Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் எத்தனை காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4072.jpg

ஈழத்தில் நாங்கள் தயாரிக்கும் திரைப்படத்துக்கு வெந்து தணிந்த காடு என்று பெயரை ஏற்கனவே வைத்து விட்டோம் என்று சொல்லிப் பார்த்தும் அந்தப் பெயரையே  தங்கள் படத்துக்கு  விடாப்பிடியாக வைத்தது தமிழ்நாட்டு சினிமா. இந்த விடயத்தில் தமிழக சினிமா உலகத்தில் யாருமே பெரிதாக எங்களுக்காக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால்தான் இங்கு அந்தப் படத்தை தயாரித்தஜஸ்சரிகணேசனை  மட்டும் குறிப்பிடாமல் ஒட்டு மொத்தமாக நான் தமிழ் சினிமா என்று குறிப்பிடுகிறேன்.

இந்த படத்தின் பெயருக்காக ஆமை இறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி ஏப்பம் விட்ட சீமான்களும் கண்டு கொள்ளவில்லை. தென்னிந்திய பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஈழத்து அல்லி இராஜாவும் காது கொடுத்துக் கேட்கவில்லை..

ஈழத் திரைப்படமான வெந்து தணிந்த காடு  பலரின் பங்களிப்பில் வெளி வந்திருக்கிறது. பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் திரையிட முயற்சிக்கிறார்கள் என்ற தகவலை யாழ் இணையத்தில் இப்பொழுது பார்க்க முடிகிறது.

ஈழத்தவர்களின் வெந்து தணிந்த காடு பலரின் பார்வைக்குப் போக வேண்டும். அதன் வெற்றிதான் அதனை உருவாக்கிய .தி.சுதாவுக்கு இன்னும் நல்ல படைப்புகளை உருவாக்க வழி அமைக்கும். ஈழத்தவர்கள் ஒரு தமிழ் சினிமாவை உருவாக்குவது என்பதைத் தவிர்த்து அதை மக்களுக்கு காட்சிப் படுத்துவது என்பது அதை உருவாக்கியவர்களுக்கு முன்னால் உள்ள  பெரிய சவால். தமிழ்நாட்டுத் திரைப் படங்களுக்கு இருப்பது போல் எங்களுக்கு உள்நாட்டிலும் சரி  வெளிநாடுகளானாலும் சரி வரவேற்பு  இருப்பது இல்லை. முக்கியமாக சினிமாவுக்கான சந்தை ஒன்று எங்களுக்கு இல்லை. இத்தனைக்கும் உலகம் எங்கும் பரந்து வாழ்கிறோம்

ஒரு தமிழ்நாட்டு திரைப்படம்  எந்தளவு குப்பையாக இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் தியேட்டர்களை ஒழுங்கு செய்வதற்கு புலம் பெயர் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஈழத்தவர்கள் தயாரித்த திரைப்படத்தை திரையிட யாரும் தாமாக முன் வருவதில்லை என்பது கவலை தருகிறது

உலகநாடுகள் பல தங்களுக்கு என்று சினிமாப் படங்களை உருவாக்குகிறார்கள்நான் வாழும் யேர்மனியை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஆங்கிலத் திரைப்படங்களை  ஆங்கில த் தொலைக் காட்சித் தொடர்களை விரும்பிப் பாரக்கிறார்கள். ஆங்கிலப் பாடல்களை அதன் இசையை ரசிக்கிறார்கள்அதேநேரம் தங்களுக்கென்று சினிமா ஒன்றை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கான பாடல்களை, தொலைத் தொடர்களை உருவாக்கி, கேட்டு,  பார்த்து மகிழ்கிறார்கள். ஆண்டு  தோறும் விழா எடுத்து கலைஞர்களைப் பாராட்டி பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். எங்கள் நாட்டில் மட்டும் இந்தத்துறைகளை ஊக்குவிப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் ஏனோ விருப்பம் காட்டவில்லை.

சிறிமாவோவின் ஆட்சிக்  காலத்தில் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப் பட்டது. அதற்கு வேறு அரசியல் காரணங்கள் கூட இருக்கலாம். ஆனாலும் ஈழத்தவர் சினிமா வளரத்தொடங்கியது அந்த நேரம்தான்நிர்மலா, மஞ்சள் குங்குமம்,வெண்சங்கு, குத்துவிளக்கு,கோமாளிகள்,பொன்மணி, வாடைக்காற்று, நான் உங்கள் தோழன், ஏமாளிகள் என்று பல திரைப் படங்கள்  வெளியாகின. இந்தக் காலத்தை தமிழ்நாட்டு சினிமாத் துறையும் பயன் படுத்தத் தவறவில்லை. இலங்கை இந்திய கூட்டுத தயாரிப்பென அவர்களும் இலங்கைக்கு வந்து படம் எடுக்க ஆரம்பித்தார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப் படங்கள் மட்டுமே இந்தியத் திரையரங்குகளில் வெளியானது.

80ம் ஆண்டு காலப் பகுதியில் நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் புகலிடம் தேடிப் போக ஆரம்பித்த நேரம் பூமாலை என்றொரு வீடியோ சஞ்சிகை வெளி வந்தது. அந்தச் சஞ்சிகைதான் இன்று சன் ரீவியாக உயர்ந்து நிற்கிறது. அப்போதெல்லாம் தமிழ் திரைப் படங்களில் வெளிநாடுகளில் எடுக்கப் பட்ட பாடல் காட்சிகள் இடம் பெற்றன. தமிழ் சினிமாப் பாடகர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் பெரிதாக உலக நாடுகளில் இடம் பெற்றுக் கொண்டிருந்தனஇவற்றுக்கான உபயகாரர்களாக புலம் பெயர் ஈழத் தமிழர்கள் இருந்தார்கள்.   எங்களது போராட்டம் உச்சத்தை தொட்டு நின்ற காலத்தில் இவை எல்லாம் குறைந்து போயின.

போராட்ட சூழலிலும் மீண்டும் ஈழத்துத் திரைப் படங்கள் உருவாக ஆரம்பித்தன. ஆனால் எங்கள் போராட்டம் தோற்கடிக்கப் பட்டபின்னர் பெரிதாக எதுவும் செய்யாமல் இருந்து விட்டோம்ஆனலும் விடாமுயற்சியாக சிலர் ஈழத்துத் திரைப் படங்களை உருவாக்க முன் வந்திருக்கிறார்கள்.

இன்று லைக்கா நிறுவனம் பல கோடி இந்திய ரூபாக்கள் முதலீட்டில் தமிழ்நாட்டில் திரைப்படங்களை உருவாக்குகிறது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள்தான் இன்று தமிழ்நாட்டில் முன்னணித் தயாரிப்பாளர்களும் கூட. அவர்கள் வருடம் தோறும் நடிகர்கள் , நடிகைகள், இயக்குனர்கள் என பலரை  இலண்டனுக்கு அழைத்து விருந்து வைத்து மகிழ்விக்கிறர்கள். நடக்கட்டும். அது அவர்கள் வியாபார உத்தியாகவோ வேறு எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும்லைக்கா நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மட்டுமன்றி தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வேறு திரைப் படங்களையும் வாங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகம் செய்கிறது. பல தமிழ் நாட்டுத் திரைப் படங்களை விநியோகம் செய்யும் இவர்கள் எப்போதாவது அத்தி பூத்தாப்போல் வெளி வரும் ஈழத்தவர்களது திரைப் படங்களையும் ஐரோப்பிய நாடுகளில்  வாங்கி விநியோகித்தால் அது ஈழத் தமிழ் திரைப் படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு உந்துதல் அல்லவா.

மறைந்த இயக்குனரும் ஒளி அமைப்பாளருமான பாலு மகேந்திரா ஈழத்துத் திரைப் படத்துறையைப் பற்றி இப்படி குறிப்பிட்டிருந்தார்

இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதைய சூழ்நிலையின் ஊடாக உலகத் தரம் வாய்ந்த பல அசாத்தியமான படங்களைத் தரமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இது வெறும் உணர்ச்சி வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மனசு வைத்தால், ஈழத்து இளைய தலைமுறையின் வீரிய வீச்சு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும். இது சத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பிற்கும் பாரதியார் கவிதைக்கும் ஏதாவது தொடர்புள்ளதா? அப்படி ஒரு கவிதை வாசித்தாக நினைவுள்ளது.

தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் ஏதாவது ஒன்றில்தான் இந்த மாதிரி பெயர் பதிவுகள் செய்யப்பட்டிருக்கும் என கருதுகிறேன் அங்கு ஒரே பெயரில் இன்னொரு படம் பதிவு செய்ய முடியாது என கருதுகிறேன், அப்படி பதிவு செய்யாவிட்டால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கருதுகிறேன்.

படத்தின் பெயரை வேறு ஒரு பெயராக மாற்ற முடியாதா? படத்தின் தரம் மூலம் பதில் சொல்வதே நன்றாக இருக்கும் என கருதூகிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்).

  • கருத்துக்கள உறவுகள்

வெந்து தணிந்த காடு என்று படம் இலங்கையில் தயாரித்தார்கள் என்ற தகவல் யாழ்களத்தில் படித்தேன். இந்தியாவிலும் அந்த பெயரில் படம் வந்தது எனக்கு தெரியாது.

1 hour ago, Kavi arunasalam said:

இந்த படத்தின் பெயருக்காக ஆமை இறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி ஏப்பம் விட்ட சீமான்களும் கண்டு கொள்ளவில்லை. தென்னிந்திய பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஈழத்து அல்லி இராஜாவும் காது கொடுத்துக் கேட்கவில்லை..

லைக்கா நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மட்டுமன்றி தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வேறு திரைப் படங்களையும் வாங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகம் செய்கிறது. பல தமிழ் நாட்டுத் திரைப் படங்களை விநியோகம் செய்யும் இவர்கள் எப்போதாவது அத்தி பூத்தாப்போல் வெளி வரும் ஈழத்தவர்களது திரைப் படங்களையும் ஐரோப்பிய நாடுகளில்  வாங்கி விநியோகித்தால் அது ஈழத் தமிழ் திரைப் படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு உந்துதல் அல்லவா.

👍

4 hours ago, vasee said:

இந்த தலைப்பிற்கும் பாரதியார் கவிதைக்கும் ஏதாவது தொடர்புள்ளதா? அப்படி ஒரு கவிதை வாசித்தாக நினைவுள்ளது.

தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் ஏதாவது ஒன்றில்தான் இந்த மாதிரி பெயர் பதிவுகள் செய்யப்பட்டிருக்கும் என கருதுகிறேன் அங்கு ஒரே பெயரில் இன்னொரு படம் பதிவு செய்ய முடியாது என கருதுகிறேன், அப்படி பதிவு செய்யாவிட்டால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கருதுகிறேன்.

படத்தின் பெயரை வேறு ஒரு பெயராக மாற்ற முடியாதா? படத்தின் தரம் மூலம் பதில் சொல்வதே நன்றாக இருக்கும் என கருதூகிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்).

இந்தப் பெயர்ப் பிரச்சனை எழுந்த போது என் மனதில் தோன்றியது இதுதான். வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் பிரபலமான கவிதையின் ஒரு சிறு வரி. பாரதியாரின் கவிதைகள் பொது உடமையாக்கப்பட்டதால், இந்த வரியில் எவரும் படம் எடுக்கலாம். இன்னொரு படம் அப் பெயரில் வந்து இருந்தாலோ, அல்லது வருகின்றது என்றாலோ படத்தின் பெயரை மாற்றலாம்.

மதிசுதா அவ்வாறு தன் படத்தின் பெயரை மாற்ற விரும்பவில்லை. தானே முதலில் பெயர் வைத்தமையால், மாற்ற மாட்டேன் என்று கூறியிருந்தார். அது அவரது சுதந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய தயாரிப்பான வெந்து தணிந்தது காடு ...ஒரு விளக்கத்துக்காக பதிகிறேன். இங்கு சென்றுபார்க்கவும்.
சிம்பு ராதிகா நடித்தவர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2023 at 10:12, vasee said:

தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் ஏதாவது ஒன்றில்தான் இந்த மாதிரி பெயர் பதிவுகள் செய்யப்பட்டிருக்கும் என கருதுகிறேன் அங்கு ஒரே பெயரில் இன்னொரு படம் பதிவு செய்ய முடியாது என கருதுகிறேன், அப்படி பதிவு செய்யாவிட்டால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கருதுகிறேன்.

Vase,

இந்தியா, இலங்கை இரண்டும் வெவ்வேறு நாடுகள். ஆகவே இங்கு  பெயர் பதிவுகளைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை. ஆனால் “கொத்துக் கொத்தாக அங்கே தமிழர்களைக் கொலை செய்தபோது நாங்கள் ரீவி பார்ததுக் கொண்டிருந்தோம்” என்றெல்லாம் தமிழக சினிமா திரைப் படங்களில் வசனங்களை வைக்கத் தெரிந்தவர்கள். குறைந்தபட்சம் ஈழத் தமிழர்கள் இந்தத் தலைப்பில்  ஏற்கனவே படம் எடுப்பதால் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்பதுதான். அத்துடன் இந்தப் பெயர் பிரச்சனை ஏற்கனவே முடிந்து விட்டது. ஆகவே இனி கதைப்பதில் ஏதும் நடந்து விடப் போவதி்லை.

எனது ஆதங்கம் எல்லாம், வெளி நாடுகளில் ஈழத் தயாரிப்பான வெந்து தணிந்த காடு திரைப்படத்தை காட்சிப் படுத்த புலம் பெயர் தமிழர்கள் முன் அவர் வேண்டும் என்பதேயாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கவி அருணாசலம்.......! 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2023 at 05:27, Kavi arunasalam said:

Vase,

இந்தியா, இலங்கை இரண்டும் வெவ்வேறு நாடுகள். ஆகவே இங்கு  பெயர் பதிவுகளைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை. ஆனால் “கொத்துக் கொத்தாக அங்கே தமிழர்களைக் கொலை செய்தபோது நாங்கள் ரீவி பார்ததுக் கொண்டிருந்தோம்” என்றெல்லாம் தமிழக சினிமா திரைப் படங்களில் வசனங்களை வைக்கத் தெரிந்தவர்கள். குறைந்தபட்சம் ஈழத் தமிழர்கள் இந்தத் தலைப்பில்  ஏற்கனவே படம் எடுப்பதால் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்பதுதான். அத்துடன் இந்தப் பெயர் பிரச்சனை ஏற்கனவே முடிந்து விட்டது. ஆகவே இனி கதைப்பதில் ஏதும் நடந்து விடப் போவதி்லை.

எனது ஆதங்கம் எல்லாம், வெளி நாடுகளில் ஈழத் தயாரிப்பான வெந்து தணிந்த காடு திரைப்படத்தை காட்சிப் படுத்த புலம் பெயர் தமிழர்கள் முன் அவர் வேண்டும் என்பதேயாகும்.

உங்கள் கருத்திற்கு  நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.