Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஊரில இப்ப இது தான் ரென்ட். லன்டன் போக ஒன்டரைக் கோடியாம்.

எந்த விசாவில் வருகினம்...?
ஏற்கனவே அங்கே ஸ்டூடன்ட் விசாவில் வந்தவர்கள் உழைத்துக்கொண்டே படிக்கமுடியாமல் மனிசி/மனிசனாரையும் டிபெண்டண்ட் ஆக கூட்டி வந்து முழுநேரம் அவர்களை உழைக்கவிட்டும் அதுவும் கூட காணுதில்லை என்று தலை தலையாக அடிச்சு வீடியோ போட்டுக்கொண்டிருக்கினம்.
ஒருவேளை ரிஷி சுனக் வந்து ஒட்டுமொத்தமாக படலையை திறந்துவிட்டாரோ ....?  

  • Replies 64
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்படி பார்த்தால் ஜேர்மனி இன்று தமிழர்களால் நிரம்பி வழிந்திருக்கும். :cool:
ரஷ்யா, மொஸ்கோ.ஏரோபிளொட் எண்டு வீம்புக்கு தூரம் போயிருக்க தேவையில்லை :beaming_face_with_smiling_eyes:

உண்மை தான்

ஆனால் அங்கே ஜேர்மனியில் வரம்பு  இருந்தது உழுவதற்கு என்று  நினைக்கின்றேன்😂

சரியண்ணா

நீங்கள்  தொடர்ந்து ஜேர்மனிலேயே தங்கிவிட்டீர்கள்

என்றாவது  கவலைப்பட்டதுண்டா நாடு  மாறியிருக்கலாம்  என்று???

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2023 at 08:40, விளங்க நினைப்பவன் said:

😂

அவர்கள் எல்லாம் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் கனவு கண்ட  மேற்குலக நாடுகளுக்கே ரிக்கெற் வாங்கி திட்டமிட்டபடி வந்து சேர்ந்தனர். அவர்கள் கனவு நிறைவேறிவிட்டது. அங்கே இருந்து என்ஜோய் பண்ணிகொண்டு ரஷ்யா சீனாவால்  உலக நாடுகள் முன்னேறபோகின்றன என்பதெல்லாம் நகைச்சுவைக்காக.

 

நீங்கள் எனது பதிவான பல துருவ உலக பொருளாதார கருத்திற்குதான் பதில் எழுதியுள்ளீர்களா எனத்தெரியவில்லை, நானும்  உங்கள் பதிவினை கவனிக்கவில்லை (நேரம் இன்மையால் பதிவுகளை மேலோட்டமாக பார்ப்பதால்).

இப்போது வெளியே செல்கிறேன் வந்து நேரம் இருந்தால் இன்று பதில் போடுகிறேன் இல்லாவிட்டால் பிறகு பதில் போடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2023 at 08:40, விளங்க நினைப்பவன் said:

😂

அவர்கள் எல்லாம் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் கனவு கண்ட  மேற்குலக நாடுகளுக்கே ரிக்கெற் வாங்கி திட்டமிட்டபடி வந்து சேர்ந்தனர். அவர்கள் கனவு நிறைவேறிவிட்டது. அங்கே இருந்து என்ஜோய் பண்ணிகொண்டு ரஷ்யா சீனாவால்  உலக நாடுகள் முன்னேறபோகின்றன என்பதெல்லாம் நகைச்சுவைக்காக.

 

நீங்கள் எனது பதிவான பல துருவ உலக பொருளாதார கருத்திற்குதான் பதில் எழுதியுள்ளீர்களா எனத்தெரியவில்லை, நானும்  உங்கள் பதிவினை கவனிக்கவில்லை (நேரம் இன்மையால் பதிவுகளை மேலோட்டமாக பார்ப்பதால்).

இதற்கு பதில் எழுதுவதற்கு முன் ஒரு சம்ம்பவத்தினை கூறுகிறேன் (கருத்து சிறிது நீளமாக இருக்கும் மன்னிக்கவும்).

நான் இடைநிலை கல்வியினை இடைநடுவில் நிறுத்திவிட்டேன், இந்த சம்பவம் குறிப்பிட்ட  ஆண்டில் நிகழ்ந்தாக நினைவில் உள்ளது.

வகுப்பில் ஆசிரியர் ஓடும் புளியம் பழமும் என்பதை பற்றி கூறிக்கொண்டிருந்தார், அந்த வகுப்பில் இருந்த சக மாண்வ நண்பன் ஆசிரியரிடம் தான் சில இடங்களில் சீட்டில் (பழைய அஸ்பெஸ்டஸ் கூரை) இருப்பதை பார்த்ததாக கூறினார்.

ஆரம்பத்தில் ஆசிரியர் உட்பட ஒருவருக்கும் விளங்கவில்லை நண்பர் என்ன விடயம் கூறுகிறார் என.

பின்னர் புரிந்து கொண்டோம் நண்பன் குறிப்பிடுவது ஒட்டினால் வேயப்பட்ட கூரையில் காணப்படும் புளியம்பழத்தினை பற்றி கூறுகிறார் என.

ஆசிரியர் உட்பட எல்லோரும் சிரித்தனர் ( நானும் சிரித்திருக்ககூடும்).

இது ஒருவரது Perception என்பது புரியாத ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்ட சமூகத்தின் பின்புலத்தில் வந்த எம்மால் இதனை புரிந்து கொள்ள முடிவதில்லை, அந்த மாண்வன் குறிப்பிட்ட விடயம் அறிந்திருக்கவில்லை அவரது மூளை உடனடியாக அவர் அறிந்திருந்த ஓட்டினால் வேயப்பட்ட கூரையுடன், புளியம் பழம் உள்ளே புளியம் பழத்துடனும் அதனை பாதுகாக்கும் அதன் அதன் தோலாக அதன் ஓடும் உள்ளது என்பதனை அவரது மூளை சிந்திக்கவிலை, இதனை பெரிய நகைசுவையாக பார்க்கும் நிலை காணப்பட்டது.

சில வருடங்களின் பின்னர் அதே நண்பரை பாடசாலை ச்சிருடையுடன் பார்த்தேன், உயர்தரம் கணிதம் பயில்வதாக கூறினார், சில ஆண்டுகளின் பின்னர் கேள்விப்பட்டேன் இங்கிலாந்தில் பொறியிலாளராக கல்வி பயில்வதாக.

அவரை பார்த்து சிரித்த நபர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என தெரியாது, ஆனால்  என்னை விட  பல்ப்பல மடங்கு உயர்வான நிலையிலேயே இருப்பார் என கருதுகிறேன்.

ஆரம்ப காலகட்டத்தில் காசு இல்லாத போது பண்டமாற்று முறை இருந்தது உங்களுக்கு ஒரு பொருள் தேவையானால் உங்களிடம் இருக்கும் ஒரு பொருளினை கொடுத்து அதற்கு பதிலாக உங்களுக்கு தேவையான பொருளினை வாங்கும் நிலை.

மிகுதியினை பின் தொடருகிறேன்..........................

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

எந்த விசாவில் வருகினம்...?
 

அது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றி.
நான் உங்கள் பொருளாதார கருத்திற்கு என்று எழுதவில்லை

நீங்கள் தொடாந்து எழுதுங்கள்

23 hours ago, vasee said:

நீங்கள் எனது பதிவான பல துருவ உலக பொருளாதார கருத்திற்குதான் பதில் எழுதியுள்ளீர்களா எனத்தெரியவில்லை,

 

  • கருத்துக்கள உறவுகள்

[லன்டன் போக ஒன்டரைக் கோடியாம். ]

தன்னுடைய வேலை தகுதியை காட்டி விசா எடுத்து பிரித்தானியா செல்வதற்கு அல்லது கல்வி அடிப்படையில் மாணவர் விசாவில் செல்வதற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்?  1 1⁄2  கோடி என்பது  1 1⁄2 மில்லியனை தானே

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2023 at 03:34, அக்னியஷ்த்ரா said:

அதெல்லாம் சரி அண்ணை 
ஊரில ஜீ எஸ், இன்சூரண்ஸ் கம்பெனியில் வேலை செய்தவன் இப்படி கண்டது கடியதெல்லாம் 
புஸ்ஸு புஸ்ஸு என்று குடும்பத்தோட  கிளம்பி வந்து ஹீத்ரோவில் நிண்டு பேஸ்புக்கில்  படம்போடுதுகள். இலங்கைக்கு மட்டும் ஸ்பெஷல் ரூட் ஏதும் யு.கே வில் திறந்து விட்டிருக்கினமா. சொன்னால் நாங்களும் உங்கட புண்ணியத்தில் யு கேவிற்கு விசிட் அடிப்போமில்ல   

ஸ்டூடன்ட்  விசாவில் தம்பதியினராய் வருகினம் ...குடும்பத்துடன் வந்து கணவனோ/மனைவியோ ஒருவர் படிக்க மற்றவர் முழு நேரமாய் வேலை செய்யலாம்...அத்தோடு இலங்கையிலிருந்து இத்தனை பேர் வரலாம் என்று ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள்  என்று எங்கோ கேள்விப் பட்ட நினைவு  

  • கருத்துக்கள உறவுகள்

பண்ட மாற்று முறை சரியான வகையில் செயற்படவில்லை, பெறுமதியினடிப்படையில் அதனை பங்கிடுவது தொடங்கி பல சிக்கல்களை தோற்றுவித்தது, இதனாலேயே பணம் தோற்றம் பெற்றது.

பொருளாதார வளர்ச்சி என்பது பொருள்கள் அதிகளவில் உற்பத்தியாவது ஆகும்.

ஆரம்பத்தில் பணம் அடிபடையில் முழுப்பெறுமதி கொண்ட பணமாக இருந்தது, பெரிய பிரித்தானியாவின் பணம் தங்கத்தின் பெறுமதிக்கு நிகராக இருந்தது.

உற்பத்திக்கு தேவையான வளங்களை 4 வகுப்பர்

What are the Factors of Production? definition and factors - Business  Jargons

இந்த வளங்கள் அனைத்து இடங்களிலிலும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை, ஆனால் வளங்கள் தங்கு தடையின்றி கிடைப்பதுடன் மலிவான வளங்கள் உடைய நாடுகளிலிருந்து வளங்களை பெற்றாலே அதிகளவில் உற்பத்தியினை மேற்கொள்ளலாம்.

இதனை Globalization  (திறந்த பொருளாதாரம்) எனப்படுகிறது.

உண்மையில் திறந்த பொருளாதாரம் மிக சிறந்த பொருளாதார முறையாகும் (இது தன்னிறைவு பொருளாதாரத்திற்கு எதிரானது), இதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளது என்பதினை ஏற்றுக்கொள்கிறேன்.

வளங்களை உடைய நாடுகளை போரின் மூலம் ஆக்கிரமிக்காமல் ஒரு ஒருமித்த உடன்படிக்கையில் தங்குதடையின்றிய வர்த்தகம் எவ்வாறிருக்கும் என்ற சிந்தனை இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன்பாகவே பொருளியலாளர்கள் துனையுடன் அமெரிக்கா உள்ளடங்கலாக 44 நாடுகள் 1944 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய தீர்மானம்  Bretton woods தீர்மானமாகும்.

இதில் இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டது.

IMF

IBRD

இதில் ஐ ம் எப் தொழில்பாடு வியாபார நிறுவனம் தனது வியாபாரத்தினை அதிகரிப்பதற்கு கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் அதே போலவே ஐ எம் எப் அடிப்படையில் முதலாளிகளின் பொருள்களை வாங்குவதற்கு ஏழை நாடுகளுக்கு உதவி செய்து பின்னர் அவர்களிடமிருந்து பணத்தினை வசூலிப்பது ஐ எம் எப் வேலை ஆகும்.

ஐ எம் எப் இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வினை வலியுறுத்தும் என ஊடகங்கள், அரசியல்வாதிகள் முன்னர் கூறப்பட்ட போது யாழில் அதற்கு ஐ எம் எப் என்றால் என்ன என விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. 

ஆரம்பத்தில் அமெரிக்கா தனது நாணயத்தினை தங்கத்தின் பெறுமதிக்கு ஏற்ப அச்சிட்டது (வருடந்தோறும் 1.5% அதிகரிப்பு), அமெரிக்கா நாணயத்துடன் அதற்கு இரண்டாம் நிலையில் இருந்து வாய்ப்புகளை பெற்ற ஐரோப்பிய நாடுகளின் பணம் குறித்த அளவில் peg செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அமெரிக்கா எலியும் பூனையும் (நண்பர்களாக இருந்த போது) கிழங்கில் ஆற்றைனை கடக்க முற்பட்ட வேளை நடு ஆற்றில் எலி தனது வேலையினை காட்டி கிழங்கினை உண்ணத்தொடங்கியதும் பூனை தண்ணியில் மூழ்கும் நிலை ஏற்பட்டது போல ஆரம்பத்தில் தங்க மதிப்பில் இருந்த காசினை மேலதிகமாக அச்சிட அமெரிக்க நாணயத்துடன் கூட்டு வைத்திருந்த நாணயங்களை வைத்திருந்த தேசங்கள் நட்டமடைய அவை டொலருக்கு பதில் தங்கத்தினை தருமாறு கோரினர் அத்துடன் வியட்நாம் போரில் அமெரிக்காவின் செலவு அதிகரிக்க வேறு வழியில்லாமல் பணத்தினை மேலும் அச்சிட தங்க மதிப்பு நாணயத்தினை கைவிட வேண்டிய நிலை உருவானது.

இங்குதான் fiat currency உருவானது.

அடிப்படையில் வெறும் காகிதத்திற்கு மதிப்புள்ளதாக கூறுவதாகும், முழுப்பெறுமதி நாணயத்தில் கட்டுப்பாடுகள் காணப்படும் ஆனால் முகப்பெறுமதி நாணயத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை, ஒரு நாடு தனது உற்பத்திக்கு மேலாக கடன் வாங்கி வாழ்க்கை ஓட்டுகிறது.

உதாரணத்திற்கு ஒரு சாதாரண நபரால் ஒரு மாதம் ஒரு வருசம் இவ்வாறு ஊரை ஏமாற்ற முடியும் ஆனால் ஒரு நூற்றாண்டிற்கு முடியுமா?

அமெரிக்க நாடு பொருள்கள் சேவைகளை மற்ற நாடுகளிடம் பெறிகிறது அதற்கு பதிலாக டொலரினை கொடுக்கிறது, அந்த  நாடுகள் டொலராக வைத்திருந்தால் கையில் ஒட்டியா தாராக மாறிவிடும் என்ற பயத்தில் அமெரிக்க அரசின் பணமுறிகளை அந்த டொலரில் வாங்குகிறார்கள், காகித டொலர் மீண்டும் அமெரிக்காவிற்குற் வருகிறது.

ஒருவர் தான் ஒரு முதலீட்டாளர் அதிக இலாபம் தரக்கூடிய முதலீடு உள்ளது என கூறி கடன் வாங்கி அந்த கடனுக்கு அதே கதையினை இன்னொருவரிடம் கூறி மற்றவரிடம் கடன் வாங்கி முதலாமவருக்கு வட்டி கட்டி, இப்படி பலரினை சேர்த்து ஒரு பெரிய தொகையினை அமுக்குவதனை பொன்சி ஸ்கீம் என்பார்கள்.

Ponzi Schemes: Definition, Examples, and Origins

இதில் கூறும் கருத்துகள் தவறாக இருக்கலாம், உங்கள் கருத்துகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள் மிகுதியினை பின் தொட்ருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

வளங்களை உடைய நாடுகளை போரின் மூலம் ஆக்கிரமிக்காமல் ஒரு ஒருமித்த உடன்படிக்கையில் தங்குதடையின்றிய வர்த்தகம் எவ்வாறிருக்கும் என்ற சிந்தனை இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன்பாகவே பொருளியலாளர்கள் துனையுடன் அமெரிக்கா உள்ளடங்கலாக 44 நாடுகள் 1944 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய தீர்மானம்  Bretton woods தீர்மானமாகும்.

இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே.

அனைத்து முகப்பெறுமதி நாணயமும் பொன்சி ஸ்கீம்தான் ஆனால் அமெரிக்க டொலர் அதற்கு அரசன் எனலாம்.

காரணம் முகப்பெறுமதி நாணயத்தின் பெறுமதியினை கட்டுப்படுத்துவதற்கு

Monetary policy - interest rate

Fiscal policy - Budget

என இரண்டு வகையான கொள்கைகளை கடைப்பிடிப்பர்.

அமெரிக்காவின் இந்த கொள்கைகள் பணத்தின் பெறுமதியினை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தாமல் தனது பூகோள அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதாக நான் கருதுகிறேன் இதனாலேயே பல பிரச்சினைகள் உருவாகின்றன.

மேற்கு நாடுகளில் காணப்படும் ஒரு பொதுவான விடயம் Asset inflation (Bubble).

அமெரிக்கா தனது வருமானத்திற்கு மீறிய செலவிற்கான பணத்தினை கடன் மூலம் பெறுகிறது அதற்கான வட்டிக்கு பணத்தினை பெற மேலும் கடன் பெறுகிறது (deficit spending).

இந்த நிலை தொடர்ச்சியாக நிகழ்கிறது.

2008 இல் வட்டி விகிதம் குறைவாக இருந்த காலத்தில் வீடுகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள், பணவீக்க அதிகரிப்பினை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரித்த போது பல கடஙள் முறிவடைந்தன அரசு உடனடியாக செய்த வேலை கோவிட் காலத்தில் செய்ததைப்போல கடன் வாங்கி அரச செலவினை அதிகரித்தது.

john maynard keynes இவரது துனையுடனேயே Bretton woods தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது, இவரது இன்னொரு கொள்கை தற்போதும் உலக நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்படும் போது பொருளாதாரத்தினை ஊக்குவிக்க ஏற்படுத்தும் அரச செலவு அதிகரிப்பினை அவரது பெயர் கொண்ட அழைக்கப்படுகிறது, பெரும்பாலும் இடது சாரி அரசுகளின் பாதீடு இதனடிப்படையில் காணப்படும்.

வலது சாரி அரசுகள் பொருளாதார சரிவு ஏற்படும் போது இவரது பொது செலவு அதிகரிக்கும் கொள்கையினை தமது பாதீட்டில் கடைப்பிடிப்பர்.

மிகுதி பி தொடருகிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகை செயற்பாட்டினை Quantitative easing (QE) என அழைப்பார்கள், இந்த நடவடிக்கை மூலம் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் வரலாம் இதனை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துவதனைQuantitative tightening (QT) என அழைப்பார்கள்.

அமெரிக்காவில் 2008 இல் பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வட்டி விகித அதிகரிப்பு அமெரிக்க வீட்டு கடன் கட்டணங்களை அதிகரிக்க முதலீட்டாளர்கள் கடனை கட்ட முடியாமல் முறி நிலைக்கு செல்ல அமெரிக்க பொருளாதாரம் சரிந்தது.

அந்த சரிந்த பொருளாதாரத்தினை சரிப்படுத்த QE கொண்டுவர மீண்டும் பணவீக்கம் ஏற்பட இப்படி ஒரு நச்சு வட்டம் போல நிகழ்கிறது.

அமெரிக்க அரசினால் தொடர்ந்து கடன் பெறுவதற்கு பயன்படுத்தும் பணமுறி கூட ஒரு QE மற்றும் QT கருவியாக உள்ளது.

எவ்வாறு வட்டி விகித அதிகரிப்பு மக்களின் புழக்கத்தில் உள்ள பணத்தினை குறைவடைய செய்கிறதோ அதே போல மத்திய வங்கி அரச பணமுறிகளை விற்கும் போது (QE) மக்களிடையே உள்ள பணம் குறைவடைகிறது, மறுவளமாக அரச பணமுறிகளை வாங்கும் போது (QT) மக்களிடையே பணம் அதிகரிக்கின்றது.

இவை தவிர வங்கிகளின் செயற்பாடும் பணத்தின் அளவை தீர்மானிக்கும்.

இந்த காணொளியில் எவ்வாறு Fractional reserve banking 1000 டொலரினை 10000 டொலராக்குகிறது என கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் கொண்டதே M2 money supply.

அமெரிக்க அரசு, மற்றும் அதன் மத்திய வங்களின் கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வி அந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சரிவிற்கு காரணமாக இருந்தது.

ஆனாலும் அமெரிக்க பொருளாதார சரிவு உலக பொருளாதார சரிவிற்கு காரணமாகிவிட்டிருந்தது.

உலகு 2008 இலிருந்தே பல்துருவ பொருளாதாரம்  பற்றி பேச ஆரம்பித்து விட்டது.

Globalization மிக வேகமான பொருளாதார வளர்ச்சியினை தூண்டும், அதே நேரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டல்களை அதிகரிக்கும் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும், இது ஏழை நாடுகளை மேலும் ஏழை நாடுகளாக்கும் நிலை உள்ளது.

உதாரணமாக வேலைக்கு போவது எமது வாழ்கையினை நடத்துவதற்கு தேவையான பணத்தினை பெற ஆனால் அனைவரது வாழ்க்கையிலும் அவரது வாழ்க்கையினை விட வேலைகளே முக்கியமாகிறது, முதலாளிகளின் மனம் கோணாமல் நடக்க வாழ்க்கையினை வளைக்கும் முதுகெலும்பில்லா சமூகமாக மாறிவிடுகிறோம், அதே போல் சில முதலாளித்துவ நாட்டினர் அருந்தும் கோப்பியினை உற்பத்தி செய்யும் நாட்டு உற்பத்தியாளர் 3 வேளை உணவினை உண்ண முடியாத நிலையில் அந்த கோப்பியினை மூலப்பொருளாக சொற்ப விலையில் தருவித்து அதனை மேலை நாடுகளில் வறுத்து பொதி செய்து அதிக விலைக்கு விற்பர்.

வளங்கள் விலைகள் உண்மையான நிறை போட்டி சந்தை அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை திட்டமிட்டு சுரண்ட படும் நிலைக்கு சில நாடுகள் உலகமயமாதல் எனும்  ஒரு நல்ல கொள்கையினை வளைத்து வைத்துள்ளார்கள்.

2008 சீனா,இந்தியா, இரஸ்சியா, பிரேசில், இந்தோனேசியா, தென் கொரியா உலக பொருளாதாரத்தில் 50% கொண்டிருந்தது, ஒப்பீட்டளவில் மிக குறைந்த உலக பொருளாதார பங்களிப்பினை கொண்ட அமெரிக்க பொருளாதார சரிவு உலக பொருளாதாரத்தினை சரிவிற்கு தள்ளியது.

உலக மயமாதலின் பாதகம் இது என கூறுபவர்கள் உலகில் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதாரம் உலகினை பாதிக்கும் என கூறுபவர்கள் 90 களில் உலக அளவில் பொருளாதார முன்னிலையில் இருந்த ஜப்பான் பொருளாதார சரிவு உலகிற்கு 2008 பொருளாதார சரிவு போல் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

தற்போதுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய (ஒற்றை ஆழுமை) பொருளாதாரம் உலகிற்கு நல்லதல்ல ஏனெனில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களினால் அவர்களது பொருளாதாரம் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரத்தினை 3 தலைமுறைக்கு முன்பு குடும்பத்தில் ஒருவரது உழைப்பில் ஒரு பெரிய குடும்பம் வாழ்ந்தது, இரண்டாம் தலைமுறை இரண்டு பேர் உழைப்பில் ஒரு நடுத்தர குடும்பம் வாழ்ந்த்து தற்போதுள்ள தலைமுறை இரண்டு பேர் உழைப்பிலும் கடனிலும் ஒரு சிறிய குடும்பம் வாழ்கிறது.

பொருளினை விற்பவர் பணம் பெறுவர் மறுவளமாக பொருளினை வாங்குபவர் பணத்தினை இழப்பர், ஆனால் கடனில் நிகழ்த்தப்படும்  வியாபாரங்கள் பொருளாதாரத்தினை தூண்டும் அதே நேரத்தில் Asset inflation  ஐ உருவாக்குகிறது.

2008 இல் அமெரிக்க பொருளாதாரத்திற்கு எமனாக வந்தது வீட்டுக்கடன்.

தற்போது அரச பணமுறி அமெரிக்க பொருளாதாரத்தினை மட்டுமல்ல உலக பொருளாதாரத்தினை உடைக்கப்போகிறது என நம்புகிறேன்.

அமெரிக்க  reserve currency எனும் நிலையினை இழப்பதற்கு முன்னதாக பெரும் பொருளாதார சரிவினை எதிர்கொள்ள உள்ளது, அப்போது உலக நாடுகளையும் அந்த சுழியினுள் இழுத்து அவர்களின் தோளில் ஏறி அந்த பொருளாதார சரிவிலிருந்து மீண்டுவிடும் (வழமையான நிகழ்வு).

இத்துடன் ஒற்றை ஏகாதிபத்திய திறந்த பொருளாதாரத்திற்கு (Globalization) முடிவு வரும் என நம்புகிறேன்.

கீன்ஸின் கருத்திபடி பொருளாதாரம் தன்னை தானே சரிபடுத்திக்கொள்ளும் என்றார், தற்போது பொருளாதாரம் ஒற்றை ஏகாதிபத்திய பொருளாதாரத்தினை பிந்தள்ளி பல துருவங்கொண்ட திறந்த பொருளாதாரத்திற்கு (Multi polar Globalization) நகர்ந்தால் ஒட்டு மொத்த உலகிற்கும் நன்மை.

முக்கியமாக எனது இந்த கருத்து சரியானதல்ல என்பது எனக்கு தெரியும் இக்கருத்தில் உள்ள தவறுகளை சுட்டி காட்டி எதிர் கருத்துகளை பதிந்தாலேயே ஆரோக்கியமான கலந்துரையாடல் ஆகும், ஆகவே உங்களது காட்டமான எதிர்கருத்துகளை தயங்காமல் முன் வையுங்கள்.

முடிந்தவரை இலகு மொழி நடையில் எழுத முயன்றுள்ளேன், தேவையற்ற விளக்கங்கள், கல்வி சொற்கள் என்பவற்றினை தவிர்த்துள்ளேன் என நம்புகிறேன், உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் எனது புரிதலின் அடிப்படையில் பதிலளிக்கிறேன்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

முக்கியமாக எனது இந்த கருத்து சரியானதல்ல என்பது எனக்கு தெரியும் இக்கருத்தில் உள்ள தவறுகளை சுட்டி காட்டி எதிர் கருத்துகளை பதிந்தாலேயே ஆரோக்கியமான கலந்துரையாடல் ஆகும், ஆகவே உங்களது காட்டமான எதிர்கருத்துகளை தயங்காமல் முன் வையுங்கள்.

👍 நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

👍 நல்லது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

AMF உருவாக்கம் செய்வதற்கான முயற்சி பல துருவ திறந்த பொருளாதாரத்திற்கு முக்கியமான அதேநேரம் அவசியமான விடயம், 1990 களில் ஜப்பானால் முன் மொழியப்பட்ட விடயம் மீண்டும் கருத்துருவாக்கம் பெறுகிறது.

IMF ஆசிய நாடுகளை பொறுத்தவரை ஒரு தேவயில்லாத விடயம் ஆகிவிடும்.

இது பேச்சளவில் நிற்காமல் செயல்வடிவம் பெற்றால், பல ஏழைநாடுகள் பலன் பெறும், உலகில் பஞ்சம் குறையும்.

தற்போதுள்ள பொருளாதார சமச்சீரற்ற நிலை குறைந்த ஒரு வலுவான உலக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்,

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.