Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தலைமைத்துவம் பற்றி கேள்வி எழுப்பும் ஐரோப்பா - இந்திய வெளியுறவு கொள்கைக்கு சௌதி பாராட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவுக்கு சவுதி பாராட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஜ்னீஷ் குமார்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் உமர் சுல்தான் ஒலாமா, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை பாராட்டினார். யுக்ரேன் நெருக்கடியின் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர் வழிநடத்திய விதத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

“வரலாற்று ரீதியாக உலகம் ஒருமுனை, இருமுனை அல்லது மும்முனையாக இருந்துள்ளது. எனவே நீங்கள் எந்த தரப்பை தேர்ந்தெடுப்பீர்கள்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவருடைய பல உரைகளை நான் கேட்டிருக்கிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்தியாவும் எந்த தரப்பிலும் சேரக்கூடாது என்பது தெளிவாகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, புவிசார் அரசியல் என்பது குறிப்பிட்ட குழுக்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. வரலாற்றில் கடந்த காலத்தில் இருந்த இது போன்ற 'நடைமுறை' இப்போது இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாடு தனது நலன்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என்று உமர் சுல்தான் ஒலாமா கூறியிருந்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் செளதி அரேபிய ஆய்வாளரும் அரசியல் ஆய்வாளருமான சல்மான் அல்-அன்சாரி, இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பாராட்டினார். மேற்கத்திய நாடுகளின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது நலன்களில் சமரசம் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

 

“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நான் பாராட்டுகிறேன். இந்தியா யாருக்கும் பின்தங்கிய நாடல்ல. மேற்கு அல்லது கிழக்கு நாடுகள் என்ன விரும்புகின்றன என்ற அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியவில்லை. செளதி அரேபியாவும் இத்தகைய கொள்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதை நான் நினைக்கிறேன். இறையாண்மை கொண்ட நாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று சல்மான் அல்-அன்சாரி குறிப்பிட்டார்.

யுக்ரேன்-ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சல்மான் அல்-அன்சாரி பேசினார். “யுக்ரேன்-ரஷ்யா போரில் செளதி அரேபியாவும் இந்தியாவும் எந்த ஒரு பக்கத்திலும் தாங்கள் இருப்பதை விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் எந்த குழுவுடன் இருக்க விரும்பவில்லை. அணிதிரட்டலில் ஈடுபட்டு மேலும் பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை,” என்று அல்-அன்சாரி கூறினார்.

இந்தியாவுக்கு சவுதி பாராட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

செளதி பழைய கொள்கையை கைவிடுவது ஏன்?

“செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கையானது, தன் குடிமக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் குறிக்கோளால் இயக்கப்படுகிறது,"என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலகக் கொள்கை மாநாட்டில் செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் கூறினார்.

”செளதி அரேபியாவில் உள்ள மக்களின் துன்பங்களை எவ்வாறு குறைப்பது என்பதுதான் எங்களின் முன்னுரிமை. எங்கள் வெளியுறவு கொள்கையில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம், எங்கள் நலன்களைப் பாதுகாப்பது, கூட்டாண்மையை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காகப் பணியாற்றுவது. வளரும் நாடுகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். ஏனெனில் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த மேற்கத்திய நாடுகளின் ஆட்சேபத்திற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்,"ஐரோப்பா தனக்கு ஏற்றபடி ரஷ்யாவிலிருந்து எரியாற்றல் இறக்குமதியை குறைத்து வருகிறது. ஐரோப்பாவில் தனிநபர் வருமானம் 60 ஆயிரம் யூரோக்கள். ஆனால் இங்குள்ள அரசுகள் தங்கள் குடிமக்களுக்கான விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படுகின்றன.

இந்தியாவில் தனிநபர் வருமானம் 2000 டாலர்கள். எங்களுக்கும் எரியாற்றல் தேவை. அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஐரோப்பாவிற்கு கொள்கை மிகவும் முக்கியமானது என்றால், யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலின் இரண்டாவது நாளிலிருந்து அதாவது 2022 பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருக்க வேண்டும்,” என்று கூறினார்.

2022 பிப்ரவரி முதல் ஐரோப்பா, இந்தியாவை விட ஆறு மடங்கு அதிக எரிசக்தியை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது என்று ஜெய்சங்கர் கூறினார்.

ஜெய்சங்கரின் இந்த அறிக்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இருக்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அணிசேரா முறையில் அடித்தளமிட்டவர் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அதாவது இந்தியா எந்த ஒரு அணியிலும் சேராது.

இந்தியாவுக்கு சவுதி பாராட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய வெளியுறவு அமைச்சர் இப்போது இந்த அணிசேரா கொள்கையை மல்டி-அலைன்மென்ட் என்று அழைக்கிறார். அதாவது இந்தியா எந்த ஒரு குழுவுடனும் சேராது. தன் நலன்களுக்கு ஏற்ப எல்லா குழுக்களிடமும் தனது கருத்தை முன் வைக்கும்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு சோதனை நேரம் வந்தது. ஆனால் கடினமான காலங்களில் நேருவின் அணிசேராக் கொள்கையில் இருந்தே இந்தியா தீர்வு கண்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெய்சங்கரின் கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் யுக்ரேன் நெருக்கடியின் போது செளதி அரேபியா தனது பழைய வெளியுறவுக் கொள்கையிலிருந்து ஒரு வழியில் வெளியே வந்ததாகத் தோன்றியது. மேலும் அது அணிசேரா கொள்கையின் மூலம் தீர்வையும் கண்டது.

பனிப்போரின்போது இந்தியா சோவியத் யூனியனுடனோ அல்லது அமெரிக்க முகாமிலோ இருக்கவில்லை. ஆனால் செளதி அரேபியா கம்யூனிஸ எதிர்ப்பு முகாமில் இருந்தது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா தலைமையிலான பிராந்திய பாதுகாப்பு வலையமைப்பில் செளதி அரேபியா இடம்பெற்றிருந்தது.

ஆனால் இப்போது அமெரிக்காவுடன் கட்டுண்டு இருப்பது தனது நலன்களுக்கு ஏற்றது அல்ல என்று செளதி அரேபியா கருதுகிறது. இப்போது இந்தியாவின் அணி சேரா பாதையை அது பின்பற்றி வருகிறது. செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ’எண்ணெய்க்கு ஈடாக பாதுகாப்பு’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்தக் கொள்கை இப்போது வரலாறாகி விட்தாகத் தோன்றுகிறது.

சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) செளதி அரேபியாவும் உரையாடல் கூட்டாளியாக இணைந்துள்ளது. இது தவிர, வரும் காலத்தில் செளதி அரேபியா பிரிக்ஸ் அமைப்பிலும் இணையலாம். இந்த இரண்டு அமைப்புகளிலும் இந்தியா ஏற்கனவே முழுநேர உறுப்பினராக உள்ளது. செளதி அரேபியா SCO இல் இணைவது, பனிப்போர் கால அமெரிக்க முகாமில் இருந்து வெளியேறும் அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

”எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க விரும்பாததால், அணிசேரா கொள்கையை செளதி விரும்புகிறது. அதாவது அமெரிக்காவின் நம்பகத்தன்மை பலவீனமடைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் அதன் உதவியாளராக இருக்க செளதி விரும்பவில்லை,” என்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் அஷ்வினி மொஹபாத்ரா கூறினார்.

இந்தியாவுக்கு சவுதி பாராட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிடில் பவர் செயல் உத்தி

இந்தியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியா ஆகியவை 'மத்திய சக்தி' நாடுகளாக பார்க்கப்படுகின்றன. யுக்ரேனைத் தாக்கியதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கிற்கு ரஷ்யா சவால் விடுத்துள்ளதாகவும், அதற்கு சீனா ஆதரவளிப்பதாகவும் நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்த நடுத்தர சக்தி நாடுகள் எந்தப் பிரிவிலும் சேராமல் நன்மை பெற விரும்புகின்றன.

ஒருபுறம் யுக்ரேன் நெருக்கடிக்குப் பிறகு இந்தியா, ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துக் கொண்டே இருந்தது. மறுபுறம் அமெரிக்கா தொடர்ந்து கேட்டுக்கொண்டபோதிலும் செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்பதோடு கூட அதை குறைக்கவும் செய்தது.

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் இந்தியா, செளதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. ஆனால் அனைவரும் மறுத்துவிட்டனர். அதே மாதத்தில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க செளதி அரேபியா முடிவு செய்தது. எண்ணெய் விலை அதிகமாக இருக்கவேண்டும் என்று செளதி அரேபியா விரும்புகிறது. தனது பொருளாதாரம் எண்ணெயை சார்ந்திருப்பதை குறைக்க செளதி அரேபியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

அமெரிக்காவை கோபப்படுத்தும்விதமாக செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தது. அதன்பின் அமெரிக்க நாளிதழ் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில், ”எண்ணெய் விலையை லாப அளவில் வைக்க தேவையான அனைத்தும் செய்யப்படும் என்ற தெளிவான குறிப்பை, எண்ணெய் உற்பத்தியை குறைப்பதன் மூலம் செளதி கொடுத்துள்ளது" என்று எழுதியது. செளதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், ’செளதி ஃபர்ஸ்ட்’ என்ற கொள்கையின் கீழ் செயல்பட்டு வருகிறார்.

“மத்திய கிழக்கில் வல்லரசுகளின் போட்டி அதிகரித்து வரும் நேரத்தில், செளதி அரேபியா அமெரிக்க முகாமில் இருந்து வெளியேறுவது போல் தெரிகிறது. செளதி இனி அமெரிக்காவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று இளவரசர் முகமது கடந்த ஆண்டு தனது கூட்டாளிகளிடம் கூறினார். அமெரிக்காவுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்குரிய பலன் வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு சவுதி பாராட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா, செளதி அரேபியா மூலம் பயனடையும் ரஷ்யா

ரஷ்யாவில் இருந்தான இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 10.64 லட்சம் பீப்பாய்களை எட்டியுள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இதுவரை இவ்வளவு எண்ணெய் இறக்குமதி செய்ததில்லை. பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் 10.62 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் இறக்குமதி செய்தது. இதனுடன் கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் 68 ஆயிரத்து 600 பீப்பாய்கள் மட்டுமே எண்ணெய் இறக்குமதி செய்தது. இது இப்போதைய அளவை ஒப்பிடும்போது 24 மடங்கு குறைவு. மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 34 சதவிகிதம் ஆகும். இந்தியாவிற்கு அதிக எண்ணெய் சப்ளை செய்யும் இராக்கை விட இது இரண்டு மடங்கு அதிகம்.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து அதிபர் புதினுக்கு இந்தியா உதவுவதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இந்தியாவும் சீனாவும் ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குவதால், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பலனளிக்கவில்லை என்று மேற்குலக நாடுகள் கருதுகின்றன. இதேபோல், செளதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக் மற்றும் குவைத் ஆகியவை எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு ஒரு 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் குறைப்பதாக அறிவித்தபோது, பீப்பாய்க்கு 79 டாலராக இருந்த எண்ணெய் விலை 85 டாலராக உயர்ந்தது.

”செளதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் முடிவால் ரஷ்யா நேரடியாகப் பயனடைகிறது,” என்று ஆக்ஸ்போர்டு இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜி ஸ்டடீஸின் மூத்த ஆராய்ச்சி உறுப்பினரான அதி இம்சிரோவிக், ஃபைனான்சியல் டைம்ஸிடம், கூறினார்.

“புதினுக்கு இது ஒரு மெகா பரிசு. பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ரஷ்யா சிக்கலில் உள்ளது. நீங்கள் திடீரென்று பீப்பாய்க்கு 10 டாலர் கூடுதலாக கொடுக்கத் தொடங்குகிறீர்கள். செளதியின் இந்த பரிசை உலக நாடுகளுக்கும் வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச விரும்புவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு செய்தி வெளியானது. ஆனால் இருவரும் பேச மறுத்துவிட்டனர்.

இந்தியாவுக்கு சவுதி பாராட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐரோப்பாவிலும் அமெரிக்கா குறித்த கேள்விகள்

அமெரிக்க தலைமைத்துவம் குறித்த கேள்வி மேற்கு ஆசியாவில் மட்டும் எழுப்பப்படவில்லை, அதன் தாக்கம் ஐரோப்பாவிலும் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 5 முதல் 7 வரை சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவைப் பின்பற்றும் முன் ஐரோப்பா தன்னைத்தானே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீன சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஐரோப்பிய செய்தித்தாள் பொலிட்கோவுக்கு அளித்த பேட்டியில் மக்ரோன், கூறியிருந்தார். ”தைவான் ஐரோப்பாவுடன் தொடர்புடைய பிரச்சனை அல்ல. அமெரிக்கா-சீனா சண்டையில் ஐரோப்பா எந்த தரப்பையும் ஆதரிக்கக்கூடாது,” என்று மக்ரோன் கூறினார். யுக்ரேன் நெருக்கடிக்கு ஐரோப்பா தீர்வு காணத் தவறிவிட்ட நிலையில் தைவான் விவகாரத்தில் என்ன தீர்வை வழங்க முடியும் என்று பிரான்ஸ் அதிபர் கேள்வி எழுப்பினார்.

மக்ரோனின் இந்த அறிக்கை ஐரோப்பாவில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. மக்ரோனின் கருத்து குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஒரு தலையங்கத்தில், "பிரான்ஸ் அதிபர் இந்த அறிக்கை மூலமாக எந்த உதவியையும் பெறப் போவதில்லை. மக்ரோனின் இந்த அறிக்கை மேற்கு பசிபிக் பகுதியில் சீனாவிற்கு எதிரான ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை பலவீனப்படுத்தும். இதனுடன், அமெரிக்கா ஐரோப்பாவில் தனது அர்ப்பணிப்பைக் குறைக்க வேண்டும் என்று கோரிவரும் தலைவர்களின் பிரச்சாரம் அமெரிக்காவில் வலுப்பெறும். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்பை மீண்டும் பார்க்க விரும்புகிறாரா என்று ஜோ பைடன் மக்ரோனிடம் கேட்க வேண்டும்,” என்று எழுதியது.

புதின் ஆரம்ப கட்டத்தில் ஐரோப்பாவுடன் நல்லுறவை விரும்பினார். ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நுழைவுக்குப் பிறகு, விஷயங்கள் மிகவும் சிக்கலானதாக மாறியது. ஜெர்மனி முதல் பிரான்ஸ் வரை பல நாடுகளும் யுக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு எதிராக உள்ளன. ”யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஏஞ்சலா மெர்க்கலும் ஒருவிதத்தில் காரணம். ஏனெனில் அவர் 2008 இல் யுக்ரேனை நேட்டோவில் சேரவிடாமல் தடுத்தார்,” என்று கடந்த ஆண்டு ஏப்ரலில் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

இந்தியாவுக்கு சவுதி பாராட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெர்க்கலின் அலுவலகம் இதற்கு எழுத்துப்பூர்வ பதிலை அளித்து தன் முடிவை நியாயப்படுத்தியது. யுக்ரேன் ஆழமாக பிளவுபட்டிருப்பதாலும், பரவலான ஊழல் இருப்பதாலும் நேட்டோவில் அந்த நாடு சேர்வதை தான் நிறுத்திவிட்டதாக மெர்க்கல் கூறினார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 14 வது மாதமாக நீடிக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்பது குறித்து ஐரோப்பா விவாதித்து வருகிறது. யுக்ரேன் தொடர்பாக அமெரிக்காவின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த மேற்கு நாடுகளும் ஒன்றுபட்டதாகத் தோன்றியது. ஆனால் இப்போது அமெரிக்கா குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கடந்த ஐந்து மாதங்களில், மூன்று முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டதில் இருந்து இது தெளிவாகிறது. ஜெர்மன் அதிபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவுக்கு சென்றிருந்தார். ஸ்பெயின் பிரதமர் இந்த ஆண்டு மார்ச் மாதமும், பிரான்ஸ் அதிபர் கடந்த வாரமும் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டனர்.

https://www.bbc.com/tamil/articles/cjky452nn0xo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகிற்கு மேலும் மேலும் சினைத்தை கூட்டும் செய்திகள்.:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் காலங்களில் "Mohammed bin Salman Al Saud" மீது  கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் 🤣

1 hour ago, Kapithan said:

எதிர்வரும் காலங்களில் "Mohammed bin Salman Al Saud" மீது  கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் 🤣

எவ்வாறு,ஊடகவியலாளர்Jamal Khashoggi இனை Mohammed bin Salman Al Saud கொன்றது போன்றா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

எவ்வாறு,ஊடகவியலாளர்Jamal Khashoggi இனை Mohammed bin Salman Al Saud கொன்றது போன்றா?

ஏற்கனவே அவரின் மைத்துனர் அரசைக் கைப்பற்ற முனைந்து, கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டிருந்தார். பின்னர், அவரின் சொத்துக்கள் பறிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. 

உள்ளிருந்தே கொல்லும் வியாதி.

😉

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

எவ்வாறு,ஊடகவியலாளர்Jamal Khashoggi இனை Mohammed bin Salman Al Saud கொன்றது போன்றா?

ஆக குறைந்தாது President Biden வெளிப்படையாக சொல்லி இருந்தார் சவூதிக்கு தண்டனை அமெரிக்கா கொடுக்கும் என்று.

கேள்வி, வேடிக்கை  என்னவென்றால், இந்த தண்டனை அமெரிக்காவின் விருப்புக்கு ஏற்ப சவூதி வெளிவிகாரம், பொருளாதார கொள்கைகளில் ஒழுகவில்லை என்று. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை விட்டு விலகி சீனாவை நெருங்குகிறதா செளதி? பட்டத்து இளவரசரின் கனவு என்ன?

சவுதி இளவரசர் சல்மானின் கனவு என்ன?

பட மூலாதாரம்,CHINA DAILY VIA REUTERS

 
படக்குறிப்பு,

இரான் - செளதி அரேபியா ஒப்பந்தத்தை செய்து வைக்கும் சீனாவின் உயர்மட்ட தூதாண்மை அதிகாரி வாங் யீ.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

2022 மார்ச் 10 ஆம் தேதி செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் தூதாண்மை உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த இரு நாடுகள் மீது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த உலக முறைமை மீதும் இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் இருக்கும்.

இந்த ஒப்பந்தம் எந்தவொரு மேற்கத்திய நாடுகளின் மத்தியஸ்தத்துடனும் செய்யப்படவில்லை, இது சீனாவின் மத்தியஸ்தத்துடனேயே நடந்துள்ளது. அமெரிக்காவுடனான சீனாவின் உறவு கடந்த பல ஆண்டுகளாக பதற்றமாக உள்ளது.

இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே மதம் மட்டுமின்றி அரசியல் வேறுபாடுகளும் இருந்து வந்துள்ளன. செளதி அரேபியா மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஒரு முடியாட்சியாக இருக்கும்போது, இரான் ஒரு இறைமை ஆட்சி நாடு அதாவது மத நடைமுறை உள்ள நாடு.

அமெரிக்கா தனது எதிரிகளின் பிரிவில் இரானை வைத்திருக்கிறது.

 

யுக்ரேன் போரின் போது இரான் ரஷ்யாவை ஆதரித்தது. இதன் காரணமாகவும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் அதன் மீது கோபமாக உள்ளன.

இதனுடன் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்காக, இரான் மற்றும் செளதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக யேமனில் சண்டை இருந்து வருகிறது.

ஆனால் இப்போது இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதன் பெருமை செளதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுக்குச் செல்கிறது. அவர் எம்பிஎஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

செளதி அரேபியா தொடர்பாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதாவது எம்பிஎஸ்ஸின் கனவு என்ன என்பதை இந்த வாரம் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

முகமது பின் சல்மான் யார்?

செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் 2015இல் ஆட்சியில் அமர்ந்தபோது அது ஒரு எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. ஏனெனில் அவர் ஏழு சகோதரர்களில் இளையவர் மற்றும் வாரிசுரிமைக்கு மிகக் குறைந்த உரிமையைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வரும் போது அவருக்கு வயது எண்பது.

அவர் செளதி அரேபியாவின் சிம்மாசனத்தில் அமர்ந்தவுடன் பட்டத்து இளவரசரை நியமிப்பது அவரது முதல் பொறுப்பாக இருந்தது. அவர் தனது மூன்றாவது மனைவிக்கு பிறந்த மூத்த மகனான முகமது பின் சல்மானை தனது வாரிசாக அறிவித்தார். செளதி அரேபியாவில் இறுதி முடிவெடுப்பவராக தற்போது அவர்தான் பார்க்கப்படுகிறார்.

இளவரசர் முகமது பின் சல்மானின் வயது ஏறக்குறைய முப்பது. MBS தொடர்பான எங்கள் முதல் நிபுணர், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் மத்திய கிழக்கு நிருபர் ஸ்டீபன் கெய்லின். இளவரசரின் இளமை அவரது தலைமைத்துவ பாணியில் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

"எம்பிஎஸ், மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்தவர். நவீன தொழில்நுட்பம் மற்றும் போக்குகளை நன்கு அறிந்தவர். செளதி அரேபியாவின் மக்கள் தொகையில் எழுபது சதவிகிதம் பேர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள். எம்பிஎஸ் தன்னை அவர்களின் பிரதிநிதியாகப் பார்க்கிறார். அவர் அவர்களை ஈர்க்க விரும்புகிறார். அவர்களை மனதில் வைத்துக்கொண்டு முடிவுகளை எடுக்க விரும்புகிறார்,” என்றார் அவர்.

தனது இமேஜை மனதில் வைத்துக்கொண்டு செளதி அரேபியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்க எம்பிஎஸ் திட்டம் வகுத்துள்ளார். கச்சா எண்ணெய் நாட்டின் முக்கிய ஏற்றுமதியாகும். நாட்டின் பொருளாதாரம் அதை சார்ந்திருப்பதை குறைக்க அவர் விரும்புகிறார்.

"2016 ஆம் ஆண்டில், அவர் 'விஷன் 2030' என்ற முன்னோடி பொருளாதார மற்றும் சமூக மாற்றத் திட்டத்தை அறிவித்தார். இதன் கீழ் அவர் பொருளாதார மற்றும் சமூக தாராளமயமாக்கல் இலக்குகளை அமைத்துள்ளார்." என்று ஸ்டீபன் கெய்லின் கூறுகிறார்.

சவுதி இளவரசரின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம்,REUTERS/ WALEED ALI

தொழில்துறையில் செளதி அரேபியா வளர்ச்சியடைய, தொழிலாளர் மற்றும் பொதுத்துறையில் பெண்கள் சேர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்காக மகளிர் தொடர்பான விதிகளை தளர்த்த எம்பிஎஸ் முடிவு செய்தார்.

"பெண்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முன்பும் சேரலாம். ஆனால் அவர்கள் வேலை செய்வது தொடர்பாக நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. செளதி அரேபியாவின் தொழிலாளர் படையில் பெண்கள் சுமார் 37 சதவிகிதம் உள்ளனர். முன்னதாக அவர்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே அவர்கள் வேலைக்கு செல்ல ஒரு டிரைவர் தேவைப்பட்டார். இப்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு விட்டது. பெண்கள் தாங்களாகவே வாகனத்தை ஓட்டிக்கொண்டு வேலைக்குச் செல்லலாம்,"என்று ஸ்டீபன் கெய்லின் தெரிவித்தார்.

இந்த முடிவுகள் நாட்டின் பல சமூக மரபுகளை உடைத்துவிட்டன என்பது வெளிப்படையானது. இந்த முடிவுகள் தொடர்பாக மதத் தலைவர்கள் அல்லது பிற துறைகளில் இருந்து வரும் எதிர்ப்பை நசுக்க MBS தயாராக இருந்தார். நாட்டின் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க பிரிவினர் மீதும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அவர் விரும்பினார்.

2017 ஆம் ஆண்டு நவம்பரில் தலைநகர் ரியாத்தில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் நாட்டின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க 200 க்கும் மேற்பட்டவர்களை அவர் தடுப்புக்காவலில் வைத்தார். தாங்கள் தாக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் இவர்களில் பலர் பின்னர் குற்றம் சாட்டினர்.

இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை உலக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் நாட்டின் மீது இளவரசர் சல்மானின் பிடி வலுவடைந்தது.

இந்த சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, MBS வாரிசு வரிசையில் தனக்கு முன்னால் இருந்த தனது மூத்த உறவினரை வெளியேற்றியதுடன், பல மதத் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்ததாக ஸ்டீபன் கெய்லின் கூறுகிறார். அவர் தனது அதிகாரத்திற்கு ஏற்படக்கூடிய எல்லா வகையான சவால்களையும் முடித்து வைத்தார்.

ஆனால் அதற்குப் பிறகு நடந்தவை அவரை மேற்கத்திய நாடுகளுடன் மோதல் பாதையில் கொண்டு சேர்த்தன.

2018 அக்டோபரில் செளதி அரசின் விமர்சகரும் பத்திரிகையாளருமான ஜமால் கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச சமூகம் இந்த படுகொலைக்கு எம்பிஎஸ் மீது குற்றம் சுமத்தியது.

"அந்த சம்பவம் அவரது நற்பெயர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது செளதி அரேபியாவில் நடந்த, முன்பு கண்டுகொள்ளப்படாமல் இருந்த பிற மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. கஷோகியின் கொலைக்குப் பிறகு, கருத்து சுதந்திரத்தை தடுக்கும் நிகழ்வுகள் மீதும் மக்களின் கவனம் திரும்பியது,” என்று ஸ்டீபன் கெய்லின் குறிப்பிட்டார்.

செளதி அரேபியாவில் அதிக சுதந்திரம் கோரும் பெண்கள் கடுமையாக தண்டிக்கப்படுவது குறித்தும் பேச்சு தொடங்கியது. மறுபுறம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரே நாளில் 81 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு விசாரணையின்றி கொல்லப்பட்டனர்.

இதை மேற்கத்திய நாடுகள் கவனித்தன. உலக கால்பந்து சங்கமான ஃபிஃபா, 2023 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளுக்கான, செளதி அரேபிய சுற்றுலா நிர்வாகத்தின் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்தது.

ஆனால் இந்த நிகழ்வுகள் MBS இன் பொருளாதார தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை பாதிக்குமா?

திரவ தங்கத்தின் இருப்பு

செளதி அரேபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வியத்தகு திருப்புமுனை 1938 இல் ஏற்பட்டது. அங்கு மிகப்பெரிய எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு அடுத்த தசாப்தங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானித்தது.

பில் ஃபாரன் பிரைஸ், எண்ணெய் எரியாற்றல் சந்தைகளின் ஆய்வாளர் ஆவார்.

"செளதி அரேபியாவில் அதிக எண்ணெய் இருப்பு உள்ளது என்பது காலப்போக்கில் நிரூபிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் தொழில்மயமாக்கலின் எரிபொருளாக எண்ணெய் இருக்கும் என்பதும் தெளிவாக தெரிந்தது. இந்தத் தேவையை பூர்த்தி சேய்யும் ஒரு நாடாக உலக பொருளாதாரத்தில் செளதி அரேபியா ஒரு முக்கிய இடத்தைப்பிடித்தது,” என்று அவர் கூறினார்.

1970கள் மற்றும் 1980களில், எண்ணெய் ஏற்றுமதியின் வருமானம் காரணமாக செளதி அரேபியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. நாட்டின் தேசிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான செளதி அராம்கோ இன்று உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.

"இந்த நிலைக்கு வர செளதி அரேபியா, மிகவும் வணிக ரீதியாக இயங்கும் செளதி அராம்கோ நிறுவனத்தை உருவாக்கியது. இதனிடம் எண்ணெய் உற்பத்தி மற்றும் வளர்ச்சியில் ஏகபோக உரிமை உள்ளது. இது நாட்டில் வேலைவாய்ப்பை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் இந்த நிறுவனம் எண்ணெய் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்தப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும் முதலீடு செய்துள்ளது,” என்று நிறுவனத்தின் பயணம் பற்றி, பில் ஃபாரன் பிரைஸ் கூறுகிறார்.

செளதி இளவரசரின் கனவு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவான OPEC இன் நிறுவன உறுப்பினராக இருப்பதால் செளதி அரேபியா, இப்போது பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது.

செளதி அரேபியா எப்போதுமே உலகில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது என்று பில் ஃபரோன் பிரைஸ் கருதுகிறார். தற்போது இப்பணியை இன்னும் சிறப்பான முறையில் அந்த நாடு செய்து வருகிறது.

உலகின் மொத்த எண்ணெய் இருப்புக்களில் பத்து சதவிகிதம் செளதி அரேபியாவில் உள்ளது. இதன் காரணமாக அது எண்ணெயின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களுடன் அதாவது மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சமீப காலமாக அது, சீனாவில் பெரிய பெட்ரோ கெமிக்கல் ஆலைகளை அமைக்கும் கிழக்கு நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளது.

"செளதி அரேபியாவுக்கும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அறிகுறி இது. செளதி அரேபியாவிற்கும் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆழமான உறவு இப்போது இல்லை என்றே சொல்லலாம்,” என்று இந்த மாற்றம் குறித்து பில் ஃபரோன் பிரைஸ் குறிப்பிட்டார்.

பல தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் செளதி அரேபியா மற்றும் இரான் இடையேயான வரலாற்று ஒப்பந்தம் இதற்கு சான்றாகும்.

"இது சீனாவின் லட்சியங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல் இந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு இப்போது இருதரப்பு அல்ல, மற்ற நாடுகளுடன் பலதரப்பு வர்த்தக உறவுகளை ஏற்படுத்த விரும்புகிறது என்பதைக்காட்டுகிறது. பொருளாதாரத்தின் பிற துறைகளையும் மேம்படுத்தும் வேலைகளை பட்டத்து இளவரசர் தொடங்கியுள்ளார்,” என்று பில் ஃபாரோன் பிரைஸ் கூறுகிறார்.

பட்டத்து இளவரசரின் தொலைநோக்குத் திட்டம் 2030

எம்பிஎஸ்ஸின் 'விஷன் 2030' திட்டத்தைப் பற்றி சாட்ஹாம் ஹவுஸின் துணைத் தலைவரும் மத்திய கிழக்கு நிபுணருமான சனம் வக்கீலிடம் பேசினோம்.

"விஷன் 2030, 2016-17 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எண்ணெய் ஏற்றுமதி மீதான செளதி அரேபியாவின் சார்பை குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை பன்வகைப்படுத்துவதாகும்.

நாட்டில் பிற தொழில்களை மேம்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் தனியார் தொழில்களை மேம்படுத்துதல் இதில் அடங்கும். இதன் மூலம் அவர்கள் நாட்டில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் மற்றும் அரசின் சுமையை குறைக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் நேரடியானதாகவும் தர்க்கரீதியானதாகவும் தோன்றுவதைவிட இந்தப்பணி மிகவும் சிக்கலானது.

"இது சவாலான பணி. பொருளாதாரத்தை அரசு திடீரென பன்முகப்படுத்த முடியாது. அதற்கு முன் இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அன்னிய முதலீட்டை ஈர்க்க வேண்டும். தொழில்துறையில் மக்களின் நாட்டத்தை வளர்க்க வேண்டும். இதற்கெல்லாம் நாடு தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும். ஒழுங்குமுறை சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இவை அனைத்தும் விஷன் 2030 இன் ஒரு பகுதியாகும்,"என்று சனம் வக்கீல் கூறினார்.

விஷன் 2030 இன் கீழ், ஒரு அதிநவீன நகரமான நியான் சிட்டியை உருவாக்கும் திட்டமும் பட்டத்து இளவரசருக்கு உள்ளது, அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. நியான் சிட்டி என்பது எம்பிஎஸ்ஸின் யோசனை என்றும், 2045ஆம் ஆண்டுக்குள் தொண்ணூறு லட்சம் மக்களை இந்தப் பிரமாண்ட நகரத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் சனம் வக்கீல் கூறுகிறார்.

சவுதி இளவரசரின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம்,REUTERS/AHMED YOSRI

இது குறித்து சனம் வக்கீலுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. "நியான் சிட்டி என்பது எம்பிஎஸ்ஸின் கனவு. பறக்கும் கார்கள், அதிநவீன வசதிகள், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் கட்டிடங்கள் என நீங்கள் கனவு காணக்கூடிய அனைத்தையும் கொண்ட நகரமாக இது இருக்கும். பாலைவனத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நகரமாக இருக்கும். ஆனால் இது நிஜத்தில் இப்படி கட்டப்படுமா அல்லது கற்பனையில் மட்டுமே இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. செளதி அரேபியாவிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளிலும் இதுபோன்ற புதிய நகரங்களுக்கான திட்டங்கள் உள்ளன. ஆனால் இது போன்ற நகரங்களை கட்டமுடியவில்லை,” என்றார் அவர்.

ஒரு வகையில் நியான் சிட்டி, விஷன் 2030 இன் முழு வரைபடமாகும். இது மனித நாகரிகத்தில் ஒரு புரட்சியாக முன்னிறுத்தப்படுகிறது. அங்கு மிக அதிக முன்னுரிமை பெற்ற மக்கள் இருப்பார்கள். ஆனால் அதன் கட்டுமானத்தினால் இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் இருப்பதோடுகூடவே அதை எதிர்ப்பவர்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்களும், நாட்டின் மனித உரிமை மீறல்களும் இத்திட்டத்திற்கான வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடையூறாக உள்ளன. ஆனால் செளதி அரேபியா உலகில் தனது முத்திரையை பதிக்க வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரிட்டனின் நியூ கேஸில் யுனைடெட் கால்பந்து கிளப் இப்போது செளதி அரேபியாவின் கைகளில் உள்ளது. இப்போது செளதி அரேபியாவின் கண்கள், இருபது பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் மீது உள்ளதாகவும் வதந்திகள் உள்ளன. செளதி அரேபியாவின் ஆட்சி மீதான எம்பிஎஸ்ஸின் உரிமைகோரல், இந்த மாற்றங்களின் வெற்றியைப் பொருத்து இருக்கும் என்று சனம் வக்கீல் கூறுகிறார்.

சவுதி இளவரசரின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம்,NEOM.COM

 
படக்குறிப்பு,

இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 இன் படி, ’நியோம்’ எதிர்காலத்திற்கு ஏற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக இருக்கும்

உலக அரங்கில் செளதி அரேபியா

செளதி அரேபியாவின் எதிர்காலத் திட்டங்களில் இந்த ஒப்பந்தம் என்ன பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ள, செளதி அரேபிவுக்கும் இரானுக்கும் இடையிலான சமீபத்திய தூதாண்மை ஒப்பந்தத்திற்குத் திரும்புவோம்.

எங்கள் நிபுணரான டினா அஸ்ஃபாண்டியாரி, சர்வதேச நெருக்கடி குழுவின் மூத்த மத்திய கிழக்கு ஆலோசகர் ஆவார். "இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கிற்கு மிகவும் முக்கியமானதாக நிரூபணமாகக்கூடும். இரானும் செளதி அரேபியாவும் பல தசாப்தங்களாக இந்த பிராந்தியத்தில் பரஸ்பர போட்டியாளர்களாக உள்ளன. கடந்த காலங்களிலும் இருவருக்குமிடையிலான தூதாண்மை உறவுகளை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் இருவருக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. எனவே என்ன நடக்கிறது என்பதை நாம் சில மாதங்களுக்கு பொருத்திருந்து பார்க்க வேண்டும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் மேற்கத்திய நாடுகளின் கவலைக்கு முதல் காரணம் சீனா இந்த ஒப்பந்தத்தை செய்து வைத்ததுதான். இரண்டாவது கவலை என்னவென்றால், இரானின் மேற்கத்திய நாடுகளுடனான உறவு ஏற்கனவே மோசமாக இருந்தது. அந்த நிலையில் யுக்ரேன் போரில் அது ரஷ்யாவுக்கு உதவுகிறது.

டினா அஸ்ஃபாண்டியாரி இந்த நிகழ்வை முக்கியமானதாக கருதுகிறார்.

"அமெரிக்காவுடனான அதன் உறவுகள் ஏற்கனவே ஏற்ற இறக்கங்களைக்கொண்டதாக இருக்கும் நிலையில், செளதி அரேபியா சீனாவுக்கு நெருக்கமாகச்செல்வது மிகவும் முக்கியமானது. செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறது, அதே நேரத்தில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை வகுக்கவும் விரும்புகிறது. அதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என்று தோன்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில் அது மற்ற நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சீனா அதற்கு முக்கியமானது." என்று அவர் சுட்டிக்காட்டினார்.

செளதி அரேபியா தொடர்பான, செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் திட்டம் என்ன என்ற நமது முக்கிய கேள்விக்கு வருவோம். எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பன்மயப்படுத்த அவர் விரும்புகிறார். இதற்கு சமூகத்தை தாராளமயமாக்கி தனியார் துறையை வளர்க்க வேண்டும். அதே நேரத்தில் இரானுடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.

” இரானுடனான செளதி அரேபியாவின் ஒப்பந்தம் MBS-ன் திட்டங்களின் பாதையில் செல்கிறது. அவர் ஒரு செல்வாக்கு மிக்க மற்றும் சுதந்திரமான தலைவராக தனது இமேஜை உருவாக்க விரும்புகிறார். செளதி அரேபியாவை உலகில் செல்வாக்குமிக்க நாடாக மாற்ற விரும்புகிறார். இதற்காக அவர் பல நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புகிறார். அவர் அதை புத்திசாலித்தனமாகச் செய்கிறார்,” என்று டினா அஸ்ஃபாண்டியாரி குறிப்பிட்டார்.

”அதே சமயம் நாட்டிற்குள் தனது அதிகார பிடியை வலுப்படுத்த எதிரிகளை நசுக்குகிறார். இதன் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் கோபம் நிலவுகிறது. இப்போது கிழக்கு நாடுகளை குறிப்பாக சீனாவை நோக்கி செளதி திரும்புவதற்கு இதுவே காரணம்.”

ஆனால் இஸ்ரேல் அதை எப்படிப் பார்க்கும், அதற்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதைப் பொருத்தே அவருடைய திட்டம் அமையும். இஸ்ரேல் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cx9x9dzg7x1o

  • கருத்துக்கள உறவுகள்

”அதே சமயம் நாட்டிற்குள் தனது அதிகார பிடியை வலுப்படுத்த எதிரிகளை நசுக்குகிறார். இதன் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் கோபம் நிலவுகிறது. இப்போது கிழக்கு நாடுகளை குறிப்பாக சீனாவை நோக்கி செளதி திரும்புவதற்கு இதுவே காரணம்.”

அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக  சவுதி  அரேபியா எப்படி  இருக்கமுடியும் என்ற  கெள்வி  அண்மையில் இங்கே எழுப்பப்பட்டது

இதோ பதில்...

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

அதே சமயம் நாட்டிற்குள் தனது அதிகார பிடியை வலுப்படுத்த எதிரிகளை நசுக்குகிறார். இதன் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் கோபம் நிலவுகிறது. இப்போது கிழக்கு நாடுகளை குறிப்பாக சீனாவை நோக்கி செளதி திரும்புவதற்கு இதுவே காரணம்.”

அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக  சவுதி  அரேபியா எப்படி  இருக்கமுடியும் என்ற  கெள்வி  அண்மையில் இங்கே எழுப்பப்பட்டது

இதோ பதில்...

மேற்கத்தையா நாடுகளுக்கு கோபம் வரக் காரணத்தை நோக்கும்போது   சிரிப்பு வருகிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

மேற்கத்தையா நாடுகளுக்கு கோபம் வரக் காரணத்தை நோக்கும்போது   சிரிப்பு வருகிறது 🤣

 

உங்கள்  சிரிப்பை  பார்க்க எனக்கு  கடுப்புக்கு  பதிலாக  சிரிப்புத்தான் வருகுது?☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.