Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறம் கூறுதல்!

Featured Replies

  • தொடங்கியவர்

புறக்கணித்தல் என்பதற்கு நான் விளக்கம் சொல்லிவிட்டேன்.

புறமாக கணித்தல் புறக்கணித்தல்

உள்ளே இருக்கின்ற ஒருவரை (அதாவது எம்முடன்) நாம் புறமாக (வெளியே) இருப்பதாக கணித்து ஒதுக்கி வைத்தல் புறக்கணித்தல் ஆகும்.

உண்மையில் ஒதுக்கப்படுபவர் வெளியே இல்லை என்பதால்தான், கணித்தல் என்ற வார்த்தை வருகிறது. அதாவது உண்மையில் உள்ளே இருந்தாலும், வெளியே இருப்பது போன்று கணிக்கப்படுவார் என்று அர்த்தம்.

நீங்கள் உள்ளே என்ற இடத்தில் "முன்னால்" என்றும் வெளியே என்ற இடத்தில் "பின்னால்" என்றும் மாற்றி வாசித்துப் பார்த்தும் இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.

நான் சொன்னது போன்று "புறம்" என்பதற்கு பின்னால், வெளியே என்ற இடம் சார்ந்த அர்த்தங்கள்தான் உண்டு

Edited by சபேசன்

  • Replies 94
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணித்தல் என்பதற்கு நான் விளக்கம் சொல்லிவிட்டேன்.

புறமாக கணித்தல் புறக்கணித்தல்

உள்ளே இருக்கின்ற ஒருவரை (அதாவது எம்முடன்) நாம் புறமாக (வெளியே) இருப்பதாக கணித்து ஒதுக்கி வைத்தல் புறக்கணித்தல் ஆகும்.

உண்மையில் ஒதுக்கப்படுபவர் வெளியே இல்லை என்பதால்தான், கணித்தல் என்ற வார்த்தை வருகிறது. அதாவது உண்மையில் உள்ளே இருந்தாலும், வெளியே இருப்பது போன்று கணிக்கப்படுவார் என்று அர்த்தம்.

நீங்கள் உள்ளே என்ற இடத்தில் "முன்னால்" என்றும் வெளியே என்ற இடத்தில் "பின்னால்" என்றும் மாற்றி வாசித்துப் பார்த்தும் இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.

நான் சொன்னது போன்று "புறம்" என்பதற்கு பின்னால், வெளியே என்ற இடம் சார்ந்த அர்த்தங்கள்தான் உண்டு

இதில் எல்லாம் நீங்கள் நேரடிப் பொருள் விளக்கமா அளித்துள்ளீர்கள்...???! அப்படி ஆகும் இப்படி ஏகும்...????!

இதையேதான் நாமும் சொல்கின்றோம்.. புறம் கூறல் என்பது ஒருவரைப் பற்றி அவர் முன்னிலையின்றி குறை கூறல் என்று அமையும் போது.. அங்கு புறம்... என்பது கொள்ளும் அல்லது கொடுக்கும் விளக்கத்தை ஏன் புறம் கணித்தலுக்கு அளிக்க முடியாது...??! ஒருவர் முன்னிலையின்றி அவரைப் பற்றி சொல்லும் குறைகளை கணித்தல்... சிரத்தையில் கொள்ளல்..! :D:D

Edited by nedukkalapoovan

நீங்கள் எல்லோரும் இதுவரை இந்தப் "புறம் கூறல்" பற்றி நிகழ்த்திய கருத்தாடல்களை வைத்து எனக்குப் புரிந்ததை எழுதியிருக்கிறேன். சரியா என்று பாருங்கள்.

1.) "புறம்" என்றால் என்ன?

வெளியே, முதுகு

2.) புறம் கூறல் என்றால் என்ன?

ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றி இகழ்ந்து பேசுதல்.

3.) "புறம் கூறலில்" வரும் "புறம்" என்றால் என்ன?

வெளியே, முதுகு

4.) "புறமுதுகிட்டோடல்" என்றால் என்ன?

எதிரிப் படையிடம் தோல்வியிற்று திரும்பிப் பாராமல் ஓடுதல்.

5.) "புறமுதுகிட்டோடலில்" வரும் "புறம்" என்றால் என்ன?

வெளியே, முதுகு

நாம் சிறுவர்களாக இருந்த போது மூன்றாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உலகநீதி படித்திருக்கிறோம். சென்னை நூலக இணையத்தளத்திலிருந்து உலகநீதியில் வரும் முதற் பாடலை மட்டும் பிரதி செய்து இங்கு ஒட்டுகிறேன்.

உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளைக் கூறுகிறது இந்த உலகநீதி என்னும் இந்த நூல். இதில் 13 ஆசிரிய விருத்தப் பாக்கள் உள்ளன. ஒவ்வொரு விருத்தத்திலும் உள்ள ஒவ்வொரு அடியும் ஒரு நீதியைச் சொல்கின்றது. இந்த நூலை இயற்றியவர் உலகநாதர். இந்நூலின் கடைசி செய்யுள் மூலம் இது தெரியவருகிறது. அவருடைய காலம், வரலாறு முதலிய விபரங்கள் தெரியவில்லை. இவர் முருக பக்தர் என்பது பாடல்களின் மூலம் தெரியவருகிறது.

உலகநீதி புராணத்தை உரைக்கவே

கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!

நன்றி

சிறுபுள்ளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வேளைகளில் "புறம் கூறுதல்" எனும் சொல் சந்தர்ப்பங்களை பொறுத்து அதன் கருத்து அல்லது அர்த்தம் மாறுபடலாமா?நல்லது கெட்டது இரண்டிற்கும் அமையலாமல்லவா ஏனெனில் வேற்றுமொழிகளில் இப்படியான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. :D

  • தொடங்கியவர்

தமிழில் புறங்கூறுதல் என்பது பாராட்டுவதைக் குறிக்காது.

மற்றைய இனத்தவர்களை விட தமிழர்களிடம் ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி குறையாக பேசுகின்ற பழக்கம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

அதனால்தான் திருவள்ளுவரில் இருந்த பாரதி வரை புறங்கூறுவது பற்றி பாடியிருக்கிறார்கள்.

தமிழர்கள் புறமாகப் குறை சொல்வதை மட்டுமே பழக்கமாகக் கொண்டிருந்ததால், "புறங்கூறுதல்" என்ற சொல்லில் "குறை" என்ற சொல்லைப் பாவிக்கத் தேவையில்லாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

' க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி"

புறம்பேசு --- (ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி)

குற்றம் குறை சொல்லுதல்: புறணி பேசுதல்:

' அவர் என்னைப்பற்றி புறம் பேசித்திரிகிறார்"

புறம்போக்கு: தனியாருக்குச் சொந்தமில்லாத , அரசு வசம் இருக்கும் நிலம்.

பக்கம்: 754.

கோள்: கிரகம்.

கோள்மூட்டு: (ஒருவரைப்பற்றி) தவறாக (மற்றவரிடம்) மனத்தாங்கள் ஏற்படும்படி செய்தல்.

பக்கம்: 386.

  • 2 weeks later...

"புறம் கூறல்" என்பது ஒருவரின் முதுகுக்கு பின்னால் (அவர் இல்லாத போது) அவர் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்வதையே குறிக்கும்.

ஒருவரின் உண்மையான குறைகளை அவர் இல்லாத போது கலந்துரையாடுவது புறங்கூறல் அல்ல. உதாரணத்திற்கு, ஒரு ஆசிரியர் ஒரு மாணவனின் ஒழுக்கமின்மை பற்றி மாணவன் இல்லாத போது தலைமை ஆசிரியரிடமோ பெற்றோர் இடமோ கூறுவது புறங்கூறல் அல்ல.

Edited by vettri-vel

சுப வீரபாண்டியன் அவர்களுடைய விளக்கம்:

புறம் கூறுதல் என்பது ஒருவர் இல்லாத அவரைப் பற்றி குறையாகச் சொல்வது

அவருடன் "கோள் சொல்லுதல்" என்பதில் வருகின்ற "கோள்" என்ற சொல் பற்றியும் பேசினேன். நான் இங்கே தெரிவித்தது போன்றே, அவரும் "கோள்" என்பது பேச்சு வழக்கில் இருக்கின்ற ஒரு சொல் என்றே கூறினார்.?!!!

ஆனால் "குறள்" (சிறிது) என்ற சொல்லில் இருந்து "கோள்" என்பது திரிந்ததா என்ற கேள்விக்கு "அப்படி இருக்கலாம், ஆனால் அதை உறுதியாக தன்னால் சொல்ல முடியாது" என்று கூறினார்.

கோள் என்ற சொல்லுக்கு ஊறு (தீங்கு) என்றொரு அர்த்தம் உண்டு. அதனால் தான் ஆழிப்பேரலை கடற்கோள் (கடலால் விளையும் ஊறு) என்றும் அழைக்கப்படுகிறது.

கோள் சொல்லுதல் என்பது ஒருவர் நன்மதிப்புக்கு ஊறு செய்யும் நோக்குடன் அதற்கு பொருத்தமான தகவல்களை அடுத்தவருக்கு சொல்வதாகும் (அப்படி சொல்லப்படும் தகவல்கள் உண்மையனதாகவோ, பொய்யானதாகவோ, கூட்டிக் குறைக்கப்பட்டதாகவோ அல்லது திரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம்)

சார் மாணவனைப் பொறுத்தவரை அது புறங் கூறல் தான். குறை எது நிறை எது என்ற மதிப்பீடு பாருங்கோ subjective ஆனது. அதையும் முதுகுப்பின்னாலை சொல்லுறதை பிறகு வேறை என்ன வெண்டு சொல்லுறது.

"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்"

ஆசிரியர்கள் மாணவன் இல்லாத போது, மாணவன் மீது செய்யும் முறைப்பாடுகள் புறம்கூறல் என்பதற்குள் சேர்க்கப்பட்டால் இனி ஒரு ஆசிரியரும் மேலே உள்ள பாடலின் படி வாயே திறக்க முடியாது :huh:

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

உண்மையான குறைகளையும் சம்பந்தப்பட்டவர் இல்லாத போது கூறினால், அதுவும் புறங்கூறுவதுதான்.

புறங்கூறுவது என்பது, ஒருவரைப் பற்றி பொய்யான செய்திகளை அவர் இல்லாத போது கூறுவது மட்டும் அல்ல.

உண்மையான குறைகளையும் சம்பந்தப்பட்டவர் இல்லாத போது கூறினால், அதுவும் புறங்கூறுவதுதான்.

புறங்கூறுவது என்பது, ஒருவரைப் பற்றி பொய்யான செய்திகளை அவர் இல்லாத போது கூறுவது மட்டும் அல்ல.

ஆஹா வாருங்கள் ஐயா! வாருங்கள்! நமது நோக்கம் நிறைவேறி விட்டது. இனி நடக்கட்டும் கச்சேரி.

:huh::lol::D

  • தொடங்கியவர்

முறைப்பாடு வேறு, புறங்கூறுதல் வேறு.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, இரண்டும் ஒன்று போல் தோன்றலாம். புறங்கூறியவர் தன்னைக் காத்துக் கொள்ள "முறைப்பாடு" என்று சொல்லைப் பயன்படுத்தலாம்.

ஆனால் நோக்கம் வேறுவேறானவை.

மாணவர் இல்லாத நேரம் மாணவரைப் பற்றி அள்ளி வைப்பது புறங்கூறல் தானுங்கோ. குறை நிறைகளை மாணவனிற்கு முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் நேர்மையாக கலந்துரையாடுவது தான் ஆரோக்கியமானது மாணவனிடமும் ஒரு நம்பிக்கையுடனான மரியாதை வரும்.

அதுவும் நம்மட 45 வயது நடன ஆசிரியர் எனக்கு வடிவா அபினயம் வருகுது இல்லை எண்டு அள்ளி வைச்சா எப்பிடி இருக்கும் சார்?

வெற்றிவேல் உந்த புறங்கூறலுக்கு சமஸ்கிரிதத்தில என்னெண்டு சொல்லுறது? ஒண்டும் இல்லாட்டி ஸப்புவகா இன்னும் சும்மா தான் கிடக்கு பத்துவாக்கு இல்லாட்டி இதுக்கு பாவிச்சு கச்சேரியை தொடரலாம் அதுக்குத் தான்.

தமிழில் மயங்கொலிகள்..?? (( படித்து நீண்ட காலம் என்பதால் எப்படித்தான் கசக்கினாலும் சொல் ஞாபகத்தில் வருகிறது இல்லை))

சில சொற்கள் சரியான நேரடி அர்த்ததை தராமல் வேறு கருதை புதைத்து நிக்கும்..

உதாரணமாக..

கண்மூடினார்- சாவடைந்தார் எண்று வரும் (( கண் மூடினான் என்று பிரிந்து வந்தால் வேறு அர்த்ததை தரும்)

தலைசாய்த்தார் - நித்திரை செய்தல் (( தலையை சாய்த்தல் என்பது படுத்து இருப்பது எண்று வேறு அர்த்தம் தரும்))

இமைமூடினார்- அதுவும் நித்திரை செய்தல் ( இமை மூடினார் என்பது சும்மா இமைகளை மூடி திறத்தல் நிட்த்திரை என்னும் அர்த்ததில் வராது...

புறம்கூறல்- குறை கூறுதல். ( புறம் கூறல் என்பது வேறு அர்த்ததை தரும்....)

இன்னும் இது முடிவுக்கு வரவில்லையா..... புறத்தை வைச்சே கொல்றாங்கப்பா.... :P

  • தொடங்கியவர்

தயா தந்த உதாரணங்களையே பாருங்கள்!

இமைமூடினார் - நித்தரை செய்தல் என்று வரும் என்று சொல்கிறார்.

இந்தச் சொல்லில் நித்திரை என்ற சொல் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. நித்திரை என்பதற்கு இமை என்ற பொருளும் இல்லை. நித்திரை கொள்ளும் போது இமைகளை மூடுவதைக் கொண்டு உருவான சொல் இது.

கண்மூடினார் - சாவு அடைந்தார் என்ற அர்த்தத்தில் வரும். இங்கும் கண் என்ற சொல் சாவு என்ற பொருள் இல்லை. இறக்கும் போது கண்ணை மூடுவதை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல் இது

அதே போன்று புறம்கூறுதல் என்ற சொல்லில் உள்ள புறமும் குறை என்ற பொருளில் இல்லை. குறை குறும்போது நேராகக் கூறாமல் புறமாகக் கூறுவதை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல் இது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் ஒரு சொல் -- பலகருத்து, பலசொல் --ஒரு கருத்து உள்ள படியால் புறங்கூறலுக்கு பல கருத்து இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தொடருதா புறம் கூறுதல்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு சகோதர, சகோதாிகளே அஸ்ஸலாமு அழைக்கும்....

சிறிது நேரம் கிடைத்துவிட்டாலோ, அல்லது இரண்டு பேர் கூடி விட்டால் போதும் மற்றவர்களை பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம்;. அதுவும் நம்மில் சிலருக்கு அடுத்தவர்களை பற்றி பேசவில்லை என்றால் தலை வெடித்து விடும். அது அடுத்தவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்று நம் அனைவருக்கும் தொியும். ஆனாலும் நாம் புறம் பேசுவதை நிறுத்துகிறேமா என்றால் இல்லை என்பது நாம் அனைவருக்கும் தொிந்த விஷயம்.

இஸ்லாம் புறம் பேசுவதை பற்றி என்ன கூறியிருக்கிறது என்று தொிந்து கொள்வது முஸ்லிமாகிய நம் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யாரேனும் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டவர்

“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது

சிந்தித்து பாருங்கள் நாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவதனால் நமக்கு நாமே எவ்வளவு தீங்கிழைக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம் தவறுகளின் பிறப்பிடமே இந்த நாக்குதான். எனவே நாம் உறுப்புகளில் மிகவும் அஞ்ச வேண்டிய உறுப்பு நாக்குதான் ஆகையால் இந்த நாக்கு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

“அல்லாஹ்வின் தூதரே, என் மீது தாங்கள் மிகவும் பயப்படுவது ஏன்? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். தன் நாவை பிடித்துக் கொண்டு இதுதான் (அதிகமாக அஞ்சுவது) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் தகபிஃ(ரழி) நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் தூதரே நாவின் விஷயத்தில் அஞ்சும் நமது நிலை பற்றி சிந்தித்து பாருங்கள் அது மட்டுமல்ல புறம் பேசுதல் தனது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பது போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக நமக்கு எச்சாிக்கை செய்கிறது.

பிறர் குறைகளை துருவி துருவி ஆராய்பவர்

“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (49:12)”

சிந்தியுங்கள் சகோதரர்களே இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்ணும் நிலைக்கு எந்த மனிதனாவது முன் வருவானா? முன் வருவது இருக்கட்டும் மனதிலாவது நினைப்பானா? அப்படி செய்பவனை நாம் எவ்வளவு கேவலமாக பார்ப்போம். சிந்தியுங்கள் சகோதரர்களே அல்லாஹ்வின் முன் புறம் பேசித்திறியும் அனைவரது நிலையும் அப்படி தான் உள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.

சிந்தித்து பாருங்கள் நாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவதனால் நமக்கு நாமே எவ்வளவு தீங்கிழைக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம். இது தேவைதானா?

இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்

“எவாின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர்(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம், அபூதாூத்

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே நமது மார்க்கம் பிறர் நலம் பேனுவதில் எவ்வளவு அக்கரை எடுத்துக்கொள்கிறது என்று.

இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்

“ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்;: புகாாி

நரகத்திற்கு செல்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் அதிகமாக சாபமிடுதலும் கணவனுக்கு மாறு செய்வதும் ஆகும். இவ்விரண்டு குற்றங்களும் பெண்கள் தான் செய்கிறார்கள். எனவே பெண்கள் தான் நரகில் காணப்படுகிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கீழ்வரும் ஹதீஸ்களில் நமக்கு தொியப்படுத்துகிறார்கள். எனவே பிறரை சபிப்பதும், கணவனுக்கு மாறு செய்வதும் பெண்களை நரகில் கொண்டு போய் சேர்க்கும். எனவே பெண்கள் நாவிற்கு பயப்பட்டு கவனமாக பயன்படுத்தவேண்டும்.

அதிகமாக சாபமிடும் பெண்கள்

“ஒரு நபி(ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது நோன்பு பெருநாளன்று தொழும் இடத்திற்கு வந்து பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்றார்கள். அப்போது தர்மம் செய்யுங்கள். பெண்கள் சமுதாயமே, உங்களை நரகவாதிகளில் மிக அதிகமானவர்களாக பார்க்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அது எப்படி என்று கேட்டார்கள். நீங்கள் சாப வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள். கணவனுக்கு மாறு செய்கிறீர்க்ள என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்

தன் சகோதரனிடம் உள்ள குறைகளை பிறாிடத்தில் சொல்வதால் அவன் மனது கஷ்டத்திற்கு ஆளாகிறது. காரணம் இவனை பற்றி நல்ல மதிப்பு கொண்டவன் இக்குறையை கேட்பதால் மதிப்பிழந்து பார்க்கிறான். எனவே இவை புறம் பேசுவது ஆகும். அதே நேரத்தில் அவனிடம் இல்லாத ஒன்றை நாம் பேசும் போது அவதூறு பேசுவது ஆகும். இது போன்றவை சர்வ சாதாரணமாக நம்மிடையே நடக்கிறது. எனவே இது விஷயமாக நாம் மிகவும் எச்சாிக்கையாக இருக்கவேண்டும்.

புறம் என்றால் என்ன?

“புறம் என்றால் என்ன என்பதைபற்றி நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அறிவீர்களாக என கேட்டபோது, அல்லாஹ்வும், அவன் தூதருமோ தவிர மிகவும் அறிந்தவர் என தோழர்கள் கூறினார்கள். (புறம் என்பது) உன் சகோதரன் வெறுப்பதை நீ பேசுவதற்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அவ்வாறு நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தால் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீ சொல்வது அவாிடம் இருந்தால் புறம் பேசி விட்டாய். அவ்வாறு அவாிடம் இல்லை என்றால் அவர் மேல் இட்டு கட்டிவிட்டாய் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

ஒருவர் எவ்வளவு தான் தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும் தன் நாவின் கெட்ட வார்த்தைகளால் நரகத்திற்கு போய் விடுகிறான், தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை குறைத்துக் கொண்டாலும் தன் நாவை கெட்ட பேச்சுகளில் இருந்து தவிர்த்து கொள்வதால் சுவனம் செல்ல காரணமாக இருக்கிறது என்று பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தொிந்து கொள்ளலாம்.

அதிகமாக அமல்கள் செய்தும் நாவால் துன்பம் தருபவர்

“ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறால் - ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபி(ஸல்) விளக்கம் அளித்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்கள்: அஹ்மத், பைஹகீ

புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள் தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்று மற்றொரு விஷயம் நம் பெண்களிடையே மிகவும் மோசமான நிலை அதுதான் அவதூறு பிறர் மணம் நோகும் என்று சிறிது கூட சிந்தித்து பார்ககாமல் அபாண்டமாக அவதூறு பேவிவிடுகிறார்கள். எதையும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது.

“அல்லாஹ் உங்கள் மீது தாய்மார்களை கொடுமைபடுத்துவத்தையும் பெண் மக்களை உயிரோடு புதைப்பதையும் அனுமதித்தவற்றையும் தடை செய்வதையும் தடை செய்து விட்டான். மேலும் இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது என்று கூறுவதையும், அதிகம் கேள்வி கேட்பதையும் பொருளை வீணடிப்பதையும் வெறுக்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள்.” அறிவிப்பவர்: முகீரா(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்

ஒரு பெண் விஷயத்தில் சொல்லப்படும் அவதூறு அவளின் வாழ்க்கை நிரந்தரமாக பாழ் ஆகிவிடும். நல்ல பெண் என்று பேசப்படும் பெண்களுக்கே மாப்பிள்ளை கிடைப்பது. மிகவும் கடினமாக இருக்கிறது. இன்னும் பெண் மீது அபாண்டமாக அவதூறு கூறினால் அவளுடைய நிலைமைய சொல்லித்தான் தொியவேண்டுமா?

இதன் கடுமையை அறிந்த அல்லாஹ் இதை மாபெரும் குற்றமாக கூறியுள்ளான். அவதூறு கூறுபவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையானால், அவர்களுக்கு என்பது கசையடி கொடுப்பதோடு இனிமேல் எப்பிரச்சினையாலும் இவாின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இவர்கள் இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்படவர்கள். மறுமை நாளில் படுபயங்கர வேதனை இவர்களுக்குண்டு. ஆகவே இந்த மோசமான செயலை கனவில் கூட நாம் எண்ணி பார்க்ககூடாது.

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் என்பது கசையடி, அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர் தான் பாவிகள் (24:4)

எவர்கள் மூஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்களுக்கும் கடுமையான வேதனையும் உண்டு. (24:23)”

அழிக்கக்கூடிய ஏழு விசயங்களை தவிர்த்து கொள்ளுங்கள். என்று நபி(ஸல்) கூறினார்கள். நாங்கள் அவை என்னென்ன என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் சூனியம் செய்தல் நியாயமாகவே அன்றி உயிர்களை கொலை செய்தல். வட்டியின் மூலம் சாப்பிதல் அனாதையின் பொருட்களை சாப்பிடுதல் போர்களத்தில் புறமுதுக காட்டி ஓடுதல் கற்புள்ள பேதை பெண்கள் மீது அவதூறு கூறுதல்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்

புறம் பேசுதலைத் தடுத்திருந்தாலும் சில நேரங்களில் அவை அனுமதிக்கப்படுகின்றன. மக்களை எச்சாிக்கை செய்வதற்காக ஒருவாின் குறையை எடுத்துக் கூறலாம். ஒருவரைப் பற்றி ஆலோசனை கேட்கும் பொழுது, அவரது நிறைகளை எடுத்துக்காட்டலாம். மார்க்கச் சட்டம் என்ன கூறுகிறது என்பதை அறிவதற்காக ஒருவரைப் பற்றி, அவாின் குறைகளை எடுத்துக் கூறலாம். இதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கின்றது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கோாினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவருக்கு அனுமதி வழங்குங்கள். இவர் தன்னுடைய கோத்திரத்திலேயே மிகவும் கெட்டவர் என்று கூறினார்கள். நூல்கள் : புகாாி, முஸ்லிம்

ஒருவரைப் பற்றி இன்னொருவாிடம் இல்லாத ஒன்றைக் கூறி இவருக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்துவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குடும்பங்கள் பிாிந்திருக்கின்றன. எத்தனையோ பேர் கொலை கூடச் செய்யப்பட்டுள்ளனர். இப்படிப் பெரும்பாதிப்பு இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லை. இப்படிக் கோள் சொல்லித் திாிபவர்கள் சுவனம் போக முடியாது. கப்ாில் வேதனை உண்டு என்று இஸ்லாம் மிகவும் கடுமையாக எச்சாிக்கை செய்கின்றது.

இதுவரை அவதூறு பேசினால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று குர்ஆன் மூலமும் ஹதீஸின் மூலமும் தொிந்து கொண்டோம். ஆகவே அவதூறு பேசாமல் நாம் சுவனத்திற்கு செல்ல வழி தேடுவோமாக.

http://www.readislam.net/navu.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.