வழங்காமலும் வாக்குகளை பெற்று வெற்றியீட்டியிருந்தால் பாராட்டலாம் வாழ்த்தலாம். சீமான் கொண்ட கொள்கைகளை பரிசீலிக்கலாம். வாக்கு வெற்றிக்காக பகிரங்கமாகவே பண விநியோகம் செய்த காணொளிகள் உலாவந்ததை கண்டும் நாம் தமிழர் வெற்றியை ஏளனம் செய்பவர்களின் மனநிலையை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா?

உண்மையில் இவர்களுக்கு... தமிழ் இன முன்னேற்றத்திலோ, 
தமிழ் மொழியை பாதுகாப்பதிலோ அக்கறை இல்லை.
திராவிடத்தை உச்சரித்துக் கொண்டு, தமிழ் வளங்களை கொள்ளையடிப்பவர்களுடன் 
சேர்ந்து... தமக்கும் பங்கு பிரிக்கவே, இந்த மொள்ளமாரித்தனத்தை வெட்கமில்லாமல் 
செய்து கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.