Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது.

வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது

திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது.

இரண்டே நாட்களில் திவாலானது

அமெரிக்காவின் 16-வது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி, கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலானது. இது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி! | Uk Hsbc Acquires Silicon Valley Bank For 1 PoundEPA

போதிய நிதி இல்லாததால் சிலிக்கான் வேலி வங்கி தன்னிடம் இருந்த பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை செய்தது. இதைத்தொடர்ந்து இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அனைவரும் வேகவேகமாக தங்கள் பணத்தை வெளியே எடுத்துக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி, முதலீட்டாளர்களும் சிலிக்கான் வேலி வங்கியிலிருந்து வெளியேறியதால் அதன் பங்கு விலை 60 சதவீதம் சரிந்தது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி படுத்தேவிட்டது. இதனால் சிலிக்கான் வேலி வங்கியை அமெரிக்க அரசு மூடியது.

இதையடுத்து டெபாசிட்டர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்படும் என அமெரிக்க அரசு உறுதியளித்த நிலையில், சிலிக்கான் வேலி வங்கியை வாங்குவதற்கும் யாரும் இதுவரை முன்வரவில்லை. இதனால், சிலிக்கான் வேலி வங்கியின் சொத்துகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HSBC வாங்கியது

இந்நிலையில், சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு எச்எஸ்பிசி வங்கி (HSBC Bank) வாங்கியுள்ளது.

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி! | Uk Hsbc Acquires Silicon Valley Bank For 1 PoundThe National

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய பிரிவிடம் 6.7 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள டெபாசிட்டுகள் இருக்கின்றன. மேலும் 5.5 பில்லியன் பவுண்ட் கடன்களை வழங்கியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய பிரிவு உடனடியாக எச்எஸ்பிசி வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

எச்எஸ்பிசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் (Noel Quinn), “இந்த கையகப்படுத்தல் பிரித்தானியாவில் எங்கள் வணிகத்திற்கு சிறந்த மூலோபாய அர்த்தத்தை அளிக்கிறது.., நாங்கள் SVB UK-ன் வாடிக்கையாளர்களை HSBC-க்கு வரவேற்கிறோம் மற்றும் UK மற்றும் உலகம் முழுவதும் அவர்கள் வளர உதவ எதிர்நோக்குகிறோம்.., SVB UK சகாக்களை HSBC-க்கு அன்புடன் வரவேற்கிறோம், அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார்.  

https://news.lankasri.com/article/uk-hsbc-acquires-silicon-valley-bank-for-1-pound-1678714157?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்

வேலி  

🤣

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு innovative business idea வைத்திருக்கின்றேன் இப்போ இப்படி இந்த வங்கி நட்டம் ஆகிவிட்டது

முழு வங்கியும் மூடவில்லை பிரித்தானிய பிரிவு மட்டும்தான் மூப்பட்டுள்ளது.

ஒரு commercial transaction ஆக 1$  consideration கொடுக்கப்பட்டுள்ளது. fair value, book value வித்தியாசம் உள்ளது. goodwill / intangible asset calculation எடுக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

வங்கியின் பண திரவ நிலை குறைந்ததால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது, என கூறுகிறார்கள், நேரமின்மையால் விரிவாக அறிந்து கொள்ளவில்லை, என்ன நிகழ்கிறது என விளங்கவில்லை.

வங்கி தனது இருப்பு தவிர்த்து மிகுதியுள்ள காசினை அனேகமாக 80:20 (வங்கி தனது இருப்பு தவிர்த்து மிகுதியுள்ள காசினை அனேகமாக 80:20 (Pareto principle?) 80 வீதத்தினை திரவமாகவும் மிகுதியினை முதலீட்டிலும் (திரவத்தன்மை குறைந்த) இடுவதாகக்கேள்விப்பட்டுள்ளென்.

இங்கு மத்தியவங்கி வட்டி விகிதத்தினை 2025 வரை உயர்த்தாது என கூறியதினை நம்பி அரச பணமுறியில் முதலிட்டுள்ளனர், ஆனால் வட்டி விகிதம் அதிகரிக்க அரச பணமுறியில் எதிமறை மாற்றத்தினை ஏற்படுத்த அதனால் வங்கி நட்டத்தினை எதிர்கொள்ள அது மக்களிடையே பரவ மக்கள் ஒரே நாளில் பணத்தினை எடுக்க வங்கி திவாலாகியுள்ளது.

இலங்கையில் முன்பு இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி எதோ ஒரு வங்கி நினைவில்லை (கேள்விப்பட்ட விடயம்) வங்குரோத்தாக போவதாக மக்கள் கருதி நீண்ட வரிசையில் பணத்தினை மீழ பெற முயற்சிக்க, வங்கி அனைத்து பணத்தினையும் சில்லறையாக மாற்றி கொடுத்ததாம், அப்படி சில்லறையாக எண்ணி கொடுக்க நீண்ட நேரம் எடுக்க மக்கள் பொறுமையிழந்து வீடு திரும்பினராம் ஒரு கட்டத்தில் மக்களுக்கு வங்கி திவாலாகாது என ஒரு நம்பிக்கை உருவாகியதனால் மக்கள் பணத்தினை மீழப்பெறுவதினை நிறுத்தி விட்டனராம்.

தற்போதய தொழில்னுட்ப வளர்ச்சியினால் வங்கியினால் இந்த மாதிரி விளையாட்டு விடமுடியாது.

சில கிராமிய வங்கிகளின் பங்குகள் பெருமளவில் சரிகிறது

$WAL -75%

$FRC -65%

$ZION -43%

$PACW 41%

$CMA-33%

Market capital பல மடங்காக சுருங்கினால் அந்த நிறுவனம் என்ன ஆகும்?

உலக நாடுகள் பொருளாதார சரிவினை தடுப்பதற்காக அதிகரிக்கும் வட்டி விகித அதிகரிப்பினை தற்காலிகமாகவேனும் நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் வங்கிகளின் தவறான முதலீட்டால் வங்கிகள் பணநெருக்கடியில் சிக்க வங்கிகள் திவாலாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசின் நிலை இதனைவிட மோசமாகலாம்,  பல வங்கிகள் தமது அரச பணமுறிகளை விற்க முற்படும் போது முதலீட்டாளர்கள் அரச பண்முறிக்கெதிராக முதலிட்டால் (Short) என்னவாகும் என தெரியவில்லை (இலங்கையினை போலவே  மொத்த தேசிய வருமானத்தினையும் விட அதிகமாக கடன்பட்டுள்ளது).

அமெரிக்காவின் பொருளாதார சரிவு உல்கெங்கும் பரவ வாய்புள்ளது.

இதில் ஒரு நன்மை மட்டும் உள்ளது இரஸ்சிய உக்கிரேன் போர் முடிவுக்கு வரும், ஆனால் அது ஒரு நியாயமான முடிவாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, vasee said:

உலக நாடுகள் பொருளாதார சரிவினை தடுப்பதற்காக அதிகரிக்கும் வட்டி விகித அதிகரிப்பினை தற்காலிகமாகவேனும் நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் வங்கிகளின் தவறான முதலீட்டால் வங்கிகள் பணநெருக்கடியில் சிக்க வங்கிகள் திவாலாகலாம்.

இலங்கையில் உள்ள வங்கிகள் 25-28 வரையான வட்டி வீதத்தை மக்களுக்கு கொடுப்பதாக கூறி பணத்தை வங்கியில் முதலிட வைக்கிறார்கள்.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் உள்ள வங்கிகள் 25-28 வரையான வட்டி வீதத்தை மக்களுக்கு கொடுப்பதாக கூறி பணத்தை வங்கியில் முதலிட வைக்கிறார்கள்.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்களிடம் கடன் பெறுபவர்களுக்கு எவ்வளவு வட்டியில் பணம் கொடுக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

அவர்களிடம் கடன் பெறுபவர்களுக்கு எவ்வளவு வட்டியில் பணம் கொடுக்கிறார்கள்?

அந்த விபரம் எதுவும் தெரியவில்லை.ஆனாலும் எனது கேள்வியும் அதுவாகவே இருந்தது.25-28 வீதத்துக்கு மக்களிடம் பணத்தை வாங்கி குறைந்த வட்டிக்கா கொடுக்க முடியும்.

அப்போ 30-35 வீத வட்டிக்கு யாரோ பணம் பெறுகிறார்கள்.ஆனால் திரும்பவும் கொடுப்பார்களா தெரியாது.

இங்கு கோப்பிறேசன் என்று பதிவு செய்து நட்டம் என்றால் உள்ளதையும் சுருட்டிக் கொண்டு தப்பிவிடுவார்கள்.அவர்களது சொத்துக்கள் சேதாரமில்லாமல் இருக்கும்.

ஆனால் இலங்கை சட்டங்களைப் பற்றி தெரியவில்லை.

மக்களை ஏமாற்றி ஆசைகாட்டவென்றே தொலைக்காட்சிகளில் வட்டிபற்றி நிறையவே விளம்பரங்கள் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

ஒரு commercial transaction ஆக 1$  consideration கொடுக்கப்பட்டுள்ளது. fair value, book value வித்தியாசம் உள்ளது. goodwill / intangible asset calculation எடுக்கவில்லையா?

SVB - UK arm இன் liabilities ஐயும் மொத்தமாக HSBC பொறுப்பேற்று கொண்டதால் உண்மையான விலை £1+liabilities என்பதே சரி.

1 hour ago, vasee said:

வங்கியின் பண திரவ நிலை குறைந்ததால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது, என கூறுகிறார்கள், நேரமின்மையால் விரிவாக அறிந்து கொள்ளவில்லை, என்ன நிகழ்கிறது என விளங்கவில்லை.

SVB பரிவர்த்தனைகளை செய்த வட்டி வீதம், பெடரள் ரிசேவ் தற்போது கூட்டி வைத்துள்ள வட்டி வீதம் இடையான வேறுபாடுதான் பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.

1 hour ago, vasee said:

அமெரிக்க அரசின் நிலை இதனைவிட மோசமாகலாம்,  பல வங்கிகள் தமது அரச பணமுறிகளை விற்க முற்படும் போது முதலீட்டாளர்கள் அரச பண்முறிக்கெதிராக முதலிட்டால் (Short) என்னவாகும் என தெரியவில்லை (இலங்கையினை போலவே  மொத்த தேசிய வருமானத்தினையும் விட அதிகமாக கடன்பட்டுள்ளது).

அமெரிக்காவின் பொருளாதார சரிவு உல்கெங்கும் பரவ வாய்புள்ளது.

இதில் ஒரு நன்மை மட்டும் உள்ளது இரஸ்சிய உக்கிரேன் போர் முடிவுக்கு வரும், ஆனால் அது ஒரு நியாயமான முடிவாக இருக்காது.

அமெரிக்கா தும்மினால், மிச்சம் எல்லாருக்கும் சளிப்பிடிக்கும் 🤣.

சீனா உள்ளடங்கலாக.

  • கருத்துக்கள உறவுகள்

1 பௌண்ட்ஸ் க்கு வாங்கும் போது - அதன் அர்த்தம் - அந்த நிறுவனத்தின் (வாங்கியோ அல்லது எந்த வகையோ) , முழு கடன் பொறுப்பையும் (வங்கிக்கு பணம் கொடுப்பவர்கள் - இதில் பங்கு தாரரும்  அடங்கும்)    வாங்குபவர் பொறுப்பு எடுப்பார்கள்.

hsbc கொடுத்திருப்பது (உடனடியாக கொடுக்க தேவை இல்லை, கடன் பொறுபின் ஒப்பந்தத்தை செவ்வனே HSBC இயக்கினால் சரி) - அந்த வங்கியின் கடன் தொகையையும் அத்துடன் 1 பௌண்ட்ஸ் - உரிமத்துக்காக.

HSBC வாக்கி இருப்பது வங்கி சேவை வியாபாரத்தை - மற்ற எந்த வியாபாரமும் கைமாறுவதாய் போல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

வங்கி தனது இருப்பு தவிர்த்து மிகுதியுள்ள காசினை அனேகமாக 80:20 (வங்கி தனது இருப்பு தவிர்த்து மிகுதியுள்ள காசினை அனேகமாக 80:20 (Pareto principle?) 80 வீதத்தினை திரவமாகவும் மிகுதியினை முதலீட்டிலும் (திரவத்தன்மை குறைந்த) இடுவதாகக்கேள்விப்பட்டுள்ளென்.

இங்கு மத்தியவங்கி வட்டி விகிதத்தினை 2025 வரை உயர்த்தாது என கூறியதினை நம்பி அரச பணமுறியில் முதலிட்டுள்ளனர், ஆனால் வட்டி விகிதம் அதிகரிக்க அரச பணமுறியில் எதிமறை மாற்றத்தினை ஏற்படுத்த அதனால் வங்கி நட்டத்தினை எதிர்கொள்ள அது மக்களிடையே பரவ மக்கள் ஒரே நாளில் பணத்தினை எடுக்க வங்கி திவாலாகியுள்ளது.

On demand liquidity உள்ள ஒரு கிரிப்டோ (xrp?) ஐ அறிமுகம் செய்ய வலிந்து ஏற்படுத்தபடும் சிக்கல் என்கிறார்கள்.

1 hour ago, vasee said:

$WAL -75%

$FRC -65%

$ZION -43%

$PACW 41%

$CMA-33%

Market capital பல மடங்காக சுருங்கினால் அந்த நிறுவனம் என்ன ஆகும்?

உலக நாடுகள் பொருளாதார சரிவினை தடுப்பதற்காக அதிகரிக்கும் வட்டி விகித அதிகரிப்பினை தற்காலிகமாகவேனும் நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் வங்கிகளின் தவறான முதலீட்டால் வங்கிகள் பணநெருக்கடியில் சிக்க வங்கிகள் திவாலாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

SVB பரிவர்த்தனைகளை செய்த வட்டி வீதம், பெடரள் ரிசேவ் தற்போது கூட்டி வைத்துள்ள வட்டி வீதம் இடையான வேறுபாடுதான் பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.

அமெரிக்கா தும்மினால், மிச்சம் எல்லாருக்கும் சளிப்பிடிக்கும் 🤣.

சீனா உள்ளடங்கலாக.

வங்கிகளுக்கு வேறு தேர்வு இல்லை என கருதுகிறேன், தற்போது வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால் முதலீட்டாளர்களும் பங்கு சந்தை வர்த்தகர்களும் ஆரம்பத்தில் அரச பணமுறிகலை விற்பனை செய்யும் நிலயில் ஒரு கட்டத்திற்கு மேல் பணமுறிகள் கழிவு விலையில் வாங்கும்போது அதன் Bond yield அதிகரிக்க ஒப்பீட்டளவில் வங்கி வைப்புகளிற்கான வட்டி இலாபத்தினை விட இலாபம் அதிகம் காணப்படும், வங்கிகளுக்கு வேறு தெரிவில்லை, வைப்புகளிற்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வேண்டும்.

அவ்வாறு நிகழ்ந்தால் ஏற்கனவே சொத்து வடிவமாக உள்ள பணமுறிகளின் ஆரம்ப விலையினை விட தற்போதய விலை குறைவடைந்த நிலையில் ஒரு வங்கியினை இன்னொரு வங்கி நம்பாத நிலையில் மேலதிக செலவினை இந்த வைப்புகளிற்கான வட்டி விகித அதிகரிப்பு ஏற்படுத்தும்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைதான்.

ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்ட பண திரவ நெருக்கடிக்கு வட்டி விகித அதிகரிப்புதான் காரணம் கூறப்படுகிறது, வட்டி அதிகரிக்கும் போது ஒப்பீட்டளவில் பணமுறியில் முதலிடுவதினை விட வைப்பிலிடுவது இலாபகரமாகும், அதனால் இந்த வங்கிகளின் நடைமுறை சொத்தாக இருந்த பண்முறியின் பெறுமதி குறைய வங்கிக்கு ஏற்பட்ட நட்டத்தினை ஈடுகட்ட சந்தையில் பணமுறிகளை நட்டத்திற்கு விற்றுள்ளனர்.

இந்த செய்தி மக்களிடையே பரவ மக்கள் தமது பணத்தினை திரும்ப எடுக்க வங்கி முறியும் நிலைக்கு வந்துள்ளது என கூறுகிறார்கள்.

தற்போது கிராமிய வங்கிகளிற்கான வங்கியான FLHB பணமுறிகளை நட்டத்திற்கு விற்று 60 பில்லியனை திரட்டியுள்ளதாக கூறுகிறார்கள்( அது நிகழ்ந்து விட்டதா என சரியாக தெரியவில்லை).

இது உண்மையாக இருக்குமாயின்  நீங்கள் முன்பு கூறியது போல பொருளாதார சரிவிற்கான சவப்பெட்டிக்கு முதலாவது ஆணி, ஆனால் இந்த பொருளாதார சரிவு 2008 இனை விட பாரதூரமாக இருக்கலாம்(எனது கருத்து தவறாக இருக்கலாம்).

சீனாதான் பெருமளவில் அமெரிக்க பணமுறிகளை தமது நாணயத்தின் பெறுமதியினை நிகர ஏற்றுமதி வருவாயினால் ஏற்படும் பெறுமதி அதிகரிப்பினை குறைக்க வாங்கி குவிப்ப்பவர்கள் அவர்களின் நிலையும் கடினம்தான், ஆனால் இந்த நிலையில் அவர்களும் அமெரிக்க பணமுறிகளை விற்கமுட்பட்டால் என்ன ஆகும்?

அமெரிக்காவில் உள்ள யாழ்கள உறவுகள் உங்களது அமெரிக்க வங்கிகளின் நம்பகத்தன்மை பற்றிய கருத்து எவ்வாறு உள்ளது? 

முகப்பெறுமதி காசினை கண்டபடி அச்ச்சிட்டு வெளியிட்ட இலங்கையும் உலக நாணயம் என்ற அடிப்படையில் அப்படி பிரச்சினை வராது என டொலரினை அச்சிட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவும் தற்போது ஒரே நிலையில்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

On demand liquidity உள்ள ஒரு கிரிப்டோ (xrp?) ஐ அறிமுகம் செய்ய வலிந்து ஏற்படுத்தபடும் சிக்கல் என்கிறார்கள்.

இதனை பற்றி அறிந்திருக்கவில்லை, தெளிவாக கூறமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் உள்ள வங்கிகள் 25-28 வரையான வட்டி வீதத்தை மக்களுக்கு கொடுப்பதாக கூறி பணத்தை வங்கியில் முதலிட வைக்கிறார்கள்.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தேசிய சேமிப்பு வங்கி ஆகக் கூடியது 25% வருட முடிவில் வட்டி தருவார்கள். மற்றவை 20-24% கொடுக்கிறார்கள். வைப்புப் பணம் 2 மில்லியன் ரூபா அல்லது அதற்கு கூடவாக இருக்கவேணும்.
வங்கிகளுக்குள்ளும் போட்டி ஒரு இடத்தில் இருந்து மற்றதற்கு மாற்றினால் கூட வட்டி தருவினமாம்!

11 hours ago, vasee said:

அவர்களிடம் கடன் பெறுபவர்களுக்கு எவ்வளவு வட்டியில் பணம் கொடுக்கிறார்கள்?

நகை அடைவிற்கு 29% வீதம் என கேள்விப்பட்டேன். 

வட்டிக்கான வரி 60% ஆக்கப்பட்டுள்ளது, ஒரு லட்சம் வட்டி வருமானம் பெறுபவர் 5000ரூபாவை வரி கட்டி 95000ரூபாவை பெறுவார். இந்த வரி சாதரண சேமிப்பு வட்டிக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தேசிய சேமிப்பு வங்கி ஆகக் கூடியது 25% வருட முடிவில் வட்டி தருவார்கள். மற்றவை 20-24% கொடுக்கிறார்கள். வைப்புப் பணம் 2 மில்லியன் ரூபா அல்லது அதற்கு கூடவாக இருக்கவேணும்.
வங்கிகளுக்குள்ளும் போட்டி ஒரு இடத்தில் இருந்து மற்றதற்கு மாற்றினால் கூட வட்டி தருவினமாம்!

14 hours ago, vasee said:

ஏராளன்

கடந்த மாதம் எனது மச்சான் இலங்கை போயிருந்த போது வேறு வங்கியில் இருந்த பணத்தை எடுத்து மக்கள் வங்கியில் 5 வருடத்துக்கு 25 வீத வட்டிக்கு போட்டுவிட்டு வந்துள்ளார்.

அவர் அங்கிருக்கும் போது நடந்த சம்பவங்களையே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஏராளன்

கடந்த மாதம் எனது மச்சான் இலங்கை போயிருந்த போது வேறு வங்கியில் இருந்த பணத்தை எடுத்து மக்கள் வங்கியில் 5 வருடத்துக்கு 25 வீத வட்டிக்கு போட்டுவிட்டு வந்துள்ளார்.

அவர் அங்கிருக்கும் போது நடந்த சம்பவங்களையே எழுதினேன்.

அண்ணை ஐந்தாண்டுகள் எனின் நல்ல இலாபம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

இதனை பற்றி அறிந்திருக்கவில்லை, தெளிவாக கூறமுடியுமா?

பணபரிவர்த்தனையில் பகுதிகள் இடையே கைமாறும் போது, குறிப்பாக இருவேறு நாணயங்களிடையே பரிமாறும் போது, இரு பகுதியும் போதிய திரவநிலையை கொண்டிராவிட்டால் சிக்கல் வரும் அல்லவா? இந்த திரவநிலைக்கான தேவையை ரிப்பிளின் ODL நிவர்த்தி செய்யும். செக்கன்களில் பரிமாற்றம் நிகழும். இந்த முறைக்கு உலக நிதி பரிவர்த்தனை மாறும் போது, ஏனைய, மேலே நீங்கள் சொன்ன வங்கிகளின் நிலை போன்றவற்றுக்கும் இதை பாவிக்கலாம் என்கிறார்கள்.

இதன் தொடர்சியாக, பல சதிகோட்பாடுகளும் உலாவுகிறன. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நன்றி உங்கள் கருத்திற்கு, புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின் டொச் வங்கி அடுத்ததாக மூழ்கப்போவதாக கூறுகிறார்கள்

இந்த வங்கியினது CDS உம் வங்கி முறிவடையப்போகிறது என கூறுகிறது. 

ff871fc6-f9ce-4aea-bfad-a438238f1552.png

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உலக எதிர்நோக்கி காத்திருக்கின்ற பொருளாதார சரிவிலிருந்து இலகுவில் மீள முடியாது.

Bond yield inverted curve பொருளாதார சரிவு வர உள்ளதினை உறுதிப்படுத்துகிறது, உலக பொருளாதார சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாகி வருவதனால் மக்களை திசை திருப்பும் விடயங்களில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளதாக  கருதுகிறேன் (இரஸ்சிய, சீனா).

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

கடந்த காலத்தில் பொருளாதார சரிவு நிகழும் போது நாடுகள், பொருளாதாரத்தினை தூண்டுவதற்காக பொது செலவினை அதிகரிப்பது வளமையாக இருந்துள்ளது அமெரிக்காவில் 2008 இல் பொருளாதார சரிவின் போதும் 1998 மலேசிய பொருளாதார சரிவின் போதும் அவ்வாறே நிகழ்ந்தது.

தற்போது ஏற்கனவே அதிகரித்துள்ள பணவீக்கம் உள்ள நிலையில் இது சாத்தியப்படாது என தோன்றுகிறது, அத்துடன் 2020 இலிருந்த பணத்தினலவினை விட பல மடங்கு(அமெரிக்க) பணம் பாவனையிலுள்ளது(M2 money supply)

quantitative tightening பயன்படுத்தப்படும் அரச பணமுறி பயனற்று போகும் நிலையில் உள்ளது.

இந்த பொருளாதார சரிவு பல துருவங்கள் கொண்ட பொருளாதார உலகினை உருவாக்குமா? வங்கியில் வைத்திருக்கும் பணத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? வங்கிக்கு ஏதாவது மாற்றீடு உள்ளதா?  யாழ்கள கருத்தாளர்களே உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Image

UBS bank CDS

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.