Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணத்திற்காக காணிகளை விற்க வேண்டாம் : கந்தரோடையில் விகாரை கட்ட வெளிநாட்டிலுள்ளவரே காணியை விற்றுள்ளார் - த.சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

07 MAY, 2023 | 07:05 PM
image

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

கந்தரோடையிலுள்ள  அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய  செய்தியாளர் சந்திப்பில் அவர்  இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன.

விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க மெதுமெதுவாக ஆட்களை கொண்டு வந்து, சிங்கள பிரதேசங்களாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

இந்த ஆட்சியில் பல விடயங்கள் நிறுத்தப்படலாமென பலர் நினைத்தனர். ஆனால் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கு பலமுறை முறையிடப்பட்டும், அது கவனிக்கப்படவில்லை.

இவற்றை நிறுத்த நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை, சாத்வீக வழி, பாராளுமன்றத்தின் ஊடாக முயற்சிக்க வேண்டும். அவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவற்றின் வேகம் போதாது என நினைக்கிறேன்.

நான் கந்தரோடையில் இருக்கிறேன். இந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்களிற்கு இந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. எப்படி சிங்கள பௌத்த மத அடையாள மாற்ற முயற்சிகள் நடக்கிறது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.

அது மாத்திரமல்ல, சற்று அதிக பணம் கிடைக்கிறது என்றால் காணிகளை விற்கிறார்கள். முக்கியமாக வெளிநாட்டில் உள்ளவர்கள். வெளிநாட்டில் உள்ள ஒருவர்தான் கந்தரோடையில் விகாரை கட்டப்படவுள்ள காணியையும் விற்றவர்.

வெளிநாட்டிலுள்ள பலர், இங்குள்ள காணிகளை பிற சமூகத்தவர்களுக்கு விற்பதால் ஏற்படும் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து விற்று வருகிறார்கள். சில இடங்களில் காணிகள் விற்கப்பட்டுள்ளதை அறிகிறோம். நல்லூரிலும் விற்கப்படுகிறது.

இங்குள்ள இராணுவத்தினர் வெறும் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றை வாங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே, சிறியளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக மாற்று சமூகத்தினருக்கு விற்பதை நிறுத்துங்கள்.

இங்கு பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இப்போது நடக்கும் போராட்டங்கள் மிகச்சிறியவை. 3,5,10 பேருடன் நடக்கும் போராட்டங்களினால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படாது. பெருமெடுப்பிலான போராட்டங்களை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்

பௌத்த விகாரைகள் கட்டப்படுவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதற்கமைய பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரையை பேணி பாதுக்காக்கும் வகையில் பௌத்த பிக்குகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதற்கமைய இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்ரக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவித நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவில்லை - என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார்.

https://www.virakesari.lk/article/154729

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

பௌத்த விகாரைகள் கட்டப்படுவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதற்கமைய பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரையை பேணி பாதுக்காக்கும் வகையில் பௌத்த பிக்குகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

நயினாதீவு இதற்கு நல்ல உதாரணம்.

மாவீரர் துயிலும் இல்லத்தையே இடித்து  கடை கட்டுகிறார் ஒரு தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த யூ .டியூப் காணொளி காரரை நிற்பாட்ட வேண்டும் ..இவைத்தன் இந்த இடங்களை ப்டம் பிடித்து காசுக்காக படம் காட்ட ..முசுலிமும் ,சிங்களவனும் இடமறிந்து...காசை விசுக்கி இடம் பிடிக்கிறான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, alvayan said:

முதலில் இந்த யூ .டியூப் காணொளி காரரை நிற்பாட்ட வேண்டும் ..இவைத்தன் இந்த இடங்களை ப்டம் பிடித்து காசுக்காக படம் காட்ட ..முசுலிமும் ,சிங்களவனும் இடமறிந்து...காசை விசுக்கி இடம் பிடிக்கிறான்....

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற தலைமுறையில்…. காணிகளை வேறு இனத்தவர்களுக்கு விற்க மாட்டார்கள்.
எனது தந்தையின் காலத்தில் இதனை நேரடியாகவே கண்டுள்ளேன்.
எமது வீட்டிற்கு அண்மையில் உள்ள ஒரு வீட்டை சிங்கள பொலிஸ் உதவி அதிபருக்கு
வாடகைக்கு கொடுத்ததற்காக, அந்த வீட்டு தமிழ் உரிமையாளர் கடினமான பேச்சுக்களையும்
அவமானங்களையும் ஊர்மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின்
அவர் அந்த சிங்களவரிடம், நாசூக்காக சொல்லி வீட்டை விட்டு அனுப்பி விட்டார்.
அப்போதைய தலை முறை இதனால் வரும் பாதகங்களை தெரிந்தே இருந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போ நடப்பவற்றை பார்க்க… சொற்ப பணத்துக்காக,
ஊரையே காட்டிக் கொடுத்து விடுவார்கள் போலுள்ளது.

அண்மையில் பார்த்த செய்தி ஒன்றில்… கனடாவில் இருந்து,
யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா அனுப்பி, அந்த மக்களிடம் இருந்து காசு சம்பாதிக்க
நினைத்த தமிழன்… வாழும் சமூகத்தில் வாழ்கின்றோம்  என்பது எவ்வளவு வேதனையை தரும் நிகழ்வுகளை பார்க்க வேண்டி உள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU

07 MAY, 2023 | 07:05 PM
 
அது மாத்திரமல்ல, சற்று அதிக பணம் கிடைக்கிறது என்றால் காணிகளை விற்கிறார்கள். முக்கியமாக வெளிநாட்டில் உள்ளவர்கள். வெளிநாட்டில் உள்ள ஒருவர்தான் கந்தரோடையில் விகாரை கட்டப்படவுள்ள காணியையும் விற்றவர்.

வெளி நடடவர்களுக்கு இதை விட்பதன்மூலம் பெரிய தொகை கிடைக்கும் என நினைக்கவில்லை. எனவே உள்ளூர் சமூகம் அல்லது ஒரு தமிழனுக்கு அதை விற்க முயட்சிதால் நல்லது. சிலர் அறியாமையினால் விற்கவும் சந்தர்ப்பமுண்டு. அதனை அங்குள்ளவர்கள்தான் கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டிலுள்ள பலர், இங்குள்ள காணிகளை பிற சமூகத்தவர்களுக்கு விற்பதால் ஏற்படும் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து விற்று வருகிறார்கள். சில இடங்களில் காணிகள் விற்கப்பட்டுள்ளதை அறிகிறோம். நல்லூரிலும் விற்கப்படுகிறது.

முஸ்லிம்கள் பொதுவாக முஸ்லிம்கள் தவிர வேறு யாருக்கும் விட்பனை செய்ய மாடடார்கள். அதே நேரம் அமைச்சராக இருந்த ஒருவர் நிறய தமிழர் இடங்களை முஸ்லீம் பிரதேசங்களாக மாற்றி விடடார். வன்னி தமிழ் (??) MP களுக்கு ஒரு எலும்பு துண்டை போடடவுடன் அது பற்றி பேச மாடடார்கள்

இதற்கமைய இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்ரக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவித நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவில்லை - என்றார்.

தமிழர்களுக்கு தீர்வு எப்போதுமே கிடைக்கப்போவதில்லை. ஒருவர் தமிழ் ஈழம், இன்னொருவர் சமஷடி, இன்னொருவர் 13 பிளஸ், இன்னொருவர் இருக்கிற மாகாண சபை, இன்னொருவர் வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது எண்டு இருந்தால் எப்படி தீர்வு கிடைக்கும். இபோது இருக்கும் மாகாண சபைக்கே சேடம் இழுக்குது. இதுக்குள் எங்கே தீர்வு. அரசாங்கத்தின் இப்போதைய கொள்கை வடக்கு கிழக்கை அபிவிருத்தி (??) செய்வது, பவுத்த மயமாக்குவது. 

  • கருத்துக்கள உறவுகள்

 மன்னாரிலும் முஸ்லிம்கள் உந்த வேலையை தொடங்கும்பொழுது,  மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, அதை தடுக்க முயற்சித்தார். றிஷாத்து, காணி உரிமையாளர்களை தேடிப்பிடித்து ஆண்டகைக்கு எதிராக பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தினார்,  இயன்றவரை அவர் இருக்கும்வரை அவற்றை தடுத்தே வந்தார். ஆனால் நம்ம தலைவர்கள் இவற்றை தடுக்கலாம், உரிய வெளிநாட்டு துறைகளுக்கு அறிவித்து அழுத்தம் கொடுக்கலாம், இனமத முரண்பாடு என சிங்களம் பிரச்சனையை திசை திருப்பும்போது இழுபடாமல் இது தனிப்பட்ட மக்களின் காணி, அவர்களின் வாழ்வாதாரம், குடியியல் மறுக்கப்படுகிறது. திட்டமிட்டு பொதுமக்களுக்கு எதிராக போர் செய்து அந்த மக்களை துரத்திவிட்டு காணி அபகரிப்பு நடக்கிறது என பிடிவாதமாக இருக்கவேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இவர்கள் நடத்தவில்லை பொதுமக்களுக்கான போரையே செய்து அவர்களை துரத்திவிட்டு அவர்களது உடமைகளை பறித்து அவர்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். பிறிதொரு காணியை மக்களுக்கு கொடுத்து திசைதிருப்ப முயற்சிக்கலாம். ஏன் அங்கே அவர்கள் விகாரைகளையும் முகாம்களையும் அமைக்கக்கூடாது? சிறிய காணித்துண்டுகளை கொடுத்து, தாங்கள் அந்தமக்களுக்கு உதவுவதுபோல் பிரச்சாரம் செய்வார்கள். முந்திய அரச தலைவர்கள் விட்ட பிழைகளுக்கு இவர்களை குறை கூறக்கூடாது என்று வாதிடுவோரும் உண்டு. இந்த விகாரை அமையும்போது இருந்த தலைவர்கள் என்ன செய்தார்கள்?  ஜெனிவாவில் போய் எங்கள் பிரச்சனைகளை எடுத்துரையுங்கள் என்ற போது, அது அமெரிக்கா சொன்னது; நீங்கள் வரவேண்டாம் நாங்கள் பாத்துக்கொள்கிறோம் ஆகவே நாங்கள் போகத்தேவையில்லை. என்று தட்டிக்கழித்தார்கள். ஆனால் இலங்கைக்கு கால அவகாசம் கொடுங்கள் என்று பரிந்து பேச இரவிரவாக அவசரமாக ஜெனிவா சென்று அங்கிருந்து  அமெரிக்கா பறந்து  அனுமதி வாங்கிக்கொடுக்க முடிகிறது. பிறகு சிங்களவனை நோவதால் பயனென்ன?  புலிகள் போராடி தம் உயிரைக்கொடுத்து நமக்கு நடக்கும் அனிஞாயங்களை உலகறியச்செய்து, பொறுப்புக்கூறும் கட்டாயத்திற்கு சிங்களத்தை கொண்டுவந்து நிறுத்தினார்கள். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்க முடியாமல் தள்ளிப்போகிறார்கள். முகம் காட்டாமல், பெயர்சொல்லாமல், விளம்பரம் தேடாமல்,புலம்பெயர்ந்தோர் இரவுபகலாக அழுத்தம் கொடுப்பதாலேயே பிரச்சனை இன்னும் சேடம் இழுத்துக்கொண்டு இருக்கிறது. இல்லையெனில் எப்பவோ சிங்களவன் எங்களை மண்ணுக்குள் மூடி விட்டு எதுவும் நடவாதது போல் போய்க்கொண்டே இருந்திருப்பான்.  

6 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற தலைமுறையில்…. காணிகளை வேறு இனத்தவர்களுக்கு விற்க மாட்டார்கள்.
எனது தந்தையின் காலத்தில் இதனை நேரடியாகவே கண்டுள்ளேன்.
எமது வீட்டிற்கு அண்மையில் உள்ள ஒரு வீட்டை சிங்கள பொலிஸ் உதவி அதிபருக்கு
வாடகைக்கு கொடுத்தற்காக, அந்த வீட்டு தமிழ் உரிமையாளர் கடினமான பேச்சுக்களையும்
அவமானங்களையும் ஊர்மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட் பின்
அவர் அந்த சிங்களவரிடம் நாசூக்காக சொல்லி வீட்டை விட்டு அனுப்பி விட்டார்.
அப்போதைய தலை முறை இதனால் வரும் பாதகங்களை தெரிந்தே இருந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போ நடப்பவற்றை பார்க்க… சொற்ப பணத்துக்காக,
ஊரையே காட்டிக் கொடுத்து விடுவார்கள் போலுள்ளது.

அண்மையில் பார்த்த செய்தி ஒன்றில்… கனடாவில் இருந்து,
யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா அனுப்பி, அந்த மக்களிடம் இருந்து காசு சம்பாதிக்க
நினைத்த தமிழன்… வாழும் சமூகத்தில் வாழ்கின்றோம்  என்பது எவ்வளவு வேதனையை தரும் நிகழ்வுகளை பார்க்க வேண்டி உள்ளது. 

 ஏன்.... ஓரிரு வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர், ஒரு காணொளி இணைத்து, அதில் யாரும் சிங்களவர் காணி வேண்டுமென்றால் தன்னோடு தொடர்பு கொள்ளும்படி தான் இனாமாக கொடுப்பேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். நீங்கள் கவனிக்கவில்லையோ? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

 ஏன்.... ஓரிரு வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர், ஒரு காணொளி இணைத்து, அதில் யாரும் சிங்களவர் காணி வேண்டுமென்றால் தன்னோடு தொடர்பு கொள்ளும்படி தான் இனாமாக கொடுப்பேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். நீங்கள் கவனிக்கவில்லையோ? 

இல்லை… அந்தக் காணொளியை கவனிக்கவில்லை.
எம் தற்போதைய இனத்தவர் பணத்துக்காகவும், ஊரை பழிவாங்கவும்… 
எதையும் செய்யத் துணிவார்கள் என்பது எவ்வளவு வேதனையானது.
இந்த மாற்றம், ஏன்… இப்போது இந்தத் தலைமுறைக்கு ஏற்பட்டது என்று புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

இல்லை… அந்தக் காணொளியை கவனிக்கவில்லை.
எம் தற்போதைய இனத்தவர் பணத்துக்காகவும், ஊரை பழிவாங்கவும்… 
எதையும் செய்யத் துணிவார்கள் என்பது எவ்வளவு வேதனையானது.
இந்த மாற்றம், ஏன்… இப்போது இந்தத் தலைமுறைக்கு ஏற்பட்டது என்று புரியவில்லை.

சுயநலம்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வெளிநாடு வாழ் தமிழர் மட்டுமல்ல... சில ஈனத்தமிழர்கள் அப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயநலப் பிசாசுகளை திருத்துவது கடினம். அதுகளா மண்டையில் உறைச்சு திருந்தினால் தவிர.

ஆனால்.. இதனை சித்தார்த்தன் சொல்ல அவருக்கு தகுதி இருக்கா என்பது தான் அடுத்த கேள்வி. ஏனெனில்.. புளொட்டின் முண்டுகொடுப்போடுதான்.. வவுனியா முழு சிங்கள மயமானது. அதில் புளொட்டின் இனத்துரோகச் செயலுக்கு சித்தார்த்தன் மன்னிப்புக் கோரியதே இல்லை. அப்படிப்பட்டவருக்கு.. இதைச் சொல்ல தகுதி இருக்கான்னு அந்த வெளிநாட்டு தமிழர்கள் கேட்டால்..?????!

  • கருத்துக்கள உறவுகள்

புத்த கோவிலை அமைக்கவிடாமல்  தடுப்பதற்கு  முயற்சிப்பது என்பது வேறு,  அடுத்த இனத்தவருக்கு காணியை விற்கக் கூடாது என்று பச்சை இனவாதத்தை ஒரு தமிழ் அரசியல் கட்சித் தலைவர் கூறுவது வேறு. இவ்வாறான பிரச்சனைகளில் எப்படித்  பேசுவது என்று கூடத் தெரியாத அரசியல்வாதிகள் எமது மக்களின் சாபக் கேடு. 

  • கருத்துக்கள உறவுகள்

காணியை விற்பதனால், அதை வாங்கி விகாரை கட்டுகிறார்கள். அதன் பின் ....? யானை வரும் பின்னே அதன் மணியோசை வரும் முன்னே. தமிழர் வாழ நிலமில்லை, இருப்பதையும் இராணுவமும் புத்தரும் புடுங்கி வைத்திருக்கிறார்கள். தமிழர் எங்கே வாழ்வது? தெற்கில் இருந்தவர்களையும் புடுங்கிப்போட்டு கொழுத்தி விரட்டி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் உள்ள எல்லைக் கிராமங்களில் புளொட்டினால் பெருமளவிலான மக்கள் குடியேற்றப்பட்டதனால்தான் வவனியா நகரம் வரை தமிழர்கள் இன்று ஓரளவு வாழ்ந்து வருகின்றனர். 

புளொட்டினால்தான் இன்று வவுனியா இந்தளவில் பறி போகாமல் இருக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை போராளிகள் உள்ளிட்ட அரசியல்துறை போராளிகளே ஒத்துக் கொண்ட விடயம். நீங்கள் இத்தகவலை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைய புளொட்டுக்கும் புலிகளின் புலனாய்வுத்துறையினர் அழைப்பு விடுத்த தகவல் எல்லாம் உண்டு. அதனுடன் தொடர்புபட்டவர்கள் எல்லாம் தற்போதும் உயிருடன் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கே நான் புளொட் செய்தவற்றை சரி என்று வாதாட வரவில்லை. சித்தார்த்தன் கூறிய கருத்தின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமே தவிர அதனை விடுத்து எப்போது பார்த்தாலும் பழையவற்றையே கூறிக் கொண்டு ஒருவரை தூற்றுவதிலேயே குறியாக இருக்கின்றீர்கள்.

தவறே செய்யாதவர்கள் எவரும் இல்லை. அது புலிகளாக இருக்கட்டும். தமிழரசுக் கட்சியாக இருக்கட்டும். ஏன் நீங்களோ நானோ தவறே செய்யாதவர்கள் என்று இருக்க முடியாது. 

குற்றம் செய்தவனை நோக்கி ஊர் மக்கள் கல்லால் எறிந்து தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போது யேசுநாதர் தவறே செய்யாதவர்கள் யாராவது இருந்தால் கல்லை எடுத்து குற்றம் செய்தவனை நோக்கி வீசுங்கள் என்று கூறினாராம். 

வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாம் எதனையும் கதைக்கலாம். இன்று வரை வெளிநாட்டில் உள்ள தமிழர்களால் அல்லது புலம்பெயர் அமைப்புக்களால் சிறிலங்கா அரசுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்க முடிந்ததா?

மாறாக, அங்குள்ள தமிழ்க்கட்சிகளுக்கு பணத்தினை வழங்கி தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நடக்குமாறு கூறி- ஒன்றுபட இருந்த கட்சிகளை எல்லாம் சிதைக்கின்ற வேலைகளைத்தான் எம்மவர்கள் கனகச்சிதமாக செய்கின்றனர்.

இதனை விட தமக்கு பிடிக்காதவர்களுக்கு வாள்வெட்டுக்கும் பணம் வழங்கி அதனை செய்ய முயற்சிக்கின்றனர்.

நாம் எப்படியான தமிழ் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றோம் என்பதனை நினைக்கவே தற்போது கவலையாக உள்ளது. 

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2023 at 23:27, nedukkalapoovan said:

ஆனால்.. இதனை சித்தார்த்தன் சொல்ல அவருக்கு தகுதி இருக்கா என்பது தான் அடுத்த கேள்வி. ஏனெனில்.. புளொட்டின் முண்டுகொடுப்போடுதான்.. வவுனியா முழு சிங்கள மயமானது. அதில் புளொட்டின் இனத்துரோகச் செயலுக்கு சித்தார்த்தன் மன்னிப்புக் கோரியதே இல்லை. அப்படிப்பட்டவருக்கு.. இதைச் சொல்ல தகுதி இருக்கான்னு அந்த வெளிநாட்டு தமிழர்கள் கேட்டால்..?????!

நான் அறிந்த வரைக்கும், PLOTE இட்கு முன்னரே தங்களது அரசியலுக்காக சில தமிழ் அரசியல்வாதிகள் இதை தொடங்கியதாகவும் பின்னர் இவர்கள் தங்கள் இருப்புக்காகவும் தொடர்ந்ததாகவும் சொல்கிறார்கள்.

வவுனியாவில் முன்னர் யாளகற்றி சங்கமென ஒன்று வைத்திருந்ததாகவும் இவர்களே சிங்கள குடியிருப்புக்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். அங்கிருந்த மக்களை இவர்கள் (யாழ்ப்பாணத்தவரே அந்த நாட்களில் அரச உத்தியோகத்தர்க ) சுரண்டியதாகவும் இதனால் இப்படியான நிலைமை உருவாக்கியதாகவும் நான் அறிந்த வரைக்கும் உள்ள செய்தி. எனவே ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்வதால் இந்த பிரச்சினை தீரப்போவதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.