Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த அவர் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் வருகை தந்த நிலையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது சுங்கப்பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1332599

  • Replies 54
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய கதாநாயகன் அலி சப்ரி என்று நினைத்துவிட்டேன். இல்லை.... கனடா தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு தைரியமான வீரர் ஆச்சே! என்ன இருந்தாலும் ஒருநாள் கைது செய்யப்படும் நபர் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிசார்ட் பதியுதீன் செய்யாத கடத்தல்களா? அந்த நாட்களில் கடடார் , சவுதியில் இருந்து தங்கம், டாலர்களை கடத்தியவர்தானே. தனது அமைச்சு பதவியை பயன்படுத்தி தாராளமாக முஸ்லிம்களை வன்னி பகுதியில் குடியேத்தினார். வன்னி MP களுக்கும், கத்தோலிக்க சாமியார்களுக்கும் சில எலும்பு துண்டை போட்டு அடக்கி விடடார்கள்.

ரிஷாட் செய்த கடத்தலுடன் ஒப்பிடும் போது அவரது சீஷன் அலி சபரி செய்தது ஒன்றுமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அலி சப்ரி விடுவிப்பு

அலி சப்ரி விடுவிப்பு

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்..

குறித்த சரக்குகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து ஃப்ளை டுபாய் விமானத்தில் நேற்று (23) காலை இலங்கை வந்த போது, இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=173614

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
அடப் பாவி...  91 கைத்தொலை பேசிகளையும்  கொண்டு வந்துள்ளனா ?
மூன்றரை கிலோ தங்கம், 91  கையடக்க தொலைபேசி என...
 78.2 மில்லியன் ரூபா  பெறுமதியான பொருட்களை கடத்தியவனுக்கு,
7.5 மில்லியன் ரூபா தண்டம் மட்டும் தானா?

இவன் எல்லாம்... பாராளுமன்ற படியையே... மிதிக்க லாயக்கு இல்லாத 
கள்ளக் கடத்தல் காரன். இவருக்கு... பிற்காலத்தில்.. பாராளுமன்ற எம்பிக்களுக்கான
பென்ஷனும் எல்லா.. லட்சக்  கணக்கில் கொடுக்கப் போகிறார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுதலை!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுதலை!

வெளிநாட்டில் இருந்து மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் நாட்டுக்கு வந்த முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்

நேற்று (செவ்வாய்க்கிழமை) டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அவர் நாடு திரும்பினார்.

இதன்போது மூன்றரை கிலோகிராம் தங்கத்துடனும் 91 ஸ்மார்ட் தொலைபேசிகளையும் கொண்டு வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் சுங்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், 7.5 மில்லியன் ரூபாய் அபாரதம் விதித்து அவரை விடுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1332642

  • கருத்துக்கள உறவுகள்

செய்வது தொழுகை அடிப்பது கொள்ளை ...........!   😢

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

செய்வது தொழுகை அடிப்பது கொள்ளை ...........!   😢

இவர்களது முக்கிய தொழில் என்ன ? வியாபாரம்தானே? அதாவது கொள்ளையடிப்பது. மற்ற இனத்தவர்கள் வியாபாரம் செய்ய விட மாட்டார்கள். அதாவது அவர்கள் நடடமடையும்வரைக்கும் குறைந்த விலைக்கு விட்ப்பார்கள். பின்னர் தங்கள் கொள்ளையடிப்பை தொடருவார்கள். தொழுகைக்கும் வியாபாரத்துக்கு சம்பந்தமே இல்லை. இது வேறு, அதுவேறு. யா அல்லாஹ்.

5 hours ago, suvy said:

செய்வது தொழுகை அடிப்பது கொள்ளை ...........!   😢

6 minutes ago, Cruso said:

இவர்களது முக்கிய தொழில் என்ன ? வியாபாரம்தானே? அதாவது கொள்ளையடிப்பது. மற்ற இனத்தவர்கள் வியாபாரம் செய்ய விட மாட்டார்கள். அதாவது அவர்கள் நடடமடையும்வரைக்கும் குறைந்த விலைக்கு விட்ப்பார்கள். பின்னர் தங்கள் கொள்ளையடிப்பை தொடருவார்கள். தொழுகைக்கும் வியாபாரத்துக்கு சம்பந்தமே இல்லை. இது வேறு, அதுவேறு. யா அல்லாஹ்.

போராட்டத்துக்கு காசு சேர்த்து கொள்ளை அடித்த தமிழர்களில் இருந்து, காலாவதியான பொருட்களின் காலாவாதி திகதிகளை மாற்றி சொந்த தமிழர்களுக்கே அவற்றை விற்பது வரை செய்த ஏராளமான தமிழர்கள் அடிக்கடி கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்று, விரதம் பிடித்து, ஒவ்வொரு வெள்ளியும் மரக்கறி உண்டு வாழும் தமிழர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அடப் பாவி...  91 கைத்தொலை பேசிகளையும்  கொண்டு வந்துள்ளனா ?
மூன்றரை கிலோ தங்கம், 91  கையடக்க தொலைபேசி என...
 78.2 மில்லியன் ரூபா  பெறுமதியான பொருட்களை கடத்தியவனுக்கு,
7.5 மில்லியன் ரூபா தண்டம் மட்டும் தானா?

இலங்கையின் சட்டம் அவ்வளவுதான்! இந்தளவு சொத்து இவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராய வேண்டாமோ? அப்படிச்செய்தால், பலபேர் இதற்குள் அகப்படுகொள்ள நேரிடுமே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இலங்கையின் சட்டம் அவ்வளவுதான்! இந்தளவு சொத்து இவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராய வேண்டாமோ? அப்படிச்செய்தால், பலபேர் இதற்குள் அகப்படுகொள்ள நேரிடுமே!

நேற்று பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இவர் இப்போது அரசுடன் இணைந்துதான் இருக்கிறார். இருந்தாலும் அரசுக்கு எதிராக வாக்களித்தார்.

அவரிடம் பேட்டி கண்டவர், நீங்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தீர்கள் என்று கேடடார்?

அவருடைய பதில் என்னவென்றால், தான் கடத்தி கொண்டு வந்த பொருட்களுக்கு அரசாங்கம் உதவி செய்யவில்லை என்றும், தான் ஜனாதிபதி பிரதமுரடன் பேசியும் தனக்கு உதவி செய்யவில்லை என்றும் அதனால்தான் எதிர்த்தேன் என்று கூறினார். ஐயோ ஐயோ.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பட்டமான சில்லறைத்தனமான பதில்! இந்தளவுக்கும் அவரை குறைந்த தண்டத்தோடு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் சிறை வாசம் இல்லாமல் விடுவித்துள்ளார்கள்.  ம்.. ம்.. நான் சொல்லேல, இவர்களின் திறமை, எதிர்பார்ப்பு எப்படியானது என்று நாளுக்குநாள் வெளிவந்து நாறிக்கொண்டிருக்கிறது. இனி இவர் அரசாங்கத்தின் பொட்டுக்கேடுகளை போட்டு உடைப்பார். வேறோர் கட்சி இவரை தனது கட்சியில் சேர்க்குமென்றால் இவரின் எதிர்பார்ப்பு என்ன?   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

நேற்று பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இவர் இப்போது அரசுடன் இணைந்துதான் இருக்கிறார். இருந்தாலும் அரசுக்கு எதிராக வாக்களித்தார்.

அவரிடம் பேட்டி கண்டவர், நீங்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தீர்கள் என்று கேடடார்?

அவருடைய பதில் என்னவென்றால், தான் கடத்தி கொண்டு வந்த பொருட்களுக்கு அரசாங்கம் உதவி செய்யவில்லை என்றும், தான் ஜனாதிபதி பிரதமுரடன் பேசியும் தனக்கு உதவி செய்யவில்லை என்றும் அதனால்தான் எதிர்த்தேன் என்று கூறினார். ஐயோ ஐயோ.

முதல்நாள் கள்ளக் கடத்தலில்  மாட்டுப் பட்டவர், அடுத்த நாள் பாராளுமன்றத்தில்….
எப்படிப் பட்ட ஒரு நாடு ?
தனது சூட்கேசினிள்… மூன்றரை கிலோ தங்கமும், 94 தொலைபேசியும்….
எப்படி வந்தது என்று தனக்குத் தெரியாதாம் என்று சொல்லியுள்ளாராம். 😂

6 hours ago, satan said:

இலங்கையின் சட்டம் அவ்வளவுதான்! இந்தளவு சொத்து இவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராய வேண்டாமோ? அப்படிச்செய்தால், பலபேர் இதற்குள் அகப்படுகொள்ள நேரிடுமே!

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

No photo description available.

நாடாளுமன்ற உறுப்பினர், அலி சப்ரி ரஹீமின் கள்ளக் கடத்தலை பிரதி பலிக்கும் கருத்தோவியம்.
மேலே சிங்களத்தில் என்ன எழுதி உள்ளது என்பதனை, யாராவது மொழி பெயர்த்து சொல்லுங்களேன்.🙂

@satan, @Cruso, @ஏராளன், @suvy, @நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

மட சிங்கள தன் நா மாத்தயா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

2 minutes ago, ஏராளன் said:

மட சிங்கள தன் நா மாத்தயா!

"மட சிங்கள" என்றால்... மோட்டு சிங்களவன் என்று விளங்குது.
மற்றதுக்கு  தமிழில் என்ன அர்த்தம்? என்று விளங்கவில்லை ஏராளன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

No photo description available.

"மட சிங்கள" என்றால்... மோட்டு சிங்களவன் என்று விளங்குது.
மற்றதுக்கு  தமிழில் என்ன அர்த்தம்? என்று விளங்கவில்லை ஏராளன். 🙂

ஐயையோ எனக்குச் சிங்களம் தெரியாது என்று சொன்னேன் அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

ஐயையோ எனக்குச் சிங்களம் தெரியாது என்று சொன்னேன் அண்ணை.

"தனக்கு தெரியாத சிங்களம், பிடரிக்கு சேதம்"  என்று சொல்வார்கள். 😂
அது... மேலே நடந்த நமது உரையாடலில் உறுதியாயிட்டுது. 🤣

நான்... சிங்களவன் தன்னையே... மோட்டு சிங்களவன் என்று சொல்கிறான் என  நினைத்தேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எம்.பி இப்படியும் செய்வாரா? பல கோடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக சர்ச்சை

அலி சப்ரி ரஹிம்

பட மூலாதாரம்,ALI SABRI RAHEEM FB

படக்குறிப்பு,

அலி சப்ரி ரஹிம்

24 மே 2023

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார்.

துபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அலி சப்ரி ரஹிம், நேற்றைய தினம் நாட்டிற்கு திரும்பியிருந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் வருகைத் தரும் நுழைவாயிலின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர் வருகைத் தர முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலொன்றை அடுத்து, கொழும்பு சுங்க அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்தை நோக்கி விரைந்துள்ளது.

இவ்வாறு விமான நிலையத்திற்கு சென்ற விசேட குழு, நாடாளுமன்ற உறுப்பினரின் பயண பைகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசமிருந்து தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து 3 கிலோ 397 கிராம் தங்கம் மீட்கப்பட்டதுடன், அதன் இன்றைய சந்தை பெறுமதியாக 74 மில்லியன் இலங்கை ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 91 கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளின் இன்றைய சந்தை பெறுமதியாக 4.2 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமிடமிருந்து 78.2 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை இலங்கை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சுங்க அதிகாரிகளால் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு கொழும்பு சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் 7.5 மில்லியன் தண்டப் பணம் அறவிடப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும், அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தங்க கடத்தலில் ஈடுபட்ட 2வது எம்பி

தங்கக்கட்டிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் என தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.டேனில், தங்க கடத்தல் குற்றச்சாட்டிற்கு இலக்காகி, 1982ம் ஆண்டு காலப் பகுதியில் பதவி விலகியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

எம்.பி மீது நடவடிக்கை: சட்டம் என்ன சொல்கிறது?

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம்மிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்;கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹானாமஹேவாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

விசேட பிரமுகவர்கள் வருகைத் தரும் நுழைவாயிலை பயன்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை முதலாவது குற்றச்சாட்டு என அவர் கூறுகின்றார்.

விசேட பிரமுகர்களின் நுழைவாயிலின் ஊடாக வருகைத் தருவோர், இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, சட்டவிரோத பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்ததன் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என அவர் தெரிவிக்கின்றார்.

பிரதீபா மஹானாமஹேவா
 
படக்குறிப்பு,

பிரதீபா மஹானாமஹேவா

''இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விசேட விசாரணையொன்றை நடத்த வேண்டும். சபாநாயகருக்கு இந்த விசாரணைகளை நடத்த முடியும்" என அவர் குறிப்பிடுகின்றார்.

''குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும், சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் விசேடமாக நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்க வேண்டும். சட்டத்தை சரியான முறையிலும், சமமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது முன்னுதாரணமாக காணப்படும். தண்டனை சட்டகோவையின் பிரகாரம் இவர் தவறிழைத்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், போலீஸ் விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். போலீஸ் விசாரணைகளின் ஊடாக சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இந்த விசாரணைகளை இயலுமான விரைவில் நடாத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும். பதவி விலக்கும் வகையில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தண்டனைக்கு அமைய அவரை பதவி விலக்க முடியும்." என பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.

தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் முதலாவதாக பதவி விலகிய எம்.ஏ.டேனியலில் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அலி சப்ரி ரஹிம்மின் விசாரணைகளையும் நடத்த முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cd1495ey9djo

  • கருத்துக்கள உறவுகள்

இவரை மத்திய கிழக்கில் உள்ள நாடு இவ்வளவு பணத்துடனும , கைத்தொலைபேசிகளுடனும் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்துள்ளார்கள்.
 
8 hours ago, Cruso said:

நேற்று பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இவர் இப்போது அரசுடன் இணைந்துதான் இருக்கிறார். இருந்தாலும் அரசுக்கு எதிராக வாக்களித்தார்.

அவரிடம் பேட்டி கண்டவர், நீங்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தீர்கள் என்று கேடடார்?

அவருடைய பதில் என்னவென்றால், தான் கடத்தி கொண்டு வந்த பொருட்களுக்கு அரசாங்கம் உதவி செய்யவில்லை என்றும், தான் ஜனாதிபதி பிரதமுரடன் பேசியும் தனக்கு உதவி செய்யவில்லை என்றும் அதனால்தான் எதிர்த்தேன் என்று கூறினார். ஐயோ ஐயோ.

ஆகா இதல்லவோ சனநாயகம்: செழித்தோங்கி வளர்ந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

"மட சிங்கள" என்றால்... மோட்டு சிங்களவன் என்று விளங்குது.
மற்றதுக்கு  தமிழில் என்ன அர்த்தம்? என்று விளங்கவில்லை ஏராளன். 🙂

கொண்டை கட்டின அப்பு : ஆ இது தங்க பிஸ்கேட் இல்லையா? என்று கிடக்கிறார்.

VIP : இல்லை அங்கிள் , இது சொக்கலேட் பிஸ்கேட் என்று பதிலளிக்கிறார். 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24/5/2023 at 14:26, நிழலி said:

போராட்டத்துக்கு காசு சேர்த்து கொள்ளை அடித்த தமிழர்களில் இருந்து, காலாவதியான பொருட்களின் காலாவாதி திகதிகளை மாற்றி சொந்த தமிழர்களுக்கே அவற்றை விற்பது வரை செய்த ஏராளமான தமிழர்கள் அடிக்கடி கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்று, விரதம் பிடித்து, ஒவ்வொரு வெள்ளியும் மரக்கறி உண்டு வாழும் தமிழர்களே.

ஐந்து நேர தொழுகை கொள்கையும் போகும் வாழும் இடமெல்லாம் தங்கள் மத உடை பற்றும்.... ஆடை அவிழ்ப்பு கலாச்சார நாடுகளில் வாழ்ந்தாலும் மொட்டாக்கு போடுவோம் என அடம்பிடிப்பதும்.....உணவு விடயத்தில் கூட பன்றி இறைச்சி உண்பவனை கேவலமாக பார்பதும்......எதற்கெடுத்தாலும் அல்லாகு அக்பர் என முழக்கமிடுவதும் இவர்கள் தான்.

இவ்வளவு தீவிரமாக இருக்கும் மதகாரர் பாவச்செயல்களை செய்யலாமா?

ஏனைய மதத்தவர்கள் இவ்வளவு தீவிரம் இல்லை.

41 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவு தீவிரமாக இருக்கும் மதகாரர் பாவச்செயல்களை செய்யலாமா?

ஏனைய மதத்தவர்கள் இவ்வளவு தீவிரம் இல்லை.

மத விடயத்தில் இவ்வளவு தீவிரமாக இருப்பவர்கள் பாவம் செய்யலாமா எனக் கேட்டால், என் பதில் பாவம் செய்வதற்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே. அதாவது தீவிரமாக மதத்தை பின்பற்றுகின்றவர்களும் சரி, மென்போக்காக பின் பற்றுகின்றவர்களும் சரி, மத நம்பிக்கை அற்றவர்களும் சரி எவரும் பாவம் செய்யக் கூடாது என்பதே. காரணம், மதத்துக்கும் பாவம் செய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

ஒருவரின் செயலை கண்டிப்பதற்கு அவரது மதத்தை இழுத்தால், உலகில் உள்ள எல்லா மதங்களும் மோசமானவையாகவே தெரியும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

கொண்டை கட்டின அப்பு : ஆ இது தங்க பிஸ்கேட் இல்லையா? என்று கிடக்கிறார்.

VIP : இல்லை அங்கிள் , இது சொக்கலேட் பிஸ்கேட் என்று பதிலளிக்கிறார். 
 
மொழி பெயர்ப்புக்கு… நன்றி குருசோ. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

மட சிங்கள தன் நா மாத்தயா!

எனக்கும் சிங்களம் தந்தனத்தானாதான் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.