Jump to content

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி

Published By: DIGITAL DESK 5

08 MAR, 2023 | 10:02 AM
image

"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது. 

116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. 

ஆரம்ப நாள்  நிகழ்வு வியாழக்கிழமை (09) முற்பகல் 8.30 மணிக்கு  இடம்பெற்று போட்டி முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுடன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு பூர்த்தியாவதால் போட்டி தொடர்பான எதிர்பார்ப்பு இரு கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் இரசிகர்களிடம் காணப்படுகிறது.

https://www.virakesari.lk/article/149946

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ட விபரங்கள், விளையாட்டை பார்க்கக்கூடிய இணைப்புக்கள் கிடைத்தால் பகிருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மத்திய கல்லூரி - சென் ஜோன்ஸ் மோதும் 116ஆவது வடக்கின் சமர் இன்று ஆரம்பம்

Published By: DIGITAL DESK 5

09 MAR, 2023 | 09:31 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் 3 நாள் கிரிக்கெட் போட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் 99 ஓட்டங்களால் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் இம்முறையும் வெற்றிபெறும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.

மறுபுறத்தில் கடந்த வருடம் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இம்முறை பதிலடி கொடுக்க யாழ். மத்திய கல்லூரி காத்திருக்கிறது.

இரண்டு கல்லூரிகளினதும் நடப்பு கிரிக்கெட் பருவகால பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை யாழ். மத்திய கல்லூரியின் பெறுபெறுகளும் வீரர்களினது தனிப்பட்ட பெறுதிகளும் சிறப்பாக இருப்பதை அவதானிக்கலாம்.

இக் கல்லூரி இம்முறை விளையாடிய 7 போட்டிகளில் 4 இல் வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது.

புனித பத்திரிசியார் கல்லூரி  அணிக்கும்   பதுளை மாவட்ட கிரிக்கெட் அணிக்கும் எதிரான போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களை யாழ். மத்திய கல்லூரி குவித்தது. கண்டி திரித்துவ கல்லூரியுடனான போட்டியில் 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் அப் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது.

நடப்பு கிரிக்கெட் பருவகாலத்தில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென் ஜோன்ஸ் கல்லூரி அவற்றில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 2இல் தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அசத்தியிருந்தது.

யாழ். மத்திய கல்லூரி அணி

10.jpg

யாழ். மத்திய கல்லூரிக்கு 5ஆம் வருட வர்ண வீரரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான ஆனந்தன் கஜன் தலைவராக விளையாடுகிறார். கடந்த வருட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சகலதுறை ஆட்டக்காரராகத் தெரிவான கஜன், இந்த வருடம் புனித பத்திரிசியார் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 150 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார். அத்துடன் 2 அரைச் சதங்களையும் குவித்துள்ளார்.

6ஆம் வருட வர்ண வீரரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான மதீஸ்வரன் சன்சயன் அணியின் உதவித் தலைவராவார். இவர் 5 அரைச் சதங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

4ஆம் வருட வர்ண வீரரும் சகலதுறை வீரருமான ஜெகதீஸ்வரன் விதுசன் விளையாடுகிறார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இவர் 2 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

இவர்களுடன் 3ஆம் வருட வர்ண வீரர் உதயகுமார் தர்மிகன், 4ஆம் வருட வீரர் நிஷாந்தன் அஜய், மற்றொரு 4ஆம் வருட வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகியோர் யாழ். மத்திய கல்லூரி அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களாவர்.

சகாதேவன் சயந்தன், சதாகரன் சிமில்டன், சுதர்சன் அனுஷாந்த், தகுதாஸ் அபிலாஷ், சகாயஜெகன் கெவின் டெரிக்சன், டெனியல் போல் பரமதயாளன், விக்னேஸ்வரன் பாருதி, ஜெகதீஸ்வர் அஷ்விதன், முரளி திசன், மதியழகன் யதுசரங்கன், கணேசலிங்கம் மதுசுதன் ஆகியோரும் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

யாழ். மத்திய கல்லூரி அணிக்கு குலேந்திரன் ஷெல்டன் பயிற்றுநராக செயற்படுகிறார்.

சென் ஜோன்ஸ் கல்லூரி அணி

11.jpg

115ஆவது வடக்கின் சமரில் ஆட்டநாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றெடுத்த கமலபாலன் சபேசன் இம்முறை சென்  ஜோன்ஸ்  அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருட வெற்றியில் முக்கிய பங்காற்றியதுபோல் இந்த வருடமும் அணியின் வெற்றிக்காக முயற்சிக்கவுள்ளார். இவர் 5ஆம் வருட வர்ண வீரர் ஆவார்.

5ஆம் வருட வர்ண வீரரான யோகதாஸ் விதுசன் அணியின் உதவித் தலைவராக விளையாடுகிறார். இவர் அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளர் ஆவார்.

பிரதான வேகப்பந்துவிச்சாளராக 5ஆம் வருட வர்ண வீரர் அன்டன் அபிஷேக் திகழ்கிறார். ஆரம்ப வீரரான நேசகுமார் எபனேசர் ஜெஸியல் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுக்கக்கூடியவர். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அபிவிருத்தி குழாத்தில் இடம்பெற்ற ஜெஸியல் 4ஆம் வருட வர்ண வீரராவார்.

இந்த பிரதான வீரர்களுடன் அண்டர்சன் சச்சின் கனபதி, ஜெயச்சந்திரன் அஷ்னாத், சங்கீத் கிறேம் ஸ்மித், மஹேந்திரன் கிந்துஷன், அன்டன் அமலதாஸ் ஜெருன், கிருபானந்தன் கஜகர்ணன், பிரேமச்சந்திரன் சஜீபன், மோகனராசா கமல்ராஜ், அருள்சீலன் கவிஷான், கமலபாலன் ஜனத்தன், ராமன் அனுஷாந்த், முர்ஃபின் ரெண்டியோ, உதயனன் அபிஜோய்ஷாந்த், சிவகுமார் ஜொஷுவா நிலுக்ஷன், சீவநாத ஹென்றி ஜோன் ப்றய்னார்ட் ஆகிய வீரர்களும் சென். ஜோன்ஸ் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

அணியின் பயிற்றுநராக சிரேஷ்ட பயிற்றுநர் பத்மநாதன் லவேந்த்ரா செயற்படுகிறார்.

சென் ஜோன்ஸ் முன்னிலை

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 115 வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி 38 போட்டிகளில் வெற்றிபெற்று 10 போட்டிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

யாழ். மத்திய கல்லூர 28 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 41 போட்டிகள் வெற்றிதோல்வி முடிவடைந்துள்ளன. 7 போட்டிகளில் முடிவு கிட்டாததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது.

https://www.virakesari.lk/article/150045

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஓட்ட விபரங்கள், விளையாட்டை பார்க்கக்கூடிய இணைப்புக்கள் கிடைத்தால் பகிருங்கள். 

 

BIG MATCHES -2023 (Super League)
LIVE refresh lean-back-mode share
 
Multi Days, 116th Encounter, Battle Of North - Central College Ground, Jaffna, Test Match, Unlimited Overs, 09-Mar-23 10:12 AM  ball-type
Toss: St John s College (Jaffna) opt to field
JAFFNA CENTRAL COLLEGE
ST JOHN S COLLEGE (JAFFNA)
Yet to bat
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

116th.jpg

இன்றைய ஆட்ட முடிவில் அணிகளின் ஓட்ட விபரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

116th.jpg

இன்றைய ஆட்ட முடிவில் அணிகளின் ஓட்ட விபரம்.

மத்திய கல்லூரி வெல்லும் போல இருக்கே.

Link to comment
Share on other sites

23 minutes ago, ஈழப்பிரியன் said:

மத்திய கல்லூரி வெல்லும் போல இருக்கே.

ஓம்... அப்படித்தான் இருக்கு.

யாழ். பரியோவான் கல்லூரி தன் 200 வருட பூர்த்தியை கொண்டாடும் இந்த வருடத்தில் / மாதத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் ஒரு மாறா வடுவாக அமைந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ..........நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்........!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

116 ஆவது வடக்கின் சமர் :  பலமான நிலையில் யாழ். மத்திய கல்லூரி

09 MAR, 2023 | 10:09 PM
image

 

(நெவில் அன்தனி)

யாழ். மத்திய கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (09) ஆரம்பமான யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் பாடசாலை கிரிக்கெட் போட்டியில் மத்திய கல்லூரி பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் சலக விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைக் குவித்ததுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் சென் ஜோன்ஸ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

ஆரம்ப வீரர் ஜெகதீஸ்வரன் விதுசன், நிஷாந்தன் அஜய், அணித் தலைவர் மதீஸ்வரன் சன்சயன் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் யாழ். மத்திய கல்லூரி அணியைப் பலப்படுத்தின.

மொத்த எண்ணிக்கை 27 ஓட்டங்களாக இருந்தபோது யாழ். மத்திய கல்லூரி முதலாவது விக்கெட்டை இழந்தது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த விதுசனும் சன்சயனும் 2ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய விதுசன் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைப் பெற்றதுடன் சன்சயன் 6 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் விக்கட்கள் சீரான இடைவெளியில் விழ ஒரு கட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி 8 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், இளம் வீரர் நிஷாந்தன் அஜய், கடைநிலை வீரர் சுதர்ஷன் அனுஷாந்த் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

நிஷாந்தன் அஜய் 77 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார்.

சுதர்ஷன் அனுஷாந்த் 27 ஓட்டங்ளைப் பெற்று கடைசியாக ஆட்டமிழந்தார். அவர்களைவிட பின்வரிசையில் சகாதேவன் சயந்தன் 11 ஓட்டங்களையும் தகுதாஸ் அபிலாஷ் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

சென் ஜோன்ஸ் பந்துவீச்சில் யோகதாஸ் விதுஷன் 70 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அன்டன் அபிஷேக் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிருபானந்தன் கஜகர்ணன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் சென் ஜோன்ஸ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆரம்ப வீரர் நேசகுமார் ஜெஸியல் 16 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் கமலபாலன் சபேசன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

மஹேந்திரன் கிந்துஷன் 11 ஓட்டங்களைப் பெற்றார்.

யாழ். மத்தி பந்துவீச்சில் சுதர்ஷன் அனுஷாந்த் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரஞ்திதகுமார் நியூட்டன் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்கடையும் கைப்பற்றியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/150143

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் சமர்: வெற்றி வாயிலில் யாழ். மத்திய கல்லூரி; இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க சென் ஜோன்ஸ் பிரயத்தனம்

10 MAR, 2023 | 08:44 PM
image

(நெவில் அன்தனி)

சென் ஜோன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் 116ஆவது வடக்கின் சமர் எனும் மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கான வாயிலை யாழ். மத்திய கல்லூரி அண்மித்துள்ளது. அதேவேளை இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க சென் ஜொன்ஸ் அணி கடும் பிரயத்தனம் எடுத்துவருகிறது.

DSC_5794.jpg

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த 3 நாள் போட்டியில் ஃபலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இன்று வெள்ளிக்கிழமை (10) 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

DSC_5778.jpg

இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மாத்திரமே மீதமிருக்க இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு சென் ஜோன்ஸ் அணிக்கு மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

DSC_5786.jpg

அருள்சீலன் கவிஷான், யோகதாஸ் விதுஷன் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடுவதால் யாழ். மத்திய கல்லூரி அணியினர் தமது வெற்றிக்காக காத்திருக்க நேரிட்டுள்ளது.

DSC_5783.jpg

போட்டியின் 2ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (10) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி, எதிரணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு 127 ஓட்டங்களுக்கு சுருண்டது.

DSC_5800.jpg

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காமல் இருந்த நேசகுமார் ஜெஸியல், அணித் தலைவர் கமலபாலன் சபேசன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சென் ஜோன்ஸ் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

ஆனால், ஜெஸியல் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் சென் ஜோன்ஸின் எஞ்சிய விக்கெட்கள் வரிசையாக சரிந்தன. 

சபேசன் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

DSC_5814.jpg

சென் ஜோன்ஸ் அணியின் கடைசி 7 விக்கெட்கள் வெறும் 18 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

மத்திய கல்லூரி சார்பாக ரஞ்சிதகுமார் நியூட்டன் 7 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 17.2 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆனந்தன் கஜன் 5 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றி பந்துவீச்சில் அற்புதமாக அசத்தினர்.

DSC_5804.jpg

அவர்களை விட சுதர்ஷன் அனுஷாந்த் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

சென் ஜோன்ஸ்   2ஆவது இன்னிங்ஸிலும் சரிவு

 

முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 152 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த சென் ஜோன்ஸ் அணி, ஃபலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டது.

DSC_5841.jpg

இரண்டாவது இன்னிங்ஸிலும் அதன் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

ரஞ்சிதகுமார் நியூட்டன், விக்னேஸ்வரன் பாருதி ஆகியோரின் பந்துவீச்சுகளில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட சென் ஜோன்ஸ் அணியினர் தங்களது விக்கெட்களை தாரை வார்த்தனர்.

DSC_5821.jpg

முதலாவது இன்னிங்ஸில் போன்று 2ஆவது இன்னிங்ஸிலும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய நேசகுமார் ஜெஸியல் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

ஜெஸியலுடன் 3ஆவது விக்கெட்டில் கமலபாலன் ஜோநதன் பகிர்ந்த 36 ஓட்டங்களே சென் ஜோன்ஸ் அணியின் 2ஆவது இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. ஜோநதன் 26 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரைவிட அருள்சீலன் கவிஷான் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 22 ஓட்டங்களுடனும் யோகதாஸ் விதுஷன் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ள அவர்கள் இருவரும் சாதிப்பார்களா அல்லது சரணடைவார்களா என்பதற்கான விடை சனிக்கிழமை (11) நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் கிடைப்பது உறுதி.

பந்துவீச்சில் விக்னேஸ்வரன் பாருதி 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரஞ்சித் குமார் நியூட்டன் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

DSC_5831.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். மத்திய கல்லூரி திறமையாக விளையாடி சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் நிஷாந்தன் அஜய் 74 ஓட்டங்களையும் ஜெகதீஸ்வரன் விதுஷன் 71 ஓட்டங்களையும் அணித் தலைவர் மதீஸ்வரன் சன்சயன்  42 ஓட்டங்களையும் சுதர்ஷன் அனுஷாந்த் 27 ஓட்டங்களையும் பெற்று அணியைப் பலப்படுத்தினர்.

சென் ஜோன்ஸ் பந்துவீச்சில் யோகதாஸ் விதுஷன் 70 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அன்டன் அபிஷேக் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிருபானந்தன் கஜகர்ணன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

https://www.virakesari.lk/article/150221

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கல்லூரி அணிக்கு பாராட்டுக்கள். சென். ஜோன்ஸ் அணி பார்ட்டி பண்ணத்தான் சரி போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

JCC vc JSC,

JCC - 279/10 (1st)

JCC- 9/1 (2nd)

---

JSC - 127/10 (1st)

JSC - 160/10 (2nd)

Outcome: Day 3- JCC won by 9 wickets (யாழ் மத்திய கல்லூரி வெற்றி 9 விக்கெட்டுக்களால் வெற்றி.)

வாழ்த்துக்கள் யாழ் மத்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் சமரில் சென். ஜோன்ஸை 9 விக்கெட்களால் வீழ்த்தி 29 ஆவது வெற்றியை சுவைத்தது யாழ். மத்திய கல்லூரி

Published By: DIGITAL DESK 5

11 MAR, 2023 | 01:47 PM
image

(நெவில் அன்தனி)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த போட்டியில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அபரிமிதமாக பிரகாசித்த யாழ். மத்திய கல்லூரி வடக்கின் சமரில் தனது 29ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

ஜெகதீஸ்வரன் விதுஷன், நிஷாந்தன் அஜய், மதீஸ்வரன் சன்சயன், கடைநிலை துடுப்பாட்ட வீரர் சுதர்ஷன் அனுஷாந்த் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய ஆற்றல்களும் ரஞ்சிதகுமார் நியூட்டன், ஆனந்தன் கஜன், விக்னேஸ்வரன் பருதி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் யாழ். மத்திய கல்லூரியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு மேலும் 15 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற அழுத்தத்துக்கு மத்தியில் தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்பு 138 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென் ஜோன்ஸ் கல்லூரி 160 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

அருள்சீலன் கவிஷான் 22 ஓட்டங்களுடனும் யோகதாஸ் விதுஷன் 12 ஓட்டங்களுடனும் கடைசி நாள் ஆட்டத்தை அழுத்தத்துக்கு மத்தியில் தொடர்ந்தனர்.

யோகதாஸ் விதுஷன் அதே எண்ணிக்கையில் ஆட்டமிழந்த போதிலும் கடைநிலை ஆட்டக்காரர்களுடன் இணைந்து கவிஷான் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி சென் ஜோன்ஸின் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தார்.

அவர் கடைசியாக 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது யாழ். மாத்திய கல்லூரியின் வெற்றிக்கு 9 ஓட்டங்களே தேவைப்பட்டது.

பந்துவீச்சில் ரஞ்சிதகுமார் நியூட்டன் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் விக்னேஸ்வரன் பருதி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

9 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி ஒரு விக்கெட்டை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: 279 (நிஷாந்தன் அஜய் 74, ஜெகதீஸ்வரன் விதுஷன் 71, மதீஸ்வரன் சன்சயன் 42, சதுர்ஷன் அனுஷாந்த் 27, யோகதாஸ் விதுஷன் 70 - 4 விக்., அன்டன் அபிஷேக் 67 - 3 விக்., கிருபானந்தன் கஜகர்ணன் 38 - 2 விக்.)

சென் ஜோன்ஸ் 1ஆவது இன்: 127 (நேசகுமார் ஜெஸியல் 43, கமலபாலன் சபேசன் 34, ரஞ்சிதகுமார் நியூட்டன் 27 - 4 விக்., ஆனந்தன் கஜன் 8 - 3 விக்., சுதர்ஷன் அனுஷாந்த் 62 - 2 விக்.)

சென் ஜோன்ஸ் (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: 160 (அருள்சீலன் கவிஷான் 37, கமலபாலன் ஜனத்தன் 26, நேசகுமார் ஜெஸியல் 25, யோகதாஸ் விதுஷன் 12, ரஞ்சிதகுமார் நியூட்டன் 53 - 5 விக்., விக்னேஸ்வரன் பருதி 58 - 5 விக்.)

யாழ். மத்திய கல்லூர 2ஆவது இன்: 9 - 1 விக். (ஜெகதீஸ்வரன் விதுஷன் 5 ஆ.இ., மதீஸ்வரன் சன்சயன் 2 ஆ.இ., அன்டன் அபிஷேக் 5 - 1 விக்.)

ஆட்டநாயகன்: ரஞ்சித்குமார் நியூட்டன், சிறந்த துடுப்பாட்ட வீரர்: நிஷாந்தன் அஜய், சிறந்த பந்துவீச்சாளர்: விக்னேஸ்வரன் பருதி.

https://www.virakesari.lk/article/150253

116th2.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கல்லூரி அணி மிகவும் பலமாகத்தான் இருக்கின்றது.......பாராட்டுக்கள் அனைவருக்கும்.........!

இப்பவும் கயிற்றுப்பாயில்தான் விளையாடுகிறார்கள். உலகப்போட்டி மைதானங்கள் போல் அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.........!  😁

நன்றி ஏராளன் ......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் பற்றிய செய்திகளுக்கு நன்றி @ஏராளன் 👍

தான் வின்னிங்க்ட் ஷொட்டை அடிக்கவேணும் என்று சென்றல் கப்டன் இரண்டாவது இனிங்கிசில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இறங்கி அவுட் ஆகி போனார் போல. 😇

பேசாமல் முதல் இனிங்க்ஸ் ஆரம்ப ஜோடியையே இறக்கி விக்கெட் இழப்பின்றி வென்று இருக்கலாம். 

சென். ஜோன்ஸ் பிள்ளைகள் இனி நீங்கள் பார்ட்டி பண்ணுங்கோ. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆட்டம் பற்றிய செய்திகளுக்கு நன்றி @ஏராளன் 👍

தான் வின்னிங்க்ட் ஷொட்டை அடிக்கவேணும் என்று சென்றல் கப்டன் இரண்டாவது இனிங்கிசில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இறங்கி அவுட் ஆகி போனார் போல. 😇

பேசாமல் முதல் இனிங்க்ஸ் ஆரம்ப ஜோடியையே இறக்கி விக்கெட் இழப்பின்றி வென்று இருக்கலாம். 

சென். ஜோன்ஸ் பிள்ளைகள் இனி நீங்கள் பார்ட்டி பண்ணுங்கோ. 

இனிங்ஸ் வெற்றி இல்லை என்றான நிலையில் தான் கப்டன் இறங்கி இருக்கிறார். அவர் வழமை போல் மிடில் ஓடரில் வந்திருந்தாலும்.. சென்றல் 10 விக்கெட்டுக்களால் வென்றதாகுமே தவிர.. இனிங்ஸ் வெற்றி ஆகி இருக்காது. 

எனினும்.. சென்றலின் இனிங்ஸ் வெற்றியை அவர்களே தான் பரியோவான் வழங்கிய பல வாய்ப்புக்களை தவறவிட்டு சரியான பாடசாலைப் பையன்களின் கிரிக்கெட் போல் ஆடி முடித்திருக்கிறார்கள். மத்தியிடம்.. எதிர்பார்ப்பது இதைவிட தரமான கிரிக்கெட். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் உள்ளூர் கில‌ப்புக‌ளில் ந‌ல்லா விளையாடி ச‌ர்வ‌தேச‌ போட்டியில் தெரிவாகி பெரிய‌ ஜ‌ம்ப‌வாங்க‌ளா வ‌ர‌ வாழ்த்துக்க‌ள்

 

இல‌ங்கை அணியில் இப்போது த‌மிழ‌ர்க‌ள் விளையாடுவ‌தில்லை

 

திற‌மை இருந்தா இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடி திற‌மைய‌ வெளிக்காட்டினா இங்லாந் சிட்டிச‌ன் கொடுத்து த‌ங்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவார்க‌ள்..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் சமர் ஒருநாள் போட்டி : யாழ். மத்திய கல்லூரி அணியை 21 ஓட்டங்களால் வென்றது சென். ஜோன்ஸ்

Published By: DIGITAL DESK 5

18 MAR, 2023 | 10:07 AM
image

(நெவில் அன்தனி)

யாழ். சென். ஜோன்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற வடக்கின் சமர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 21 ஓட்டங்களால் வீழ்த்தி  வெற்றிக் கிண்ணத்தை   சென். ஜோன்ஸ் சுவீகரித்தது.

அருள்சீலன் நிதானத்துடன் பெற்ற அரைச் சதம், அன்ரன் அபிஷேக்கின் சகலதுறை ஆட்டம், யோகதாஸ் விதுஷன் பதிவு செய்த 4 விக்கெட் குவியல் என்பன சென். ஜோன்ஸின் வெற்றிக்கு வழிவகுத்தன.

இந்த வெற்றி மூலம் 116ஆவது வடக்கின் சமர் 3 நாள் போட்டியில் அடைந்த தோல்வியை சென். ஜோன்ஸ் நிவர்த்தி செய்துகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென். ஜோன்ஸ் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களைக் குவித்தது.

சென். ஜொன்ஸின் முதல் 6 வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய போதிலும் அவர்களால் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிலைத்திருந்து கணிசமான ஓட்டங்ளைப் பெற முடியாமல் போனது.

அண்டர்சன் சச்சின் கனபதி (7), மஹேந்திரன் கின்துஷன் (27), சங்கீத் க்றேம் ஸ்மித் (14), நேசகுமார் எபநேசர் ஜெஸியல் (12), அணித் தலைவர் கமலபாலன் சபேசன் (2), யோகதாஸ் விதுஷன் (13) ஆகிய ஆறு பேரும் ஆட்டமிழக்க சென். ஜோன்ஸ் 27.2 ஓவர்களில் 106 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

இந் நிலையில் அருள்சீலன் கவிஷான், அன்டன் அபிஷேக் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 7ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரமான நிலையில் இட்டனர்.  அபிஷேக்   30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சோற்ப நேரத்தில் அன்டன் அமலதாஸ் (7) களம் விட்டகன்றார். (165 - 8 விக்.)

எனினும் அருள்சீலன் கவிஷான் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 9ஆவது விக்கெட்டில் ஜெயச்சந்திரன் அஷிநாத்துடன் இணைந்து 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சென். ஜோன்ஸின் மொத்த எண்ணிக்கை 200ஐக் கடக்க உதவினார்.

ஜெயச்சந்திரன் அஷிநாத் 19 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த முர்ஃபின் ரெண்டியோ 3 ஓட்டங்களைப் பெற்றார்.

அருள்சீலன் கவிஷான் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 96 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகளுடன் 64 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் சதாகரன் சிமில்டன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரஞ்சித்குமார் நியூட்டன், நிஷாந்தன் அஜய், விக்னேஸ்வரன் பருதி, தகுதாஷ் அபிலாஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

218 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சென். ஜோன்ஸைப் போன்றே யாழ். மத்திய கல்லூரி அணியிலும் முதல் அறுவரில் ஐவர் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர்.

ஜெகதீஸ்வரன் விதுஷன் (2), ரஞ்சித்குமார் நியூட்டன் (8), மதீஸ்வரன் சஞ்சயன் (9), நிஷாந்தன் அஜய் (19), அணித் தலைவர் ஆனந்தன் கஜன் (0) ஆகிய ஐவரும் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 60 ஓட்டங்களாக இருந்தது. (60 - 5 விக்.)

எனினும் சதாகரன் சிமில்டன், டெனியல் போல் பரமதயாளன் ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 74  ஓட்டங்களைப் பகிர்ந்து யாழ். மத்திய கல்லூரிக்கு தெம்பூட்டினர். ஆனால் இருவரும் 22 பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (147 - 7 விக்.)

டெனியல் போல் 6 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களையும் சதாகரன் சிமில்டன் 6 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைத் தொடர்ந்து தகுதாஸ் அபிலாஷ் 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (158 - 8 விக்.)

அடுத்து 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சகாதேவன் சயந்தன், சுதர்ஷன் அனுஷாந்த் ஆகிய இருவரும் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணிக்கு சவால் விடுத்தனர். ஆனால், இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

சகாதேவன் சயந்தன் 27 ஓட்டங்களையும் சுதர்சன் அனுசாந்த் 16 ஓட்டங்களையும் பெற்றனர். விக்னேஸ்வரன் பருதி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அன்ரன் அபிஷேக் 8.4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் யோகதாஸ் விதுஷன் 9 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜெயச்சந்திரன் அஷினாத் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

334142771_1270286840559991_7837992496168

ஆட்டநாயகன்: அன்ரன் அபிஷேக்.

334216412_3453970494922004_3409626261424

334654851_890525972029586_47721035456393

https://www.virakesari.lk/article/150803

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.