Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்ய??!!

Featured Replies

என்ன செய்ய??!!

பூக்களை தருவதற்காய்

நான் வந்து கொண்டிருக்கிறேன்

மாட்டுவண்டி ஒன்றிலே

கரடு முரடான பாதையிலே

மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன்

கண்ணைப் பறிக்கும்

வண்ணம் கொண்ட

சொகுசுக் காரிலே

எனக்குப் போட்டியாக

அவர்களும் வருகிறார்கள்

வாண வேடிக்கைகள் முழங்க

சுவரெல்லாம் செய்திகள் சொல்ல

ஆடம்பரமாய்

அவர்கள் வருகிறார்கள்

நான் தருவதற்கு

பூக்களை கொண்டு வருகிறேன்

அவர்கள் விற்பதற்கு

மலத்தைக் கொண்டு வருகிறார்கள்

மக்கள் எல்லோரும்

காரை நோக்கியே

கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள்

ஓடி வந்து

தங்கத் தாம்பாளத்தில்

வைத்து அவர்கள் கொடுத்ததை

சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள்

என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான்

யாருமில்லை

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

வேறு கார்களும் என்னை முந்திச்

செல்கின்றன

சுற்று முற்றும் பார்க்கிறேன்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை

பீக்களை மொய்க்கும்

ஈக்களே தெரிகின்றன

இனி இந்தப் பூக்களை

நான் என்ன செய்ய??!!

சபேசன் மாமா சரியா துக்கபட்டு எழுதின கவிதை மாதிரி இருக்கு.............. :P

மாட்டு வண்டு மாட்டு வண்டி என்றுரைத்தாய்

வாகனம் என்றே நான் உரைத்தேன்

இல்லை இல்லை என்றுரைத்தாய்..........

நானும் வரி எழுதி பார்தேன் சரியான கஷ்டமா இருக்கு...... :lol: :P

:D அவர்கள் விற்பதை வாங்குவதற்கு ஆக்கள் இருக்கும் போது அவர்கள் விற்கத்தானே செய்வார்கள் அதோட நீங்க போனது எங்கேயோ நாறிப்போன இடம் போல இனி பூக்களை கொடுப்பதற்கு அதை வாங்குபவர் இருக்கும் இடத்தை தேடிப் போங்கள்

உ+ ம் :- கோவில் போன்ற புனித இடத்துக்கு ...

பூக்களின் அருமை தெரியாதவர்களுக்கு பூக்கொடுப்பதா.... :lol:

:lol:

:D அவர்கள் விற்பதை வாங்குவதற்கு ஆக்கள் இருக்கும் போது அவர்கள் விற்கத்தானே செய்வார்கள் அதோட நீங்க போனது எங்கேயோ நாறிப்போன இடம் போல இனி பூக்களை கொடுப்பதற்கு அதை வாங்குபவர் இருக்கும் இடத்தை தேடிப் போங்கள்

உ+ ம் :- கோவில் போன்ற புனித இடத்துக்கு ...

பூக்களின் அருமை தெரியாதவர்களுக்கு பூக்கொடுப்பதா.... :lol:

:lol:

இல்லாட்டி எனக்கு இன்னொரு யோசணை இருக்கு அண்ணா காலத்தின் மாற்றதிற்கேற்ப பிளாஸ்ரிக் பூவை விற்க பழகி கொள்ள வேண்டும்............ :P :D

  • தொடங்கியவர்

இது சோகத்தில் எழுதியது அல்ல. கோபத்தில் எழுதியது.

இவர்கள் பூக்களை வாங்காதது கூட கோபம் அல்ல.

ஆனால் ஈக்களாக நடந்து கொள்வதே கோபம்.

சின்னப் பிரச்சனை சபேசன்...

நீங்கள் கொண்டு போகும் பூக்களிலே

பீக்களின் நாற்றம்

அவர்கள் கொண்டு போகும் பீக்களிலே

பூக்களின் நாற்றம் :)

  • தொடங்கியவர்

இளைஞன் சொல்வது சரியோ, தவறோ, ஆனால் சிந்திக்க வைக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது.

ஆனால் சிந்தித்துப் பார்த்ததில் இளைஞன் சொன்னது தவறு என்று தெரிகிறது.

அவர்கள் விளம்பரம் செய்து ஆடம்பரமாய் காரில் வந்தும் தங்கத் தாம்பாளத்தில் கொடுப்பதால்தான் மக்கள் ஈக்களாகி மொய்க்கிறார்கள்.நாம் மாட்டுவண்டிலில் அல்லவா வருகின்றோம்

Edited by சபேசன்

சின்னப் பிரச்சனை சபேசன்...

நீங்கள் கொண்டு போகும் பூக்களிலே

பீக்களின் நாற்றம்

அவர்கள் கொண்டு போகும் பீக்களிலே

பூக்களின் நாற்றம் :)

:):):D:D:D:D

  • தொடங்கியவர்

இப்படித்தான் தமிழால் அழகுபடுத்தில் ஆடம்பரப்படுத்தி இராமாயணம் என்ற குப்பையை தமிழர்களுக்கு தந்தார்கள்.

அது தமிழர்களையே இழிவு படுத்தினாலும், எங்கள் தமிழர்கள் வாங்கிச் சென்றார்கள்.

அதே நேரம் மாட்டுவண்டியில் வந்த பூக்கள் போன்று எத்தனையோ நல்ல தமிழ் இலக்கியங்கள் கவனிப்பாரற்றுப் போயின.

இதை விடுங்கள்

இன்றைக்கு சினிமாவை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கிறது.

ஆடம்பரமும், விளம்பரமும், பிரமாண்டமும், உச்ச நடிகர்களும் கொண்ட, ஆனால் நச்சுக் கருத்துக்களை விதைக்கின்ற அந்நியன், சிவாஜி, உயிரே என்று தமிழ் மக்களிடம் விலை போகின்றன.

ஆனால் மண்ணையும் மக்களையும் சொல்கின்ற சினிமாக்கள் மாட்டுவண்டிலில் வருகின்ற பூக்கள் போன்று கவனிப்பார் இன்றிக் கிடக்கிறது.

இளநீர் குடித்த தேசமெல்லாம் இன்றைக்கு கோலா குடிக்கிறது. அதுவும் இதற்குள் அடங்கும்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுவண்டி - எளிமை, வறுமை

கார் - ஆடம்பரம்

உங்களுக்கு போட்டியாக வந்தது கார் மட்டுமில்லை ஈக்களும்தான்.

  • தொடங்கியவர்

கறுப்பி!

மக்கள்தான் இங்கே ஈக்களாக சொல்லப்படுகிறார்கள்.

மக்களை நோக்கித்தான் இரு தரப்பும் போகிறது. ஆனால் மக்கள் மலம் என்றாலும், அதை சொகுசுக் காரில், விளம்பரங்களோடும், ஆர்ப்பாட்டமாகவும் கொண்டு வந்து தரும்போது வாங்கி செல்கிறார்கள்.

ஆனால் ஆடம்பரம் அற்று வரும் பூக்களை கண்டு கொள்கிறார்கள் இல்லை.

மக்கள் ஈக்களாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்கிறேன்.

பூப்பறித்து தருகின்றேன்

வா தமிழா வாவென்றார்

காகிதப்பூ கொண்டு வந்து

காதினிலே சுற்றுகின்றார் :lol:

புதுக்கவிதை செய்து அவர்

புரட்டு விட்டார் புரட்சி என்றார்

தேனிருக்கும் மலர் என்றால்

தேனீக்கள் மொய்த்திடுமே :lol:

ஆடத்தெரியாதோர் அரங்கு

கோணல் என்பது போல்

கோட்டானாய் கத்திவிட்டு

குயில் பாட்டு இதுவென்பார் :P

ஈ என்று இகழ்ந்திடுவார்

இழிவான மலம் என்பார்

இணையில்லா தமிழ்த்தாயே

சிலர் கவிதை கூட நாறுதம்மா ;)

  • தொடங்கியவர்

வெற்றிவேல்!

எதிர்கருத்து என்றாலும் உங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.

இன்னும் ஒரு கவிதை தருகிறேன்

இதைப் பற்றியும் ஏதாவது எதிர்க் கவிதை தரமுடியுமா?

மழை பெய்கிறது

ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது

தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும்

ஈரத்திலேயே நிற்கிறார்கள்

ஈரத்திலேயே உட்காருகிறார்கள்

ஈரத்திலேயே நடக்கிறார்கள்

ஈரத்திலேயே படுக்கிறார்கள்

ஈரத்திலேயே சமையல்

ஈரத்திலேயே உணவு

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.

Edited by சபேசன்

பூப்பறித்து தருகின்றேன்

வா தமிழா வாவென்றார்

காகிதப்பூ கொண்டு வந்து

காதினிலே சுற்றுகின்றார் :lol:

புதுக்கவிதை செய்து அவர்

புரட்டு விட்டார் புரட்சி என்றார்

தேனிருக்கும் மலர் என்றால்

தேனீக்கள் மொய்த்திடுமே :lol:

ஆடத்தெரியாதோர் அரங்கு

கோணல் என்பது போல்

கோட்டானாய் கத்திவிட்டு

குயில் பாட்டு இதுவென்பார் :P

ஈ என்று இகழ்ந்திடுவார்

இழிவான மலம் என்பார்

இணையில்லா தமிழ்த்தாயே

சிலர் கவிதை கூட நாறுதம்மா ;)

நன்றாக சொன்னீர்கள் வெற்றிவேல். ஆடத்தெரியாதவர்கள் மேடை சரியில்லை என்று சொல்வது போல். பொதுவுடமையின் காவலர்களாகக் கருதிக் கொள்பவர்களும், பகுத்தறிவுவாதம் தமக்கே சொந்தம் என்று கொண்டாடுபவர்களும் இப்படியே ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்கத்தான் சரி. ஆக்கபூர்வமாக எதையும் செய்யப்போவதில்லை. "பாட்டாளி வர்க்கமே ஒன்றுபடுங்கள், பாசிசத் தலைவர்களை வென்றிடுவோம்" என்பார்கள் பொதுவுடமைக் காரர். "கோயில்களை உடைப்போம், பார்ப்பனர்களை எரிப்போம், பகுத்தறிவு கொண்டு பெருந்திரளாய் இணைவோம்" என்பார்கள் பெரியாரிய வாதிகள். வெற்றுக் கோசங்களும், வேலைவெட்டி இல்லாப் போராட்டங்களும் செய்து கடைசிவரை காலம் கழிப்பார்கள்.

"சிலர் கவிதை கூட நாறுதம்மா" என்று சொன்னதில் நாற்றம் என்பது நறுமணத்தையா? துர் நாற்றத்தையா? :P

  • தொடங்கியவர்

இளைஞன்!

தவறான கருத்துக்களை இங்கு பரப்பாதீர்கள். பகுத்தறிவுவாதிகள் ஒரு போதும் கோயில்களை உடைத்ததும் இல்லை. மத நம்பிக்கை உள்ளவர்களை எரித்ததும் இல்லை. அப்படிச் சொன்னதும் இல்லை.

ஆனால் கோயில்களை உடைப்போம் என்று சொல்வதும், அப்படியே உடைப்பதும், மத நம்பிக்கை உள்ளவர்களை எரிப்போம் என்று சொல்வதும், அப்படியே எரிப்பதும் மதநம்பிக்கை உள்ளவர்கள்தான். இதற்கு உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கில் சான்றுகள் உண்டு. எந்த மதத்தவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

சரி!. நான் கவிதைப் பக்கத்தில் வேறு விவாதங்களுக்குப் போகவில்லை. வேண்டுமென்றால் தனித் தலைப்பு ஆரம்பிப்போம்.

இளைஞன் நான் இன்னும் ஒரு கவிதை இணைத்திருந்தேன். அது பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்

நான் எங்க தவறான கருத்தைப் பரப்பினேன். பகுத்தறிவுவாதிகள் செய்ததாக சொல்லவில்லையே. பகுத்தறிவுவாதிகள் சொன்னார்கள் என்று தானே சொன்னேன். பெரியார் "பார்ப்பானை எரிப்போம், பார்ப்பனச்சிகளை விபச்சாரிகளாக்குவோம்" என்று சொன்னதாக சொல்கிறார்களே? "பார்ப்பானையும் பாம்மையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி" என்றும் பெரியார் சொன்னதாக சொல்கிறார்களே. அப்ப அது உண்மையில்லையா? ஓ... அல்லாட்டி பெரியார் பகுத்தறிவுவாதி இல்லையா? :lol:

மழை பெய்கிறது

ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது

தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும்

ஈரத்திலேயே நிற்கிறார்கள்

ஈரத்திலேயே உட்காருகிறார்கள்

ஈரத்திலேயே நடக்கிறார்கள்

ஈரத்திலேயே படுக்கிறார்கள்

ஈரத்திலேயே சமையல்

ஈரத்திலேயே உணவு

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.

பதில் version 1: தமிழர்களை எருமைகள், மந்தைகள், காட்டுமிராண்டிகள், ஈக்கள், வெங்காயங்கள் என்று சொல்லாவிட்டால் பகுத்தறிவுவாதிகளுக்கு நித்திரை வராதே. எருமைகள் ஏன் ஈரத்தில நிக்குதுகள்? காரணத்தை சொல்லுங்களேன். உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படவில்லை என்று சொல்கிற கவிஞர் (நீங்களா?) ஆங்கிலேயரோ? அவர் ஈரமில்லாத இடத்தில் நிற்கிறாரோ? :angry:

பதில் version 2: உலகத்தின் பெரும்பகுதி நீரினால் ஆனது. நீரிலிருந்தே உயிரினம் தோன்றியதாம் (உண்மையோ பொய்யோ யாரறிவார்). மனித உடலில் பெரும்பகுதி நீரினாலானது. நீங்கள் கழிக்கிற சிறுநீரும் ஈரம், குடிக்கிற நீரும் ஈரம். ஈரமின்றி மனிதனில்லை. ஈரமின்றித் தமிழனில்லை. உலர்ந்துவிட்டால் உயிருமில்லை. உண்மை உணரார் பகுத்தறிவுவாதிகள் :lol:

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

இளைஞன்!

பெரியார் அப்படி எங்குமே பேசியதில்லை. அவருடைய உரை முழுவதும் தொகுக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று திட்டியது, கடவுளை நம்புபவர்களை காட்டுமிராண்டிகள் என்றது, திருக்குறளை, தொல்காப்பியத்தை கண்டித்தது என்று அனைத்துமே பதிவுகளில் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்கின்ற இந்த அவதூறுகள் எங்குமே இல்லை.

இன்றைக்கு சில பார்ப்பனர்கள இணையங்களில் பெரியாரைப் பற்றி அப்படியான அவதூறுகளை பரப்புகிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.

எங்களுடைய பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னது பார்ப்பனர்களின் வேதங்கள்தான் என்ற தகவலை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

இளைஞன்! இந்தக் கவிதைக் களத்திலும் வந்து பெரியார் பற்றி விவாதிப்பதற்கு நான் விரும்பவில்லை.

உங்களிடம் உள்ள பெரியார் பற்றிய அவதூறுகளை வைத்து ஒரு தலைப்பு ஆரம்பியுயங்கள். அல்லது பெரியார் இயக்கம் பற்றிய தலைப்பில் போய் எழுதுங்கள். அங்கு வந்து பதில் சொல்கிறேன்.

சரி!

முக்கியமான விடயத்திற்கு வருகிறேன். நான் இணைத்து கவிதை பற்றி உங்களுடைய கருத்தைத் தந்ததற்கு நன்றி.

தமிழர்களை ஈரத்திலேயே நிற்கின்ற எருமைகள் என்றும், உலர்ந்த தமிழன் மருந்துக் கூட அகப்படவில்லை என்றும் சொன்ன கவிஞன் ஒரு தமிழன். ஆங்கிலேயர் அல்ல.

எனக்கு மிகவும் பிடித்த பகுத்தறிவுக்கு கருத்துக்கள் கொண்ட கவிஞர் அவர்.

சபேசன்... கவிதைப் பகுதி என்றால் விவாதிக்கக் கூடாது என்று எங்கும் இல்லைத்தானே. இது கருத்தாடல் செய்வதற்கான களம் தானே. இருந்தாலும் நீங்கள் தனித் தலைப்பாகத் தொடங்குவதென்றால் தொடங்குங்கள் :lol:

நீங்கள் இணைத்த கவிதையின் பொருளையும், எழுதிய கவிஞர் பெயரையும் சொல்லலாமே. நான் கேட்ட கேள்விக்கும் அப்படியே பதில் சொன்னால் அடியேன் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

  • தொடங்கியவர்

இளைஞன்!

பெரியார் பற்றிக் கூறிய குற்றச்சாட்டிற்கு நான் பதில் கூறிவிட்டேன். பெரியார் அப்படி வன்முறையை தூண்டுவது போன்று பேசவில்லை. பார்ப்பனர்களின் வேதங்கள் சூத்திரப் பெண்களை விபச்சாரிகளாக்கி வைத்திருப்பதைப் பற்றித்தான் அவர் பேசியுள்ளார்.

இதுதான் நீங்கள் பெரியார் பற்றிக் கேட்டதற்கு என்னுடைய பதில்.

பெரியார் பற்றி யாழ் களத்தில் பல இடங்களில் பல தiலைப்புக்களில் விவாதிக்கப்படுவதால், இங்கு அது தேவையா என்று கேட்டேன். அவ்வளவுதான். மற்றையபடி நீங்கள் தாராளமாக உங்கள் கருத்தை சொல்லலாம்.

நான் இணைத்த "தமிழர்கள் எல்லோரும் எருமைகள்" என்று கவிதை எழுதியவர் பற்றியும் கேட்டிருந்தீர்கள்.

பெரியார் கடவுளை நம்புகின்றவர்களைப் பார்த்து காட்டுமிராண்டி என்றுதான் சொன்னார். பெரியார் அவர்களை ஏதோ மனிதர்கள் என்றாவது ஏற்றுக் கொண்டார்.

ஆனால் தமிழர்களின் மூடத்தனத்தைப் பார்த்து "எருமைகள்" என்று பாடியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

சபாஸ் சரியான போட்டி

கருத்துக்களும்,எதிர்கருத்து

:lol: பாரதியா அப்படிச் சொன்னான்? இருக்காது! இருந்தாலும் பாரதி தமிழர்கள் எருமை என்று சொல்லவில்லை, எருமைகளைப் போல என்று தான் சொல்லியிருக்கிறார். பாரதி எருமை போல என்று சொன்னால் அது தமிழர்களை எருமை என்று சொல்வது போல் அமையாது. அது சமூகத்தின் மேல் இருக்கிற அக்கறையில் வருவது. தன் இனத்தின் மேல் பாரதிக்கு இருந்த ஊடல் தான் இப்படி வெளிப்படுது. தனி மனிதனுக்கு உணவில்லையெனின் இந்த யகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னால் உலகத்தை அழிக்கிறது என்று பொருளா? சமூக அக்கறையுள்ள கவிஞன், சமூகத்தில மாற்றங்கள் நிகழவேண்டும் என்று நினைக்கிற கவிஞன், அறிஞன் அவனுக்கு வருகிற கோபம் வன்முறையைத் தூண்டுகிற கோபமில்லை. சமூகத்தின் மீதான ஏமாற்றமும், சலிப்பும் சமூகத்தில் அக்கறையுள்ள பாரதியிடம் எருமைகள் போல என்ற சொல்லைப் பயன்படுத்தத் தூண்டியிருக்கலாம். அவற்றுக்கு நேரடிப் பொருள் கற்பிப்பது உங்களின் அறியாமை. அவன் என்ன நோக்கத்தோடு எந்த காலகட்டத்தில் எந்த சூழ்நிலையில் சொன்னான் என்பதையும் நீங்கள் பார்க்கவேண்டும். :angry:

கன்னடப் பெரியாரோடு நீங்கள் தமிழ்க் கவி பாரதியை ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது. சரி... ஈரத்திலே நிற்பது, ஈரத்திலே சமைப்பது, ஈரத்திலே படுப்பது என்று ஏன் பாரதி சொன்னார்? என்ன காரணத்துக்காக இப்படியொரு கவிதை எழுதினார்? அதுபற்றின தகவலையும் இணையுங்கள்.

  • தொடங்கியவர்

எருமை ஈரத்திலேதான் நிற்கும். பாரதி தெளிவாகவே எழுதியிருக்கிறார்

மழைபெய்தால் எருமைதான் சுரணை இல்லாமல் நிற்கும்.

எல்லாத் தமிழர்களும் எருமை போல் ஈரத்தில் (அதாவது சேற்றில்) நிற்கிறார்கள். உலர்ந்த தமிழனை (சேற்றில் இல்லாத தமிழனை) மருந்துக்கு கூடக் காணவில்லை.

இப்படிப் பாரதி பாடுகிறான்.

பாரதி தமிழர்களை நோக்கி கோபத்தோடு நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறான். (எம்மவர்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" பாட்டுத்தான் தெரியும்)

பார்ப்பனர்களை பெரியாரை விடக் கடுமையாக தாக்கிப் பாடியிருக்கிறான்.

நான் இணைத்த பாரதியின் பாடல் "காற்று" என்ற தலைப்பில் அவர் எழுதிய வசனக் கவிதையில் வருகிறது.

பாரதி தமிழர்களை எருமை என்று மாட்டும் சொல்லவில்லை. தமிழர்கள் எருமையாகிப் போனதற்கு யார் காரணம் என்றும் பாடுகிறார்.

ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது

தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது

நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள்

மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்' என்கிறார்கள்

ஆமடா விதிவசந்தான்

'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை' என்பது ஈசனுடைய விதி.

சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.

தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை

உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல்

இருப்பனவற்றையும் மறந்து விட்டுத்

தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை

மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்

குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?

அது அமிழ்தம்

நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால்

காற்று நன்று

பாரதியின் பாடல்களின் மூலம் "சாஸ்திரங்கள்" என்று அவர் பாடுவது அறிவியல் உருவாக்கங்களையே என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். இந்தக் கவிதை நான் இணைத்த பாரதியின் கவிதையின் தொடர்ச்சி

Edited by சபேசன்

ஈரத்தில் நிற்பதை பிழையாகச் சொல்கிறாரா பாரதி? முழுக் கவிதையையும் இணையுங்கள். இது பாரதியின் கவிதையா என்பதில் எனக்கு சந்தேகம். இது பிறகு வந்த யாரோ இடைச் செருகலாக செருகியிருக்கிறார்கள். பாரதி இப்படிச் சொல்லியிருக்கமாட்டார். இடையில் வந்தவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக செருகியதை வைத்து பாரதியின் கவிதை அது என்று சொல்லி பாரதியை நீங்கள் ஓரங்கட்டப் பார்க்கிறீர்கள். :angry:

  • தொடங்கியவர்

"காற்று" என்ற கவிதை ஒரு புத்தகம் அளவிற்கு இருக்கிறது. நான் இணைத்த கவிதை பத்தாம் பாகத்தில் இடம் பெறுகிறது. எங்காவது புத்தகமாகக் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.

அது சரி! நீங்கள் அனைவரும் எப்படி சொல்லி வைத்தது போன்று "இடைச் செருகல்" என்ற வார்த்தையை வைத்து தப்பிக்கப் பார்க்கிறீர்கள்?

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

நான் எழுதிய கவிதையில் கூட நான் எங்களின் மக்களைப் பற்றி நல்ல விதமாகத்தான் எழுதியிருந்தேன். ஆனால் நான் அவர்களை "ஈக்களாக" எழுதியது போன்று யாரோ வந்து இடையில் செருகி விட்டார்கள்.

பெரியாரும் கடவுளை நம்புபவர்களை நல்ல மனிதர்கள் என்றுதான் சொன்னார். யாரோ வந்து "காட்டுமிராண்டிகள்" என்ற சொல்லை இடையில் வந்து செருகிவிட்டார்கள்.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கடவுளே சபேசன் இங்கேயுமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.