Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல மாதங்களுக்கு பிறகு அம்மாவை பார்த்ததும் கண்ணீர் விட்டழுதேன் - ரஷ்யாவின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட உக்ரைன் சிறுவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

09 APR, 2023 | 01:16 PM
image

உக்ரைனிலிருந்து ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிற்கு கொண்டு செல்லப்பட்ட 31 சிறுவர்கள் மீண்டும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

உக்ரைன் தலைநகரில் பேருந்திலிருந்து இறங்கிய சிறுவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை கட்டித்தழுவுவதை பார்த்ததாக சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FtP-94oWwAE16uT.jpg

பலமாதகாலம் பிரிந்திருந்த துயரம் முடிவிற்கு வந்ததால் பலர் கண்ணீர்விட்டு அழுதனர் என சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் இரண்டுவார கால கோடைகால முகாமிற்கு சென்றோம் ஆனால் அங்கு ஆறுமாதகாலம் சிக்குண்டோம் என 13 வயது பொக்டன் தனது தாயை கட்டித்தழுவியபடி தெரிவித்துள்ளார்.

பேருந்திலிருந்து எனது தாயை பார்த்ததும் நான் அழுதேன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது மகிழ்ச்சியான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்

கடந்த ஆறுமாதகாலமாக தனது மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொக்டனின் தாயார் தெரிவித்துள்ளார்.

எந்த தொலைபேசி தொடர்பும் இருக்கவில்லை எனக்கு எதுவும் தெரியாத நிலை காணப்பட்டது மகனை துஸ்பிரயோகம் செய்கின்றார்களா என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் நான் காணப்பட்டேன் எனது கரங்கள் இன்னமும் நடுங்குகின்றன என தாயார் தெரிவித்துள்ளார்.

xS3LbCjP.jpg'

சேவ் உக்ரைன் என்ற மனிதாபிமான அமைப்பின்  முயற்சிகள் காரணமாகவே ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்கள் மீண்டும் தங்கள் குழந்தைகளுடன் இணைவது சாத்தியமாகியுள்ளது.

பலவந்தமாக ரஸ்யாவிற்கு நாடு கடத்தப்பட்ட சிறுவர்களை மீண்டும் பெற்றோருடன் இணைக்கும் நடவடிக்கைகளை ஐந்து தடவைகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சூட்கேஸ்கள் தங்கள் விளையாட்டுபொருட்களுடன் இந்த சிறுவர்கள் பெற்றோர்களுடன் கால்நடையாக எல்லையை கடந்து வந்துள்ளனர் இவர்களை தொண்டர்கள் பேருந்துகளில் ஏற்றி உக்ரைன் தலைநகருக்கு கொண்டுவந்துள்ளனர்.

fGVm2GJL.jpg

எங்களின் கூட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நம்பமுடியாத உணர்ச்சிகரமான காட்சிகளை நாங்கள் பார்க்கின்றோம்இசிறுவர்கள் தங்கள் சொந்த மண்ணில் தங்கள் உறவினர்களின் கரங்களை நோக்கி ஒடுவதை பார்க்கின்றோம் அவர்களின் கண்ணீரை பார்க்கும்போது எங்களின் நடவடிக்கைகள் பயன்மிக்கவை என்பதை உணர்கின்றோம் என சேவ் உக்ரைன் அமைப்பின் ஸ்தாபகர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152475

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, யுத்தத்தின் நடுவில் அகப்பட்ட சிறார் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, பெற்றோரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

நல்ல விடயம். 👍

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்ட சிறுவர்களை மீட்டுக் கொடுத்த சேவ் உக்ரேன் அமைப்புக்கு வாழ்த்துக்கள்!  💐 

Edited by வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவர்கள் பெற்றோரிடம் சேர்ந்தையிட்டு மகிழ்சி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்ட சிறுவர்களை மீட்டுக் கொடுத்த சேவ் உக்ரேன் அமைப்புக்கு

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு இருந்தால் - இவாறு, அந்த பயங்கர வாதிகளை தொடர்பு கொண்டு மீண்டும் இயற்கயான பெற்றாருடன் இணைத்து இருக்க முடியுமா?

ரஷ்யா பொறுப்பு எடுத்து கொண்ட அணைத்து குழந்தைகளுக்கும், குறிப்பு தரவுகளை வைத்து உள்ளது.

அது தவிர, பொறுப்புஎடுக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையான குழந்தைகள் ஏற்கனேவ பராமரிப்பு இல்லத்தில் இருந்தவர்கள்.

இதில் உக்கிரைன் மேட்ற்குஇடன் சேர்ந்து அரசியலாக்கி விளைவயாடுகிறது, அதாவது பெரும்பான்மையான குலந்தசைகள் பெற்றோருக்கு நடத்தி இல்லாததால் பராமரிமிப்பில் இருந்தார்கள் என்று, அனால் உக்கிரைன் ஆல் அந்த பெற்றோரின் தரவுகளை கொடுக்க முன்வரவில்லை 

இந்த குழந்தைகள், வசதியற்ற பெற்றோரின் குழந்தைகள் போல இருக்கிறது, அனால் உக்கிரைன் சொல்லும் 16. 000 மயிலான குழந்தைகளில், 30 குழந்தைகளே வசதியற்ற பெற்றோர் முன்வந்து .சொல்லி, ருசியா தோரூபி அனுப்பி வைத்து உள்ளது.

அமெரிக்காவும், uk உம், ரஸ்சியாவின் உதோயோக பூர்வம் இல்லாத un பாசத்துக்கப்பு கவுன்சிலுக்கு  விளக்கதின்  நேரடி ஒளிபரப்பை தடுத்த போதே, மேற்றுகின் குழந்தை அரசியல் கர்ண கொடூர கோர முகம் தெரிந்து விட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி, மற்ற சிறுவர்களும் விரைவில் தமது பொற்றோருடன் சேர ரசிய இராணுவமும்  சேவ் உக்ரைன் அமைப்புமும் உதவ வேண்டும் 🙏

9 hours ago, வாலி said:

பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்ட சிறுவர்களை மீட்டுக் கொடுத்த சேவ் உக்ரேன் அமைப்புக்கு வாழ்த்துக்கள்!  💐 

காமாலை கண், எப்படி இந்த சிறுவர்கள் மீண்டும் பெற்றோரிடம் வந்தடைந்தார்களென உங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை, மேற்குலக சலவை. ஏங்கே மற்ற மேற்குலக கோஷ்டி😎

பதியப்படு 18மணித்தியாலங்கள் ஆகியும் இந்த உக்ரைன் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பலர் இந்த சிறார்களின் விடுதலைக்கு மகிழ்சியடையாதின் காரணமென்னவோ,  நீங்கள் நினைப்பது நடக்கவில்லையென்றா🤔

  • கருத்துக்கள உறவுகள்

scientific american என்கிற வலைத்தளத்தில் ஈராக்கில் அமெரிக்க கூட்டு  ஆக்கிரமிப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் மீதான படுகொலைகளை விளக்கும் கட்டுரை

👇

Where Is Outcry Over Children Killed by U.S.-Led Forces?

There can be no justification for the killing of children by U.S.-led forces in Syria, Iraq and other war zones since 9/11.

https://blogs.scientificamerican.com/cross-check/where-is-outcry-over-children-killed-by-u-s-led-forces/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.