Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்

பட மூலாதாரம்,ANI

2 ஜூன் 2023, 16:37 GMT
புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ரயில் விபத்தில் காயமடைந்த 132 பயணிகள் கோபால்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

இது தவிர, காயமடைந்த 47 பேர் பாலசோரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி முகமைகளின்படி, சென்னையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியதால், அதன் பல பெட்டிகள் தடம் புரண்டன.

பாலசோர் அருகே உள்ள பஹனகா பஜார் ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடந்தது.

   

மூன்று ரயில்களுக்கு நடுவே நடந்த விபத்து

இதுகுறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன.

இந்த ரயிலக்ள் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌரா செல்லும் ரயிலின் மீது மற்றொரு பாதையில் மோதியது. இதன் காரணமாக சில பெட்டிகள் யஸ்வந்த்பூர் ஹௌரா ரயிலும் தடம் புரண்டது,” என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் தலைமைச் செயலாளார் பிரதீப் ஜெனா, “ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீது மோதியது,” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசியவர், “பாலசோர் மருத்துவக் கல்லூரி, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, பாலசோர் மாவட்ட மருத்துவமனை, பத்ரக் மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன,” என்று கூறினார்.

உதவிக்கு வந்த மேற்கு வங்க முதல்வர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே துறையுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தனது மாநிலத்தில் இருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு மாநில அரசு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தபட்சம் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக புவனேஸ்வரை சேர்ந்த பிபிசியின் செய்தியாளர் சுப்ரதா பதி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் கியான் ரஞ்சன் தாஸ், “அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக” கூறினார்.

பிடிஐ, ஏஎன்ஐ செய்தி முகமைகள் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்திருப்பதைக் காணக்கூடிய வகையிலான சில படங்களை வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்

பட மூலாதாரம்,ANI

பிரதமர் இரங்கல்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண்

மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவிப்பு.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/czr07ny9ve8o

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரயில் விபத்து: ஒடிசா செல்லுமம் தமிழக அமைச்சர்கள்

Jun 03, 2023 00:39AM IST ஷேர் செய்ய : 
udhayanidhi stalin ss shivasankar

கோரமண்டல் அதிவிரைவு ரயில் விபத்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்ல உள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் நேற்று (ஜூன் 2) இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் தரம் புரண்டது.

800-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

நேற்று இரவு 11 மணியளவில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலை 12.30 மணியளவில் 70 உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

350-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 800 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்ல உள்ளனர்.
அமைச்சர்களுடன் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவும் ஒடிசா செல்ல உள்ளது.

 

https://minnambalam.com/tamil-nadu/ministers-udhayanidhi-stalin-ss-shivasankar-going-to-odisha/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒடிசா ரெயில் விபத்து; பலி எண்ணிக்கை 280 -ஆக உயர்வு - விபத்து நடந்தது எப்படி?

புவனேஷ்வர்,

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தது எப்படி?

இந்நிலையில், ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது. 

பெங்களூரு-ஹவுரா ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது, அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால், தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா ரெயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதியது. 

இந்த கோர விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த கோர விபத்தில் மொத்தம் 280 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 7 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 280 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

அதேவேளை, ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ரெயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பலர் பயணித்துள்ளதால் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து ரெயில்வே அமைச்சகம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 280 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

https://www.dailythanthi.com/News/India/233-killed-around-900-injured-in-odisha-triple-train-crash-978214

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரயில் விபத்து: தமிழ்நாட்டில் இன்று துக்க நாள் அனுசரிப்பு!

JegadeeshJun 03, 2023 08:46AM
WhatsApp-Image-2023-06-03-at-08.39.55.jp

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (ஜூன் 3) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, முதலமைச்சர், ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின் தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த்,ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (ஜூன் 3) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
 

https://minnambalam.com/tamil-nadu/train-accident-mourning-day-observed-in-tamil-nadu-today/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒடிஷா ரயில் விபத்தில் பலி 238-ஆக உயர்வு - 650 பேர் காயம்: கோர விபத்து நேரிட்டது எப்படி?

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம்,ANI

2 ஜூன் 2023
புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 650 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியன விபத்தில் சிக்கி பயணிகள் ரயில்கள் ஆகும். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், அந்த மார்க்கத்தில் செல்லும் சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் 238 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 650 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவம்

பாலசோர் ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவர்களும், பொறியாளர்களும் விபத்து நேரிட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் கிழக்குப் பிராந்தியத்தின் பல்வேறு தளங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைகின்றன.

 

விபத்துக்குள்ளான ரயில்களில் இருந்து உயிருடன் மீண்டவர்களை அப்புறப்படுத்தும் பணியிலும், காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்றுள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

விபத்து நேரிட்டது எப்படி?

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தனர்.

அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால்தான் இந்த கொடூரம் நேரிட்டது.

ரயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இதுகுறித்துப் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன.

அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன,” என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் தலைமைச் செயலாளார் பிரதீப் ஜெனா, “இரண்டு ரயிலிலும் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீதும் மோதியது,” என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசியவர், “பாலசோர் மருத்துவக் கல்லூரி, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, பாலசோர் மாவட்ட மருத்துவமனை, பத்ரக் மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன,” என்று கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

உயிர் தப்பியவர்கள் கண்டது என்ன?

விபத்தில் உயிர் தப்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி ஒருவர், ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, விபத்தின் போது கண்ட காட்சிகளை விவரித்தார்.

"ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். விபத்து நடந்தபோது தூங்கிக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த போது பலத்த சத்தம் கேட்டது. ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கையில் இருந்தபடி மின்விசிறியை கெட்டியாக பிடித்துக்கொண்டேன். ரயிலில் இருந்து கீழே இறங்கிப் பார்த்த போது, எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். என்னை காப்பாற்றுங்கள், எனக்கு உதவுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் யாருக்கு உதவுவது?ஆனால் அதற்குள் ரயிலின் கேண்டீன் தீப்பிடித்தது. அதனால் நாங்கள் ஓடிவிட்டோம்.” என்று அவர் கூறினார்.

ரயில்

பட மூலாதாரம்,ANI

2 வயது குழந்தை தப்பிப் பிழைத்தது

விபத்தில் தப்பிய மற்றொருவர், "விபத்து நடந்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்தனர். பெருங்குழப்பமாக இருந்தது. நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன்” என்றார்.

"எனக்கு கையிலும் கழுத்தின் பின்புறத்திலும் காயம் ஏற்பட்டது. நான் ரயில் போகியில் இருந்து வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் கையை இழந்திருப்பதையும், ஒருவரின் காலை இழந்ததையும், ஒருவரின் முகம் சிதைந்திருப்பதையும் பார்த்தேன்," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.

நேரில் பார்த்த மற்றொருவர், "யாருக்கும் கை இல்லை. யாருக்கும் கால் இல்லை. எல்லோரும் இப்படியே கிடக்கிறார்கள். விபத்து நடந்தபோது யாரும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். எல்லோரும் பயந்தார்கள். அப்போது யாரை காப்பாற்றுவது என புத்தி கூட வேலை செய்யவில்லை.”

“எங்கள் இருக்கைக்கு அடியில் இரண்டு வயது குழந்தை உயிருடன் இருந்தது. உயிர் பிழைத்துக் கொண்டது.” என்று மற்றொருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ரயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூட்டம்

விபத்து நடந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலசோர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மையத்திற்கு வெளியே மக்கள் கூடியுள்ளனர்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், ஆனால் செய்தி எழுதும் வரை, தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் மக்கள் சிக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

கோரமண்டல் ரயில் விபத்து

பட மூலாதாரம்,ANI

ரயில்வே அமைச்சர் அஸ்வினி நேரில் ஆய்வு

விபத்து குறித்த செய்தி அறிந்ததும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நேரிட்ட பாலசோருக்கு விரைந்தார். அங்கே விபத்து நேரிட்ட இடத்தில் நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். விபத்து நேரிட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

தற்போதைய நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறிய அவர், தண்டவாளங்களை சரிசெய்து, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே அந்த மார்க்கத்தில் மீண்டும் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உயர் மட்ட விசாரணை - நிவாரணம் அறிவிப்பு

பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்த அமைச்சர், அதேநேரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் தனியாக விசாரணை நடத்துவார் என்று தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

பிரதமர் இரங்கல்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

ஒடிஷா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுககு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சிக்கு முதல் அமைச்சர் செல்லும் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது.

பாலசோர் ரயில் விபத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை சென்னையில் மாநில அவசர நிலை நடவடிக்கை மையத்தில் இருந்த படி கண்காணித்து வருகின்றனர். அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலசோர் நிலவரத்தை கேட்டறிந்தார். விபத்திற்குள்ளான ஹவுரா - சென்னை கோரமண்டல்ஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் எத்தனை? அவர்களது தற்போதைய நிலை என்ன? அத்தனை பேரின் தற்போதைய நிலவரம் என்ன? பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண்

மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களையும் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 7
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 7

ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து

பட மூலாதாரம்,SUBRAT PATI

திருப்பிவிடப்பட்டுள்ள பிற ரயில்கள்

இந்த விபத்து காரணமாகப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.

ஹவுரா-புரி விரைவு ரயில், ஹவுரா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா சென்னை மெயில், ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா சென்னை கோரமண்டல் ரயில் விபத்து அவசர கால உதவி எண்கள்: 06782-262286 ( ஒடிசா அரசு உதவி எண் ) ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை)

https://www.bbc.com/tamil/articles/czr07ny9ve8o

  • Sad 1
Posted

ஒடிசா விபத்தில் 207 பேர் பலி; 900 பேர் படுகாயம்

 

 

 

 

image_d4c49b0bf8.jpg

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதில் இதுவரை 207 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது

பாலாசோர், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

  தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரயில்களில் ஒன்றான இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த ரயில் நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது.

  மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு இருந்தது.

அந்த ரயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.  ஒடிசா ரயில் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்வு, 900 பேர் படுகாயம் இதனால் எதிர்பாராத விதமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.

 இதில் கோரமண்டல் எக்ஸ்பிரசின் 10பெட்டிகள் தடம் புரண்டு 3-வது தண்டவாளத்தில் விழுந்தன. அந்த பெட்டிகள் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் இருந்த ஏராளமான பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதில் பலரும் பலத்த காயம் அடைந்து வலியால் துடித்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறினர்.

இந்த பயங்கரத்தில் மற்றொரு பேரிடியாக, தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் 3-வது த

ண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதின. இதில் அந்த பெட்டிகள் மேலும் சேதம் அடைந்ததுடன், அதில் சிக்கியிருந்த பயணிகளின் நிலையும் மோசமானது.

இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார மக்கள் உடனே அங்கே விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதி முழுவதும் மக்களின் மரண ஓலமும், ரயில் பெட்டிகளின் குவியலுமாக கோரமாக காட்சி அளித்தது.

அதேநேரம் சம்பவ இடம், அதிக மக்கள் வாழிடம் இல்லாத வனம் சார்ந்த ஒதுக்குப்புறமான பகுதி என தெரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் காரிருள் சூழ்ந்திருந்தது. இந்த விபத்தில் சிக்கிய ரயில்களின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன.

அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து உள்ளன. இந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் சுமார் 400 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 350 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின.

 விபத்து குறித்து தகவல் அறிந்த தென்கிழக்கு மண்டல ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு உள்ளூர் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளை தொடங்கினர். அத்துடன் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரையும் ஒடிசா அரசு விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 3 குழுவினர், 26 பேர் அடங்கிய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஒடிசா-விபத்தில்-207-பேர்-பலி-900-பேர்-படுகாயம்/150-318465

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரதிஷ்டவசமான நிகழ்வுதான், ஆனாலும் என்னால்  அனுதாபம் தெரிவிக்க முடியவில்லை. 

எங்கள் அழிவுகளுக்குக் காரணமானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க முடியாத அளவுக்கு மனம் மரத்துவிட்டது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - நடிகர் கமல்ஹாசன்

Published By: DIGITAL DESK 3

03 JUN, 2023 | 04:21 PM
image
Placehoder--_40.jpg

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறதென நடிகர்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது,

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156864

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனித இனத்தின் மிகப்பெரிய துன்பமான நிகழ்வு.........!

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த விபத்துக்கு யார் காரணம் என்ற ஜி பூம்பம்மா கடைசி வரை மர்மமாகவே இருக்கும் உலகின் நீண்ட கழிப்பறை இந்தியாவின் வட இந்திய ரயில்வே தண்டவாளம்கள் சமிபத்தில் இந்திய எம்பியே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட விடையம் .உடனே இந்த கருத்தை தூக்கணும் என்று கத்தியை  தேடுபவருக்கு கீழே உள்ள படம் சமர்ப்பணம் .

May be an image of 1 person, train and railway

உலகின் மூன்றாவது வல்லரசு கனவில் இருப்பவர்கள் .

இங்கு யாழில் இந்தப்பகுதி வெட்டுப்பட்டாலும் கூகிளில் உள்ள படம்தான்யா .

பக்கத்து நாட்டில் உள்ள பூர்வீக  தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கையை அழித்து  விட்டு வல்லரசு கனவு காண்கினமாம்  .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரக்கு ரயில் நின்றிருந்த 'லூப்' லைனில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நுழைந்தது எப்படி? 'கிரீன்' சிக்னல் கொடுத்தது யார்?

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சந்தன் குமார் ஜஜ்வாடே
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 3 ஜூன் 2023
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கோரமண்டல் விரைவு ரயில், பின்னால் இருந்து சரக்கு ரயில் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

ரயில்வேயின் டெக்னிகல் மொழியில், இது ஹெட் ஆன் மோதல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய விபத்துகள் பொதுவாக மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன.

இந்த விபத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் சில அடுத்த தண்டவாளத்தில் சென்று விழுந்தன.

 

சரியாக அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் அந்த தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது.

தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதன் காரணமாக இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.

ரயில்வேயின் தென்கிழக்கு மண்டலத்தின் கரக்பூர் பிரிவில் உள்ள அகலப்பாதை நெட்வொர்க்கில் இந்த விபத்து நடந்தது.

வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட இந்த விபத்தின்போது என்னென்ன நிகழ்ந்தன என்று தெரிந்துகொள்வோம்.

 

இந்த விபத்து எப்படி நடந்தது?

ஜூன் 2, வெள்ளியன்று ரயில் எண் 12841 ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுராவுக்கு அருகிலுள்ள ஷாலிமார் ரயில் நிலையத்திலிருந்து சரியான நேரத்தில் புறப்பட்டது.

23 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பாலசோர், கட்டக், புவனேஷ்வர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக சென்னையை அடைய இருந்தது.

இந்த ரயில் மாலை 3.20 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கியது. முதலில் சாந்த்ராகாச்சி ரயில் நிலையத்தில் அது நின்றது. பின்னர் 3 நிமிட தாமதத்துடன் கரக்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது.

கரக்பூர் நிலையத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு ரயில் தனது ஓடத் தொடங்கியது. இந்த ரயில் இரவு 7 மணியளவில் பாலசோர் அருகே உள்ள பஹானகா பஜார் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த ரயில் பஹானாகா ஸ்டேஷனில் நிற்காமல் நேராக முன்னோக்கிச் செல்லவேண்டும். ஆனால் இந்த ரயில் ஸ்டேஷனில் உள்ள மெயின் லைனுக்குப் பதிலாக லூப் லைன் நோக்கிச் சென்றது. சரக்கு ரயில் ஒன்று லூப் லைனில் நின்று கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது.

சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் மெயின் லைனை விட்டு லூப் லைனில் சென்றது. இதன் காரணமாக விபத்து நடந்தது என்று அகில இந்திய ரயில்வே ஆண்கள் சம்மேளன பொதுச்செயலர் ஷிவ் கோபால் மிஷ்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலின்மீது மோதியதால் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அதன் சில பெட்டிகள் கீழே விழுந்து மறுபுறத்தில் உள்ள டவுன்லைனை அடைந்தன. அந்தப் பெட்டிகள் அந்த லைனில் வந்துகொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்றொரு ரயிலுடன் மோதியபோது…

அதேநேரத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த 12864 யஷ்வந்த்பூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தைக் கடந்துகொண்டிருந்தது. 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலின் பெரும்பாலான பெட்டிகள், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளாகும் போது அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டிருந்தன.

அப்போதுதான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. அதன் சில பெட்டிகள் கீழே விழுந்து உருண்டு யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸின் பின்புறத்தில் மோதியது. இதன் காரணமாக இரண்டாவது ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் மொத்தம் 15 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா வெள்ளிக்கிழமை இரவு ஒரு அறிக்கையில், தெரிவித்தார்.

மிகப்பெரிய மனிதத் தவறு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பதாக, கிடைக்கப் பெறும் தகவல்களில் இருந்து தெரிகிறது என்று ரயில்வே நிபுணரும், ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான (போக்குவரத்து) ஸ்ரீபிரகாஷ், பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஒரு ரயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தால் அந்தப் பாதையில் மற்றொரு ரயில் வர முடியாதபடி ’பாயிண்ட் ரிவர்ஸ்’ செய்யப்படும். இதனால் ரயில் அந்த தண்டவாளத்திற்குப் போகாது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதைச் செய்யமுடியாமல் போனால் உடனடியாக சிவப்பு விளக்கு சிக்னல் கொடுக்கப்படும். இதனால் எந்த ரயில் வந்தாலும் நின்றுவிடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ரயில்களின் வேகம்

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுமார் 15 நாட்களுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம், அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது என்று சிவ கோபால் மிஷ்ரா கூறினார்.

விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸின் வேகம் மணிக்கு 128 கிலோமீட்டராக இருந்தது. மற்ற ரயிலும் மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வேகம் காரணமாகவே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிக அளவில் சேதம் அடைந்தது. மறுபுறம் அதிக வேகம் காரணமாக, யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெரும்பாலான பகுதி விபத்து நடந்த இடத்தைக் கடந்துவிட்டது. அதன் பின் பகுதி மட்டுமே விபத்தில் சிக்கியது.

விபத்திற்குள்ளான இரண்டு ரயில்களிலும் ’எல்எச்பி பெட்டிகள்’ இருந்தன என்பது மற்றொரு விஷயம். 'Linke Hoffmann Busch' ரயில் பெட்டிகள் ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டவை. விபத்துகளைப் பொருத்தவரை இவை அதிக பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன.

ரயில்வேயின் பழைய ’ஐசிஎஃப் டிசைன்’ கோச்சுகளை ஒப்பிடுகையில், ’எல்ஹெச்பி பெட்டிகள்’ விபத்தின்போது ஒன்றின் மேல் ஒன்று ஏறுவதில்லை. பெட்டிகள் நசுங்கும் அபாயமும் இல்லை. பயணிகளின் உயிருக்கும் ஆபத்து குறைவு.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின், சரக்கு ரயிலின்மீது ஏறியிருப்பதை ஒடிஷா விபத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன. இன்ஜினுக்குப் பின்னால் இருந்த பல பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் நசுங்கின.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தகவல்களை அறிய ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால் எந்த அதிகாரியையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

உதவி எண்

விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தென்கிழக்கு ரயில்வே பல உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

இதனுடன் தென்கிழக்கு ரயில்வே சனிக்கிழமையன்று ஹவுராவிலிருந்து பாலசோருக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது. இதன் மூலம் விபத்து நடந்த இடத்தை உறவினர்கள் சென்றடையலாம்.

https://www.bbc.com/tamil/articles/ckml03mz5n4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை : இராஜினாமா கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்

அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை : இராஜினாமா கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த நேரத்தில் அரசியல் செய்வது சரியானது அல்ல என கூறியுள்ளார்.

அனைத்திலும் வெளிப்படைத்தன்மை என்பது தேவை என்றும் இந்த விடயத்திலும் தாம் அதனையே கடைபிடிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தருணத்தில் இவ்வாறு அரசியல் செய்யக் கூடாது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1333521

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மின்னணு இணைப்புக் கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் - இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

Published By: RAJEEBAN

04 JUN, 2023 | 01:15 PM
image
 

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ள நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்ததாக இந்தியமத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

FxwkyhCWIAI_IX1.jpg

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

 ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

 

இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோரில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்து நடந்த இடத்தில், 2வது நாளாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஷ்வினி வைஷ்ணவ், தற்போது எங்களின் முழு கவனமும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிப்பதே ஆகும். புதன்கிழமை காலைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்பதே இலக்கு. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி அடையாளம் காண முயற்சி செய்து வருகிறோம். மருத்துவமனை நிர்வாகம் பெரிய ஐஸ் கட்டிகள் வரவழைத்து உடல்களை பாதுகாத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இதுபற்றி விசாரித்து வருகிறார். ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். மின்னணு இணைப்பு அதாவது எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனக்கு தெரிந்தவற்றை கூறி சென்றிருக்கிறார். ரயில்வே குறித்து அவருக்கு போதிய விவரங்கள் பத்தாது. கவச்க்கும் விபத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156897

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒடிஷா ரயில் விபத்து - விடை தெரியாமல் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கேள்விகள்

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி,பிபிசி இந்தியா செய்தியாளர்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று நடந்த ரயில் விபத்து ஏன் நடந்தது என விடைகாண முடியாத பல கேள்விகள் உள்ளன.

288 பேரை காவு வாங்கிய இந்த கோர விபத்து, இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வழக்கமாக நேருக்கு நேர் மோதி விபத்து என நடக்கும் ரயில் விபத்துகளுக்கு நடுவே, இந்த விபத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு அதிவேக பயணிகள் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் அடுத்தடுத்து மோதின. முதலில் ஒரே தடத்தில் இருந்த சரக்கு ரயிலுடன் ஒரு பயணிகள் ரயில் மோதியது.

 

அதில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தில் சென்று விழுந்ததில் அந்த தடத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயில் அந்த பெட்டிகள் மீது மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளதாக விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விரிவான விசாரணைக்கு பிறகு மட்டுமே இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்தும், எங்கு தவறு நடந்தது என்பது தெரியவரும்.

நாட்டையே அதிர்க்குள்ளாக்கிய இந்த விபத்து, இந்தியன் ரயில்வேயின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரிக்க செய்துள்ளது.

 

பிரமாண்டமான இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் மிக முக்கியமான பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றான ரயில் போக்குவரத்து மிகவும் பிரமாண்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ரயில் அமைப்புகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே கருதப்படுகிறது. நாடு முழுவதும் 1 லட்சம் கிலோமீட்டருக்கு இதன் தண்டவாளங்கள் பரந்து விரிந்துள்ளன. நாளொன்றுக்கு இந்தியன் ரயில்வேயின் ரயில்கள் மூலமாக இரண்டரை கோடி மக்கள் நாடு முழுவதும் பயணிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட்டதாகவும், ஆண்டுதோறும் 8 ஆயிரம் கிலோமீட்டர் வரை பழைய ரயில் தண்டவாளங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்படுவதாகவும் ம்த்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான வழித்தடங்களில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லுமளவுக்கு தண்டவாளங்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் அளவுக்கு அவை தரம் உயரத்தப்படுவதாக இந்தியாவின் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதுமட்டுமின்றி, முக்கியமான வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

தடம் புரளும் ரயில்கள்

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரயில்வே துறை நவீனமாக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்தாலும், அடிக்கடி ரயில்கள் தடம் புரள்வது இந்தியன் ரயில்வே சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளின் ஒன்று என பிபிசியிடம் பேசிய முன்னாள் ரயில்வே வாரியத்தின் தலைவரான விவேக் சஹாய் தெரிவித்தார்.

"ரயில்கள் தடம் புரள பல காரணங்கள் உள்ளன. மோசமாக பராமரிக்கப்பட்ட தண்டவாளங்கள், பழுதான ரயில் பெட்டிகள், ஓட்டுநரின் பிழைகள் என பல்வேறு காரணங்களால் ரயில்கள் தடம் புரள்கின்றன."

ரயில்கள் தடம் புரள்வதுதான், 70% ரயில் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது என 2019-20ஆம் ஆண்டு அரசால் வெளியிடப்பட்ட ரயில்வே பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% வரை உயர்ந்துள்ளது. ரயில்களில் ஏற்படும் தீ விபத்தால் 14 சதவிகித விபத்துகளும், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாவதால் 8% விபத்துகளும் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

33 பயணிகள் ரயில், 7 சரக்கு ரயில் உள்பட மொத்தம் 40 ரயில்கள் குறிப்பிட்ட அந்த ஆண்டில் மட்டும் தடம் புரண்டதாக ரயில்வேயின் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 17 விபத்துகளுக்கு காரணம், ரயில் தண்டவாளத்திலுள்ள குறைபாடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் என்ஜின், பெட்டிகளில் உள்ள பழுதின் காரணமாக 9 முறை ரயில் தடம் புரண்டது.

இந்தியாவிலுள்ள ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தபடும் உலோகம், வெயில் காலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக விரிவடையும். அதேபோல குளிர்காலங்களில் சுருங்குகின்றன. இதனால் ஏற்படும் விரிசல் காரணமாக ரயில்கள் தடம்புரள்கின்றன.

இதை தவிர்க்க இந்த தண்டவாளங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தளர்வாக உள்ள தண்டவாளங்களை இறுக்குவது, தண்டவாளங்களை மாற்றும் சுவிட்ச்களில் உராய்வு ஏற்படாமல் இருக்க தேவையான பராமரிப்பை மேற்கொள்வது என விரிசலை தவிர்க்க பல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

110 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் தண்டவாளங்கள் அனைத்தும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யவேண்டுமென இந்தியன் ரயில்வே பரிந்துரைத்துள்ளது.

விபத்தை ஏற்படுத்தும் காரணிகள்

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏப்ரல் 2017 - மார்ச் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்து குறித்து ஃபெடரல் ஆடிட்டர்கள் வெளியிட்ட அறிக்கையில் சில முக்கியமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

தண்டவாளங்களில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதில் 30% முதல் 100 % வரை குறைபாடுகள் உள்ளன.

1,129 ரயில் தடம் புரண்ட விபத்துகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் விபத்தை அதிகமாக ஏற்படுத்தும் 2 டஜன் காரணிகள் கண்டறியப்பட்டன.

171 விபத்துகளில் தண்டவாளங்களை பராமரிக்க தவறியதன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக "அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பாதையின் விலகல்" இருப்பதன் காரணமாக விபத்துகள் நடக்கின்றன.

180க்கும் மேற்பட்ட விபத்துகளுக்கு இயந்திர கோளாறு காரணமாக அமைந்துள்ளது.

பழுதான ரயில் பெட்டிகளின் காரணமாகவும் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின்றன.

அதிக வேகம் மற்றும் மோசமான ஓட்டுநர் காரணமாகவும் பெரும்பான்மையான விபத்துகள் ஏற்படுகின்றன.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எதனால் விபத்திற்குள்ளானது என்பது விரிவான விசாரணைக்கு பிறகு மட்டுமே தெரியவரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் 'கவச்' தொழில்நுட்பம் தற்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை வழித்தடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு அருகிலிருந்த தண்டவாளத்தில் எப்போது சாய்ந்தது என்றும், அதே தடத்தில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் எப்போது வந்தது என்பதற்கான நேர இடைவெளி தெரியவில்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தை சேதப்படுத்தியதாகவும், இதனால் கொல்கத்தா-மும்பை பயணிகள் ரயில் தடம் புரண்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிஷாவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் இதுபோன்ற நாசவேலை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021-22 ஆம் ஆண்டில் நேருக்கு நேர் மோதல், தடம் புரண்டது, ரயில்களில் தீ விபத்து, லெவல் கிராசிங்கில் ரயில்களுடன் மோதும் வாகனங்கள் என 34 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

2022-2023 ஆம் ஆண்டில் இதுபோன்ற விபத்துகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக தி இந்து நாளிதழ் மே 31 அன்று செய்தி வெளியிட்டது.

அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கவலை கொள்வதாகவும், குறிப்பாக கிழக்கு கடற்கரை ரயில்வே மற்றும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட வேலை நேரத்தை பகுப்பாய்வு செய்து, உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகள் தங்கள் மூத்த மேலாளரை கேட்டுக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்து கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் கீழ் நடந்தது.

https://www.bbc.com/tamil/articles/cn0l44w29qpo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kavach பாதுகாப்பு அமைப்பு மூலம் ரயில் விபத்துகளைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்தால், அந்த இரண்டு ரயில்களும் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அது என்ன Kavach பாதுகாப்பு அமைப்பு? விரிவாகப் பார்க்கலாம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 நாட்கள் கடந்த பிறகும் உடல்களை அடையாளம் கண்டு ஒப்படைக்க முடியாதது ஏன்?

ஒடிஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • இருந்துபுவனேஸ்வர், ஒடிஷா
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. சடலங்களைத் தேடி வருவோரின் கதறல்களால் நிறைகின்றன மருத்துவமனைகள். களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.

ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்.

ஒதிஷா ரயில் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக புவனேஸ்வருக்கு வந்துகொண்டிருக்கின்றன. சடலங்களை அடையாளம் காண வருவோருக்கென அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டரில் திடீரென ஒரு கதறல் சத்தம். கணிப்பொறியின் திரையில் காட்டப்பட்ட சடலங்களில் தன் மகனின் சடலத்தை அடையாளம் கண்ட தந்தையின் கதறல் அது.

50களில் உள்ள சிவசங்கர் ஜானாவுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் சிறுவன். இன்னொரு மகனான டெவிட் ஜானாவுக்கு 27 வயது. தந்தை, மகன் இருவருக்குமே சரியான வேலை இல்லாத நிலையில், சென்னையில் வேலை தேடலாம் என கோரமண்டல் எக்ஸ்பிரசில் புறப்பட்டார் டெவிட் ஜானா.

 

டெவிட் ஜானாவுடன் தானும் வருவதாகச் சொன்னார் சிவசங்கர். ஆனால், சென்னைக்குச் சென்று வேலைதேடி, ஒரு சிறிய வீட்டையாவது வாடகைக்கு எடுத்துவிட்டு, தன் தந்தையை அழைத்துக் கொள்வதாகக் கூறி புறப்பட்டார் டெவிட் ஜானா.

இப்போது, அந்த மகனின் உடலை வாங்க வெயில் கொளுத்தும் ஒரு நாளில், பரிச்சயமில்லாத ஒரு ஊரில், பிணவறை முன்பாக அமர்ந்திருக்கிறார் சிவசங்கர் ஜானா.

ஒடிஷா ரயில் விபத்து

இந்தக் கொடூரமான அனுபவம் இன்னும் பல குடும்பத்தினருக்கும் காத்திருக்கிறது. ஒதிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 275 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் சுமார் 200 உடல்கள் வரை புவனேஸ்வரை வந்தடைந்திருக்கின்றன. இதில் 110க்கும் மேற்பட்ட உடல்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இரு பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

 

விமான, ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்

ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணிவரை சுமார் 15 சடலங்கள் வரை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அடையாளம் காணப்பட்ட சடலங்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன.

வேறு மாநிலங்களில் இருந்து சடலங்களை அடையாளம் காண வருவோருக்கு உதவும் வகையில் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ஒதிஷா அரசு. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இதற்கென சிறப்பு கவுன்டர்கள் செயல்படுகின்றன. சடலங்களைத் தேடி புவனேஸ்வருக்கு வந்து சேரும் உறவினர்கள், உடனடியாக அரசு வாகனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு உடல்களை அடையாளம் காண அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

நேரடியாக மருத்துவமனைகளுக்கே வருபவர்களுக்கு, கம்ப்யூட்டர் திரையில் இறந்தவர்களின் உடல்கள் காட்டப்படுகின்றன. அதில் உடல்களை அடையாளம் கண்டால், அவர்கள் பிணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் குறிப்பிட்ட உடல் காட்டப்படுகிறது. அந்த உடல் தங்களுடைய உறவினர்களுடையது என உறுதிப்படுத்தினால், அடையாள அட்டை சரிபார்ப்பு போன்றவற்றை மற்றொரு அதிகாரிகள் அணி மேற்கொள்கிறது.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

இதற்குப் பிறகு, குறிப்பிட்ட உடல் மரப்பெட்டியில் உறவினர்கள் சொல்லும் ஊருக்கு, ஒதிஷா மாநில அரசின் செலவில் அனுப்பி வைக்கப்படுகிறது. உடலைக் கொண்டுசெல்ல விரும்பவில்லையென்றால், ஒதிஷாவிலேயே தகனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் பல சவால்களும் இருக்கின்றன.

"பெரும்பாலான உடல்கள் சிதைந்த நிலையில்தான் வருகின்றன. அடுத்ததாக, உறவினர்கள் இன்னும் பெரிய எண்ணிக்கையில் வர ஆரம்பிக்கவில்லை. அதனால் சடலங்களை அடையாளம் காண்பது தாமதமாகிறது. விரைவிலேயே, உறவினர்கள் வந்து சடலங்களைப் பெற்றுச்செல்வார்கள் எனக் கருதுகிறோம். பெரும்பாலும் பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் வருகிறார்கள். உறவினர்களின் உடலைத் தேடி வரும்போது துயரத்தால் நொறுங்கிப் போயிருப்பார்கள். அவர்களை ஆற்றுப்படுத்தி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம்" என்கிறார் புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையரான விஜய் குலங்கே.

ஒடிஷா ரயில் விபத்து

ரயிலில் பயணித்த உறவினர்களின் கதி தெரியாமல் தவிப்பு

இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், சடலங்களின் புகைப்படங்களைப் பார்த்து, அது தங்களுடைய உறவினர்தானா என்பதை அறிய முடியாதவர்களும் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குமாரின் சகோதரர், எல்லோரையும் போலவே சென்னைக்கு வேலை தேடி கோரமண்டல் எக்ஸ்பிரசில் பயணித்தார். இப்போதுவரை அவரது நிலை குறித்து குமாரால் அறியமுடியவில்லை. குமாரின் சகோதரருக்கு 3 பெண், 2 ஆண் என ஐந்து குழந்தைகள். என்ன செய்வதெனத் தெரியாமல் பரிதவித்துப் போயிருக்கிறார் குமார்.

இவ்வளவு சடலங்கள் புவனேஸ்வருக்கு வந்துவிட்ட நிலையிலும், சடலங்களைத் தேடி வருவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. பலர், தங்கள் உறவினர்களைத் தேடி பாலாசூருக்கே நேரடியாகச் சென்றுவிடுவது இதற்கு ஒரு காரணம். அங்கே உடல்கள் இல்லை எனத் தெரிந்த பிறகுதான் இங்கே வருகிறார்கள்.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாளைக்குள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தீவிரம்

இந்த ரயிலில் பயணம் செய்து, பலியானவர்களில் பலர் பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் உள்ளடங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தகவல் அறிந்து இங்கே வந்து சேர தாமதமாகிறது.

ஒடிஷா அரசைப் பொறுத்தவரை, பேரிடர்களை எதிர்கொள்வதில் அனுபவம் வாய்ந்தது. அதனால், இந்தப் பேரிடரையும் தங்கள் முந்தைய அனுபவங்களில் கிடைத்த பாடத்தின் மூலம் சிறப்பாக எதிர்கொள்கிறது அம்மாநில அரசு.

திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமைக்குள் உடல்கள் அனைத்தையும் உறவினர்கள் வசம் சேர்த்துவிட முடியுமென்றும் நிர்வாகம் நம்புகிறது.

https://www.bbc.com/tamil/articles/cz9g47p0gj0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலசோர் ரயில் விபத்தில் தொடரும் சோகம் - 101 பேரின் உடல்களை அடையாளம் காணமுடியாமல் திணறும் ஒடிசா

07 JUN, 2023 | 02:30 PM
image
 

 

புவனேஸ்வர்: பாலசோர் ரயில் விபத்தில் இன்னும் 101 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் திணறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மோதிக் கொண்டதில் 278 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் முழுமையடைந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.

தற்போது அந்தத் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உயிரிழந்த 278 பேரில் 101 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் ஒடிசா அதிகாரிகள் திணறி வருகின்றனர். அடையாளம் காணப்படாத உடல்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

 

இறந்தவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் அங்கு திரண்டு வந்து உடல்களைத் தேடி வருகின்றனர். விபத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை புகைப்படங்களாக எடுத்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு விபத்தில் சிதைந்து போயிருப்பதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே புகைப்படங்களை வைத்து அடையாளம் காண்பதில் உறவினர்கள் திணறி வருகின்றனர்.

சிலர், மின்சாரம் தாக்கி இறந்திருப்பதால் அவர்களது முகங்கள் கருகிவிட்டன. அவர்களின் முகங்களைக் கண்டறிவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து தனது மகனைத் தேடி வந்த ஒருவர் கூறும்போது, “விபத்துக்குள்ளான ரயிலில் எனது மகன் வந்தான். அவரது உடலை அடையாளம் காண்பதற்காக நாங்கள் இங்கு வந்தோம். ஆனால், இதுவரை அவனின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்குள்ள புகைப்படங்களை வைத்து தேட முடியவில்லை. புகைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன” என்றார்.

இதேபோல் பிஹாரிலிலுள்ள சமஸ்திபூரைச் சேர்ந்த ஒருவர் ரயில் விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் வந்த அவரது குடும்பத்தாரும் இதே காரணத்தைக் கூறி அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

 

பிஹாரின் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ரயிலில் வந்துள்ளனர். விபத்தில் 6 பேரும் இறந்துவிட்டனர். ஆனால் முகமது தாஹிர் என்பவரது உடலை மட்டுமே அடையாளம் காண முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வைத்து அடையாளம் காண முடியவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுவரை 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்தனர்.

 

மத்திய கிழக்கு ரயில்வேயின் டிவிஷனல் மேலாளர் ரிங்கேஷ் ராய் கூறும்போது, “ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் 200 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் 1,100 பேர் காயமடைந்தனர். இதில் 900 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர். இறந்த 278 பேரில் 101 பேரின் அடையாளத்தை கண்டறிய முடியவில்லை” என்றார்.

புவனேஸ்வர் நகரசபை ஆணையர் விஜய் அம்ரித் குலாங்கே கூறும்போது, “புவனேஸ்வரில் வைக்கப்பட்டுள்ள 193 பேரின் உடல்களில் 80 பேரின் அடையாளம் தெரிந்துவிட்டது. இதில் 55 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மற்ற உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது” என்றார்.

https://www.virakesari.lk/article/157162

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒடிசா ரயில் விபத்து இழப்பீட்டுத் தொகைக்காக நாடகமாடிய மனைவி: அம்பலப்படுத்திய கணவர்

08 JUN, 2023 | 02:46 PM
image
 

ஒடிசா ரயில் விபத்தில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி இழப்பீட்டுக்கு விண்ணப்பித்த பெண்ணை, அவரது கணவரே போலீஸில் காட்டிக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

 

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், ரயில்வே சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் ஒடிசா மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லட்சக்கணக்கில் வரும் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளான ரயிலில் தனது கணவர் பயணித்ததாகவும், நடந்த விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் நாடகமாடியுள்ளார். ஆனால், அதை அந்தக் கணவரே போலீஸில் தெரிவித்து பொய்யை அம்பலமாக்கினார்.

ஒடிசாவின் கட்டாக்கைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவருடைய கணவர் பிஜய் தத்தா. இவர் கடந்த ஜூன் 2-ஆம் தேதி விபத்துக்குள்ளான ரயிலில் இருந்ததாகவும் விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், சவக்கிடங்கில் இருந்த ஏதோ ஓர் உடலை தனது கணவரின் உடல் என்றும் அவர் அடையாளம் காட்டினார். ஆனால், அதிகாரிகள் சோதனையின்போது அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் கொண்டனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதற்கிடையில், கீதாஞ்சலியின் கணவர் பிஜ்ய தத்தா தனது மனைவி மீது மணியாபண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக பொய் கூறியதற்காகவும், பொதுப் பணத்தை அபகரிக்க முயற்சித்ததற்காகவும் மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். அந்த வழக்கை அக்காவல் நிலைய அதிகாரி பாலசோர் மாவட்டம் பாஹநாகா காவல் நிலையத்திற்கு மாற்றினார்.

ஒடிசாவில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

https://www.virakesari.lk/article/157261

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள" நினைத்திருக்கிறாள் பத்தினி......கணவன் காரியத்தைக் கெடுத்துட்டார்......!  😁

Posted

கல்லானாலும் கணவர் புல்லானாலும் புருசன்  என்பது  பொய்யா கீதாஞ்சலி?😃

_________________\________________________
 

வெளிநாடு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இந்திய உளவுத்துறை கூறுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

வெளிநாடு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இந்திய உளவுத்துறை கூறுகிறது. 

  • சீனா
  • ஶ்ரீலங்கா
  • பாகிஸ்தான்.   ???
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

வெளிநாடு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இந்திய உளவுத்துறை கூறுகிறது. 

பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவார்களா? தங்களது தொடர் பராமரிப்புத் தவறுகளை மறைக்க சொல்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஏராளன் said:

பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவார்களா? தங்களது தொடர் பராமரிப்புத் தவறுகளை மறைக்க சொல்கிறார்களோ தெரியவில்லை.

புலி இருந்திருந்தால்…. அவர்கள் மேல் பாரத்தை போட்டு,
நாலு அப்பாவிகளை கைது செய்து… வழக்கை 25  வருசம் இழுத்தடித்து
பிரச்சினையை திசை திருப்பியிருப்பான் இந்தியன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

புலி இருந்திருந்தால்…. அவர்கள் மேல் பாரத்தை போட்டு,
நாலு அப்பாவிகளை கைது செய்து… வழக்கை 25  வருசம் இழுத்தடித்து
பிரச்சினையை திசை திருப்பியிருப்பான் இந்தியன்.

100 %



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.