Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் ரீதியாக என் அப்பா என்னை துன்புறுத்தினார் -குஷ்பூ கொடுத்த ஷாக்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் ரீதியாக என் அப்பா என்னை துன்புறுத்தினார் -குஷ்பூ கொடுத்த ஷாக்!

JegadeeshMar 06, 2023 10:32AM
WhatsApp-Image-2023-03-06-at-10.27.43-1.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகச் சமீபத்தில் குஷ்பூ பொறுப்பேற்றார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ.

ரஜினி, கமல் என 80-களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மம்தா குமாரி, டெலினா கோங்தூப் ஆகியோருடன் குஷ்பூ-வும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரானார்.

இதற்கிடையே 8 வயதில் தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

”WeTheWomen” நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக குஷ்பூ அளித்த பேட்டியில்,

“ஒரு குழந்தைக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அது அதன் வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக ஆறாமல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அது ஆணோ, பெண்ணோ என்பதில் எந்த சிக்கலும் கிடையாது.

எனது அம்மாவிற்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை அமைந்தது. எங்களுக்கு மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவன் அமைந்தார்.

தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை தன்னுடைய பிறப்புரிமை போல் அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.

Kushboo says her father sexually abused

எனக்கு எட்டு வயதாகும் போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். அவருக்கு எதிராக துணிச்சலுடன் நான் பேசும் போது எனக்கு 15 வயதாகும். எனக்காக நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஒருவேளை நான் இதை வெளியே சொன்னால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது.

அதன் காரணமாகவே நான் பல ஆண்டுகள் அமைதி காத்து வந்தேன். இதை நான் கூறினால் எனது அம்மா நம்பவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சம் எனக்கு இருந்தது.

கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே எனது அம்மா வாழ்ந்து வந்தார். இனியும் தாங்க முடியாது என்று எனது 15 வயதில் முடிவு செய்த நான். அவருக்கு எதிராக நான் பேசத் தொடங்கினேன்.

எனக்கு 16 வயது கூட இருக்காது அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார். அடுத்த வேலை உணவுக்கு நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்தோம்.

எனது வாழ்வில் குழந்தை பருவமானது பல பிரச்னைகளை கொண்டது. ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் மன தைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது” என தெரிவித்தார்.

 

https://minnambalam.com/cinema/kushboo-says-her-father-sexually-abused-her-when-she-was-8/

 

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு பாலியல் கொடுமை குறித்து மனம் திறந்து பேசியது என்ன? - "என் அப்பா எனக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்"

  • திவ்யா ஜெயராஜ்
  • பிபிசி தமிழ்
6 மார்ச் 2023
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
குஷ்பு சுந்தர்,

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

குஷ்பு சுந்தர், உறுப்பினர் - தேசிய மகளிர் ஆணையம்

 

மற்றும் வெற்றியாளர் மீராபாய் சானு

"சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தை கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது" என்கிறார் குஷ்பு.

தன்னுடைய எட்டு வயதில் தனது சொந்த தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும், ஆனால் அந்த வயதில் அவருக்கு எதிராக அப்போது தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும், சமீபத்தில் தான் பங்குபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு.

கடந்த 12 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் குஷ்பு,சென்றாண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் அவர் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்,மூத்த ஊடகவியலாளர் பர்கா தத் நடத்திய 'We the women' என்னும் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்று பேசிய குஷ்பு, 'சிறுவயதிலேயே தன்னுடைய சொந்த தந்தையால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்' குறித்து பேசியிருந்தார்.

 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், " ஆணோ, பெண்ணோ ஒருவர் தான் குழந்தையாக இருக்கும்போது எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலானது அவர்களது வாழ்க்கை முழுவதும் ஆறாத வடுவாய் தொடரும். நான் என்னுடைய எட்டு வயதில் சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அதை வெளியேக் கூறினால் என்னுடைய அம்மாவையும்,சகோதரர்களையும் அடித்து துன்புறுத்துவேன் என்று அவர் என்னை மிரட்டினார். அதனால் அப்போது அதுகுறித்து என்னால் வெளியே பேச முடியவில்லை.

அதேபோல் தனது மனைவியையும், குழந்தைகளையும் அடிப்பதை தன்னுடைய உரிமையாக அவர் கருதினார். தன்னுடைய சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் அவர் தன்னுடைய பிறவி உரிமையாக கருதினார். எனது அம்மாவுக்கு அமைந்தது மிகவும் மோசமான திருமண வாழ்கை.

எட்டு வயதில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக என்னால் பதினைந்து வயதில்தான் குரல் கொடுக்க முடிந்தது. அதற்கான தைரியம் எனக்கு அப்போதுதான் வந்தது. அம்மாவிடம் இதுகுறித்துக் கூறினால் அவர் அதை முதலில் நம்புவாரா என்ற தயக்கம் இருந்தது. ஏனெனில் அவர் கணவனின் மேல் பற்றுக் கொண்ட ஒரு மனைவியாக இருந்தார். ஆனால் இதற்கு மேல் இதை தாங்கிக் கொள்ள முடியாது என்று, எனது தந்தையை எதிர்த்து பேச துவங்கினேன். ஒரு சிறுமியாக என் மீது நான் கொண்ட தன்னம்பிக்கையின் பொருட்டு, தைரியத்தை வர வைத்து கொண்டு என்னுடைய பதினைந்து வயதில் அவரை எதிர்த்தேன். ஒரு பெண்ணாக வீட்டிலிருக்கும் ஒரு ஆணை எதிர்க்கும் துணிவு வந்துவிட்டால் இந்த உலகத்திலும் நம்மால் எதையும் எளிதாக எதிர்கொள்ள முடியும் " என்று கூறியிருந்தார்.

குழந்தை பருவத்தில் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து, குஷ்பு தற்போது வெளிப்படையாக பேசியிருப்பது, நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது

குஷ்பு சுந்தர்

பட மூலாதாரம்,MOJO STORY

குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் குறித்தும், பர்கா தத் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துக் கொண்ட விஷயங்கள் குறித்தும் பேசுவதற்காக, பிபிசி தமிழ் குஷ்புவை தொடர்பு கொண்டது.

பிபிசியிடம் பேசிய அவர், "சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தற்போது வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தை கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு எட்டு வயது குழந்தையாக பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும்போது, நம்மால் அந்த சிறு வயதில் என்ன செய்துவிட முடியும்.அதுவொரு வன்கொடுமை. ஆனால் இன்றைக்கு அதுகுறித்து நான் பேசியிருக்கிறேன் என்றால் அதிலிருந்து இப்போது நான் மீண்டு வந்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் அதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதேசமயம் இது போன்ற கொடுமைகளை அனுபவித்தவர்களுக்குதான், அது எத்தகைய மனச் சிதைவை ஏற்படுத்தும் என்பது புரியும்.

இங்கே நடக்கும் 90சதவீத பாலியல் துன்புறுத்தல்கள் நமக்கு நன்கு தெரிந்த, நம்மைச் சுற்றியுள்ள நபர்களால்தான் ஏற்படுகின்றன என்று தரவுகள் கூறுகின்றன. என்னுடைய ஆரம்ப காலகட்டத்திலிருந்து குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் நான் முதல் ஆளாக குரல் கொடுத்து வந்திருக்கிறேன். ஏனென்றால் அத்தகைய பிரச்னைகள் அனைத்தையும் நானும் அனுபவித்திருக்கிறேன். பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது, அதனுடைய காயங்கள் ஆறினாலும் அந்த தழும்புகள் நமது வாழ்நாள் முழுவதும் தொடரும்" என்று கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "நம் சமூகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஒரு பெண் தனக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே பேசினால், திரும்ப அவர்களை நோக்கியே பல கேள்விகள் கேட்கப்படும். அவன் உன்னை சீண்டும் வகையில் நீ என்ன செய்தாய், நீ எப்படி உடை அணிந்திருந்தாய், அந்த நேரத்தில் நீ எதற்காக அங்கே சென்றாய், அவனிடம் நீ எதற்காக வாய் கொடுத்து பேசினாய் போன்ற முறையில்லாத கேள்விகள் அவர்களை நோக்கி வீசப்படுமே தவிர, தவறு செய்த ஆண்களை நோக்கி கேள்விகள் எழுப்ப மாட்டார்கள்.

இப்போது நான் எனது தந்தையால் பாதிக்கப்பட்ட விஷயத்தை பகிர்ந்ததற்கு கூட, என்னை நோக்கிதான் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகின்றன. ட்விட்டரில் படித்த பேராசியர் ஒருவர்,

"இப்போது நீங்கள் உங்களது குழந்தைப் பருவ துன்புறுத்தல்கள் குறித்து பேசுயிருப்பது, உங்களது தந்தை குறித்த தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்காதா, உங்களது குழந்தைகள் அவர்களது தாத்தாவை பற்றி தவறாக நினைக்க மாட்டார்களா" என்று என்னைப் பார்த்து கேள்வியெழுப்புகிறார். இப்போது கூட ஆண்களின் பிம்பங்களை பற்றியே அவர்கள் கவலை கொள்கிறார்கள். இந்த சமூகத்தில் படித்தவர்களின் நிலையே இவ்வளவு கேவலமாக இருக்கிறது.

அதனால்தான் ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், தங்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெட்கப்பட தேவையில்லை. உண்மையில் வெட்கப்பட வேண்டியது இத்தகைய தவறுகளை செய்யும் ஆண்கள்தான். இன்றைக்கு நான் என்னுடைய அனுபவங்கள் குறித்து பேசியிருப்பதற்கான காரணம் அதனை வலியுறுத்துவதற்காகத்தான்" என்று உறுதியான குரலில் கூறுகிறார்.

தவறு இழைப்பவர்கள் குறித்து தைரியமாக பொது வெளியில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்று குஷ்பு கூறுகிறார். தவறு செய்பவர்கள் குறித்து வெளியே பேசாமல், அவர்களுக்கு எப்படி உங்களால் தண்டனை வாங்கி கொடுக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் முன் வைக்கிறார்.

குஷ்பு சுந்தர்

பட மூலாதாரம்,KUSHBOO

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்," குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியே பேசினால் அந்த குழந்தைகளுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற கருத்து இங்கே ஆழமாக பதிவாகியிருக்கிறது. என்னுடைய பதினைந்து வயதில் எனக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து, தைரியமாக நானே குரல் கொடுத்தேன். அதன்பின் சொந்தமாக உழைக்க துவங்கி, இன்று வரை இந்த சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறேன். ஒரு குடும்ப தலைவியாக பல பொறுப்புகளை கையாள்கிறேன். எனது தந்தை செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவரை எதிர்த்ததால், எனது வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு செய்த கொடுமைகளுக்கான பலனை எனது தந்தை அவரது கடைசி காலத்தில் அனுபவித்தார். அவர் இறந்தபோது அந்த கடைசி ஊர்வலத்தில், எனது சகோதரர்கள் கூட யாரும் பங்குகொள்ளவில்லை. அவர் அனாதையாகத்தான் சென்றார். இதற்கு பெயர்தான் கர்மா என்பார்கள்" என்று அவர் கூறுகிறார்.

தங்களுடைய குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரிய வரும்போது,பெற்றோர்கள் தைரியமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் எனவும், இன்றைக்கு இருக்கும் போக்ஸோ சட்டமும், சமூக ஊடகங்களும் மற்றும் பல சமூக அமைப்புகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எனவும் குஷ்பு நம்பிக்கையளிக்கிறார்.

"இத்தனை ஆண்டுகள் கழித்து இதுபற்றி வெளியே பேசுவதற்கு எனக்கு தைரியம் வந்துள்ளது. அந்த தைரியத்தை எனக்களித்தது என்னுடைய குழந்தைகள். அதேபோல் எனது கணவரும் எனக்கு துணையாக இருக்கிறார். ஆனால் அனைவருக்கும் எனக்கு கிடைத்தது போன்ற ஆதரவுகள் கிடைக்குமென சொல்ல முடியாது. ஆனால் காலங்கள் மாறி வருகிறது. எனவேதான் மீண்டுமொரு முறை சொல்கிறேன் இந்த சமூகத்தில் இத்தகைய விஷயங்களில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும்" என்கிறார் குஷ்பு.

https://www.bbc.com/tamil/india-64867663

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தை கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது" என்கிறார் குஷ்பு.

பேப்பரிலை தன்னைப்பற்றி நியூஸ் வரோணும் எண்டதுக்காக இது அப்பப்ப ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கும்  :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

பேப்பரிலை தன்னைப்பற்றி நியூஸ் வரோணும் எண்டதுக்காக இது அப்பப்ப ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கும்  :rolling_on_the_floor_laughing:

அவவுக்கு கோயில் எல்லாம் இருக்கு என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

குஷ்பு பாலியல் கொடுமை குறித்து மனம் திறந்து பேசியது என்ன? - "என் அப்பா எனக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்"

  •  

வேற யார்யார்?

பெரிய பட்டியலைப் போடுங்கோ பார்ப்பம்.

3 hours ago, குமாரசாமி said:

பேப்பரிலை தன்னைப்பற்றி நியூஸ் வரோணும் எண்டதுக்காக இது அப்பப்ப ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கும்  :rolling_on_the_floor_laughing:

எப்போ பிபிசி யைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலத்துக்கு பின் குஸ்பு இதனை வெளியிடுவது ஏன்?

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண், ஏன் இதனை முன்னரே வெளியில் சொல்லவில்லை, ஏன் இதைச் சொல்ல இவ்வளவு காலம் உனக்கு தேவைப்பட்டது போன்ற கேள்விகளும், சமூகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான். மற்றது, ஒரு நடிகை இவ்வாறு கூறும் போது "நீ ஒரு நடிகை தானே.. இதெல்லாம் உனக்கு ஒரு விசயமா" என்ற அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளும் நடிகை என்றால் அவருக்கு பிடிக்காதவர் கூட பாலியல் ரீதியில் அத்துமீறலாம்  என்ற ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான்.

ஆனால் காலம் மாறி வருகின்றது. ஹொலிவூட் டில் இருந்து ஐரோப்பா வரைக்கும் பெரும் இயக்குநர்கள், பயிற்றுவிப்பாளர்கள் என்றோ செய்த பாலியல் வன்கொடுமைக்கு, பாலியல் ரீதியிலான அத்துமீறல்களுக்கு பல ஆண்டுகள் கழிந்த பின் தண்டனை பெறும் காலம் இது.

பாலியல் வன்முறை ஒன்று ஒருவர் மீது நிகழ்ந்த பின் அது எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் தண்டனைக்குரிய குற்றம் தான் (போர்க் குற்றம் போன்று) என்பதை உலகம் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. 

குஷ்பு இன்று தைரியமாக, தன் பிள்ளைகள் நன்கு வளர்ந்து தன் தாய் என்ன சொல்கின்றார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளும் வயதை அடைந்த விட்ட காலம் ஒன்றில் சொல்லியிருக்கின்றார். அவருக்கும் அவர்  குடும்பத்துக்கும் இதனால் ஏற்படும் சங்கடங்கள் பற்றி புரிந்து கொண்டும் தைரியமாக சொல்லியிருக்கின்றார். பாராட்டுகள்.

Edited by நிழலி
ஒரு சிறு பந்தி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போன்ற ஒரு நாட்டில் குஷ்பு போன்ற பிரபலங்கள் மூலம் மக்களிடையே இப்படியான விடயங்களில் விழிப்புணர்வை ஊட்டலாம். பாதிக்கப்பட்டாலும் எல்லாராலும் துணிவாக சமூகத்தின் முன் வந்து இதுபற்றி பேசக்கூடிய சூழல் இந்தியாவில் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

`நான் இதைப் பேசியதற்கு வெட்கப்படவில்லை, குற்றவாளிகள்தான் வெட்கப்பட வேண்டும்" - குஷ்பு விளக்கம்

நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 

அண்மையில் 'We The Women 'என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குஷ்பு, பத்திரிகையாளர் பர்கா தத் உடனான உரையாடலின்போது, ``எனக்கு எட்டு வயது இருக்கும்போது என் அப்பாவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் அவருக்கு எதிராக என்னால் பேசமுடியவில்லை. இதை வெளியில் சொன்னால் என் அம்மாவும் என்னை நம்பவில்லை எனில் என்ன செய்வது, இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் பிரச்னை வருமோ என்ற அச்சம் என்னுள் இருந்தது. `கணவனே கண்கண்ட தெய்வம்' என்ற மனப்பான்மையிலேயே என் அம்மா வாழ்ந்து வந்தார்.

இனியும் தாங்க முடியாது என முடிவு செய்து என் 15 வயதில் அப்பாவுக்கு எதிராகப் பேசத் தொடங்கினேன். எனக்கு16 வயதுகூட இருக்காது. அதற்குள் அவர் எங்களை விட்டுச் சென்றார். அடுத்த வேளை உணவுக்குக்கூட என்ன செய்வது எனத் தெரியாமல் நாங்கள் தவித்தோம். என் குழந்தைப் பருவம் மிக மோசமானதாகப் பல பிரச்னைகளைக் கொண்டதாக இருந்துள்ளது. ஆனாலும் கூடவே நான் அதை எதிர்த்துப் போராடும் தைரியமும் நம்பிக்கையும் பெற்றேன்" என்று 8 வயதில் தன் அப்பாவால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

குஷ்பு
 
குஷ்பு
குஷ்புவின் இந்தப் பேச்சு பெரும் பேசுபொருளாகியிருந்தது. இதுபற்றி பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு பேசியதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் குஷ்பு, "அதிர்ச்சியளிக்கும் வகையில் நான் ஒன்றும் பேசவில்லை. நேர்மையுடன் நான் அதை வெளிப்படுத்தினேன். நான் இதைப் பேசியதற்கு வெட்கப்படவில்லை. ஏனென்றால் இது எனக்கு நடந்துள்ளது. குற்றவாளிகள்தான் இதுபோன்று செய்ததற்காக வெட்கப்பட வேண்டும். நீங்கள் வலிமையாகவும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எதுவும் உங்கள் மனதை உடைந்துபோகச் செய்துவிடக் கூடாது, இதுதான் முடிவு என்று நினைத்துவிடக் கூடாது என்ற செய்தியை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதைப்பற்றி பேசினேன். இதைப் பற்றி வெளிபடையாகப் பேசுவதற்கு நான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கோண்டேன். 'இதுதான் எனக்கு நேர்ந்தது, என்ன நடந்தாலும் நான் உடைந்துபோய் உட்கார மாட்டேன், என் பயணத்தைத் தொடர்வேன்' எனப் பெண்கள் இதைப் பற்றி பேச தைரியமாக முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

``நான் இதைப் பேசியதற்கு வெட்கப்படவில்லை, குற்றவாளிகள்தான் வெட்கப்பட வேண்டும்" - குஷ்பு விளக்கம்| "Not Ashamed Of What I Said": BJP's Khushbu Sundar On Abuse By Father - Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.