Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாப்பு- வச்சாண்டா ஆப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூவார்க் நகர மேஜர், சுவாமி நித்தியானந்தாவின் கைலாசவினை 'சிஸ்டர் சிட்டி' உடன்படிக்கை மூலம், நியூவார்க் நகரத்துடன் இணைக்கும் ஒப்பந்த படம் வந்த போது, அது போட்டோஷாப் விளையாட்டு, கப்ஸா என்று பலரும் சொன்னார்கள், எழுதினார்கள்.

ஆனால் அது உண்மைதான், மேயரும், அவரது அலுவலகமும், அவிந்து போய் இருக்கிறார்கள் என்று இப்போது செய்தி வந்துள்ளது. செய்தி, வந்து 9 நாட்கள்....

சாதாரண கூகிள் தேடுதலிலேயே, இது ஒரு டுபாக்கூர் என்று தெரிந்திருக்குமே என்று பேட்டி கொடுக்கும் மக்கள் சொல்லுமளவுக்கு மேஜர் நிலைமை வந்து இருக்கிறது.

மேஜருக்கு, நம்ம நித்தி மாப்பு வைச்சான் பாரு ஆப்பு என்று சொல்லி ரசிக்க வேண்டியதுதான்.

மேஜரின் இடது பக்கம், வெள்ளை, கைகளை வைத்திருக்கும் பவ்வியம்... ஆகா ...

சமர்ப்பணம்: உடான்சு சுவாமிகள்... @goshan_che

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

The Story of Nithyananda's Enlightenment - Nithyananda Times

  • Nathamuni changed the title to மாப்பு- வச்சாண்டா ஆப்பு
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா, மாப்பு வச்சாண்டா பாரு ஆப்பு.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே உடான்ஸ் சாமி சொன்னார்- யாரும் கேட்கவில்லை.

ஆனால் சுவாமி சொல்லுவார்….

நிலாக் காய்கிறது…நேரம் தேய்கிறது…

யாரும் ரசிக்கவில்லையே…

ஆனாலும்…

நிலா காயும் 🤣

5 hours ago, Nathamuni said:

The Story of Nithyananda's Enlightenment - Nithyananda Times

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக்கும் கூட ஆதி சறுக்கும்.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

30 நகரங்களுடன் நித்தியின் 'கைலாசா' ஒப்பந்தம்: இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி? - அமெரிக்காவை உலுக்கும் கேள்வி

30 நகரங்களுடன் 'கைலாசா' ஒப்பந்தம்

பட மூலாதாரம்,TWITTER/KAILASA'S SPH NITHYANANDA

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான நித்தியானந்தா, உலகின் முன்மாதிரி நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து சாதித்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டையே உலுக்கி வருகிறது.

யார் இந்த நித்தியானந்தா?

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார் நித்யானந்தா மீதான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. பிரபல நடிகையுடன் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதன் பிறகு பெங்களூருவை அடுத்த பிடதியில் இருந்து முழு நேரமாக இயங்கத் தொடங்கிய நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டார். இதனால், எழுந்த நெருக்கடி காரணமாகத் தலைமறைவான அவர், 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அதுமுதல் அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரிய வரவில்லை.

கைலாசா என்ற தனிநாடு பிரகடனம்

தலைமறைவாக இருந்த நித்தியானந்தா 2019ஆம் ஆண்டின் இறுதியில் இந்துக்களுக்கு என கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக திடீரென அறிவித்தார்.

கைலாசாவின் இணையதளமாகக் குறிப்பிடப்படும் https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்தத் தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தைக் கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் கூறப்பட்டுள்ளது.

அவரது இருப்பிடம் எங்கே என்று இதுவரை அறியப்படாத நிலையில், இந்த இணையதளம் வாயிலாக நித்தியானந்தாவின் போதனைகள் அடங்கிய வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.

30 நகரங்களுடன் 'கைலாசா' ஒப்பந்தம்

பட மூலாதாரம்,KAILASA'S HDH NITHYANANDA PARAMASHIVAM / FB

நெவார்க் நகரத்துடன் 'கைலாசா' சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம்

சாமியார் நித்தியானந்தா எங்கே இருக்கிறார். அவர் உருவாக்கியதாகக் கூறிக்கொள்ளும் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்று தமிழ் கூறும் நல்லுலகில் அவரது பக்தர்கள் உள்ளிட்ட பலரும் தேடிய வண்ணம் இருந்தனர்.

அந்த வேளையில்தான், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி வீடியோ, புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியானது.

அந்த வீடியோவில், நெவார்க் நகரத்தில் உள்ள சிட்டி ஹாலில் அந்நகர பிரதிநிதிகளுடன், கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தியின் சீடர்கள் பெருமிதம் தெரிவித்து வந்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஐ.நா. கூட்டத்தில் கைலாசா உரையும் ஐ.நா. விளக்கமும்

அடுத்து வந்த நாட்களில், ஐ.நா. ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கைலாசா பிரதிநிதிகள் உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், "நித்தியானந்தா உண்மையிலேயே கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டாரோ? கைலாசா தனி நாடு உண்மைதானோ?" என்ற சந்தேகம் எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் உருவாகிவிட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இதையடுத்து உண்மையறிய களத்தில் இறங்கிய பிபிசி.க்கு மின்னஞ்சல் வாயிலாக ஐ.நா. பதில் அளித்தது.

"பொது விவாதங்கள் தலைப்பில் நடந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்" என்று இந்த இரண்டு குழுக்களையும் மேற்பார்வையிடும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.

இரு கூட்டங்களிலும் கைலாசா பிரதிநிதிகள் பதிவு செய்த கருத்துகள் சற்றும் பொருந்தாத வகையில் இருந்ததால் அவற்றை நிராகரிப்பதாக அவர் பதில் அளித்திருந்தார். இதன்மூலம், நித்தியானந்தா கூறிக் கொண்டபடி, கைலாசாவை தனிநாடாக ஐ.நா. அங்கீகரிக்கவே இல்லை என்பது நிரூபணமானது.

30 நகரங்களுடன் கைலாசா 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம்

கைலாசாவுக்கு ஐ.நா. அங்கீகாரம் என்ற நித்தியானந்தாவின் கூற்று பொய் என்று நிரூபணமான நிலையில்தான், அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் அதே அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது.

அதாவது, நித்தியானந்தாவின் கற்பனை தேசமான 'கைலாசா'வுடன் நெவார்க் நகரம் மட்டுமல்ல, 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பி.டி.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அமெரிக்க நகரங்கள் மேற்கே பசிபிக் கடற்கரை முதல் கிழக்கே அட்லாண்டிக் கடற்கரை வரை விரவிக் கிடக்கின்றன. வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே நகரமும் அவற்றில் ஒன்று.

"எங்கள் பிரகடனம் ஒன்றும் அங்கீகாரம் அல்ல. ஒரு விண்ணப்பத்திற்கான பதில்தான் அது. அந்த விண்ணப்பத்தில் இருந்த விவரங்களை நாங்கள் சரிபார்க்கவில்லை," என்று ஜாக்சன்வில்லே நகரம் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் நகரமான நெவார்க்கும் தற்போது பின்வாங்கியுள்ளது. இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தாவால் ஏமாற்றப்பட்டதை நெவார்க் சிட்டி ஹால் ஒப்புக் கொண்டுள்ளது.

கைலாசா என்ற நாடே இல்லை என்பதைக் கண்டுபிடித்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நெவார்க் மேயர் அறிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

கற்பனை தேசத்திடம் 30 நகரங்கள் ஏமாந்து போனது எப்படி?

அமெரிக்காவின் 30 நகரங்களுடன் கைலாசா செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலம் நிதிரீதியான பலன்கள் ஏதும் இல்லை என்றாலும், தனி நாடு என்ற நித்தியானந்தா தரப்பு கூற்றுக்கு வலு சேர்ப்பவையாக அவை அமைந்துவிட்டன.

இந்த ஒப்பந்தங்கள் தாங்கள் கூறி வந்ததை உண்மை என்று நிரூபிப்பதாக நித்தியானந்தா சீடர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர்.

கைலாசா என்பது கற்பனை தேசமே என்பது தெளிவாகிவிட்ட நிலையில், இந்தியாவில் பாலியல் வழக்குகளில் தேடப்படும் நபரான நித்தியானந்தாவின் மோசடி வலையில் அமெரிக்க நகரங்கள் விழுந்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டை உலுக்கி வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் பலவும் இதுகுறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

பிரான்ஸ், கினீ நாட்டு நகரங்களுடன் கைலாசா ஒப்பந்தம்

அமெரிக்க நகரங்கள் மட்டுமின்றி, பிரான்ஸ், கினீ, சியாரா லியோன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நகரங்களுடன் கைலாசா தேசம் இதேபோன்றதொரு கலாசார பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும், செய்திகளும் கைலாசாவின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

அத்துடன் ஐ.நா.வுக்கான கைலாசா தேசத்தின் தூதர் விஜயப்ரியா நித்தியானந்தா மரியாதை நிமித்தமாக கனடா, வங்கதேசம், காம்பியா உள்ளிட்ட பல நாட்டு தூதர்கள் சந்திக்கும் புகைப்படங்களும் அந்த பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

'கைலாசா' தனி நாடுதான் என்ற தோற்றத்தைக் கொடுக்கும் வகையிலான பதிவுகளே அந்த ட்விட்டர் பக்கத்தில் நிரம்பியுள்ளன.

நித்தியானந்தாவுக்கு பல சிறிய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பது போன்ற பதிவுகள் தென்படும் அதே பக்கத்தில், சீனாவில் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஷி ஜின்பிங்கிற்கு நித்தியானந்தா வாழ்த்து தெரிவித்திருப்பதும் ஹைலைட்டான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

'கைலாசா' கற்பனை தேசமா? நித்தி தரப்பு விளக்கம்

கைலாசா என்ற தேசம் இல்லவே இல்லை, எல்லை வரையறையே இல்லாத கற்பனை தேசம் அது என்பன போன்ற விமர்சனங்களுக்கு நித்தியானந்தா தரப்பு பதிலளித்துள்ளது.

பண்டைய அறிவார்ந்த இந்து நாகரிக தேசத்தின் மீட்டுருவாக்கமே கைலாசா தேசம் என்கிறது நித்தியானந்தா தரப்பு. சொவரெய்ன் ஆர்டர் ஆஃப் மால்ட்டா(Sovereign Order of Malta) போன்ற எல்லைகளே இல்லாத சேவை அடிப்படையிலான தேசம் இது என்றும், உலகம் முழுவதும் பல நாடுகளிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படுவதாகவும் நித்தியானந்தா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 7
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 7

சாதி, இனம், தேசம், நிறம், பாலினம் என்ற பேதங்கள் இல்லாமல் உலகின் அமைதிக்காக 'அனைவருக்குமான வாழும் அறிவொளி' என்பதையே இலக்காக் கொண்டு இயங்கி வருவதாகவும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c51j68w3gxvo

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா காமெடி பீஸ் போல தெரியவில்லை. அவர் தெளிவாகத்தான் உள்ளார். தொடர்ந்து நடப்பவற்றை அவதானிப்போம்… 👁️

  • கருத்துக்கள உறவுகள்

😂இது நியூ ஜேர்சியில் நடந்தது டபுள் வேடிக்கையான விசயம்! ஏன்?

அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களுள் மிக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் வாழும் சில மாநிலங்களுள் ஒன்று நியூ ஜேர்சி. நியூ ஜேர்சியின் சில நகரங்களில் வெள்ளையருக்கு அடுத்ததாக இந்திய வழி வந்த மக்கள் இரண்டாவது பெரும்பான்மை. பல இந்துக் கோவில்கள், தடுக்கி விழுந்த இடமெல்லாம் புரியாணிக் கடைகள்...இப்படியிருக்கத் தக்கதாக "ஒரு இந்து நாடு" என்று வந்து நுவார்க் மேயருக்கே பூச்சுத்தி விட்டான்கள்!  😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நித்தியானந்தா காமெடி பீஸ் போல தெரியவில்லை. அவர் தெளிவாகத்தான் உள்ளார். தொடர்ந்து நடப்பவற்றை அவதானிப்போம்… 👁️

மெட்டா வுக்குள் தன்னுடைய நாடூ😃 இருப்பதாய் நித்தி சொன்னாலும் சொல்லுவார் கொஞ்சம் வெயிட் பண்ணுவம் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.