Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

78 members have voted

  1. 1. புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

    • ஒன்றும் இல்லை
      10
    • கனடா
      22
    • அமெரிக்கா
      1
    • அவுஸ்திரேலியா
      11
    • யூகே
      4
    • பிரான்ஸ்
      2
    • டென்மார்க்
      1
    • சுவிஸ்
      7
    • ஜேர்மனி
      4
    • நோர்வே
      4
    • சுவீடன்
      0
    • நெதர்லாந்து
      7
    • இத்தாலி
      0
    • நியூசிலாந்து
      1
    • சிங்கப்பூர், மலேசியா
      0
    • இந்தியா
      2
    • தென் அமெரிக்க நாடுகள்
      0
    • ஏனைய ஐரோப்பிய நாடுகள்
      0
    • ஏனைய ஆசிய நாடுகள்
      0
    • ஆபிரிக்க நாடுகள்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அவுஸ்லேியா வில் ஒரு பகுதி வெப்பமான இடம் எண்டு அறிந்திருந்தேன் . அது சிட்னிதானா . விடுதலைக்கு ஒருக்கா போய் பார்க்க வேண்டியதுதான் .

சிட்னி சில மாத பகுதிகளிள் சரியான வெட்கையாக இருக்கும் தான் ஆனா பெரிசா என்று சொல்ல முடியாது எங்களுக்கு பழகி போயிட்டு அந்த மாதங்களிள் 32 - 35 வரை செல்லும் போன வருசம் ஜனவரி முதலாம் திகதி 47 அது தான் அவுஸ்ரெலியா வரலாற்றில் சிட்னியின் காலநிலை இவ்வாறு உயர்ந்ததாக வானிலை ஆராய்சியாளர்கள் கூறினார்கள்!!மற்றும்படி இலங்கை வெப்ப நிலையை ஒத்து இருக்கும் மற்றது பேர்த் பகுதியில் கொஞ்சம் வெப்ப நிலை கூட என்று அங்கு இருந்து வந்த நண்பர்கள் கூறுவார்கள்...........விடுதலைக்கு கண்டிப்பாக வாங்கொ........ :rolleyes:

  • Replies 124
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரேக்க சொல்லிட்டு வந்திங்கன்னா துங்காபியில இருக்கிற எங்கட யாழ் கள பிரத்தியேக அலுவலகத்தில ஒரு ஒன்று கூடலையும் ஏற்பாடு செய்யலாம் இல்ல ஜம்மு....?

  • கருத்துக்கள உறவுகள்

subytha அக்கா நீங்க எப்பிடியும் இங்க வரபோறிங்கன்னு தானே பேசிக்கிறாங்க உண்மையா?

அவுஸ்ரெலியா கறுப்பி அக்கா ;) .............பெரிசா குளிர் என்று இல்லை இலங்கையை போன்ற காலநிலை ஒரு ஜீன் மற்றும் ஜீலை காலபகுதியில் மட்டும் ஒரளவு குளிர் ஏனைய ஜரோப்பிய நாடுகள் மாதிரி குளிரும் இருக்காது தாங்ககூடிய குளிர் தான் கறுப்பி அக்கா எப்ப அவுஸ்ரெலியா வாறீங்க சொல்லுங்கோ :lol: !!இது சிட்னியை பற்றி சொன்னேன் ஏனைய பகுதிகள் குளிர் தான் ஆனாலும் ஏனைய ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறந்தது B) .........நோர்வேயில் இருந்து உறவினர்கள் வந்திருந்தார்கள் எங்களுடைய வின்டர் காலபகுதியில் நாங்கள் கீட்டர் எல்லாம் போட்டு குளிர் என்று இருந்தோம் அவர்களின் பிள்ளைகள் உடுப்பு போடாம இது தங்களின் சமர் என்று சொன்னார்கள் என்றா பாருங்கோ......... :rolleyes:

காடுகள் எரியுறதை

பார்த்தோம் யமுனா.

சூடாதான் இருக்கும்.

subytha அக்கா நீங்க எப்பிடியும் இங்க வரபோறிங்கன்னு தானே பேசிக்கிறாங்க உண்மையா?

நான் மட் டும் இல்லை சுண்டல் அண்ணா.விடுதலைக்கு கறுப்பி அக்காவும் உ உங்க சொர்க்க பூமிய பார்க்க வாராங்களாம்.....இல்லையா கறுப்பி அக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

இதோ பாருங்கள்! சவூதிஅரேபியா, லிபீயா போன்ற வெப்பமான மத்தியகிழக்கு நாடுகளில் கூட நல்ல வெய்யில் காலத்திலும் மத்தியானத்தில் குளிக்கவேனுமென்றால்கூட தண்ணீரில் வெந்நீர் கலந்துதான் குளிக்கவேணும். தமிழகம், தழிழீழம் போன்ற இடங்கள்தான் மார்கழிக் கடுங்குளிரிலும் நடுஇரவில்கூட கிணத்தில் தண்ணியிறைத்து அப்படியே குளிக்கக்கூடிய, குளிரையே கண்டுக்காமல் ஒதுக்கிவிடக்கூடிய புண்ணியபூமிகள். :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன வருசம் ஜனவரி முதலாம் திகதி 47

அன்று முழுதும் சிட்னியில் ஒரு கடற்கரையில் கிடந்தோம். அதே நேரம் வீட்டில் உள்ள குப்பைகள் சருகுகள் தீப்பற்றி விடுமோ என்ற பயம் வேறு.

இங்கே சுவிசில் ஒரு 18 வெப்பம் வந்தாலே இங்குள்ளவர்கள் என்ன வெக்கையப்பா எனச் சொல்லுகிறார்கள்.

வரேக்க சொல்லிட்டு வந்திங்கன்னா துங்காபியில இருக்கிற எங்கட யாழ் கள பிரத்தியேக அலுவலகத்தில ஒரு ஒன்று கூடலையும் ஏற்பாடு செய்யலாம் இல்ல ஜம்மு....?

ஆமாம் வரக்க சொல்லிட்டு வந்தா எங்கன்ட யாழ்கள் பிரத்தியோக அலுவலகத்தில மாலை எல்லாம் போட்டு வரவேற்று யாழ்கள அவுஸ் முக்கிய மெம்பர்ஸ் எல்லாம் வந்து பிரான்சின்டையும் அவுஸ்ரெலியாவின்டையும் நட்புறவை வளர்க்க ஒரு ஒன்று கூடலை செய்யலாம் சுண்டல் அண்ணா அதற்கு தலைமை தாங்குவார் :D ..............ஆனா பாதுகாப்பு காரணம் கருதி வருங்கால அவுஸ்ரெலிய பிரதமர் ஜம்மு பேபி மட்டும் ஒன்று கூடலிற்கு வராதாம் சரி தானே சுண்டல் அண்ணா............. :P

சுப்ய்த அக்கா நீங்க எப்பிடியும் இங்க வரபோறிங்கன்னு தானே பேசிக்கிறாங்க உண்மையா?

சுண்டல் அண்ணா ஆமாம் சனல் 9 மற்றும் சனல் 7அவுஸ்ரெலியா தொலைகாட்சிகளிளும் மற்றும் டெயிலி டெலிகிராப் எல்லாவற்றிலும் சுபிதா அக்காவின் அவுஸ்ரெலிய விஜத்தை பற்றி தான் பேசுறாங்க இது உங்களுக்கே ஓவரா தெரியவில்லை :D ..........சுபிதா அக்காவிட்ட நேரா கேட்டா சொல்லா போறா அதற்கு இவ்வளவு பில்டப் கூடாது :P .....சரி சுபிதா அக்கா எப்ப வாறீங்க என்று பேபி கேட்குது சொல்லுங்கோ! :P !

Edited by Jamuna

காடுகள் எரியுறதை

பார்த்தோம் யமுனா.

சூடாதான் இருக்கும்.

காடுகள் எரிகிறது உண்மை ஆனால் குறிபிட்ட பகுதிகளிள் தான் ஆனால் எரிந்த அந்த பகுதி தற்போது சரியான குளிராக இருக்கும் வின்டர் சீசனில் என்றால் பாருங்கோ :D ..........ஆனால் தாங்க கூடிய வெப்ப நிலை என்றே கூறமுடியும் ஆனால் சுவிஸ் மற்றும் நோர்வே மற்றும் ஏனைய ஜரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொஞ்சம் கஷ்டம் தான் அதில பழக்கபட்டு விட்டு இதில் மாறுவதிற்கு மற்றும்படி பெரிய பிரச்சினை இல்லை என்றே சொல்லலாம். :( ..........ஆனால் சில பிராந்தியங்கள் இருகின்றன அதில் சரியான வெட்கை என்பது உண்மை அங்கு ஆட்கள் மிகவும் குறைவு உதாரணம் பேர்த் பகுதிகளில்............ :D

அன்று முழுதும் சிட்னியில் ஒரு கடற்கரையில் கிடந்தோம். அதே நேரம் வீட்டில் உள்ள குப்பைகள் சருகுகள் தீப்பற்றி விடுமோ என்ற பயம் வேறு.

இங்கே சுவிசில் ஒரு 18 வெப்பம் வந்தாலே இங்குள்ளவர்கள் என்ன வெக்கையப்பா எனச் சொல்லுகிறார்கள்.

காவடி அண்ணா நீங்களும் அவுஸ்ரெலியாவில இருந்தனீங்களோ தற்போதும் இங்கே தானோ அல்லது சென்று விட்டீங்களோ ;) ............அன்றைய வெப்பத்தை வாழ்நாளிள் மறக்கமுடியாது :D ...........அன்று இரவும் அதே வெப்பநிலை இருந்தது தான் கொடுமை படுக்க கூடி முடியவில்லை B) ..............எயார்கன்டிசன் போட்டும் வெட்கை அன்றைக்கு........... அன்று எல்லோரும் கடற்கரையில் தான் இருந்தார்கள் நீங்களும் கடற்கரையா........... :P

நம்மன்ட ஆட்கள் இப்படி எத்தனையோ சொல்லுவீனம் இங்கே வந்து சொல்லிச்சீனம் நாங்க இருந்த நாடு மைனஸ் இது என்ன குளிரா என்று அடுத்த நாள் போத்துகட்டி கொண்டு வாறீனம் :D நாம எல்லாம் வழமையா போடுற உடுப்பை போட்டு கொண்டு நிற்க......நம்ம ஆட்களின்ட கதையை கணகெடுத்தா விசர் தான் வரும்!! ;)

குளிரா வெக்கையா என்று பார்த்து யாரும் தாம் இருக்கவேண்டிய நாட்டைத் தெரிவு செய்வதாகத் தெரியவில்லை.

உழைப்புக்காக வந்ததாக இருந்தால் நல்ல வருமானமுள்ள நாடாக வேண்டும்.

அகதியான தமிழரானால் இருக்க அனுமதி கிடைக்கக் கூடிய நாடாக வேண்டும்.

சொகுசாக வாழ வந்த தமிழராக இருந்தால் நல்ல வாழ்க்கைத் தரமுள்ள நாடாக வேண்டும்.

குளிரா வெக்கையா என்று பார்த்து யாரும் தாம் இருக்கவேண்டிய நாட்டைத் தெரிவு செய்வதாகத் தெரியவில்லை.

உழைப்புக்காக வந்ததாக இருந்தால் நல்ல வருமானமுள்ள நாடாக வேண்டும்.

அகதியான தமிழரானால் இருக்க அனுமதி கிடைக்கக் கூடிய நாடாக வேண்டும்.

சொகுசாக வாழ வந்த தமிழராக இருந்தால் நல்ல வாழ்க்கைத் தரமுள்ள நாடாக வேண்டும்.

இல்லை அண்ணா பலர் குளிரை கருத்தில் கொண்டு தெரிவு செய்வார்கள் நான் எத்தனையோ பேரை பார்த்திருகிறேன் அவர்கள் அதை தான் பெரிதாக பார்பார்கள்..............எங்கள் தெற்காசிய சமூகத்தை விடுங்கோ ஏனைய சமூகத்தவர்கள் இதனை நிச்சயம் பார்பார்கள்!! :D

கருத்துக் கணிப்பில் அதிகமானவர்கள் தெரிவு செய்திருப்பது கனடாவை. அங்கு குளிர்காலத்தில் ஏனைய நாடுகளை விடக் குளிர் அதிகமாக இருக்கும்.

அதேபோன்று நோர்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் குளிர் அதிகம்.

கருத்துக் கணிப்பில் அதிகமானவர்கள் தெரிவு செய்திருப்பது கனடாவை. அங்கு குளிர்காலத்தில் ஏனைய நாடுகளை விடக் குளிர் அதிகமாக இருக்கும்.

அதேபோன்று நோர்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் குளிர் அதிகம்.

இந்த கருத்து கணிப்பை வைத்து கொண்டு சொல்ல முடியாது ஏனேனில் கனடாவில் இருந்து வரும் உறவுகள் அதிகம் அவர்கள் தங்களுடைய நாட்டை போட்டிருப்பார்கள் மற்றது எத்தனை பேர் ஒரு தடவை வாக்களித்தார்கள் என்பது தெரியாது தானே ஆகவே இந்த கணிப்பை ஆதாரமாக வைத்து நாங்கள் முடிவிற்கு வரமுடியாது :D .............உதாரணதிற்கு அவுஸ்ரெலியாவில் இருந்து வரும் உறவுகள் 5 பேர் ஆனா வாக்கும் 11 இதில் இருந்து உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைகிறேன்............ :D

வரேக்க சொல்லிட்டு வந்திங்கன்னா துங்காபியில இருக்கிற எங்கட யாழ் கள பிரத்தியேக அலுவலகத்தில ஒரு ஒன்று கூடலையும் ஏற்பாடு செய்யலாம் இல்ல ஜம்மு....?

யமுனா பேபி சுண்டல் அண்ணா என்னை வரவேற்கவில்லை.கறுப்பி அக்காவதான்

வரச்சொல்லி இருக்கார். அதனால நான் நீங்க பிரதமர் ஆனபின்பு வர உத்தேசித்

துள்ளேன்.அப்போதானே உங்க அரசாட்சிய பார்க்க முடியும் ு

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா எல்லாரும் சுவிஸ் சொர்க்க பூமின்னு சொல்லுறிங்க பட் சுவிஸ்ல இருந்து சனம் எhல்லாம் இங்க அள்ளுபடுது பிள்ளையளின்ட எதிர்காலத்துக்கு அப்படின்னு சாட்டு வேற என்ன மாட்டர்?ஜம்ஸ் நானும் நீங்களும் சுவிஸ் போனா தான் அது உருப்படும் போல...அஜீவன் அண்ணா Australia vin வளமே அதன் காடுகளும் பரந்த நிலப்பரப்பும் தானே.....

**********

Edited by harikalan

அப்படியானால் கருத்துக்கணிப்புக்களினால் பயனில்லையா ?

இல்லை இணையவன்.

அதற்கான காரணத்தை யமுனா சொல்லியிருக்கிறார்.

நான் வாக்கு போடுவதே இல்லை. :P

என்னப்பா எல்லாரும் சுவிஸ் சொர்க்க பூமின்னு சொல்லுறிங்க பட் சுவிஸ்ல இருந்து சனம் எhல்லாம் இங்க அள்ளுபடுது பிள்ளையளின்ட எதிர்காலத்துக்கு அப்படின்னு சாட்டு வேற என்ன மாட்டர்?ஜம்ஸ் நானும் நீங்களும் சுவிஸ் போனா தான் அது உருப்படும் போல...அஜீவன் அண்ணா Australia vin வளமே அதன் காடுகளும் பரந்த நிலப்பரப்பும் தானே.....

இது பிள்ளைகளுடை பிரச்சனையில்ல.

பெரியவங்கட பிரச்சனை.

மன நிலை சுண்டல்.

ஆங்கில படிப்பு படிச்சாதான் மக்கள் மதிக்கிறார்கள் என்பது

நம்மவர் அடிமனதில் பதிந்த விடயம்.

இது அடிப்படை

அடுத்தது

கலாச்சார சீரழிவு நடக்கக் கூடாதென்று

இந்தியாவில குழந்தைகளை விட்டாங்க.

நினைச்சது ஒண்டு

நடப்பது வேறொன்று

சுவிஸ் பிரஜா உரிமை கிடைக்கிற வரைக்கும்

பலர் சத்தம் போடாம இருந்தாங்க.

இப்போ பிரஜா உரிமை கிடைச்ச பிறகு

எந்த நாட்டுக்கும் போகலாம்.

குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு

இங்கு வந்து போனால் குடியுரிமை இருக்கும்.

ஏதோ காரணங்களை முன் வைத்து போகிறார்கள்?

இப்போ குழந்தைகளை

இன்னொரு நாட்டில கொண்டு போய் விட்டா லாபம்தான்

என்று நினைக்கிறாங்க.

இங்கு குடியுரிமை இருக்கு.

சிலருக்கு கொடுப்பனவுகளும் கிடைக்கும்.

இன்னொரு நாட்டில விட்டா

அங்கேயும் ஏதாவது துணை உரிமை கிடைக்கலாம்?

வதிவிட உரிமை மாதிரி?

இங்கு வருவாய் போல

வாழ்கை செலவும் அதிகம்.

அடுத்து

நினைச்சதெல்லாம் ஆங்கிலேய நாடுகள் போல இல்லை

விரும்பினதை படிப்பதென்றால் செலவு அதிகம்.

அதை சொந்த செலவில் படிக்க வேண்டும்?

அதிகம் பெத்தவங்களுக்கு

மொழி தெரியாததால்

குழந்தைகளுக்கு படிப்புல உதவ முடியல்ல.

அது பெரிய வெற்றிடம்தான்.

பணம்தான் வாழ்கை என்று இருந்த பலர்

ஒரு சில குழந்தைகள் இங்கு உள்ள மொழியிலேயே

நல்லா படிப்பதை பார்த்ததும் வேதனைப்படுகிறார்கள்.

அந்த ஒரு சிலர் போல

பலரால் போக முடியவில்லை.

அதை ஈடு செய்ய

வெளிநாடு ஒன்றில் குழந்தைகளை படிக்க வைத்தால்

அங்கே இங்கு போல இல்லாமல் படிக்கலாம்.

அடுத்து இன்னொரு நாட்டில் படிக்கிறாங்க என்பதும் மரியாதைதானே?

இது பெற்றோர் தரப்பு மனநிலை.

குழந்தைகள் நிலை வேறு?

இடம்

நட்புகள்

மொழி

சூழல்கள் மாறினால்

அதற்கு திரும்பி வர காலமெடுக்கும்.

ஒன்று

சிறு வயதிலேயே

அந்த நாட்டு பரிச்சயம் அவர்களுக்கு தேவை.

குழந்தைகள் சிறு வயதிலேயே அங்கு போய் விட வேண்டும்.

அல்லது

படிப்பின் ஒரு அத்தியாயம் முடிவுற்ற போது

ஒரு துறைசார் கல்விக்காக இன்னொரு நாட்டுக்கு செல்வதில் பிரயோசனம் இருக்கும்.

அதை விட்டு விட்டு

பெற்றோரின் கெளரவத்துக்கான நடைமுறைகள்

நிச்சயம் குழந்தைகளை பாதிக்கும்.

தவிர

பெற்றோரது அரவனைப்பிலிருந்து

குழந்தைகள் தனிமையாகும் போது

பல் வேறு பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது.

நமது வளர்ப்புகளும்

மேலத் தேசத்தவர் குழந்தை வளர்ப்பும்

வெவ்வேறானவை.

நம் குழந்தைகள் நம்மில் தங்கி வளர்கின்றனர்.

மேலைத் தேசத்தவர் குழந்தைகள்

தன் கையே தனக்கு துணை என வளர்கின்றனர்.

தேசம் விட்டு தேசம் வந்த நமக்குள்

இன்னும் வந்த அதிர்ச்சி மாறவில்லை?

வளரும் குழந்தைகள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை?

பலர் இப்படி போகிறார்கள்?

தனிப்பட்ட பிரச்சனைகளும்

ஆதங்கங்களும் கூட இருக்கலாம்!

Edited by AJeevan

கறுப்பு இனத்தவரோட சேர்ந்து களவு எடுக்க சட்டைப்பைக்குள்ள கத்தி கொண்டு திரிய நல்ல நாடு சீமை இலண்டன் தான்.

அதோட இந்தியாவின்ர மற்றொரு நகரம் எண்டா ஜரோப்பாவில சீமை இலண்டன் தான். என்ன இங்க கூவம் இல்லை .அவ்வளவு தான்.

ம்ம் நான் மற்ற நாடுகளுக்கு (இலண்டன்) தவிர போகாததால் வேறு நாடுகளைப் பற்றி எனக்கு தெரியவில்லை.

இலண்டனை கனடாவுடன் ஒப்பிடும் போது (எனக்கு) கனடாவே சிறந்தது எனச் சொல்லுவேன். ஆனா;ல் புலத்தமிழர் வாழ்வதற்கு இலண்டன் நல்ல இடம் என நினைக்கிறன்.

ஏனெனில் இலங்கையில் படித்த படிப்புக்கு தகுந்த வேலை அங்கு எடுக்கலாம். கனடாவில் அது கஷ்டம் மற்றது கனடாவுடன் ஒப்பிடும் போது காலநிலை அங்கு இங்கு மாதிரி சிநோ கொட்டுறதில்லை. கனடாவை விட குளிர் குறைவு எண்டு நினைக்குறன். பிறகு ஆறுதலா வந்து மிச்சம் சொல்லுறன்

கனடா பற்றிய தகவல்களை அறிய இந்த லிக்குக்கு போய் பாருங்கோ

http://www.yarl.com/forum/index.php?showtopic=7047&st=0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் வாழ்வதற்க்கு சிறந்த நாடு எது என்ற கேள்விக்கு அவரவர் தாம் வாழும் நாடுகளை கூறுவது இயல்பே ஆனால் என்னைப்பொறுத்தவரை, வாழ்வதற்க்கு சிறந்த நாடு கனடா என்பதே..!

இதற்கான காரணங்களாக, கனடாவின் குடிவரவாளர்கள் தொடர்பான கொள்ளை, அதாவது பல் கலாச்சார கொள்கை என்பதே முதல் காரணமாகும். அதை விட

- சிறந்த கல்வி

- வேலை வாய்ப்பு

- சுகாதார சேவைகள்

- வாழ்க்கைத் தரத்தில் முன்னிலை

- அரசியல் அந்தஸ்த்து

- எமது தனித்தன்மைக்கான உத்தரவாதம்

- மற்றும் ஏனைய சேவைகளை கொள்ளமுடியும்

கல்வி

கல்வியைப்பொறுத்தவரை கனடாவின் கல்விமுறமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது எனலாம். மேல் நிலைப்பள்ளியிலிலுந்து கல்லூரி வரை படித்துக்கொண்டிருப்பவன் என்ற ரீதியில் அதைச் சொல்ல முடியும். ஆசிரியர்களின் தனிப்பட்ட கவனிப்புக்கள் முதல் பள்ளியில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கு மிடையே பள்ளி நிர்வாகம் பாலமாக இருப்பது வரை பல சிறந்த முறமைகளை கனேடிய பாடசாலைகளில் காண முடியும். இவற்றை எம்மவர்கள் அனுபவிக்காமல் விடுவது வேறு. அதை விட மேல்நிலைப்பள்ளியில் இலவசக்கல்வியையும் அதற்க்கு சில சுகாதார சலுகைகளையும் வழங்குகின்றது. அது மட்டுமன்றி மாணவர்களுக்கான பொது போக்குவரத்து சேவைக்கு சலுகைகளையும் அது வழங்குகின்றது.

அத்தோடு கீழ் நிலைப்பள்ளிகளில் உள்ளவர்களுக்கு பாடசாலைப் பேரூந்துகளையும் ஒழுங்கு செய்துள்ளனர். மாணவர்கள பாதுகாப்பிலும், சுகாதாரத்திலும் பெற்றவர்களை விட பாடசாலை நிர்வாகம் கவனமெடுக்கின்றது.

அதை விட கல்லூரி அல்லது பலர்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால், இதன் செலவு சற்று அதிகமாயினும், சொந்தப்பணத்தில் செலவு செய்து படிக்கும் பட்சத்தில் கட்டிய பணத்தின் குறிப்பிட்ட தொகையை வருடாந்த வருமான வரிச் மீளப்பெறும் போது மீளப் பெற்றுக்கொள்ளமுடியும்.

அதை விட ஓசாப் (OSAP) எனப்படும் கடனினைப் பெற்றுக்கொண்டால் படித்து முடியும் வரை அதற்க்கு வட்டி கட்டதர்தேவையில்லை. அது மட்டுமன்றி, 10000 டொலர்களை நீங்கள் கடனாக பெற்றுக்கொள்ளுவீர்களானால், சுமார் 3000 டொலர்களை மாகாண அரசே மீள செலுத்தி கொள்ளும். எனவே மிகுதி 7000 டொலர்களை நீங்கள் மீளச் செலுத்த வேண்டும். அதுவும் நீங்கள் படித்து முடிந்த பின்னர். இச் சலுகை, மாணவர் பயண அனுமதியுடன் வருபவர்களுக்கு செல்லுபடியாகாது.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு என்று பார்க்கையில் சுமாராக அனைவருக்கும் இங்கு வேலையைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆனால் பெரும்பாலனவர்கள் குறைந்த சம்பளத்துடன் வேலை செய்ய தயாராக இருப்பதில்லை. அடிப்படைச் சம்பளமான 8.00 டொலர்களிலிருந்து ஆரம்பிக்கும் பணிகளுக்கு மாணவர்களை தவிர ஏனையவர்கள் போவதில்லை. அதற்க்கு காரணம் எம்மவர்களின் ஆடம்பர வாழ்வும், அளவுக்கு அதிகமான பணத்தேவையும் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் கனடாவில் வேலை வாய்ப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எனது கணிப்பு. உதாரணமாக பிரான்ஸ்சில் அண்ணளவாக 1300 ஈரோக்களை சம்பாதிக்கும் ஒருவர் நிச்சயமாக கனடாவில் 1900 டொலர்களுக்கு அதிகமாக சம்பாதிக்க முடியும். அதே போல லண்டனில் (பிரித்தானியாவில் 5 பவுண்ஸ் மணித்தியாலம் ஒன்றுக்கு பெறும் ஒருவர் 8 டொலர்களை பெறுவது அண்ணளவாக ஒரே வருமானமே!

சுகாதாரம்

சுகாதார சேவையில் கனடா முன்ணனியில் நிற்பதாகவே நான் உணர்கின்றேன். அவசர சிகிச்சைப்பிரிவுக்கு செல்வோர் இதை மறுக்க கூடும் ஆனால் அவர்களது கருத்தில் நியாயமிருக்கும் அதே நேரம் வைத்திய சாலை நிர்வாகத்தின் பக்கமும் நியாயமிருக்கின்றது எனலாம். ஏனெனில் கனடாவின் சனத்தொகைக்கு ஏற்ப வைத்தியர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

ஆனால் பல அறுவைச்சிகிச்சைகள், மற்றும் பல பெரும் நோய்களுக்கான சிகிச்சையை இலவசமாக பெறமுடியும் என்பதில் நாம் சுகாதார சேவைகள் பற்றி மனநிறவைப்பெறவேண்டும.

வாழ்க்கை தரம்

கனடாவில் வாழும் அனைத்து மக்களும் வாழ்க்கைத்தரத்தில் உயர்ந்து நிற்க்கின்றனர். சகல துறைகளிலும் தமிழர்கள் வளர்ந்து வருகின்றனர். குறிப்பிட்டு சொல்லப் போனால் தகவல்த் தொழிநுட்பத்தில் அதிகளவில் தமிழர்கள் முன்னேறியுள்ளனர். அது மட்டுமன்றி, அரச, தனியார் அலுவலகங்களில் தமிழர்களின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் அதிகம். தொழிற்சாலைகள், உணவகங்களே கதியேன்று இருந்த தமிழர்களின் தொழில் முறமை மாற்றப்பட்டிருக்கின்றது.

சுயமாக தமே தொழில் செய்யும் வாழ்ப்பையும் பெற்றுள்ளனர். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இணைய வழங்கி நிறுவனமே இதற்க்கு சான்றாகும், (Internet Provider) அதை விட பல நிறுவனங்களை இலைமறை காயாய் பழ தமிழர்கள் இயக்கி வருகின்றனர்.

அரசியலும் தமிழரும்

அரசியலிலில் கூட தமிழர்கள் வெற்றி வாகை சூட ஆரம்பித்துள்ளமை எமது சமூகம் எந்தளவிற்க்கு கனடாவில் ஆழக் கால் பதித்து விட்டது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. சாதாரணமாக, பாடசாலை தர்மகத்தா, கவுன்சிலர், என்று மாகாண பாராளுமன்றத்திற்க்கான தேர்தலில் இன்று இரு தமிழர்க்ள போட்டியிட்டு வெற்றி வாகை சூடக்கூடிய நிலையில் இருக்கின்றனர்.

எமது தனித்தன்மைக்கான உத்தரவாதம்

தமிழர்களுக்கு இருக்க கூடிய மதம், கலாச்சாரம் என்பவற்றை பேணி அவற்றை வளர்க்க கூடிய வகையில் கனேடிய அரசியல் சட்டம் அமைந்திருக்கின்றது. குறிப்பாக இங்கே இருக்கும் கோவில்கள், தமிழ்த் தேவாலயங்கள் என்று பல விடயங்களை உதாரணமாக சொல்லலாம். அதை விட தமிழீழ சங்கம் என்ற அமைப்பினூடாக தமிழ்க்கல்வி, ஆங்கிலக்கல்வி, தட்டச்சு கணனிக்க கல்வி, மற்றும் பல முன்னேற்றகரமான விடயங்கள் அரசாங்க நிதியில் கற்ப்பிக்கப்படுகின்றது.

அதை விட தமிழ் நாட்டு படங்கள், சஞ்சிகைகள், ஏனைய தமிழ் கதைப்புத்தகங்கள், கல்வி சார்ந்த புத்தங்களை ரொரன்ரோவின் எந்த நூலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் (முன்னறிவிப்பின் பின்னர்)

காலநிலை

கனடாவின் கால நிலையானது நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றது. அதாவது இளவேனில் காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம், இதில் குளிர் காலத்தில் சற்று குளிரும் பனிச் செறிவும் அதிகமாக இருப்பினும், கோடை காலத்தை பொறுத்தவரை வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தான் பிரச்சினை. மற்றும் படி மூன்று மாத குளிருக்காக முக்காடு போட்டுக்கொண்டு ஓடி ஒழிய முடியாதல்லவா? இந்த மூன்று மாத காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுமுறை காலமாக இருக்கும்.

போக்குவரத்து

கனடாவின் பிரஜையாக இருக்கும் நீங்கள் இந்தியா தவிர்ந்த எந்த நாட்டுக்கும் தங்கு தடையின்றி சென்று வரமுடியும். அதே நேரம் உங்கள் உறவினர், நண்பர்களின் சிறப்பு நிகழ்வுகளில் நீங்கள் இலகுவாக பங்கு பற்ற கூடியதாகவும் இருக்கும். இதை ஏன் சொன்னேன் என்றால், பிரான்ஸ் வருவதற்க்கா அனுமதிக்காய் விண்ணப்பித்த போது அவர்கள் சொன்னார்கள், 3 மாதத்துக்கு முன்னர் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று, அதே போல ஜேர்மன் செல்ல (மரண வீடு ஒன்றுக்கு) இறுதிவரை அனுமதி வழங்காது இறுதியாய் 7 நாட்கள் அனுமதியை வழங்கினார்கள். ஆனால் கனடாவுக்கு வருவதற்க்கு அந்த பிரச்சினை ஏற்ப்படாது.

வாழ்வதற்க்குரிய நாடு என்று பார்க்கும் போது, வெறுமனே, அரச கொடுப்பனவுகளையும், சமூக நலக் கொடுப்பனவுகளையும், இதர சலுகைகளையும் அடிப்படையாக வைத்து நாடுகளை நாம் பார்க்க முடியாது. அமெரிக்காவிலோ, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலோ இல்லாத பல விடயங்கள் கனடாவைச் சிறப்பாக்குகின்றது.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்குமிடையே ஒரே ஒரு வித்தியாசமாக நான் கருதுவது இரு நாடுகளினதும் குடிவரவுக் கொள்கையே ! எமது கலையை விட்டுக்கொடுக்காமல், மாற்றான் கலை மிதிக்காமல் வாழ சிறந்த இடம் கனடாவே..!

அப்ப நீங்க சொல்றதை பார்த்தா பிறந்தநாள் இடியப்பம் இலகுவா எடுத்து கொண்டாட , சாமத்திய வீடு மணவறை வைச்சு பிறகு கேக் வெட்டி கொண்டாட ஊர்ச்சங்கங்கள் தமிழ் வளர்க்க எல்லாம் எங்கட கலாச்சாரம் ஈசியா கட்டிகாக்க கனடா தான் எண்டிறியள்.

ஓகே இன்னும் அங்க இருக்கிற ஒண்டு இரண்டு பென்சன் காரரையும் கூப்பிட்டியள் எண்டா வசதியா இருக்கும். அவையும் வாழ்ற வயதில அந்த குண்டடிக்குள்ள என்ன செய்கிறது.....

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்க சொல்றதை பார்த்தா பிறந்தநாள் இடியப்பம் இலகுவா எடுத்து கொண்டாட , சாமத்திய வீடு மணவறை வைச்சு பிறகு கேக் வெட்டி கொண்டாட ஊர்ச்சங்கங்கள் தமிழ் வளர்க்க எல்லாம் எங்கட கலாச்சாரம் ஈசியா கட்டிகாக்க கனடா தான் எண்டிறியள்.

ஓகே இன்னும் அங்க இருக்கிற ஒண்டு இரண்டு பென்சன் காரரையும் கூப்பிட்டியள் எண்டா வசதியா இருக்கும். அவையும் வாழ்ற வயதில அந்த குண்டடிக்குள்ள என்ன செய்கிறது.....

சரி சரி... பொறாமை படாதைங்கோ.... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.