Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நியூசிலாந்து வெல்லுது

பைனலுக்கு போகுது.

அண்ணை நடந்தால் நன்றாக இருக்கும் தான்.

India FlagIndia                            397/4
New Zealand FlagNew Zealand              (32.2/50 ov, T:398) 220/3

New Zealand need 178 runs from 17.4 overs.

Current RR: 6.80  • Required RR: 10.07   • Last 5 ov (RR): 40/1 (8.00)

Win Probability:NZ 11.88%  IND 88.12%

  • Replies 546
  • Views 32.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமியின் 2 விக்கெட் வீழ்த்தலுடன் நியூசிலாந்தின் துரத்தல் முடிவுற்றதாக நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
India FlagIndia                      397/4
New Zealand FlagNew Zealand                (40/50 ov, T:398) 266/4

New Zealand need 132 runs in 60 balls.

Current RR: 6.65   • Required RR: 13.20   • Last 5 ov (RR): 42/0 (8.40)

Win Probability:NZ 0.49%  IND 99.51%

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஏராளன் said:

சமியின் 2 விக்கெட் வீழ்த்தலுடன் நியூசிலாந்தின் துரத்தல் முடிவுற்றதாக நம்புகிறேன்.

எழுதிய மை காய முதல் 2 விக்கட் போட்டுது.

றயினிகாந்தும் மனைவி லதாவும் இருந்து மச் பார்க்கினம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

எழுதிய மை காய முதல் 2 விக்கட் போட்டுது.

றயினிகாந்தும் மனைவி லதாவும் இருந்து மச் பார்க்கினம்.

 

ஒரு ஓவ‌ரில் முக்கிய‌மா இர‌ண்டு விக்கேட் போனால் அது எதிர் அணிக்கு ச‌த‌காமாய் போய் முடியும்

ந‌ல்லா விளையாடிட்டு இருந்த‌ நியுசிலாந் க‌ப்ட‌னை சாமி அவுட் செய்த‌தோடு பிற‌க்கு வ‌ந்த‌ ல‌த்க‌ம்மையும் அவுட் ஆக்கி விட்டார் அதே ஓவ‌ரில் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

நேற்று சொன்ன‌து போல்
நியுசில்லாந்தை சிம்பிலா ம‌ட‌க்க‌ போகுது 
ரோகித் ச‌ர்மா அவுட் ஆன‌தும் கோலி வ‌ந்த‌ உட‌னே அடிச்சு ஆடி ச‌த‌த்தையும் அடிச்சு விட்டார்......... போர‌ போக்கை பார்த்தால் 380 ர‌ன்ஸ்ச‌ தாண்டுவின‌ம் போல் இருக்கு..........நீங்க‌ள் சொன்ன‌ நொயுசிலாந் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ரின் ப‌ந்துக்கு தொட‌க்க‌ம் முத‌லே அடிச்சு ஆட‌ தொட‌ங்கிட்டின‌ம்

அவ‌ரின் ப‌ந்து வீச்சு இன்று எடுப‌ட‌ வில்லை............உந்த‌ பெரிய‌ ஸ்கோரை நியுலாந் வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆடி வெல்ல‌ முடியாது ச‌கோ

மிக துல்லியமாக இந்தியா வெற்றியீஇட்டும் என கணித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

மைதானத்தில் வெப்பம் அதிகமாக இருந்தமையால் முதல் இனிங்ஸில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அதே நேரம் இந்த அதிக வெப்பநிலை மைதானத்தில் இரண்டாவது இனிங்ஸில் எதிர்பார்த்த மைதான ஈரப்பதன் ஏற்படவில்லை அதனால் இரண்டாவதாக பந்துவீசிய இந்திய அணியினை எதிர்பார்த்தது போல பாதிக்கவில்லை, அத்துடன் பழைய மைதானம் இரண்டாவது இனிங்ஸில் ஒப்பீட்டளவில் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாறிவிட்டது என கருதுகிறேன்.

மைதானம் ஆரம்பத்தில் துடுப்பாட்ட மைதானமாக இருந்து பிற்பகுதியில் ஓரளவிற்கு பந்துவீச்சாளருக்கு சாதகமான நிலை இக்காரணங்களால் ஏற்பட்டதாக உணர்கிறேன் (இந்த கருத்து தவறாக இருக்கலாம்)

சுழற்பந்து வீச்சாளருக்கு மைதானம் அதிக திருப்பத்தினையும் பந்தின் சமச்சீரற்ற துள்ளலை இரண்டாவதாக பந்து வீசிய அணிக்கு வழங்கியது போல கருதுகிறேன் (ஆட்டத்தின் தொகுப்பினை மட்டுமே பார்த்தேன்).

இந்தியணியின் மிக சிறப்பான ஆட்டத்தினை எந்த வகையிலும் குறைகூறுவதாக இல்லை, மிக பெரிய சாதனைகளை இந்த போட்டியில் இந்தியணி அடைந்துள்ளது.

மறுவளமாக நியூசிலாந்து அணியின் திறமையினை பற்றி கருத்துகள் இந்த வெளிச்சத்தில் காணாமல் போய்விடும், நியூசிலாந்து அணி மிக திறமையாக எதிர்கொண்டார்கள், ஆனால் அவர்கள் பக்கம் நேற்று அதிர்ஸ்டம்  துணைநிற்கவில்லை, நானய சுழற்சி என்ற ஒரு விடயம் அனைத்தையும் மாற்றிவிட்டதாக கருதுகிறேன்..

எனக்கு கிரிக்கெட்டினை பற்றி பெரிதாக தெரியாது வெறும்  2.5 வருட அனுபவ அடிப்படையில் கருத்து கூறுவதால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

மிக துல்லியமாக இந்தியா வெற்றியீஇட்டும் என கணித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

மைதானத்தில் வெப்பம் அதிகமாக இருந்தமையால் முதல் இனிங்ஸில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அதே நேரம் இந்த அதிக வெப்பநிலை மைதானத்தில் இரண்டாவது இனிங்ஸில் எதிர்பார்த்த மைதான ஈரப்பதன் ஏற்படவில்லை அதனால் இரண்டாவதாக பந்துவீசிய இந்திய அணியினை எதிர்பார்த்தது போல பாதிக்கவில்லை, அத்துடன் பழைய மைதானம் இரண்டாவது இனிங்ஸில் ஒப்பீட்டளவில் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாறிவிட்டது என கருதுகிறேன்.

மைதானம் ஆரம்பத்தில் துடுப்பாட்ட மைதானமாக இருந்து பிற்பகுதியில் ஓரளவிற்கு பந்துவீச்சாளருக்கு சாதகமான நிலை இக்காரணங்களால் ஏற்பட்டதாக உணர்கிறேன் (இந்த கருத்து தவறாக இருக்கலாம்)

சுழற்பந்து வீச்சாளருக்கு மைதானம் அதிக திருப்பத்தினையும் பந்தின் சமச்சீரற்ற துள்ளலை இரண்டாவதாக பந்து வீசிய அணிக்கு வழங்கியது போல கருதுகிறேன் (ஆட்டத்தின் தொகுப்பினை மட்டுமே பார்த்தேன்).

இந்தியணியின் மிக சிறப்பான ஆட்டத்தினை எந்த வகையிலும் குறைகூறுவதாக இல்லை, மிக பெரிய சாதனைகளை இந்த போட்டியில் இந்தியணி அடைந்துள்ளது.

மறுவளமாக நியூசிலாந்து அணியின் திறமையினை பற்றி கருத்துகள் இந்த வெளிச்சத்தில் காணாமல் போய்விடும், நியூசிலாந்து அணி மிக திறமையாக எதிர்கொண்டார்கள், ஆனால் அவர்கள் பக்கம் நேற்று அதிர்ஸ்டம்  துணைநிற்கவில்லை, நானய சுழற்சி என்ற ஒரு விடயம் அனைத்தையும் மாற்றிவிட்டதாக கருதுகிறேன்..

எனக்கு கிரிக்கெட்டினை பற்றி பெரிதாக தெரியாது வெறும்  2.5 வருட அனுபவ அடிப்படையில் கருத்து கூறுவதால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

இந்தியா இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஒரு சாத‌னை ப‌டைக்க‌ போகுது முத‌ல் முறை
அதாவ‌து ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முத‌ல் சிமி பின‌ல் ம‌ற்றும் உல‌க‌ கோப்பைய‌ வென்றால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அனைத்து போட்டிக‌ளிலும் வென்ற‌ அணி என்ர‌ பெருமை இந்தியாவுக்கே

இதை 2003 , 2007 இந்த‌ இர‌ண்டு உல‌க‌ கோப்பைக‌ளிலும் அவுஸ்ரேலியா சாதிச்ச‌து எல்லா ம‌ச்சும் வெற்றி..........இந்தியா பின‌லில் வென்றால் இது தான் முத‌ல் முறை.............

நியுசிலாந் ஒரு க‌ட்ட‌த்தில் ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி  அடிச்சால் வெற்றி என்ர‌ இல‌க்குட‌ன் விளையாடினார்க‌ள்.........முக‌ம‌ட் சாமி போட்ட ஒரு  ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட்டை நியுசிலாந் இழ‌ந்த‌து...........இல‌ங்கை மாதிரி 55ர‌ன்ஸ்சுக்கை நியுசிலாந் ப‌டு தோல்வி அடைய‌ல‌ 327 ர‌ன்ஸ் அடிச்சு விட்டு தான் எல்லாரும் ஆட்ட‌ம் இழ‌ந்த‌வை🥰🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான்கடேவில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓம்கார் டாங்கே
  • பதவி, பிபிசி மராத்தி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய அணி 397 ரன்களைக் குவித்து நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தாலும், சில முக்கியமான நம்பிக்கைகள் தகர்ந்திருப்பதாகவே கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதுவரை மிக வேகமாக விக்கெட் எடுத்துவந்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் மிகவும் நெருக்கடியான தருணத்தில் விக்கெட்டை எடுக்கத் தவறினார்கள்.

வான்கடே மைதானத்தில் ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது. சமூக வலைத்தளங்களில் “இன்னொரு துயரத்தை” தாங்க இயலாது என்று இந்திய ரசிகர்கள் எழுதத் தொடங்கியிருந்தார்கள்.

உண்மையிலேயே இதுவரை கூறப்பட்டுவந்தது போல இந்தியாவின் பந்துவீச்சு வரலாற்றிலேயே வலிமையானதுதானா?

 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன நடந்தது?

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைந்துள்ளது. மும்பையில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை பொறுத்தவரையில் இந்த வெற்றி எதிர்பாராதது அல்ல. இந்தப் போட்டியின் ஸ்கோர்போர்டைப் பார்த்தால், இது மிகப்பெரிய வெற்றி என்பது தெளிவாகிறது. ஆனால் இந்திய அணியின் ரன்குவிப்பைப் பார்த்தால், இந்த வெற்றி இன்னும் எளிதாகவே கிடைத்திருக்க வேண்டும்.

நீண்ட இடைவெளியில் விக்கெட் இல்லாத பந்துவீச்சு, தவறவிட்ட கேட்சுகள், ரன் அவுட்கள் மற்றும் இந்திய ரசிகர்களின் பதற்றம் என நீண்ட ரோலர் கோஸ்டர் பயணத்துக்குப் பிறகே இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சில முக்கியமான சிக்கல்கள் வெளியாகியுள்ளன. இப்போட்டியின் முடிவை இனிமையாக்க இந்தப் பிழைகள் நீக்கப்பட வேண்டும்.

 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரிதாக ரன்குவித்தும், எளிதாக வெற்றிபெற முடியவில்லை

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் அபார சதத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி உறுதியான வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதே மும்பை வான்கடே ஆடுகளத்தில் இலங்கைக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக அப்படிப்பட்ட வெற்றியை இந்திய அணியால் மீண்டும் செய்ய முடியவில்லை.

 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட் வீழ்த்துவதற்குத் திணறிய தொடக்கப் பந்துவீச்சாளர்கள்

இந்திய பந்துவீச்சு அதிர்ச்சிகரமாகத் தொடங்கியது.. ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்தை டெவோன் கான்வே பவுண்டரிக்கு அடித்து நியூசிலாந்தின் கணக்கைத் தொடங்கினார்.

முதல் ஒன்பது போட்டிகளில் வீசியது போல இந்தப் போட்டியில் பும்ராவால் வீச முடியவில்லை. முதல் 3 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தார். இதில் வைட்பால்களும் அடங்கும்.

முதல் 9 போட்டிகளில் 3.55 என்ற எகானமி ரேட்டில் மட்டுமே பந்து வீசிய பும்ரா, அரையிறுதியில் 6.40 என்ற எகானமி ரேட்டில் ரன்களை கொடுத்தார். முதல் 10 ஓவரில் 'பவர் ப்ளே'யில் விக்கெட் எடுக்க முடியவில்லை.

397 ரன்களின் பாதுகாப்பு மற்றும் முகமது ஷமியின் கனவு ஆட்டம்தான் இந்திய அணியின் பந்துவீச்சில் இருந்த சிக்கல்களை மறைத்திருக்கிறது. இறுதிப்போட்டியில் இந்த தவறு நடந்தால், அது இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜடேஜாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு

ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே, ரவீந்திர ஜடேஜாவும் முதல் ஒன்பது போட்டிகளில் 4-க்கும் குறைவான எகானமி விகிதத்தில் பந்து வீசினார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரும் பும்ராவைப் போலவே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இந்தியா பேட்டிங் செய்தபோது சான்ட்னருக்கு ஆடுகளம் நன்கு துணை புரிந்தது. அதனால், ஜடேஜா மீது இந்திய அணி அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தது. ஆனால் அந்த அளவுக்கு ஜடேஜாவால் செயல்பட முடியவில்லை.

ஜடேஜா 10 ஓவர்களில் 6.30 சராசரியில் 63 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. கேன் வில்லியம்சன் - மிட்செல் ஜோடி அவரது பந்துவீச்சை எளிதாக விளையாடியது.

பும்ரா மற்றும் ஜடேஜாவைப் போலவே முகமது சிராஜும் அதிக ரன்களைக் கொடுத்தார். அவர் 9 ஓவர்களில் 78 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றி நழுவிப் போக இருந்த தருணம்

கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தனர். முதலில் ஜாக்கிரதையாக விளையாடிய இருவரும், செட்டில் ஆன பிறகு நல்ல ஷாட்களை ஆடினர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களிடம் அவர் திணறவே இல்லை. எனவே இறுதியாக ரோஹித் ஷர்மா பந்தை ஜஸ்பிரித் பும்ராவிடம் கொடுக்க வேண்டியிருந்தது.

பும்ரா இரண்டாவது ஸ்பெல்லில் வில்லியம்சனை கிட்டத்தட்ட வெளியேற்றினார். ஆனால், அவரது எளிதான கேட்சை முகமது ஷமி தவறவிட்டார்.

பின்னர் ஷமி தாமே பந்துவீசி வில்லியம்சனை வீழ்த்தினார். அந்தத் தருணத்தில் வில்லியம்சனை வீழ்த்த முடிந்திருக்காவிட்டால், ஷமி விட்ட கேட்ச், மிகவும் விலை உயர்ந்ததாக மாறியிருக்கும். இந்தியாவின் வெற்றியையைும் பறித்திருக்கக் கூடும்.

 
இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியபோது தகர்ந்த நம்பிக்கைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்து வீச்சாளர்கள் கொடுத்த 300-க்கும் அதிகமான ரன்கள்

திறமையான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றியின் முக்கிய அம்சமாகவே கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையின் 9 தொடர் ஆட்டங்களில் எதிரணி அணியால் ஒருமுறை கூட 300 ரன்களை எடுக்க முடியவில்லை.

ஆனால், அரையிறுதியில் நியூசிலாந்து 329 ரன்களை எட்டியது. டேரில் மிட்செல் சதம் அடித்து 134 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 69 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 41 ரன்களும் எடுத்தனர். அவர்களின் பேட்டிங் காரணமாக, 40 ஓவர்கள் வரை நியூசிலாந்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு ஓரளவு இருக்கவே செய்தது.

கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் போராடித் தடுத்தார்கள்.

மீண்டும் ஒருமுறை எதிரணியின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. ஆனால் இந்தியப் பந்துவீச்சுக்கு இது ஒரு அக்னிப் பரீட்சையாகவே அமைந்துவிட்டது.

https://www.bbc.com/tamil/articles/cn0p46pdl0no

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோஹ்லி உலக சாதனை உட்பட இரண்டு சாதனைகள் : ஷமியின் 7 விக்கெட் குவியலின் உதவியுடன் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

16 NOV, 2023 | 08:50 AM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

விராத் கோஹ்லி உலக சாதனை உட்பட இரண்டு சாதனைகளை நிலைநாட்ட, மும்பை வான்கடே விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில்  70 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராத் கோஹ்லி குவித்த உலக சாதனை மிகு 50ஆவது சதம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் குவித்த சதம், ஷுப்மான் கில் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் ஷமியின் 7 விக்கெட் குவியல் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற உலக சாதனையையே விராத் கோஹ்லி அப் போட்டியில் நிலைநாட்டினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு சொந்தமாகவிருந்த 49 சதங்கள் என்ற சாதனையை கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் குவித்து சமன் செய்த விராத் கோஹ்லி, அந்த சாதனையை புதன்கிழமை கடந்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார்.

சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்களைக் குவித்திருந்தார். ஆனால் விராத் கோஹ்லிக்கு 50 சதங்களைப் பூர்த்தி செய்ய 279 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது.

அப் போட்டியில் 117 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த விராத் கோஹ்லி உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு சாதனையை நிலைநாட்டினார்.

இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் விராத் கோஹ்லி மொத்தமாக 701 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஓர் உலகக் கிண்ண அத்தியாயத்தில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனைக்கு விராத் கோஹ்லி சொந்தமானார். இப்போதைக்கு அவரது சராசரி 116.83ஆக இருக்கிறது.

2003 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சச்சின் டெண்டுல்கர் 11 இன்னிங்ஸ்களில் 673 ஓட்டங்களைப் பெற்றிருந்தார. அதுவே முந்தைய சாதனையாக இருந்தது.

இந்த இரண்டு சாதனைகளையும் சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் விராத் கோஹ்லி நிலைநாட்டியமை விசேட அம்சமாகும்.

அத்துடன் இந்த உலகக் கிண்ண தொடரில் மொஹமட் ஷமி தனது 3 ஆவது 5 விக்கெட் குவியலைப் பெற்றுக்கொண்டார்.

மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்கைளப் குவித்தது.

உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி ஒன்றில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் கணிசமான ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 50 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரோஹித் ஷர்மா 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஷுப்மான் கில்லும் விராத் கோஹ்லியும் 2ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசைப் பிடிப்புக்குள்ளான கில் 79 ஓட்டங்களுடன் தற்காலிக ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் அதே விக்கெட்டில் மேலும் 163 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 327 ஓட்டங்களாக உயர்த்திய விராத் கோஹ்லி 117 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி குவித்த 3ஆவது சதம் இதுவாகும்.

113 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை அடித்தார்.

மறுபக்கத்தில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது இரண்டாவது உலகக் கிண்ண சதமாகும்.

சூரியகுமார் யாதவ் (01) ஆட்டம் இழந்த பின்னர் உபாதையிலிருந்து மீண்டு வந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஷுப்மான் கில் மேலும் ஒரு ஓட்டத்தைப் பெற்று 80 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை அடித்தார்.

கே. எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் டிம் சௌதீ 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

398 ஓட்டங்கள் என்ற கடினமாக வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை யும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்று 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஆரம்ப வீரர்களான டெவன் கொன்வே, ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் தலா 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. (39 - 2 விக்.)

ஆனால், அணித் தலைவர் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடனும் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

டெரில் மிச்செல் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்த அடுத்த பந்தில் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கேன் வில்லியம்சன் 52 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது பிடியைத் தவறவிட்ட மொஹமத் ஷமி, அவரது விக்கெட்டைக் கைப்பற்றி பதிலடிகொடுத்தார்.

வில்லியன்சன், டெரில் மிச்செல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 181 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

வில்லியம்சனைத் தொடர்ந்து டொம் லெதம் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (220 - 4 விக்.)

அதன் பின்னர் ஓட்ட வேகம் சற்று குறைந்தால் நியூஸிலாந்து நெருக்கடிக்குள்ளானது.

எனினும் டெரில் மிச்செலும் க்ளென் பிலிப்ஸும் மீண்டும் ஓட்டவேகத்தை சற்று அதிகரிக்கச் செய்தனர்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது க்ளென் பிலிப்ஸ் 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆரம்பத்துடுப்பாட்டவீரராக தொடர்ந்து போராடிய டெரில் மிச்செல் 134 ஓட்டங்களைப் பெற்றபோது சமியின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இந்திய அணியின் பந்துவீச்சில் 57 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய மொஹமட் ஷமி இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/169408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே போட்டியில் விராட் கோலியின் 3 சாதனைகள்

sp-news-02.jpg

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி. இதன் மூலம் சச்சினின் முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார் கோலி.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் ஷர்மா அதிரடியா ஆடி 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் முதுகு பிடிப்பு காரணமாக 79 ரன் எடுத்திருந்த நிலையில், வெளியேறினார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அவர் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே 49 சதத்துடன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில், இன்றைய போட்டியில் அவர் தனது 50ஆவது சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் அவர் சச்சினின் சாதனையை முறியடித்ததோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தனது சதத்தை நிறைவு செய்த விராட், சச்சின் முன் தலை வணங்கினார். மும்பை மைதானமே அவரது இந்த சாதனையால் அதிர்ந்தது.

மேலும், ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி இன்று படைத்தார். 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதையும் அவர் இன்று கடந்துள்ளார். இதையடுத்து அணியின் ரன் ரேட்டை உயர்த்த அதிரடி காட்டிய விராட் 117 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

Virat Kohli Profile - Cricket Player India | Stats, Records, Video

https://thinakkural.lk/article/281374

  • கருத்துக்கள உறவுகள்

SA 44/4 in 14 overs

Chokers என்பதை அடிக்கடி நிரூபிக்கிறாங்கள்!! 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தி போல் இறங்கும் ஆஸ்திரேலியாவின் துல்லியப் பந்துவீச்சு - திணறும் தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

22 நிமிடங்களுக்கு முன்னர்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தா ஈடென் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடனே இந்தியா இறுதிச்சுற்றில் போட்டியிட வேண்டியிருக்கும். எனவே இந்தியா ஆடவில்லை என்றாலும் இந்திய ரசிகர்களும் ஆர்வத்துடனே இந்தப் போட்டியைப் பார்த்து வருகின்றனர்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். கொல்கத்தாவில் நேற்று இரவு மழை பெய்து, காலையிலிருந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங், சீமிங்கிற்கும் சாதகமாக இருக்கிறது.

‘கத்தி’போல் இறங்கிய துல்லியப் பந்துவீச்சு

பவுமா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க், ஹேசல்வுட் துல்லியமான லைன் லென்த்தில் பந்துவீசினர். இதனால் தென் ஆப்பிரிக்க பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிலும் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் பவுமா டக்-அவுட்டில் விக்கெட் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வேன்டர் டூ சென் களமிறங்கினார்.

ஃபீல்டிங்கில் கலக்கிய வார்னர்

அடுத்தடுத்த ஓவர்களை ஹேசல்வுட், ஸ்டார்க் கட்டுப்கோப்பாகப் பந்து வீசியதால் டீகாக், டூசெனால் ரன் சேர்ப்பதே கடினமாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் தப்பித் தவறி ஏதாவது ஷாட்களை அடித்தாலும் அதையும் லாபுஷேன், வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து ஃபீல்டிங் செய்ததால் தென் ஆப்பிரிக்க அணியால் ரன்களை சேர்க்கவே முடியவில்லை.

 
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு பவுண்டரி கூட இல்லை

ஆறு ஓவர்களாக தென் ஆப்பிரிக்க அணியிடம் இருந்து ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. இதனால் டீ காக் பொறுமை இழந்தார். ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் சரியான லென்த்தில் வீசப்பட்ட பந்தை டீ காக் தூக்கி அடிக்க, கம்மின்ஸ் சிறிது தூரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். டீ காக் 14 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்க்ரம் களமிறங்கி, டூசெனுடன் சேர்ந்தார்.

52 பந்துகளுக்குப் பின்...

ஸ்டார்க் வீசிய 9வது ஓவரில் மார்க்ரம் லெக் திசையில் பவுண்டரி அடித்தார். ஏறக்குறைய 8 ஓவர்களுக்குப் பின் 52 பந்துகளுக்குப் பின் தென் ஆப்பிரிக்க முதல் பவுண்டரி அடித்தது.

பத்து ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை வரலாற்றில் ஓர் அணி பவர்ப்ளேயில் சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

 
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டார்ஸ், ஹேசல்வுட் மிரட்டல்

மிட்ஷெல் ஸ்டார்க் ஏற்கெனவே 5 ஓவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில் மீண்டும் ஓவரை வீச கேப்டன் கம்மின்ஸ் வாய்ப்பளித்தார்.

அதை சரியாகப் பயன்படுத்தி 11வது ஓவரை வீசிய ஸ்டார்க், 5வது பந்தில் மார்க்கரமை வெளியேற்றினார். பாயின்ட் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து, மார்க்ரம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். உலகக்கோப்பைத் தொடரில் 49 பந்துகளில் சதம் அடித்த மார்க்ரம், இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன்னையும் சேர்க்க திணறி விக்கெட்டை இழந்தார்.

ஹேசல்வுட் 12வது ஓவரை வீச வந்தார். ஹேசல்வுட் தனது ஒவ்வொரு ஓவரையும் மிகத் துல்லியமான லைன் லென்த்தில் வீசியதால் அவரின் ஓவரில் ரன் சேர்க்கவே முடியவில்லை. இந்த ஓவரையும் ஹேசல்வுட் மிகத் துல்லியமாக வீசினார். 5வது பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டூசென் 31 பந்துகள் சந்தித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்து. அரையிறுதி பயம், அதிர்ச்சி, பதற்றம் தென் ஆப்பிரிக்க அணியை சூழ்ந்து கொண்டு அவர்களைப் பாடாய்ப்படுத்தியது.

அடுத்து வந்த டேவிட் மில்லர், கிளாசனுடன் சேர்ந்தார். ரன் சேர்க்கத் திணறிய தென் ஆப்பிரி்க்க, கம்மின்ஸ் வீசிய 14வது ஓவரில் கிளாசன், மில்லர் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cd1p5e32jrpo

LIVE
2nd Semi-Final (D/N), Eden Gardens, November 16, 2023, ICC Cricket World Cup
South Africa FlagSouth Africa                  (27/50 ov) 95/4

South Africa chose to bat.

Current RR: 3.51  • Last 5 ov (RR): 25/0 (5.00)

Live Forecast:SA 207

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
South Africa FlagSouth Africa                            212
Australia FlagAustralia               (22.6/50 ov, T:213) 134/4

Australia need 79 runs from 27 overs.

Current RR: 5.82    • Required RR: 2.92    • Last 5 ov (RR): 17/1 (3.40)

Win Probability:AUS 93.43%  SA 6.57%

  • கருத்துக்கள உறவுகள்

2003க்கு பிற‌க்கு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் இந்தியா எதிர் அவுஸ்ரேலியா
 
வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இந்தியாவுக்கு தான் பாப்போம் ஞாயிற்றுக் கிழ‌மை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்ரிக்கா தவறவிட்ட கேட்சுகளை வெற்றிக்கான திருப்புமுனையாக மாற்றிய ஆஸ்திரேலியா

பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 16 நவம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏய்டன் மார்க்ரம் 45வது ஓவரை வீசினார். ஆஸ்திரேலியா வெற்றிக்கான ரன்களை தேடிக் கொண்டிருந்தது. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வலுவான பேட்டர்கள் இல்லை. களத்தில் நின்றது கேப்டன் பேட் கம்மின்ஸும் மிட்செல் ஸ்டார்க்கும்.

இருவருமே தடுப்பாட்டம் ஆடி ஒவ்வொரு ரன்னாய் சேர்த்துக் கொண்டிருந்தனர். மார்க்ரம் வீசிய 2வது பந்து அது. பேட் கம்மின்ஸ் பேட்டின் நுனியில் பட்டு ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் டி காக் வசம் சென்றது. ஆனால் அதை டி காக்கால் பிடிக்க முடியவில்லை.

ஆட்டத்தையே தலைகீழாக மாற்றும் வல்லமை அந்த கேட்சுக்கு இருந்தது. அதிர்ஷடம் தென்னாபிரிக்கா பக்கம் இல்லை என வர்ணணையாளர்கள் வர்ணித்தனர்.

ஏய்டன் மார்க்ரம் முகத்தில் சோகம் நிறைந்திருந்தது. கேப்டன் டெம்பா பவுமா நொந்து கொண்டார். ஒரேயொரு கேட்ச், ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும். அதைப் பயன்படுத்தி தென்னாப்ரிக்கா தனது காயங்களுக்கு மருந்தளித்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை.

தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவு கானல் நீராகிப் போனது. விக்கெட்டை விடாமல் போராடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸே, இறுதியில் வின்னிங் ஷாட் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

 
உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடரும் சோகம்

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 8வது முறையாக முன்னேறியுள்ளது. அரையிறுதியுடன் வெளியேறும் சோகம் ஐந்தாவது முறையாக தென் ஆப்பிரிக்காவை துரத்துகிறது..

1992ஆம் ஆண்டிலிருந்து…

ஆஸ்திரேலிய அணி 12 முறை உலகக்கோப்பையில் பங்கேற்று 8வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து அரையிறுதிப் போட்டியைக் கடக்க முடியவில்லை இறுதிப்போட்டி என்பது கனவாகவே இருந்து வருகிறது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

வரும் 19ஆம் தேதி ஆமதாபாத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் இந்திய அணியை எதிர்கொள்கிறது 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலிய அணி. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

உலகக்கோப்பையின் தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 தோல்விகளைச் சந்தித்து ஆஸ்திரேலியா மோசமாகத் தொடங்கியது. ஆனால், மீண்டு வந்து அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஐந்து முறை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் நெருக்கடி

ஆடுகளம், காலநிலை, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை ஹேசல்வுட், ஸ்டார்க் பயன்படுத்திக்கொண்டு தொடக்கத்திலேயே தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தனர்.

அதன்பின் மில்லர், கிளாசன், கோட்ஸீ கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் நிதானமாக பேட் செய்த மில்லர் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 
உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்பிரிக்கா என்றாலே இதுதானா?

தென் ஆப்பிரிக்கா அணி என்றாலே, முக்கியமான போட்டிகளில், தருணங்களில் பதற்றப்படும், வாய்ப்பைத் தவறவிடும் என்ற கூற்றை இந்த முறையும் உண்மையாக்கியது.

ஆனால், போட்டியின் முடிவை தங்களுக்குச் சாதகமாக மாற்ற தென் ஆப்ரிக்கா போராடியது. ஆனால், 212 ரன்களை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்வது கடினமானது. இன்னும் கூடுதலாக 50 ரன்களை சேர்த்திருந்தால், ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் சாய்ந்திருக்கும்.

தோல்விக்கு காரணம் என்ன?

தென் ஆப்பிரிக்கா அணியில் ஷாம்ஸி, மகராஜ், கோட்ஸி, மார்க்ரம் ஆகிய 4 பேரும் மிகச் சிறப்பாகப் பந்துவீசி, ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால், இவர்களின் பங்களிப்புக்கு வலுசேர்க்கப் போதுமான ஸ்கோர் இல்லை என்பது வருத்தமானது.

அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி எதிர்பார்த்த அளவு ஃபீல்டிங்கை இதுபோன்ற முக்கியமான ஆட்டங்களில் வெளிப்படுத்தவில்லை. ஃபீல்டிங்கிற்கு பெயரெடுத்த தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் மட்டும் 4 கேட்சுகளை கோட்டைவிட்டது. கேப்டன் பவுமா, கிளாசன், டீகாக், ஷாம்ஸி என 4 முக்கிய கேட்சுகளை கோட்டைவிட்ட போதே ஆட்டம் கையைவிட்டுச் சென்றுவிட்டது.

அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க தோல்விக்கு கேப்டன் பவுமாவின் முடிவு முக்கியக் காரணம். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், காலநிலை இருப்பது தெரிந்தும் டாஸ் வென்று ஏன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

 
உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன்

ஆனால், ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிப் போட்டி என்றவுடன் தங்களின் கடந்த கால அனுபவங்களை ஒன்று திரட்டி எவ்வாறெல்லாம் எதிரணிகளைக் குழப்புவது, சிதைப்பது, வீழ்த்துவது என்பதைத் திட்டமிட்டு செய்தனர். 213 ரன்களை எளிதாக சேஸிங் செய்ய நல்லத் தொடக்கம் தேவை என்பதை அறிந்து வார்னர், டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.

டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பணியை பாதி முடித்துவிட்டது. ஆட்டநாயகன் விருதும் டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. பந்துவீச்சிலும் தென் ஆப்பிரிக்காவின் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஹெட் ஏற்படுத்தினார்.

பந்துவீச்சில் துல்லியம்

பவுமா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க், ஹேசல்வுட் துல்லியமான லைன் லென்த்தில் பந்துவீசினர். இதனால் தென் ஆப்பிரிக்க பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.

அதிலும் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் பவுமா டக்-அவுட்டில் விக்கெட் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வேன்டர் டூ சென் களமிறங்கினார்.

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பீல்டிங்கில் கலக்கிய வார்னர்

அடுத்தடுத்த ஓவர்களை ஹேசல்வுட், ஸ்டார்க் கட்டுப்கோப்பாகப் பந்து வீசியதால் டீகாக், டூசெனால் ரன் சேர்ப்பதே கடினமாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் தப்பித் தவறி ஏதாவது ஷாட்களை அடித்தாலும் அதையும் லாபுஷேன், வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து ஃபீல்டிங் செய்ததால் தென் ஆப்பிரிக்க அணியால் ரன்களை சேர்க்கவே முடியவில்லை.

தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு பவுண்டரி கூட இல்லை

ஆறு ஓவர்களாக தென் ஆப்பிரிக்க அணியிடம் இருந்து ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. இதனால் டீ காக் பொறுமை இழந்தார். ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் சரியான லென்த்தில் வீசப்பட்ட பந்தை டீ காக் தூக்கி அடிக்க, கம்மின்ஸ் சிறிது தூரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். டீ காக் 14 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்க்ரம் களமிறங்கி, டூசெனுடன் சேர்ந்தார்.

ஸ்டார்ஸ், ஹேசல்வுட் மிரட்டல்

மிட்செல் ஸ்டார்க் ஏற்கெனவே 5 ஓவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில் மீண்டும் ஓவரை வீச கேப்டன் கம்மின்ஸ் வாய்ப்பளித்தார். ஏனென்றால் ஆடுகளமும், காலநிலையும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ஸ்டார்க்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

அதைச் சரியாகப் பயன்படுத்தி 11வது ஓவரை வீசிய ஸ்டார்க், 5வது பந்தில் மார்க்கரம்மை வெளியேற்றினார். பாயின்ட் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து, மார்க்ரம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

உலகக்கோப்பைத் தொடரில் 49 பந்துகளில் சதம் அடித்த மார்க்ரம், இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன்னையும் சேர்க்க திணறி விக்கெட்டை இழந்தார். 12வது ஓவரை ஹேசல்வுட் வீச வந்தார்.

ஹேசல்வுட் தனது ஒவ்வொரு ஓவரையும் மிகத் துல்லியமான லைன் லென்த்தில் வீசியதால் அவரின் ஓவரில் ரன் சேர்க்கவே முடியவில்லை. இந்த ஓவரையும் ஹேசல்வுட் மிகத் துல்லியமாக வீசினார். 5வது பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டூசென் 31 பந்துகள் சந்தித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்து.

 
உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மில்லர், கிளாசன் பொறுமை

அடுத்து வந்த டேவிட் மில்லர், கிளாசனுடன் சேர்ந்தார். ரன் சேர்க்கத் திணறிய தென் ஆப்பிரி்க்க, கம்மின்ஸ் வீசிய 14வது ஓவரில் கிளாசன், மில்லர் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

கிளாசன், மில்லர் விக்கெட் இழந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் நிதானமாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்திருந்து, அடுத்த 10 ஓவர்களில் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து, 39 ரன்கள் சேர்த்திருந்தது.

ஸம்பா வீசிய 27-வது ஓவரில் கிளாசன் இரு சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்த முயன்றார். 28 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை எட்டியது. 30 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்

டிராவிஸ் ஹெட் 31வது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் கிளாசன் பவுண்டரிகள் விளாசி 8 ரன்கள் சேர்த்தார். ஆனால் 4வது பந்தில் க்ளீன் போல்டாகி, கிளாசன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கிளாசன், மில்லர் இருவரும்தான் அணியை மீட்டெடுக்கும் வகையில் இந்த ஜோடி பிரிந்தது பெரிய பின்னடைவாகும்.

அடுத்து வந்த யான்சென் வந்த வேகத்தில் கால்காப்பில் வாங்கி டக்-அவுட்டில் வெளியேறினார். 31வது ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு119 ரன்கள் சேர்த்திருந்தது.

கோட்ஸீ, மில்லர் நிதானம்

ஆனால், ஸ்ட்ரைக்கே மில்லரிடம் வழங்கி கோட்ஸி பெரிதாக ஷாட்களை ஆடாமல் ஒதுங்கினார். ஆனால், மில்லர் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ரன்களைச் சேர்த்தார். 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து போராடியது.

கோட்ஸீ நிதானமாக பேட் செய்த நிலையில் கம்மின்ஸ் ஓவரில் விக்கெட்டை இழந்தார். கம்மின்ஸ் வீசிய 44வது ஓவரில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்து கோட்ஸி 19 ரன்னில் பெவிலியின் திரும்பினார். 7வது விக்கெட்டுக்கு கோட்ஸீ, மில்லர் 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து களமிறங்கிய கேசவ் மகராஜ், மில்லருடன் சேர்ந்தார். 45 ஓவர்களுக்கு மேல் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி மில்லர் ரன் சேர்க்கப் போராடினார். டெய்லண்டரான கேசவ் மராஜை எளிதாக வெளியேற்றினார் ஸ்டார்க்.

 
உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மில்லர் சாதனை சதம்

ஸ்டார்க் வீசிய 47வது ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து மகராஜ் 4 ரன்னில் வெளியேறினார். கம்மின்ஸ் 48-வது வீசினார், முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, மில்லர் 115 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக நாக்-அவுட் போட்டிகளில் சதம் அடித்த முதல் பேட்டர் மில்லர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆனால் சதம் அடித்து நீண்ட நேரம் மில்லர் நிலைக்கவில்லை. அதேஓவரில் டீப் ஸ்குயர் லெக் திசையில் தூக்கி அடித்த பந்த ஹெட் கேட்ச் பிடிக்க மில்லர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரபாடா 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்ரிக்க அணி 49.4 ஓவர்களில் 212 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளும், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிரடி ஆட்டம்

ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டு ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட் சரிவு

ஏழாவது ஓவரை மார்க்ரம் வீச வந்தார். முதல் பந்திலேயே வார்னர் க்ளீன் போல்டாகி 29 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு வார்னர், ஹெட்60 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து களமிறங்கிய மார்ஷ் ரன் ஏதும் சேர்க்காமல் வேன்டர் டூசெனிடம் கேட்ச் கொடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது.

டிராவிஸ் ஹெட் அரைசதம்

கோட்ஸீ வீசிய 12வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார்.

மகராஜ் வீசிய 15-வது ஓவரில் க்ளீன் போல்டாகி 52 ரன்களில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியா திணறல்

நான்காவது விக்கெட்டுக்கு லாபுஷேன் களமிறங்கி, ஸ்மித்துடன் இணைந்தார். இருவரையும் பிரிக்க ஷாம்ஸி பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஷாம்ஸி, மகராஜ் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய ரன்ரேட் சரிந்து, ஓவருக்கு 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.ஷாம்ஸி, மகராஜ் இருவரும் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர்.

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை ஷாம்ஸி, மகராஜ்

ஷாம்ஸி, மகராஜ் ஓவரில் ரன் சேர்க்க லாபுஷேன் தடுமாறினார். பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டு அது பவுண்டரியாகத்தான் முடிந்தது. ஷாம்ஸி வீசிய 22-வது ஓவரில் லாபுஷேன் கால்காப்பில் வாங்கி 18 ரன்களில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் மேக்ஸ்வெல் களமிறங்கி ஒரு ரன்னில் ஷாம்ஸி வீசிய 24-வது ஓவரில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேக்ஸ்வெல் சராசரி

இதுவரை தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக சர்வதேச அளவில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர்கூட அடித்தது இல்லை என்பது இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது.

ஆஸ்திரேலிய அணி 106 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 31 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துட்ப தடுமாறியது.

ஆறாவது விக்கெட்டுக்கு இங்கிலிஸ் களமிறங்கி, ஸ்மித்துடன் சேர்ந்தார். மகாராஜ், ஷாம்ஸி இருவரும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சவாலாக இருந்தனர். கோட்ஸி வீசிய 34வது ஓவரில் ஸ்மித் 30 ரன்னில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து மிட்செல் ஸ்டார்க், வந்து இங்கிலிஸுடன் இணைந்தார். தேவைப்படும் ரன்களைவிட, பந்துகள் அதிகம் இருந்ததால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் பந்துகளை வீணடிப்பதில் கவலைப்படவில்லை.

ஆனால், 39வது ஓவரை கோட்ஸி வீசினார். கோட்ஸி வீசிய 5வது பந்து யார்கராக வீசவே இங்கிலிஸ் கிளீன் போல்டாகி 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

போராட்டம் வீண்

உலகக்கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாற்பது ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய வெற்றிக்கு 60 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆஸ்திரேலிய வெற்றிக்கு கடைசி 48 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. மார்க்ரம் 43-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 3வது பந்தை கம்மினிஸ் லெக்திசையில் தூக்கி அடிக்க அது மில்லரிடம் கேட்சாகும் என எதிர்பார்க்கப்பட்டு முன்கூட்டியே தரையில் பட்டு வந்தது.

மார்க்ரம் 45வது ஓவரை வீசினார். 2வது பந்து கம்மின்ஸ் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது, ஆனால் அந்தப் பிடிக்க டீகாக் தவறிவிட்டார். ஆனால், ஸ்டார், கம்மின்ஸ் கடைசி வரை போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 215 ரன்களை எட்டி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கம்மின்ஸ்14ரன்களுடனும், ஸ்டார்க் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தென் ஆப்ரிக்கா தரப்பில் கோட்ஸி, ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

https://www.bbc.com/tamil/articles/cy02ndn1z38o

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

2003க்கு பிற‌க்கு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் இந்தியா எதிர் அவுஸ்ரேலியா
 
வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இந்தியாவுக்கு தான் பாப்போம் ஞாயிற்றுக் கிழ‌மை 

இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே கருதுகிறார்கள்.

https://www.sportingnews.com/au/cricket/news/narendra-modi-stadium-pitch-report-records-highest-scores-odis-cwc-2023/1c128ad4cb8838c5223df5a9

மைதான அறிக்கை பற்றிய இந்த இணையத்தளத்தில் உள்ள விளையாட்டு சூதாட்ட விளம்பரத்தில் இந்திய அணிக்கு 1.50 உம் அவுஸ்ரேலிய அணிக்கு 2.75 என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளத்தில் குறிப்பிட்ட சராசரி ஓட்டம் 243. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய போது 244 ஓட்டங்களை பெற்றுள்ளது அதனை தென்னாபிரிக்க அணி 47.3 ஓவர்களில் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

மைதானம் மெதுவானது மற்றும் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகம் என கூறப்பட்டுள்ளது.

மைதான ஈரப்பதன் விபரம் தெரியவில்லை, ஆனால் ஆடுகளம் மெதுவாகும் பட்சத்தில் இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடவேண்டும்.

அவுஸ்ரேலிய அணியின் இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தவிர்த்து  முன்னிலை துடுப்பாட்ட காரர்கள் வலது கை ஆட்டக்காரர்களாக உள்ளதனால் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் மிகவும் சாதகம்.

இந்தியணி பெரும்பாலும் வலது கை ஆட்டக்காரர்கள் கொண்ட அணி ஸ்ராக்கின் பந்து வீச்சினை சமாளித்து விட்டால் இந்தியணிக்கு பெரிதாக பிரச்சினை இல்லை.

ஆனாலும் இறுதியாக நியுசிலாந்துடன் விளையாடிய போட்டியில் இந்தியணி அதிர்ஸ்டவசமாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்றாலும், முதல் இனிங்ஸில் நிலவிய அதிஅக் வெப்பநிலை எதிரணி பந்துவீச்சிற்கு சாதகமற்ற நிலையிலும் இந்தியணி எடுத்த ஓட்டங்களை நியுசிலாந்து அணி மின்விளக்கு வெளிச்சத்தில் வேகப்பந்து வீச்சு மற்றும் பழைய ஆடுகலம் இரண்டாவது இனிங்ஸில் சுழற்பந்துவீச்சாளருக்கு சாதகமான சூழ்னிலை நிலவிய போது நியுசிலாந்து அணி அதிக ஓட்ட அழுத்தங்களை எழிதாக கையாண்டது.

இவ்வளவிற்கும் இந்தியணியில் உலக புகழ்பெற்ற துடுப்பாட்ட, பந்துவீச்சு கொண்ட அணி ஆனால் சாதாரண நியுசிலாந்து அணி அத்தகைய இந்திய அணீயினை கையாண்ட விதத்துடன் ஒப்பிடும்போது இந்தியணி மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.

தற்போது மிக பலமான கோலியாத் போன்று திகழ்ந்த இந்தியணி நியுசிலாந்து போட்டியின் பின்னர் பலவீனமான அணி போல ஒரு தோற்றத்தினை உருவாக்கியுள்ளதுதான் சற்று சிந்திக்க வைக்கிறது.

அவுஸ்ரேலிய அணி நியுசிலாந்து அணியினை விட நீண்ட தரமான துடுப்பாட்ட (வெற்றியினை தீர்மானிக்கும்) மற்றும் சிறப்பான பந்து வீச்சினை கொண்ட அணி.

ஆகையால் இந்திய மைதானம் தற்போதுள்ளது போல் இல்லாமல் உயிரற்ற மைதானமாக இருக்கவேண்டும் (துடுப்பாட்டத்திற்கு சாதகமான) அதில் இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடி பெரிய ஓட்டத்தினை எடுக்க வேண்டும், பின்னர் இரண்டாவது இனிங்ஸில் மைதானம் மெதுவாகும் போது அது இந்தியணிக்கு சாதகமாக அமையும்.

இறுதி போட்டிக்கு இந்தியா வரும் என்பதடிப்படையில் இறுதிப்போட்டிக்கான மைதானத்தினை துடுப்பாட்டத்திற்கு சாதகமாக ஏற்கனவே தயார்படுத்தியிருந்தால் இந்தியணிக்கு வாய்ப்பு அதிகம்.

ஆனால் என்னை பொறுத்தவரை அவுஸ்ரேலிய அணியினை எதிர்கொள்வது மிகவும் கடினமான விடயம், குறிப்பாக ஆடுகளம் சிறிது பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தாலும் சிறிது கடினம்தான்.

ஆனாலும் இந்தியா வெல்லவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு (இந்தியணி அதற்கு தகுதியான அணி), அவுஸ்ரேலியா வென்றால் அவர்களின் இம்சை தாங்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இந்தியணி அதற்கு தகுதியான அணி), அவுஸ்ரேலியா வென்றால் அவர்களின் இம்சை தாங்கமுடியாது.

இந்தியா வென்றால் உலகம் முழுக்க இவர்களின் அலப்பறை தாங்க முடியாது சாமீ😎, சிலவேளை அமெரிக்காவில் டொலர்கள் கூட வீசுவார்கள் வீதியில் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியுமா?

கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
  • பதவி, பிபிசி நிருபர்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நேற்று (வியாழன், நவம்பர் 16) நடைபெற்ற உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், இந்தப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வலுவான மறுபிரவேசமாக அமைந்தது.

இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியை, மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் திணறவைத்தனர். இந்த ஆரம்ப அடியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியால் மீள முடியவில்லை. அதைத் தொடர்ந்து டேவிட் மில்லர் சதம் அடித்தாலும் அவர்களால் 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெறும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியது ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தென் ஆப்பிரிக்க அணி முற்றிலும் பின்தங்கியது. இங்கிருந்து டேவிட் மில்லர் களமிறங்கினாலும், ஸ்கோர் மேலும் 100 ரன்களைக் கடக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் ரன் குவிக்கத் துவங்கிய வேகம், மிக விரைவில் இந்த போட்டி ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக அமையும் என்று தோன்றியது.

 
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர்ந்து 8 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது

ஆஸ்திரேலியாவின் ஆட்டம்

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் ரன் குவிக்கத் துவங்கிய வேகம், மிக விரைவில் இந்த போட்டி ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக அமையும் என்று தோன்றியது.

ஆனால் இந்த ஜோடி முறிந்ததும் ஆஸ்திரேலியா ஏழு விக்கெட்டுகளை ஒவ்வொன்றாக இழந்தது. பவுமாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதில் ரன்களை எடுக்க விடவில்லை. ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு ரன்னுக்கும் போராட வேண்டியிருந்தது.

இந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு தோல்விகளுடன் தொடங்கியது.

முதல் போட்டியில் இந்தியாவிடம் தோற்று, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர்ந்து 8 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கம்மின்ஸ் கூறினார்

கம்மின்ஸ் என்ன சொன்னார்?

போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “டக் அவுட்டில் (dug out) அமர்ந்திருப்பது எளிதாக இருந்தது. ஆனால் அடுத்த சில மணி நேரம் மிகவும் கவலையாக இருந்தது. இது மிகவும் வலுவான முயற்சியுடன் கூடிய சிறந்த போட்டியாக இருந்தது. ஆடுகளம் சுழல் பந்துகளுக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். டிராவிஸ் ஹெட் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். போட்டி முழுவதும் வெவ்வேறு பந்து வீச்சாளர்கள் பங்களித்துள்ளனர்," என்றார்.

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கம்மின்ஸ் கூறினார்.

மேலும் பேசிய அவர், "அணிக்கு நல்ல விஷயம் என்னவென்றால், எங்களில் சிலர் இதற்கு முன்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளோம். 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மறக்கமுடியாதது. இப்போது மற்றொரு உலகக் கோப்பை இறுதி, அதுவும் இந்தியாவில்... மிகவும் ஆர்வமாக உள்ளோம்,” என்றார்.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தென் ஆப்பிரிக்க கேப்டன், "நாங்கள் தொடங்கிய விதம் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அவர்களின் சிறப்பான தாக்குதல் எங்கள் டாப் ஆர்டரைச் சிதைத்தது. அவர்கள் எங்களை முழு அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்," என்றார்.

போட்டியின் ஆட்டநாயகனான டிராவிஸ் ஹெட், "இது மிகவும் பதற்றமான முடிவு. இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். நான் இவ்வளவு சுழலும் பந்துகளைப் பார்த்ததில்லை." என்றார்.

இந்திய அணியுடனான இறுதிப் போட்டியைப் பற்றிப் பேசிய ஹெட், "அவர்களின் தாக்குதல் ஆட்டம் அபாரமானது," என்றார்.

 
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்க அணி ஐந்தாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடியது. இதுவரை ஒருமுறை கூட இறுதிச் சுற்றுக்கு வர முடியவில்லை

என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டன?

  • உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதில்லை.
  • 1999 உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடிய ஆட்டம் டை ஆனது, 2007 மற்றும் 2023-இல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
  • தென் ஆப்பிரிக்க அணி ஐந்தாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடியது. இதுவரை ஒருமுறை கூட இறுதிச் சுற்றுக்கு வர முடியவில்லை.
  • உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் சதம் அடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர். 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஃபாஃப் டு பிளெசிஸ் எடுத்த 82 ரன்கள் சாதனையை அவர் முற்யடித்தார்.
  • இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா பவர்பிளேயின் முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை மட்டுமே எடுத்தது. இது இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேயின் போது செய்யப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோராகும்.
 
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவால் ஆஸ்திரேலியாவை வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது

இந்தியா மூன்றாவது முறை உலகக் கோப்பையை வெல்லுமா?

வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடக்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின்மூலம் மூன்றாவது முறை உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

இந்திய அணி கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திர சிங் தோனி தலைமையில் இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.

1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா முதன்முறையாக இந்த கோப்பையை வென்றது.

ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்காவை அரையிறுதியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தின் முதல் போட்டியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.

இப்போது மீண்டும் இந்த இரு அணிகளும், ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.

 
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றியது

மீண்டும் நிழலாடும் 2003 தோல்வி

ஆஸ்திரேலிய அணி 8 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்தியா நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. கோப்பையை இரண்டு முறை வென்றுள்ளது. 2003-இல் இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் திருப்தி அடைய வேண்டியிருந்தது.

2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அணி, ஆஸ்திரேலியாதான். இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றியது.

வியாழன் அன்று ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்தபோது, '2003 WC' மீண்டும் சமூக வலைதளமான எக்ஸ்-இல் ட்ரெண்டாக்கத் தொடங்கியது.

பல பயனர்கள், "இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதன் மூலம், 2003 இறுதிப் போட்டியின் கணக்கை இந்தியா தீர்க்கும்," என்று எழுதினர்.

 
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய மண்ணில் நடந்த 71 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 33 போட்டிகளில் சமமாக வெற்றி பெற்றுள்ளன

இறுதி ஆட்டத்தில் கடும் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் கடந்தகால வரலாறு ஊக்கமளிப்பதாக இல்லை.

இரு அணிகளும் இதுவரை 150 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா 83 வெற்றிகளுடன், இந்தியாவின் 57 வெற்றிகளைவிட வெகு முன்னிலையில் உள்ளது.

உலகக் கோப்பைத் தொடர்களில் இரு அணிகளும் தலா 13 ஆட்டங்களில் மோதியிருக்கின்றன. இங்கும் ஆஸ்திரேலியா 8-5 என முன்னிலையில் உள்ளது.

இந்திய மண்ணில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு நடந்த 71 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 33 போட்டிகளில் சமமாக வெற்றி பெற்றுள்ளன.

மேலும், இந்த ஆண்டு இரு அணிகள் மோதிய 7 போட்டிகளின் முடிவுகளைப் பார்த்தால், நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா சற்று முன்னிலை பெற்றுள்ளது.

நடப்பு உலகக் கோப்பையைப் பற்றிப் பேசினால், அது இந்தியாவின் டாப் ஆர்டராக இருந்தாலும் சரி, மிடில் ஆர்டராக இருந்தாலும் சரி, அனைவரும் முழு ஃபார்மில் இருக்கிறார்கள்.

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி எடுத்த 711 ரன்கள் தான் எந்த அணியின் பேட்ஸ்மேனும் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். அதே நேரத்தில் ரோஹித் சர்மா (550 ரன்கள்), ஷ்ரேயாஸ் ஐயர் (526 ரன்கள்) ஆகியோரும் பின்தங்கவில்லை.

மறுபுறம், அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்ச ரன்களை எடுத்தது டேவிட் வார்னர் (528). அவருடன் இணைந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் தலா இரண்டு சதங்களைப் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் முன்னணியில் இருக்கும் முகமது ஷமி. 6 போட்டிகளில் மட்டுமே 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

விக்கெட்களில், இந்தியாவைப் பொறுத்தவரை, ஜஸ்பிரித் பும்ரா (18), ரவீந்திர ஜடேஜா (16), குல்தீப் யாதவ் (15), முகமது சிராஜ் (13) ஆகியோரும் பின்தங்கவில்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஸ் ஹேசில்வுட் (14), மிட்செல் ஸ்டார்க் (13) ஆகியோரும் எந்த சூழ்நிலையிலும் அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் பலரால் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதை ஒரு பலவீனமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்ததும் நினைவுபடுத்தப்படுகிறது.

ஆறாவது பந்துவீச்சாளர் அல்லது ஆல் ரவுண்டர் தேவையா என்ற சிக்கலும் இந்திய அணியில் இன்னும் நீடித்து வருகிறது.

எனவே, இந்த உலகக் கோப்பையின் இறுதிப் ஆட்டத்தில் இந்தியா எளிதாக வென்று விடும் எனக் கூற முடியாது. கடும் போட்டி நிலவும் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c102d003ed3o

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே கருதுகிறார்கள்.

https://www.sportingnews.com/au/cricket/news/narendra-modi-stadium-pitch-report-records-highest-scores-odis-cwc-2023/1c128ad4cb8838c5223df5a9

மைதான அறிக்கை பற்றிய இந்த இணையத்தளத்தில் உள்ள விளையாட்டு சூதாட்ட விளம்பரத்தில் இந்திய அணிக்கு 1.50 உம் அவுஸ்ரேலிய அணிக்கு 2.75 என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளத்தில் குறிப்பிட்ட சராசரி ஓட்டம் 243. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய போது 244 ஓட்டங்களை பெற்றுள்ளது அதனை தென்னாபிரிக்க அணி 47.3 ஓவர்களில் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

மைதானம் மெதுவானது மற்றும் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகம் என கூறப்பட்டுள்ளது.

மைதான ஈரப்பதன் விபரம் தெரியவில்லை, ஆனால் ஆடுகளம் மெதுவாகும் பட்சத்தில் இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடவேண்டும்.

அவுஸ்ரேலிய அணியின் இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தவிர்த்து  முன்னிலை துடுப்பாட்ட காரர்கள் வலது கை ஆட்டக்காரர்களாக உள்ளதனால் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் மிகவும் சாதகம்.

இந்தியணி பெரும்பாலும் வலது கை ஆட்டக்காரர்கள் கொண்ட அணி ஸ்ராக்கின் பந்து வீச்சினை சமாளித்து விட்டால் இந்தியணிக்கு பெரிதாக பிரச்சினை இல்லை.

ஆனாலும் இறுதியாக நியுசிலாந்துடன் விளையாடிய போட்டியில் இந்தியணி அதிர்ஸ்டவசமாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்றாலும், முதல் இனிங்ஸில் நிலவிய அதிஅக் வெப்பநிலை எதிரணி பந்துவீச்சிற்கு சாதகமற்ற நிலையிலும் இந்தியணி எடுத்த ஓட்டங்களை நியுசிலாந்து அணி மின்விளக்கு வெளிச்சத்தில் வேகப்பந்து வீச்சு மற்றும் பழைய ஆடுகலம் இரண்டாவது இனிங்ஸில் சுழற்பந்துவீச்சாளருக்கு சாதகமான சூழ்னிலை நிலவிய போது நியுசிலாந்து அணி அதிக ஓட்ட அழுத்தங்களை எழிதாக கையாண்டது.

இவ்வளவிற்கும் இந்தியணியில் உலக புகழ்பெற்ற துடுப்பாட்ட, பந்துவீச்சு கொண்ட அணி ஆனால் சாதாரண நியுசிலாந்து அணி அத்தகைய இந்திய அணீயினை கையாண்ட விதத்துடன் ஒப்பிடும்போது இந்தியணி மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.

தற்போது மிக பலமான கோலியாத் போன்று திகழ்ந்த இந்தியணி நியுசிலாந்து போட்டியின் பின்னர் பலவீனமான அணி போல ஒரு தோற்றத்தினை உருவாக்கியுள்ளதுதான் சற்று சிந்திக்க வைக்கிறது.

அவுஸ்ரேலிய அணி நியுசிலாந்து அணியினை விட நீண்ட தரமான துடுப்பாட்ட (வெற்றியினை தீர்மானிக்கும்) மற்றும் சிறப்பான பந்து வீச்சினை கொண்ட அணி.

ஆகையால் இந்திய மைதானம் தற்போதுள்ளது போல் இல்லாமல் உயிரற்ற மைதானமாக இருக்கவேண்டும் (துடுப்பாட்டத்திற்கு சாதகமான) அதில் இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடி பெரிய ஓட்டத்தினை எடுக்க வேண்டும், பின்னர் இரண்டாவது இனிங்ஸில் மைதானம் மெதுவாகும் போது அது இந்தியணிக்கு சாதகமாக அமையும்.

இறுதி போட்டிக்கு இந்தியா வரும் என்பதடிப்படையில் இறுதிப்போட்டிக்கான மைதானத்தினை துடுப்பாட்டத்திற்கு சாதகமாக ஏற்கனவே தயார்படுத்தியிருந்தால் இந்தியணிக்கு வாய்ப்பு அதிகம்.

ஆனால் என்னை பொறுத்தவரை அவுஸ்ரேலிய அணியினை எதிர்கொள்வது மிகவும் கடினமான விடயம், குறிப்பாக ஆடுகளம் சிறிது பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தாலும் சிறிது கடினம்தான்.

ஆனாலும் இந்தியா வெல்லவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு (இந்தியணி அதற்கு தகுதியான அணி), அவுஸ்ரேலியா வென்றால் அவர்களின் இம்சை தாங்கமுடியாது.

அண்ணா சொல்லுறேன் என்று த‌ப்பா நினைக்க‌ வேண்டாம் உந்த‌ சூதாட்ட‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை  எட்டியும் பார்க்க‌ வேண்டாம்.............அதுக்கை போனால் க‌ட‌சியில் ந‌டுதெருவில் தான் நிக்க‌னும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவை துரதிர்ஷ்டம் விட்டபாடில்லை : அவுஸ்திரேலியா 8 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில்

16 NOV, 2023 | 10:57 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 8ஆவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஐந்து தடவைகள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா, அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

  மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அதேவேளை, கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சுமாரான மொத்த எண்ணிக்கையே பெறப்பட்டது.  

தென் ஆபிரிக்காவினால் நிர்ணியிக்கப்பட்ட 213 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இற்றைக்கு 24 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்ளைப் பெற்றதால் அப் போட்டி சம நிலையில் முடிவடைந்திருந்தது.

எனினும் சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருந்ததால் தென் ஆபிரிக்கா போட்டியிலிருந்து வெளியேறியது.

இம்முறை தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது கடும் நெருக்கடிக்கு மத்தியில் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றியையும் உலகக் கிண்ண இறுதி ஆட்ட வாய்ப்பையும் தனதாக்கிக்கொண்டது.

டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 37 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும் டேவிட் வோர்னர் (29), மிச்செல் மார்ஷ் (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தது அவுஸ்திரேலியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது.

தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ட்ரவிஸ் ஹெட் 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (106 - 3 விக்.)

அதன் பின்னர் ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தியபோது லபுஷேன் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதிரடி ஆட்ட நாயகன் க்லென் மெக்ஸ்வெல் ஒரு ஓட்டத்துடன் களம் விட்டகன்றார். (137 - 5 விக்.)

இதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் இங்லிஷ் ஆகிய இருவரும் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மீளுயிர் கொடுத்தனர்.

எனினும் ஸ்டீவன் ஸ்மித் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தவறான அடி காரணமாக ஆட்டம் இழக்க, அவுஸ்திரேலியா மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது. (174 - 6 விக்.)

ஆனால், ஜொஷ் இங்லிஸ், மிச்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெத்தாடி அணிக்கு சிறிய அளவில் உற்சாகத்தைக் கொடுத்தபோதிலும் இங்லிஸ் 28 ஓட்டங்களுடன் வெளியேற ஆட்டத்தில் மீண்டும் பரப்பரப்பு ஏற்பட்டது. (193 - 7 விக்.)

இந் நிலையில் வெற்றிக்கு தேவைப்பட்ட 20 ஓட்டங்களை  மிச்செல் ஸ்டார்க்கும் பெட் கமின்ஸும் 45 பந்துகளை பொறுமையுடன் எதிர்கொண்டு பெற்றுக்கொடுக்க, தென் ஆபிரிக்கா மீண்டும் அதிர்ஷ்டமற்ற அணியாக அரை இறுதியுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் குவின்டன் டி கொக் தவறவிட்ட பிடியும் தென் ஆபிரிக்காவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனலாம்.

மிச்செல் ஸ்டார்க் 16 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸீ 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

டேவிட் மில்லர் சதம் குவித்திராவிட்டால் தென் ஆபிரிக்காவின் நிலை மிகவும் மோசமாகியிருக்கும்.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

12ஆவது ஓவரில் தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

எனினும் ஹென்றி க்ளாசன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 95 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

க்ளாசன் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ ஆரம்பித்தன. எனினும் டேவிட் மில்லர் மிகவும் இக்கட்டான வேளையில் தனித்து போராடி அபார சதம் குவித்து 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

116 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரவிஸ் ஹெட் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட்

https://www.virakesari.lk/article/169496

  • கருத்துக்கள உறவுகள்

Temba Bavuma விற்கும் கேப்டன்சிக்கும் வெகுதூரம். முதல் 2 ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிவிழுது என்றவுடன் Aiden Markram பந்து போட வந்திருக்க வேண்டும். குறிப்பாக இருவருமே இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதால்!!😡

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

Temba Bavuma விற்கும் கேப்டன்சிக்கும் வெகுதூரம். முதல் 2 ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிவிழுது என்றவுடன் Aiden Markram பந்து போட வந்திருக்க வேண்டும். குறிப்பாக இருவருமே இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதால்!!😡

24ர‌ன்ஸ் 4விக்கேட்ட‌ ப‌றி கொடுத்தா எப்ப‌டி ந‌ண்பா பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ முடியும்

 

தென் ஆபிரிக்கா க‌ப்ட‌னை பார்க்க‌ பாவ‌மாய் இருந்திச்சு

கிடைச்ச‌ ந‌ல்ல‌ வாய்ப்பை நேற்று த‌வ‌ற‌ விட்டிட்டின‌ம்............மில்ல‌ரும் அவுட் ஆகி இருந்தா இஸ்கோர் 120க்குள்ள‌ தான் வ‌ந்து இருக்கும் ..............

19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ தான் தென் ஆபிரிக்கா தூக்கி இருக்கு

 

முக்கிய‌மான‌ பெரிய‌ கோப்பைக‌ள் தூக்க‌ வில்லை............எத்த‌னையோ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் தென் ஆபிரிக்கா அணியில் இருந்த‌வை................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Eppothum Thamizhan said:

Temba Bavuma விற்கும் கேப்டன்சிக்கும் வெகுதூரம். முதல் 2 ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிவிழுது என்றவுடன் Aiden Markram பந்து போட வந்திருக்க வேண்டும். குறிப்பாக இருவருமே இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதால்!!😡

தென்னாபிரிக்காவின் நேற்றைய துடுப்பாட்டமாக இருந்தாலும் சரி கள தடுப்பாக இருந்தாலும் சரி போற்றத்தக்கதாக இல்லை.

இனி யார் வென்றா என்ன.

இருந்தாலும் இந்தியா தோற்கணும்.

25 minutes ago, பையன்26 said:

தென் ஆபிரிக்கா க‌ப்ட‌னை பார்க்க‌ பாவ‌மாய் இருந்திச்சு

இவரை ஏன் தான் அணித் தலைவராக வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

அணிகளை ஒழுங்குபடுத்தும் வேலையை அனேகமான நேரங்களில் டி கொக் தான் செய்து கொண்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

இந்தியா வென்றால் உலகம் முழுக்க இவர்களின் அலப்பறை தாங்க முடியாது சாமீ😎, சிலவேளை அமெரிக்காவில் டொலர்கள் கூட வீசுவார்கள் வீதியில் 🤣

நீங்கள் கூறுவதும் சரிதான்.

ஆனால் இந்திய நிர்வாகம் செய்த மைதான குளறுபடியால் ( பழைய மைதானம் பாவித்ததால்) இங்குள்ளவர்கள் நாணய சுழற்சியில் பயன்படுத்தப்பட்ட நாணயமும் மோசடி செய்யப்பட்டது என கூறி இந்தியர்களை மிகவும் இழிமைப்படுத்துகிறார்கள்.

5 hours ago, பையன்26 said:

அண்ணா சொல்லுறேன் என்று த‌ப்பா நினைக்க‌ வேண்டாம் உந்த‌ சூதாட்ட‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை  எட்டியும் பார்க்க‌ வேண்டாம்.............அதுக்கை போனால் க‌ட‌சியில் ந‌டுதெருவில் தான் நிக்க‌னும்

இதுவரை எட்டியும் பார்த்ததில்லை இப்போது நீங்கள் கூறிய பின்புதான் எட்டிப்பார்க்கும் ஆர்வம் வந்துள்ளது ஆனால் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு ஆர்வம் இருக்குமா எனத்தெரியவில்லை.

எனது இந்திய நண்பர் ஒருவர் இதனை முன்னர் முழநேர தொழிலாக செய்துவந்ததாக கூறினார், ஆர்வம் இல்லாததால் அதன் சூட்சுமங்களை காதில் வாங்கவில்லை அடுத்தமுறை அவர் அது பற்றி கூறினால் கவனமாக செவிமடுப்பேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.