Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரில் பயணம் செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முக்கிய சாராம்சம்
  • 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15,384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 21,792 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
  • 2021ஆம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55,442 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
  • சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.
  • இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது.
  • மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை தமிழ்நாட்டில் 14,415 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 5,360 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.
  • 18,560 விபத்து நிகழ்வுகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளில் 11,419 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கார், வெயில், குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரவீன் சுபம்
  • பதவி,பிபிசிக்காக
  • 21 நிமிடங்களுக்கு முன்னர்

மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை வந்துவிட்டது. இந்த நேரத்தில், பலர் தங்கள் குடும்பத்துடன் கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் தொலைதூர பயணங்களைத் திட்டமிடுகிறார்கள்.

கோடை காலத்தில், வாகனங்களின் டயர் வெடிப்பது, இன்ஜின் சூடாவது, வாகனங்களில் திடீரென தீப்பிடிப்பது போன்ற காரணங்களால் சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் ஆலூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நீரஜா ரெட்டி பயணித்த காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.

அதனால் பயணத்தைத் தொடங்கும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், பயணத்தின் போது விழிப்புடன் இருப்பதன் மூலமும் பெரும்பாலான சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தை இயக்க கற்றுத்தரும் அரசு தொழிற்கல்வி கல்லூரியின் முதல்வரான கே.பி.ராகவன், கோடைகாலத்தில் 100 கிலோ மீட்டருக்கு மேல் நான்கு சக்கர வாகனங்களில் நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு 5 ஆலோசனைகளை வழங்குகிறார்.

கார், வெயில், குடும்பம்
 
படக்குறிப்பு,

கே.பி.ராகவன்

1. கார் கூலிங் சிஸ்டம்

கார் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் சூட்டை குறைக்க ஓவ்வொரு காரிலும் கூலிங் சிஸ்டம் என்று அழைக்கப்படும் குளிரூட்டும் அமைப்பு இருக்கும். நமது உடலின் வெப்ப நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வியர்வை அமைப்பு எப்படி செயல்படுகிறதோ, அதே போல இது காரில் செயல்படுகிறது.

காரின் கூலிங் சிஸ்டமில் மிக முக்கியமான பங்கு வகிப்பது ‘கூலன்ட்‘ (Coolant).

கூலன்டின் திரவ மட்டம் வரையறுக்கப்பட்ட அளவை விட குறைந்தால், இன்ஜின் அதிக சூடாகும். இப்படி நடக்கும் போது, இன்ஜின் முடங்கி விடும். எனவே ஒவ்வொரு முறை பயணத்தைத் தொடங்கும் முன்னரும் காரில் கூலன்ட் கேனில் அதன் அளவை சரிபார்க்கவும்.

அதே நேரத்தில், இன்ஜினில் உள்ள ரேடியேட்டரைச் சுற்றியுள்ள பல்வேறு குழாய்களில் (மேல் குழாய்கள், கீழ் குழாய்கள்) கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். கசிவு கண்டறியப்பட்டால், அதை நீங்களே சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். அதைப் பற்றி தெரியாத நபர்கள் மெக்கானிக் உதவியை நாடலாம்.

2. டயரில் காற்றின் அளவு

கார், வெயில், குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டயர்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு காற்று எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு காருக்கும் நிரப்ப வேண்டிய முழு காற்றின் எடை மாறுபடும். அந்த விவரம் ஓட்டுநர் இருக்கை இருக்கும் கதவின் அருகே கார் தயாரிப்பாளரால் சிறிய தகட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

சிலர் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்று நினைத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்று அடித்து வண்டியை ஓட்டுகிறார்கள். ஆனால் டயர்களில் அதிக காற்று இருந்தால் அதிக மைலேஜ் கிடைக்கும் என்பது தவறான கருத்து என்கிறார் ராகவன்.

கோடை காலத்தில் தார் சாலைகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அந்த சாலைகளில் வாகனம் வேகமாகச் செல்லும்போது டயர்களிலும் வெப்பநிலை உயரும். இதனால் வாகனத்தை வேகமாக இயக்கும் போது அதிக வெப்பம் ஏற்பட்டு டயர் வெடித்து விபத்து ஏற்படும்.

வாகன டயர்களில் அதிகமாக காற்று நிரப்பி கோடை காலத்தில் இயக்கும் போது, டயர் வெடித்து விபத்து ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது.

காரணம் என்னவாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி டயர்களில் காற்றை நிரப்புவது நல்லதல்ல என்கிறார் ராகவன்.

3. பேட்டரி

கார், வெயில், குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீண்ட தூர பயணங்களின் போது எப்போதும் வாகனத்தின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக வாகனத்தில் உள்ள மின்சார அமைப்பு தொடர்பான வயரிங்கில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

வயரிங் சேதமானால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, வாகனத்தினுள் தீ விபத்து ஏற்படும். சாலையில் செல்லும் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிவதற்கு இதுவே முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

வாகனத்தில் அதிக திறனுள்ள ஹாரன், ஹெட்லைட் போன்ற கூடுதல் உபகரணங்களை நிறுவ வாங்கும் போது, ஏற்கெனவே இருக்கும் வயரிங்கில் மாற்றம் செய்யப்படுகிறது.

கூடுதலாக பொருத்தப்படும் சாதனங்களுக்கு ஏற்ப ஃபியூஸ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனத்தின் பேட்டரியில் உள்ள 'மேஜிக் ஐ' பச்சை நிறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

'மேஜிக் ஐ' சிவப்பு நிறத்தில் தோன்றினால், பேட்டரியின் ஆயுள் முடிந்துவிட்டது என்று பொருள். அதனால் உடனடியாக பேட்டரியை மாற்ற வேண்டும்.

வயரிங், ஃபியூஸ், பேட்டரி சரியில்லாத போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வாகனத்தில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

4. காரின் ஏ.சி

கார், வெயில், குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெப்பம் அதிகமாக இருக்கும் போது, ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால் வாகனத்தை வசதியாக ஓட்ட முடியாது.

வாகனத்தில் உள்ள ஏசி சிஸ்டம் தொடர்பான கண்டன்சர், ஏர் ஃபில்டர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று வராது. இதன் காரணமாக நீண்ட தூர பயணங்களின் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால், விரைவாக சோர்வடைந்து கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே கண்டன்சர், ஏர் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கோடை காலத்தில் காரில் உள்ள ஏசி கேஸ் குழாய்களில் கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதை சரிபார்ப்பது அவசியம்.

5. ஓட்டுநரின் உடல்நிலை

கார், வெயில், குடும்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாகனம் மட்டுமின்றி, அதை இயக்கும் ஓட்டுநரின் உடல்நிலையும், மன நிலையும் சாலை விபத்துகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

கோடையில் 3-4 மணி நேரம் நிறுத்தாமல் வாகனம் ஓட்ட வேண்டியிருந்தால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை நிறுத்தி 10 நிமிடங்கள் ஓய்வெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

ஓய்வின்றி வாகனம் ஓட்டுவதும், கோடை காலத்தில் சாலையில் காணப்படும் அதிக வெளிச்சம், கானல் நீரை தொடர்ந்து பார்த்தபடி வண்டியை இயக்குவது போன்றவைகள் கண்களை சோர்வடையச் செய்யும்.

எனவே, சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து தவறி மறுபக்கத்திற்கு சென்று விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொடர்ந்து வாகனத்தை இயக்கும் போது அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாலை விபத்துகளும், மரணங்களும்

கார், வெயில், குடும்பம்

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வெளியாகியிருக்கும் சமீபத்திய புள்ளிவிவரம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சாலை பாதுகாப்பில் அரசும் பொதுமக்களும் அதிகவனம் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில், சாலை விபத்துகள் குறித்த சில கவலைதரத்தக்க புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த சில எண்களை முதலில் காணலாம்:

இந்த எண்கள் அனைத்தும் இந்தியாவில் விபத்துகளின் தலைநகரமாக தமிழ்நாடு ஆகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதனால் சாலைகளில் வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமான ஒன்று.

https://www.bbc.com/tamil/articles/crg3n069x92o

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வீதி விபத்துக்களும் வீதி ஒழுங்கு முறைகளை மக்கள் பின் பற்றினார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஏராளன் ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் யன்னல் முற்றாக பூட்டி இருப்பது (எந்த விதமன்னா செயதற்காய் காற்றோட்டம் இருந்தாலும்), இடைஇடையே யன்னலை பதித்து இயற்கை காற்ற்று ஓட்டத்தை உள்ளே வர விட வேண்டும். இது ஓர் கண்ணனுக்கு தெரியாத, அனால் கவனத்தை குறைக்க கொடியது (அதாவது இயற்றுகை சுழற்சி குறைந்த அல்லது அற்ற  காற்று சுவாசிப்பதால் , கவனம் மற்றும் விழிப்பு நிலை மங்கி கொண்டு போவது, சாதரண நிலையில் தெரியாது, இக்கட்டான (வேகமான) நிலையிலேயே எவ்வளவு தூரம் மங்கி இருப்பது என்று தெரியஸ வரும்).     

இது போலவே, குழந்தைகளை வைத்து தள்ளி கொண்டு திரியும் pram, ஒரு போதும் முற்றாக மூட கூடாது, குறிப்பாக மழை,  மந்தாரம், பனி, குளிர்  வேளையில் , ஏனெனில், அப்போது தாழமுக்கம், கீழிருந்து காற்றோட்டம் இருக்காது ஆழ்ந்து மிக குறைவடையும்,  அப்படியே மயக்கி விடும் தன்மை கொண்டது  - நீண்ட கால பாதிப்பு, மூளைக்கு உரிய அளவு ஆக்ஸிஜன் இல்லாமல் என்று ஏற்றப்படவும் கூடும். 

இப்பொது முற்றாக மமூடக்கூடியதாக zip உடன் வருகிறது. அநேகமானவர்கள், மழை, பனி, குளிர்  என்றவுடன் முற்றாக  எத்தனிப்பது தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இது சரியான தகவலாகத் தெரியவில்லை. ஆனால், சில இந்திய இணையங்களிலும்  உரையாடல் தளங்களிலும் இப்படிச் சொல்கிறார்கள் - தவறெனவே நினைக்கிறேன்.

உங்களுடைய கார் காற்றுப் புக முடியாத  air-tight விண்கலம் அல்ல! வெளியேயிருந்து cabin filter இனூடாக சாதாரண காற்று உட்புகுந்து வெளியேறிக் கொண்டிருக்கும். recirculate என்பதற்கு மாற்றினால், காரின் உள்ளேயே காற்று மீள் சுழற்சியாகும், ஆனால் இதனால் கூட ஒக்சிசன் குறைவு, கரியமில அதிகரிப்பு என்பன ஏற்படாது. மேற்கு நாடுகளில், வெப்பமாக்கி அல்லது குளிரூட்டி போட்ட படி, மூடிய காரில் மணித்தியாலக் கணக்கில் பயணிக்க வேண்டியிருக்கும். பெருந்தெருவில் யாரும் கார் கண்ணாடிகளை இறக்கி விட்டு ஓடுவதில்லை - சத்தம் அதிகம், aerodynamics உம் பாதிக்கப் படும் என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் 50 களில் நிற்கிறார்

தற்பொழுது  காரில்  ஏறி திறப்பை  போட்டாலே இவை  அத்தனையையும் காட்டி  விடுகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியும் கவனத்திற்கு உரியது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இது இந்தியா இல்லை. எல்லா நாட்டுக்கும் பொதுவானது. எல்லா நாடுகளும் கவனத்தில் எடுக்கும் என்பதும் இல்லை.

எல்லாம் எவ்வளவு நேரம் என்பதில் தான் தங்கி இருக்கிறது. மற்றது ஒவொருவருக்கும் வேறுபடலாம்.

முதலில் குழந்தைகள் pram - அது நான் நேரில் கண்டது. - அனுபவம் இருக்கிறது. குறிப்பாக, தாழமுக்க  காலநிலைகளில்.  

குழந்தை  மயக்க நிலைக்கு சென்றுவிட்டது. உரிய நேரத்துக்குள் பார்த்த படியால் நிலைமை மோசகமாகவில்லை.

அனால், வாகனத்தை விட வெளி சூழலுக்கு pram திறக்கப்பட்ட நிலையில் இருந்தும்.

மற்றது வாகன பிரயாணம் 

uk அரசங்கதிகன் அறிவுரை - பயணத்தை முறிப்பது - ஏறத்தாழ 1-2 (ஆக கூடியது 3 மணி நேரத்துக்குள்) மணித்தியாலங்களுக்குள் எதாவது ஒரு சிறு ஓய்வு, வெளிச் சூழலுக்கு பயணிப்பவர் எல்லோரும் வருதல். 

இதை போலவே, பழுதான வாகனத்தை மீட்கும் சேவைகளின் அறிவுரையும்.

முற்றாக  கண்ணாடி ண்ணடி தி றக்க தேவை இல்லை -குறிப்பாக motor way களில் , மிகவும் சிறிய இடைவெளியே (1 cm  குறைவானது)  போதும், அனால் எதிர் பக்க  பகலில் திறந்து இருக்க வேண்டும். காற்று ஓட்டத்திட்டற்காக.    சத்தம் வரும் தான், அனால் ஓர் 5 -10 நிமிடங்கள், பின்பு பூட்டுதல்.    

இதை விட uk இல் motor way code - ஒரே ஒழுங்கையில் (lane) இல் குரிபிட தூரம் / நேரத்துக்கு  மேல் வாகனம் ஓட்ட  கூடாது. இதுவும் கவனத்தை தொடர்ந்து வைத்து இருப்பதற்கு, ஏனெனில் ஒழுங்கையை மாற்றும் பொது மிக கவனம் எடுக்க வேண்டும்.
 
அனால் இயலுமானவரை திறந்த வாகனத்தில் பிரயாணிப்பதையே பலர் விரும்புவது, முக்கியமாக வெள்ளையர்களில்.

எம்மவர், நீங்கள் சொன்னது போலவே இயலுமானவரை மூடிய  வாகனம் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பதிலுக்கு நன்றி, ஆனால் 2 - 3 மணி நேரத்திற்கொரு முறை ஓய்வெடுப்பது ஒரே விடயத்தைத் தொடர்ந்து செய்வதால் வரும் களைப்பை, அயர்வை நீக்க மட்டுமே. பூட்டிய காருக்குள் ஒக்சிசன் குறையும் என்பது தவறான தகவல்.

யோசித்துப் பாருங்கள், 6000 அடிகள் உயரத்திற்குக்  கீழே பறக்கும் சிறிய விமானங்களில் விசேட காற்றழுத்தக் (pressurization) கட்டுப்பாடெதுவும் கிடையாது, சாதாரண கார் போன்ற வளிப்பரிமாற்றம் மட்டுமே இருக்கும். 6000 அடிகளிலேயே ஒருவருக்கு ஒக்சிசன் தட்டுப்பாடு வராதெனில், நில மட்டத்தில் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.

Pram விடயமும் இதே போலத் தான். சிசுக்களைத் தொட்டிலிலோ அல்லது Pram இலோ இடும் போது அவர்களது மூச்சைப் பாதிக்கும் எவையும் கிட்டே இருக்காமல் பார்த்துக் கொண்டால் போதுமானது. ஏனெனில், சிசுக்களில் மூக்கை மூடினால் வாயினால் சுவாசிக்க இயலாது. எனவே , கழுத்து மடிந்தமையால் குழந்தை மயங்கியிருக்கலாம். Pram இனை மூடும் கண்ணறைத் துணி காற்றுப் பரிமாற்றத்தைப் பாதிக்காது.  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

. பூட்டிய காருக்குள் ஒக்சிசன் குறையும் என்பது தவறான தகவல்.

இதை எங்காவது  சொல்லி இருக்கிறேனா?

1 hour ago, Justin said:

நில மட்டத்தில் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.

வீட்டுகளில்  gas boiler இருந்தால், co  மற்றும் co2 மட்டத்தை கண்காணித்து எச்சரிக்கும் கருவி இருக்க வேண்டும் என்பது uk இல் வாடகை வீட்டுக்கு ஒழுங்குமுறை (மிகவும் இறுக்கமான) கட்டுப்பாடு.

(அனால், UK  அரசாங்கத்தின் அறிவுரை எல்லோரும் வைத்து இருக்க வேண்டும் என்பது, அதாவது சொந்த வீட்டில் வசிப்பபவர்களும்) 
 
இவ்வளவுக்கும் ,வீட்டில் ஆக்சிசன் குறைய வாய்ப்பே இல்லை 

பிரச்னை வருவது பனிக்காலத்தில், மிக கூடிய gas boiler பாவனை, வீடு அடைக்கட்டும் இருக்கும் நேரம், தன்மை அதிகம்.    

co,  co2 அடர்த்தி கூடியவை ஒப்பீட்டளவில், இலகுவாக (வாயு தன்மையை கொண்டு) பயணிக்காது. அதாவது, அடைகப்பட்ட இடத்தில் இவை சேகரிக்கப்படும் தன்மை கொண்டவை.

இப்போதைய boilers எல்லாமே, மிகவும் வினைத்திறனுடன் co,  co2 வெளியேற்றும் தன்மை குறைந்தவை.    

வீட்டை விட, மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்ட தன்மை கூடியவை வாகனம், pram, மூடி இருந்தால். அத்துடன் 

எனவே ஆக்சிசன் குறைய தேவை இல்லை, மயக்க நிலை (மிகவும் இக்கட்டான நிலை கண் மயங்கி, நித்திரை உணர்வு, உண்மையில் மூளை இறத்தல்).

விமானகளுக்கு, வேறு (co,  co2) அகற்றும் வசதிகள் இப்பொது இருக்கலாம். 

அனால், இது  எல்லோருக்கும் இதன் தாக்கம் ஒரே தன்மையானது இல்லை, குறிப்பாக நேரத்தை மற்றும் விளைவுகளை பொறுத்தவரை.  

குறிப்பாக, வாகனத்தில் இதன் விளைவு, உங்கள் அங்க அசைவு, கவனச் சிந்தனை  ஒருங்கிணைப்பதை இது பாதிக்கும்.

எப்போது,  எவருக்கு நடக்கும் என்பது தெரியாது தான்.   

உறவே, சம்பந்தமில்லாத விடயங்களெல்லாம் ஒரு ஆதாரமில்லாத பொருளை நிறுவ வேண்டுமென்பதற்காகப் பேசுகிறீர்கள். பொய்லர் இருக்கும் வீட்டில் CO வரலாம், எஞின் கோளாறு இல்லாத காருக்குள் அல்லது பிள்ளை வண்டிலில் CO எப்படி வரும்? வராதல்லவா? மறு பக்கம், CO2 இனை வீட்டில் கண்காணிப்பதாக நான் அறியவில்லை. ஏனெனில், CO போல ஆபத்தானதல்ல CO2. இப்படியான pseudoscience இனை நம்புவதில் ஒரு தீமையுமில்லை, ஆனால், அதைப் பரப்புவது தேவையற்ற பயத்தை உருவாக்கும்!

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதை எங்காவது  சொல்லி இருக்கிறேனா?

வீட்டுகளில்  gas boiler இருந்தால், co  மற்றும் co2 மட்டத்தை கண்காணித்து எச்சரிக்கும் கருவி இருக்க வேண்டும் என்பது uk இல் வாடகை வீட்டுக்கு ஒழுங்குமுறை (மிகவும் இறுக்கமான) கட்டுப்பாடு.

(அனால், UK  அரசாங்கத்தின் அறிவுரை எல்லோரும் வைத்து இருக்க வேண்டும் என்பது, அதாவது சொந்த வீட்டில் வசிப்பபவர்களும்) 
 
இவ்வளவுக்கும் ,வீட்டில் ஆக்சிசன் குறைய வாய்ப்பே இல்லை 

பிரச்னை வருவது பனிக்காலத்தில், மிக கூடிய gas boiler பாவனை, வீடு அடைக்கட்டும் இருக்கும் நேரம், தன்மை அதிகம்.    

co,  co2 அடர்த்தி கூடியவை ஒப்பீட்டளவில், இலகுவாக (வாயு தன்மையை கொண்டு) பயணிக்காது. அதாவது, அடைகப்பட்ட இடத்தில் இவை சேகரிக்கப்படும் தன்மை கொண்டவை.

இப்போதைய boilers எல்லாமே, மிகவும் வினைத்திறனுடன் co,  co2 வெளியேற்றும் தன்மை குறைந்தவை.    

வீட்டை விட, மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்ட தன்மை கூடியவை வாகனம், pram, மூடி இருந்தால். அத்துடன் 

எனவே ஆக்சிசன் குறைய தேவை இல்லை, மயக்க நிலை (மிகவும் இக்கட்டான நிலை கண் மயங்கி, நித்திரை உணர்வு, உண்மையில் மூளை இறத்தல்).

விமானகளுக்கு, வேறு (co,  co2) அகற்றும் வசதிகள் இப்பொது இருக்கலாம். 

அனால், இது  எல்லோருக்கும் இதன் தாக்கம் ஒரே தன்மையானது இல்லை, குறிப்பாக நேரத்தை மற்றும் விளைவுகளை பொறுத்தவரை.  

குறிப்பாக, வாகனத்தில் இதன் விளைவு, உங்கள் அங்க அசைவு, கவனச் சிந்தனை  ஒருங்கிணைப்பதை இது பாதிக்கும்.

எப்போது,  எவருக்கு நடக்கும் என்பது தெரியாது தான்.   

அருமையான கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

11 hours ago, Justin said:

பிள்ளை வண்டிலில் CO எப்படி வரும்?

இதில் co2  தான். உண்மையில் பிரச்னை இல்லை. 
அனால் முற்றாக மூடி அடைக்கப்படுவதாலேயே, குறிப்பாக தாழமுக்க  காலநிலைகளில்,   co2 சேகரிக்கப்படும். எந்த குழந்தைக்கு, எப்போது, எவ்வளவு நேரத்தில் தாக்கம் வரும்  என்பது தெரியாது தான். 

ஆம், குழந்தையின் உயிரை, அதன் பிற்கல வ;ழ்க்கையை புள்ளிவிபர நிகழ்தகவுக்கு விடும் பெற்றோரே இப்பொது அதிகம்.

11 hours ago, Justin said:

பொய்லர் இருக்கும் வீட்டில் CO வரலாம், எஞின் கோளாறு இல்லாத காருக்குள்

11 hours ago, Justin said:

இப்படியான pseudoscience இனை நம்புவதில் ஒரு தீமையுமில்லை

ஒரு பக்க யோசனை. நான் ஒன்றையும் நிறுவ முற்றப்படவில்லை.உங்களிக்கு தெரியாததை pseudoscience என்பது. 

எந்த எரிதலும், அதி உன்னதமான செம்மை இல்லை.; அப்படி இருந்தால் எரிதல்  கண்க்கு தெரியாது.

 வாகன இயந்திரமம், boiler உம்  ஒரே தன்மையான combustion. அதாவது எரிபொருளுக்கு, மின்சார பொறியை, மின்சார பொறிக்கு அழுத்தத்தை ஏற்றப்படுத்தும் வகையில்,  குறுகிய இடைவெளியில் (spark plug), ஏற்றப்படுத்துவது. 

வாகனத்தில், குறுகிய இடைவெளி, ஒப்பீட்டளவில் சிறிய  (12 - 24 V மின்சார கலம், கூடவும் இருக்கலாம்) மின்சார அழுததை கொண்டு பொறி ஏற்படுத்துவதற்கும் தேவை.   

உண்மையில், வாகனத்தில், combustion தொடர்ந்து நடைபெறவேண்டி இருக்கும் நேரம் / எண்ணிக்கை , boiler இலும்  பார்க்க கூட. 

எனவே வாகனத்தை போலவே, boiler உம். எரிதல் பக்க விளைவால் உருவாகும் வாயுக்களை வெளியேற்றுவதிலும். 

 வாகனத்தில் இருக்கும் Catalytic converter இன்  தொழிப்படு இந்த ஆபத்தான வாயுக்களை பெரும்பாலும்  நீராவி, co2 ஆக்கி வெளியேற்றுவது தான். 

ஒன்று பிழை ஏற்படுவது (boiler, வாகனம்) - co  நிறம், மணம் அற்றது.   

பிழை ஒன்றும் இல்லாவிட்டாலும், co, co2  அழுத்தத்தில் உருவாங்குவதால், வீட்டுக்குள்  வரும், காருக்குள்  வரும்.  

வாகனத்தில் தொடர்ந்து இருக்கும் நேரம் குறைவு பலருக்கு குறைவு என்பதால் இதை அரசாங்கம் (குறிப்பாக UK அரசாங்கம் பெரிதாக எடுக்கவில்லை). 

அனால், வீட்டுக்கு எடுத்து உள்ளது, நேரம், குறிப்பாக நித்திரை கொள்ளும் நேரம், நித்திரையிலேயே மயக்கி, இறப்புக்கு இட்டு சென்றுவிடும் என்பதால் . 

ஏனெனில், இந்த விளைவுகளை, ஒப்பீட்டளவில், உலகில் சராசரியாக மிக சிறிய பரப்பு வீடுள்ள  UK இல் அனுபவ அடிப்படையில் கண்டு, ஆய்ந்து தான் , uk அரசின் மிக இறுக்கமான கட்டுப்பாடு.      

அனால், எல்லாம் , நான் முதலில் சொன்னது போலவே, எப்போது, எவருக்கு தெரியாது - அதை முடிந்த அளவு  தவிர்ப்பதத்திற்கு மணிக்கு 1 தடவை, 5-  10 நிமிடங்கள் கண்ணாடியை திறந்து, காற்றோட்டம் ஏறபடுத்துவது  பெரிய விஞ்ஞானமும் அல்ல, ஆதாரத்தை தேட வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

புள்ளிவிபர அடிப்படியில் சந்தர்ப்பம் குறைவாக இருக்கலாம். அனால், அதில் ஒன்றாக எவரேனும் இருக்கலாம்.

மருவளமாக, உங்களிடம், இன்னாருக்கு, இன்ன நேரத்தில், இந்த அளவு co தான்  தாக்கத்தை ஏற்றப்படுத்தும் என்பதறகான ஆதாரம் இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்

ChatGPT & Google Translate…

கிருபன்: நமக்கு CO2 அலாரம் தேவையா?

 ChatGPT:

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அல்லது பணிச்சூழலை உறுதிப்படுத்த காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) அளவைக் கண்காணிப்பது முக்கியம். CO2 இயற்கையாக நிகழும் வாயு மற்றும் குறைந்த அளவில் பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், அதிக அளவு CO2 உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் தீவிர நிகழ்வுகளில் மரணம் கூட ஏற்படலாம்.

எனவே, CO2 அலாரமானது உட்புற சூழல்களில் CO2 இன் உயர்ந்த அளவைக் கண்டறிய ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும். CO2 அலாரங்கள் ஒரு அறையில் CO2 அளவுகள் பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருக்கும்போது குடியிருப்பாளர்களை எச்சரிக்கலாம், இது தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.

காற்றோட்டம் குறைவாக இருக்கும் வகுப்பறைகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள் போன்ற மூடப்பட்ட இடங்களில் CO2 அலாரங்கள் முக்கியமானதாக இருக்கும். கூடுதலாக, வெப்பமாக்குவதற்கு அல்லது சமையலுக்கு எரிப்பைப் பயன்படுத்தும் கட்டிடங்களில் அவை முக்கியமானதாக இருக்கலாம், ஏனெனில் இது CO2 உருவாக்கத்தின் அபாயத்தை அதிகரிக்கும்.

சுருக்கமாக, ஒவ்வொரு அமைப்பிலும் CO2 அலாரங்கள் எப்போதும் அவசியமில்லை என்றாலும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உட்புற சூழலை உறுதிப்படுத்த உதவும் முக்கியமான கருவியாக அவை இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்: கார்களில் கார்பன் மோனாக்சைடு எவ்வாறு உருவாகிறது?

ChatGPT:

கார்பன் மோனாக்சைடு (CO) எரிபொருளின் பகுதித் தகன விளைவாக கார்களில் உருவாக்கப்படுகிறது. ஒரு வழக்கமான பெட்ரோலில் இயங்கும் காரில், எரிசக்தியை உற்பத்தி செய்வதற்காக என்ஜினில் எரிபொருளை எரிக்கிறார்கள், இது காரின் இயக்கத்தை இயக்க பயன்படுகிறது. இருப்பினும், எரிப்பு செயல்முறை முழுமையடையவில்லை என்றால், அது கார்பன் டை ஆக்சைடுக்கு (CO2) பதிலாக CO ஐ உருவாக்க முடியும், இது முழுமையான எரிப்பின் பக்கவிளைவு ஆகும்.

காரின் எஞ்சினில் பகுதித் தகனம் மற்றும் CO உற்பத்திக்கு பங்களிக்கும் பல காரணிகள் உள்ளன. இந்த காரணிகளில் சில:

செயலிழந்த அல்லது மோசமாக பராமரிக்கப்படும் வெளியேற்ற அமைப்பு: சேதமடைந்த அல்லது செயலிழந்த வெளியேற்ற அமைப்பு இயந்திரத்திலிருந்து வெளியேற்ற வாயுக்கள் சரியான முறையில் வெளியேறுவதைத் தடுக்கலாம். இது வெளியேற்ற வாயுக்களை எஞ்சினுக்குள் காப்புப் பிரதி எடுக்கச் செய்து, எரிப்பில் குறுக்கீடு செய்து, CO உற்பத்திக்கு வழிவகுக்கும்.
அடைபட்ட அல்லது அழுக்கு காற்று வடிகட்டிகள்: காற்று வடிகட்டிகள் இயந்திரத்திற்குள் காற்று ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன. அவை அடைபட்டால் அல்லது அழுக்காக இருந்தால், அவை காற்றின் ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம், இது முழுமையற்ற தகனம் மற்றும் CO இன் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

தவறான ஆக்சிஜன் சென்சார்: காரின் எஞ்சினில் உள்ள ஆக்ஸிஜன் சென்சார் எரிப்பில் பயன்படுத்தப்படும் காற்று/எரிபொருள் கலவையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. சென்சார் தவறாக இருந்தால், அது இயந்திரம் அதிக எரிபொருள் அல்லது மிகக் குறைந்த காற்றை எரிக்கச் செய்யலாம், இது முழுமையடையாத தகனம் மற்றும் CO உற்பத்திக்கு வழிவகுக்கும்.
நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பது: அதிக போக்குவரத்து நெரிசல் போன்ற நீண்ட காலத்திற்கு ஒரு கார் இயங்கினால், அது அதிக அளவு CO ஐ உருவாக்கலாம். இதற்கு காரணம், போதுமான காற்று ஓட்டம் இல்லாமல் இயந்திரம் எரிபொருளை எரிப்பதால், இது வழிவகுக்கும். முழுமையற்ற தகனம் மற்றும் CO உற்பத்தி.

கார்களில் CO உற்பத்தியின் அபாயத்தைக் குறைக்க, காரின் வெளியேற்ற அமைப்பைப் பராமரிப்பது, காற்று வடிகட்டிகளை தவறாமல் மாற்றுவது, ஆக்ஸிஜன் சென்சார்களின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது மற்றும் நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பதைத் தவிர்ப்பது முக்கியம். கூடுதலாக, கேரேஜ்கள் அல்லது கார்கள் சேமிக்கப்படும் அல்லது இயக்கப்படும் மற்ற மூடப்பட்ட இடங்களில் கார்பன் மோனாக்சைடு டிடெக்டர்களை நிறுவி பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
 
கிருபன்: கார்பன் மோனாக்சைடு நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? தயவு செய்து விரிவாக விளக்கவும்

ChatGPT:

கார்பன் மோனாக்சைடு (CO) என்பது ஒரு நச்சு வாயு ஆகும், இது மனித ஆரோக்கியத்தில் தீவிரமான மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். எரிவாயு, எண்ணெய், நிலக்கரி மற்றும் மரம் போன்ற எரிபொருட்கள் எரிக்கப்படும் போது CO உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் அது வீடுகள், கேரேஜ்கள் மற்றும் வாகனங்கள் போன்ற மூடப்பட்ட இடங்களில் குவிந்துவிடும். CO நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய சில வழிகள் இங்கே:

கார்பன் மோனாக்சைடு உடல் உறிஞ்சக்கூடிய ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. உள்ளிழுக்கும் போது, CO இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைக்கிறது, ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் இரத்தத்தின் திறனைக் குறைக்கிறது. இது ஹைபோக்ஸியாவுக்கு வழிவகுக்கும், இது உடலின் திசுக்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறாது. ஹைபோக்ஸியாவின் அறிகுறிகளில் தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், குமட்டல், குழப்பம் மற்றும் மயக்கம் ஆகியவை அடங்கும்.

கார்பன் மோனாக்சைடு மூளை மற்றும் பிற உறுப்புகளை சேதப்படுத்தும். நீண்ட காலத்திற்கு உடல் அதிக அளவு CO க்கு வெளிப்பட்டால், அது மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். இது நீண்ட கால நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும், அதாவது கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் இழப்பு மற்றும் மோசமான ஒருங்கிணைப்பு.
கார்பன் மோனாக்சைடு அபாயகரமானது. காற்றில் CO இன் செறிவு போதுமான அளவு அதிகமாக இருந்தால், அது மரணத்தை ஏற்படுத்தும். உடல் சரியாக செயல்பட போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாது என்பதே இதற்குக் காரணம். கடுமையான சந்தர்ப்பங்களில், சில நிமிடங்களில் மரணம் ஏற்படலாம்.

கார்பன் மோனாக்சைடு நச்சின் அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினம், ஏனெனில் அவை காய்ச்சல் போன்ற பிற நோய்களைப் போலவே இருக்கும். இருப்பினும், உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ கார்பன் மோனாக்சைடு நச்சு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். கார்பன் மோனாக்சைடு நச்சுக்கான சிகிச்சையானது பொதுவாக ஆக்ஸிஜனை வழங்குவதை உள்ளடக்கியது, இது இரத்தத்தில் இருந்து CO ஐ வெளியேற்ற உடலுக்கு உதவுகிறது. கடுமையான சந்தர்ப்பங்களில், உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்க ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படலாம்.

கார்பன் மோனாக்சைடு நச்சை தடுப்பது முக்கியம். CO க்கு வெளிப்படும் அபாயத்தைக் குறைக்க, உலைகள், வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புகள் போன்ற எரிபொருளை எரிக்கும் சாதனங்களை ஆண்டுதோறும் பரிசோதித்து சேவை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு டிடெக்டர்களை வீடுகளிலும் மற்ற மூடப்பட்ட இடங்களிலும் நிறுவி பராமரிப்பதும் முக்கியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

What are the “recirculation” and “fresh air mode” buttons on a vehicle's air  conditioner for? - CardealPage

ஏசி போடும்போது மேலுள்ள குறீயீட்டில்(ஏசி குளிர்மை அதிகரிக்குமாம்) விடுகிறார்கள், இதனால் நீண்ட பயணங்களில் ஒட்சிசன் பற்றாக்குறை/காபனீரொக்சைட் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

What are the “recirculation” and “fresh air mode” buttons on a vehicle's air  conditioner for? - CardealPage

21 hours ago, விசுகு said:

கட்டுரையாளர் 50 களில் நிற்கிறார்

தற்பொழுது  காரில்  ஏறி திறப்பை  போட்டாலே இவை  அத்தனையையும் காட்டி  விடுகிறது

அண்ணை இலங்கையில் 1990-2005 வரையான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே பெரும்பான்மையானவை. புதிய வாகனங்கள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2023 at 11:45 AM, கிருபன் said:

கார்பன் மோனாக்சைடு (CO) எரிபொருளின் பகுதித் தகன விளைவாக கார்களில் உருவாக்கப்படுகிறது

chat gpt இல் சொன்னதை இங்கு நான் பதிந்து இருக்க முடியும். 

அனால், எனது நோக்கம், இதன் விழிப்புணர்வை ஏற்றப்படுத்துவது. எனவே சுருக்கமாக பதியப்பட்டது.

எதை எப்படியாகவும் (pseudoscience) எடுத்தாலும்  - குழந்தை வண்டிலாவது  (pram) நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள். 

எந்த  (அமுக்க) தகனமும் (Combustion)  எப்போதுமே பகுதிதான், அமுக்கம் இல்ல விட்டாலும்.

இப்போதைய இயந்திரங்கள், திரவ எரிபொருள்  எரிவால் வெளியேறும் வெப்ப வாயுவை  ( துகள் புகை காபனுடன்) மீண்டும்  piston க்குள் வழங்கும் தன்மை கொண்டவை (1 தடவைக்கு மேலும் வழங்கும் இயந்திரம் இருக்கலாம்) ,  வெப்ப வாயு  (வெப்பமடைந்த  துகள் புகை  காபனுடன்) இயந்திரத்தின் (அதாவது எரித்தலலில்) வினைத்திறனை கூட்டுவது மட்டும் அன்றி, வெளியேறும் co, co2 இன் அளவையும் குறைப்பதற்கு.   மற்றது, Catalytic converter, முதலில் சொல்லிய படி.  

மற்றது, நான் சொல்லியது (கண்ணாடி  5 - 10நிமிடங்கள்  திறந்துன் மூடுதல், ஒரு முன்னெச்சரிக்கையும்,  ஓர் good practice உம்). அப்படி  செய்யவிட்டாலும் , இயலுமானவரை. 

மூல காரணம் அடைக்கப்பட்ட,  மூடப்பட்ட நெருக்கமான மனிதர் பயன்படுதும்  இடம். 

அதுவும் , மிக வேகமாக அகங்க அசைவுகளை, சிந்தனை குவிப்பை ஒருங்கிணைக்க வேண்டிய சந்தர்பமான வாகன ஓட்டுதலில்  

எல்லோருக்கும், வேண்டும் என்றால் எடுங்கள். பயம் என்றால் விட்டு விடுங்கள்.  

உங்கள் மதிப்பீட்டை (judgement) பாவியுங்கள்.   

மற்றது இதை தேசிய படுத்துங்கள், முக்கியமாக குழந்தை இருப்பவர்களுக்கு, அடிக்கடி வாகனம் நீண்ட நேரம் பாவிப்பவர்கள் போன்றோருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.