Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார்.

அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி. தொலவத்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திருத்தம் தண்டனைச் சட்டம் தொடர்பான பாராளுமன்றத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்றும், அதன் மூலம் அரசியலமைப்பின் விதிகள் கடுமையாக மீறப்படுவதாகவும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ , இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நிறைவு செய்த உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலத்தின் சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா அல்லது முரணானதா என்ற தமது முடிவை  சபாநாயகருக்கு அறிவிப்பதாக கூறியது.

இந்நிலையிலேயே தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பிழம்பு said:

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு, ranil wickramasinge elected  as new sri lanka president

ரணிலுக்கு, இப்ப பயங்கர சந்தோசமாக இருக்கும். animiertes-gefuehl-smilies-bild-0127.gif
ரணில் தான், சபாநாயகருக்கு அழுத்தம் கொடுத்து, animiertes-gefuehl-smilies-bild-0001.gif
ஓரின  சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்க சொன்னாரோ தெரியவில்லை. animiertes-gefuehl-smilies-bild-0233.gif
இனி என்ன... ஜனாதிபதி மாளிகையில்... இரவிரவாக ஒரே  உய்யலாலா தான். animiertes-gefuehl-smilies-bild-0091.gif animiertes-gefuehl-smilies-bild-0129.gif

Edited by தமிழ் சிறி

11 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில் 2017 ஜூனில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒக்டோபரில் இருந்து தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னர், ஜேர்மன் அதிபரின் மாளிகையில் இரவிரவாக இவ்வாறான உய்யலாலா  நடக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

ஜேர்மனியில் 2017 ஜூனில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒக்டோபரில் இருந்து தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னர், ஜேர்மன் அதிபரின் மாளிகையில் இரவிரவாக இவ்வாறான உய்யலாலா  நடக்கின்றதா?

இதுவரை பதவி வகித்த  ஜேர்மன் அதிபர்கள்...  
ஓரின சேர்க்கையில் ஆர்வம் இல்லாதவர்கள் என்ற படியால்... 
அங்கு "உய்யலாலா" நடக்க, வாய்ப்பில்லை ராஜா....  animiertes-gefuehl-smilies-bild-0119.gif 😂

நம்மாள், தன்பாலின பிரியர் என்ற படியால்... 
ஜனாதிபதி மாளிகையும் களை கட்டும் என்று எதிர் பார்க்க முடியும்.
நாட்டின் முதல் குடிமகனுக்கு இருக்கும்  உரிமையை, நாம் தட்டிக் கழிக்கக் கூடாதல்லவா.animiertes-gefuehl-smilies-bild-0276.gif 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓகோ .. அணிலார்...இதுதான் நம்ம அரசர் சார்ள்ஸ் உடன் கைலாகு கொடுக்கையில் சில்மிசத்தில் ஈடுபட்டவர் என்று அவையோடை ஆளோராள்  இன்றுதான் நியூஸ் ஓன்று போட்டவர் ...அப்ப விசயம் உண்மைதான்...ரணிலார் விசயத்தை கமுக்கமாய் முடிப்பதில் கில்லாடிதான்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

காவிகள் இதட்கு எதிராக முன்பு எதிர்ப்பு  தெரிவித்திருந்தார்கள். இப்போது அமைதியாகி விடடார்கள். அவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்குதோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Cruso said:

காவிகள் இதட்கு எதிராக முன்பு எதிர்ப்பு  தெரிவித்திருந்தார்கள். இப்போது அமைதியாகி விடடார்கள். அவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்குதோ தெரியவில்லை. 

காவிகள்… இதில், கில்லாடிகள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

ஜேர்மனியில் 2017 ஜூனில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒக்டோபரில் இருந்து தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னர், ஜேர்மன் அதிபரின் மாளிகையில் இரவிரவாக இவ்வாறான உய்யலாலா  நடக்கின்றதா?

யேர்மனிக்கு முன்பே  தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டட கனடா ,அமெரிக்கா, சுவீடன் பிரான்ஸ், யுகேயில் கூட  பிரதமர்கள் மாளிகையில் இரவிரவாக உய்யலாக்கள் நடைபெறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மனிக்கு முன்பே  தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டட கனடா ,அமெரிக்கா, சுவீடன் பிரான்ஸ், யுகேயில் கூட  பிரதமர்கள் மாளிகையில் இரவிரவாக உய்யலாக்கள் நடைபெறவில்லை.

animiertes-lampen-bild-0150.gif          animiertes-lampen-bild-0115.gif      animiertes-lampen-bild-0150.gif

அதை எப்படி... விளக்கு பிடித்து, பார்த்த மாதிரி... உறுதியாக கூறுகின்றீர்கள். 😂 🤣  🤪

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அதை எப்படி... விளக்கு பிடித்து, பார்த்த மாதிரி... உறுதியாக கூறுகின்றீர்கள். 😂 🤣  🤪

ஏன் என்றால் மேலே சொன்ன நாடுகள் தங்கள் மக்களுக்கிடையில் பாகுபாடு காட்ட கூடாது , எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக மதங்கள் காலம் காலமாக சொல்லிவந்ததை ஒதுக்கிவைத்து விட்டு தன்பாலினத்தவர்ககளும் திருமணம் செய்ய முடியும் என்று சட்டமாக்கினார்களே தவிர தாங்கள்  உய்யலாக்கள் செய்வதற்காக இல்லை.
இதை யேர்மனியில் சட்டமாக்கிய போது மிகபெரியளவில் யேர்மன் மக்கள் ஆதரித்தார்களாம். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்ட யேர்மனியர்களாக தான் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெள்ளை நிறத்தவரை விட கறுப்பினத்தவர் அதிக மத நம்பிக்கை கொண்டவர்கள். எனவே அவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருக்கலாம். அது சரியானதும்கூட. 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2023 at 11:22, Cruso said:

காவிகள் இதட்கு எதிராக முன்பு எதிர்ப்பு  தெரிவித்திருந்தார்கள். இப்போது அமைதியாகி விடடார்கள். அவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்குதோ தெரியவில்லை. 

அண்மையில் செய்திகள் பிடிக்கவில்லையோ? இவர்களின் பலாத்காரம் தாங்க முடியாமல் பல இளம் பிக்குகள் விகாரை மாறி விகாரை போய், மானம் இழந்து வைத்தியசாலையில் அனுமதி! போதைப்பொருள் கடத்திய பிக்குகள், நிலம் அபகரிக்கும் பிக்குகள், அடாவடி செய்யும் பிக்குகள், பண மோசடி செய்த பிக்குகள், கொலை செய்த பிக்குகள், உறவினருடன் விகாரைக்கு வழிபட சென்ற சிறுமி, பிக்குவால் பலாத்காரம் செய்யப்பட்டார். எல்லாம் காவிக்குள்ளேயே விகாரையில் நடக்குது, சட்டம் பாதுகாப்பளிக்குது. எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்? பொதுமக்களை விட இவர்களே இதில்  அதிக நாட்டமுள்ளவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Cruso said:

வெள்ளை நிறத்தவரை விட கறுப்பினத்தவர் அதிக மத நம்பிக்கை கொண்டவர்கள்.

உண்மை. இலங்கை இந்தியாவில் பெருக்கெடுத்து பெருகிவரும் ஆன்மிககூட்டத்தை பார்த்தாலே விளங்கி கொள்ள முடியும்.

20 hours ago, Cruso said:

அவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருக்கலாம். அது சரியானதும்கூட. 

ஓம் மதம் சொல்லிவிட்டபடியால் விடக்கூடாது.  மற்றநாடுகள் படி படியாக மாறி தன்பாலினத்தவர்களுக்கு சமத்துவம் கொடுக்க வெளிக்கிட்டாலும்  மதம் சொல்லிவிட்டது என்பதிற்காக இவர்கள் மதம் சொன்னவற்றை கட்டிபிடித்து கொண்டு இறுதிவரை இருந்து உலகத்திற்கு கவுரவத்தை காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை. இலங்கை இந்தியாவில் பெருக்கெடுத்து பெருகிவரும் ஆன்மிககூட்டத்தை பார்த்தாலே விளங்கி கொள்ள முடியும்.

ஓம் மதம் சொல்லிவிட்டபடியால் விடக்கூடாது.  மற்றநாடுகள் படி படியாக மாறி தன்பாலினத்தவர்களுக்கு சமத்துவம் கொடுக்க வெளிக்கிட்டாலும்  மதம் சொல்லிவிட்டது என்பதிற்காக இவர்கள் மதம் சொன்னவற்றை கட்டிபிடித்து கொண்டு இறுதிவரை இருந்து உலகத்திற்கு கவுரவத்தை காட்ட வேண்டும்.

"மதம்" ஒரு அபின் என கார்ல் மார்க்ஸ் கூறினார். மத (வெறி) வைராக்கியத்தினால் ஏட்படட வன்செயல்களை பார்த்து அவ்விதம் கூறினார். தமிழில் "சமயம்'' என்பது நேரத்திட்கு ஏற்றால் போல் கொள்கை மாற்றும் போக்கு என அர்த்தப்படும். அதாவது, சந்தர்ப்பத்திட்கு ஏற்றாற்போல சமயத்திட்கு சமயம் மாறி மாறி கொள்கைகளை வகுத்தல். "மறை" என்பது மறைத்து வைத்தல். அதாவது, சத்தியத்தை மறைத்து பொய்யான கட்பனைகளை பேசுதல். எனவே, நாத்திகம் பேசுவோருக்கு மதம், சமயம், மறை என்னும் தமிழ் சொற்கள் பொருந்தி வருவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையோடு ஒன்றித்து, அதை வழிபட்டு வாழ்பவர்கள் தமிழர், சைவர் அந்த இயற்கை, ஐந்தறிவுள்ளவை முறைவழி தவறாமல் மனிதனுக்கு மிகுந்த பலன் தருகின்றன. ஆனால் மனிதன் மாறிவிட்டான், எதிர்கால இன விருத்தியை அழிக்கிறான் தலையாலை நடந்து. மதம் என்பது  அது எந்த மதமானாலும் நன்மையையே போதிக்கின்றன, அதை எடுத்துக்கொள்வோர் மனநிலை பலவாறாக அர்த்தம் கற்பிக்கின்றனர். நம்ம நாடு அதற்கு நல்ல உதாரணம். மேற்கு  நாடுகள் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கி விட்டது  என்பதற்காக  கைதட்டி வரவேற்கும் நாம், நாமும்  அதன்படி வாழவேண்டும் என கோரிக்கை வைக்கும் நாம், மேற்குலகு தந்த முன்னேற்றங்களை மறந்து மறைத்து விட்டு, அவர்கள் விட்டுச்சென்ற மதத்தை மட்டும் குறைகூறுவோம். அதை பின்பற்றுவோரை வசைபாடுவோம், துரத்தியடிப்போம், துரத்தியடிப்போரையும் பாராட்டுவோம். எதுக்கும் சச்சியரையும் இது பற்றி ஒரு அறிக்கை தரும்படி கேட்பது நல்லது. என் பிள்ளை தன் பாலினத்தவரை திருமணம் செய்தால் நான் சந்தோசப்படமாட்டேன், திருமணத்தால் ஏற்படும் நல்லவைகளை அங்கே  எதிர்பார்க்க முடியாது, பிறகு எதற்கு அதை திருமணம் என்று அழைக்கவேண்டும்? சேர்ந்து வாழுதல், கூடி வாழ்தல், நண்பர்கள், என்னென்னவோ சொல்லலாம். கணவன் மனைவி  என்கிற தகுதி, கவுரவம்அதற்கு இல்லை.              

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Cruso said:

"மதம்" ஒரு அபின் என கார்ல் மார்க்ஸ் கூறினார். மத (வெறி) வைராக்கியத்தினால் ஏட்படட வன்செயல்களை பார்த்து அவ்விதம் கூறினார். தமிழில் "சமயம்'' என்பது நேரத்திட்கு ஏற்றால் போல் கொள்கை மாற்றும் போக்கு என அர்த்தப்படும். அதாவது, சந்தர்ப்பத்திட்கு ஏற்றாற்போல சமயத்திட்கு சமயம் மாறி மாறி கொள்கைகளை வகுத்தல். "மறை" என்பது மறைத்து வைத்தல். அதாவது, சத்தியத்தை மறைத்து பொய்யான கட்பனைகளை பேசுதல். எனவே, நாத்திகம் பேசுவோருக்கு மதம், சமயம், மறை என்னும் தமிழ் சொற்கள் பொருந்தி வருவதில்லை. 

மிகச்சிறந்த விளக்கம்.முழுமையான உண்மைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.