Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை உள்நாட்டுப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 07-09-2007 16:02 மணி தமிழீழம் [மயூரன்]

இலங்கை உள்நாட்டுப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வு:

யேர்மனிய 3 SAT , ZDF தொலைக்காட்சிகள்

நேற்று வியாழக்கிழமை இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகிய 3 SAT , ZDF தொலைக் காட்சிகளில் சிறிலங்காவின் உள்நாட்டுப்போர் எனும் தலைப்பில் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

நல்ல ஒரு முன்னேற்றம் தனிதமிழீழம் தான் டீர்வு என்பதை விட விடுதலைப் புலிகளை தடை செய்த்து தவறு என்று ஏற்று கொண்டு இருப்பது ந்லல விடயம்...

அவர்களுக்கு நன்றி சொல்ல இணைக்கப்பட்டுள்ள லிங் வேலை செய்யுதில்லையே?

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஏயர் லங்கா விமானத்தில திக்கட் புக் பண்ணீட்டு, இப்ப கொஞ்சத்தில சீரியல் பாக்க போக வேணும். உதுக்கு எல்லாம் நேரம் இல்லை.


ஜஙரழவந யெஅநஸ்ரீ'வடிவேல் 007' னயவநஸ்ரீ'ளுநி 7 2007இ 07:42 யுஆ' pழளவஸ்ரீ'341539'ஸ

நான் ஏயர் லங்கா விமானத்தில திக்கட் புக் பண்ணீட்டுஇ இப்ப கொஞ்சத்தில சீரியல் பாக்க போக வேணும். உதுக்கு எல்லாம் நேரம் இல்லை.

ஜஃஙரழவநஸ

போய் சீரியல பாருங்கோவன் அதவிட்டிட்டு இங்க ஏன்வந்தனீங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி உங்கட கேலிச்சித்திரங்கள் சரியானது என்டு நிருபிச்சிட்டு போகத்தான்.

"தனித் தமிழீழமே தீர்வு" என்று அந்தக் கலந்துரையாடலில் எந்தக் கருத்தும் முன்வைக்கப்பட்டதாக எனது யேர்மன் மொழி அறிவுக்கு எட்டவில்லை. :)

தமிழர் விடயத்தில் நல்லதொரு முன்னேற்றம்

யேர்மன் மொழி தெரிந்தவர்கள் இந்த இணைப்பில் உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்த்துவிட்டு நீங்கள் விளங்கிக் கொண்டதை இங்கு எழுதுங்கள்: :lol:

விவரணம் தொடர்பான இணையத்தளக் கட்டுரை:

http://www.3sat.de/3sat.php?http://www.3sa...1685/index.html

காணொளிக் காட்சி (விபரணம்):

http://www.3sat.de/webtv/?/delta_070906_srilanka_16zu9.rm

காணொளிக் காட்சி (கலந்துரையாடல்):

http://www.3sat.de/webtv/?/delta_070906_konflikte1_16zu9.rm

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் குடிசைக் கைத்தொழில் இணையத் தளங்கள் பிறமொழி ஊடகங்களில் வரும் கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது தமிழர்களுக்குச் சாதகமாகலாம் என்று நம்பி சில திரிபுகளை ஏற்படுத்துகின்றார்கள். தமிழ் ஊடகங்களை மட்டுமே நம்பி இருக்கும் எம்மில் பலர் தவறான தகவல்களினால் பல விடயங்களைப் பிழையாகவே உள்வாங்கிப் பின்னர் ஏமாற்றம் அடைகின்றனர். பிழையாக வழிநடத்தும் இவ்வூடகங்கள் எப்பதான் திருந்துவார்களோ தெரியாது!

பதிவு இணையத்தளத்தில் வந்த செய்தி இதுதான்:

நேற்று வியாழக்கிழமை இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகிய 3 SAT , ZDF தொலைக் காட்சிகளில்

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் எனும் தலைப்பில் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.

இதில் தென்தமிழீழத்தில் நடைபெறும் மனித அவலம்கள் மற்றும் தமிழினப் படுகொலைகளை அரசபடைகளே

மேற்கொண்டு வருகின்றது என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்கு மூலத்துடன்

ஒளிபரப்பாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து யேர்மனிய பேராசிரியர்கள் இம் மனித அவலத்தைத் தடுப்பதற்கு என்ன வழி என

உரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். இவ்வுரையாடலில் மனித அவலத்தை தீர்ப்பதற்கு சில

தீர்வுகள் அவர்களால் முன்வைக்கப்பட்டது

1.தமிழர்களின் பாதுகாவலர்களாகவுள்ள விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது

தவறு இத்தடை மீளப்பெறப்பட வேண்டும்.

2.தமிழர்கள் நிம்மிதியாக வாழ்வதற்கு ஒரே தீர்வு தமிழீழமே இதனை தவிர்ந்த எந்த தீர்வும்

தமிழர்களை நிம்மதியாக வாழவைக்காது.

இவை இரண்டும் மிகவும் முக்கியமான விடயங்களாகும் யேர்மனி தொலைகாட்சி ஒன்றில் பகிரங்கமாக

இவ்வாறான கருத்து வெளிவந்தது இதுவே முதல் தடவையாகும்.

எனவே இத் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கும் நிகழ்ச்சித் தாயாரிப்பாளருக்கும் தமிழ்

மக்களின் சார்பாக உண்மையை எடுத்துரைத்ததிற்கு நன்றியைத் தெரிவித்து டொச் மொழியிலும்

ஆங்கிலத்திலும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவியுங்கள்.

மின்னஞ்சல் : Scobel.G@zdf.de

இந்தச் செய்தியை இப்போது நீக்கிவிட்டு, வேறொரு செய்தியை இணைத்திருக்கிறார்கள். ஆனால், செய்தியில் திருத்தம் செய்யப்பட்டது பற்றி எந்தத் தகவலையும் இணைக்கவில்லை. இதே செய்தியை பிரதியெடுத்து சிறு சிறு மாற்றங்களுடன் சங்கதி இணையத்தளம் வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி இன்னும் நீக்கப்படவில்லை.

அதற்கான இணைப்பு: இங்கு அழுத்துங்கள்

இவர்களின் இந்தச் செய்தியை நம்பி தரிசனம் தொலைக்காட்சியும் இன்று தமது இரவுச் செய்தியில் இதே பிழையான தகவலை வெளியிட்டிருந்தது. :lol:

Edited by இளைஞன்

அனைத்துலக நடவடிக்கைகளுள் ஈழத்தமிழர் விவகாரம் ஈழத்தமிழர் அல்லாதவர்களால் அதன் தீர்வைப்பற்றிச் சிலாகிக்கப்படுவது வரவேற்கத்தக்கதுதான். இவ்வாறான கருத்தாடல்கள் தமிழர் சார்பு, சார்பற்ற நிலையிலிருந்து பேசப்பட்டாலும் வேற்றுமொழியாளர்கள் தமிழர் பற்றிய அறிவதற்கு நிலைப்பாடுகளை அறிவதற்கு சந்தர்ப்பங்களுண்டு. எவ்வளவோ விடயங்கள் வெளியில் விளங்கிக்கொள்ளப்படுகின்ற விதம் மாறுபாடுடையதாகத்தானுள்ளது.

எல்லாம் நொவெம்பர் மாதம் வருகுது எண்ட கலக்கத்தில் சர்வதேசம் என்ன செய்யிறது எண்டு தெரியாத திண்டாட்டத்தின் வெளிப்பாட்டின் பிரதிபலிப்பு ஒரு சிறு சாம்பிள்தான் இப்பவே இப்பிடி எண்டா இன்னமும் 1 மாதத்தில மகிந்தவை கடவுள் தான் காப்பாத்த வேணும். ஒண்டு மாத்திரம் நிச்சயம் போன முறையே முடிவு எடுத்தாச்சு ஆனபடியா இந்த முறை அடியின் அகோரம் வரலாறு காணாததாக இருக்கும். யார் என்ன மொழியில் சிலாகிச்சாலும் நாங்கள் தமிழில் அக்கினி மழை பொழிய அறுவடை செய்வது மாத்திரம் நிச்சயம்.

யேர்மன் தொலைக்காட்சிகளில் ஒன்றான 3Sat/ZDF இல் இடம்பெற்ற இலங்கை பிரச்சனை

தொடர்பான கலந்துரையாடல்.

Part_1

Part_2

Part_3

Edited by முரசு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த செய்தி தொடர்பாக யெர்மன் மொழி நன்கு தெரிந்த ஒருவருடன் கேட்டபொழுது அவர் சொன்னார் தமிழர்கள் பற்றியதும் அவர்களிற்கான தீர்வு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பது பற்றிய ஒரு கலந்துரையாடலே தவிர இதில் தனிஈழம் என்றோ அதற்கான அங்கீகாரம் என்றோ எதுவுமே பேசப்படவில்லையென்றும் அதே நேரம் இலங்கையரசு மட்டுமல்ல புலிகளும்தான்அங்கு மனிதவுரிமைகளை மதிக்கவில்லையென்றும்புலிகள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி தொடர்பாக கொஞ்சம் உள்நுழைந்து இதுபற்றித் தேட முனைந்தபோது சாத்திரி சொன்ன தகவல்களையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

எமது தமிழீழ பிரச்சனையை முன்னேடுத்து கலந்துரையாடியிருக்கிறார்கள

ஜேர்மனிய தொலைக்காட்சி தெரிவித்தது என்ன?

ஜவெள்ளிக்கிழமைஇ 14 செப்ரெம்பர் 2007இ 05:48 ஈழம்ஸ ஜஜேர்மனியிலிருந்து தேவிகா கங்காதரன்ஸ

ஜேர்மனிய தொலைக்காட்சியான 3ளுயவ இல் கடந்த வியாழக்கிழமை (06.09.07) இரவு 21.00 முதல் 22.00 மணிவரை "முரடவரச ணுநவை" நிகழ்ச்சியில் இலங்கை பற்றிய விவரணத்தை ஒளிபரப்பியது.

தொடர்ந்து வாசிக்க http://www.eelampage.com/?cn=33391

வழமையான ஜேர்மனிய ஊடகங்களிடம் இதற்கு மேல் எதனையும் எதிர்பார்க்க முடியாது. எனவே பரப்புரையில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் இந்தப் பணியில் தொடர்ந்தும் முனைப்போடு ஈடுபட வேண்டியது அவசியம்.

ஹும்...

ஜானா

இங்கு பரப்புரைகளில் பெரும்பாலும் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு தமிழர் போராட்டம் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஜேர்மனிய மக்களுக்கு தெரிந்த கருத்துக்களையே ஒத்திருக்கின்றன எனவே இவர்களால் ஆழமாக எம் பிரச்சினைகளை ஜேர்மனிய மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடிவதில்லை. பிரசாரத்தில் ஈடுபடும் வயதில் கூடிய தமிழ் மக்களுக்கு சரியான மொழியறிவு இல்லை இவர்களாலும் அங்கு நடபெறும் கொடுமைகளை சரியாக ஜேர்மன் மொழியில் சித்தரிக்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நன்றாக யேர்மன் மொழி தெரியும். இதில் அவர்கள் தனித்தமிழீழ் மட்டுமே தீர்வு என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் பல மாதிரிகளை முன்வைக்கிறார்கள். அதில் தனித்தமிழீழமும் ஒன்று.

இனி வரும் காலங்களில் என்றாலும் எமது ஊடகங்கள் தங்களை சிறீலங்கா ஊடகத்தினிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ளட்டும்.

எனக்கு விளங்கின யேர்மனின் படி தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதில் ஜரோப்பி ஒன்றியம் தெளிவாக இருக்குது. யேர்மனி உட்பட பல ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் சுதந்திரப்பிரகடனத்தை அங்கீகரிக்க போட்டி போட்டுக் கொண்டு தயாராக இருக்கிறார்கள். புலிகளின் பொறுமை தான் பிரச்சனை இழுபடுவதற்கு காரணம். புலிகள் உந்த 4 புகழ்பெற்ற வேலிகளுக்காலும் பாச்சு மோட்டுச் சிங்களவங்களுக்கு பேதி குடுத்தா பிரச்சனை இப்பவே முடிவுக்கு வந்துவிடும். பிறகு மோட்டு வெள்ளையளும் அங்கை லைனில வந்து நிக்குங்கள் வேலை தேடி.

இந்த "பதிவு" இணையத்தள செய்தி எங்க எங்க எல்லாம் போயிருக்கோ... :unsure:

இந்த முறை "ஈழக்கிழவன்" நிகழ்ச்சியிலயும் இந்த செய்தியை நம்பி "தமிழீழம் தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரே தீர்வு" என்று யேர்மன் தொலைக்காட்சியில் நடந்த கலந்துரையாடலில் பேசப்பட்டதாக சொல்லியிருக்கிறார்கள். :D

இதுவரைக்கும் "ஈழக்கிழவன்" பார்க்காதவர்கள் இங்கு போய் பார்க்கலாம்:

http://www.yarl.com/videoclips/view_video....079e2e7e7bacc9f

தினக்குரல் செய்தி இதழிலயும் இந்தச் செய்திதான்:

இலங்கைத் தமிழரின் பிரிந்து செல்லும் உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும்

[09 - September - 2007] [Font Size - A - A - A]

*ஜேர்மனி தொலைக்காட்சி நிகழ்வில் வலியுறுத்தல்

இலங்கைத் தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜேர்மனின் இரு புகழ்பெற்ற தொலைக்காட்சிகள் நடத்திய முக்கிய நிகழ்வொன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி இரவு 9 மணிக்கு 3 சற்-சற்.டி.எவ் ஆகிய இரு தொலைக்காட்சிகள் இணைந்து, ்இலங்கையின் உள்நாட்டுப் போர்ீ எனும் தலைப்பில் விவரணப் படங்கள் காண்பிக்கப்பட்டு, சர்வதேச விவகாரங்களில் புலமைத்துவம்மிக்க பேராசிரியர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் கருத்துரைகளும் ஒளிபரப்பப்பட்டன.

ஜேர்மனியில் அதிக மக்களால் பார்வையிடப்படும் இந்தத் தொலைக்காட்சிகளில், கிழக்கில் இடம்பெறும் மனித அவலங்கள் குறித்தும் தமிழினப் படுகொலைகள் குறித்தும் விவரணப் படங்கள் காண்பிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்குமூலத்துடன் இது ஒளிபரப்பாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜேர்மனிய பேராசிரியர்கள், இம்மனித அவலத்தைத் தடுப்பதற்கு என்ன வழி என உரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். இவ்வுரையாடலில், மனித அவலத்தை தீர்ப்பதற்கு சில தீர்வுகள் அவர்களால் முன்வைக்கப்பட்டன.

1. தமிழர்களின் பாதுகாவலர்களாகவுள்ள விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது தவறு, இத்தடை மீளப்பெறப்பட வேண்டும்.

2. தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரே தீர்வு தமிழீழமே இதனை தவிர்ந்த எந்த தீர்வும் தமிழர்களை நிம்மதியாக வாழவைக்காது.

இவை இரண்டும் மிகவும் முக்கியமான விடயங்களாகும். ஜேர்மனி தொலைக்காட்சி ஒன்றில் பகிரங்கமாக இவ்வாறான கருத்து வெளிவந்தது இதுவே முதல் தடவையாகும்.

இவ்விவரணத்தில் இலங்கை அரசு தற்போது முன்னெடுத்துள்ள யுத்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என பலதரப்பட்ட விடயங்கள் காண்பிக்கப்பட்டன. அரச படைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் இந்நிகழ்வில் ஒளிபரப்பாகியது.

படையினரின் தாக்குதலினால் உறவினரை பறிகொடுத்த ஒருவர் தனது உறவினரை படையினரே படுகொலை செய்தனர் எனக் கூறினார். அரச படைகளின் ஷெல் வீச்சில் காயமடைந்த பெண்மணியொருவர், தனது காயங்களைக் காண்பித்து அரச படைகளின் ஷெல் வீச்சிலேயே தான் காயமடைந்ததாக தெரிவித்ததுடன் படையினரின் தாக்குதலிற்கு அஞ்சியே தாம் இடம்பெயர்ந்து அகதி முகாமில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அகதிமுகாமில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் காண்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த மனித அவலத்தைத் தடுப்பதற்குரிய வழி என்னவென்ற கேள்வியுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது.

இக்கலந்துரையாடலில் ஐ.நா.வில் கடமையாற்றிய சர்வதேச நிபுணரான சுமாக் தெரிவிக்கையில்;

உலக வரலாற்றை நோக்கினால் கெரில்லா இயக்கங்களை தடைசெய்வது என்றுமே வெற்றியளித்ததில்லை. அதனால், புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜேர்மனிய முன்னாள் இராணுவத் தளபதி தனது கருத்தைத் தெரிவிக்கையில், இது ஒரு பேரவலம் எனத் தெரிவித்தார்.

மேற்கொண்டு நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை அரசானது அரச பயங்கரவாதத்தை பயன்படுத்தி அரசிற்கு எதிராக செயற்படுவோரை மிகவும் கொடுமையாக நசுக்கி வருகின்றது எனவும் தமிழர் தரப்பு தமிழீழத்தை வலியுறுத்தி வரும் அதேவேளை, சிங்கள அரசு ஒற்றையாட்சிக்குள் தீர்வை முன்வைக்கிறது எனவும் இதுவே பேச்சுவார்த்தைகளில் முரண்பாட்டிற்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.

:D

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கிற எங்களின் ஊடகவியலாள அறிவுசீவிகள் எங்களை நன்றாகவே வழிநடத்துகிறார்கள். புலம்பெயர்ந்த ஊடகவியலாள அறிவுசீவிகளின் அரும்பெரும் அர்ப்பணிப்புமிக்க சேவையால் தமிழீழம் மலர்ந்து உலகமட்டத்தில் தலைநிமிர்ந்து நிற்கப்போகிறது என்பது உறுதி. உறுதி. உறுதி. :D

Edited by இளைஞன்

ஜேர்மனிய தொலைக்காட்சியான 3Sat இல் கடந்த வியாழக்கிழமை (06.09.07) இரவு 21.00 முதல் 22.00 மணிவரை "Kultur Zeit" நிகழ்ச்சியில் இலங்கை பற்றிய விவரணத்தை ஒளிபரப்பியது.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.