Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார நெருக்கடி எதிரொலி யாழில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

01 JUN, 2023 | 02:46 PM
image
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 113 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 60 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 20 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 351 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் அது 35 ஆக குறைவடைந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 170 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 137 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 390 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 312 ஆக அதிகரித்துள்ளது.

தென்மராட்சி கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 7 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 14 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 92 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 59 ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சி கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 72 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 25 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 87 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 65 ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது. பாடசாலைகளில் மீளிணைத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் சில நாள்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வராமல் விடும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 9ஆம் மற்றும் 10ஆம் தரத்துடனேயே அதிகளவானோர் இடைவிலகுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இடைவிலகலை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. இந்த விடயத்தை மானசீகமாகச் செய்யவேண்டும். பாடசாலை இடைவிலகல் ஊடாக எமது இளம் சமுதாயம் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றது. 

எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப்போகின்றது. பாடசாலை இடைவிலகலை கண்டும் காணாதது போல் இருக்க முடியாது. ஒவ்வொரு காரணங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. நான் அதிபராக இருந்த காலத்தில் கிளிநொச்சியில் அருவி வெட்டுக் காலங்களில் மாணவர்களை பெற்றோர்கள் வயலுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவர்கள் பாடசாலைக்கு வரமாட்டார்கள். அப்படியான சூழலில், பாடசாலைக்கு மாணவர்களை நேரம் தாழ்த்தி வருவதற்கு நான் அனுமதித்திருந்தேன். 

அத்துடன் ஒரு நாள் அல்லது இரு நாள்கள் விடுப்பில் இருப்பதற்கும் அனுமதித்தேன். இவ்வாறு களச் சூழலை உணர்ந்து அதிபர்கள், அதிகாரிகள் கடமையாற்றுவதன் ஊடாகவே இடைவிலகலை கட்டுப்படுத்தலாம். இதில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது என்று காட்டமாகத் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/156699

எழுத, வாசிக்கத் தெரியாத மாணவர்கள் 9ஆம் தரத்தில் யாழ். மாவட்டத்தின் அவலநிலை ; பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டு

Published By: DIGITAL DESK 3

01 JUN, 2023 | 04:54 PM
image
 
யாழ்ப்பாணத்தில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இப்படியான மோசமான நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது என்று பிரதேச செயலர்கள் புதன்கிழமை (31) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்கள்.

பாடசாலையில்  இடைவிலகிய மாணவர்களை மீளிணைத்தல் தொடர்பில் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டும்போதே இந்த விடயத்தை தெரிவித்தனர்.

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீளவும் தரம் 9 இல் சேர்க்கும்போது அவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரிவதில்லை. அவர்கள் அந்த வகுப்பிலே பேசாமல் இருக்கின்றனர். இவ்வாறு பல வகுப்புக்களில் நடைபெறுகின்றன என்று பிரதேச செயலர்கள் தெரிவித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவ்வாறு இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டனர். ஆரம்பக் கல்வி சரியாகப் பயிலாத மாணவர்களால் இந்த நிலைமை ஏற்படுவதாகக் குறிப்பிட்டனர். இதனைத் தீர்ப்பதற்கு பாடசாலைகளில் அவ்வாறான மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஆரம்பக் கல்வி போதிக்கப்படுகின்றது. 

ஆனால் இது நடைமுறையில் முழுமையான சாத்தியமான விடயமல்ல என்றும் தெரிவித்தனர். மேலும் கொரோனா காரணமாக இவ்வாறு ஆரம்பக் கல்வியை முறையாகப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். 

https://www.virakesari.lk/article/156701

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு மதியபோசனம் வழங்கும்போது வரவில் நல்ல மாற்றம் உள்ளதாக கூறப்படுகின்றது. பழைய மாணவர்கள் தத்தம் பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பாடசாலை நாட்களில் மதியபோசனம் வழங்கப்பட உதவி செய்வார்களாயின் சிறப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

எழுத வாசிக்க தெரியாமல் எப்படி 9 ம் தரம் வரை போனார்கள்?

தமிழ் நாட்டில்  வார இறுதியில் கூட வகுப்புக்கள் நடை பெறுவதாக செய்திகள் முன்பு  வந்தன. நாங்கள்  எங்கு நோக்கி செல்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

எழுத வாசிக்க தெரியாமல் எப்படி 9 ம் தரம் வரை போனார்கள்?

தமிழ் நாட்டில்  வார இறுதியில் கூட வகுப்புக்கள் நடை பெறுவதாக செய்திகள் முன்பு  வந்தன. நாங்கள்  எங்கு நோக்கி செல்கிறோம்?

நல்ல கேள்வி. நீங்கள் ஊர்ப்பக்கம் சென்று பிள்ளைகளின் கல்வித்தரம் பற்றி அறியவில்லை போல. 

உதாரணமாக, ஆண்டு பத்து பயிலும் ஓர் மாணவனுக்கு தமிழ் பிழை இல்லாமல் வாசிக்க தெரியாது. மிகவும் அடிப்படையான தமிழ் சொற்களை எழுத்து பிழை இல்லாமல் எழுத தெரியாது என அறியும்போது திகைப்பாகத்தான் வரும். தமிழே ஒழுங்காக எழுத, வாசிக்க தெரியாத பிள்ளைகள் பத்தாம் ஆண்டு  வரை எப்படி வகுப்பு ஏற்றப்பட்டார்கள், இவர்கள் வகுப்பில் என்ன கற்றார்கள், கற்பிக்கப்பட்டார்கள் என்பது எல்லாம் புதிர் தான். 

நாளை க.பொ.த சாதாரணம் விஞ்ஞான பாடம். நான்கு மணித்தியாலங்கள் சோதனை. பகுதி ஒன்று ஒரு மணித்தியாலம், பகுதி இரண்டு மூன்று மணித்தியாலங்கள். சற்று முன் இரண்டு பிள்ளைகளுக்கு கடைசி நிமிட உதவிகள் சில செய்தேன். அமிலம் ஒன்று கூறுங்கள் பார்க்கலாம் என்று கேட்டால் தேசிக்காய் சாறு தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. பிள்ளைகள் தலையினுள் என்ன உள்ளது என்பது பற்றி பாடசாலை எப்படியான கவனம் எடுக்கின்றது என்று தெரியவில்லை.

நேற்று முன்தினம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் உரை ஒன்று கேட்டேன். சும்மா கண்டபாட்டுக்கு புளுகி தள்ளுகின்றார் தங்கள் ஊரிலேயே எல்லாம் உள்ளதாம், தமது ஊர் தனித்து இயங்க முடியுமாம, தன்னிறைவு பெறக்கூடியதாம். வடக்கு, கிழக்கும் அப்படித்தானாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள்தான் காய்கின்றார்களாம். எல்லாம் வாயாலேயே விளாசிவிட்டு போவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மாணவர்களுக்கு மதியபோசனம் வழங்கும்போது வரவில் நல்ல மாற்றம் உள்ளதாக கூறப்படுகின்றது. பழைய மாணவர்கள் தத்தம் பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பாடசாலை நாட்களில் மதியபோசனம் வழங்கப்பட உதவி செய்வார்களாயின் சிறப்பு!

கடந்த ஒரு மாதமாக இலங்கையின் தனியார் நிறுவனம் (LOLC ) ஒன்று வட கிழக்கு மாகாணங்களில் வறிய பிள்ளைகள் உள்ள , பின் தங்கிய பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு புத்தக பைகளுடன் எல்லாவிதமான உபகரணங்களும் பயிட்சி புத்தகங்களுடன் வழங்கினார்கள். இது இலங்கை முழுவதும் செயட்படுத்தப்படடாலும் தமிழ் பிள்ளைகள் அதிக நன்மையடைந்தார்கள். புலம்பெயர் உறவுகளும் இன்னும் உதவி செய்தால் அவர்களின் நிலைமையை மேலும் உயர்த்தலாம் என்பது எனது கருத்து. சில வேளைகளில் அந்த உதவிகள் சரியான இடங்களில் போய் சேருகிறதா என்பதும் ஒரு பிரச்சினையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பேற்றம் மூன்றாம் தவணையில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நடைபெறும், வகுப்பேற்றாவிடில் இடைவிலகல் அதிகரிக்கலாம் என்பதால். ஆண்டு 11வரை வகுப்பேற்றம் நடைபெறும்.

ஐந்து வயதிற்குட்பட்டோருக்கான பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் உயர்த்தப்பட வேண்டும். அங்கு தான் எழுத, வாசிக்க கற்பிக்கப்படுகிறது. அந்த ஆசிரியர்கள் உயர்தரம் வரை கற்றவர்களாக இருப்பார்கள், சம்பளமும் மிகக்குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் உதவி செய்யணும் ஊரில் உள்ளவர்கள் செய்ய கூடாதா? 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் உதவி செய்யணும் ஊரில் உள்ளவர்கள் செய்ய கூடாதா? 

இங்க உள்ளவர்கள் இருக்கிற காணி வீடு வளவுகளை விற்று வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துள்ள சாப்பாடு கிடைக்காத நிலை பலர் பத்து நிமிடம் கூட நிற்க முடியாமல் மயங்கி விழுகிறார்கள். 

தந்தைக்கு வேலை இல்லாத பிள்ளைகள் பலர் பாடசாலைக்கு வர மறுக்கிறார்கள் பாடசாலைக்கு வசதிகள் சேவைகள் கட்டணம், மின்சார கட்டணம், சப்பாத்து, காலுறை என்பவற்றுக்கான செலவை ஈடு செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் உதவி செய்யணும் ஊரில் உள்ளவர்கள் செய்ய கூடாதா? 

உள்நாட்டில் வசதியுள்ளோர் உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் உதவி செய்யணும் ஊரில் உள்ளவர்கள் செய்ய கூடாதா? 

ஊரில் உள்ளவர்கள் உடல் உழைப்பை கொடுக்கட்டும். நீங்கள் காசை கொடுங்கள். வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றார்கள். நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவுவது வெளியாருக்கு உதவிவது போன்றது இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊரில் உள்ளவர்கள் உடல் உழைப்பை கொடுக்கட்டும். நீங்கள் காசை கொடுங்கள். வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றார்கள். நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவுவது வெளியாருக்கு உதவிவது போன்றது இல்லையே. 

தகவல்களுக்கு நன்றி நியாயம்!

ஆனால், மீராவின் கேள்வி நியாயமானதாகத் தான் தெரிகிறது. 9 ஆம் வகுப்பில் தமிழ் பிழையின்றி வாசிக்க முடியாத தொகையான மாணவர்கள் நாம் யுத்த காலத்தில் கற்ற காலத்தில் இருக்கவில்லை. அப்படியானால், 8 ஆம் வகுப்பு வரை கற்பித்த ஆசிரியர்கள் தாம் வாங்கிய அரச சம்பளத்திற்கு உரிய வேலையைச் செய்யவில்லை அல்லது பெற்றோர் வீட்டில் பிள்ளையின் நிலையைக் கண்டு கொள்ளவில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாங்கும் ஊதியத்திற்கு உரிய கடமை செய்ய ஊக்கமில்லாத ஆசிரியர்களை வெளிநாட்டுத் தமிழர் அனுப்பும் பணம் ஊக்குவிக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்க உள்ளவர்கள் இருக்கிற காணி வீடு வளவுகளை விற்று வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துள்ள சாப்பாடு கிடைக்காத நிலை பலர் பத்து நிமிடம் கூட நிற்க முடியாமல் மயங்கி விழுகிறார்கள். 

தந்தைக்கு வேலை இல்லாத பிள்ளைகள் பலர் பாடசாலைக்கு வர மறுக்கிறார்கள் பாடசாலைக்கு வசதிகள் சேவைகள் கட்டணம், மின்சார கட்டணம், சப்பாத்து, காலுறை என்பவற்றுக்கான செலவை ஈடு செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்

ராசா

இதன்  ஆரம்பம் 

வைத்தியத்துறையில் இஞ்சினியர் துறையில் படித்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் கூட

வெளிநாட்டுக்கனவுடன் வேலைக்கு  போகாமல் இருந்தபோதே  தெரியும்

இதன் அடுத்த  கட்டம்  இப்படித்தான் தேய்ந்து வந்து  நிற்கும்  என்று...?

அரசு  செய்ய  வெண்டிய  வேலைகளை  சேவைகளை  எல்லாம்  வெளிநாட்டுத்தமிழர்  செய்யணும்  என்பதும்  ஒருவகை புலம்பெயர் மக்கள் பற்றிய  விம்பம் தான்

50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊரில் உள்ளவர்கள் உடல் உழைப்பை கொடுக்கட்டும். நீங்கள் காசை கொடுங்கள். வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றார்கள். நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவுவது வெளியாருக்கு உதவிவது போன்றது இல்லையே. 

ஊரில் உள்ளவர்கள் உடல் உழைப்பை கொடுக்கட்டும்

ஒரு  5  வீதம்  தேறுமா???

  • கருத்துக்கள உறவுகள்

59 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊரில் உள்ளவர்கள் உடல் உழைப்பை கொடுக்கட்டும். நீங்கள் காசை கொடுங்கள். வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றார்கள். நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவுவது வெளியாருக்கு உதவிவது போன்றது இல்லையே. 

நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவுவது வெளியாருக்கு உதவிவது போன்றது இல்லையே. 

புங்குடுதீவு மகாவித்தியாலயம்

இது  நான் படித்த  பாடசாலை

பிரான்சின்  புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவராக  நான் இருந்தபோது

இதற்கு சுத்து  மதில் கட்டிக்கொடுத்தோம்

7 மில்லியன்  ரூபாய்கள் முடிந்தது.

இதனுடைய  கதவு (முன்வாசல்)  திறந்தே  கிடந்து மதிலில் அடித்து  அடித்து  மதில்  உடைந்து  விட்டது

அதைக்கூட இங்கிருந்து  சென்ற  எமது  ஒன்றிய  உறவு சொல்லித்தான்  அவர்களுக்கு  சொல்லவேண்டி  இருந்தது. மீண்டும் நாமே  திருத்தியும் கொடுத்து  மீண்டும் மதிலுக்கு 10 லட்சம் செலவளித்து வர்ணமும் அடித்து  கொடுக்க வேண்டியதாயிற்று.

இப்படி  என்றால்  எவருக்கு  உதவ  மனம் வரும்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

வளங்களை வழங்குவதுடன் தலைவரின் பொறுப்பு முடிவதில்லை. வேலைத்திட்டங்கள் குறித்த கால அளவுகளில் சரியான முறையில், தரத்தில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடக்கம் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டபின் அதன் தொடர் செயற்பாடுகள் (போலோ அப்) வரை தலைவர் தனது குழுவை வழிப்படுத்த வேண்டும். இந்த மதில் வேலைத்திட்டம் உங்களுக்கு நல்லதொரு படிப்பினை. இனி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக அமையட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வளங்களை வழங்குவதுடன் தலைவரின் பொறுப்பு முடிவதில்லை. வேலைத்திட்டங்கள் குறித்த கால அளவுகளில் சரியான முறையில், தரத்தில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடக்கம் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டபின் அதன் தொடர் செயற்பாடுகள் (போலோ அப்) வரை தலைவர் தனது குழுவை வழிப்படுத்த வேண்டும். இந்த மதில் வேலைத்திட்டம் உங்களுக்கு நல்லதொரு படிப்பினை. இனி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக அமையட்டும். 

அதாவது ஊரில் உள்ளவர்கள் உடைவதையும் கவனிக்கத்தேவையில்லை

அதுவும் நீங்கள் வந்து  பார்த்து  திருத்திக்கொடுங்கள்

அது  தானே  உங்களது  வேலை  என்கிறீர்கள்??

இப்போ முதலில் நீங்கள் குறிப்பிட்ட

அவர்களிடம் பணமில்லை

உழைப்பு இருக்கு  என்ற  உங்கள் கருத்து என்னாச்சு  தம்பி??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தகவல்களுக்கு நன்றி நியாயம்!

ஆனால், மீராவின் கேள்வி நியாயமானதாகத் தான் தெரிகிறது. 9 ஆம் வகுப்பில் தமிழ் பிழையின்றி வாசிக்க முடியாத தொகையான மாணவர்கள் நாம் யுத்த காலத்தில் கற்ற காலத்தில் இருக்கவில்லை. அப்படியானால், 8 ஆம் வகுப்பு வரை கற்பித்த ஆசிரியர்கள் தாம் வாங்கிய அரச சம்பளத்திற்கு உரிய வேலையைச் செய்யவில்லை அல்லது பெற்றோர் வீட்டில் பிள்ளையின் நிலையைக் கண்டு கொள்ளவில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாங்கும் ஊதியத்திற்கு உரிய கடமை செய்ய ஊக்கமில்லாத ஆசிரியர்களை வெளிநாட்டுத் தமிழர் அனுப்பும் பணம் ஊக்குவிக்குமா? 

எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் இல்லை. சிலர் தமது கடமையை சரிவர செய்யாது விடலாம்.  ஆனால், எமது காலத்தில் கற்பித்தது போன்ற மாணவரின் அக்கறை உள்ள பல ஆசிரிய பெருமக்கள் இப்போதும் உள்ளார்கள். ஒரு சமூகத்தின் குறைபாட்டுக்கு தனி ஒரு பிரிவை எப்படி குற்றம் சுமத்த முடியும்? ஆசிரியர்களிடம் பேச்சு கொடுத்தால் தாம் எப்படியான இடர்களை எதிர்கொள்கின்றோம் என விபரிப்பார்கள். 

ஊர் ஆட்களில் விளக்கம் குறைவானவர்கள் உள்ளார்கள், மோசடிகள் உள்ளார்கள். இவ்வாறே வெளிநாட்டிலும். ஆனாலும், அக்கறை உள்ளவர்கள் தானே கவனம் எடுக்க வேண்டும். எல்லாரும் தமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என கைவிட்டால் எப்படி? பழைய மாணவர் சமூகமே பல விடயங்களுக்கும் ஆகக்குறைந்தது ஒரு தற்காலிக நிவாரணம். இதைத்தான் மீராவிடம் விளம்புகின்றேன். 😁

5 minutes ago, விசுகு said:

அதாவது ஊரில் உள்ளவர்கள் உடைவதையும் கவனிக்கத்தேவையில்லை

அதுவும் நீங்கள் வந்து  பார்த்து  திருத்திக்கொடுங்கள்

அது  தானே  உங்களது  வேலை  என்கிறீர்கள்??

இப்போ முதலில் நீங்கள் குறிப்பிட்ட

அவர்களிடம் பணமில்லை

உழைப்பு இருக்கு  என்ற  உங்கள் கருத்து என்னாச்சு  தம்பி??

உழைப்பு நிச்சயம் உள்ளது. ஊக்கத்தை கொடுங்கள். உங்கள் சுற்றுமதில் திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊரார் உழைப்பை எடைபோட வேண்டாம். சிலவேளைகளில் இப்படியோ.. உங்களுக்கு மாட்டில் எப்படி பால் கறப்பது என்று தெரியவில்லை. இதற்கு மாட்டில் பால் இல்லை என்று சொல்லக்கூடாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

உழைப்பு நிச்சயம் உள்ளது. ஊக்கத்தை கொடுங்கள். உங்கள் சுற்றுமதில் திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊரார் உழைப்பை எடைபோட வேண்டாம். சிலவேளைகளில் இப்படியோ.. உங்களுக்கு மாட்டில் எப்படி பால் கறப்பது என்று தெரியவில்லை. இதற்கு மாட்டில் பால் இல்லை என்று சொல்லக்கூடாது. 😁

உலகில் ஆகக்கூடிய கெட்ட செயல் கொடுக்கும் உணவை  தட்டி விடுதல் என்பேன்

எனவே அதை  ஒரு போதும் நான் செய்யேன்

வாழ்த்துக்கள்  என்று கூட சொல்லமுடியவில்லை

உதவுங்கள்.  நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் இல்லை. சிலர் தமது கடமையை சரிவர செய்யாது விடலாம்.  ஆனால், எமது காலத்தில் கற்பித்தது போன்ற மாணவரின் அக்கறை உள்ள பல ஆசிரிய பெருமக்கள் இப்போதும் உள்ளார்கள். ஒரு சமூகத்தின் குறைபாட்டுக்கு தனி ஒரு பிரிவை எப்படி குற்றம் சுமத்த முடியும்? ஆசிரியர்களிடம் பேச்சு கொடுத்தால் தாம் எப்படியான இடர்களை எதிர்கொள்கின்றோம் என விபரிப்பார்கள். 

ஊர் ஆட்களில் விளக்கம் குறைவானவர்கள் உள்ளார்கள், மோசடிகள் உள்ளார்கள். இவ்வாறே வெளிநாட்டிலும். ஆனாலும், அக்கறை உள்ளவர்கள் தானே கவனம் எடுக்க வேண்டும். எல்லாரும் தமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என கைவிட்டால் எப்படி? பழைய மாணவர் சமூகமே பல விடயங்களுக்கும் ஆகக்குறைந்தது ஒரு தற்காலிக நிவாரணம். இதைத்தான் மீராவிடம் விளம்புகின்றேன். 😁

உழைப்பு நிச்சயம் உள்ளது. ஊக்கத்தை கொடுங்கள். உங்கள் சுற்றுமதில் திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊரார் உழைப்பை எடைபோட வேண்டாம். சிலவேளைகளில் இப்படியோ.. உங்களுக்கு மாட்டில் எப்படி பால் கறப்பது என்று தெரியவில்லை. இதற்கு மாட்டில் பால் இல்லை என்று சொல்லக்கூடாது. 😁

நியாயம்,

பதிலுக்கு நன்றிகள், ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த "தற்காலிக நிவாரணம்" என்பது இப்போது எத்தனை ஆண்டுகளாகப் போய்க்கொண்டிருக்கிறது?  என் சொந்த அனுபவத்தின் படி 2012 இலிருந்து இந்தப் போக்கு இருக்கிறது, இதற்கு முன்னராகக் கூட இருக்கலாம். 10 வருடங்களாக பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்த "தற்காலிக நிவாரண" அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் நிதி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், இன்றும் 9 ஆம் வகுப்பில் தமிழ் வாசிக்க இயலாத பிள்ளை இருக்கிறதென்றால் பிரச்சினை எங்கே இருக்கிறதென நீங்கள் நினைக்கிறீர்கள்?

நான் குறிப்பிட்டது போல ஆசிரியர், பள்ளி நிர்வாகம், வீட்டில் பெற்றோர் இவர்கள் 90 களின் யுத்த காலத்தில் இருந்ததை விட எதை வித்தியாசமாகச் செய்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?  

ஒரு சில ஆசிரியர்கள் தான் கடமை செய்யாமல் இருக்கின்றனர் என்ற உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. ஒரு சில ஆசிரியர்கள் தான் ஒழுங்காகக் கடமை செய்கின்றனர் என்பதே சரியென எனக்குத் தெரிந்த தகவல்கள் கூறுகின்றன. 90 களில், உயர்தர வகுப்பில் பாடத்திட்டம் பூரணப் படுத்தாமல் ரியூசன் போக ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் ஒரு சிலர் இருந்தனர். இப்போது, இத்தகைய ஆசிரியர்கள் எல்லா வகுப்பிலும் இருக்கின்றனர், இது தான் பிரச்சினையின் அடிப்படை என நான் கருதுகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பரான ஆண்டு ஐந்து வரையான பாடசாலை அதிபரை இது தொடர்பாக வினவியபோது தனது பாடசாலையிலும் ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவரும் ஏனைய வகுப்புகளில் சில மாணவர்களும் எழுத்து தெரியாது கற்பதாக தெரிவித்தார். ஆசிரியர்கள் 2.30 மணிவரை நின்று கற்பித்தாலும் சில பெற்றோர் நாளாந்தம் வேலைக்காக(நாட் சம்பளத்திற்கு) சென்று வருவதால் வீட்டுப் பாடங்களில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் ஆசிரியர்கள் தங்களால் முடிந்தளவு அக்கறை செலுத்திகற்பிப்பதாக குறிப்பிட்டார்.

Edited by ஏராளன்
நாட் சம்பளத்திற்கு சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தகவல்களுக்கு நன்றி நியாயம்!

ஆனால், மீராவின் கேள்வி நியாயமானதாகத் தான் தெரிகிறது. 9 ஆம் வகுப்பில் தமிழ் பிழையின்றி வாசிக்க முடியாத தொகையான மாணவர்கள் நாம் யுத்த காலத்தில் கற்ற காலத்தில் இருக்கவில்லை. அப்படியானால், 8 ஆம் வகுப்பு வரை கற்பித்த ஆசிரியர்கள் தாம் வாங்கிய அரச சம்பளத்திற்கு உரிய வேலையைச் செய்யவில்லை அல்லது பெற்றோர் வீட்டில் பிள்ளையின் நிலையைக் கண்டு கொள்ளவில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாங்கும் ஊதியத்திற்கு உரிய கடமை செய்ய ஊக்கமில்லாத ஆசிரியர்களை வெளிநாட்டுத் தமிழர் அனுப்பும் பணம் ஊக்குவிக்குமா? 

நான் நினைக்கிறேன் இந்த விடயத்தில் தான் நானும் ஜஸ்ரினும் முதன் முதலாக ஓர் கோட்டில் நிற்கின்றோம்

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை நிர்வாகம் -> தாய்ச் சங்கம் (பழைய மாணவர் சங்கம் - தாயகம்) -> பழைய மாணவர் சங்கம் - புலம் பெயர் 

இந்த வழியில் செயற்பட்டால் பல விடையங்களை வினைத் திறன் மிக்கதாகவும் சீராகவும் செய்ய முடியும். ஆனால் ஊழல்களுக்காக பெரும்பாலான அதிபர்களும் ஆசிரியர்களும், தமது பெயருக்காக & படம் காட்டுவதற்காக பழைய மாணவர்களும் நேரடியாக ஈடுபடுவதால் எல்லாம் அரை குறையாகவே தொங்கி நிற்கின்றன.

80/90 களில் எந்தவிதமான பழைய மாணவர் சங்கங்களின் உதவிகளும் இன்றி பாடசாலைகள் இயங்கின. இன்றும் கூட புலம்பெயர் நாடுகளில் பழைய மாணவர் சங்கம் இல்லாத பல பாடசாலைகள் உள்ளன.

இன்று பெரிய பாடசாலைகள் ஊதிப் பெருத்து அளவிற்கு அதிகாமான மாணவர்களை உள்வாங்கி ஓவ்வொரு வகுப்பிலும் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகளவில் வைத்திருப்பதால் ஆசிரியர்களின் வேலைச் சுமையும் அதிகரித்துள்ளது.

அதேபோல் ஒவ்வொரு துறைகளும் 80/90 களில் இருந்ததைப் போல் இல்லாமல் விரிவடைந்துள்ளது. நாம் படித்த காலங்களில் A/L இல் 4 பிரிவுகள் ஆனால் தற்போது பல பிரிவுகள் அதேபோல் விளையாட்டிலும்.

ஊட்டப் பாடசாலைகள் (Feeding schools) தொடர்பாக பெரிய பாடாசாலைகளுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ சிறிதளவேனும் அக்கறை இல்லை. 

@நியாயத்தை கதைப்போம் ஊரில் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் செய்வது போல் நிச்சயம் எமது பிள்ளைகள் செய்யப் போவதில்லை. வெளிநாட்டில் தங்கி இருக்காமல் உள்ளூரிலேயே விடைகளைக் காண முயல வேண்டும்.

யாழில் 7 பாடசாலைகளில் படித்திருக்கிறேன். அதில் இரண்டு பாடசாலைகளுடன், நண்பர்களுடன் இன்றுவரை நேரடியாக தொடர்பில் இருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

நான் நினைக்கிறேன் இந்த விடயத்தில் தான் நானும் ஜஸ்ரினும் முதன் முதலாக ஓர் கோட்டில் நிற்கின்றோம்

ஆம், அது தான் யாழின் சிறப்பம்சம், ஏதாவதொரு விடயத்தில் ஒத்த கருத்து இருக்கும், சில விடயங்களில் violent disagreement இருக்கும்!😂

மேலே நீங்கள் விரிவாக எழுதியிருக்கும் கருத்துடனும் நான் 100 வீதம் உடன்படுகிறேன். நான் படித்த பாடசாலையில் இடை நிலைப்பாடசாலையில் விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்த அந்தப் பாடசாலையில் நான் எல்லா மட்டத்திலும் தொடர்பு கொண்டும் ஒன்றும் நகரவில்லை. ஆனால், ஐரோப்பாவிலிருந்து கீரிக்கட்டு விளையாட்டிற்கு பணம் அனுப்புவோரிடம் தினசரித் தொலைபேசித் தொடர்பில் இருப்பார்களாம். இந்த நிலையில், புதிய நிர்வாகம் கடந்த மாதம் பதவிக்கு வந்து சில படங்களை இணையத்தில் போட்டிருக்கிறார்கள். விஞ்ஞான ஆய்வு கூடம் 90 இல் கோட்டை அடிபாட்டுக் காலத்தில் இருந்ததை விட கேவலமான நிலையில் இருக்கிறது. ஆனால், கீரிக்கட்டு விளையாட்டிற்குக் காசு சேர்க்கும் அலுவல் தீவிரமாகத் தொடர்கிறது. இதை எழுதி என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

ஊழல்களுக்காக பெரும்பாலான அதிபர்களும் ஆசிரியர்களும், தமது பெயருக்காக & படம் காட்டுவதற்காக பழைய மாணவர்களும் நேரடியாக ஈடுபடுவதால் எல்லாம் அரை குறையாகவே தொங்கி நிற்கின்றன.

80/90 களில் எந்தவிதமான பழைய மாணவர் சங்கங்களின் உதவிகளும் இன்றி பாடசாலைகள் இயங்கின. இன்றும் கூட புலம்பெயர் நாடுகளில் பழைய மாணவர் சங்கம் இல்லாத பல பாடசாலைகள் உள்ளன.

நீங்கள் சொன்ன இந்த விடயங்கள் நானும் கேள்விபட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டடங்களை கட்டுவதிலோ, அழகுபடுத்துவதிலோ, விழாக்களை கொண்டாடுவதிலோ, கல்வி முன்னேறுவதில்லை. மாறாக ஆசிரியர்கள் சம்பளத்திற்காக இந்த தொழிலை பாக்காமல்  சேவையாக செய்ய வேண்டும். அன்று தொட்டு கஸ்ரம் நிறைந்ததும் ஊதியம் குறைந்ததும் சுமைகள் நிறைந்ததும் இந்தத் தொழில். முன்னைய காலத்திலும் ஆசிரியர்கள் பிறர் பிள்ளை  தலை தடவ தன் பிள்ளை தானே வளரும் என்று வாழ்ந்தார்கள். தங்கள் வகுப்பில் சிறந்த, வசதியற்ற மாணவர்களை தேடிச்சென்று ஊக்கமும் உதவியும் கொடுத்து முன்னேற்றி சமுதாயத்தில் முன் நிலைக்கு கொண்டு வந்தவர்களும் உண்டு. இன்று சுயநலம், ஆசிரியர்களுக்கிடையில் போட்டி, பிள்ளைகளை பழிவாங்கல் இப்படி பல ஊழல்கள். சேவை மறைந்து தொழிலாக கொள்கிறார்கள். கட்டாய வகுப்பேற்றம், பயிற்சி அற்ற ஆசிரியர்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், அதிக தண்டனையளிக்கும் ஆசிரியர்கள். பிள்ளைகளின் தகுதியை, வசதியை அறிந்து அதற்கேற்ப தங்கள் கற்பித்தல் முறையை மாற்றியமைக்கத் தெரியாதவர்கள், பிள்ளைகளின் ஆற்றலுக்கேற்ப தம்மை மாற்றியமைக்கத் முடியாதவர்கள் தமது திறமைக்கேற்ப பிள்ளைகளை எதிர்பார்ப்பவர்கள் இதனால் விரக்தியடைந்து பாடசாலையில் இருந்து விலகி தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை கவனிப்பதற்க்கு பெற்றோருக்கு நேரமில்லை. பொருளாதார தனித்த வாழ்க்கைச் சுமை. கல்வியில், பொருளாதாரத்தில், ஒழுக்கத்தில்  சிறந்து விளங்கிய சமுதாயம் இன்று பல சவால்களுக்கு முகம் கொடுத்து எங்கே நிற்கிறது? உண்மையை சொன்னால் பலர் எனக்கு எதிராக வரிஞ்சு கட்டிக்கொண்டு வருவார்கள். விமர்சனம், ஊதியம், வசதி இவற்றை  கடந்ததே ஆசிரியத்தொழில். எல்லாவற்றையும் நவீன தொழில் முறையில் பார்க்கத்தொடங்கிவிட்டோம். ஆசிரியருக்கும் மாணவனுக்குமிடையிலான உறவு புரிந்துணர்வு, ஏற்றுக்கொள்ளல் மிக முக்கியம். எனது மாணவன் அடுத்த ஆண்டு வகுப்பேற்றதிற்கு தகுதியானவனா? அதற்கு நான் சரியாக வேலை செய்கின்றேனா? என ஆராய வேண்டும். இது தொழிலல்ல சேவை. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்." ஏன் அப்படிசொன்னார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

, இன்றும் 9 ஆம் வகுப்பில் தமிழ் வாசிக்க இயலாத பிள்ளை இருக்கிறதென்றால் பிரச்சினை எங்கே இருக்கிறதென நீங்கள் நினைக்கிறீர்கள்?

குறுக்கிடுவதற்கு  மன்னிக்கவும்

இந்த  பிரச்சினை  உலக  அளவில் இருக்கிறது

பிரான்சிலும் இது முக்கிய  பேசு பொருளாக தற்பொழுது உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.